Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாத்தியார் said:

இது தான் உலகம்

தோல்விக்கான காரணத்தை யாராவது ஒருவருடைய தலையில் கட்டவேண்டும் .

இதனால் பலரும் தப்பிக்கலாம் அல்லவா

ஒரு ஒவ்வாமை உள்ளது😂

உலகம் எப்படியோ போகட்டும். உலகம் சொல்வதை ஏன் நாமும் சொல்ல வேண்டும். யாழிலும் அப்பிடி ஒன்றைப் பார்க்கும் போது ஒவ்வாமைதான் வருகிறது. ஓரிரண்டு வீரர்களை உண்டு இல்லை என்று ஆக்குவது எப்படி சரியாகும்.

இது ஒரு அணி விளையாட்டு. தவறுகள் எப்போதும் நடப்பதே. அதை எவ்வாறு அணியாகச் சரி செய்தார்கள் என்றுதானே பாரக்கவேண்டும். நேற்று அவுஸ்ரேலியா அணியாகவே நன்றாகச் செய்யலில்லை. நிறைய சின்னச் சின்னத் தவறுகள். அவர்கள் போன போக்கில் 350க்கு மேல் அடித்திருக்க வேண்டும். இந்தியா அந்த இடத்தில் சிறப்பாகவே அழுத்தத்தைக் கொடுத்து அவர்களைக் கட்டுப்படுத்தினார்கள்.

ஜெமைமாவே சொல்லியிருக்கிறா. தனது கவனம் சிதறத்தொடங்கியது என்றும், தான் சுலோகங்கள் சொல்லிக் கொண்டு இருந்ததாகவும். அதோட, சக துடுப்பாட்டக்காரருடன் தொடர்ந்து கதைத்தபடி இருந்ததாக. அப்படித்தானே இது நடக்க வேண்டும்.

  • Replies 977
  • Views 27.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

🤣.............

அப்படி நடந்தால் சந்தோசமே, அண்ணா............. ஆனால் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு கப்பை கண்டாலே வயிற்றைக் கலக்கி, தலையைச் சுற்றி, வாந்தி எடுத்து, மயக்கம் வந்து............ இது எதுவும் அவர்களுக்கு வராவிட்டால், ஒரு மழையாவது வந்து அவர்களின் வெற்றியை தடுத்து விடுமாமே..................😜.

ஆனால் உலக டெஸ்ட் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை தோற்கடித்து உலக கிண்ண டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை அண்மையில் பெற்றது தென்னாப்பிரிக்கா அணி.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வாத்தியார் said:

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காது என்பார் நடந்துவிடும் 😂

இந்தியா வெல்லுது பையனுக்கு புள்ளி ஏறுது🤣

ஏராளன் வெல்லுது போட்டியில்😇

என்று பையன் சொன்னது 😅

தென்னாபிரிக்கா வென்றால் இந்தியாவினை தெரிவு செய்தவர்களை தவிர மற்றவர்களுக்கு புள்ளி வழங்குமாறு கந்தப்புவினை கேட்டுக்கொள்கிறேன்🤣.

நீங்களும் இந்தியாவா? வாய்ப்பில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கந்தப்பு said:

ஆனால் உலக டெஸ்ட் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை தோற்கடித்து உலக கிண்ண டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை அண்மையில் பெற்றது தென்னாப்பிரிக்கா அணி.

👍.............

இப்ப ஞாபகத்தில் வருகின்றது.............. கோஷான் இங்கு களத்தில் ஒரு சிறு போட்டியும் வைத்திருந்தார்............... நான் ஆஸ்திரேலியாவை அன்றும் தெரிவு செய்திருந்தேன்............... என்னுடைய ராசி தான் பொல்லாத ராசி போல இருக்கின்றது, ஆஸ்திரேலியாவையே அடிவாங்க வைக்கின்றது..................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

தென்னாபிரிக்கா வென்றால் இந்தியாவினை தெரிவு செய்தவர்களை தவிர மற்றவர்களுக்கு புள்ளி வழங்குமாறு கந்தப்புவினை கேட்டுக்கொள்கிறேன்🤣.

