Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள் மற்றும் இளைய ராஜாவின் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளைய ராஜாவின் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமி வீடு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை நடத்தினர்.

இதேபோல், இளையராஜா அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த மர்ம பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, புரளி கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும், கர்நாடக முதல்வர் வீட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து அம்மாநில போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநில போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கும் எந்த மர்மப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே அதுவும் புரளி என உறுதி செய்யப்பட்டது.

இந்த மிரட்டல் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்று புரளியைக் கிளப்பும் கும்பல் வெளிநாட்டில் இருந்து செயல்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக போலீஸ் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக நாள்தோறும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள், முதல்வர், அமைச்சர்கள் வீடு, கட்சி அலுவலகங்கள், டிஜிபி அலுவலகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb Threat for Edappadi Palaniswami, Seeman Houses - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவே நல்லா ரீல் வுடுவான்! இன்னும் ஒரு நாலைஞ்சு வருசம் பொறுங்கோ, நல்ல ‘புல்டா போண்டா’ கதை கேட்கலாம்!🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

சும்மாவே நல்லா ரீல் வுடுவான்! இன்னும் ஒரு நாலைஞ்சு வருசம் பொறுங்கோ, நல்ல ‘புல்டா போண்டா’ கதை கேட்கலாம்!🤣

(2030 தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் இருந்து …)

தம்பிங்க இத உன்னிப்பா கவனிக்கணும்…

இத போலத்தான் 2026 இல என் வீட்ல குண்டு வச்சாங்க.

அண்ணி கிச்சன்ல இருந்தா…

மூத்தவன் அப்பதான் நாதக மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்று வெளியூர் கலந்தாய்வுக்கு போயிருந்தான்…

சின்னவன் இங்கிலீஸ் லிட்டரேச்சர் டியூசன் போயிருந்தான்….

தீடீர்ன்னு பார்த்தா எவனோ ஒரு ஆயிரம் டன் அணுகுண்ட என் வீட்டு உள்ளார வச்சிட்டு ஓடீட்டான்…

பொலிசே பதறிடிச்சு…உள்ள வரமாட்டேன் என்னுட்டானுக…

அமெரிக்க அணு விஞ்ஞானிகள் கூட கை விட்டுட்டானுக….

கிட்டதட்ட ஒட்டு மொத்த தெற்காசியாவே சாம்பல் ஆகும் தருணம்…

அப்பதான் பாக்கிறேன்…. அந்த குண்டுக்கு பக்கத்தில்லே அதுக்கு எனர்ஜி வேணும்ல எனர்ஜி…

அதுதான் மின் வலு…

மின் வலு கொடுக்கணும்ணு நாலு 3அ மின்கலத்தை (3A battery) வச்சிருந்தானுங்க…

விடுவேனா நான்…எங்க அண்ணன் தந்த டிரெயினிங் அப்படியே என் மனசுல ரிப்ளே ஆச்சு….

மெதுவா அது கிட்ட போய் என் வாயாலயே அந்த கலங்களை ஒண்ணு ஒண்டா கழட்டி எடுத்தேன்…

இத White House situation ரூம்ல இருந்து பார்த்த அமெரிக்க அதிபர் பரன் டிரம்ப்…

சீமான் சாதிச்சுட்டான்ப்பா என டொனால்டு கிட்ட அழுதுகிட்டே சொன்னார்.

(கூட்டத்தில் புதிதாக பள்ளிகூடத்தில் இருந்து நேற்று கட்சியில் சேர்ந்த தம்பிகள் விசில் பறக்கிறது)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எல்லாம் சரி! இந்த வரிகள் மட்டும் வயிற்றில் புளி கரைக்கிறது! டொனால்டு 2030 வரை இருப்பார் என நினைக்கும் போது, நாம் அதற்கு முதலே போய் விட வேண்டுமென்று தோன்றுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

(2030 தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் இருந்து …)

தம்பிங்க இத உன்னிப்பா கவனிக்கணும்…

இத போலத்தான் 2026 இல என் வீட்ல குண்டு வச்சாங்க.

