Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார் விபத்து, சீட் பெல்ட், ஏர் பேக், கார் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 16 அக்டோபர் 2025, 10:13 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கார் மோதி விபத்து ஏற்பட்டு ஏர் பேக் வெடித்ததில், முன் இருக்கையில் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த 7 வயது சிறுவன் காயங்களால் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வீராமுத்து. இவர் தனது 7 வயது மகன் கெவின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் வாடகை காரில் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக சென்னையை நோக்கி பயணித்துள்ளார்.

''திருப்போரூரைக் கடந்து சென்றபோது முன்னே சென்ற வாகனம் வலதுபுறம் திரும்ப உடனடியாக நின்றதால் பின்னே வந்த இவர்களின் கார் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் உள்ள ஏர் பேக் உடனடியாக வேலை செய்யவே முன்னே தந்தையின் மடியில் அமர்ந்திருந்த கெவினுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.'' என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

காவல்துறையினர் அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கெவின் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். முன்னே சென்ற வாகனத்தின் ஓட்டுநரான சுரேஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏர் பேக் பயன்பாடு, வாகனத்தில் சிறுவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல பாதுக்காப்பான முறைகள் பற்றி ஆட்டோமொபைல் துறை வல்லுநரான த முரளியிடம் பிபிசி பேசியது.

தற்போது இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான கார்களில் முன்புறம் இரண்டு, முன் இருக்கைக்கு பின் புறம் இரண்டு பக்கவாட்டில் இரண்டு என மொத்தம் 6 ஏர் பேக்குகள் இருக்கும் எனத் தெரிவிக்கிறார் முரளி.

ஏர் பேக் மற்றும் சீட் பெல்ட் சென்சார்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

சீட் பெல்டின் அவசியம்

கார் விபத்து, சீட் பெல்ட், ஏர் பேக், கார் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஆட்டோமொபைல் துறையில், சீட் பெல்ட் மிகவும் முக்கியமான அம்சமாக இடம்பெறுகிறது. சீட் பெல்டின் அவசியம் கருதியதால்தான் அதற்கு காப்புரிமை பெறப்படவில்லை என்கிறார் முரளி

அமெரிக்காவில் 1987 முதல் 2017 வரையிலான 30 ஆண்டு காலத்தில் 50,457 உயிர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் பாதுகாக்கப்பட்டதாக அமெரிக்க போக்குவரத்துறை தெரிவிக்கிறது.

கார் என்று வருகையில் சீட் பெல்டும் ஏர் பேக்கும் இரு அவசியமான, இன்றியமையாத அம்சங்கள் எனக் கூறும் முரளி, "சீட் பெல்ட் அணிந்தால்தான் ஏர் பேக் சரியாக வேலை செய்யும்." என்றார்.

ஏர் பேக்கிற்கு முந்தைய முதல் கட்ட பாதுகாப்பு சீட் பெல்ட்தான் என்கிறார் முரளி

"கார் திடீரென இடது அல்லது வலது புறம் திரும்பினாலோ அல்லது மெதுவாக எங்காவது மோதினாலோ ஏர் பேக் வேலை செய்யாது. தீவிர விபத்துகளின்போது ஏர் பேக் உடனடியாக வெளிவரும். அத்தகைய சூழல்களில் சீட் பெல்ட்தான் முதல் கட்ட பாதுகாப்பு." என்றார்.

ஏர் பேக் எப்போது வேலை செய்யும்?

வாகனம் நேராக மோதினால் முன் பக்கம் உள்ள நான்கு ஏர் பேக் மட்டுமே திறக்கும். பக்கவாட்டில் மோதினாலோ அல்லது வாகனம் தடம் புரண்டாலோ தான் பக்கவாட்டில் உள்ள ஏர் பேக் திறக்கும்.

"வாகனம் விபத்துக்கு உள்ளாகிறபோது உடல் முன்னே தள்ளப்படும். அப்போது சீட் பெல்ட் தான் உடனடியாக உடலை பின்னுக்கு இழுக்கும். ஏர் பேக்கும் மைக்ரோ நொடிகளில் திறந்துவிடும். அப்போது உடல் பின்னே இருக்க வேண்டும், இல்லையென்றால் ஏர் பேக்கால் பலன் இருக்காது." எனத் தெரிவித்தார்.

