Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

வீடு வாங்கியோர் ஒரு பொறிதான். அவர்களின் பங்களிப்பு 10% என்றால், மிகுதி 90% காரணமானவர்கள் வர்த்தக நிறுவனங்களே. அவர்களின் அதீத பேராசைதான் எல்லாத்துக்கும் மூலகாரணம். அத்தோடு, அரசின் கட்டுப்பாடுகள். இப்போது இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அப்போது இருந்திருந்தால், இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. என்ன இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் வந்ததே 2008 பொருளாதார வீழ்ச்சியினால் தான். அரசுகள் எப்போதும், ஒன்று நடந்தாப் பிறகுதானே சட்டம் போடுறவை.

உண்மையில், யார் நிறைய வீடுகளை வாங்கியது என்று நினைக்கிறீர்கள். அதே வர்த்தக நிறுவனங்களே. நீங்களோ நானோ அல்ல. இப்படி சாதாரணமாக, நம் போன்றவர்களைக் கை காட்டி விட முடியாது.

Big Short என்ற படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அந்த திரைப்படத்தில் மிக இலகுவாக பார்வையாளருக்கு அந்த பொருளாதார சரிவிற்கான காரணியினை எந்தவித குழப்பமில்லாமல் குறிப்பிட்டுள்ளார்கள், அந்த படம் பார்த்தால் அதன் பின்னணி புரிவதற்கு இலகுவாக இருக்கும்.

3 hours ago, goshan_che said:

இதுவெல்லாம் சரிதான். ஆனால் 2008 சரிவின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான்.

வீடுகளை வாங்கியோர் வட்டி வீதம் கொஞ்சம் கூடினால் கூட மாதாந்த தொகையை கட்ட முடியாத நிலையில் இருந்தமையால், வீடுகளை கைவிட்டனர்.

அல்லாமல் இவர்கள் தொடர்ந்தும் மாதாந்த கொடுபனவை கட்டி கொண்டு வந்திருந்தால், நீங்கள் சொன்ன அத்தனை காரணங்கள் (இதோடு Libor rate களவையும் சேர்க்கலாம்) இருந்தாலும் 2008 சரிவு வந்திராது.

ஏன் இந்த பயனாளர்களால் மாதாந்த கொடுப்பனவு கட்ட முடியாமல் போனது?

அடிப்படையில் பயனாளரும், வங்கி ஊழியரும் (கொமிசனுக்காக) சேர்ந்து செய்த மோசடி + அதீத ரிஸ்க் எடுத்தல் +பேராசை.

ஆயிரம் டொலர் கட்டவே ததிங்கினதோம் போடும் ஒருவரின் தலையில், கள்ள டொக்குமெண்ட் அடிப்படையில், அல்லது போதிய அளவு stress test பண்ணாமல் - அல்லது, நம்பவே முடியாத பண வரத்தை நம்புவதாக கூறி, 2000 டொலர் கட்டவேண்டிய மொகேஜை கட்டி விட்டார்கள்.

வீடு negative equity க்கு போவது, அல்லது வட்டி வீதம் ஏறல் போன்ற சின்ன தளம்பலே இவர்களை - மாதாந்த கொடுப்பனவை கட்ட இயலாமல் ஆக்க போதுமாய் இருந்தது - கணிசமனா ஆட்கள் இப்படி செய்ய, அது snowball effect ஆகி, காப்புறுதி நிறுவனங்களின் இயலுமையை மீறி போய் விட, அதன் தொடர்சியாக வங்கிகள் இன்னும் பலது வீழ்ச்சியை சந்தித்தன.

அது அப்படியே ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் காவு வாங்கி விடும் என்பதால் அரசுகள் தலையிட்டன (too big to fail).

யூகேயில் அரசு தலையிட்டு சில வங்கிகளை (அதன் liabilities ஐ) தானே எடுத்து கொண்டது.

இதற்கு காரணமான பல வங்கியாளர்கள் சிறை போனார்கள்.

நாங்கள் too big to fail எனவே எப்படியும் அரசு காப்பாற்றும் என்ற அடிப்படையில், அதீத பேராசையில், விதிகளை மீறி, அதீத ரிஸ்க் எடுப்பது.

இதுவும் களவுதான்.

இலாபம் வந்தால் இவர்களுக்கு, நட்டம் வந்தால் அரசுக்கு.

Profit is privatized, risk is socialized.

சஞ்சீவ் ஆரணி செய்ததும் இப்படி ஒன்றே.

Shadow banking பற்றிய விவாதத்தினை இரஸ்சியா பொருளாதாரம் பற்றிய திரியில் விவாதித்துள்ள நினைவுள்ளது, அந்த பொருளாதார நெருக்கடிக்கு இந்த நிழல் வங்கிகளின் வீழ்ச்சிதான் காரணமாக அமைந்தது.

வீட்டுக்கடனை கட்டமுடியாமல் போவதற்கான மூல காரணமாக அமைவது நீர்குமிழ் நிலை, வீடுகளின் விலை ஊதி பெருகியது, இந்த நீர்குமிழ் நிலை அனைத்து முதலீடுகளிலும் காணப்படும்.

பங்கு வர்த்தகத்தினால் ஏற்படும் பொருளாதார சரிவுகளும் அதற்குள் அடங்கும், இவ்வாறு நீர்குமிழ் நிலை தோன்றுவதற்கு காரணம் இந்த முதலீட்டு நிறுவனங்கள் காரணமாகின்றது இதனாலேயே இரஸ்சியா இந்த நிழல் வங்கி முறைமையில் கடும் நிலைப்பாடு எடுத்தது.

இங்கு சொந்த வீட்டின் கடனின் வட்டி வரி விலக்களிக்கமாட்டார்கள் ஆனால் முதலீட்டாளர்களின் வீட்டு கடனின் வட்டிக்கு வரி விலக்களிப்பார்கள்.

சாதாரண மக்களின் வருமான வரியினை விட மிக குறைந்த வருமான வரி கொண்ட இந்த நிறுவனங்கள் விழும் போது அந்த மக்களின் வரிப்பணத்திலே அதனை சில சமயம் அரசு மீட்டும் உள்ளது.

  • Replies 179
  • Views 8.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Maruthankerny
    Maruthankerny

    உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத

  • இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில

  • குமாரசாமி
    குமாரசாமி

    என் நெஞ்சில் குடியிருக்கும் நீங்கள் கேட்பதனால் சொல்கிறேன். இனியும் இருட்டடி வாங்கும் தென்பு உடலில் இல்லை.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, செம்பாட்டான் said:

வீடு வாங்கியோர் ஒரு பொறிதான். அவர்களின் பங்களிப்பு 10% என்றால், மிகுதி 90% காரணமானவர்கள் வர்த்தக நிறுவனங்களே. அவர்களின் அதீத பேராசைதான் எல்லாத்துக்கும் மூலகாரணம். அத்தோடு, அரசின் கட்டுப்பாடுகள். இப்போது இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் அப்போது இருந்திருந்தால், இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. என்ன இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் வந்ததே 2008 பொருளாதார வீழ்ச்சியினால் தான். அரசுகள் எப்போதும், ஒன்று நடந்தாப் பிறகுதானே சட்டம் போடுறவை.

உண்மையில், யார் நிறைய வீடுகளை வாங்கியது என்று நினைக்கிறீர்கள். அதே வர்த்தக நிறுவனங்களே. நீங்களோ நானோ அல்ல. இப்படி சாதாரணமாக, நம் போன்றவர்களைக் கை காட்டி விட முடியாது.

Big Short என்ற படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஓம்…மறுக்கவில்லை.

ஆனால் அந்த பொறி பற்றி எரிந்திராவிட்டால், அதாவது வீடு வாங்கிய தனிநபர்கள், மற்றும் சிறு வியாபாரங்கள் மாதாந்த கொடுப்பனவை கொடுப்பதில் சிக்கலில் மாட்டி இராவிட்டால் காடு பற்றி எரிந்திராது.

நீங்கள் சொல்லும் 90 சதவீதம் களவை வழமை போலவே செய்து கொண்டிருப்பார்கள். இந்த 10% dominos இன் அடிக்கட்டை போல. கீழ் கட்டையை இழுக்க ஒட்டு மொத்த கட்டுமானமும் ஆட்டம் கண்டு விட்டது.

கட்டுப்பாடுகள்: இவை 1992 க்கு முன்னிருந்தன. அடுத்து வந்த அரசுகள் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தின. இதை bonfire of financial regulations என பெருமையாக வேறு பீத்துவார்கள் வலதுசாரிகள்.

2008 இன் பின் இறுக்கினார்கள்.

இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தளர்கிறது.

அடுத்த 2008 வரை இது தொடரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

அந்த திரைப்படத்தில் மிக இலகுவாக பார்வையாளருக்கு அந்த பொருளாதார சரிவிற்கான காரணியினை எந்தவித குழப்பமில்லாமல் குறிப்பிட்டுள்ளார்கள், அந்த படம் பார்த்தால் அதன் பின்னணி புரிவதற்கு இலகுவாக இருக்கும்.