நீங்களும் இந்தியாவா? வாய்ப்பில்லை🤣.

தென்னாப்பிரிக்காவினை தெரிவு செய்த ஈழப்பிரியனுக்கு புள்ளிகள் கிடைக்கும். நான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. நான் தென்னாப்பிரிக்காவுக்கே ஆதரவு

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, செம்பாட்டான் said:

உலகம் எப்படியோ போகட்டும். உலகம் சொல்வதை ஏன் நாமும் சொல்ல வேண்டும். யாழிலும் அப்பிடி ஒன்றைப் பார்க்கும் போது ஒவ்வாமைதான் வருகிறது. ஓரிரண்டு வீரர்களை உண்டு இல்லை என்று ஆக்குவது எப்படி சரியாகும்.

இது ஒரு அணி விளையாட்டு. தவறுகள் எப்போதும் நடப்பதே. அதை எவ்வாறு அணியாகச் சரி செய்தார்கள் என்றுதானே பாரக்கவேண்டும். நேற்று அவுஸ்ரேலியா அணியாகவே நன்றாகச் செய்யலில்லை. நிறைய சின்னச் சின்னத் தவறுகள். அவர்கள் போன போக்கில் 350க்கு மேல் அடித்திருக்க வேண்டும். இந்தியா அந்த இடத்தில் சிறப்பாகவே அழுத்தத்தைக் கொடுத்து அவர்களைக் கட்டுப்படுத்தினார்கள்.

ஜெமைமாவே சொல்லியிருக்கிறா. தனது கவனம் சிதறத்தொடங்கியது என்றும், தான் சுலோகங்கள் சொல்லிக் கொண்டு இருந்ததாகவும். அதோட, சக துடுப்பாட்டக்காரருடன் தொடர்ந்து கதைத்தபடி இருந்ததாக. அப்படித்தானே இது நடக்க வேண்டும்.

நீங்கள் இதனை ஒரு குற்றச்சாட்டாக பார்க்கிறீர்கள் என புரிகிறது, இது போட்டியின் போக்கில் நீங்களாக உணர்வது, ஆனால் எண்ணங்கள் சரியாக இருக்க வேண்டும் என இல்லை, அணித்தலைமை மிக அழுத்தமானது ( நான் என்றும் அணித்தலமையினை விரும்புவதில்லை, அது இன்றுவரை தொடர்கிறது)

1 minute ago, கந்தப்பு said:

தென்னாப்பிரிக்காவினை தெரிவு செய்த ஈழப்பிரியனுக்கு புள்ளிகள் கிடைக்கும். நான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. நான் தென்னாப்பிரிக்காவுக்கே ஆதரவு

இறுதிப்போட்டி வரை இந்த திரியினை சுவாரசியமாக்க விளையாட்டாக கூறியது, இந்தியாவினை ஆதரிக்கும் உறவுகளுக்கு ஒரு பயமேற்படுத்துவதற்கு.🤣

தென்னாபிரிக்காவினை தெரிவு செய்த ஈழப்பிரியனுக்கு எனது ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறேன்.🤣

images?q=tbn:ANd9GcSrcdVBcvm6WzE74lgeH6iXvGkVYHFccDO--6CtSLc3RjCjegin

தனியொருவன் ஈழப்பிரியன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

👍.............

இப்ப ஞாபகத்தில் வருகின்றது.............. கோஷான் இங்கு களத்தில் ஒரு சிறு போட்டியும் வைத்திருந்தார்............... நான் ஆஸ்திரேலியாவை அன்றும் தெரிவு செய்திருந்தேன்............... என்னுடைய ராசி தான் பொல்லாத ராசி போல இருக்கின்றது, ஆஸ்திரேலியாவையே அடிவாங்க வைக்கின்றது..................🤣.

இல்லை அது என் ராசி.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

உங்கள் கணிப்பின் படி அந்த அணிக்கே வெற்றி மீது ஒரு ஒவ்வாமை உள்ளது😂

🤣...............