இருக்கையில் உள்ள ஹெட் ரெஸ்டை நீக்கக்கூடாது எனக் கூறும் அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

"தற்போது பலரும் ஹெட் ரெஸ்டை நீக்கிவிட்டு பயணிக்கின்றனர். முன் இருக்கையில் தான் தாக்கம் அதிகமாக இருக்கும். உடல் முன்னே சென்று பின்னுக்கு வருவது, ஏர் பேக் திறப்பது என அனைத்துமே சில மைக்ரோ விநாடி இடைவெளியில் நடக்கக்கூடியவை. உடல் இருக்கையில் பின் வந்துமோதுகிறபோது ஹெட் ரெஸ்ட் இல்லையென்றால் முதுகெலும்பு உடைந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது." எனத் தெரிவித்தார்.

கார் விபத்து, சீட் பெல்ட், ஏர் பேக், கார் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

குழந்தைகளுக்கு உள்ள கட்டுப்பாடு என்ன?

குழந்தைகள், அவர்களுக்கு என்ன வயது என்றாலும் நாம் செய்யக்கூடாத முதல் விஷயம் மடியில் அமர வைத்து பயணிப்பதுதான் என்கிறார் முரளி.

மேலும் "குழந்தைகளை பின் இருக்கையில்தான் அமர வைக்க வேண்டும்." என்றார்.

"உயிரைப் பாதுகாக்கும் ஏர் பேக்காலும் காயங்கள் ஏற்படும். உரிய இடைவெளியில் அமர்ந்திருந்தால்தான் ஏர் பேக் பயனுள்ளதாக இருக்கும்." என்றும் தெரிவித்தார் முரளி.

சிறுவயதுள்ள குழந்தைகளுக்கு என ஐசோபிக்ஸ் என்கிற பிரத்யேக இருக்கை இருக்கிறது. இதனை பின் இருக்கையில் பொருத்திக் கொள்ள முடியும். அதை நிறுவி, குழந்தைகளை அதில் அமர்த்தி முறையாக சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏர் பேக் வேலை செய்யும் என்கிறார் முரளி.

கார் விபத்து, சீட் பெல்ட், ஏர் பேக், கார் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

பின் இருக்கையிலும் குழந்தைகளை மடியில் அமர வைக்கக்கூடாது எனக் கூறும் முரளி அந்தச் சூழலில் ஏர் பேக் குழந்தைகளுக்கு கிடைக்காது. வாகனம் மோதுகிற வேகத்தில் அவர்கள் தூக்கி வீசப்படுவார்கள். குழந்தைகளாக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து இருக்கையில் அமர்த்தி பயணிப்பது தான் பாதுகாப்பானது எனத் தெரிவித்தார்.

"முன்னர் கார்களில் 4 சீட் பெல்ட் மட்டுமே இருக்கும். தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டு அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் இடம்பெறுகிறது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

வாகனங்களில் பம்பர்களை தவிர்க்க வேண்டும் எனக் கூறும் முரளி, "வாகனம் அதிர்வை உணர்ந்தால் தான் ஏர் பேக் திறக்கும். பம்பர் மாற்றினால் ஏர் பேக் திறக்காது. அது மிகவும் ஆபத்தானது." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq83xw8g72no

  • கருத்துக்கள உறவுகள்

கார் முன் இருக்கைகளில் குறித்த வயதுவரை குழந்தைகளை உட்கார வைத்தல் ஆகாது.

பின் இருக்கையில் கூட, இருக்கையின் அடித்தளத்தில் பயணியின் பிட்டம், தொடை பகுதி சமாந்தரமாக பதிந்து, முழங்கால் மூட்டு 90 பாகை வளைந்து, பாதம் தரையில் சமாந்தரமாக பதியும் அளவு உடல் உயரம் வளரும் வரை பூஸ்டர் சீட் எனும் துணை இருக்கை பயன்படுத்த வேண்டும்.

முன்னிருக்கையில் சில கார்களில் ஏர் பேக் கை தற்காலிகமாக செயலிழிக்க செய்யும் வசதி உள்ளது. இது குழந்தைகளை பூஸ்டர் அல்லது சைல்ட் சீட்டில் வைத்து முன் இருக்கையில் அமர்த்த உதவினாலும்.

பின் இருக்கையில் இவற்றை போட்டு அமர்துவதே மிக பாதுகாப்பானது.

இதை எல்லாம் விட்டு விட்டு, குழந்தையை டிரைவரின் மடியில் வைத்து ஓடி விட்டு, ஏர் பேக்கை குறை சொல்ல முடியாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படியாக முட்டாள் வேலைகள் செய்யும் பெற்றோரை, அவர்களது இழப்பையும் பொருட்படுத்தாமல் சிறுவர் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி சிறையில் போட வேண்டும். ஏனைய குழந்தைகளைக் காப்பாற்ற இது ஒரு வழியாக இருக்கும்.

