Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

13 September 2025

1757747939_1576682_hirunews.jpg

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் இன்று திருச்சியில் ஆரம்பமாகியுள்ளது. 

திருச்சி காந்தி சந்தை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இந்தநிலையில் த.வெ.க தலைவர் விஜய்யை காண வந்த தொண்டர்கள் அவரது பிரசார பேருந்தை பின் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார பேருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றுள்ளனர்.

https://hirunews.lk/tm/419953/vijays-campaign-is-flooded-with-volunteers

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

யாருக்கும் தொண்டர்களா அல்லது ரசிகர்களா என்ற குழப்பம் வராமல் இருந்தால் சந்தோசமுங்கோ 😜

  • கருத்துக்கள உறவுகள்

548302140_829718893071843_22361381640150

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

548302140_829718893071843_22361381640150

தொண்டு.....தொண்டு 😎 தொண்டு செய்யும் ஆவர்த்தில் தொண்டர்கள் கூரையில் ஏறி வீட்டனர். கோச்சுக்காதீங்க சார் 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தொண்டு.....தொண்டு 😎 தொண்டு செய்யும் ஆவர்த்தில் தொண்டர்கள் கூரையில் ஏறி வீட்டனர். கோச்சுக்காதீங்க சார் 😁

போகிற போக்கை பார்க்க… விஜய் தான், அடுத்த முதலமைச்சர் போல் உள்ளது.

ஸ்ராலின், உதயநிதி, சபரீசன் எல்லாம் அடுத்த பத்து வருசத்துக்கு எம். ஜீ. ஆர்., ஜெயலலிதா காலத்தில் கருணாநிதி கூப்பிலை உட்கார்ந்து இருந்த மாதிரி வீட்டிலை குந்தி இருக்கப் போகிறார்கள் போலுள்ளது. அவர்கள் சேர்த்த சொத்து இன்னும் 50 தலைமுறைக்கு காணும் என்ற படியால் ஆறுதலாக வீட்டில் காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடட்டும். 😂

வருங்கால முதல்வர், ஈழத்தின் மருமகன் விஜய் வாழ்க. 💪 👍🏼 🤝 🥰 🙏🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

”இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல் தான் மை டியர் சிஎம் சார்” – விஜய் பேச்சு!

13 Sep 2025, 11:30 PM

All you are releasing today is a reel, my dear CM sir - Vijay

ஒன்றிய பாஜக அரசு செய்வது துரோகம் என்றால் திமுக அரசு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான் என விஜய் விமர்சித்துள்ளார்.

திருச்சியை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 13) இரவு அரியலூர் மக்களை சந்தித்து தனது பரப்புரையை மேற்கொண்டார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

அப்போது அவர் மத்திய பாஜக அரசையும், ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

ரீல் அறுந்து போய்விட்டது!

அவர் பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு செய்வது துரோகம் என்றால் திமுக அரசு செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான். ஏமாற்றுவதில் இருவருமே ஒரே வகையறாதான் ஒன்றிய பிரதமர், இந்தியப் பிரதமர் என்று மாற்றி மாற்றி பேசுவதில் முதல்வர் வல்லவர். மறைமுக உறவுக்காரர்கள் என ஏன் சொல்கிறோம் என இப்போது புரிகிறதா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியது? முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், ‘எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம்’ என கதை விடுகிறீர்களே My Dear CM Sir…

உங்களுக்குதான் ஆசையா, பாசமா கூப்பிட்டா பிடிக்க மாட்டுதே My Dear CM Sir…” என மதுரை மாநாட்டில் தான் அங்கிள் ஸ்டாலின் என பேசியது விமர்சனத்துக்கு உள்ளானதை சூசகமாக சுட்டிக்காட்டினார் விஜய்.

”ரீல்ஸ் வேறு ரியாலிட்டி வேறு என நீங்களே சொல்லிவிட்டு, இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல்ஸ்தான். அதில் பாதி அறுந்தும் போய்விட்டது. அப்படி அறுந்து போனது எவையெல்லாம் தெரியுமா? எனக் கூறி திமுக-வின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டார் விஜய்.

