Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"என்ன மாதிரியான கட்சி இது.. கரூரில் இருந்து தவெக நிர்வாகிகள் ஓடியது ஏன்.." சென்னை ஐகோர்ட் காட்டம் By Vigneshkumar Updated: Friday, October 3, 2025, 17:28 [IST] 3Subscribe to Oneindia Tamil சென்னை: அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரித் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கரூர் துயரத்தைக் குறிப்பிட்டு காட்டமான கருத்துகளைக் கூறினர். அதை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு எனக் குறிப்பிட்ட நீதிபதி, தவெக என்ன மாதிரியான கட்சி என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது.. அங்குக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாகப் பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி பி.எச்.தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மிகக் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். முதலில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு நீதிபதி செந்தில் குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் வழக்கு விசாரணையின் போது, விஜய் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து விழுந்ததைப் பார்த்தீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். ஏன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் ஏதேனும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். Also Read இனி சாலையோர பிரச்சாரத்திற்கு.. எந்த கட்சிக்கும் அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தெளிவாக சொன்ன தமிழக அரசு வேதனை நீதிபதி மேலும் கூறுகையில், "அங்கு நடந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கும்போதே மிகுந்த வேதனையாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் இதுவரை இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இவ்வளவு நடந்த பிறகும் காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளனர்.. பாதிக்கப்பட்டோரை நேரில் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்த பின் குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். எல்லாக் கட்சிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள். தலைமைப் பண்பே இல்லை உலகமே இந்தச் சம்பவத்தைப் பார்த்திருக்கிறது.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், தலைவர் எல்லாரும் தொண்டர்களை, ரசிகர்களை, மக்களைக் கைவிட்டுப் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர்.. இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார்" என்றார். மேலும், அவருக்குத் தலைமைப் பண்பே இல்லை என்றும் நீதிபதி கூறினார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்கக் கூடாது என்றும் கூறிய நீதிபதி, கரூரில் நடந்த சம்பவத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) என்று குறிப்பிட்டார். Recommended For You 6 வழக்கறிஞர்களை களமிறக்கிய தவெக! 30 நிமிடங்கள் தொடர்ந்து வாதம்! ஒரே பாயிண்டில் ஆஃப் செய்த தமிழக அரசு தவெக என்ன மாதிரியான கட்சி கரூர் பிரச்சாரத்திற்குப் பல்வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டதாகவும் அதில் இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன என்றும் மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன என்றும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, "என்ன மாதிரியான கட்சி இது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?" என்று மிக காட்டமான கேள்விகளை எழுப்பினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/what-kind-of-party-is-tvk-chennai-high-court-slams-vijay-over-karur-stampede-as-leader-fled-the-spot-740355.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links-DMP&ref_content=740361-p2

  • Replies 237
  • Views 9.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யாயினி
    யாயினி

    Vijay Really Waste Fellow ..இப்படி எழுதுவதற்கு மன்னிக்க வேணும். ஒரு நடிகனை நம்பி கர்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், வயோதிபர்கள், இயலாதவர்கள் என்று பல்வேறு பட்டவர்களளும் இவ்வாறன கூட்ங்களுக்கு செல்வதை

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆத

  • ரசோதரன்
    ரசோதரன்

    முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீ

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா....?

நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில் மூலமாக சென்று அங்கிருந்து வேனில் பிரச்சாரத்திற்கு புறப்படுவார்.

எப்போதும் தனி விமானத்தில் பயணம் செய்வது என்பது சாதாரண பயணிகள் விமானத்திற்கு டிக்கெட் வாங்குவது போல் எளிமையான விஷயம் இல்லை.

ஒரு விஐபி தனி விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் எனில், அவர் 3 நிலைகளை கிளியர் செய்ய வேண்டும்.

