Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது.

கட்டுரை தகவல்

  • ஜுபைர் அகமது

  • பிபிசி செய்தியாளர்

  • 1 செப்டெம்பர் 2025, 14:31 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும் கொண்டதாகவும் இருந்தது.

SCO உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படாவிட்டாலும், அது அபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரிகளாலும், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு ஒரு தலைப்பட்சமாக எடுத்த நடவடிக்கைகளாலும் பாதிப்படைந்தவர்கள்.

இந்த சந்திப்பு எச்சரிக்கையுடனான மறுசீரமைப்பாக கருதப்பட்டது. 'நாங்கள் முன்னேற்றத்திற்கான கூட்டாளிகள், போட்டியாளர்கள் அல்ல' என இந்தியா மற்றும் சீனா கூட்டு அறிக்கையை வெளியிட்டது.

மேலும், இந்த வேறுபாடுகள் மோதலாக மாறிவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்தியது.

2020ஆம் ஆண்டில் நடந்த கல்வான் மோதல்களுக்குப் பிறகு உருவான நீண்ட பதற்றத்திற்கு பின், உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்தது.

இரு தலைவர்களும் வர்த்தகம், எல்லை மேலாண்மை பற்றி மட்டுமல்லாமல், பலதுருவ ஆசியா மற்றும் பலதுருவ உலகம் பற்றிய விரிவான பார்வையையும் முன்வைத்தனர். அமெரிக்காவை மட்டுமே உலகத் தலைவராகக் கருத முடியாது என்ற இதன் உட்பொருள் தெளிவாக இருந்தது.

டிரம்பால் ஏற்பட்ட பாதிப்புகள்:

இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப்.

இந்த சந்திப்பின் பின்னணியை தவிர்க்கமுடியாது. டிரம்பின் வரி விதிப்பு, இந்தியாவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளியது. அவசர அதிகாரங்களின் கீழ் விதிக்கப்பட்ட அந்த வரிகள், ரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கியதற்கான தண்டனையாக நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் உண்மையில், அவை அமெரிக்காவிற்கு இடமில்லாத யூரேஷிய கூட்டமைப்புகளுக்குள் இந்தியாவை மேலும் ஆழமாக இழுத்துச் செல்கின்றன.

"ஆம், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் பணியாற்ற தயார் எனச் சிக்னல் கொடுக்கிறது. அமெரிக்கா, இந்தியா உறவு டிரம்பின் நடவடிக்கைகளால் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த திட்டம் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் இதை குறுகிய காலத் தீர்வாகவே பார்க்க வேண்டும்." என இந்திய வெளிநாட்டு கொள்கையில் முன்னணி அறிஞராக விளங்கும் இன்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் சுமித் கங்குலி பிபிசியிடம் கூறினார்.

ஆனால், மோதி மற்றும் ஜின்பிங் பயன்படுத்திய வார்த்தைகள் திட்டமிட்டு சிக்கலாக்கப்பட்டது. எல்லையில் அமைதியும், அமைதியான சூழலும் முன்னேற்றத்திற்குத் தேவையானவை என்ற பிரதமர் மோதியின் நினைவூட்டல், சமரசமானதாக மட்டுமல்ல எச்சரிக்கையாகவும் இருந்தது. எல்லையில் படைகளின் விலகல் (disengagement) மற்றும் தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்த குறியீடுகள், சிறிய முன்னேற்றங்களை கூட அர்த்தமுள்ளவையாக காட்டும் வகையில் அமைந்தது.

Play video, "டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?", கால அளவு 3,53

03:53

p0m07xsb.jpg.webp

காணொளிக் குறிப்பு, டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

பொருளாதாரத்தில், சுமையை குறைப்பது மற்றும் வர்த்தகத்தை ஆழப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள், இந்தியா, சீனாவுடன் கூட வர்த்தகத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டு அரசியல் செய்தியாக முன்வைக்கப்பட்டன.

"மூன்றாம் நாட்டின் பார்வையில் இருந்து மறுக்கப்பட்டதன் மூலமும், மூலோபாய சுயாட்சி (strategic autonomy) வலியுறுத்தப்பட்டதன் மூலமும், அமெரிக்க அழுத்தம் பெய்ஜிங் உடன் உள்ள ஈடுபாட்டை நிர்ணயிக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதை டெல்லி வாஷிங்டனுக்கு தெளிவுபடுத்தியது.