Shadow banking பற்றிய விவாதத்தினை இரஸ்சியா பொருளாதாரம் பற்றிய திரியில் விவாதித்துள்ள நினைவுள்ளது, அந்த பொருளாதார நெருக்கடிக்கு இந்த நிழல் வங்கிகளின் வீழ்ச்சிதான் காரணமாக அமைந்தது.

வீட்டுக்கடனை கட்டமுடியாமல் போவதற்கான மூல காரணமாக அமைவது நீர்குமிழ் நிலை, வீடுகளின் விலை ஊதி பெருகியது, இந்த நீர்குமிழ் நிலை அனைத்து முதலீடுகளிலும் காணப்படும்.

பங்கு வர்த்தகத்தினால் ஏற்படும் பொருளாதார சரிவுகளும் அதற்குள் அடங்கும், இவ்வாறு நீர்குமிழ் நிலை தோன்றுவதற்கு காரணம் இந்த முதலீட்டு நிறுவனங்கள் காரணமாகின்றது இதனாலேயே இரஸ்சியா இந்த நிழல் வங்கி முறைமையில் கடும் நிலைப்பாடு எடுத்தது.

இங்கு சொந்த வீட்டின் கடனின் வட்டி வரி விலக்களிக்கமாட்டார்கள் ஆனால் முதலீட்டாளர்களின் வீட்டு கடனின் வட்டிக்கு வரி விலக்களிப்பார்கள்.

சாதாரண மக்களின் வருமான வரியினை விட மிக குறைந்த வருமான வரி கொண்ட இந்த நிறுவனங்கள் விழும் போது அந்த மக்களின் வரிப்பணத்திலே அதனை சில சமயம் அரசு மீட்டும் உள்ளது.

மேலே சொன்னது போல இதில் முழு பங்கும் ஒத்தை வீடு வாங்கிய நபர்கள் மீது என்பதல்ல என்வாதம்.

தனி நபர்கள் தம் வருவாயை பொய்யாக காட்டி, அல்லது வீட்டு விலை எப்போதும் கூடி கொண்டே போகும் என நம்பி அகல கால்வைத்தார்கள், அதே போலவே மத்திய, சிறு, பெரு நிறுவனங்களும். வங்கி கொமிசனுக்காக இத்தோடு ஒத்து ஓடியது. கடைசியில் நம்பிக்கை கெட்டு போக, எல்லாரும் ஒரே நேரத்தில் குப்பிற விழ, அரசுக்கு காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.

இதைத்தான் மேலே சொன்னேன் - இது privatizing profit socializing risk.

2008 இல் வங்கிகள் செய்ததும், இப்போ சஞ்சீவ் ஆரணி செய்ததும் இதையேதான்.

இலாபம் வந்தால் தனி நபர்களுக்கு, நட்டம் வந்தால் அரசுக்கு.

உண்மையில் இப்படி அரசு விழ விடாது என்ற அளவு பெரிய யாவரங்களை எடுத்து நடத்துவது ஒரு பலசரக்கு கடையோடு ஒப்பிடுகையில் மிக குறைந்த ரிஸ்க்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இல்லைங்க. தனி நபர் மட்டுமே தங்கள் தவணையைக் கட்டாமல் விட்டிருந்தால் 2008 இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. இவ்வளவு இலகுவாக அதை யோசிக்க முடியாது. இதையும் கொண்டு போய் சஞ்சீவோட தொடுத்து விட்டியலே. எப்பிடீங்க. எல்லாமே சமாந்தரமாக முடியாதே. எல்லா வர்த்தக பித்தலாட்டங்களும் ஒன்று அல்லவே.

எல்லாத்தையும், பெட்டிக்கடை கணக்கு வழக்காக, இலகுவாகப் புரிந்து கொள்ள முடியாது (நான் முன்னரே சொன்னது). எமக்கு அறிவு இருக்கு, இது கூடப் புரியவில்லை என்று இதை அணுக முடியாது என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும் போது, புரிவது போல்தான் இருக்கும். சஞ்சீவ் விவகாரம், அவ்வளவு இலகுவானதாகத் தெரியவில்லை. களவு நடந்திருக்கிறது என்பது ஒன்றுதான் நமக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

இல்லைங்க. தனி நபர் மட்டுமே தங்கள் தவணையைக் கட்டாமல் விட்டிருந்தால் 2008 இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. இவ்வளவு இலகுவாக அதை யோசிக்க முடியாது. இதையும் கொண்டு போய் சஞ்சீவோட தொடுத்து விட்டியலே. எப்பிடீங்க. எல்லாமே சமாந்தரமாக முடியாதே. எல்லா வர்த்தக பித்தலாட்டங்களும் ஒன்று அல்லவே.

எல்லா வர்த்தக, கடன் பித்தலாட்டங்களும் ஒன்று அல்ல! ஆனால் எல்லா வர்த்தக, கடன், வியாபார பித்தலாட்டங்களுக்கும் அடிப்படை ஒன்று தானே? தனி நபரின் அறமில்லாத தன்மை.

பொலிஸ் கண்காணிக்காத வீதியில் வேகக் கட்டுப்பாடில்லாமல் வாகனம் ஓடுவதற்கும், கண்காணிக்க வேண்டிய அமைப்புகள் கண்காணிக்காமல் விடும் இடத்தில் சுருட்டுவதற்கும் ஒரே அடிப்படை அறமில்லாத மன அமைப்புத் தானே ஐயா? இதைப் புரிந்து கொள்ள ஏன் தலைமுடியை இப்படி நார் நாராகப் பிரித்தெடுக்கிறீர்கள் என விளங்கவில்லை😂!

இதே வேலையைத் தான் ராஜ் ராஜரட்ணம் பற்றிய கேசிலும் எங்கள் தமிழ் சமூகத்தில் சிலர் செய்வதைப் பார்த்தோம். அவர் சட்ட விரோதமான insider trading இனைச் செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். தண்டனை முடிந்து வெளியே வந்ததும், "எல்லோரும் செய்தார்கள், என்னை மட்டும் பிடித்தார்கள்" என்று "சமனற்ற நீதி" புத்தகத்தில் எழுத சிலர் "அதானே?" என்று அவரை தியாகி ரேஞ்சில் உயர்த்தினர்.

என்னைப் பொறுத்தவரை, இது போன்ற வெள்ளைக் கொலர் குற்றங்களை வெள்ளையடிப்பதும், சாதாரணமயப்படுத்துவதும் எங்கள் சமூகத்தை குட்டிச் சுவராக்க உதவும் செயல்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

https://www.youtube.com/watch?v=I2A-dsi0gQ8

Investopedia

Understanding Fractional Reserve Banking: How It Fuels Ec...

Learn how fractional reserve banking operates and drives economic expansion. Discover its role in lending, growth, and the global financial system.

இங்கு பாதிக்கப்படுவர்களே குற்றவாளி ஆக்கப்படுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

இல்லைங்க. தனி நபர் மட்டுமே தங்கள் தவணையைக் கட்டாமல் விட்டிருந்தால் 2008 இவ்வளவு மோசமாக ஆகியிருக்காது. இவ்வளவு இலகுவாக அதை யோசிக்க முடியாது. இதையும் கொண்டு போய் சஞ்சீவோட தொடுத்து விட்டியலே. எப்பிடீங்க. எல்லாமே சமாந்தரமாக முடியாதே. எல்லா வர்த்தக பித்தலாட்டங்களும் ஒன்று அல்லவே.

எல்லாத்தையும், பெட்டிக்கடை கணக்கு வழக்காக, இலகுவாகப் புரிந்து கொள்ள முடியாது (நான் முன்னரே சொன்னது). எமக்கு அறிவு இருக்கு, இது கூடப் புரியவில்லை என்று இதை அணுக முடியாது என்றே நினைக்கிறேன். இப்போது பார்க்கும் போது, புரிவது போல்தான் இருக்கும். சஞ்சீவ் விவகாரம், அவ்வளவு இலகுவானதாகத் தெரியவில்லை. களவு நடந்திருக்கிறது என்பது ஒன்றுதான் நமக்குத் தெரியும்.

ஒவ்வொருவருக்கும் அவர் அவர் புரிதல் மட்டம் பற்றி ஒரு சுய மதிப்பீடு இருக்கும் என்பதை நானும் ஒத்து கொள்கிறேனுங்க 😂.

அதேபோல் எந்த விடயத்தையும் அடிப்படையை விளங்கி கொண்டால், அது மேலும் சிக்கல் நிலையை அடையும் போதும், back to basics போய் சிக்கலானதையும் புரிய முடியும்.

இங்கே இரு களவுகளுக்கு ஒப்புவமை கொடுக்கப்பட்டதே ஒழிய இரெண்டும் ஒன்றே என யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன்.

மிக அடிப்படையான நிலையில் 2008 இல் வங்கிகள் திவாலானது, லிங்கன்சேர் சுத்தீகரிப்பு நிறுவனம் திவாலானது இரெண்டுமே too big to fail என்பதை வைத்து ஆடிய சூதாட்டத்தின் பலனே.

இதை புரிந்து கொள்ள வெறும் பெட்டிகடை அறிவே போதும், London School of Economics பட்டம் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

2 hours ago, செம்பாட்டான் said:

. களவு நடந்திருக்கிறது என்பது ஒன்றுதான் நமக்குத் தெரியும்.