அனைவருக்கும் ஆயிரம் ரூபாய், கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.1000, டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, 10 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது, மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள், மீனவர் கிராமங்களில் மீன் உலர்த்தும் தளங்கள் நெசவாளர்களுக்கு வட்டி குறைப்பு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் மானியம், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தம் போன்ற திமுக வாக்குறுதிகளை கூறி செய்தீர்களா என அரசை நோக்கி கேள்விகளை அடுக்கினார் விஜய். அதற்கு இல்லை என்றனர் அங்கிருந்த தொண்டர்கள்.

அரியலூருக்கு செய்தது என்ன?

தொடர்ந்து அவர் அரியலூர் மாவட்டம் குறித்து பேசுகையில், “வறட்சியான மாவட்டங்களில் முதல் மாவட்டமாக உள்ளது அரியலூர். சிமெண்ட் உற்பத்தி, முந்திரி தொழில், பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

யுனெஸ்கோவால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படவில்லை. மருதையாற்றத்தின் குறுக்கே வாரணவாசி தடுப்பணை கட்டுவது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற கோரிக்கை என்னவானது? இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தும் போதுமான பேருந்து சேவை இல்லாதது ஏன்?” என விஜய் கேள்வி எழுப்பினார்.

குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம்!

அதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்தால், தனது வாக்குறுதியாக, “ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி; மனசாட்சி உள்ள மக்களாட்சி… இதுதான் நமக்கு வேண்டும். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும்!” எனக்கூறி விஜய் தன் பேச்சை முடித்தார்.

https://minnambalam.com/all-you-are-releasing-today-is-a-reel-my-dear-cm-sir-vijay/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

போகிற போக்கை பார்க்க… விஜய் தான், அடுத்த முதலமைச்சர் போல் உள்ளது.

ஓமோம்..... உலகத்திலையே முதல் முதலாய் ஒன்லைன்ல கட்சி நடத்தி முதலமைச்சராய் வந்த ஜாம்பவான் இவராய்த்தான் இருக்கும்.😂

5 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின், உதயநிதி, சபரீசன் எல்லாம் அடுத்த பத்து வருசத்துக்கு எம். ஜீ. ஆர்., ஜெயலலிதா காலத்தில் கருணாநிதி கூப்பிலை உட்கார்ந்து இருந்த மாதிரி வீட்டிலை குந்தி இருக்கப் போகிறார்கள் போலுள்ளது. அவர்கள் சேர்த்த சொத்து இன்னும் 50 தலைமுறைக்கு காணும் என்ற படியால் ஆறுதலாக வீட்டில் காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடட்டும். 😂

G0v-NTVqbc-Agf-Cy8.jpg

எங்கடை ஈழத்து மருமோன்ர தில்ல பாத்தீங்களோ சார்? பணம் என்னடா பணம். நான் பாக்காத பணமா? எங்கட மருமோன்ர சிந்தனை எல்லாம் மக்கள் சேவை...மக்கள் சேவை....மக்கள் சேவை...மக்கள் சேவை அதை தவிர வேறொன்றுமில்லை.மற்ற காசுக்காரர் எல்லாம் என் கால் தூசுக்கு சமம் பீலிங்யா 😃

வருங்கால அம்மா ஜெயலலிதாவும் ரெடியாம்🤪

544901688-1081189460832296-7689849082412882556-n.jpg

5 hours ago, தமிழ் சிறி said:

வருங்கால முதல்வர், ஈழத்தின் மருமகன் விஜய் வாழ்க. 💪 👍🏼 🤝 🥰 🙏🏽

ஈழத்து பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டவர் எண்டபடியாலதான் கச்சதீவை சீதனமாய் கேக்கிறாரோ? 🤣

யாவும் கற்பனை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஓமோம்..... உலகத்திலையே முதல் முதலாய் ஒன்லைன்ல கட்சி நடத்தி முதலமைச்சராய் வந்த ஜாம்பவான் இவராய்த்தான் இருக்கும்.😂