ஒன்று, வான்வெளி பயண விதிகளை பின்பற்ற வேண்டும்,

இரண்டாவது, பாதுகாப்பு புரோட்டோக்கால்களை பின்பற்ற வேண்டும்,

மூன்றாவது, ஒன்றிய அரசிடம் clearance வாங்க வேண்டும்.

இவை மூன்றும் கட்டாயம்.

இவை தவிர்த்து, தனியார் நிறுவனத்தின் விமானம் கிடைத்த உடன், எந்த நேரத்தில் புறப்படுகிறது? எந்த நேரத்தில் தரையிறங்கிறது? என்கிற flight plan-ஐ தயாரித்து 'Directorate General of Civil Aviation (DGCA)-க்கு கொடுத்து அப்ரூவல் வாங்க வேண்டும்.

அனுமதி கிடைத்த உடன் ஏர்போர்ட்டில் இந்த தனி விமானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். வேறொரு இடத்தில் இறங்குவதற்கும் முன்கூட்டிய இடம் ஒதுக்க வேண்டும்.

பின்னர், விமானம் புறப்படுவதற்கு முன் Airport Traffic Control (ATC) அதிகாரி எல்லா பாதுகாப்புகளையும், ஓடுதளங்களையும் சரி பார்த்துவிட்டு பின்னர் தான் அனுமதி கொடுப்பார். இதற்கு பின்னர் தான் அந்த தனி விமானம் take off ஆகும்.

இப்ப கரூர் சம்பவத்துக்கு வருவோம்.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட நடிகர் விஜய், இந்த அனுமதிகளை எல்லாம் முன்கூட்டியே பெற்றிருப்பார்.

ஆனால், கரூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து அங்கிருந்து சுமார் 11 மணியளவில் புறப்படுவோம். எனவே, அந்த நேரத்திற்கு take off அனுமதியை முன்கூட்டியே வாங்கியிருக்கலாம்.

(12.45 மணிக்கு வர வேண்டிய இவர்கள் எதற்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும்....? ஏனெனில், பிரச்சாரம் இரவு வரை நீடிக்கும் என முன்கூட்டியே இவர்களுக்கு தெரிந்துள்ளது)

இப்படியான ஒரு சூழலில் கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் எல்லா திட்டமும் மாறின.

6 to 7 மணிக்குள் கூட்டத்தை விட்டு அவசரமாக புறப்பட்ட விஜய் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து தனி விமானம் எடுத்துக் கொண்டு உடனே சென்னை வந்து விட்டார்.

இவருக்கு எப்படி உடனடியாக take off மற்றும் landing ஆகியவற்றிக்கு விரைவாக அனுமதி கிடைத்தது...?

கிட்டத்தட்ட 3 - 4 மணி நேரத்திற்கு முன்கூட்டியே திட்டமிடாமல் வந்த விஜய்க்கு ATC அதிகாரி எப்படி உடனடியாக அனுமதி கொடுத்தார்...?

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தனி விமானங்களில் புறப்பட்டால், இவர்களுக்கு மட்டும் தான் விதிவிலக்குகள் மாற்றி அமைக்கப்பட்டு அவசர அனுமதியை தருவார்கள்.

ஆனால், அரசியல் அதிகாரம் இல்லாத விஜய்க்கு எப்படி உடனடி அனுமதி கிடைத்தது...?

வான்வெளி பயணத்தில் மட்டும் அதிகாரிகள் அவசரப்பட மாட்டார்கள்/சமரசம் செய்ய மாட்டார்கள். மிகவும் கண்டிப்புடன் செயல்படுவார்கள்.

ஆனால், விஜய் விவகாரத்தில் அப்படி இல்லையே...!!!

ஒருவேளை, விஜய் ஒரு நாள் முழுக்க whole day அனுமதி வாங்கியிருக்கலாம்...?

சரி தான். இதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், முழு நாள் பயணத்திற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்தாலும் கூட பயண திட்டத்திற்கு எதிராக ATC அதிகாரி எப்படி அனுமதி வழங்கினார்.