டெல்லியின் போர் மேலாண்மை பள்ளியில் சீன நிபுணராக உள்ள பேராசிரியர் ஃபைசல் அஹ்மது நேரடியாக தனது கருத்தைப் பதிவிட்டார். "இந்தியா, சீனா உறவுகள் இருதரப்பாகவும் சரி, எஸ்சிஓ-விலும் சரி வலிமைமிக்க நிலைப்பாட்டில் இருந்து முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தியான்ஜினில் நடந்த மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு." என்கிறார்.

இந்த சந்திப்பு நம்பிக்கையை வளர்க்கும் என அவர் நம்புகிறார். "மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு இருதரப்பு நம்பிக்கையில்லாதன்மையை குறைக்க ஓர் ஊக்கம் அளிக்கிறது.

எஸ்சிஓ அளவிலும், தியான்ஜின் சந்திப்பு பிராந்திய பிரச்னைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தியது. சர்வதேச குற்றங்களை கையாளுதல், மக்கள் மத்தியிலான இணைப்பை வலுப்படுத்துதல் போன்றையும் இதில் அடங்கும்.

தோற்றங்களும் விளைவுகளும்:

7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

உண்மையில் சில நேரங்களில் காட்சிகளும் முடிவுகளுக்குச் சமமான முக்கியத்துவத்தை பெறுகின்றன. தியான்ஜினில் ஜி ஜின்பிங் மற்றும் புதின் உடன் பிரதமர் தோன்றிய காட்சி, எஸ்.சி.ஓ அரங்கத்தைக் கடந்தும் பரவச் செய்தது.

இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நேரமாக இருந்தது. சில நாட்களுக்கு முன், டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தார் அந்தச் வரி சட்டத்திற்கு முரணானவை என்று அமெரிக்க கூட்டாட்சி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் டிரம்புக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதால் அந்த வரிகள் இன்னும் நீக்கப்படவில்லை.

ஷீ ஜின்பிங் மற்றும் புதினுடன் பிரதமர் மோதி தோன்றிய நிகழ்ச்சி, அடையாளச் சின்னங்கள் நிறைந்ததாக இருந்தது. பேராசிரியர் ஃபைசல் அஹ்மது, இந்த தருணத்தை வெறும் புகைப்படத்தை விட அதிகமாகக் கருதுகிறார். "டிரம்பின் வரி நடவடிக்கை மிகவும் முறையற்றது. தியான்ஜினில் மோடி, ஜின்பிங், புதின் ஒரே மேடையில் தோன்றியது, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச பாதுகாப்புக் கொள்கைகளுக்கு பதிலடியாக இருந்தது." என்றார்.

7 ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் மோதி சீனா சென்றுள்ளார். இது ஒரே ஒரு பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றியது மட்டுஅல்ல. ஜின்பிங் உடன் நடந்த இந்த சந்திப்பு, உறவுகளை மீட்பதற்கான வாய்ப்பை வழங்கியது. அதே சமயம், விரிவான எஸ்சிஓ சந்திப்பு, வாஷிங்டனை தாண்டி இந்தியாவுக்கு கூட்டாளிகள் உள்ளன என்பதை காட்டும் அரங்காக அமைந்தது.

"சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் மோதி பங்கேற்றதை, மூலோபாய திசை மாற்றமாக அல்லாமல், விரிவான தூதரக சமநிலைப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்" என முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபால் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சி.ஓ-வின் முக்கியத்துவங்கள்:

இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார்.

வாஷிங்டனில், எஸ்.சி.ஓ பெரும்பாலும் அதிகாரவாதிகளின் சங்கமாகவே புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற எஸ்.சி.ஓ உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. இந்தியாவுக்கு, அதன் பயன் வேறு இடத்தில் இருக்கிறது. ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா, இப்போது ஈரானும் கூட ஒரே மேடையில் அமரக் கூடிய அரங்கத்தை அது வழங்கியுள்ளது.

இந்த மாநாட்டை பயன்படுத்தி, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். டெல்லியை பொறுத்தவரை, இந்த சந்திப்பு உறுதித்தன்மை பற்றிய பேச்சுகள், எதிர்பார்க்கக்கூடிய உறவாக மாறுமா என்பதைச் சோதிக்கும் முயற்சியாக இருந்தது. டெல்லியில் இருப்பவர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டனர்.

எல்லைப் பிரச்னை தொடர்ந்து வலியை உண்டாக்குகிறது. மேலும் சீனாவுடனான 99 பில்லியன் டாலர் வர்த்தக பற்றுச்சுமை அரசியல் தலைவலியாக உள்ளது. இது கடினமாக இருந்தாலும், பேச்சுவார்த்தை அவசியமானதாக உள்ளது.