👆இது மட்டும்தான் நான் எழுதியதும் 😂.

9 minutes ago, vasee said:

இங்கு பாதிக்கப்படுவர்களே குற்றவாளி ஆக்கப்படுகிறார்கள்.

இதை விட

குற்றவாளிகளில், வலுகுறைந்த குற்றவாளிகள் மட்டும் தண்டிக்கப்பட வலுவான குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

எல்லா வர்த்தக, கடன் பித்தலாட்டங்களும் ஒன்று அல்ல! ஆனால் எல்லா வர்த்தக, கடன், வியாபார பித்தலாட்டங்களுக்கும் அடிப்படை ஒன்று தானே? தனி நபரின் அறமில்லாத தன்மை.

பொலிஸ் கண்காணிக்காத வீதியில் வேகக் கட்டுப்பாடில்லாமல் வாகனம் ஓடுவதற்கும், கண்காணிக்க வேண்டிய அமைப்புகள் கண்காணிக்காமல் விடும் இடத்தில் சுருட்டுவதற்கும் ஒரே அடிப்படை அறமில்லாத மன அமைப்புத் தானே ஐயா? இதைப் புரிந்து கொள்ள ஏன் தலைமுடியை இப்படி நார் நாராகப் பிரித்தெடுக்கிறீர்கள் என விளங்கவில்லை😂!

இதே வேலையைத் தான் ராஜ் ராஜரட்ணம் பற்றிய கேசிலும் எங்கள் தமிழ் சமூகத்தில் சிலர் செய்வதைப் பார்த்தோம். அவர் சட்ட விரோதமான insider trading இனைச் செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். தண்டனை முடிந்து வெளியே வந்ததும், "எல்லோரும் செய்தார்கள், என்னை மட்டும் பிடித்தார்கள்" என்று "சமனற்ற நீதி" புத்தகத்தில் எழுத சிலர் "அதானே?" என்று அவரை தியாகி ரேஞ்சில் உயர்த்தினர்.

என்னைப் பொறுத்தவரை, இது போன்ற வெள்ளைக் கொலர் குற்றங்களை வெள்ளையடிப்பதும், சாதாரணமயப்படுத்துவதும் எங்கள் சமூகத்தை குட்டிச் சுவராக்க உதவும் செயல்கள் என நினைக்கிறேன்.

அதே தனிநபர் அறமில்லாத தன்மை மட்டுமே காரணமில்லை என்பதைத்தான் சொல்கிறேன். அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப் படவேண்டியவர்களே. நான் இந்த வங்குரோத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். ஆனால், அதை எப்படிச் சொன்னாலும், மீண்டும் மீண்டும் சஞ்சீவும் மனைவியுமே காரணம் என்று இங்கு ஓடிக் கொண்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் (இவர்களின் கம்பனி முறிந்து, சாட்டப்பட்ட குறைந்த குற்றத்தையம் அவர்கள் எதிர்ப்பது) பொத்தாம் பொதுவாகவே சொல்லுவதாக அவர்களாகவே சொல்லி உள்ளனர்.

அனால், வரியை பற்றி அவர்கள் சொல்லுவது / பார்வை தவறு.

வரி எப்போதும் , நடப்பாண்டில் கட்டப்பட வேண்டியதும், பிற்போடப்படுவதும் (வரித்திணைக்களம் அறிந்து அனுமதியுடன் ) எப்போதும் கடன், ஏனெனில் நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ கொடுக்கப்படவேண்டியது.

இங்கே ஏற்கனவே 250 மில்லியன் நடப்பாண்டு அல்லாஹு 1 ஆண்டு வாரியாக இருக்க முடியாது என்பதன் கணக்கு இருக்கிறது.

முறியும் போது, எந்த கடனும் கொடுக்கப்பவேண்டிய நிலை.

ஊடகங்கள் அதையே சொல்கிறது. (250 மில்லினியனுக்கு வரி என்பான் உருவாக்க கணக்கு இல்லை ஊடகத்தில்)

ஆனால், இங்கு சொல்லப்பட்டது, முறியும்போது கட்டப்படவேண்டிய (ஏய்க்கப்படாத ) வரியால் அரசு / பொதுமக்களுக்கு நாமம் போடப்படுவதாக.

ஏய்க்கப்படாத (கட்டப்பட வேண்டிய) வரியில், நாமம் போடப்பவதற்கு, அரசு / பொதுமக்க எதை உழைத்தது அல்லது கொடுத்தது எந்த நிறுவனம் என்றாலும்?

தனியார் வியாபார அமைப்பில், எந்தவிதமாக பார்த்தாலும்,(வரி அறவிடப்படும் தொகை கூடலாம், குறையலாம்), ஏய்க்கப்படாத வரிகளால் ஒரு போதும் அரசாங்கத்துக்கோ, பொதுமக்களுகோ நாமம் போடப்படுவது இல்லை.

இது வரியின் அடிப்படை.

வரி அறவிடப்படலாம் என்ற சட்டத்துக்கு (கருத்துருவாக்கத்துக்கு) யதார்த்தம் கொடுப்பதே ஒன்றில் வருமானம் (சில வரி அமைப்புகள் அல்லது சந்தர்ப்பத்தில் வருமானத்துக்கு வரி) அல்லது இலாபம் உருவாகினால்.

வரி என்பது பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும் கதை. ஆனால் அரிசியை போட்டு உலைவைப்பதில்லை அரசு. (அதாவது அரசு முயற்சி எடுத்து உழைப்பது இல்லை)

(மன்னர் , காலனித்துவ காலத்திலாவது சொல்லலாம் அரசு உழைத்தது என்று , ஒன்றில் பறிப்பதில், அல்லது படையை அனுப்பி கப்பம் கேட்பதில் என்று, அல்லது அரசுக்கே எல்லாம் சொந்தம், பாவனைக்கு அரசு அனுமதித்து இருப்பதாக.)

அரசு உழைக்காதது, அரசு அந்த வரியை பிற்போடப்பட, முதலிட அனுமதிப்பதில் ஒரு பகுதி காரணம்

கிட்டத்தட்ட தனிமனித ப்பார்வை - நான் உழைக்காதது, முதலிட்டு கூட வந்தால் நன்மை, இழந்தால் அது மட்டுமே, ஏனெனில் இப்படியான பல முதலீடுகள் (பிற்போடப்பட்ட வரிகள் பல கம்பனிகளில் முதலீடு ), முதலீட்டை இழந்தாலும் (குறிப்பிட்ட கம்பனிகளில் பிற்போடப்பட்ட வரியை) , மொத்தத்தில் கூடவே எனது நிகர வருமானம் (அதாவது வரி).

மறுவளமாக, அப்படி செய்யாமல் அல்லது தடுத்தால் (அதாவது பிற்போட, முதலிட அனுமதிப்பது என்பதை தடுப்பது) தான், அனுமதிக்கும் போது வரும் வருமானத்தை பார்க்க , தடுக்கும் போது வருமானம் குறைவதன் சாத்திய கூறுகள் கூட. ஏனெனில் வியாபரங்கள் நீண்டகாலத்தில் முறிவது / நிலைப்பது, இயற்கை நிகழ்தாவான 50% க்கு கிட்ட. (அதாவது, பானைகள் குறைவது), பொருளாதாரம் சுருங்கும் சாத்திய கூறுகள் மிக அதிகம்.

அரசுக்கு எந்த பிறிம்பான முயறசியும் எடுக்காது, பொருளாதார செயற்பாடுகளை அதிகரிக்க, மற்றும் உந்துதல் அளிக்க ஒரு வழி. பொருளாதார வளர்ச்சி, அல்லது இருக்கும் நிலையை தக்கவைப்பதிலும் பெரும்பங்கு. அத்துடன் செல்வம் / பணத்தை தேக்கி வைத்து இருக்காமல், எப்போதும் பொருளாதா வளர்ச்சி இயக்கத்துக்குள் கொண்டுவருதல், மற்றும் அகன்ற சமூகத்துக்கு பரப்படுவது, பங்கிப்படுவது போன்ற்வவற்றில் பெரும்பங்கு. ( அத்துடன், பிற்போடப்பட்ட வரியை முதலிட அனுமதிப்பது, வேறு தெரியாத, மறைமுக பொருளதார விளைவுகளை ஏற்றப்படுத்தும்.)

அரசுக்கு இப்படியான இலவச வாய்ப்புக்களை கொடுப்பதே, ஏய்க்கப்படாத வரிகள்.

(இதனால் தான் தனிப்பட்ட முதலீட்டில் கூட, வரியை பிற்போடும், முதலிட முறை இருக்கிறது.)

(பொருளாதாரத்தில் இலவசம் என்பது இல்லை, இப்படியான மிக அருமையான சந்தர்ப்பங்களை தவிர்த்து.)

ஆகவே, முறியும் வியாபாரங்களில் , கட்டப்படவேண்டி இருக்கும் (ஏய்க்கப்படாத) வரி, வாய்ப்புக்கான இலவச செலவு, அரசு எந்த பணத்தையும் முதலிடாமல், உழைக்காமல்.