G0v-NTVqbc-Agf-Cy8.jpg

எங்கடை ஈழத்து மருமோன்ர தில்ல பாத்தீங்களோ சார்? பணம் என்னடா பணம். நான் பாக்காத பணமா? எங்கட மருமோன்ர சிந்தனை எல்லாம் மக்கள் சேவை...மக்கள் சேவை....மக்கள் சேவை...மக்கள் சேவை அதை தவிர வேறொன்றுமில்லை.மற்ற காசுக்காரர் எல்லாம் என் கால் தூசுக்கு சமம் பீலிங்யா 😃

வருங்கால அம்மா ஜெயலலிதாவும் ரெடியாம்🤪

544901688-1081189460832296-7689849082412882556-n.jpg

ஈழத்து பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டவர் எண்டபடியாலதான் கச்சதீவை சீதனமாய் கேக்கிறாரோ? 🤣

யாவும் கற்பனை.

விஜை வெல்கிறாரோ இல்லையோ….

தம்பிகளை இப்படி புலம்ப விட்டதே எனக்கு போதும் 🤣.

அண்ணன் இப்போ எல்லாம் திமுக வை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதுல்லை. சபரீசனிடம் பெட்டியை வாங்கி கொண்டு விஜை மீது சரமாரி தொடுக்கிறார் சின்ன கருணாநிதி.

தம் பங்குங்கு தம்பிகளும் தம்மாலானதை செய்கிறார்கள்🤣.

அண்ணன் வழமைபோல் கல்லாவை நிரப்பி விடுவார்.

தம்பிகளுக்கு வழமைபோல் தொண்டை தண்ணி நஸ்டம்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

போகிற போக்கை பார்க்க… விஜய் தான், அடுத்த முதலமைச்சர் போல் உள்ளது.

பீஜேபி எடுபிடி, ஊர்வன வகையறா எடப்பாடி வரலாம்… மீண்டும் வர ஆசைப்படலாம்,

டயர் தொழும் மிக்சர் மாமா பன்னீர் வரலாம்….மீண்டும் வர ஆசைப்படலாம்,

ஊழல் குடும்பத்தின் தற்போதைய சக்கரவர்த்தி ஸ்டாலின் வரலாம்….

அடுத்த யுவராஜன் உதய்ண்ணா வர ஆசைப்படலாம்….

செக்ஸ் சைக்கோ சீமான் கூட கனவு காணலாம்….

எனும் போது……

வருமானவரி துறை வீட்ட்டுக்கு போய் கிண்டியும் ஒரு உரோமத்தை கூட புடுங்க முடியாத, நடப்பில் 250 கோடி சம்பளத்தை விட்டு விட்டு வரும் விஜை முதலமைச்சர் ஆக வருவதில்லை ஒரு கேடும் இல்லை.

பிகு

வரலாம் என்கிறேன். வருவார் எனவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

'5 கி.மீ.யை கடக்க 5 மணி நேரம்': திருச்சியில் கூடிய கூட்டமும் விஜயின் பேச்சும் உணர்த்துவது என்ன?

திருச்சி, தவெக, விஜய் பேச்சு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, திருச்சியில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திருச்சியில் சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 13) மக்கள் சந்திப்புப் பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தொடங்கினார்.

'தி.மு.க ஆட்சியை விமர்சித்தாலும் கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு தவெக பலம் பெறவில்லை' எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

'செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விஜய்க்கு திருச்சியில் கூடி மக்கள் திரள் எதைக் காட்டுகிறது? அதுகுறித்து கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் என்ன சொல்கிறார்கள்?

ஐந்து மணிநேர தாமதம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியில் சனிக்கிழமை (14/09/2025) தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் பேசவிருந்த மரக்கடை என்ற இடத்திற்கு விஜய் வந்து சேரவே ஐந்து மணிநேரத்துக்கும் மேல் தாமதமானது.

அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

திருச்சி, தவெக, விஜய் பேச்சு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் பயணம் என விஜய் அறிக்கை வெளியிட்டார்.

திருச்சி, தவெக, விஜய் பேச்சு

பட மூலாதாரம், TVK

காலை 10.30 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட மரக்கடையில் அவரால் மாலை சுமார் 4 மணியளவில்தான் பேச்சைத் தொடங்க முடிந்தது.