"இதற்கு மாற்று என்ன? சீனாவை நிர்வகிப்பதே அடுத்த பல தசாப்தங்களுக்கு, இந்தியாவின் பிரதான பணியாகும்" என்கிறார் பகுப்பாய்வாளர் ஹாப்பிமான் ஜேக்கப்.

ஆறு உறுப்பினர்களுடன் எளிமையாக தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது 10 உறுப்பினர்களாக விரிவடைந்துள்ளது. அதோடு 2 பார்வையாளர்கள் மற்றும் 14 உரையாடல் கூட்டாளிகளும் உள்ளனர். இப்போது, அது மற்ற பிராந்திய அமைப்பை விட பரந்த புவியியல் பரப்பை கொண்டதாக, உலக மக்கள்தொகையில் மிகப்பெரிய பங்கை அளிக்கிறது.

ஹாங்காங்கை மையமாக கொண்ட மூத்த பகுப்பாய்வாளர் ஹென்றி லீ, எஸ்.சி.ஓ குறித்துப் பேசினார். "எஸ்.சி.ஓ-பன்முகத்தன்மை அதிர்ச்சிகரமாக உள்ளது. வரலாறுகள், கலாசாரம், அரசியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியவை. "இத்தகைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், எஸ்.சி.ஓ தனது உறுப்புநாடுகளின் தேவைகளையும் தற்போதைய சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது." என்றார்.

மேலும், "ஒரு விதத்தில், எஸ்.சி.ஓ உலகுக்கு பல்வேறு நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது. இது இன்னும் முழுமையாக இல்லை என்றாலும், நாடுகள் ஒன்றிணைந்தால் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டுகிறது" என்றார்.

ரஷ்யாவின் பங்கு:

இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த விஷயத்தில் ரஷ்யாவின் பங்கு சாதாரணமானதாக இல்லை. ரஷ்யாவின் விலை குறைந்த கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் இந்தியாவில் பணவீக்கத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க முடிந்தது.

இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

ரஷ்யா இந்தியாவுக்கு வெறும் எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் மட்டும் வழங்கவில்லை. அது சுயாட்சி சின்னமாக இருந்தது. மேலும், நரேந்திர மோதி அரசு அமெரிக்காவுக்கு அடிபணியாமல் உறவுகளை சமநிலைப்படுத்த முடியும் என்பதை இது நிரூபிக்கும்.

ஆனால் "ரஷ்யா பலவீனமாகும் சக்தி, அதன் பொருளாதார மற்றும் தூதரக திறன்கள் வரையறுக்கப்பட்டவை." என பேராசிரியர் கங்குலி எச்சரிக்கிறார்.

மேலும், "யுக்ரேனுடனான சண்டையால் ரஷ்யா நீண்டகால பிரச்னைகளை எதிர்கொள்வது அவசியம். மோதலில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா தற்போது உயர் தொழில்நுட்பம், ஆயுதப் பாகங்கள் மற்றும் எண்ணெய் விற்பனையை அதிகம் சார்ந்துள்ளது" எனக் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இந்தியா ரஷ்யாவிடம் நெருங்கிப் பழகுவது அன்பு அல்ல, அவசியம் என்கிறார். அமெரிக்காவுடன் சுமூகமான உறவு இல்லாத சூழலில், இந்தியாவிற்கு இது தனி இடத்தை அளிக்கும் ஆதரவாகும்.

"இது சரியான தேர்வு அல்ல, ஆனால் சிறந்த தேர்வு" என நேர்காணல் ஒன்றில் முன்னாள் இந்திய தூதர் ஜதிந்திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார்.

அமெரிக்காவை மீறிச் செல்லும் நாடுகள்?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார்.

பிரதமர் மோதியின் எஸ்.சி.ஓ வருகை மற்றும் புதினின் டெல்லி வரவு, அமெரிக்காவின் உத்தரவுக்கு பிறகான தாக்கத்தின் தொடக்கமா?