7 வயதுக் குழந்தை முன் இருக்கையில் இருப்பதே விதி மீறல், இந்த லட்சணத்தில் மடியில் வைத்துக் கொண்டு வேறு பயணம்! தற்கால வாகனங்களில் முன் இருக்கையின் எயார் பாக் ஒரு குறிப்பிட்ட நிறை இருந்தால் மட்டும் தான் செயல்படும் படி வைத்திருக்கிறார்கள். நிறை குறைந்த குழந்தையை முன்னிருக்கையில் வைத்து பெல்ற் போட்டாலும் எயார் பாக் வேலை செய்யாது. வாகனம் நகர ஆரம்பித்ததும் எச்சரிக்கை மணி கூட ஒலிக்கலாம்.

இது இந்தியாவில் நடந்திருக்கிறது. இங்கே என் நகரில் வசிக்கும் இந்தியப் பெற்றோர் சிலர் தங்கள் சிறு பிள்ளைகளை காரின் பின் சீற்றில் சும்மா நிற்க வைத்த படி அருகில் இருக்கும் இடங்களுக்குப் போய் வருவதைக் கண்டிருக்கிறேன். முழு முட்டாள்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பின் இருக்கையில் இவற்றை போட்டு அமர்துவதே மிக பாதுகாப்பானது.

இதை எல்லாம் விட்டு விட்டு, குழந்தையை டிரைவரின் மடியில் வைத்து ஓடி விட்டு, ஏர் பேக்கை குறை சொல்ல முடியாது.

ஆனால் முன்னே சென்ற வாகன சாரதி வலதுபுறம் திரும்புவதற்காக எதிர்வரும் வாகனத்திற்கு வழிவிட்டு காத்திருந்தவர் கைது செய்யபட்டுள்ளார்.

4 hours ago, Justin said:

இங்கே என் நகரில் வசிக்கும் இந்தியப் பெற்றோர் சிலர் தங்கள் சிறு பிள்ளைகளை காரின் பின் சீற்றில் சும்மா நிற்க வைத்த படி அருகில் இருக்கும் இடங்களுக்குப் போய் வருவதைக் கண்டிருக்கிறேன். முழு முட்டாள்கள்!

இந்த விடயத்தில் எமது ஆட்களும் உயர்வானவர்கள் இல்லை சிறுவர்களை sunroof ல் நிற்கவைத்து மற்றவர்களுக்கு காட்டுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகன முன் இருக்கையில் குழந்தைகள் இருக்கைகளுடன் அமர்த்த முடியும் என தளர்த்தப்பட்ட சட்டங்கள் கூறினாலும்..... ஏதாவது நடந்தால் காப்புறுதி உத்தரவாதம் எப்படி இருக்குமென தெரியவில்லை.

kindersitz-beifahrer-rueckwaerts-1905-qp

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் முன்னே சென்ற வாகன சாரதி வலதுபுறம் திரும்புவதற்காக எதிர்வரும் வாகனத்திற்கு வழிவிட்டு காத்திருந்தவர் கைது செய்யபட்டுள்ளார்.

ம்ம்ம்…

இந்தியா அல்லவா….

அப்படித்தான் இருக்கும்.

சடுதியாக பிரேக் போடுவது என்பது வாகனம் ஓட்டும் போது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று.

அதுதான் டிரைவிங் டெஸ்டில் இதையும் சோதிப்பார்கள்.

யூகே சட்டப்படி ஒரு வாகனத்தை பின்னால் இருந்து அடித்தால் அடித்தவர் மீதுதான் பிழை. மிக, மிக அரிதாக சிசிடிவி போன்ற சாட்சிகள் இருந்தால் மட்டுமே அடிவாங்கியவர் மீது குற்றம் காணப்படும்.

அப்போது கூட 50:50 என்றே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

பின் இருக்கையில் கூட, இருக்கையின் அடித்தளத்தில் பயணியின் பிட்டம், தொடை பகுதி சமாந்தரமாக பதிந்து, முழங்கால் மூட்டு 90 பாகை வளைந்து, பாதம் தரையில் சமாந்தரமாக பதியும் அளவு உடல் உயரம் வளரும் வரை பூஸ்டர் சீட் எனும் துணை இருக்கை பயன்படுத்த வேண்டும்.

பின்னிருக்கையில் 145 சென்ரிமீற்றர் உயரத்திற்கு கீழிருக்கும் குழந்தைகள் குழந்தைகள் ஆசனம் மற்றும் பூஸ்ரர் ஆசனம் பயன்படுத்த வேண்டும்.