" போருக்குப் போவதற்கு முன்பாக போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள். அதுபோல ஜனநாயகப் போருக்காக இங்கு வந்துள்ளேன்" என்றார் விஜய்.

மக்களை மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.கவையும் பா.ஜ.கவையும் கேள்வி கேட்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறிய விஜய், "மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.கவையும் தி.மு.கவையும் விட மாட்டோம்" என்றார்.

தொடர்ந்து விஜய் பேசுவதை சரிவர கேட்க முடியாமல் ஒலிபெருக்கியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அங்கிருந்த தொண்டர்கள் சரிவர கேட்கவில்லை எனக் கூறியும் தனது பேச்சை விஜய் தொடர்ந்தார்.

தி.மு.க, பா.ஜ.கவை சாடிய விஜய்

திருச்சி, தவெக, விஜய் பேச்சு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்வை தவெக எப்போதும் எதிர்க்கும் என விஜய் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் சாடிய விஜய், "இதன்மூலம் தேர்தலில் தவறுகள் தான் நடக்கும். அதற்காகவே மத்திய பா.ஜ.க அரசு இதைக் கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்விலும் தென்னிந்தியாவுக்கு எதிராக மிகப் பெரிய சதி உள்ளதாகவும் இதை தவெக எப்போதும் எதிர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதி, கீழடி ஆய்வு முடிவுகள், பேரிடர் நிதி ஆகியவற்றில் மத்திய அரசு வஞ்சிப்பதாகக் கூறிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடையும் துன்பங்களை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளவில்லை. கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறது" எனப் பேசினார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக விஜய் விமர்சித்தார்.

தொடர்ந்து, 'கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலையில் மூன்று ரூபாய் குறைப்பு, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து ஆகியவற்றை செய்தீர்களா?' என தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.

'கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றம், ஆண்டுக்கு பத்து லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை, மாதம்தோறும் மின் கட்டணம், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை செய்வதாகக் கூறினீர்களே.. செய்தீர்களா?' எனவும் விஜய் கேள்வி எழுப்பினார்.

"தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு செய்வது துரோகம் என்றால் தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் அரசு செய்வது நம்பிக்கை மோசடி" எனவும் தவெக தலைவர் விஜய் விமர்சித்தார்.

"இரண்டுமே தவறு தான். இரண்டுமே ஏமாற்று வேலை தான். இரண்டு பேருமே ஏமாற்றுவதில் ஒரே வகையறா தான். இவர்கள் இருவரும் மறைமுக உறவுக்காரர்கள் என்று ஏன் சொல்கிறோம் என இப்போது புரிந்திருக்கும்" எனவும் விஜய் சாடினார்.

விஜய் பேச்சு பற்றி திருமாவளவன் கருத்து

விஜயின் பிரசாரம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "களப்பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். இதன்மூலம் தேர்தல் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படப் போகிறது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது" எனக் கூறினார்.

"தி.மு.க அணியை வீழ்த்துவோம் என பலமுனைகளில் இருந்து வரும் குரல்களில் விஜயின் குரலும் ஒன்று" எனக் கூறிய திருமாவளவன், "இது தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்" எனக் கூறினார்.

தவிர, தி.மு.க கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு விஜய் பலம் பெறவில்லை எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

' பார்வையாளர்கள் மட்டுமே'

திருச்சி, தவெக, விஜய் பேச்சு

படக்குறிப்பு, இந்த கூட்டத்தை நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை என்கிறார் ஷ்யாம்.

"தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விஜய் காட்டிக் கொள்வதாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்க வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எம்.ஜி.ஆர் நடத்திய கூட்டங்களில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றாலும் சித்தாந்தங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அங்கு இருந்தது" எனக் கூறுகிறார்.

"ஆனால், தவெக கூட்டத்தில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல், தனித்துவம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது. அதற்கான பயிற்சியும் நெறிப்படுத்துதலும் தவெகவில் இல்லை" என்கிறார் ஷ்யாம்.