இங்கு சிலர் சொல்லும் வைத்தியசாலை கட்டுவது, அவர்களின் வரி பற்றிய புரிதல் / பார்வையை கொண்டு செய்வது கடினம்.

(அரசு (அறவிட்ட) வரிப்பணத்தை கொடுத்து வியாபாரத்தை தூக்கி நிறுத்த, வியாபரம் முறிந்தால் தான் நாமம், அதுவும் ஒப்பீட்டளவில்.)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

நீங்கள் கூறுவது விளங்கவில்லை quarterly PAYG instalment இனையா குறிப்பிடுகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிறுவனத்தின் வரிச்சுமை (tax liability) என்பது இலாபம் ஈட்டப்பட்டதும் உருவாகிவிடும். Tax liability உருவாகிய தருணம் முதல் அந்த tax amount அரசுக்கு சொந்தமான பணம்.

தனியே இலாபத்தில் எடுக்கும் வரி மட்டும் அல்ல, நட்டத்தில் ஓடும் நிறுவனங்களுக்கு அவை அரசின் சார்பில் வாடிக்கையாளரிடம் வசூலிக்கும் VAT உட்பட பல வரிச்சுமைகள் இருக்கும்.

சரியாக தெரியவில்லை ஆனால் இது எண்ணை சம்பந்தபட்ட வியாபாரம் என்பதால் - fuel duty அல்லது அதுபோல் வேறு ஏதும் வரியும் சேர்ந்தே 250 மில்லியன் வரை இந்த கம்பனிக்கு வரிச்சுமை ஏற்பட்டிருக்கலாம்.

நமக்கு தெரிந்த ஒரே தரவு திவாலான கம்பெனியின் வரிச்சுமை, அதாவது வரியாக அரசுக்கு கட்ட படவேண்டிய தொகை 250 மில்லியன் அண்ணளவாக.

இவ்வாறாக தேங்கும் வரிச்சுமையின் பால்பட்ட வரியை செலுத்த ஒரு கால எல்லை இருக்கும். அந்த கால எல்லைக்குள் நிறுவனம் வங்குரோத்து ஆகிவிட்டால் - அது அரசின் வருவாய்க்கு வரவேண்டிய வரியில் நட்டமே.

ஒரு பெட்டிகடை உதாரணம்.

நான் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வரி உட்பட விற்கிறேன். இதில் 17.50 ரூபாய் VAT என வைப்போம். இதை நான் வாடிக்கையாளரிடம் பொருள் விற்கும் போது அறவிட்டு விடுவேன். அதேபோல் எனது வியாபார வரி 2.50.

இந்த 100 ரூபாய் வியாபாரத்தில் என் வரிச்சுமை 20 ரூபாய். இது வரிக்கொள்கையில் இருக்கும் இசைவுகள் relief ற்கு ஏற்ப மேலும் குறைந்து 18 ஆகிறது என வைப்போம்.

இந்த 18 ரூபாய் வரியை நான் கட்ட எனக்கு ஒரு கால எல்லை இருக்கும். சில சமயம் இந்த எல்லையை திறைசேரி நீட்டிக்கலாம், அல்லது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனில் அரைவாசியாக கூட குறைக்கலாம், ஏன் ரத்து கூட செய்யலாம். ஆனால் வரிச்சுமை, வரிச்சுமைதான்.

இந்த வரிப்பணத்தை உள்ளபடியே அரசால் தகுந்த நேரத்தில் வசூலிக்க முடிந்தால் அது அரசின் திறை சேரியில் +18 ரூபாய் என முடியும்.

அந்த 18 ரூபாயில் அரசு நாலு பேருக்கு டொபி வழங்கும் நலத்திட்டத்தை செய்யலாம்.

இந்த 18 ரூபாயை அரசு வசூலிக்க முன்னர் கம்பெனி திவாலானால் - அரசுக்கு 18 ரூபாய் சுவாகா.

இதுதான் நாமம்.

மேலே ரசோ அண்ணா சொன்ன இந்திய வியாபார, நான் சொன்ன நகை கடை உதாரணங்களில், மாறி மாறி வங்குரோத்து செய்து தனியே வங்கியை மட்டும் சுத்துவதில்லை, இப்படி திறைசேரியையும் சுத்துவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2025 at 00:34, செம்பாட்டான் said:

மீண்டும் மீண்டும் சஞ்சீவும் மனைவியுமே காரணம் என்று இங்கு ஓடிக் கொண்டிருக்கு.

உங்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனை என புரியவில்லை😂.

உங்களின் முதலாவது பதிவிற்கான பதிலிலேயே இதற்கு இவர்கள் மட்டுமே பின்னால் இருப்பார்கள் என்பதல்ல என் வாதம் என்பதை தெளிவுபடுத்திவிட்டேன்.

எந்த கருத்தாளரும் சொல்லாத ஒன்றை சொல்லியதாக, இவர்கள் இருவரும் கருத்தாளர்களுக்கு அறிமுகமானவராக இருக்க கூடும் என, கற்பனையில் கம்பு சுத்துவது ஏன் செம்பா🤦‍♂️.

On 24/10/2025 at 10:43, goshan_che said:

நீங்கள் சொல்வது சரிதான்.

இது இவர்கள் மட்டும் செய்த பிழை அல்ல. கம்பெனியில் அதிகாரத்தில் இருந்த அனைவரும் சேர்ந்தே, கிடைத்தவரை இலாபம் என்ற அடிப்படையில் உருவ கூடியதை உருவி உள்ளார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

On 24/10/2025 at 10:43, goshan_che said:

நீங்கள் சொல்வது சரிதான்.

On 26/10/2025 at 21:21, goshan_che said:

உண்மைதான் ஆனானப்பட்ட ஜெப்ரி இப்ஸ்டீனையே சிறையில் வைத்து போட்டு தள்ளவில்லையா?

ஆகவே இதில் வேறும் பலர் இருக்கலாம், (இல்லாதும் இருக்கலாம்), ஆனால் அப்படியே இருந்தாலும் அது சஞ்சீவ்+ஆரணி குற்றமற்றவர்கள் என்பதை காட்டாது.

இவர்களின் கூட்டு களவாணிகள் தப்பி விட்டார்கள் என்பதை மட்டுமே காட்டும்.

On 6/11/2025 at 06:52, vasee said:

2008 பொருளாதார பிரச்சினைக்கு காரணமான விடயத்தில் எனது புரிதல் (தவறாகவும் இருக்கலாம்).

அமெரிக்க வங்கித்துறையின் செயற்பாடான Mortgage backed securities (MBS) முக்கிய காரணமாக கூறப்படுகிறது, ஆண்டு சரியாக தெரியவில்லை 70 களில் லூயிஸ் என்பவரினால் இது ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Investopedia

Understanding Mortgage-Backed Securities: Types, Risks, a...

Learn how mortgage-backed securities work, explore their types, and understand the potential risks and benefits to make informed investment decisions.

வங்கிகள் வீட்டுக்கடனினை வழங்குகின்றன, பின்னர் இந்த மேற்கூறிய MBS மூலம் Bond ஆக முதலீட்டு நிறுவங்களுக்கு(Shadow banks) அந்த கடனை விற்று விடுகிறார்கள்.

அப்படியே வங்கியினால் வழங்கப்பட்ட வீட்டுக்கடன் நேரடியாக முதலீட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றி விடுகிறார்கள் (பொதுவாக 1% கழிவு விலையில் உதாரணமாக 1 மில்லியன் வீட்டுக்கடனை $999000 (1000000-10000) இற்கு) பின்னர் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலின் பகுதியாகவும் வட்டியாகவும் பெற்று அதனை முதலீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவார்கள் அதற்காக 0.25% -0.5% அறவிடுவார்கள் (மேற்கூறிய உதாரணத்தின் படி $2500 - $5000 வரை).

வங்கிகள் அதனால்தம்து பணத்தினை உடனே திரும்ப எடுத்துவிடுவதுடன் சேவைக்கட்டணமாக ஆண்டு தோறூம் பணம் அறவிடுவார்கள் அதனால் மேலும் மேலும் கடன் கொடுப்பார்கள்.

இந்த நிகழ்வு மோசமான கடன் கொடுப்பனவு முறையினை ஆரம்பித்தது (subprime mortgage).

இதனை மிகைப்படுத்தும் விதமாக இந்த மோசமான கடனில் உள்ள பாதுகாப்பின்மையினை நீக்குவதாக கூறி அதற்குள் CDO இனை அறிமுகப்படுத்தினார்கள், CDO வெவ்வேறுபட்ட கடனை உள்ளடக்கிய ஒரு விடயம் நிறுவனக்கடன் உள்ளடங்கலாக.

Investopedia

Collateralized Debt Obligation (CDO): What It Is and How...

A collateralized debt obligation (CDO) is a complex financial product backed by a pool of loans and other assets and sold to institutional investors.

அந்த CDO இற்கு இன்னொரு CDO என 1 மில்லியன் வீட்டுக்கடனின் பெறுமதியினை 10 மில்லியனளவிற்கு உயர்த்தினார்கள்.

இதில் கிரடிட் ஏயன்சிகளின் தவறு மற்று அமெரிக்க கருவூலத்தின் தவறுகளும் இதற்கு பக்க காரணமாக இருந்தது.

