Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

Vignesh SelvarajPublished: Wednesday, October 8, 2025, 23:32 [IST]

EPS Hints at Possible TVK AIADMK Alliance During Kumarapalayam Campaign

நாமக்கல்: அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

2026 சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "திமுக வெற்று கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி திமுக அரசு சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது.

கரூரில் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பிற்கு நீதிமன்றம் சொல்வதற்கு முன்னதாக திமுக அரசு விசாரணை குழுவை ஏன் அமைத்தது. ஒரு துறையின் செயலாளர் திமுகவின் கைக்கூலியாக கரூர் சம்பவத்திற்கு பேட்டியளிக்கிறார். ஏடிஜிபி சொல்வது ஏற்புடையது அல்ல. 41 உயிரிழப்பிற்கு சிபிஐ விசாரணை வேண்டும். தவறு செய்த காவல்துறையை வைத்தே விசாரணை நடத்தினால் எப்படி நியாயம் கிடைக்கும். இந்த சதி த்திட்டத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் விஜய் ரசிகர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, "பாருங்க.. கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்க செவியைத் துளைக்கும்" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக மக்கள் உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடப்பதாக திமுக அரசு அமைத்த குழுவே அறிக்கை கொடுத்தது. அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளனர், ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடுமையாக சாடியிருக்கிறது. இதற்கு என தனி அதிகாரிகள் அமைக்கப்பட்டு, ஒரு மாதம் மேலாகிறது, ஆனால் இன்னமும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள், அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை. ஒருநபர் கமிஷன் அமைத்த பிறகு யாரும் வெளியில் தகவல் சொல்லக் கூடாது என்பது நியதி. ஆனால் திமுக அரசு கமிஷன் அமைத்து, அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்கள்.

கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விப்பட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா?

41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது." எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

https://tamil.oneindia.com/news/chennai/eps-hints-at-possible-tvk-aiadmk-alliance-during-kumarapalayam-campaign-741671.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

யோவ் விஜை….

வாய்யா வெளில 🤣

எடப்பாடி சி பி ஐ விசாரணை கோருகிறார்….

அதை கோர வேண்டிய விஜையோ அமைதி காக்கிறார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2025 at 23:21, goshan_che said:

யோவ் விஜை….

வாய்யா வெளில 🤣

இந்தக் கூட்டணி அமைந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம். இந்தக் கூட்டணியை நான் வரவேற்கிறேன்.திமுகவினதும் குடும்ப ஆட்சி துடைத்தழிக்கப்பட வேண்டும்.விஜைக்கும் இப்போது இருக்கும் நெருக்கடியில் இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.(அப்போதும் நாம் தமிழர்கட்சிதான் எனது தெரிவாக இருக்கும். தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்துப் போகாமல் வைத்திருப்பதற்கு அந்தக்கட்சி ஒன்று மட்டும்தான் தமிழ்நாட்டில் செயற்பாட்டில் இருக்கிறது.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

விஜை சில சமயம் அதிமுக+பிஜேபி உடன் கூட்டணி போகாமல் - தனியே தொகுதி உடன்பாடு மட்டும் செய்துகொள்ள கூடும் என நினைக்கிறேன்.

40-60 தொகுதிகளை விஜைக்கு ஒதுக்கி விட்டு, ஏனையவற்றில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடலாம். விஜை இந்த தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்தலாம்.

இரு பகுதியிம் ஆளை ஆள் திட்டாமல் அதே நேரம் ஒரே மேடை ஏறாமல் வாக்கு கேட்க லாம்.

பிகு

தமிழ்நாட்டில் எல்லாமுமே போலிதான்.

திமுக/அதிமுக/தேமுதிக போலித் திராவிடம்.

நாதக போலித் தமிழ் தேசியம்.

கொள்கைவாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் கொள்கை எதிரியை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்படும்.காரித்துப்பினால் துடைச்சுக் கிட்டு அரசியலில் இதெல்லாம் சாதரணம்ப்பா என்று அள்ளி விட்டுப் போகவேண்டியதுதான்எல்லோரும் போலி தவெகதான் அசல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் கொள்கை எதிரியை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்படும்.காரித்துப்பினால் துடைச்சுக் கிட்டு அரசியலில் இதெல்லாம் சாதரணம்ப்பா என்று அள்ளி விட்டுப் போகவேண்டியதுதான்எல்லோரும் போலி தவெகதான் அசல்.

உங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை.

அப்படி ஒரு உடன்பாட்டுக்கு விஜை போனால் அவரும் போலியே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தமிழ்நாட்டில் எல்லாமுமே போலிதான்.

திமுக/அதிமுக/தேமுதிக போலித் திராவிடம்.

நாதக போலித் தமிழ் தேசியம்.

கொள்கைவாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே🤣.