என்னுடைய கணிப்பின் படி தென் ஆபிரிக்கா அரையிறுதிக்கே போயிருக்கக்கூடாது.......... ஐந்தாவதாக வந்திருக்கவேண்டும்.............. நான் ஆபிரிக்காவிடம் ஏமாந்துவிட்டேன்..................🤣.

1 minute ago, vasee said:

இல்லை அது என் ராசி.🤣

அதுவென்றால் உண்மைதான்.................🤣.

இந்த 'வசீ ராசி' இருக்குதே, அது ஒரு பூமி ராசி............ இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் உங்கள் தெரிவுகளைப் பார்த்து மஹிந்த அணி அப்படியே மயக்கமாகிப் போனார்களாம்................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

🤣...............

என்னுடைய கணிப்பின் படி தென் ஆபிரிக்கா அரையிறுதிக்கே போயிருக்கக்கூடாது.......... ஐந்தாவதாக வந்திருக்கவேண்டும்.............. நான் ஆபிரிக்காவிடம் ஏமாந்துவிட்டேன்..................🤣.

அதுவென்றால் உண்மைதான்.................🤣.

இந்த 'வசீ ராசி' இருக்குதே, அது ஒரு பூமி ராசி............ இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் உங்கள் தெரிவுகளைப் பார்த்து மஹிந்த அணி அப்படியே மயக்கமாகிப் போனார்களாம்................🤣.

லீக போட்டியில் இந்திய அவுஸ் போட்டியில் இந்திய இரசிகர் வெல்வதற்காக பிறந்தவர்கள் என பதாகையினை காட்ட அதுவரை ஒழுங்காக போய்க்கொண்டிருந்த இந்தியணி தொடர்ந்து 3 போட்டியில் தோற்று வெளியே போகும் நிலையில் இருந்து மீண்டு லீக் போட்டிகளில் 4 வதாக இருந்த அணி; முதலாவதாக இருந்த அணியினையே வென்றுள்ளது, அதற்கு எனது ராசிதான் காரணம் என நினைக்கிறேன், தற்போது தென்னாபிரிக்கா வெல்லும் என கூறுவதால் இந்தியாவிற்கு மீண்டும் அதிர்ஸ்டமடிக்கலாம்🤣.

வாத்தியாரும் இந்தியாவினை தெரிவு செய்துள்ளார் என நினைக்கிறேன், இந்தியா வென்றால் நான் தனித்து கீழே விடப்பட போகிறேன் எனும் கவலை எனக்கு.🤣

15 minutes ago, ரசோதரன் said:

அதுவென்றால் உண்மைதான்.................🤣.

இந்த 'வசீ ராசி' இருக்குதே, அது ஒரு பூமி ராசி............ இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் உங்கள் தெரிவுகளைப் பார்த்து மஹிந்த அணி அப்படியே மயக்கமாகிப் போனார்களாம்................🤣.

அப்படி என்ன செய்தேன் என எனக்கு நினைவில்லை, கொஞ்சம் சொல்லலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

ஜெமைமாவே சொல்லியிருக்கிறா. தனது கவனம் சிதறத்தொடங்கியது என்றும், தான் சுலோகங்கள் சொல்லிக் கொண்டு இருந்ததாகவும். அதோட, சக துடுப்பாட்டக்காரருடன் தொடர்ந்து கதைத்தபடி இருந்ததாக. அப்படித்தானே இது நடக்க வேண்டும்.

ஜெமைமாவின் ஆட்டம் சிறப்பான ஆட்டம், ஆனால் லிச்பீல்டின் ஆட்டம் மிக சிறபான ஆட்டம், அவரது விளையாட்டினை இதற்கு முன்னர் பார்த்திருக்கவில்லை, மிக சிறப்பாக விளையாடுகிறார், துரதிர்ஸ்டவசமாக அவுஸ்ரேலிய அணி தோற்றமையால் அவரது ஆட்டம் பேசப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய கணிப்பின் படி தென் ஆபிரிக்கா அரையிறுதிக்கே போயிருக்கக்கூடாது.......... ஐந்தாவதாக வந்திருக்கவேண்டும்.............. நான் ஆபிரிக்காவிடம் ஏமாந்துவிட்டேன்..................🤣.