வீட்டு விலைகள் மிகைப்படுத்தப்பட்ட நிலையில் ( நிர் குமிழ்)

இந்த மோசமான கடன் கள் மாறும் வட்டி விகிதத்தினை கொண்டிருந்த நிலையில் வட்டி விகிதம் அதிகரித்த போது வீட்டுக்கடன் மீளளிப்பு தடைப்பட பொருளாதார சரிவு ஏற்பட்டது இதன் போது இந்த வீட்டுக்கடனினை அடிப்படையாக ஊதிப்பெருப்பிக்கப்பட்ட அனைத்து நிழல் வங்கிகளின் சொத்துக்கள் 5 ட்ரில்லியனளவில் இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள் (சரியாக நினைவில்லை).

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2025 at 17:35, goshan_che said:

உங்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனை என புரியவில்லை😂.

உங்களின் முதலாவது பதிவிற்கான பதிலிலேயே இதற்கு இவர்கள் மட்டுமே பின்னால் இருப்பார்கள் என்பதல்ல என் வாதம் என்பதை தெளிவுபடுத்திவிட்டேன்.

எந்த கருத்தாளரும் சொல்லாத ஒன்றை சொல்லியதாக, இவர்கள் இருவரும் கருத்தாளர்களுக்கு அறிமுகமானவராக இருக்க கூடும் என, கற்பனையில் கம்பு சுத்துவது ஏன் செம்பா🤦‍♂️.

ஒன்றுமே இல்லை. உங்களுக்கு எதிராகக் கதைப்பது போன்று தோன்றுகிறதோ. நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் அப்படித் தோன்றுகிறது போல் உள்ளது. நடந்த விடயங்களை வைத்து இதைப் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். அவ்வளவே. நீங்கள் என்ன என்றால், ஏதோ உங்களுடனே தொடர்பு படுத்தி நான் கதைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நான் சொல்லாத ஒன்றை, கற்பனையில் நினைக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2025 at 12:27, goshan_che said:

ஒரு நிறுவனத்தின் வரிச்சுமை (tax liability) என்பது இலாபம் ஈட்டப்பட்டதும் உருவாகிவிடும். Tax liability உருவாகிய தருணம் முதல் அந்த tax amount அரசுக்கு சொந்தமான பணம்.

தனியே இலாபத்தில் எடுக்கும் வரி மட்டும் அல்ல, நட்டத்தில் ஓடும் நிறுவனங்களுக்கு அவை அரசின் சார்பில் வாடிக்கையாளரிடம் வசூலிக்கும் VAT உட்பட பல வரிச்சுமைகள் இருக்கும்.

சரியாக தெரியவில்லை ஆனால் இது எண்ணை சம்பந்தபட்ட வியாபாரம் என்பதால் - fuel duty அல்லது அதுபோல் வேறு ஏதும் வரியும் சேர்ந்தே 250 மில்லியன் வரை இந்த கம்பனிக்கு வரிச்சுமை ஏற்பட்டிருக்கலாம்.

நமக்கு தெரிந்த ஒரே தரவு திவாலான கம்பெனியின் வரிச்சுமை, அதாவது வரியாக அரசுக்கு கட்ட படவேண்டிய தொகை 250 மில்லியன் அண்ணளவாக.

இவ்வாறாக தேங்கும் வரிச்சுமையின் பால்பட்ட வரியை செலுத்த ஒரு கால எல்லை இருக்கும். அந்த கால எல்லைக்குள் நிறுவனம் வங்குரோத்து ஆகிவிட்டால் - அது அரசின் வருவாய்க்கு வரவேண்டிய வரியில் நட்டமே.

ஒரு பெட்டிகடை உதாரணம்.

நான் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வரி உட்பட விற்கிறேன். இதில் 17.50 ரூபாய் VAT என வைப்போம். இதை நான் வாடிக்கையாளரிடம் பொருள் விற்கும் போது அறவிட்டு விடுவேன். அதேபோல் எனது வியாபார வரி 2.50.

இந்த 100 ரூபாய் வியாபாரத்தில் என் வரிச்சுமை 20 ரூபாய். இது வரிக்கொள்கையில் இருக்கும் இசைவுகள் relief ற்கு ஏற்ப மேலும் குறைந்து 18 ஆகிறது என வைப்போம்.

இந்த 18 ரூபாய் வரியை நான் கட்ட எனக்கு ஒரு கால எல்லை இருக்கும். சில சமயம் இந்த எல்லையை திறைசேரி நீட்டிக்கலாம், அல்லது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனில் அரைவாசியாக கூட குறைக்கலாம், ஏன் ரத்து கூட செய்யலாம். ஆனால் வரிச்சுமை, வரிச்சுமைதான்.

இந்த வரிப்பணத்தை உள்ளபடியே அரசால் தகுந்த நேரத்தில் வசூலிக்க முடிந்தால் அது அரசின் திறை சேரியில் +18 ரூபாய் என முடியும்.

அந்த 18 ரூபாயில் அரசு நாலு பேருக்கு டொபி வழங்கும் நலத்திட்டத்தை செய்யலாம்.

இந்த 18 ரூபாயை அரசு வசூலிக்க முன்னர் கம்பெனி திவாலானால் - அரசுக்கு 18 ரூபாய் சுவாகா.

இதுதான் நாமம்.

மேலே ரசோ அண்ணா சொன்ன இந்திய வியாபார, நான் சொன்ன நகை கடை உதாரணங்களில், மாறி மாறி வங்குரோத்து செய்து தனியே வங்கியை மட்டும் சுத்துவதில்லை, இப்படி திறைசேரியையும் சுத்துவார்கள்.

எந்த நிறுவனமாக இருந்தாலும் வருமான வரியினை கட்டத்தான் வேண்டும், முதலில் இலாபம் ஈட்டியதனடிப்படையிலேயே அந்த வரி விதிப்பு ஏற்படுகிறது, உதாரணமாக முதலாம் ஆண்டில் வருமான வரி 246 மில்லியன் கட்ட வேண்டிய நிலை இருந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நட்டம் ஏற்பட்டாலும் அந்த 246 மில்லியன் வரி கட்ட வேண்டும், அதற்கு வரி விதிப்பு திணைக்களம் பகுதி கட்டணமாக தொடர்கட்டணம் (வட்டி + தண்ட + முதல்) உள்ளடங்கலாக ஒரு கட்டண முறையினை குறித்த நபர்களுடன் இணக்கத்திற்கு வரும்.

ஆனால் நிகழ்கால நட்டம் எதிர்கால வருமான வரியிலிருந்து விலக்கழிக்கப்படும்.

quarterly PAYG instalment என்பது கடந்தகால வரி விதிப்பினடிப்படையில் வரி விதிப்பு திணைக்களத்தினால் ஒவ்வொரு காலாண்டிற்குமான வரியாகும் (இது நடைமுறை உண்மையான வரியாக இருக்காது, குறிப்பாக அந்த காலாண்டில் உண்மையில் நட்டத்தில் கூட நிறுவனம் இருக்கலாம்), இதன் மூலம் வரியினை பகுதியாக செலுத்துவதன் மூலம் வரி செலுத்த முடியாத நிலை ஏற்படுவதனை தவிர்ப்பதாக இருக்கும், இதனை கட்டாமல் இருப்பதற்கு nil PAYG பதிவு செய்யவேண்டும் அல்லது அந்த குறித்த தொகையினை கட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

ஜெர்மனியில் புதிதாகத் தொழில் ஒன்றை ஆரம்பிப்பவர்கள் தங்களின் வியாபாரத்தின் இலக்குத் தொகையை முன் கூட்டியே நிதி துறைக்கு தெரிவிக்க வேண்டும். அந்தத் தொகையின் அடிப்படையில் அவர்களின் வரிப்பணங்களை நிதித்துறை முதலில் தீர்மானிக்கும்.

இந்த நிலையில் வரியை ஏமாற்றும் நிலை காணப்படுகின்றது.

அந்த வியாபார இலக்கின் தொகையை குறைத்து ஒரு வருடம் அல்லது இரு வருடங்களில் அந்த நிறுவனத்தை வங்குரோத்து என்று அறிவித்து வரி ஏய்ப்புச் செய்யலாம் . ஆனாலும் அந்த நேரத்தில் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் அல்லது கைப்பற்றப்படும் நிலையும் உள்ளது

பல காலமாக இயங்கிவரும் நிறுவனங்களுக்கு ஜெர்மனியில் வரிகள் முன் கூட்டியே அறவிடப்படும் .அவர்களுடைய மொத்த விற்பனையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விற்பனைவரி

வருமான வரி என்று மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த வரிகளை அறவிட்டு....

வருடம் முடிந்த பின்னர் மொத்த வருமான வரி அறிக்கை வரும்போது மிகுதி அறவிடப்படும் அல்லது மீள கொடுக்கப்படும். .

அதாவது வருடத்திற்கான வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று ஆண்டுகள் தவணை உள்ளது

சில ஏற்பாட்டால் அந்தக் காலம் இன்னும் அதிகரிக்கலாம் . பத்து வருடங்கள் வரை உங்கள் கணக்கறிக்கை மீழாய்வு செய்யப்படலாம்.