1 hour ago, goshan_che said:

உங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை

பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்.காங்கிரஸ் ஆட்சியில அதுவும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் ஆட்சியிலதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. திமுக பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்து மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்ததது. கடந்த பொதுத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆதரவு கொடுத்தும் பெரும்பான்மை போதாவிட்டால் திமுக காங்கிரசைக் கழட்டி விட்டு பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆட்சிக்கு முண்டு கொடுத்திருக்கும்.ஒரு ஈழத்தமிழனாக காங்கிரசும் திமுகவும் சேர்ந்து எம்மினத்தைக் கருவறுத்த தார்மீகக் கோபம் எனக்கு இருப்பதில் தார்மீக நியாயம் இருக்கிறது.அந்த அளவுக்கு பாஜகவோ அதிமுகவோ ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எம்ஜியார் புலிகளுக்கு பெருந்தொகைப் பணம் கொடுத்து போராட்டத்துக்கு உதவினார்.ஜெயலலிதா ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிராக பேசியிருந்தாலும் கடைசிகாலங்களில் தமிழக சட்டசபையில் தமிழ்ஈழத்துக்கான சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீரம்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.ஆறரைக்கோடி தமிழ்மக்களின் சார்பான முக்கிய தீர்மானம் அது.அந்தவகையில் அதுமட்டுமன்றி அதிமுகவில் எப்போதும் புதிய முகங்கள் அமைச்சர்களாவும் சட்டசபை உறுப்பினர்களகாவும் ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒப்பீட்டு அளவில் அதி கூடிய எண்ணிக்கையில் தமிழர்களளுக்கு அந்த வாயப்பளிக்கப்பட்டது. சாதராண கிளைக்கழக செயலாளராக இருந்த தமிழரான எடப்பாடி முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.திமுகவில் இது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு விடயம் இதுஇதலைமப்பதவி கருணநிதி குடும்பத்திடம் இருக்க அமைச்சர்களாக ஒரே முகங்கள் மீண்டும் மீண்டும் இருப்பார்கள் அவர்களிடமிருந்து அவர்களின் வாரிசுகளுக்கு அந்தப்பதவிகள் தொடரும். பெரும்பாலானவர்கள் தெலுங்கு வம்சாவழியினராக இருப்பார்கள்.சிறுபான்மை வாக்குகளைக் கவர்வதற்காக ஆ இராசா >திருமாவளவன்போன்றவர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். திருமாவுக்கு பிளாஸ்ரிக் கதிரை கொடுக்குமளவுக்குத்தான் அவர்களின் சமூகநீதி இருக்கிறது.ஜெயலலிதா அதிமுக உறுப்பினர்கள் சிலர் ப. தனபால்அவர்களைக்கெளரவக் குறைவாக நடத்தியதைக் கேள்விப்பட்டு அவரை சபாநாயகராக்கி அவர் வரும்போது முதல்வர உட்hட அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் பெறுப்பைக் கொடுத்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Paanch said:
  4 hours ago, goshan_che said:

தமிழ்நாட்டில் எல்லாமுமே போலிதான்.

  1 hour ago, goshan_che said:

உங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை.

ஐயா,

உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது.

இப்போ வாசகருக்கும் விளங்கி இருக்கும்.

நீங்கள் கோட் பண்ணி இருக்கும் எனது எழுத்துக்களை மீள ஒருதரம் வாசிக்கவும். அப்போதும் விளங்கவில்லை எனில் சொல்லவும், விரிவாக விளக்கம் தரலாம்.

புலவருக்கு விளங்கியாதால் லைக் போட்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்.காங்கிரஸ் ஆட்சியில அதுவும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் ஆட்சியிலதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. திமுக பாஜகவுடன் கூட்டுச்சேர்ந்து மத்தியில் ஆட்சியில் பங்கெடுத்ததது. கடந்த பொதுத்தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆதரவு கொடுத்தும் பெரும்பான்மை போதாவிட்டால் திமுக காங்கிரசைக் கழட்டி விட்டு பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆட்சிக்கு முண்டு கொடுத்திருக்கும்.ஒரு ஈழத்தமிழனாக காங்கிரசும் திமுகவும் சேர்ந்து எம்மினத்தைக் கருவறுத்த தார்மீகக் கோபம் எனக்கு இருப்பதில் தார்மீக நியாயம் இருக்கிறது.அந்த அளவுக்கு பாஜகவோ அதிமுகவோ ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எம்ஜியார் புலிகளுக்கு பெருந்தொகைப் பணம் கொடுத்து போராட்டத்துக்கு உதவினார்.ஜெயலலிதா ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிராக பேசியிருந்தாலும் கடைசிகாலங்களில் தமிழக சட்டசபையில் தமிழ்ஈழத்துக்கான சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீரம்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.ஆறரைக்கோடி தமிழ்மக்களின் சார்பான முக்கிய தீர்மானம் அது.அந்தவகையில் அதுமட்டுமன்றி அதிமுகவில் எப்போதும் புதிய முகங்கள் அமைச்சர்களாவும் சட்டசபை உறுப்பினர்களகாவும் ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒப்பீட்டு அளவில் அதி கூடிய எண்ணிக்கையில் தமிழர்களளுக்கு அந்த வாயப்பளிக்கப்பட்டது. சாதராண கிளைக்கழக செயலாளராக இருந்த தமிழரான எடப்பாடி முதல்வராகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.திமுகவில் இது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு விடயம் இதுஇதலைமப்பதவி கருணநிதி குடும்பத்திடம் இருக்க அமைச்சர்களாக ஒரே முகங்கள் மீண்டும் மீண்டும் இருப்பார்கள் அவர்களிடமிருந்து அவர்களின் வாரிசுகளுக்கு அந்தப்பதவிகள் தொடரும். பெரும்பாலானவர்கள் தெலுங்கு வம்சாவழியினராக இருப்பார்கள்.சிறுபான்மை வாக்குகளைக் கவர்வதற்காக ஆ இராசா >திருமாவளவன்போன்றவர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். திருமாவுக்கு பிளாஸ்ரிக் கதிரை கொடுக்குமளவுக்குத்தான் அவர்களின் சமூகநீதி இருக்கிறது.ஜெயலலிதா அதிமுக உறுப்பினர்கள் சிலர் ப. தனபால்அவர்களைக்கெளரவக் குறைவாக நடத்தியதைக் கேள்விப்பட்டு அவரை சபாநாயகராக்கி அவர் வரும்போது முதல்வர உட்hட அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் பெறுப்பைக் கொடுத்தார்.

பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.

மேலே சில கட்சிகளை போலி என்றேனே? அப்படி ஒரு போலிதான் காங்கிரசும்.

ரஜீவை திமுக புலிகளை வைத்து கொலை செய்தத்து என்பார்கள் சில வருடங்களில் கூட்டணி.

அதேபோல் மதசார்ன்மை என கூவி கொண்டே கரசேவையை அனுமதிப்பார்கள்.

ஆகவே தான் -(சங்கி) கொள்கையில் தடம் மாறாமல் இருக்கும் பாஜக மிக ஆபதானவர்கள்.

ஜெயலலிதா பற்றி நீங்கள் எழுதுவதில், திமுகவில் சில குடும்பங்கள், தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் கூட, களைய வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை.

நானே இவை பற்றி பலதடவை எழுதியிம் உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கார்ட்டூன்...

16 minutes ago, goshan_che said:

அதேபோல் மதசார்ன்மை என கூவி கொண்டே கரசேவையை அனுமதிப்பார்கள்.

சங்கிகளை வளரவிட்டதே காங்கிரஸ்தான்.கரசேவையை அனுமதித்து பாபர் மசூதியை இடிக்க வைத்ததே காங்கிரஸதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

கார்ட்டூன்...

சங்கிகள் காங்கிரசின் பதவி சுகத்துக்கு ஆப்படித்தவர்கள்.

ஆகவே சங்கிளை அவர்கள் வளர்க்கவில்லை.

ஆனால் 1990 களில் வடக்கே சங்கி ஆதரவு வாக்குகளை கவர காங்கிரஸ் முயன்றதே அதன் நிலை மாற்றத்துக்கும், இன்றைய அவல நிலைக்கும் காரணம்.

விபி சிங் என்ற அற்புதமான மனிதனை அகற்றி, மண்டல் கமிசன் விடயத்தில் பிஜேபி யோடு சேர்ந்து காங்கிரஸ் ஆடிய தப்பாட்டமே காங்கிரசின் வீழ்ச்சியின், பிஜேபியின் எழுச்சியின் முதல் அத்தியாயம்.

சங்கிகளை காங்கிரஸ் வளர்க்கவில்லை, ஆனால் ஜனதா வை அழிக்க காங்கிரஸ் செய்தவை+ வடக்கில் கிளறப்பட்ட மதவெறி பிஜேபி வளர ஏதுவானது.

இதில் திமுக, அதிமுக என கூட்டணி வைத்த கட்சிகளுக்கும் பங்குண்டு.

பிகு

உங்களுக்கு ஆதரவான கருத்தை விகடன் வெளியிட்டால் பகிரும் நீங்கள்…

சீமானை பற்றி விகடன் எழுதினால் திமுக கைக்கூலி, விபச்சார ஊடகம் என எழுதுவதேன் புலவர்?

ஒரே விகடன் சில சமயம் கணிகையாய், சில சமயம் கண்ணகியாய் அமைவது எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்களுக்கு ஆதரவான கருத்தை விகடன் வெளியிட்டால் பகிரும் நீங்கள்…

சீமானை பற்றி விகடன் எழுதினால் திமுக கைக்கூலி, விபச்சார ;ஊடகம் என எழுதுவதேன் புலவர்?

ஒரே விகடன் சில சமயம் கணிகையாய், சில சமயம் கண்ணகியாய் அமைவது எப்படி?

இதே கேள்வியை நான் உங்களை நோக்கியும் வைக்கிறேன்.இதில் சீமான் பற்றிய எதிர்மறைக்கருத்துக்கள் வரும்போது அதைப்பகிரும் நீங்கள்.நேர்மறைக்கருத்துக்கள் வரும்போது பகிர்வதில்லை.அதே சமயம் நீங்கள் ஆதரிக்கும் பாஜகவின் கொள்கை எதிரியான விஜய் பற்றி எதிர்மறையான எழுதினால் அதைக்கண்டுகொள்வதில்லை. எந்த ஊடகம் சீமானைப்பற்றி எதிர்மறைக்கருத்துக்களை வெளியிட்டாலும் அதை உடனே பகிர்ந்து கொள்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புலவர் said:
  3 hours ago, goshan_che said:

உங்களுக்கு ஆதரவான கருத்தை விகடன் வெளியிட்டால் பகிரும் நீங்கள்…

நான் சீமான் சம்பந்தமான எந்த நேர்மறை கருத்தையும் பதிவதில்லை.

ஏன் என்றால் எனக்கு அவரை பிடிக்காது.

அவரை அரசியலில் முடமாக்குவதே தமிழக, ஈழ தமிழருக்கு நன்மை என்பது என் நிலைப்பாடு.