செம்பாட்டான் கூறுவது போல விளையாட்டு வினோதமானதுதான்!

லீக போட்டியில் முதலாவதாக வந்த ஆவுஸ்ரேலியாவினை 4 ஆவதாக வந்த இந்தியா அரையிறுதியில் வென்றுள்ளது, சில வேளை இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவினையும் வெல்லலாம்.

இந்திய பெண்களணிக்கு எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள் (இந்தியணி தோற்றால் எனது ராசிதான் என குற்றம் சாட்டக்கூடாது🤣).

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

ஆனால் உலக டெஸ்ட் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை தோற்கடித்து உலக கிண்ண டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை அண்மையில் பெற்றது தென்னாப்பிரிக்கா அணி.

அப்படி போடுங்க அரிவாளை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

ஜெமைமாவின் ஆட்டம் சிறப்பான ஆட்டம், ஆனால் லிச்பீல்டின் ஆட்டம் மிக சிறபான ஆட்டம், அவரது விளையாட்டினை இதற்கு முன்னர் பார்த்திருக்கவில்லை, மிக சிறப்பாக விளையாடுகிறார், துரதிர்ஸ்டவசமாக அவுஸ்ரேலிய அணி தோற்றமையால் அவரது ஆட்டம் பேசப்படவில்லை.

உண்மைதான். அவ மிக வேகமாக சதமடித்தா. 75 சொச்ச பந்துகளில்.ன என்று நினைக்கிறேன். அதனாற்தான் ஒரு நேரத்தில், அவுஸ்ரேலியா 350க்குக் கூடுதலாக அடிக்கக் கூடிய நிலையில் இருந்தது.

கிரிக்கின்போ தளத்தில் அவவைப் பற்றியும் எழுதியிருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

உண்மைதான். அவ மிக வேகமாக சதமடித்தா. 75 சொச்ச பந்துகளில்.ன என்று நினைக்கிறேன். அதனாற்தான் ஒரு நேரத்தில், அவுஸ்ரேலியா 350க்குக் கூடுதலாக அடிக்கக் கூடிய நிலையில் இருந்தது.

கிரிக்கின்போ தளத்தில் அவவைப் பற்றியும் எழுதியிருந்தார்கள்.

ஜெமைமாவும் லிச்பீல்டும் களத்தடுப்பினை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள், ஜெமைமாவின் இனிங்ஸ் எந்த நேரத்திலும் அவுட்டாகி விடுவாரோ எனும் பயத்தினை ஏற்படுத்தியது, ஆனால் லிச்பீல்ட் மிக இயல்பாக சிறப்பாக விளையாடினார், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நீங்கள் இதனை ஒரு குற்றச்சாட்டாக பார்க்கிறீர்கள் என புரிகிறது, இது போட்டியின் போக்கில் நீங்களாக உணர்வது, ஆனால் எண்ணங்கள் சரியாக இருக்க வேண்டும் என இல்லை, அணித்தலைமை மிக அழுத்தமானது ( நான் என்றும் அணித்தலமையினை விரும்புவதில்லை, அது இன்றுவரை தொடர்கிறது)

குற்றச்சாட்டு என்பதைவிட, புரிதல் இல்லாததுதான் அயர்ச்சி அளிக்கிறது. வேறொன்றும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, தேசிய அணியில் விளையாடும் ஒவ்வொருவரும் பெரு வீரர்களே. என்னை விட பல பல மடங்கு உயர்ந்தவர்கள். அந்த மரியாதை எப்போதும் உண்டு.