வருமான வரியாக எந்தத் தொகையையும் கட்டாமல் பத்து வருடங்கள் ஒழித்திருந்து விட்டு மீண்டும் தலை காட்டலாம்

காரணம்.... தண்டனை அல்லது வரி அறவிடக் கூடிய காலம் கடந்து விட்டது என்பார்கள்:

இதுவும் இங்கே சட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

7 minutes ago, வாத்தியார் said:

வருமான வரி என்று மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை இந்த வரிகளை அறவிட்டு....

வருடம் முடிந்த பின்னர் மொத்த வருமான வரி அறிக்கை வரும்போது மிகுதி அறவிடப்படும் அல்லது மீள கொடுக்கப்படும். .

ஓம், quarterly PAYG instalment.

8 minutes ago, வாத்தியார் said:

அதாவது வருடத்திற்கான வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று ஆண்டுகள் தவணை உள்ளது

இது தனிநபர்களுக்கென நினைக்கிறேன் நிறுவனங்களுக்கு இந்த வசதி இல்லை என கருதுகிறேன்,

8 minutes ago, வாத்தியார் said:

பத்து வருடங்கள் வரை உங்கள் கணக்கறிக்கை மீழாய்வு செய்யப்படலாம்.

இங்கு 5 வருடங்கள் என கணக்காய்வாளர்கூறியதாக (அல்லது 7 என்பதாகவும் ஒரு நினைவுள்ளது) நினைவுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில், டிக் ஸ்மித் எலக்ட்ரானிக்ஸ் சரிவை உள்ளடக்கிய குறிப்பு விதிமுறைகளுடன் கூடிய விசாரணையை செனட் அறிவித்தது .

டிக் ஸ்மித்தின் தோல்வி மற்றும் தோல்வி குறித்து செனட்டர்கள் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.

பொருளாதாரக் கோட்பாட்டில், இந்த ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளரின் தோல்வி ஒரு மாறும் பொருளாதாரத்துடன் ஒத்துப்போகிறது . போட்டியாளர்களைப் போல பொருளாதார வளங்களை திறமையாகப் பயன்படுத்தாத வணிகங்கள் வழிதவறி விழுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தோல்வி திறமையான சந்தைக்கு முரணான தொடர்ச்சியான அசிங்கமான தோற்ற நிகழ்வுகளுடனும் தொடர்புடையது.

ஆஸ்திரேலியாவை பங்குகளில் முதலீடு செய்வதற்கு மோசமான இடமாகத் தோன்றும் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ள செனட் இப்போது ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளது:

  • மாறுபட்ட நிதி வெளிப்பாடுகள் மற்றும் முதலீட்டு முடிவுகளுக்கு சரியான நேரத்தில் கிடைக்காத தகவல்கள்

  • பாதுகாக்கப்பட்ட கடன் வழங்குநர்கள் மேலான அதிகாரத்தைக் கொண்டிருப்பதால் வெளிப்புற நிர்வாகத்தின் பொருளாதாரமற்ற விளைவுகள்

  • வெளிப்புற நிர்வாகங்களில் தாமதங்கள் மற்றும் சமச்சீரற்ற தகவல்கள், திவால்நிலை நிபுணர்களால் அதிகப்படியான சேவையை எளிதாக்குகின்றன, ஆனால் சட்டத்தின் அசல் நோக்கம் அல்ல.

  • தோல்வியுற்ற நிறுவனங்களின் இயக்குநர்களுக்கான நலன் மோதல்கள் மற்றும் மென்மையான தரையிறக்கங்கள்.

பங்குகள் மிதக்கும் தகவல்கள் மூழ்கும்

நவம்பர் 26, 2012 அன்று, ஆங்கரேஜ் கேபிடல் நிறுவனம் டூல்வொர்த்ஸிடமிருந்து டிக் ஸ்மித் வணிகத்தை ஆஸ்திரேலிய டாலர் 115 மில்லியனுக்கு வாங்கியது. டிசம்பர் 4, 2013 அன்று, டிக் ஸ்மித் ஆஸ்திரேலிய டாலர் 520 மில்லியன் சந்தை மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. இந்த வணிகம் எல்லா காலத்திலும் மிகப்பெரிய தனியார் பங்கு கொள்ளையாக விவரிக்கப்பட்டுள்ளது , அதே நேரத்தில் 1982 முதல் வணிகத்தில் ஈடுபடாத சங்கிலியின் நிறுவனர் டிக் ஸ்மித், இதை "முற்றிலும் பேராசை மற்றும் நெறிமுறையற்றதாகத் தெரிகிறது" என்று விவரித்ததாகக் கூறப்படுகிறது.

வூல்வொர்த், டிக் ஸ்மித் வணிகத்தை ஆங்கரேஜுக்கு விற்றதைச் சுற்றியுள்ள மாறுபட்ட நிதித் தகவல்கள். முதலாவதாக, விற்பனை பரிவர்த்தனையின் போது டிக் ஸ்மித் சரக்குகளின் புத்தக மதிப்பில் கட்சிகள் உடன்படவில்லை . இரண்டாவதாக, பரிவர்த்தனைக்கு கட்சிகள் சரிசெய்ய முடியாத கணக்கீட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தொடர்ச்சியான மதிப்புக் குறைப்பு மற்றும் விதிகளுக்குப் பிறகு வூல்வொர்த்ஸ் ஒரு சிறிய லாபத்தைப் பெற்றதாகக் கூறுகிறது. நிகர சொத்துக்களின் நியாயமான மதிப்புக்கு குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் ஒரு வணிகத்தை வாங்கியதால் 146 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் லாபத்தைப் பெற்றதாக ஆங்கரேஜ் கூறுகிறது.

இந்தக் கட்டுரை கல்வியாளர்களால் எழுதப்பட்டதால் நீங்கள் அதை நம்பலாம்.

எங்களைப் பற்றி

சரக்கு தொடர்பான அடுத்தடுத்த நிதித் தகவல்கள் சரியான நேரத்தில் வரவில்லை. நவம்பர் 30, 2015 அன்று, டிக் ஸ்மித் $60 மில்லியன் சரக்குக் குறைப்புத் தேவை என்று அறிவித்து சந்தையை ஆச்சரியப்படுத்தினார் - மூன்று மாதங்களுக்கு முன்பு, நிறுவனத்தின் 28 ஜூன் 2015க்கான நிதிநிலை அறிக்கைகள் எந்த பாதகமான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் தணிக்கை செய்யப்பட்டன. சரக்கு மேலாண்மை என்பது ஒரு சில்லறை வணிகத்தின் உயிர்நாடி மற்றும் தணிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய ஆபத்துப் பகுதியாகக் கருதப்படும். எனவே, சரக்குப் பிரச்சனை குறுகிய காலத்தில் நடந்தது அல்லது அது நீண்ட காலத்திற்கு வளர்ந்துள்ளது மற்றும் தணிக்கையாளர்களால் தவறவிடப்பட்டது.

ஜனவரி 5, 2016 அன்று, டிக் ஸ்மித் பெறுநர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். 2015 கிறிஸ்துமஸுக்கு டிக் ஸ்மித் பரிசு அட்டைகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் மதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டது. டிக் ஸ்மித்தின் பாதுகாக்கப்பட்ட கடன் வழங்குநர்கள் (வங்கிகள்) பெறுநரின் நேரத்தை நிர்ணயித்தனர், மேலும் அவர்கள் மற்ற கடன் வழங்குநர்களை விட முன்னணியில் உள்ளனர். கிறிஸ்துமஸுக்குப் பிறகு விரைவில் அவர்களின் தேர்வு மிகவும் வருந்தத்தக்கது. கிறிஸ்துமஸ் பரிசுகளை நல்லெண்ணத்துடன் வாங்குபவர்கள் செலவழிக்கும் பணம் சாதாரண கிறிஸ்துமஸ் வர்த்தகம் நடக்க அனுமதித்த வங்கிகளிடம் முடிவடையும் போது அது மோசமாகத் தெரிகிறது.

வங்கிகள் மற்றும் பொருளாதாரமற்ற விளைவுகள்

ரிசீவர்ஷிப்பில், ஒரு வணிகத்தை விற்பனை செய்வதற்கான சலுகைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதை பாதுகாக்கப்பட்ட கடன் வழங்குநர்கள் தீர்மானிக்கிறார்கள் . வங்கிகள் மற்றும் பெறுநர்களிடம் மட்டுமே சலுகைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஒரு நிறுவனத்தின் தோல்வியில் வங்கிகளின் பொருளாதார ஊக்கத்தொகை அவற்றின் பலனை அதிகரிப்பதாகும், மேலும் இது மற்ற பங்குதாரர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

ஒரு கடன் தவணை தவறிவிட்டால், வங்கிகள் அபராத வட்டியில் மீட்டரை இயக்குவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கக்கூடும். அனுமானமாக, ஒரு வணிகத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாத சலுகை இப்படிச் செயல்படலாம்:

ஒரு நிறுவனத்திற்கு பொருளாதாரமற்ற விளைவை வங்கிகள் ஆதரிக்கக்கூடும், ஏனெனில் அது அவர்களுக்கு சிறந்த விளைவாகும். பாதுகாப்பான கடன் வழங்குநர்கள் தாமதம், உள் தகவல் மற்றும் குழப்பம் மூலம் மற்ற கடன் வழங்குநர்களின் மறைவிலிருந்து அதை வெளியே எடுக்க முடியும். இது பெறுநர்களுக்கும் பொருந்தும், ஏனெனில் அவர்களின் நேரக் கட்டணங்கள் காலப்போக்கில் அதிகரிக்கும். அதிக அன்றாட தொடர்புகள் மற்றும் செயல்பாடுகள் - எடுத்துக்காட்டாக, இது போன்ற மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளைப் படிப்பது - அதிக கட்டணங்களைக் குறிக்கிறது.