ஆனால் சீமான் பற்றி விகடன் போன்ற ஒரு நிறுவனம் நேர்மறையான கட்டுரை எழுதினால், அதில் எழுதபட்டதை விமர்சிப்பேனே ஒழிய, விகடன் நாதக ஊதுகுழல், அல்லது சீமானிடம் காசு வாங்கி கொண்டு எழுதுகிறது என சொல்வதில்லை.

இதுதான் வித்தியாசம்.

ஆனால் தம்பிகளின் யூடியுப் சேனல்களை, உ+ம் தூசண துரை, முன்னர் அய்யநாதன், ராவணன் குடில் - அவை பிரச்சார தளங்கள் என அடையாளம் காட்டுவேன்.

சண்டிவி, கலைஞர் டிவிக்கும் அதுவே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நான் சீமான் சம்பந்தமான எந்த நேர்மறை கருத்தையும் பதிவதில்லை.

ஏன் என்றால் எனக்கு அவரை பிடிக்காது.

நான் சீமானின் அனைத்துக்கருத்துக்களையும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில்லை. சீமான் மீது சில விடயங்களில் முரண்பாடு உண்டு.முன்ஆயத்தம் இன்றி தினமும் பத்திரிகையாளர்களை எதிர்கொள்ளும் போது சில பத்திரிகையாளர்களின் விசமத்தனமான கருத்துக்களுக்கு பதலளிக்கப் போய் சிக்கலில் மாட்டுப்படுவார். நான் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் மிகத்தெளிவானது தமிழ்த்தேசியத்தை நீர்த்துப் போகமால் அடுத்த சந்ததிக்கு கடத்துகிறார்.அதுவும் ஒரு வெகு ஜன அரசியல் இயக்கமாய் கட்டமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். சீமானுக்கு முதல் அரசியல் கட்சி தொடங்கியவர்கள் ஒருசிலரைத்தவிர எல்லோரும் தங்கள் கட்சியின் பெயரில் திராவிடத்தை சேரத்து விடுவார்கள். நாம்தமிழர்கட்சி உருவாகிய பின்பு யாரும் திராவிடத்தை தமது கட்சிப்பெயரில் சேர்ப்பது கிடையாது.அந்த அளவுக்கு தமிழத்தேசியத்தின் எழுச்சி அவர்களை அச்சுறுத்துகிறது.விஜய் கூட கட்சிப்பெயரில் திராவிடத்தைச் சேர்க்காமல் கொள்கையில் திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் சேர்த்திருக்கிறார். இது ஒரு முரண்நகையாக இருந்த போதிலும் அவருக்கு மலையாள கன்னட தெலுங்கு அரசிகர்கள் கணிசமான அளவு இப்பதால் அந்தவாக்குகளைத் தக்க வைக்கவே திராவிடத் தேசியததையும் தூக்கிப் பிடிக்கிறார்.இதற்கு முதல் ஆதித்தனார் மாபொசி போன்றவர்கள் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து அதில் வெற்றி காணமுடியாமல் திராவிடத்துக்குள் கரைந்து போனார்கள். வெற்றி என்பது சட்டசபை உறுப்பினர்களையோ பாரளுமன்ற உறுப்பினர்களையோ பெற்று விடுவது மட்டுமல்ல ஒரு பெரிய சனத்திரளை ஒரு சித்தாந்தத்தை நோக்கி அணிதிரள வைப்பது. அதில் சீமான்தனித்துவமாகச் செயற்படுகிறார்.மற்றவர்களின் சித்ததாந்ததில் தனித்தும் இல்லாத கூட்டுக்கலவையாக இருக்கிறது. ஒருகாலத்தில் இந்தியாவின் எதிர்க்கட்சியாக இருந்த கம்னியூஸட்டுகள் அப்போது சித்தாந்ததில் உறுதியாக இருந்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டு கூட்டுக்கலவையாகி திமுகவுக்கும் காங்கரசுக்கும் முரட்டு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.முன்பு ஜனதா தளம் பல கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரசுக்கு எதிராக கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது. பலதரப்பட்டமக்களின் பிரதிநிதிகள் அந்த ஆட்சியில் பங்கு பெற வசதியாக இருந்தது.இப்போது அந்த இடத்தை பாஜக பிடித்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இங்கே நீங்கள் எழுதியவற்றுக்கான பதில் முன்பே பல தடவை யாழில் விவாதிக்கப்பட்டு உள்ளது.

இனவழி தேசியம் வேறு, இனத்தூய்மைவாதம் வேறு.

சீமான் தமிழ் நாட்டில் 300-600 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை புறம்தள்ளி, அவர்கள் ஆளதகுதி அற்றவர் எனக்கூறி முன்னெடுப்பது தமிழ் தேசிய அரசியல் அல்ல, அது தமிழ் நாட்டில் வாழும், வாக்குரிமை உள்ள, மக்களிடையே சாதிய பிளவை கூர்மையாக்கும், சாதியை-வைத்து இனம்பிரிக்கும், இனத்தூய்மைவாத வெறுப்பரசியல்.

எப்படி ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் தமிழக மக்களின் நலனுக்கு கேடோ, அதை ஒத்த கேடே சீமானின் சாதிய அடிப்படையில் அமைந்த இனத்தூய்மைவாதமும்.