அணித்தலைமை பற்றி நீங்கள் சொன்னது ஒரு நல்ல பார்வை. புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, செம்பாட்டான் said:

குற்றச்சாட்டு என்பதைவிட, புரிதல் இல்லாததுதான் அயர்ச்சி அளிக்கிறது. வேறொன்றும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, தேசிய அணியில் விளையாடும் ஒவ்வொருவரும் பெரு வீரர்களே. என்னை விட பல பல மடங்கு உயர்ந்தவர்கள். அந்த மரியாதை எப்போதும் உண்டு.

அணித்தலைமை பற்றி நீங்கள் சொன்னது ஒரு நல்ல பார்வை. புரிகிறது.

உங்களுக்கு போட்டி பற்றிய தெளிவு உள்ளது என தெரியும், அந்த போட்டியில் அவரது களத்தடுப்பு ஒரு தற்காப்பு களத்தடுப்பாக இருந்தது, பொதுவாக அப்படி களத்தடுப்பினை அவர் போடுவதில்லை, அதனை பார்த்த போது அவுஸ்ரேலிய அணிக்கு கூட நொக்கவுட் போட்டி அழுத்தத்தினை கொடுக்கிறது என புரிந்து கொள்ள முடிந்தது, போட்டியினை முழுமையாக பார்க்கவில்லை, நிங்கள் போட்டியினை முழுமையாக பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் உங்கள் கருத்து சரியாக இருக்கும் என கருதுகிறேன்.

அத்துடன் இதனை ஒரு குறையாக கூறவில்லை போகிற போக்கில் கூறிய விடயம்.

நான் விளையாடின காலகட்டத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு களத்தடுப்பில் மிக சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது, அது எனது பார்வையினை பெரிதாக மாற்றியிருந்தது, இவ்வாறான ஆர்வங்கள் பற்றிய ஒரு கருத்தாடல்தான் எனது பதிவு, நான் எனது கருத்தினை நியாயப்படுத்துவதற்காக எழுதவில்லை, அனைத்து விடயங்களும் விமர்சனத்துக்குள்ளாக வேண்டும் , நிங்கள் கூறுவதும் தவறில்லை, அத்துடன் இது ஒரு விளையாட்டு திரி ஆனால் சில கருத்தாடல்கள் சிலநேரங்களில் தேவையில்லா அசெளகரியங்களை உருவாக்கிவிடும், அவ்வாறான ஒரு சூழ்நிலைக்குள் உங்களையும் கள உறவுகளையும் தள்ளிவிட்டுள்ளேன் என புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

இல்லவேயில்லை. ஒருவித அசௌகரியமும் இல்லை.

எனது கருத்து, அவவை தனியொருவராக சுட்ட முடியாது என்பதே. அவர்கள் அணியாகவே அப்படித்தான் லிளையாடினார்கள். இந்தியா இவ்வாறு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கவில்லையோ என்னமோ. இனிவரும் அவர்களின் பேட்டிகளைப் படித்தால்த்தான் புரியும். அவுஸ்ரேலியரின் அணுகுமுறை தெரியும்தானே. அவர்கள் சுதாகரிப்பதுக்குள்ளேயே இந்தியா நன்றாகக் காலூன்றி விட்டது. அந்த ஒரு பிடி குடுத்ததைத் தவிர, ஜெமைமாவும் உறுதியாகவே விளையாடினா. ஒரு கட்டத்தில் ஒன்று ஒன்றாக ஓடத்தொடங்கினா. பின்னர்தான் அவ சொன்னா. அந்த நேரத்தில் தனக்கு தடுமாற்றம் வந்தது என்றும் சுலோகங்கள் சொல்லத் தொடங்கியது என்றும். இப்போது யோசிச்சுப் பார்த்தால், அது ஒரு நல்ல அணுகுமுறை. கோலியின் அணுகுமுறை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நான் விளையாடின காலகட்டத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு களத்தடுப்பில் மிக சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது, அது எனது பார்வையினை பெரிதாக மாற்றியிருந்தது, இவ்வாறான ஆர்வங்கள் பற்றிய ஒரு கருத்தாடல்தான் எனது பதிவு,

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலேமே. நாமும் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

இல்லவேயில்லை. ஒருவித அசௌகரியமும் இல்லை.

