Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

அப்போதிருந்த இலங்கை 83 இல் உலக கோப்பையினை வென்ற இந்தியணி போன்றது என நினைக்கிறேன், ஆனால் இப்போதுள்ள இந்தியணி மிக பலமான அணி ஆனால் இதே இந்தியணியினை 2000 இலிருந்த அவுஸ் அணியுடன் ஒப்பிட முடியாது, 2000 இலிருந்த அவுஸ் அணி போல இந்தியணி உருவெடுக்குமா என தெரியவில்லை.

தற்போதய இலங்கை அணி திறமையான அணி, ஆனால் ஏனோ மோசமாக விளையாடுகிறார்கள் (விளையாட்டு ஒழுக்கமின்மை?), இந்த அணி பழைய அணிக்கு எந்த விதத்திலும் திறமையில் குறைவில்லை, ஒரு போட்டியில் மகேல 77 (முதலாவது போட்டி?) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து, வீரர்கள் தங்கும் அறைக்கு செல்லும் போது அவரை ரணத்துங்க அவரது மோசமான அடி தேர்வினால் ஆட்டமிழந்தமைக்காக அவரை திட்டினதாகவும் அவர் உள்ளே போகாமல் படிக்கட்டிலே இருந்ததாகவும் கூறியிருந்தார், அதே போல் ஜெயசூரியாவும் தனது சம்பவம் ஒன்றைனை கூறியிருந்தார்.

இலங்கையிலிருக்கும் போது வெளிநாடு வருவதில்லை என நினைத்திருந்தேன், ஆனால் வெளிநாடு வந்த பின்பு நினைத்தேன் எனது வாழ்வின் பெரும்பகுதியினை இலங்கையில் வீணாக்கிவிட்டேன் என, ஆனாலும் இலங்கை ஒரு நல்ல நாடுதான், முட்டாள் அரசியல்வாதிகளினால் இந்த நிலைக்கு வந்துவிட்டது.

இலங்கை அணி மைதான ஈரலிப்பு வரும் என நினைத்து தவறான முடிவு எடுத்திருப்பார்களோ? நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

மழை வந்ததால் மைதான ஈரலிப்பு வராது என தெரிந்திருந்தாலும் மழையின் பின்னர் ஏற்படும் ஒரு சூழல் மாற்றத்தினை தவறாக புரிந்து கொள்ளவாய்ப்பு உள்ளது என கருதுகிறேன்.

காற்றின் வெப்பத்திற்கேற்ப அது கொள்ளும் ஈரப்பதன் கொள்ளவில் மாற்றம் ஏற்படும், அதிக வெப்பமான காற்று அதிகமான ஈரப்பதனை கொண்டிருக்கும், இரவு நேரத்தில் காற்று குளிராகும் போது காற்று கொண்டிருந்த ஈரப்பதனில் ஒரு பகுதியினை கைவிடுகிறது (Dew), குளிர்பான போத்தில், டின் இவற்றுக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுவது போல, ஆனால் மழை காற்று ஒடுங்கும் போது (பாரம்) மழை உருவாகிறது, அதனால் மழையின் பின்னர் அந்த மழை கொண்டிருந்த வெப்பம் சுற்றாடலில் மறை வெப்பமாக வெளிவிடப்படும், அது ஒரு வெக்கையான உணர்வினை தரும், ஆனால் காற்றில் அதிகரித்த ஈரப்பதன் மேலதிகமாக ஈரப்பதனை கொள்ள முடியாமல் ஏற்படும் புழுக்கம் போன்ற உணர்வு இரு வேறுபட்ட விடயம் (மழை மற்றும் மைதான ஈரப்பதன்).

இது ஒரு தவறான உள்ளுணர்வு முடிவாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

எல்லோரும் வைத்தியராகவும் பொறியலாளராகவேணும் என நினைத்தால் மற்ற வேலைகளை யார் செய்வது?🤣

உண்மைதான். அந்த அவுஸ்ரேலிய அணி மாதிரி ஒரு அணி இனி அமைய வாய்ப்பே இல்லை. இது ஒரு தொடர்ச்சிதான்.