விஜயின் கூட்டத்துக்கு வருகிறவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆரின் முகத்துக்குக் கவர்ச்சி இருந்தாலும் அவருக்குப் பின்னால் சித்தாந்தத்தை வலிமையாக கொண்டு செல்வதற்கான படை இருந்தது" எனவும் குறிப்பிட்டார்.

திருச்சியில் கூடிய கூட்டம் குறித்துப் பேசும் ஷ்யாம், " கூட்டத்துக்குச் சென்றோம். செல்ஃபி எடுத்தோம் என்ற மனநிலையில் தொண்டர்கள் இருந்ததையே பார்க்க முடிந்தது. இது நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை" என்கிறார்.

இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ரசிகர் கூட்டம், வாக்குகளாக மாறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கூட்டத்தை வழிநடத்திச் செல்வதற்கான கட்டமைப்பும் திட்டமிடலும் தவெகவில் இல்லை" என்கிறார்.

'வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை'

திருச்சி, தவெக, விஜய் பேச்சு

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, நிபந்தனைகளே விதிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என குபேந்திரன் கேள்வி எழுப்புகிறார்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரம் செல்வதற்கு சுமார் ஐந்து மணிநேரம் விஜய்க்கு தேவைப்பட்டதாகக் கூறும் குபேந்திரன், "இதைப் பெருமையாக அக்கட்சியினர் நினைக்கலாம். மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் எழுந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

"தொண்டர்களை நெறிப்படுத்தியிருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்காது" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " கூட்டங்களுக்கு எம்.ஜி.ஆர் தாமதமாக வரும் நிகழ்வுடன் இதனை ஒப்பிட்டு சிலர் பேசுகின்றனர். அன்றைய காலகட்டம் வேறு. " என்கிறார்.

"மின் மாற்றிகள், கட்டடங்கள் மீது ரசிகர்கள் ஏறி நின்றனர். நல்லவேளையாக முன்கூட்டியே மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?" எனக் கேள்வி எழுப்பும் குபேந்திரன், "கூட்டத்தைக் கூட்டுவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்" எனக் கூறுகிறார்.

"கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் அது வெற்றிக்கான வாக்குகளாக மாறாது. ஐந்து கோடி வாக்குகள் பதிவாகும் மாநிலத்தில் வெறும் லட்சங்களில் விழும் வாக்குகளால் வெற்றி கிடைக்காது" எனக் கூறும் ஷ்யாம், " இவை வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார்.

தவெகவுக்கு என்ன பலன்?

"திருச்சி கூட்டத்தின் மூலம் தவெகவை நோக்கி சிலர் கூட்டணிக்கு வருவார்கள்" எனக் கூறும் ஷ்யாம், " அது கட்சிக்கு லாபமாக இருக்கும். ஆனால், தனது வாக்காளர்கள் யார் என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டும். தன்னைப் பார்க்க வந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதா என்பதை அவர் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

தவெகவின் விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, திருச்சி பிரசாரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய ஷ்யாம், "மூன்று கூட்டங்களிலும் அரசியல்மயப்படுத்தும் வேலைகள் என எதுவும் இல்லை. திரைக் கவர்ச்சிக்கு பின்னால் கற்றுக் கொண்டது என்ன என்பது தான் முக்கியமானது" என்கிறார்.

"ஆளும்கட்சிகள் மீது விமர்சனம் வைப்பது தான் தவெகவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பலன் இல்லை என விஜய் பேசினார். ஆனால், அவை என்னென்ன எனப் பட்டியல் போட்டுப் பேசியிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

'அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்'

திருச்சி, தவெக, விஜய் பேச்சு

படக்குறிப்பு, எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை என்கிறார் லயோலா மணி

பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி, "இதுபோன்ற கூட்டம் அண்ணா, எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்க்கு வந்து சேர்கிறது. இது தானாக சேர்ந்த கூட்டமாக உள்ளது" என்கிறார்.

"போக்குவரத்து நெரிசலை காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை" எனக் கூறும் லயோலா மணி, "கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் கட்சியின் நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்" எனக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் அரசியல்மயப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், "இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளோம். எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ce8421nkdlno

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

விஜயகாந்த்தின் பேச்சில், அவர் நோய் வாய்ப்பட முன்னரும் கூட, இல்லாத அளவு கொள்கை விளக்கம், தெளிவு விஜையின் திருச்சி பேச்சில் இருந்தது.