எனது கருத்து, அவவை தனியொருவராக சுட்ட முடியாது என்பதே. அவர்கள் அணியாகவே அப்படித்தான் லிளையாடினார்கள். இந்தியா இவ்வாறு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கவில்லையோ என்னமோ. இனிவரும் அவர்களின் பேட்டிகளைப் படித்தால்த்தான் புரியும். அவுஸ்ரேலியரின் அணுகுமுறை தெரியும்தானே. அவர்கள் சுதாகரிப்பதுக்குள்ளேயே இந்தியா நன்றாகக் காலூன்றி விட்டது. அந்த ஒரு பிடி குடுத்ததைத் தவிர, ஜெமைமாவும் உறுதியாகவே விளையாடினா. ஒரு கட்டத்தில் ஒன்று ஒன்றாக ஓடத்தொடங்கினா. பின்னர்தான் அவ சொன்னா. அந்த நேரத்தில் தனக்கு தடுமாற்றம் வந்தது என்றும் சுலோகங்கள் சொல்லத் தொடங்கியது என்றும். இப்போது யோசிச்சுப் பார்த்தால், அது ஒரு நல்ல அணுகுமுறை. கோலியின் அணுகுமுறை.

1 hour ago, செம்பாட்டான் said:

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலேமே. நாமும் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளோம

நன்றி!

இது ஒரு பொழுதுபோக்கான விடயம் சீரியசாக பார்ப்பதற்கு எதுவும் இல்லை, அதே போல உங்கள் கருத்துக்களையும் தாராளமாக கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, vasee said:

நன்றி!

இது ஒரு பொழுதுபோக்கான விடயம் சீரியசாக பார்ப்பதற்கு எதுவும் இல்லை, அதே போல உங்கள் கருத்துக்களையும் தாராளமாக கூறுங்கள்.

கடைசி வரையும் உங்கள் அனுபவத்தைச் சொல்லேலையே. 😁

  • கருத்துக்கள உறவுகள்

James Vasanthan  ·

பெண்கள் க்ரிக்கெட் என்றால் நமக்கு (ஆண்களுக்கு) கொஞ்சம் இளக்காரம்தான். அது மந்தமாக இருக்கும் என்கிற பொதுவான கருத்து. இதை எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் விளையாடுகிற திடல்களில் இருக்கிற சொற்பமான கூட்டத்தைப் பார்த்துதான்.

அது ஒருபுறம் இருக்கட்டும்.

நேற்று இரவு நடந்த Women's World Cup Semifinals போட்டியை மட்டும் ஒரே ஒருமுறை பார்த்துவிடுங்கள். India-Australia போட்டி.

பெண்கள் க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இதுவரை நடந்தவை 12. ஆஸ்ட்ரேலியா வென்றது 7 முறை. தற்போதைய champion அவர்கள்தான்.

முரட்டுத்தனமான அணி. அந்நாட்டு ஆண்கள் அணி போலவே மேட்டிமை மனப்பான்மையும், செருக்கும் இயல்பாகவே கொண்டவர்கள். அவர்கள் உடல்மொழியே சொல்லும் "எங்களை மிஞ்ச ஆட்கள் இல்லை" என்று.

நேற்று அதை விளையாட்டிலும் நிரூபித்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்களை திடலின் எல்லா திசைகளிலும் ஓடவிட்டுத் தெறிக்கவிட்டு 338 ரன்கள் குவித்தார்கள்.

பலரைப்போலவே நானும் இது முடிந்த கதை என்றுதான் நினைத்து Paris Masters Tennis பார்க்கப் போய்விட்டேன். நிச்சயம் நம் அணி மகளிரும் கொஞ்சம் ஆடித்தான் போயிருப்பர் உள்மனதில்.