இதில் மேலதிகமாக சீமான், சங்கிகளை பட்டும் படாமலும் விமர்சித்து கொண்டு, அவர்களின் கொள்கைகளை முந்தள்ளுவது, அரசியலை மத மயப்படுத்துவது, அவர் இப்போ இருக்கும்( தெலுங்கு வம்சாவழி ) திராவிட அரசியல்வாதிகளுடன் நேரடி மறைமுக கொஞ்சி குலாவுதல்களை செய்து கொண்டு, அதே சமயம் பச்சை பொய்களை கூறி பெரியாரை, பெரியாரியத்தின் முற்போக்கு விளைவுகளை மறுதலிப்பது அவர் ஒரு அரசியல் தரகர் என்பதையும், பாஜக பி டீம் என்பதையும், இப்போ திமுக சி டீம் என்பதையும் உறுதி செய்கிறது.

2009 க்கு முதல் அன்றாடம் காய்ச்சியாக இருந்த அதன் பின் எந்த தொழிலும் இன்றி நீலம்க்கரையில் 6 கோடி பங்களா, அதி சொகுசு ஜப்பான் பஜெரோ, மலைநாட்டில் கோப்பி தோட்டம் என வலம் வருவது, அவர் அரசியலை பாவித்து களவு எடுத்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது.

அவர் கட்சியில் பொலிஸ் கிராப்புடன் திடீரென தோன்றிய “முன்னாள் இந்திய இராணுவ வீரர்” விங், அவர் வீட்டில் ஆயுதம் தாங்கிய சிவில் உடை தரித்தோர் இருப்பது - அவர் ரோ ஏஜெண்ட் என்பதை காட்டி நிற்கிறது.

இத்தனைக்கும் மேலாக சுப முத்துகுமார் மரணம் அதில் சீமான், தூஷண துரைமுருகன் பங்கு.

சீமான் தமிழ் இனத்தில் தோன்றியிள்ள புற்று நோய் கட்டி. இது வளர்வது போல் தோன்றினாலும் அது வளர்ச்சி அல்ல. வெட்டி வீசி விடுவதே ஒரே வழி.

பிகு : மக்கள் ஆதரவு. புலிகளின் அதிபுச்ச புள்ளியில் கூட டக்லஸ் யாழ்ப்பாணத்தில் 10% வாக்கு எடுத்தார்.

சீமானுக்கு விழும் வாக்க்கில் பலது நோட்டோவுக்கு சமனாக மக்கள் வேறு தெரிவின்றி போடுவது. அப்படி அவருக்காக விழும் வாக்கு கூட அவரின் நயவஞ்சகம் புரியாத, மேடையில் அவர் பேசுவதுதான் அவரின் உண்மையான முகம் என நம்பும் அப்பாவிகளின் வாக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே சொன்னவை அனைத்தும் தமிழக தமிழர் நலனுக்கு சீமான் ஏன் கேடு என்பதற்க்காக வாதங்கள்.

எமக்கு சீமான் ஏன் கேடு என்பதற்கு இன்னும் சில பத்திகள் எழுத வேண்டும்.

சுருக்கமாக 2009 க்கு பின் ஈழத்தமிழர் ஒரு இனமாக மீண்டும் திரள்வதை தடுக்க, அவர்களுக்கான வெளி ஆதரவை தடுக்க பலர் பல இடங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

புலத்தில் - அருண், சுமன், கருணா, பிள்ளையான் இத்யாதிகள்.

புலம்பெயர் தேசத்தில் - ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்டதாக பிரிந்து மாவீரர் தினம் கொண்டாடும் கள்ளர். போலிகா குரூப். தலையில்லாத செயலலகம், மாட்டு பண்ணை இத்யாதிகள்.

தமிழ் நாட்டில் சீமான்.

2009 க்கு பின் இருந்த எம்மீதான பரிவை….மடை மாற்றி…

திமுக, அதிமுக, காங், பிஜேபி, விசிக, திக என கிட்டதட்ட தமிழ்நாட்டின் 90% வாக்காளரை….

புலிகள்/ஈழத்தமிழர் அவர்களின் எதிரிகள் என கொண்டு போய் நிறுத்தியவர் சீமான்.

எமக்கு அடைக்கலம் தந்த அதே மக்களில் இருந்து சிலர் சீமானின் வருகையின் பின் எம்மை “அகதி” என திட்ட ஆரம்பித்தார்கள்.

ஒரு காலத்தில் கட்சி வேறுபாடின்றி மாவீரன் என போற்றப்பட்ட தலைவர் உருவ கேலிக்கு ஆளானார்.

இவை அனைத்தும் - சீமான்…

தமிழக தலைவர்கள் vs பிரபாகரன் என்ற ஒரு தேவையில்லாத ஆணியை புடுங்கியதன் விளைவு.

இதை அவர் திட்டமிட்டே செய்தார். செய்கிறார்.

இதன் உள்நோக்கம் 2/3 பங்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழருக்கும் மாறாத பகைகை மூட்டி விடுவது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தமிழ்நாடு சட்ட சபை தேர்தலில் இரண்டு கூட்டணிகள் தான் இருக்கும், ஒன்று திமுக கூட்டணி மற்றையது பிஜேபி கூட்டணி. மற்றவர்கள் எல்லோரும் எதிரணி வாக்குளை பிரிக்க இறக்கப்படும் பினாமிகள் ஆகும். நடிகர் விஜய் பிஜேபி சார்பாக திமுக கூட்டணி வாக்குளை பிரிக்கவும், சீமான் திமுக சார்பாக பிஜேபி கூட்டணி வாக்குளை பிரிக்கவும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

ஒண்டை கவனித்தீர்களா?