டிக் ஸ்மித்துக்கு ரிசீவர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது, ஆனால் பங்குதாரர்கள் மற்றும் பாதுகாப்பற்ற கடன் வழங்குநர்களுக்கான நிதித் தகவல்கள் மிகக் குறைவு. கடன் வழங்குநர்களின் இரண்டாவது கூட்டம் குறைந்தது ஆறு மாதங்கள் தாமதமாகியுள்ளது. வழக்கமாக மார்ச் மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட வேண்டிய அரையாண்டு நிதி அறிக்கை குறைந்தது மூன்றரை மாதங்கள் தாமதமாகியுள்ளது.

ASIC உடனான விவகாரங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பெறுநர் கால அவகாசத்தை நீட்டித்துள்ளார். என்ன நடக்கிறது என்பது வங்கிகளுக்குத் தெரியும், ஆனால் மற்ற கடன் வழங்குநர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் என்ன தகவல் உள்ளது? துரதிர்ஷ்டவசமாக, ஆஸ்திரேலிய திவால்நிலை நிறுவனங்கள், ஒரு நிறுவனம் ஒரு நிறுவனம் தொடர்ந்து செயல்படும் நிறுவனமாக கடைசியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, பங்குதாரர்கள் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நிதி அறிக்கைகளை அரிதாகவே வெளியிடுகின்றன.

டிக் ஸ்மித்தின் வருமான அறிக்கை அல்லது இருப்புநிலைக் குறிப்பை விரைவில் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் வாழ்த்துக்கள்.

நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்கள்: உங்களுக்கு என்னுள் ஒரு நண்பர் இருக்கிறார்.

அனைத்து கடன் வழங்குநர்களின் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்த இயக்குநர்கள் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்கள். நிறுவனத்தின் தோல்விக்காக இயக்குநர்கள் பின்தொடரப்படக்கூடாது என்ற கருத்துக்கு நிர்வாகிகள் சாதகமாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு இந்த நியமனத்தில் ஒரு முக்கியக் கருத்தாகும். கடன் வழங்குநர்களுக்கு அல்லது நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்திடம் அறிக்கைகளில் இயக்குநர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதில் நற்பெயரைக் கொண்ட ஒரு திவால்நிலை நிறுவனத்தை யார் நியமிப்பார்கள்? இது ஆஸ்திரேலியாவின் திவால்நிலை ஆட்சியில் நம்பிக்கையற்ற நலன் மோதலாகும்.

டிக் ஸ்மித்தின் நிர்வாகிகள் நியமனத்திற்கு சற்று முன்பு நிறுவனத்திற்கான ஆலோசனைப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது .

இது வழக்கமான நடைமுறையாக இருக்கலாம், ஆனால் மோசமாகவும் தெரிகிறது. நிர்வாகம் தொடங்கியவுடன், திவால்நிலை நிபுணர்கள் இயக்குநர்களுக்கு ஏற்கனவே ஒரு உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்ற கவலையை இது தூண்டுகிறது. நிர்வாகம் தொடங்குவதற்கு முன்பே திவால்நிலை நிபுணர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர், இதனால் இயக்குநர்கள் எந்தவொரு தனிப்பட்ட பொறுப்பையும் தவிர்க்க முடியும் என்பது ஒரு மாற்றுக் கருத்து.

ஜனவரி 14, 2016 அன்று, டிக் ஸ்மித்தின் நிர்வாகிகள் முதல் கடன் வழங்குநர்களின் கூட்டத்தை நடத்தினர். நிதி சிறப்பம்சங்களின் "ஸ்னாப்ஷாட்டை" வழங்குவதாக நிர்வாகிகள் அங்கு இருந்தவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் ஊழியர்கள் "கடன் வழங்குநர்களின் குறிப்பிடத்தக்க குழு" என்று விவரிக்கப்பட்டனர்.

ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஊழியர்கள் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று அறிவிப்பு வழங்கப்பட்டது - அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள நிதித் தகவல் எதுவும் இல்லை. "கணிசமான கடன் வழங்குநர்கள் குழுவை" அப்படி நடத்தக்கூடாது.

நிர்வாகிகள் இது மிகவும் சீக்கிரமாக இருந்ததாலும், தங்கள் எதிர்காலப் பணிகளைப் பற்றி பாரபட்சம் காட்ட முடியாததாலும் அவர்களால் அதிகம் சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டனர். வெளிப்படையாக, நிர்வாகிகளிடம் ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை , அதாவது, இது ஒரு சந்திப்பை விட ஒரு ஒளிபரப்பு போன்றது. இது கேள்வியைக் கேட்கிறது, கடன் வழங்குபவர்களை ஒரு அறையில் ஒன்று திரட்டி அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதன் பயன் என்ன?

சேவைகளுக்கான கட்டணங்கள் மீது கடிகாரம் டிக் செய்யும் போது, பெறுநர்களைப் போலவே நிர்வாகிகளும் அவசரப்பட வாய்ப்பில்லை. இந்தச் செயல்பாட்டின் போது, பெறுநர்கள் மற்றும் நிர்வாகிகள் தாங்கள் செய்யும் செயல்களுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், தொடர்ச்சியான வெளிப்படுத்தல் மற்றும் பங்குதாரர் சந்திப்புகள் ஆகியவற்றின் சாதாரண நிறுவன நிர்வாக வழிமுறைகள் நீக்கப்படுகின்றன. மிகவும் சக்திவாய்ந்த கடன் வழங்குநர்களைத் தவிர மற்ற பங்குதாரர்களுக்கு இருள் மற்றும் குழப்பம் நிலவுகிறது.

சமச்சீரற்ற தகவல்கள், நலன் மோதல்கள் மற்றும் பலவீனமான பெருநிறுவன ஒழுங்குமுறை இருந்தால் ஆஸ்திரேலியா முதலீடு செய்வதற்கு ஒரு அசிங்கமான இடமாகும்.

பொருளாதாரக் கோட்பாட்டில், இலவச, சரியான நேரத்தில் நிதித் தகவல் கிடைப்பது ஒரு திறமையான சந்தையின் முக்கிய அம்சமாகும். ஆஸ்திரேலியாவில் இத்தகைய வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை என்பது நமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அதிக கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தனிநிறுவனமாக இருந்த ஒரு நிறுவனத்தினை அதனை வூல்வேர்த் எனும் பப்ளிக் லிஸ்டட் நிறுவனத்திடமிருந்து ஆங்கரேஜ் எனும் நிறுவனம் 115 மில்லியன் ஒப்புதல் விலையினை 20 மில்லியன் பணத்திற்கு வாங்கி, புதிதாக பல கிளைகளை ஆரம்பித்து பப்ளிக் லிஸ்ட் செய்து (பங்கு சந்தையில்) 520 மில்லியனுக்கு விற்றுவிட்டு, அதன் கையிருப்புக்களான 58 மில்லியனை விற்றுத்தள்ளி விட்டு கம்பி நீட்டி விட்டார்கள், இதில் வங்கிகளும் ஆங்கரேஜ் நிறுவனமும் ஆதாயம் பெற்றனர் சாதாரண முதலீட்டாளர்கள் நட்டமடைந்தனர், இதுதான் உண்மையில் திட்டமிட்ட ஏமாற்று முயற்சி, ஆங்கரேஜ் நிறுவனம் தனது பங்குகள் முழுவதையும் விற்று விட்டார்கள், அவர்கள் மேல் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

இந்த தம்பதிகள் அவ்வாறு திட்டமிட்டு செய்திருக்கவில்லை என கருதுகிறேன்.

https://www.aph.gov.au/DocumentStore.ashx?id=fd49fc87-6bc3-460c-81fc-293c5a92edc5&subId=410892#:~:text=Dick%20Smith's%20share%20price%20remained%20strong%20long%20after%20the%20IPO.&text=trade%20around%20the%20IPO%20issue,to%20justify%20the%20new%20facility.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

ஒன்றுமே இல்லை. உங்களுக்கு எதிராகக் கதைப்பது போன்று தோன்றுகிறதோ. நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் அப்படித் தோன்றுகிறது போல் உள்ளது. நடந்த விடயங்களை வைத்து இதைப் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். அவ்வளவே. நீங்கள் என்ன என்றால், ஏதோ உங்களுடனே தொடர்பு படுத்தி நான் கதைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நான் சொல்லாத ஒன்றை, கற்பனையில் நினைக்கிறீர்கள்.