80களில மேற்கிந்திய அணியின் ஆளுமையைச் சமாளிக்க ஒருவராலும் முடியவில்லை. அவுஸ்ரேலியா பல தொடர்களின் வாங்கின அடியுடன், மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். உள்ளகக் கட்டமைப்பை மாற்றினார்கள். உள்ளூர் மைதானங்களை மாற்றினார்கள். பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். சிறந்த வீர்ரகளை இனங்காண குழுவை அமைத்தார்கள். அது எல்லாம் சேர்ந்து, 90களுக்குப் பிறகு அவர்களை ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. அதே நேரம் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் ஓய்வு, அவர்களின் பணம் மற்றும் நிர்வாகப் பிரச்சினை காரணமாக, அவர்கள் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டார்கள். லாரா மட்டும் இல்லையென்டால், காணாமலே போயிருப்பார்கள்.

90களில் இந்திய அணி அதே விதியை எதிர்கொண்டது. பலமான அவுஸ்ரேலியா. இலங்கையின் எழுச்சி. தென்னாபிரிக்காவின் வருகை. இந்தியாவை நிமிரவே விடவில்லை. போன இடமெல்லாம் அடி. சச்சின் மட்டும் முயற்சி செய்துகொண்டே இருந்தார். சச்சின் ஆட்டமிழந்தால், தொலைக்காட்சியை அணைத்து விட்டுப் போவது சர்வசாதாரணம்.

அந்த இடத்தில்தான், இந்தியாவும் எல்லா மாற்ற்ங்களையும் ஏற்படுத்தத் தொடங்கியது. 80களின் இறுதியில் அவுஸ்திரேலியா என்ன செய்ததோ, அதையே இந்தியா 90களின் இறுதியில் செய்யத் தொடங்கியது. IPLன் எழுச்சி, எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. இப்போ நாம் பார்க்கும் இந்தியா, அன்று விதைத்த விதை.

இப்போ பணம்தான் எல்லாம். இந்தியவை இனி உடைக்க முடியுமோ என்று தெரியவில்லை. அவர்களின் ஆதிக்கம் மிக நீ....ண்.....ட.... காலம் நீடிக்கும் என்று நினைக்கிறேன். மற்ற அணிகள் சும்மா போய் தட்டிவிட்டு வரவேண்டியதுதான்.

  • Replies 977
  • Views 26.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

14) வாத்தியார் - 15 புள்ளிகள்

2 hours ago, கந்தப்பு said:

13) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள்

இஞ்சை பாருங்கோ

கிரிக்கெட்டிலை நிறையத் தெரிந்த ஒருவருடைய நிலையும்

ஒன்றுமே தெரியாத ஒருவருடைய நிலையும்

இப்ப ஆருக்கு வெற்றி😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

அவர் எல்லோரையும் அண்ணா அய்யா என்றழைப்பதிலேயே தெரிகிறது அவர் எவ்வளவு இளசு என்று.

மகளிர் அணிகள் எல்லாம் இன்னும் நீண்டதூரம் போகவேண்டியுள்ளது. கடந்த பத்து வருடத்தில் அவர்களின் வளர்ச்சி அளப்பெரியது. அடுத்த பத்து வருடத்தில் இன்னும் அமர்க்களமாய் இருக்கும். பணம் ஒரு தடையாக இல்லாவிட்டால் சரி.

அப்ப பையன் சார் மட்டும்தான் அந்த அரிய காட்சி காண்பாரோ

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, vasee said:

இலங்கை அணி மைதான ஈரலிப்பு வரும் என நினைத்து தவறான முடிவு எடுத்திருப்பார்களோ? நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

மழை வந்ததால் மைதான ஈரலிப்பு வராது என தெரிந்திருந்தாலும் மழையின் பின்னர் ஏற்படும் ஒரு சூழல் மாற்றத்தினை தவறாக புரிந்து கொள்ளவாய்ப்பு உள்ளது என கருதுகிறேன்.