எம்ஜிஆர் பிரிந்த போது அவரிடம் இரு டசின் எம் எல் ஏக்கள், ஆர் எம் வீரப்பன் போன்ற சினிமாகாரர்தான் இருந்தனர். திக கூட ஆதரிக்கவில்லை. பெரியார், அண்ணா வின் பெயர். எம் ஜி ஆரின் முகம் இவைதான் அன்றைய அதிமுகவின் ஈர்ப்பு சக்திகள். கொள்கை கூடாரம் என்றால் அப்போதும் திக, திமுகதான்.

எம்ஜிஆர் மன்றங்களை அதிமுகவாக மாற்றியவர் ஆர் எம் வி. அவர்ரைவிட நேரடி அரசியல் அனுபவம் கூடியவர் புசி ஆனந்த்.

ஆகவே எம்ஜிஆரை விட கூடிய கொள்கை வெற்றிடம் உள்ளவர் விஜை என்பது சரியல்ல.

மதுரை மாநாட்டு பேச்சில் இருந்த பிழைகளை விஜை இங்கே சரி செய்துள்ளார்.

சீமான் போன்ற வாய்-வியாபாரிகள் , திமுக அமைச்சர்கள், என பலரும் விஜைக்கு கூடும் மக்கள் திரளை, காட்டு கூட்டம், நயந்தாராவுக்கு இதை விட கூடும் என அவமரியாதை செய்கிறார்கள்.

இது நல்லதற்கே.

கூட்டம் வோட்டாக மாறாது, மாறாது என இவர்கள் சொல்ல, சொல்ல, அந்த கூட்டம் கடுப்பாகி விஜைக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை.

அதிமுகவை செங்கோட்டையன் மூலம் பாஜக விழுங்கி விட்டது என்பது தெளிவு. நாளை எடப்பாடி டெல்லி ஓடுகிறார்.இனி அமித் ஷாதான் அதிமுகவின் அறிவிக்க படாத பொது செயலாளர்.

ஆகவே திமுகவுக்கு எதிரான, பாஜக சாராத எதிர்கட்சியை தமிழக மக்கள் தெரிய விரும்பின் - த வெ க மட்டுமே ஒரே தெரிவு.

பிரேமலதா, கார்த்தி சிதம்பரம், திருமா, அண்ணாமலை, அண்மையில் சொல்லும் விடயங்கள் தவெக ஊதி தள்ள கூடிய சக்தி இல்லை என்பதையே காட்டுகிறது.

இவ்வளவு ஏன் சீமானை எல்லாம் பெயர் கூட சொல்லாமல் ஜோக்கார் போல நடத்திய ஸ்டாலினும், உதய்யும் விஜைக்கு எதிர்வினை ஆற்ற, “புதிய எதிரி” என அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வழியெங்கும் கூட்டம்; Vijay பிரசாரத்தை பற்றி மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தனது தேர்தல் பிரசாரத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி இருக்கிறார்.

விஜய்க்கு பெரும் கூட்டம் திரண்டது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது. அதே நேரம், செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் அது வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

#Vijay #TVK #Tamilnadu

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் ஜோசப் விஜய் அவர்களின் அரசியல் பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் திரைக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள் என நான் நினைக்கிறேன்.

திரைப்படங்களில் வசனகர்த்தாக்கள் எழுதும் வசனங்களை பேசி நடித்து விட்டு....அதே பாணியை முதல்வர் ஆசையில் கண்டபடி உளறுகின்றார்.விஜய் அவர்களது காரியதரிகள் பேசும் தமிழை கேட்டு தமிழ் உலகமே சிரிக்கின்றது என்பது இந்த அண்டமே அறிந்த விடயம்.