இது அப்படியல்ல. பிரதமர் மோதி, புதின் மற்றும் ஷீ ஜின்பிங் ஒரே மேடையில் காட்சியளித்தது, வேறுமாதிரி தோன்றினாலும், இந்தியா பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் இன்னும் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. சீனாவின் வெறுப்புணர்வை சமாளிக்க இந்தியாவின் மூலோபாய மையமாக குவாட் உள்ளது. எனினும் இந்த மாற்றம் சுவாரஸ்யம் அளிக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமர் மோதி சமநிலை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வர மறுக்கிறார். "கிடைத்த தருணத்தை வீணடிக்கக் கூடாது. என பேராசிரியர் அஹ்மது வலியுறுத்துகிறார். குறிப்பாக, நரேந்திர மோதி, ஷீ ஜின்பிங், இடையிலான முறைசாரா உச்சி மாநாடு தொடர வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசை கிடைக்கும் என்கிறார்.

டிரம்பின் தோல்வியும், இந்தியாவின் பொறுமையும்:

2021ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் இந்தியா வந்தோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் இந்தியா வந்தோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

விசித்திரம் என்னவென்றால், டிரம்ப் மிகவும் பயப்படுவதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவுக்கு அதிக வரிகள் விதிப்பதன் மூலம், அமெரிக்கா அதனை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகே தள்ளுகிறது. நீதிமன்றத்தில் தோல்வி அடைந்ததால், உலக வர்த்தக விதிகளை மாற்றுவதற்கான அவர்களது உரிமையும் குறையும்.

மிதமான கூட்டாளிகளுடன் அதிகமாக தொடர்பு கொள்ள முயற்சித்து, அவர் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கிறார். ஜப்பான், அமெரிக்காவில் அதிக முதலீடு செய்ய அழுத்தம் தரப்பட்டதால், வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளது.

இது, பாரம்பரியமாக அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருந்த நாடுகளும் இப்போது எதிர்ப்பு காட்ட தொடங்கியுள்ளன.

மாற்று வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக பிரதமர் மோதியை பாராட்ட வேண்டுமா? இந்தியா அமெரிக்காவை விட்டு இன்னமும் விலகவில்லை, குறைந்தது இப்போதைக்கு அது நிகழவில்லை. இரு நாடுகளின் கூட்டாண்மை மிக பரந்தது விரிந்தது மட்டுமன்றி ஆழமுமானதும்கூட.

எந்த தரப்பையும் தேர்வு செய்வது என்பதை விட தன் விருப்பப்படி செயல்படுவதே தனக்கு சவாலான ஒன்று என மோதி அரசு நன்கு அறிந்துள்ளது.

"இந்தியாவின் தற்போதைய நிலை கடினமாக உள்ளது. ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்கள், தானே உருவாக்கப்பட்டவை அல்ல. டிரம்பின் உறுதித்தன்மை இல்லாத நடத்தையையும், அவரின் பரிமாற்ற நோக்கோடு நடத்தப்படும் கொள்கைகளையும் புரிந்துகொள்ளாததற்காகவும் மட்டுமே இந்தியாவை குறை கூற முடியும்." என்கிறார் பேராசிரியர் காங்குலி.

உண்மையில், மோதியின் சீன பயணம் சொல்லும் செய்தி இதுதான் என பல பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர்.

"இது அமெரிக்காவிற்கான நினைவூட்டல். இந்தியாவுக்கு பல விருப்பங்கள் உள்ளன. இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது. இந்தியா, தூதரக சுயாட்சியை தனது வெளிநாட்டு கொள்கையின் மையமாக முன்வைக்கிறது என்பதும் வெளிப்பாடு" என அவர்கள் கூறுகின்றனர்.

டிரம்பை, நண்பர்களிடமிருந்து தன்னை பிரித்து அமெரிக்காவின் வீழ்ச்சியை வேகப்படுத்திய அதிபராக வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளலாம். மோதியை, இந்தியாவின் தனிப்பட்ட செயல்திறலை பாதுகாத்து, எந்த ஒரு சக்தியிடமும் அடிபணியாமல் செயல்படுபவராக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77627lg867o

  • கருத்துக்கள உறவுகள்

சீனா சிறிலங்காவின் நண்பன்..அதேவேளை இந்தியாவும் ரஷ்யாவும் சிறிலங்காவின் நண்பர்களே. இந்தக் கூட்டில் சிறிலங்காவும் விரவில்இணைய வேண்டும்.மறு பக்கம் இந்தக் கூட்டிணைவு க்கு பயந்து ட்ரம் ப் வரிகளைக் குறைக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்தச் செய்தி இந்தியாவுக்கு மிக அண்மையில் ஒரு இஸ்ரேலைக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது.அந்த இஸ்ரேலுக்குரிய அனைத்து தகமைகளும்.கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்களும் இருக்கின்ற பிரதேசம் தமிழர்தாயகமே.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-29.jpg?resize=750%2C375&ssl=

அமெரிக்க அழுத்தங்களுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் – புட்டின் பெய்ஜிங்கில் சந்திப்பு!