காற்றின் வெப்பத்திற்கேற்ப அது கொள்ளும் ஈரப்பதன் கொள்ளவில் மாற்றம் ஏற்படும், அதிக வெப்பமான காற்று அதிகமான ஈரப்பதனை கொண்டிருக்கும், இரவு நேரத்தில் காற்று குளிராகும் போது காற்று கொண்டிருந்த ஈரப்பதனில் ஒரு பகுதியினை கைவிடுகிறது (Dew), குளிர்பான போத்தில், டின் இவற்றுக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுவது போல, ஆனால் மழை காற்று ஒடுங்கும் போது (பாரம்) மழை உருவாகிறது, அதனால் மழையின் பின்னர் அந்த மழை கொண்டிருந்த வெப்பம் சுற்றாடலில் மறை வெப்பமாக வெளிவிடப்படும், அது ஒரு வெக்கையான உணர்வினை தரும், ஆனால் காற்றில் அதிகரித்த ஈரப்பதன் மேலதிகமாக ஈரப்பதனை கொள்ள முடியாமல் ஏற்படும் புழுக்கம் போன்ற உணர்வு இரு வேறுபட்ட விடயம் (மழை மற்றும் மைதான ஈரப்பதன்).

இது ஒரு தவறான உள்ளுணர்வு முடிவாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

எல்லோரும் வைத்தியராகவும் பொறியலாளராகவேணும் என நினைத்தால் மற்ற வேலைகளை யார் செய்வது?🤣

பிரேமதாச மைதானத்தில் ஈரலிப்பு எப்போதும் ஒரு உபாதைதான். முன்னர் எல்லாம், அனேகமாக, இரண்டாவதாகத் துடுப்பாடத்தான் விரும்புவார்கள். இப்போ மாறிவிட்டது போல் உள்ளது. இன்றைய காலநிலையையும் ஆடுகளத் தன்மையையும் வைத்து முடிவு எடுத்திருக்கலாம். கணக்கு எங்கேயோ தவறிவிட்டது.

அதோட, தங்கள் துடுப்பாட்டத்தில் நம்பிக்கையின்மையும் இருக்கலாம். சுழல் பந்தாளர்களை வைத்து, குறைந்த ஓட்டங்களுக்கு அமத்தவும் யோசிச்சிருக்கலாம். அப்படியானால், துரத்துவது இலகு. முதல் ஆடினால், தங்களில் நம்பிக்கை இல்லாவிடில், எவ்வளவு அடிப்பது என்பதும் கடினம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

அப்ப பையன் சார் மட்டும்தான் அந்த அரிய காட்சி காண்பாரோ

நீங்களும் என்னமோ கனக்க எதிர்பார்க்கிறீர்கள் போல. கிடைத்ததா. 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

அப்போதிருந்த இலங்கை 83 இல் உலக கோப்பையினை வென்ற இந்தியணி போன்றது என நினைக்கிறேன், ஆனால் இப்போதுள்ள இந்தியணி மிக பலமான அணி ஆனால் இதே இந்தியணியினை 2000 இலிருந்த அவுஸ் அணியுடன் ஒப்பிட முடியாது, 2000 இலிருந்த அவுஸ் அணி போல இந்தியணி உருவெடுக்குமா என தெரியவில்லை.

தற்போதய இலங்கை அணி திறமையான அணி, ஆனால் ஏனோ மோசமாக விளையாடுகிறார்கள் (விளையாட்டு ஒழுக்கமின்மை?), இந்த அணி பழைய அணிக்கு எந்த விதத்திலும் திறமையில் குறைவில்லை, ஒரு போட்டியில் மகேல 77 (முதலாவது போட்டி?) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து, வீரர்கள் தங்கும் அறைக்கு செல்லும் போது அவரை ரணத்துங்க அவரது மோசமான அடி தேர்வினால் ஆட்டமிழந்தமைக்காக அவரை திட்டினதாகவும் அவர் உள்ளே போகாமல் படிக்கட்டிலே இருந்ததாகவும் கூறியிருந்தார், அதே போல் ஜெயசூரியாவும் தனது சம்பவம் ஒன்றைனை கூறியிருந்தார்.

இலங்கையிலிருக்கும் போது வெளிநாடு வருவதில்லை என நினைத்திருந்தேன், ஆனால் வெளிநாடு வந்த பின்பு நினைத்தேன் எனது வாழ்வின் பெரும்பகுதியினை இலங்கையில் வீணாக்கிவிட்டேன் என, ஆனாலும் இலங்கை ஒரு நல்ல நாடுதான், முட்டாள் அரசியல்வாதிகளினால் இந்த நிலைக்கு வந்துவிட்டது.