விஜய் திருச்சி வந்ததும் விமானத்தில் ஏறி 'டிரைவர்....ஓ சாரி...பைலட் வண்டியை எடுப்பா'னு சொன்னவுடனே அவர் பறந்து வந்து விட்டாரா...?

விஜய்க்கு எப்படி விதிமுறைகள் relax செய்யப்பட்டது...? உடனடி take off அனுமதி கிடைத்தது...?

நேற்றுக் கூட ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் முன் அறிவிப்பின்றி அவசரமாக டில்லி புறப்பட்டது உங்களுக்கு தெரியும். இவர்கள் என்ன அந்த தனி விமானத்தை தேர்தல் வரை மொத்தமாக பேசி வாங்கி விட்டார்களா என்ன?

விமானப்போக்குவரத்து துறை ஒன்றிய அரசிடமே உள்ளது. ஒன்றிய பாஜக அரசை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய்க்கு அவர்கள் எப்படி இவ்வளவு சலுகைகளை இறங்கி வந்து செய்கிறார்கள்...?

உங்களுக்கு உண்மை விளங்கும் என நம்புகிறேன்!!

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2025 at 01:28, குமாரசாமி said:

இதே போல் சீமான் நடத்தும் கூட்டங்களில் இப்படி சிறு அசம்பாவிதம் நடந்தாலும் உங்கள் கேலிச்சித்திரமும் கருத்தும் எப்படியிருந்திருக்கும் என ஒருகணம் சிந்தித்தேன். சிரித்தேன்.

குமாரசாமி, இதுக்கெல்லாம் கேலிச்சித்திரம் வரைவதோ AIஇல் கேட்டு வாங்கிப் போடுவதோ நன்றாக இருக்காது. நாகரீகமாகவும் இருக்காது.

உதாரணத்துக்கு சென்ற வருடம் கள்ளக்குறிச்சியில் (விசச்)சாரயம் குடித்து 67 பேர் இறந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இறந்த குடும்பங்களும் தலா பத்து இலட்சம் கொடுத்ததுக்குமே நான் ஒன்றுமே வரையவில்லையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

குமாரசாமி, இதுக்கெல்லாம் கேலிச்சித்திரம் வரைவதோ AIஇல் கேட்டு வாங்கிப் போடுவதோ நன்றாக இருக்காது. நாகரீகமாகவும் இருக்காது.

உதாரணத்துக்கு சென்ற வருடம் கள்ளக்குறிச்சியில் (விசச்)சாரயம் குடித்து 67 பேர் இறந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இறந்த குடும்பங்களும் தலா பத்து இலட்சம் கொடுத்ததுக்குமே நான் ஒன்றுமே வரையவில்லையே.

விஜயின் கரூர் சம்பவத்தை போல் சீமான் அவர்களது பிரச்சார கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் ஆமையோட்டுடன் ஒரு கேலிச்சித்திரம் கட்டாயம் வரைந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.😂

நேசமானவர்கள் எது செய்தாலும் கை துடிக்காதாக்கும். 🙃

சும்மாபகிடிக்கு😃

  • கருத்துக்கள உறவுகள்

557621124_10231837362897297_512726858299

முன்னாள் திமுக MLA சங்கரவள்ளியின் மகன் தான் நீதிபதியாம்.. அதனால் நியாயமா இருப்பார் என்று நம்புகிறேன்.

Sooriya Prakash


################# ##################

557596972_3228496693972620_7252265041467

நீதியரசர் இல்ல விழாவில் கலந்து கொண்ட நம்ம முதல்வர். நீதிதான் மறைந்தது. விஜய் மறையவில்லை அவரின் புகழ் பலமடங்கு ஏறிக்கொண்டுள்ளது.

Er. K. Arumugam

################# ############### #############

May be an image of 5 people and text that says '"கரூரில் மனிதனால் உருவாக்கப்! பேரழிவு (Man made Disaster) நிகழ்ந்துள்ளது" சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்; அரசு அமைதியாக இருக்க கூடாது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார்'

மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂↕️

திருநெல்வேலிகாரன்

##########################

எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன்.

இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் விஜய்யை பார்க்க போய் இறந்தவர்களுக்கு ஆளுக்கு 34 லட்சம் இந்திய ரூபா கிடைக்கின்றது. 11 மில்லியன் 5 இலட்சம் இலங்கை ரூபா.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

'நாங்கள் ஓடவில்லை': ஆதவ் அர்ஜூனா பேச்சும் உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றிய திமுக எம்.பி. விளக்கமும்

கரூர் கூட்ட நெரிசல் - சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், X/aadhavarjuna & P.Wilson

படக்குறிப்பு, ஆதவ் அர்ஜூனா மற்றும் வில்சன் (வலது)

13 அக்டோபர் 2025, 08:24 GMT

புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர்

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தவெகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், "வலி மிகுந்த நாட்களை கடந்து வருகிறோம், எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது. எங்கள் உறவுகள், எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எழுச்சி இருந்தது. கரூரில் நடைபெற்றது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். எனவே கரூரில் அன்று என்ன நடந்தது என்ற உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் பிரசாரங்களுக்கு செல்லும் போது காவல்துறை பெரிதாக உதவி செய்வதில்லை. அரியலூரில் உதவி செய்தனர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சில தகவல்களை கொடுத்து உதவினார். அதனால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தோம். ஆனால் அன்றைய தினம் நாமக்கல்லில் கூட்டத்தை முடித்து விட்டு, கரூரில் உள்ளே நுழையும் போது கரூர் காவல்துறை எங்களை வரவேற்றார்கள், திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேசுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் நிறுத்திய இடத்தில் தான் பேசினோம்." என்றார்.

"விஜய் தாமதமாக வரவில்லை"

மேலும் பேசிய ஆதவ் அர்ஜூனா, "எங்கள் தலைவர் (விஜய்) தாமதமாக வந்தார் என்று வதந்திகள் பரப்பப்பட்டன. கரூரில் காவல்துறை வழங்கிய நேரம் மதியம் 3 மணி முதல் இரவு -10மணி வரை. அந்த நேரத்துக்குள் அங்கு வந்துவிட்டோம்.

தவறுகள் இருந்தால் கரூர் காவல்துறை ஏன் மாவட்ட எல்லையில் வரவேற்றது? கூட்டத்தில் தண்ணீர் கேட்ட போது விஜய் தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வழி விட வேண்டும் என்ற போது அதற்கும் வழிவிட்டார். இந்த இடத்தை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்தார்கள் என்ற ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்." என்று கூறினார்.

" நாங்கள் ஓடவில்லை"

தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்று கூறிய ஆதவ் அர்ஜூனா, " சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல. கரூர் எல்லையில், நான், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆனந்த் ஆகியோர் காத்திருந்தோம். எங்கள் மொபைல் நெட்வொர்க் – தரவுகளை சரி பார்த்து அதை தெரிந்துக் கொள்ளலாம். காவல்துறையினர் எங்களை வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், பிரச்னை உருவாகும் என்று கூறினார்கள். அதையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். திட்டமிட்டு, தவெக வரக்கூடாது என்று ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் மீது தீவிரவாதிகள் போல தடியடி நடத்தினார்கள்.

இறப்பு ஏற்பட்ட மூன்று -நான்கு நாட்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் முதலில் மனிதர்கள். பிறகு தான் அரசியல்வாதிகள். எங்கள் வீட்டில் யாராவது இறந்து போனால் உடனே ஊடகங்களுக்கு வந்து பேட்டி அளிக்க முடியுமா? கடந்த மாதம் 27-ம் தேதி முதல் அடுத்த ஞாயிறு வரை விடுமுறை, எனவே நீதிமன்றம் செல்ல முடியவில்லை. சமூக ஊடகங்களில் உண்மை பேசிய நபர்களை கைது செய்தார்கள். நீதிமன்றம் செல்ல முடியாத ஒரு வாரத்தில் திமுக தவெக மீது எப்படி குற்றம் சுமத்தி, பொய் பரப்பினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்" என்றார்.