ஆகஸ்டு 2025 கருணாநிதி நினைவுநாளில், சீமானின் ஏவலர்களானா தூஷண துரை வகையறாக்கள், கருணாநிதி vs பிரபாகரன் என்ற அவதூறு போரை, அதை தொடர்ந்து இரு பகுதியும் இந்த இருவரையும் மாறி மாறி கேலி செய்யும் கீழ்தரமான சண்டையை முன்னைய வருடங்கள் போல் செய்யவில்லை?

ஏன்?

#சபரீசன் பெட்டி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இனவழி தேசியம் வேறு, இனத்தூய்மைவாதம் வேறு.

சீமான் தமிழ் நாட்டில் 300-600 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை புறம்தள்ளி, அவர்கள் ஆளதகுதி அற்றவர் எனக்கூறி முன்னெடுப்பது தமிழ் தேசிய அரசியல் அல்ல, அது தமிழ் நாட்டில் வாழும், வாக்குரிமை உள்ள, மக்களிடையே சாதிய பிளவை கூர்மையாக்கும், சாதியை-வைத்து இனம்பிரிக்கும், இனத்தூய்மைவாத வெறுப்பரசியல்.

எப்படி ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் தமிழக மக்களின் நலனுக்கு கேடோ, அதை ஒத்த கேடே சீமானின் சாதிய அடிப்படையில் அமைந்த இனத்தூய்மைவாதமும்.

இதில் மேலதிகமாக சீமான், சங்கிகளை பட்டும் படாமலும் விமர்சித்து கொண்டு, அவர்களின் கொள்கைகளை முந்தள்ளுவது, அரசியலை மத மயப்படுத்துவது, அவர் இப்போ இருக்கும்( தெலுங்கு வம்சாவழி ) திராவிட அரசியல்வாதிகளுடன் நேரடி மறைமுக கொஞ்சி குலாவுதல்களை செய்து கொண்டு, அதே சமயம் பச்சை பொய்களை கூறி பெரியாரை, பெரியாரியத்தின் முற்போக்கு விளைவுகளை மறுதலிப்பது அவர் ஒரு அரசியல் தரகர் என்பதையும், பாஜக பி டீம் என்பதையும், இப்போ திமுக சி டீம் என்பதையும் உறுதி செய்கிறது.

சீமான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.தமிழ்நாட்டில் யாரும் வாழலாம் ஆனால் ஆளும் உரிமை தமிழருக்கே வேண்டும் என்கிறார். கேரளாவிலோ>ஆந்திராவிலோ அல்லது தமிழர்கள் பெரும்பானமையாக வாழும்கர்நாடகாவிலோ ஒரு தமிழர் முதல்வராக முடியுமா?இவர்கள் மலையாளிகளாக>தெலுங்கர்களாக>கன்னடர்களாக தமது நிலத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்பொழுது தமிழ்நாட்டில் மட்டும் ஏன்திராவிடர்களாக இருக்க வேண்டும். இது தமிழ்களை ஆள்வதற்காக உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டமிட்டு திராவிடர்கள் செய்த செயல்.தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமழைப்படிக்காதே அது ஒரு காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதுதான் முற்போக்குவாதமா? அல்லது பெண்கள் தங்கள் கருப்பையை அகற்ற வேண்டும் என்று சொன்னதுதான் முற்போக்குவாதமா?தமிழ்நாட்டின் தெருப்பெயர்களில் சாதிப்பெயர் இருக்கக்கூடாது என்று சட்டம் போட்ட மை காயமுன்னமே ஜிகே நாயுடு மேம்பாலம் என்று தங்கள் இனத்தவரின் சாதிப்பெயரை முன்னிபலப்படுத்துவது எந்தவகையான சமூகநீதி? எல்லோரும் இனத்தூய்மைவாதம் பேசும் போது சாதிகளை முன்னிறுத்தும் போது சீமான் மட்டும் இனத்தூய்மைவாதம் பேசுகிறார் என்று எப்படிக் கூறமுடியும்.பிஸேபின் B ரீம் திமுகவின் B ரீம் என்று ஒன்றுக்கொன்று முரணாகப் பேசுவதும் வாக்குக்குக்கு காசு கொடுக்காமல் அரசியல் கட்சி நடத்துபவர் காசுவாங்கி விட்டார் . திமுகவிடம் காசுவாங்கி விட்டார் பிஜேபியிடம் காசு வாங்கி விட்டார் என்று ஆதாரம் இல்லாமல் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது?

சீமான் ஏன் ஒழித்து காசு வாங்க வேண்டும் நேடியாக கூட்டணி பேரம் நடத்தினால் காசும் வரும் தேர்தல் செலவுகளையும் அவர்களே கவனிப்பார்கள்.சீமான் கட்சியினருக்கும் சட்டசபையில் பாராளுமன்றத்திற்குள் துழைவதற்கும் இலகுவாக இருக்கும்.

இதில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பது தொட்டு பல சீமானின் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளீர்கள்.

இவை ஏலவே பல திரிகளில் அடித்து நொருக்கப்பட்ட வாதங்கள் என்பதை வாசகர் அறிவர்.