சில நேரங்களில் முன்னிருக்கையின் கீழிருகும் ஆழி இணைப்பு சீற்றை முன் பின்னாக நகர்த்தும் போது காரின் கணனியினுடனான தொடர்பினை இழந்துவிடும் பொதுவாக அதற்கான விளக்கு எரிய வேண்டும் சில சமயம் அவை காட்டுவதில்லை.

ஆனால் OBD 2 அதற்கான B174800 பிழை குறிகாட்டும், முற்று முழுதான வாகன அறிகுறியிலும் தங்கியிருக்கமுடியாது என கருதுகிறேன், இந்த கருவி ஆக குறைந்த விலையில் அமேசன் $40 வாங்கலாம் (மலிவான).

இணைப்பினை கழற்றி மீண்டும் இணைத்தால் போதும், அதற்கு முன்னர் காரின் மின்சேமிப்புக்கலத்தின் எதிர் முனையினை அகற்றவேண்டும் (இந்த செயல் அனைத்து காரின் இயங்கு நிலையினையும் ஆரம்ப நிலைக்கு மாற்றிவிடும் அதனால் காரின் காற்று விகிதம் மாறுபடும் சில காலத்திற்கு பின் சரியாகிவிடும் அல்லது அந்த கருவியிலேயே (OBD 2 ) அதனை சரி செய்யும் பொறிமுறை உண்டு)

கார் நீண்ட பயணத்திற்கு முன்னரான சரிபார்ப்பு போன்றவற்றிற்கும் உதவும்.

நான் மெக்கானிக் இல்லை எனவே எனது கருத்து தவறாக இருக்கலாம், இது ஒரு ஆலோசனையும் இல்லை எனது அனுபவம்.

இணைப்பு சரி செய்தபின் அந்த கருவியிலேயே ஒருவர் உடகார்ந்து , வெறுமையாக சீற்றினை விட்டு காரின் கணனி சரியாக எடையினை உணர்கிறதா எனவும் பார்க்கமுடியும் (சரியாக இணைப்பு வேலை செய்கிறதா என)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்தியா அல்லவா…

அப்படித்தான் இருக்கும்.

👌

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வாகன முன் இருக்கையில் குழந்தைகள் இருக்கைகளுடன் அமர்த்த முடியும் என தளர்த்தப்பட்ட சட்டங்கள் கூறினாலும்..... ஏதாவது நடந்தால் காப்புறுதி உத்தரவாதம் எப்படி இருக்குமென தெரியவில்லை.

kindersitz-beifahrer-rueckwaerts-1905-qp

இது நாட்டுக்கு நாடு வேறு படுவதாக இருக்கலாம்.

யூகேயில் குழந்தைகளை முன்னிருக்கையில் அமர்த்தலாம். ஆனால் குழந்தைகள் இருக்கை கட்டாயம். அதிலும் குழந்தை-இருக்கை பின்னோக்கியது எனில் ஏர்பேக் தற்காலிக செயழிழப்பு செய்யதல் வேண்டும்.

ஆனால் சிறந்த வழி, பின்னிருக்கையில் அமர்த்துவதே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

பின்னிருக்கையில் 145 சென்ரிமீற்றர் உயரத்திற்கு கீழிருக்கும் குழந்தைகள் குழந்தைகள் ஆசனம் மற்றும் பூஸ்ரர் ஆசனம் பயன்படுத்த வேண்டும்.

இதுவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் ஒன்றே. யூகேயில் 135, ஆனால் அயர்லாந்தில் 150 என்கிறது ஜெமினி. அவுசில் 145 போல் உள்ளது.

அதே போல் சில வாகனங்களில் 135 உயரமான பிள்ளையின் பாதம் முழுவதுமாக தரையில் பதியாது.

நான் மேலே சொன்ன வரைவிலக்கணத்தை கடைப்பிடித்தால்- சீட்பெல்ட் போட்டாலும் வழுக்கி கொண்டு போய் அடிபடுவதில் இருந்து தவிர்க்கலாம்.

கொசுறு

நாம் இப்போ பாவிக்கும் மூன்று புள்ளி இணைப்பு சீட் பெல்டை கண்டுபிடித்தது சுவீடனை சேர்ந்த என் அபிமான நிறுவனம் வொல்வோ.

அதற்கு புலமைசார் உரிமை கோரி ஒரு பெரிய தொகையை பார்திருக்கலாம், ஆனால் இந்த தொழில்நுட்பத்தை மானிட பாதுகாப்புக்கென இலவசமாக கொடுத்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.