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சீன நகரமான தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் இருவரும் கலந்து கொண்ட மறுநாளும், இரண்டாம் உலகப் போரின் 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங்கில் ஒரு பிரமாண்டமான சீன இராணுவ அணிவகுப்புக்கு முந்தைய நாளிலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் “முன்னோடியில்லாத அளவில்” இருப்பதாக புட்டின் இந்த சந்திப்பின் போது பாராட்டினார்.

மேலும், அவர்களின் “நெருக்கமான தொடர்பு ரஷ்ய-சீன உறவுகளின் மூலோபாய தன்மையை பிரதிபலிக்கிறது” என்றும் கூறினார்.

உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய தலைவருடனான ஒப்பந்தம் ட்ரம்பிற்கு எட்டாத நிலையில், ஜி இப்போது பெய்ஜிங்கில் புட்டினை வரவேற்றுள்ளார்.

திங்களன்று நடந்த உச்சிமாநாட்டின் போது ஜி மற்றும் புட்டின் மேற்கத்திய அரசாங்கங்களை விமர்சித்தனர்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் சீனாவில் ஜப்பானியர்கள் சரணடைந்த 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை ஜி ஜின்பிங் புதன்கிழமை (03) நடத்த உள்ளார்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மட்டுமல்லாமல், ஒரு இராஜதந்திர ரீதியாக பெய்ஜிங்கின் சக்தியை சர்வதேச அரங்கில் முன்வைக்க ஜி ஜின்பிங் முயற்சிக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

9fa4072c-cbf7-4a33-927c-15ee36a7af74_141

https://athavannews.com/2025/1445680

  • கருத்துக்கள உறவுகள்

542681505_1200375302127440_1075136869638

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'சர்வாதிகாரிகளுடன் மேடையை பகிர்ந்தது வெட்கக்கேடானது' - மோதியை மீண்டும் குறிவைத்த டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா 'பூஜ்ஜிய வரி' வழங்க தயாராக இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரதமர் நரேந்திர மோதியை குறிவைத்து தாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இம்முறை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டை ஒரு காரணமாக்கியிருக்கிறார்.

"சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மேடையைப் பகிர்ந்துகொண்டது வெட்கக்கேடானது," என நவரோ செய்தியாளர்களிடம் கூறினார்.

அதன் பின்னர், "ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், மேலும் ஐரோப்பா மற்றும் யுக்ரேனுடன் நிற்க பிரதமர் மோதி முன் வரவேண்டும்," என அவர் சமீபத்திய நாட்களில் பலமுறை கூறியதை மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு 'இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக்க' ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அது மிகவும் தாமதமானது எனவும் திங்கட்கிழமை டிரம்ப் கூறியுள்ளார்.

தற்போது பிரதமர் மோதி சீனாவில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நட்புடன் சந்தித்துப் பேசினார்.

மூன்று தலைவர்களின் புகைப்படங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன, மேலும் மேற்கத்திய ஊடகங்கள், டிரம்பின் வரி விதிப்புகளால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இந்தியா நெருக்கமாகி வருவதாக பகுப்பாய்வு செய்கின்றன.

புதின், மோதி, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, திங்கட்கிழமை சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ மாநாட்டின்போது புதின், மோதி மற்றும் ஷி ஜின்பிங்

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து பீட்டர் நவரோ ஏற்கெனவே பலமுறை கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் இந்தியாவை ரஷ்ய எண்ணெய்க்கு 'தானியங்கி சலவை இயந்திரம்' (பணமோசடி மையம்) என்று அழைத்தார், இந்திய மக்களின் செலவில் 'பிராமணர்கள்' லாபம் ஈட்டுவதாகவும், இதை 'நிறுத்த வேண்டும்' என்று ஒருநாள் முன்னதாக கூறினார்.

டிரம்ப் மற்றும் நவரோ இந்தியாவை 'வரி மன்னர்' என்று அழைத்தனர், ஆனால் அமெரிக்காவிலேயே டிரம்பின் கொள்கைகள் குறித்து அசௌகரியம் உணரப்படுகிறது.

சில நாட்களுக்கு முன், பைடன் நிர்வாகத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், இந்தியாவைப் பற்றிய டிரம்பின் கொள்கைகளை அமெரிக்காவுக்கு ஒரு பெரிய 'உத்தி இழப்பு' என்று விவரித்தார், மேலும் 'அமெரிக்கா பாகிஸ்தானுக்காக இந்தியாவை தியாகம் செய்கிறது' என்று கூறினார்.

செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசிய பீட்டர் நவரோ, "அமைதியின் பாதை ஓரளவு புது தில்லி வழியாக செல்கிறது. இப்போது மோதி முன்னுக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோதியை மிகவும் மதிக்கிறேன். இந்திய மக்களை நேசிக்கிறேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவரான மோதி, உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளான புதின் மற்றும் ஷி ஜின்பிங்குடன் சந்திப்பது வெட்கக்கேடானது. இதற்கு எந்த அர்த்தமும் இல்லை." என்றார்.

மோதி குறித்து நவரோ என்ன கூறினார்?

பீட்டர் நவரோ

பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images

படக்குறிப்பு, பீட்டர் நவரோ இந்தியா மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தியா மற்றும் சீனா இடையேயான ராணுவ மோதல்கள் மற்றும் பதற்றங்களையும் நவரோ சுட்டிக்காட்டினார். "அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை, குறிப்பாக இந்தியா பல தசாப்தங்களாக சீனாவுடன் பனிப்போரிலும், எல்லையில் மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது," என்றார்.

"எனவே, இந்திய தலைவர்கள் எங்களுடனும், ஐரோப்பாவுடனும், யுக்ரேனுடனும் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல. மேலும் அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்," என அவர் மேலும் கூறினார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்கா இந்தியா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது, மேலும் இதையே காரணமாகக் கூறி டிரம்ப் இந்தியாவுக்கு 25 சதவிகித கூடுதல் வரி விதித்தார், இதனால் இறக்குமதி வரி மொத்தம் 50 சதவிகிதமாக உயர்ந்தது.

ஆனால், இந்தியா இதை 'நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு ஏற்புடையதல்ல' என்று விவரித்துள்ளது.

வரிகள் குறித்து டிரம்பின் சமீபத்திய அறிக்கை

திங்கட்கிழமை, ஷி ஜின்பிங் மற்றும் புதினை மோதி சந்தித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் எனப்படும் சமூக ஊடகதளத்தில், "பலருக்கு இது புரிவதில்லை. நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைவாகவே வணிகம் செய்கிறோம், ஆனால் அவர்கள் (இந்தியா) எங்களுடன் பெரிய அளவில் வணிகம் செய்கிறார்கள்," என தெரிவித்தார்.

"வேறு வார்த்தைகளில், இந்தியா எங்களுக்கு பெரிய அளவில் பொருட்களை விற்கிறது. நாங்கள் அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள், ஆனால் நாங்கள் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம். இது இதுவரை முற்றிலும் ஒருதலைபட்ச உறவாக இருந்து வருகிறது, பல தசாப்தங்களாக இப்படியே நடந்து வருகிறது," என டிரம்ப் தெரிவித்தார்.

"எங்கள் வணிகங்கள் இன்னும் இந்தியாவில் பொருட்களை விற்க முடியவில்லை. இதற்கு காரணம், இந்தியா மற்ற நாடுகளை விட எங்களுக்கு மிக உயர்ந்த வரி விதித்துள்ளது. இது இதுவரை ஒரு ஒருதலைபட்ச பேரழிவாக இருந்து வந்துள்ளது," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"இந்தியா தனது பெரும்பாலான எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது, அமெரிக்காவிடமிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது. இப்போது இந்தியா வரியை பூஜ்ஜியமாக்க முன்வந்துள்ளது, ஆனால் அது தாமதமாகிறது. அவர்கள் இதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்," என டிரம்ப் மேலும் கூறினார்,

டிரம்ப் முன்பும் இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைப் பற்றி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது, பின்னர் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என டிரம்ப் உரிமை கொண்டாடுவதும் இருந்தது.

மோதலை நிறுத்துவதற்காக மக்களுக்கு தலைசுற்றும் அளவுக்கு வரிகளை விதிப்பேன் என இந்தியாவிடம் கூறியதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்காக இந்தியாவை தியாகம் செய்தல்

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன் இந்தியா குறித்த டிரம்பின் கொள்கைகள் குறித்து எச்சரித்துள்ளார்.

இந்தியா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான அணுகுமுறை குறித்து அமெரிக்காவிலும் அதிருப்தி உள்ளது, மேலும் குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி சமீபத்தில் இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி, டிரம்ப் தனது கொள்கைகளால் தனது கூட்டாளிகளை விலக்கி வைப்பதாக கவலை தெரிவித்தார்.

பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், கடந்த மாதம் "இந்தியாவுடனான உறவுகளை தியாகம் செய்வது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய உத்தி இழப்பு" என்று எச்சரித்தார்.

ஆகஸ்ட் 20 அன்று ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சல்லிவன், அமெரிக்க அதிபர் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பது, டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் மிகக் குறைவாக விவாதிக்கப்பட்ட செய்தியாக இருந்தது என்றார்.

அமெரிக்கா பல தசாப்தங்களாக "உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான" இந்தியாவுடன் உறவுகளை உருவாக்கி வந்துள்ளது. சீனாவின் உத்தி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அமெரிக்கா இந்தியாவுடன் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் கூட்டணி ஏற்படுத்த வேண்டும்.

அமெரிக்காவின் நண்பர்களும் உலகின் மற்ற நாடுகளும் அமெரிக்காவை எந்த வகையிலும் நம்ப முடியாது என்று நினைக்கத் தொடங்கினால், அது நீண்ட காலத்தில் அமெரிக்க மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது," என சல்லிவன் மேலும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdd3dmev721o

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஏராளன் said:

அவர் மேலும் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவரான மோதி, உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளான புதின் மற்றும் ஷி ஜின்பிங்குடன் சந்திப்பது வெட்கக்கேடானது. இதற்கு எந்த அர்த்தமும் இல்லை." என்றார்.

புடினுக்கு செங்கம்பளம் விரித்து கைலாகு கொடுத்து வரவேற்ற அமெரிக்க அதிபரை எப்படி விளிக்கப் போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-47.jpg?resize=750%2C375&ssl=

தியானன்மென்னில் நடந்த சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு!

ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நடத்தினார்.

இதன்போது பேசிய சீன ஜனாதிபதி, உலகம் அமைதி அல்லது போருக்கு இடையேயான தேர்வை எதிர்கொள்கிறது என்று தியானன்மென் சதுக்கத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் தோல்வியடைந்த 80 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த ஆடம்பர நிகழ்வை மேற்கத்திய தலைவர்கள் பெரும்பாலும் புறக்கணித்து வருகின்றனர்.

உக்ரேன் போர் மற்றும் கிம்மின் அணுசக்தி இலட்சியங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளின் விரோதிகளாக பார்க்கப்படும் புட்டின் மற்றும் கிம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக இந் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

Gz4zkwGa4AAS3Pb?format=jpg&name=large

Gz4zkoRbAAEWMvT?format=jpg&name=large

Gz4zkwdbAAERxFd?format=jpg&name=large

Gz4zkoRbAAIcn-O?format=jpg&name=large

சீனாவின் இராணுவ வலிமை, இராஜதந்திர செல்வாக்கை வெளிப்படுத்த அரங்கேற்றப்பட்ட இந்த நிகழ்வு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக வரிகள் மற்றும் நிலையற்ற கொள்கை வகுத்தல் ஆகியவை பங்காளிகள் மற்றும் போட்டியாளர்களுடனான அதன் உறவுகளை சீர்குலைக்கும் நேரத்திலும் வந்துள்ளது.

இந்த அணி வகுதிப்பில் படைப் பலம், ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற அதிநவீன இராணுவ உபகரணங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்வுக்கு முன்னதாக முன்னாள் தலைவர் மாவோ சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்திருந்த ஜின்பிங், 20க்கும் மேற்பட்ட தலைவர்களை சிவப்பு கம்பள வரவேற்புடன் வரவேற்றார்.

Related

Athavan News
No image preview

தியானன்மென்னில் நடந்த சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப...

ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நடத்தினார். இதன்போது பேசி
  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்ஸ் காலத்தின் தேவையான ஒரு முக்கிய உலக பொருளாதார தேவையாகவுள்ளது, ஆரம்பத்தில் பிரிக்ஸ் முன்னேற்றத்திற்கு பின் துடுப்பு போட்ட இந்தியா தனது மூலோபாய தோல்வியின் பின்னர் தற்போது வேறுவழியின்றி அரசியல் தஞ்சம் கோரிய இடமாக பிரிக்ஸினை கருதுகிறேன், இப்படி நிலையற்ற உருப்படியற்ற மூலோபாய கொள்கையுடைய இந்தியாவினால் பிரிக்ஸிற்கு அதிகளவில் சாதகம் ஏற்பட போவதில்லை பாதகமே ஏற்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதின், கிம் உடன் தோன்றிய சீன அதிபர்: அமெரிக்கா கவலை அடைந்துள்ளதா? - டிரம்ப் பதில்