புதிதாக எந்தவொரு அரசியல் திட்டங்களோ கொள்கைகளோ அறவே இல்லை.மற்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் வசனங்களை பொறுக்கி எடுத்து வைத்து சாம்பார் அரசியல் செய்ய வந்திருக்கிறார்.😎

என்ரை செல்லம் திரிஷா உப்புடி ஒரு கூட்டம் வைச்சிருந்தால் விஜய்க்கு வந்ததை விட டபுள் மடங்கு சனம் வந்திருக்கும்.😋

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2025 at 09:53, goshan_che said:

விஜை வெல்கிறாரோ இல்லையோ….

தம்பிகளை இப்படி புலம்ப விட்டதே எனக்கு போதும் 🤣.

எரியுதடி மாலா…,

பேனை 82 இல வையி🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/9/2025 at 10:53, goshan_che said:

விஜை வெல்கிறாரோ இல்லையோ….

தம்பிகளை இப்படி புலம்ப விட்டதே எனக்கு போதும் 🤣.

அண்ணன் இப்போ எல்லாம் திமுக வை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதுல்லை. சபரீசனிடம் பெட்டியை வாங்கி கொண்டு விஜை மீது சரமாரி தொடுக்கிறார் சின்ன கருணாநிதி.

தம் பங்குங்கு தம்பிகளும் தம்மாலானதை செய்கிறார்கள்🤣.

அண்ணன் வழமைபோல் கல்லாவை நிரப்பி விடுவார்.

தம்பிகளுக்கு வழமைபோல் தொண்டை தண்ணி நஸ்டம்🤣

நீங்கள் இன்னும் இந்திய டீல் அரசியலை புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்து கொள்ளவில்லை என நான் நினைக்கின்றேன்.

இந்திய அரசியல் சிறு கொள்கைகளுடன் சேர்ந்த மிகப்பெரிய பண அரசியல் உள்ள நாடு அது. சத்தியவான்கள் அங்கே கிடையாது.அங்கே அரசியல் நீதிகளும் கிடையாது.இந்தியா உலகில் பெரிய ஜனநாயக நாடே தவிர தேர்தலில் நேர்மை இல்லாத நாடு.😎

அடுத்தது நீங்கள் அடிக்கடி கூறுவது போல் சீமான் செக்ஸ் சைக்கோவாக இருக்கட்டும். அதில் என்ன தவறு இருக்கின்றது? யாரையாவது பாலியல் வல்லுறவு கொண்டாரா? அல்லது சிறுவர் பாலியல் குற்றம் உள்ளவரா?வீதிகளில் செல்லும் பெண்களை பாலியலுக்கு அழைத்தாரா?படத்திற்கு கதை சொல்கிறேன் என பெண்களை விடுதிகளுக்கு பாலியல் கொண்டாரா? அவரால் ஒரு பெண்ணை 4/5 வருடங்கள் திருப்திப்படுத்த முடிந்தது.அதற்கு ஒத்துழைத்தவர் தான் அந்த வியஜலச்சுமி. ஒரு செக்ஸ் சைக்கோவுடன் எப்படி ஒரு பெண் ஐந்து வருடங்கள் பாலியல் தொடர்புகளுடன் இருந்தார்?🤣

மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து கொண்டும் சட்டங்கள் நியதிகள் தெரியாமல் வாழ்கின்றீர்கள் என நான் நினைக்கின்றேன். ஏனென்றால் என்னை திருமணம் செய்வதாக கூறி இன்னார் என்னுடன் 5 வருடங்கள் பாலியல் தொடர்பில் இருந்தார் என பென்னாம் பெரிய பிரித்தானியாவில் வழக்கு தொடர முடியுமா யுவர் ஆனர்?😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நீங்கள் இன்னும் இந்திய டீல் அரசியலை புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்து கொள்ளவில்லை என நான் நினைக்கின்றேன்.

உங்கள் அளவுக்கு எனக்கு இந்திய அரசியல் அறிவு இல்லை என்பதை நானும் ஏற்கிறேன்.

12 hours ago, குமாரசாமி said:

இந்திய அரசியல் சிறு கொள்கைகளுடன் சேர்ந்த மிகப்பெரிய பண அரசியல் உள்ள நாடு அது. சத்தியவான்கள் அங்கே கிடையாது.அங்கே அரசியல் நீதிகளும் கிடையாது.இந்தியா உலகில் பெரிய ஜனநாயக நாடே தவிர தேர்தலில் நேர்மை இல்லாத நாடு.