ஆனால், பெண்களின் மனஉறுதி நேற்று இன்னொரு முறை நிரூபணமானது. தொடக்க ஆட்டக்காரரில் பொதுவாக புயலாக அசத்தும் ஸ்ம்ருதி நேற்று 24-ல் ஆட்டமிழக்க, ஷஃபாலியும் 10-ல் வெளியேற ஹர்ப்ரீத் (தலைவி) வந்து பொறுப்புடன் மிரட்டலாக விளையாடி 84 சேர்க்க, மறுமுனையில் இந்தியாவின் ரட்சகியாக வந்த ஜெமீமா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்து ஒரு புதிய சாதனையையும் படைத்து, வெற்றியையும் பெற்றுத் தந்திருக்கிறார்.

Breaking News-ல் இதைப் பார்த்து பின்பு Highlights பார்த்துப் பரவசமடைந்தேன்.

ஆஸ்ட்ரேலிய batters அடிக்கும்போது இந்தத் திறமையை நாம் எதிர்கொள்ள முடியாது என்று நினைத்திருந்தேன் - நம் வீராங்கனைகள் ஆடியதைக் காணும் வரை.

நம் பிள்ளைகள் ஆடும்போது அவர்கள் முகத்தில் இருந்த வெறியும் வைராக்கியமும் ஒரு புது எழுச்சியை நம் உணர்வுகளில் கொண்டுவந்ததை உணரமுடிந்தது.

இறுதி ஷாட்டில் வெற்றியைப் பெற்றவுடன் ஜெமிமா ஓடிவந்து எதிர்முனையில் தனக்கு ஆதரவாக விளையாடிய கவுரை தூக்கிக் கொண்டாடி, பின் தரையில் முகங்குப்புற முழங்காலிட்டு குலுங்கி அழுது தன் உணர்வுகளைக் கொட்டியது நம்மை கண்கலங்க வைத்துவிட்டது.

இதற்கு மேல் நான் சொல்லமாட்டேன்.

நேரத்தை செலவழித்து எப்படி அந்த இமாலய 338-ஐ எளிதாகக் கடந்து இந்த சாதனை வெற்றியை இவர்கள் ஈட்டினர் என்பதை நீங்கள் பார்த்தேயாக வேண்டும்.

இதன் தாக்கம் இன்னும் பலநாட்கள் நம்மை உத்வேகப்படுத்தும்.......!

Voir la traduction

574325260_10237973929823485_650709587016

  • கருத்துக்கள உறவுகள்

அசாத்தியமான தருணங்கள் ...........! 👋

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மகளிர் வரலாற்று சாதனை .......... !

என்ன கொடுமை சரவணா .........நான் மட்டும் தனியாக "தனிஆவர்த்தனம் " செய்து கொண்டு ......எல்லோரும் அவுஸ் லாஸ் எண்டு ஹவுசுக்குள் முடங்கி விட்டார்களோ.......! 😊

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

வாத்தியாரும் இந்தியாவினை தெரிவு செய்துள்ளார் என நினைக்கிறேன், இந்தியா வென்றால் நான் தனித்து கீழே விடப்பட போகிறேன் எனும் கவலை எனக்கு.🤣

கோப்பையை தூக்கும் அணி என்பதிலிருந்து அதிக ஓட்டம், விக்கெட், இத்யாதி கேள்விகள் எல்லாவற்றுக்கும் அவுசை மட்டுமே தெரிவு செய்திருக்கின்றேன்

இந்தியாவை அரையிறுதியிலேயே கழட்டி விட்டுட்டேன்

அவுசை நம்பி மவுசு போனாலும் பரவாயில்லை 😂

முதலுக்கே மோசம் போயிட்டது😇

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இந்த‌ கோப்பைக்கு இந்தியா ம‌க‌ளிர் ச‌ந்தோச‌த்தில் முத்த‌ம் கொடுப்பின‌ம் அந்த‌ ச‌ந்தோச‌த்தில் நாங்க‌ளும் நாங்க‌ளும் யாழ் க‌ள‌த்தில் துள்ளி குதிக்கிறோம்..................................

Screenshot-20251101-142618-ESPNCricinfo.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.