யாழில் கட்சி பிரச்சாரம் செய்யத்தடை என்பதால் - என்னை கேள்வி கேட்டு…

ஒரு நூதன பிரச்சாரம் செய்ய முனைகிறீர்கள் என்பது தெரிகிறது🤣.

ஆனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடை தேவை எனில் யாழில் “சீமான்” என தேடி, அதில் நான் எழுதிய கருத்துக்களை வாசித்தால் பதில்கள் கொட்டி, கொட்டி கிடக்கும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2025 at 21:20, goshan_che said:

இதில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பது தொட்டு பல சீமானின் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளீர்கள்.

பொய்யை நான் சொல்லவில்லை சீமானும்சொல்லவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  1. 6 minutes ago, புலவர் said:

    பொய்யை நான் சொல்லவில்லை சீமானும்சொல்லவில்லை.

    இதைத்தான் ஒரு விடயத்தை சூழமைவை (context) கருதாமல் நுனிப்புல் மேய்வது என்பது.

  2. உண்மையில் நீங்கள் யாழில் சீமான் பிரச்சாரம் தவிர எழுதப்படும் விடயங்கள் எதையும் வாசிப்பதில்லையா?

  3. இதை பற்றி நானே திருமாவேலன் எழுதிய நீண்ட விகடன் கட்டுரையை யாழில் பதிந்துள்ளேன்.

  4. இன்னொரு பிபிசி இணைப்பு கீழே

  5. இதை விட பல திரிகளில் இந்த பொய் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

    BBC News தமிழ்
    No image preview

    நிர்மலா சீதாராமன் சொல்வது போல் பெரியார் தமிழை 'காட்டுமிரா...

    தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை திமுகவினர் ஒவ்வோர் அறையிலும் வைத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் மக்களவையில் விமர்சித்தார். உண்மையில் பெரியார் கூறியது என்ன? தமிழை அவர் ஏன் காட்டுமிராண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதோ இன்னுமொரு இணைப்பு….

உங்களிடம் விகடன் சந்தா இருக்கிறது என நினைக்கிறேன். வாசித்து பயனடையுங்கள்.

உண்மையை மீண்டும் ஒரு தரம் பறைசாற்ற நீங்கள் கொடுத்த வாய்ப்புக்கு நன்றி.

பிகு

இனி என்ன? விகடன், பிபிசி திராவிட ஊடகம் - அதுதானே🤣.

Fact Check: நிஜமாகவே தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றாரா பெரியார்? | Long Read

https://www.vikatan.com/literature/tamil/did-periyar-actually-say-tamil-is-a-barbaric-language

மேலே உள்ள விகடன் Fact-check தரவு சரிபார்க்கும் கட்டுரை சொல்லும் தரவுகளில் சில

பெரியாரைப் பொறுத்தவரையில் கன்னடியன், தெலுங்கன், மலையாளி, தமிழன் என்ற வேற்றுமையே ஆரியத்தின் சூழ்ச்சி என்ற கருத்துடையவர். இவர்கள் நால்வர் பேசும் மொழியும் தமிழே! அதில் வடசொற்கள் கலந்தே பிரிவினை உண்டானது என்கிறார். நான்கு மொழி பண்டிதர்களை அழைத்து அந்தந்த மொழிகளில் இருக்கும் வடசொற்களை எடுத்துவிட்டால் தமிழே மிஞ்சும் என்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒன்றிலிருந்து நான்கு மொழி உருவாகவில்லை. நான்கு மொழியுமே தமிழ்தான் என்கிறார். இதனை 1948-ம் ஆண்டு எழுதிய மொழியாராய்ச்சி நூலில் விளக்கியிருக்கிறார். இதற்கு உதாரணமாக, ‘சாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் வேறு இல்லை என்கிறார்! இதனால் வடமொழியினைக் கடுமையாகச் சாடியவர், இன்று பேசப்படும் வந்தேறி அரசியலுக்கு எந்த இடத்திலும் இடம் கொடுக்கவில்லை.

மேலும் பகுத்தறிவு, விடுதலை, குடியரசு, உண்மை என்று தமிழ் மொழியிலே தனது இதழ்களைத் தொடங்கினார். இந்தி திணிப்பு போராட்டத்துக்காகச் சிறை சென்றார். தமிழ் இசையைக் கேட்கவேண்டும் என்ற இயக்கத்தைக் கொண்டு வந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு உயர்ந்த சம்பளம் வழங்கி, தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கிய நேரத்தில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்தார். தமிழர் தன் குழந்தைக்குத் தமிழில் பெயரிட வேண்டும், நமது ஊர், நகர், தெருவுக்குத் தமிழில் பெயர்கள் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘தமிழ் மொழி வளர்ச்சி’, ’தமிழ் பொழில்’, ‘தமிழுக்குத் துரோகமும் இந்திய மொழியின் ரகசியமும்’, ‘தமிழ்நாட்டின் நாகரீகமும் பழக்க வழக்கங்களும்’, ‘தமிழ் மொழியில் பிற மொழிகள் செய்யும் ஆதிக்கம்’ என மொழிகுறித்து பல கட்டுரைகள் எழுதினார்.