அண்ணி கிச்சன்ல இருந்தா…

மூத்தவன் அப்பதான் நாதக மாநில துணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்று வெளியூர் கலந்தாய்வுக்கு போயிருந்தான்…

சின்னவன் இங்கிலீஸ் லிட்டரேச்சர் டியூசன் போயிருந்தான்….

தீடீர்ன்னு பார்த்தா எவனோ ஒரு ஆயிரம் டன் அணுகுண்ட என் வீட்டு உள்ளார வச்சிட்டு ஓடீட்டான்…

பொலிசே பதறிடிச்சு…உள்ள வரமாட்டேன் என்னுட்டானுக…

அமெரிக்க அணு விஞ்ஞானிகள் கூட கை விட்டுட்டானுக….

கிட்டதட்ட ஒட்டு மொத்த தெற்காசியாவே சாம்பல் ஆகும் தருணம்…

அப்பதான் பாக்கிறேன்…. அந்த குண்டுக்கு பக்கத்தில்லே அதுக்கு எனர்ஜி வேணும்ல எனர்ஜி…

அதுதான் மின் வலு…

மின் வலு கொடுக்கணும்ணு நாலு 3அ மின்கலத்தை (3A battery) வச்சிருந்தானுங்க…

விடுவேனா நான்…எங்க அண்ணன் தந்த டிரெயினிங் அப்படியே என் மனசுல ரிப்ளே ஆச்சு….

மெதுவா அது கிட்ட போய் என் வாயாலயே அந்த கலங்களை ஒண்ணு ஒண்டா கழட்டி எடுத்தேன்…

இத White House situation ரூம்ல இருந்து பார்த்த அமெரிக்க அதிபர் பரன் டிரம்ப்…

சீமான் சாதிச்சுட்டான்ப்பா என டொனால்டு கிட்ட அழுதுகிட்டே சொன்னார்.

(கூட்டத்தில் புதிதாக பள்ளிகூடத்தில் இருந்து நேற்று கட்சியில் சேர்ந்த தம்பிகள் விசில் பறக்கிறது)

நீங்களே எழுதி சுய இன்பம் காண்பதற்கு யாரும் தடையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நீங்களே எழுதி சுய இன்பம் காண்பதற்கு யாரும் தடையில்லை.

யாழ் கருத்துக்களத்தின் தீவிர சீமான் எதிர்ப்பாளர் அதி தீவிர விஜய் ஆதரவாளர் ஆகிவிட்டார். மேலதிக நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

நீங்களே எழுதி சுய இன்பம் காண்பதற்கு யாரும் தடையில்லை.

நன்றி.

இவ்வாறு யாழ்க்களத்தில் இன்பம் துய்ப்பதை அனுமதிக்கும் தகுதிகாண் அதிகாரியாகியமைக்கு வாழ்த்துக்கள்🤣.

1 hour ago, நியாயம் said:

யாழ் கருத்துக்களத்தின் தீவிர சீமான் எதிர்ப்பாளர் அதி தீவிர விஜய் ஆதரவாளர் ஆகிவிட்டார். மேலதிக நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம். 😁

நோ…நோ….சீமானை எதிர்ப்பது என்பது மனைவி மாதிரி மாறாது.

விஜை பக்கத்து வீட்டில் புதிதாக குடி வந்த நல்ல பிகர் மாதிரி.

பார்க்கலாம்…ரசிக்கலாம்…என்னதான் இப்படி வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடப்பதா என ஆதங்கப்படலாம்…

இவ்வளவு ஏன்….

பாஜகவோட பைக்கில் ஏறி சுற்றினால் சீமானை திட்டுவது போலவே ஏசலாம்.

இரெண்டையிம் ஒப்பிடவே முடியாது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.