இலங்கை அணி மைதான ஈரலிப்பு வரும் என நினைத்து தவறான முடிவு எடுத்திருப்பார்களோ? நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

மழை வந்ததால் மைதான ஈரலிப்பு வராது என தெரிந்திருந்தாலும் மழையின் பின்னர் ஏற்படும் ஒரு சூழல் மாற்றத்தினை தவறாக புரிந்து கொள்ளவாய்ப்பு உள்ளது என கருதுகிறேன்.

காற்றின் வெப்பத்திற்கேற்ப அது கொள்ளும் ஈரப்பதன் கொள்ளவில் மாற்றம் ஏற்படும், அதிக வெப்பமான காற்று அதிகமான ஈரப்பதனை கொண்டிருக்கும், இரவு நேரத்தில் காற்று குளிராகும் போது காற்று கொண்டிருந்த ஈரப்பதனில் ஒரு பகுதியினை கைவிடுகிறது (Dew), குளிர்பான போத்தில், டின் இவற்றுக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுவது போல, ஆனால் மழை காற்று ஒடுங்கும் போது (பாரம்) மழை உருவாகிறது, அதனால் மழையின் பின்னர் அந்த மழை கொண்டிருந்த வெப்பம் சுற்றாடலில் மறை வெப்பமாக வெளிவிடப்படும், அது ஒரு வெக்கையான உணர்வினை தரும், ஆனால் காற்றில் அதிகரித்த ஈரப்பதன் மேலதிகமாக ஈரப்பதனை கொள்ள முடியாமல் ஏற்படும் புழுக்கம் போன்ற உணர்வு இரு வேறுபட்ட விடயம் (மழை மற்றும் மைதான ஈரப்பதன்).

இது ஒரு தவறான உள்ளுணர்வு முடிவாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

எல்லோரும் வைத்தியராகவும் பொறியலாளராகவேணும் என நினைத்தால் மற்ற வேலைகளை யார் செய்வது?🤣

நீங்க‌ள் சொல்லுவ‌தின் ப‌டி கூட‌ இருக்க‌லாம்

இல‌ங்கை ம‌க‌ளிர் ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌து வெத‌றின் அடிப்ப‌டையில் கூட‌ இருக்க‌லாம் என நீங்க‌ள் எழுதினா பிற‌க்கு யோசிக்க‌ தோனுது

இல‌ங்கை ஆண்க‌ள் உந்த‌ மைதான‌த்தில் நான‌ய‌த்தில் வென்றால் ம‌ட்டைய‌ தான் தெரிவு செய்வின‌ம்.................நான் பார்த்த‌ ம‌ட்டி உந்த‌ மைதான‌த்தின் ஆண்க‌ள் அணி மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடுவின‌ம்..............உந்த‌ப் பெரிய‌ இந்தியாவையே போன‌ வ‌ருட‌ம் தோக்க‌டிச்சு தொட‌ரை வென்ற‌வை............................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

இஞ்சை பாருங்கோ

கிரிக்கெட்டிலை நிறையத் தெரிந்த ஒருவருடைய நிலையும்

ஒன்றுமே தெரியாத ஒருவருடைய நிலையும்

இப்ப ஆருக்கு வெற்றி😂

வாத்தியார் உங்களின் காதால புகை போறது தெரிகிறது .....எதற்கும் அந்த (8) நம்பர் ஆளையும் ஒருக்கால் பாருங்கோ ....அவர் இன்றுவரை ஒரு மகளிர் ஆட்டத்தைக் கூட பார்த்ததில்லை . ...... யாருடைய பெயரும் தெரியாது .......! 😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

இஞ்சை பாருங்கோ

கிரிக்கெட்டிலை நிறையத் தெரிந்த ஒருவருடைய நிலையும்

ஒன்றுமே தெரியாத ஒருவருடைய நிலையும்

இப்ப ஆருக்கு வெற்றி😂

16 minutes ago, suvy said:

வாத்தியார் உங்களின் காதால புகை போறது தெரிகிறது .....எதற்கும் அந்த (8) நம்பர் ஆளையும் ஒருக்கால் பாருங்கோ ....அவர் இன்றுவரை ஒரு மகளிர் ஆட்டத்தைக் கூட பார்த்ததில்லை . ...... யாருடைய பெயரும் தெரியாது .......! 😂

என்னால‌ சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ல‌

வாத்தி அண்ணா தீவிர‌ கால்ப‌ந்து ர‌சிக‌ர்.................த‌லைவ‌ர் கிரிக்கேட் ர‌சிக‌ர் ஆனால் ம‌க‌ளிர் கிரிக்கேட் இப்ப‌ தான் முத‌ல் முறையாக‌ பார்க்கிறார்😁👍...............................................

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

இஞ்சை பாருங்கோ

கிரிக்கெட்டிலை நிறையத் தெரிந்த ஒருவருடைய நிலையும்

ஒன்றுமே தெரியாத ஒருவருடைய நிலையும்

இப்ப ஆருக்கு வெற்றி😂

வாத்தியார் அண்ணா

நாங்க‌ள் ஒரு ர‌க‌சிய‌ ஒப்ப‌ந்த‌ம் போடுவோம்

கிரிக்கேட் போட்டி என்றால் என்ரைய‌ கொப்பி ப‌ண்ணி சில‌ மாற்ற‌த்தை செய்யுங்கோ................கால்ப‌ந்து போட்டியில் நான் உங்க‌டைய‌ கொப்பி பண்ணி சிறு மாற்ற‌த்தை செய்யிறேன்😁👍..................

கால்ப‌ந்தில் உங்க‌ட‌ க‌ணிப்பு பாராட்ட‌ த‌க்கது...................கால்ப‌ந்தை நான் மேல் ஓட்ட‌மாய் பார்த்தாலும் எந்த‌ அணி வெல்லும் என‌ என்னால் ச‌ரியாக‌ க‌ணிக்க‌ முடியாது வாத்தி அண்ணா😁.......................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தியா அவுஸ்ரேலியா விளையாட்டை ப‌ல‌ர் விரும்பி பாப்பினம்👍.............................

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்...................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொட‌க்க‌ ம‌களிர் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் எப்ப‌டியும் 300 அடிச்சால் தான் அவுஸ்ரேலியாவை ம‌ட‌க்க‌ முடியும்............................

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அண்ணா

சுவி த‌லைவ‌ர்

கிருபன் பெரிய‌ப்பு

செம்பாட்ட‌ன் அண்ணா

வாத‌வூரான் ச‌கோ

க‌றுப்பி அக்கா

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

வீர‌ப் பைய‌ன் 26

நாங்க‌ள் இந்தியா வெல்லும் என‌ க‌னித்து இருக்கிறோம்

மீதம் 7 உற‌வுக‌ள் அவுஸ்ரேலியா வெல்லும் என க‌னித்து இருக்கின‌ம்...............

இந்தியாவின் தொட‌க்கம் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்.......................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிச் சனி எள்ளுச்சட்டி எரித்தது எனக்கு வேலை செய்யுதோ செய்யவில்லையோ ...இந்தியன் பெட்டையளுக்கு நல்லா வேலை செய்யுது (பெட்டையள்_..எழுத்து சுவராசியத்துக்கு பாவித்த சொல்... மன்னிக்கவும்)

வந்தவள் ...நிண்டவள் ...எல்லோரும்..அடிதான்..

அட அதைவிட கண்ணுக்கு மைபூசியும் வந்து .. வெளுத்து வாங்குகினம்...

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை நட‌ந்த‌ போட்டியில் இது தான் பெரிய‌ ஸ்கோர் 330..................................

  • கருத்துக்கள உறவுகள்

45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

அவுஸ்ரேலியா

இதுக்கு புள்ளி க‌ண்டிப்பாய் கிடைக்கும் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் 5விக்கேட் எடுத்து இருக்கிறா......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா தொட‌க்க‌ ம‌களிர் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் எப்ப‌டியும் 300 அடிச்சால் தான் அவுஸ்ரேலியாவை ம‌ட‌க்க‌ முடியும்............................