கரூர் கூட்ட நெரிசல் - சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், Getty Images

"அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நடைபெறும் போதே அரசு விளக்கம் ஏன்? "

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு உயர் அதிகாரிகள், அரசு செயலர்கள் அரசு தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார் ஆதவ் அர்ஜுனா. "ஒரு விசாரணை நடைபெறும் போது எப்படி அரசு இதை செய்ய முடியும்." என்றார்.

மேலும், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூட்ட நெறிமுறைகள் குறித்து வழக்கு நடக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறார். அந்த விசாரணை வெளிப்படையாக நடைபெறுமா என்று தெரியாது. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையாக கருத்துகளை, தவெக தான் தவறு செய்தது மாதிரி கருத்துகளை பதிவு செய்தார். தவெகவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள், தலைவரின் தலைமை பண்பு, அரசியல் வருகை குறித்து எல்லாம் பேசப்பட்டது. என்ன கோபம் உங்களுக்கு?" என்று அவர் தெரிவித்தார்.

"சிபிஐ விசாரணைக்கு ஏன் கொண்டாடுகிறார்கள்? " - திமுக

கரூர் கூட்ட நெரிசல் - சிபிஐ விசாரணை

படக்குறிப்பு, திமுக வழக்கறிஞர் வில்சன்.

இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். "தவெக சிபிஐ விசாரணை கேட்கவேயில்லை, பிறகு ஏன் நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றியை போல் பேசுகிறார்கள்" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவர் பேசுகையில், " இது இடைக்காலத் தீர்ப்பு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தவெக என்ன செய்தது என்றால் ஒன்றும் இல்லை. வாய்க்கு வந்த படி பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். சிறப்பு புலனாய்வு குழு இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை ஒப்படைக்க சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் இதுவரை நடந்தது சரியே. " என்றார்.

சிபிஐ விசாரணை கோரிய இரண்டு மனுதாரர்கள் தங்களுக்கு தெரியாமல் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தது குறித்து கேட்ட போது, " தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் பேசினார்கள். அவர்களை மனு அளிக்க சொல்லியிருக்கிறது நீதிமன்றம். மோசடியாக ஒரு தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்யும். இன்று கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு தெரியட்டும், புரியட்டும் இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று. இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. " என்றார்.

வீடியோ கால் மூலம் வழக்கில் ஷர்மிளா, செல்வராஜ் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தங்களுக்கு தெரியாமல் மனு கொடுக்கப்பட்டதாக ஷர்மிளா மற்றும் செல்வராஜ் ஆகியோர் இன்று கூறியிருந்தனர்.

அவர்கள் இந்த விவகாரம் குறித்து கரூர் சட்ட உதவி மையத்தை நாடியதாகவும், எனவே சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து இன்று இந்த வழக்கில் வீடியோ கால் மூலம் உச்சநீதிமன்றத்தில் தங்கள் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர் என்று சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த தமிழ்முரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgyw59nxzro

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரூரில் இறந்தோர் சாக வேண்டியோரே!

அநாகரிகத்தின் உச்சம் சீமான்!

மனசு பூராவும் நஞ்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

கரூரில் இறந்தோர் சாக வேண்டியோரே!

அநாகரிகத்தின் உச்சம் சீமான்!

மனசு பூராவும் நஞ்சு.

குஞ்சு குருமான் உட்பட இறந்த அனைவரும் சாக வேண்டியோரே என அண்ணன் அநாகரிகன் ஒரு அருமை முத்தை உதிர்ர்துள்ளார்.

வழமையா வாண்டடா வந்து தலையை கொடுக்கும் எந்த தம்பியையும் இந்த பக்கம் காணோம்.

திருந்தீடாய்களோ😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.