குறிப்பாக 1932-ல் மதராஸ் மாகாண அரசு, ஆங்கில சொற்களுக்குக் கலைச்சொல் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் வடமொழி அதிகமாகக் காணப்பட, பெரியார், "சமஸ்கிருத தொடர்பினாலும் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தினாலும், நல்ல நல்ல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போகின்றன. வடமொழிச் சொற்களும், ஆங்கில சொற்களும் தமிழில் கலக்கக்கூடாது என்ற முரட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் எளிய தமிழில் ‘தண்ணீர்' இருக்கும் போது ‘ஜலம்' வேண்டியதில்லை என்கிறோம். ‘தூக்கம்' இருக்கும் போது 'நித்திரை' வேண்டாம் என்கிறேன். எனவே கூடுமானவரையில் நல்ல எளிய சுத்தமான தமிழிலேயே கலைச் சொற்களையும் பிற சொற்களையும் கொண்ட நூல்கள் இனி இயற்றப்படுதல் வேண்டும்" என்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“கீதைக்கும் ராமாயணத்திற்கும் இருக்கும் மரியாதை திருக்குறளுக்கு இருக்கிறதா?” என்ற கேள்வி எழுப்பி, “அறிவுக்குத் திருக்குறளைப் பார். உழைப்பிற்குத் திருக்குறளைப் பார்" என்று முழங்கினார். திருக்குறளுக்கு மாநாடு நடத்தினார். மலிவு விலையில் குறளை அச்சடித்துக் கொடுத்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார், தமிழறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கர்ஜித்தார். பெரியார், “நான் இந்தி மொழிக்கு எதிரியல்ல! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் எந்த மொழிக்கும் நான் எதிரியல்ல. நான் ஆதிக்கத்திற்கே எதிரி” என்றார். மொழி என்பது கருத்தைப் பரிமாறும் ஒரு கருவி. அதில் எளிமையை வேண்டினார். மொழியிலிருக்கும் ஆபாசங்களை எதிர்த்தார். மொழி என்பது பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் எண்ணம். “செந்தமிழ் மொழியானாலும் பாமரனுக்குப் புரியவில்லை, அவனுக்கு முன்னேற்றம் இல்லை என்றால் என்ன பயன்?” என்பதே அவரது கேள்வி. குறிப்பாக மொழியில் மதம் சேர்த்ததை எதிர்த்து அதிகம் பேசியிருக்கிறார்.

இதே ஆதங்கத்தை 1962-ம் ஆண்டு ‘மொழியும் அறிவும்’ எனும் தலைப்பில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழியானது, மொழியில், பொருளில், எழுத்தில், எவ்வித முன்னேற்றமும் மாறுதலும் அடையவில்லை. உலகத்திலேயே தலைசிறந்த நீதி இலக்கியமான திருக்குறள் தமிழில் உள்ளது. என் அனுபவத்திற்கு எட்டியவரையில் உலகத்திலேயே சிறந்த கணக்கு முறை, அதாவது இளஞ்சுவடி எனும் எண்கணக்கு இருக்கிறது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் தமிழனுக்குப் பயன்படக் கூடியதாக எதுவும் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன" என்கிறார் பெரியார்.

கட்டுரையின் முடிவு :

இதைக் கூர்ந்து கவனித்தால் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி காலத்து மொழி என்று கூறிய விதம், ஒரு பூனை தனது இரையான எலியைப் பிடிப்பது போன்றது கிடையாது, மாறாகப் பூனை தன் குட்டியைக் கவ்வி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற உணர்வே! அதில் எந்தப் பற்றுக்கும் இடமில்லாமல் மனித பற்றை மட்டுமே பிரதானமாக வைத்து யோசித்திருக்கிறார் அந்த தொண்டு செய்து பழுத்த பழம். இன்று அவரின் 146-வது பிறந்த தினம்!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2025 at 22:20, goshan_che said:

இதில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பது தொட்டு பல சீமானின் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளீர்கள்.

இவை ஏலவே பல திரிகளில் அடித்து நொருக்கப்பட்ட வாதங்கள் என்பதை வாசகர் அறிவர்.

யாழில் கட்சி பிரச்சாரம் செய்யத்தடை என்பதால் - என்னை கேள்வி கேட்டு…

ஒரு நூதன பிரச்சாரம் செய்ய முனைகிறீர்கள் என்பது தெரிகிறது🤣.

ஆனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடை தேவை எனில் யாழில் “சீமான்” என தேடி, அதில் நான் எழுதிய கருத்துக்களை வாசித்தால் பதில்கள் கொட்டி, கொட்டி கிடக்கும்🤣.

ஆமா உல‌கில் வாழும் 8கோடி த‌மிழ‌ர்க‌ளும் யாழை பார்வையிட்டு தான் அடுத்த‌ வேலை செய்கின‌ம்....................சீமான் ப‌ற்றி விவாதிக்கும் போது அவ‌ர் பேசின‌ காணொளி இணைத்த‌து எந்த‌ வித‌த்தில் அர‌சிய‌ல் பிர‌ச்சார‌ம் ஆகும்..........................

யாழில் நீங்க‌ள் என்ன‌ தான் குத்தி முறிந்தாலும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் எதிர் ஒளிக்க‌ போவ‌து கிடையாது......................ரைம் வேஸ்ட்......................................

என‌க்கு வைக்கோ , திருமாள‌வ‌ன் , இன்னும் சில‌ரை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது , அதுக்காக‌ ம‌ன‌ நோய் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ந‌ப‌ர் போல் தொட‌ர்ந்து அவ‌ர்க‌ளை விம‌ரிப்ப‌து என‌து நோக்க‌ம் கிடையாது😉.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.