ரஷ்யா - சீனா, அமெரிக்கா, டிரம்ப், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ரஷ்யா மற்றும் வட கொரிய தலைவர்களுடன் இணைந்து சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில், இன்று (புதன்கிழமை) பீஜிங்கில் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், சீனா நடத்திய மிகப்பெரிய வெற்றி தின அணிவகுப்பு விழா குறித்து டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதி செய்யும்போது விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஏற்படும் மாற்றம் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு ஒரு சவாலாக உள்ளது என்பது போன்ற கருத்துகளை டிரம்ப் முன்னதாக நிராகரித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா சீனாவுக்கு அளித்த "பெரும் ஆதரவு மற்றும் 'உயிர்த் தியாகம்'" பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் வெற்றியையும் சீனாவின் இந்த ராணுவ அணிவகுப்பு குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களது துணிச்சல் மற்றும் தியாகம் சரியான முறையில் கௌரவிக்கப்படும் மற்றும் நினைவுகூரப்படும் என்று நம்புகிறேன்!" என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கிம் மற்றும் புதின் உட்பட 26 நாட்டுத் தலைவர்கள் ஜின்பிங்குடன் இந்த ராணுவ அணிவகுப்பில் இணைந்தனர்.

டிரம்பின் வரிகள் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கை உலுக்கிய பிறகு, அமெரிக்காவுக்கு சாத்தியமான மாற்றாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றுள்ளது.

ரஷ்யா - சீனா, அமெரிக்கா, டிரம்ப் , விளாடிமிர் புதின், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Sputnik/Pool via Reuters

படக்குறிப்பு, விளாடிமிர் புதின் மற்றும் ஷி ஜின்பிங்

அமெரிக்க நலன்களையும் தொழில்துறையையும் பாதுகாப்பதற்கு இந்த வரிகள் அவசியம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதற்காக, எந்தவொரு இராஜதந்திர ரீதியான இழப்பையும் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

சீனாவும் அதன் நட்பு நாடுகளும் அமெரிக்காவை எதிர்க்க ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக நம்புகிறீர்களா என்று பிபிசி கேட்டதற்கு, "இல்லை. இல்லவே இல்லை. சீனாவுக்கு நாங்கள் தேவை." என்று டிரம்ப் கூறினார்.

"ஜின்பிங்குடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருப்பது உங்களுக்குத் தெரியும். எங்களுக்கு சீனா எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமாக அவர்களுக்கு நாங்கள் தேவை. ஆகவே, எனக்கு அப்படி நடப்பதாக தெரியவில்லை."

செவ்வாயன்று ஒரு வானொலி நேர்காணலில், ரஷ்யா - சீனா கூட்டணி உருவாவது குறித்து தனக்கு கவலை இல்லை என்று டிரம்ப் கூறினார்.

ஸ்காட் ஜென்னிங்ஸ் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கா உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவப் படைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் ராணுவத்தை எங்களுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் கூறினார்.

"அது அவர்கள் செய்யக்கூடிய மிக மோசமான காரியமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் அலாஸ்காவில் நடந்த சந்திப்பின் போது யுக்ரேனுக்கான சமாதான ஒப்பந்தத்தை எட்டத் தவறிய பின்னர், புதினிடம் "மிகவும் ஏமாற்றமடைந்ததாக" டிரம்ப் அந்த நேர்காணலில் கூறினார்.

"புதினிடம் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், அதை உறுதியாக சொல்ல முடியும்," என்று டிரம்ப் கூறினார். யுக்ரேன் மக்களுக்கு உதவ அமெரிக்கா ஏதாவது செய்யும் என்று தெரிவித்த அவர், குறிப்பிட்டு எதையும் கூறவில்லை.

புதினின் முழு அளவிலான படையெடுப்பை சீனா விமர்சிக்கவில்லை. சீனா இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை வழங்குவதன் மூலமும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதன் மூலமும் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவியதாக மேற்கு நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை சீனா மறுக்கிறது.

இதற்கிடையில், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா போர்முனையின் சில பகுதிகளில் புதிய துருப்புகளை குவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

"[புதின்] சமாதானத்துக்கு உடன்பட மறுக்கிறார்," என்று ஜெலென்ஸ்கி தனது இரவு காணொளி உரையில் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgv44r882mo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.