  1. இங்கே எழுதும் சிலருக்கு சஞ்சீவை தனிப்பட்டு தெரிந்திருக்கலாம் என எழுதியவர் நீங்கள் - அதைத்தான் சொன்னேன்.

  2. மற்றது இதில் பலர் சம்பந்த பட்டிருக்கலாம் என்பதை யாரும், நான் உட்பட ஏற்காமல் இல்லை. அப்படி இருக்க, நீங்கள் மீள மீள இதில் இவர்கள் மட்டுமே சம்பந்தபட்டனர் என நாம் எழுதுகிறோம் என ஏன் எழுதுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

இதை தவிர நீங்கள் தனிப்பட்டு என்னை நோக்கி எழுதியதாக தெரியவில்லை.

மேலே சொன்ன இரு விடயங்களையும் நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் மீள, மீள ஒப்புவிக்கிறீர்கள் என்பது மட்டுமே என் மனதை குடையும் கேள்வி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரி விடயத்தில் நனைத்து சுமக்கிறோம் என நினைக்கிறேன்.

மீண்டும் back to basics போய், அடிப்படையை விளங்கினால் அதிகம் சிக்கலான வரி கொள்கைகளுக்குள் மாட்டி விழி பிதுங்க வேண்டி வராது.

மிக இலகுவாக - புரிந்து கொள்ள கூடியது - ஒரு கம்பெனியின் உருவாகிவிட்ட வரிச்சுமையின் பால்பட்ட வரிக்காசு திறைசேரிக்கு சொந்தமானது .

கம்பெனியை நன்றாக நடத்தி வங்குரோத்தாகாமல் நடத்தி இருந்தால் - அந்த வரிப்பணம் தகுந்த நேரத்தில் அரசை போய் சேர்ந்திருக்கும்.

இது கிட்டதட்ட ஊழியரின் சம்பள காசு போன்றதே.

கம்பெனியை நன்றாக நடத்தி வங்குரோத்தாகாமல் நடத்தி இருந்தால் - அந்த சம்பள பணம் தகுந்த நேரத்தில் ஊழியரை போய் சேர்ந்திருக்கும்.

இரெண்டையிம் கட்ட முடியாமல் கம்பெனியை வங்குரோத்தாக்கி விட்டு, எரியும் வீட்டில் புடுங்குவது இலாபம் என டிவிடெண்ட் என இருப்பதையும் துடைச்சு வழிச்சு கொண்டு, நாட்டை விட்டு கம்பி நீட்டினால்….

அது அரசுக்கும், ஊழியருக்கும் போடப்பட்ட நாமமே.

அப்புட்டுத்தே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இரெண்டையிம் கட்ட முடியாமல் கம்பெனியை வங்குரோத்தாக்கி விட்டு, எரியும் வீட்டில் புடுங்குவது இலாபம் என டிவிடெண்ட் என இருப்பதையும் துடைச்சு வழிச்சு கொண்டு, நாட்டை விட்டு கம்பி நீட்டினால்….

அது அரசுக்கும், ஊழியருக்கும் போடப்பட்ட நாமமே.

அப்புட்டுத்தே.

😁

சுலபமான விளக்கம்

https://www.ato.gov.au/individuals-and-families/paying-the-ato/if-you-don-t-pay/director-penalty-regime

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இங்கு 5 வருடங்கள் என கணக்காய்வாளர்கூறியதாக (அல்லது 7 என்பதாகவும் ஒரு நினைவுள்ளது) நினைவுள்ளது.

ஆவணங்கள் 5 வருட மீளாய்விற்குட்படது (7 வருடம் அல்ல), நீங்கள்கூறுவது வேறு விடயம் என நினைக்கிறேன் (Default records?) அது பற்றி தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

😁

சுலபமான விளக்கம்

"There are only two ways to live your life.

One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle.”

Albert Einstein

(மிராக்கிளை, காம்பிளக்ஸ் என பொருள் கொள்க).

இடியப்பத்தின் சுவை ஏன் குன்றியது என்பதற்கான விடையை மாவை ஆராய்ந்தாலே கண்டு பிடித்து விட முடியும். இடியப்பத்தின் நூல்களின் சிக்கலை ஆராய்ந்து அதை காண முடியாது.

கோஷான்😂

#Boutique shop economics

#பெட்டிக்கடை பொருளியல்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:
  1. இங்கே எழுதும் சிலருக்கு சஞ்சீவை தனிப்பட்டு தெரிந்திருக்கலாம் என எழுதியவர் நீங்கள் - அதைத்தான் சொன்னேன்.

  2. மற்றது இதில் பலர் சம்பந்த பட்டிருக்கலாம் என்பதை யாரும், நான் உட்பட ஏற்காமல் இல்லை. அப்படி இருக்க, நீங்கள் மீள மீள இதில் இவர்கள் மட்டுமே சம்பந்தபட்டனர் என நாம் எழுதுகிறோம் என ஏன் எழுதுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

இதை தவிர நீங்கள் தனிப்பட்டு என்னை நோக்கி எழுதியதாக தெரியவில்லை.

மேலே சொன்ன இரு விடயங்களையும் நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் மீள, மீள ஒப்புவிக்கிறீர்கள் என்பது மட்டுமே என் மனதை குடையும் கேள்வி.

ஆள விடுங்க. ஒவ்வொரு வார்த்தையையுமா விளக்க முடியும். என்னால் இதுக்கு மேல எழுத முடியாது. இத்தோட முடிச்சுக்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக சொல்லி இருந்தேன் பானையில் இருந்தால் தான் - பானையில் இருப்பதை காட்டி அது சரிபார்க்கப்பட்ட, அரசும், வியாபாரமும் இணங்கிய (எவ்வளவு) பின்பே அரசுக்கு சொந்தம்.

இதை எதுவும் மாற்றாது.

அந்த வட் போன்றவை (கம்பனிகள், அரசு சார்பாக, தாம் அல்லாத வேறு கம்பனிகளில் அல்லது வேலையாளர்கள் இடம் இருந்த்து சேகரிப்பது), இப்போது UK 'பாதுகாக்க' முயற்சி எடுக்கிறது.

(அனால் இப்போது , 3 மாத தவணையில் இப்போது vat return செய்யவேண்டும். மற்றவையும் அப்படி தவணைக்கு வந்து இருக்கலாம்)

வட் போன்றவை கம்பனிக்கான வரி இல்லை, கம்பனிகள் செய்வது இடைத்தரகர் (வங்கிகள் போல) வேலை.

வட் போன்றவற்றில் கம்பனிகள் வங்கிகள் போல செய்லடுவஹால் தான் (இதன் விளக்கம் பிறிம்பு, ஆனால் சம்பளம் வங்கிக்கு போவதை ஒப்பிடலாம்) , முன்பு சொன்ன கணக்கின் பின்பே அரசுக்கு சொந்தம், முறியலாம் என்று தெரிந்தே.

அதில் கூட பானையில் இருந்தால் தான் என்பதே விளைவாக இருக்கிறது. ஏனெனில் நிலையான (சொத்துக்கு) கடன் கொடுத்தவர்களை தாண்டியே.

வியாபாரம் நன்றாக நடக்கும் போது, நட்டத்தில் எப்படி வரி அணுகப்படுகிறதோ , அப்படியே முறிவிலும்.

அதனால் , முறிவில், அரசு சரிபார்த்து, வியாபாரமும் இணங்கிய வரியே, கடன், (ஆகவே எந்த முறிவு என்றாலும் ) பிற்போடப்பட்ட (வரியே), அதாவது எவ்வளவு என்று தெரியும் வரியே, கடன்.

(இதை இழக்கலாம் என்று தெரிந்தே செய்கிறது - பிற்போடுதல், முதலீடு )

ஏனைய வரி (வட் போன்றவை இருந்தால், முறியும் போது) அரசுக்கு தெரியாது எவ்வளவு என்று.

அனால், முறிவில், நடப்பாண்டில் (முறியும்) கம்பனிக்கான வரி இருக்க முடியாது, ஏனெனில் போட்ட முதலையும் கொண்டு போகும், நட்டத்தின் மிக உச்சக் கட்டம்.

வரி கணக்கியலை பொறுத்து, கடந்த வருடத்தின் இலாபத்தை கூட இல்லாமல் ஆக்கலாம் முறிவு.

இவை போன்ற காரணங்களினால் தான், (பானையில் இருந்தால்), சரி பார்த்து, இணங்கிய பின்பே அரசுக்கு சொந்தம் அல்லது சொந்தம் இல்லை.

மறுவளமாக முறிவில் வரி நாமம் (பிற்போடுதல், முதலீடு உட்பட) என்றால், நடத்திலும் (ஓடும் கம்பனிகள்) வரிக்கு அரசுக்கு (பகுதியாக) நாமம் போடுகின்றன என்று வரும். ஏனெனில், முறிவு நடத்த்தின் உச்சக் கட்டம்.

அப்படி வரியின் அடிப்படை இருக்கும் என்றால், விளைவுகள் நான் சொல்ல தேவை இல்லை.

எனவே, ஏய்க்கப்படாத வரி நாமம் அல்ல, வரியின் அடிப்படை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.