இதை நான் என்றும் மறுத்ததில்லை.

அதனால்தான் சீமானை “சின்ன கருணாநிதி” என பத்து வருடம் முன்பே எழுதினேன். அப்போ அதை நீங்கள் கடுமையாக எதிர்தீர்கள்.

சீமான் கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்கும் அரசியல்வாதி அல்ல, கட்டிடத்தை உடைத்து புதிதாக கட்டும் புரட்சியாளன் என துதி பாடுனீர்கள்.

இப்போ அதே சீமான் சபரீசனிடம் பெட்டி வாங்கி (100 கோடி என்கிறார்கள்) தானும் ஒரு leader அல்ல dealer தான் என்பதை நிறுவி உள்ளார்.

தம்பிகளுக்கு தொண்டை தண்ணி நஸ்டம், புலம்பெயர் தமிழர் சிலருக்கு திரள்நிதி நஸ்டம்.

12 hours ago, குமாரசாமி said:

அடுத்தது நீங்கள் அடிக்கடி கூறுவது போல் சீமான் செக்ஸ் சைக்கோவாக இருக்கட்டும். அதில் என்ன தவறு இருக்கின்றது? யாரையாவது பாலியல் வல்லுறவு கொண்டாரா? அல்லது சிறுவர் பாலியல் குற்றம் உள்ளவரா?வீதிகளில் செல்லும் பெண்களை பாலியலுக்கு அழைத்தாரா?படத்திற்கு கதை சொல்கிறேன் என பெண்களை விடுதிகளுக்கு பாலியல் கொண்டாரா? அவரால் ஒரு பெண்ணை 4/5 வருடங்கள் திருப்திப்படுத்த முடிந்தது.அதற்கு ஒத்துழைத்தவர் தான் அந்த வியஜலச்சுமி. ஒரு செக்ஸ் சைக்கோவுடன் எப்படி ஒரு பெண் ஐந்து வருடங்கள் பாலியல் தொடர்புகளுடன் இருந்தார்?🤣

  1. சீமான் மீது பாலியல் வல்லுறவு வழக்கு இன்றும் இந்திய உயர் நீதிமன்றில் உள்ளது.

  2. பெரியார் தாயை புணர சொன்னார் என பொதுவெளியில் பொய்யை சொன்னவர் சீமான். ஆதாரம் இல்லாத இந்த குற்றசாட்டு சீமானின் உள்மன பாலியல் வக்கிரத்தின் வெளிப்பாடே.

    ஆகவேதான் என்பார்வையில் அவர் செ.சை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து கொண்டும் சட்டங்கள் நியதிகள் தெரியாமல் வாழ்கின்றீர்கள் என நான் நினைக்கின்றேன். ஏனென்றால் என்னை திருமணம் செய்வதாக கூறி இன்னார் என்னுடன் 5 வருடங்கள் பாலியல் தொடர்பில் இருந்தார் என பென்னாம் பெரிய பிரித்தானியாவில் வழக்கு தொடர முடியுமா யுவர் ஆனர்?😂

உங்கள் அளவுக்கு எனக்கு சட்ட அறிவும் இல்லை என்பதையும் ஏற்கிறேன் மை லார்ட்.

ஆனால் சட்டம் நாட்டுக்கு நாடு வேறுபடும். குரானை கிழித்தால் பாகிஸ்தானில் பெரிய குற்றம். சுவீடனில் அது குற்றமே இல்லை.

இந்த விடயத்தில் இந்திய சட்டம் ஐரோப்பிய சட்டத்தில் முற்றிலும் வேறுபட்டது. திருமணத்துக்கு முந்திய பாலியல் உறவு சம்பந்தமான இந்திய, ஐரோப்பிய சமூகங்களின் பார்வை மாறுபட்டது, அதையே சட்டமும் பிரதிபலிக்கிறது.

ஆனால் இப்போ இந்திய சமூகத்தின் பார்வை கொஞ்சம் மாறுகிறது, அண்மைய உச்சநீதிமன்ற தீர்புகள் இதையே காட்டுகிறன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.