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா எடுத்த 330 இனை பிடிக்க இதுவரை அவுஸ்திரேலியா விக்கெட் எதுவும் இழப்பின்றி 9.5 ஓவரில் 81 ஓட்டங்கள் எடுத்து இருக்கிறது. இதே விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற போட்டியில் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் 251 ஒட்டங்களை தென்னாப்பிரிக்கா அணி அடித்து வென்று இருக்கிறது.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

Live

13th Match (D/N), Visakhapatnam, October 12, 2025, ICC Women's World Cup

India Women FlagIndia Women

330

Australia Women FlagAustralia Women

(16/50 ov, T:331) 105/1

AUS Women need 226 runs from 34 overs.

Current RR: 6.56

 • Required RR: 6.64

 • Last 5 ov (RR): 21/1 (4.20)

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கந்தப்பு said:

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா எடுத்த 330 இனை பிடிக்க இதுவரை அவுஸ்திரேலியா விக்கெட் எதுவும் இழப்பின்றி 9.5 ஓவரில் 81 ஓட்டங்கள் எடுத்து இருக்கிறது. இதே விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற போட்டியில் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் 251 ஒட்டங்களை தென்னாப்பிரிக்கா அணி அடித்து வென்று இருக்கிறது.

ஒம் அண்ணா

விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்..............இந்தியா இன்று தோத்தால் இந்தியா ம‌க‌ளிர் மீது நான் வைச்ச‌ ந‌ம்பிக்கை காற்றில் க‌ல‌ந்து போய் விடும் பாப்போம் போட்டி முடிவில்.....................

  • கருத்துக்கள உறவுகள்

இயன் ஹீலியின் மருமகள், மிச்சல் ஸ்டாக்கின் மனைவி, இன்று போட்டு அடி அடி என்று அடிச்சுவிட்டிருக்கிறா.

ஆஸ்லி ஹீலிதான் இன்றைய நாயகி.

  • கருத்துக்கள உறவுகள்

Live

13th Match (D/N), Visakhapatnam, October 12, 2025, ICC Women's World Cup

India Women FlagIndia Women

330

Australia Women FlagAustralia Women

(45/50 ov, T:331) 303/6

AUS Women need 28 runs in 30 balls.

Current RR: 6.73

 • Required RR: 5.60

 • Last 5 ov (RR): 29/2 (5.80)

  • கருத்துக்கள உறவுகள்

முடிச்சு விட்டாங்கள். இந்தியாவுக்கு இரண்டாவது பாரிய இழப்பு. இந்த உலக கிண்ணம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இனி ஓட்ட விகிதம் முக்கியமாக போகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

வாத்தியார் அண்ணா

சுவி த‌லைவ‌ர்

கிருபன் பெரிய‌ப்பு

செம்பாட்ட‌ன் அண்ணா

வாத‌வூரான் ச‌கோ

க‌றுப்பி அக்கா

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

வீர‌ப் பைய‌ன் 26

நாங்க‌ள் இந்தியா வெல்லும் என‌ க‌னித்து இருக்கிறோம்

மீதம் 7 உற‌வுக‌ள் அவுஸ்ரேலியா வெல்லும் என க‌னித்து இருக்கின‌ம்...............

இந்தியாவின் தொட‌க்கம் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்.......................

நியூபலன்ஸ் அவர்களும் இந்தியாவைத்தான் தெரிவு செய்து இருக்கிறார். 6 பேர்தான் அவுஸ்திரேலியா தெரிவு செய்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கந்தப்பு said:

நியூபலன்ஸ் அவர்களும் இந்தியாவைத்தான் தெரிவு செய்து இருக்கிறார். 6 பேர்தான் அவுஸ்திரேலியா தெரிவு செய்து இருக்கிறார்கள்.

த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னும் கந்த‌ப்பு அண்ணா...............

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் பார்த்தேன். பெண்களின் ஒரு நாள் போட்டிகளில் மிகக் கூடுதலான ஓட்டம் இன்று துரத்தப்பட்டது. அதுவும் இரண்டு பலமான அணிகளுக்கு இடையிலான போட்டியாக இது அமைந்தது. இந்த இரு அணிகளும் மீண்டும் இறுதிப்போட்டியில் சந்தித்தால் அது ஒரு சரவெடியாகத் தான் அமையப் போகின்றது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.