Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் தமிழ்செல்வன் விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் ஜெயலலிதா..பதவி வெறியில் உணர்வுகளை இழந்த தமிழினத்தின் எதிரி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் தமிழ்செல்வன் விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் ஜெயலலிதா..பதவி வெறியில் உணர்வுகளை இழந்த தமிழினத்தின் எதிரி...

பின்வரும் அவரின் அறிக்கை சினம்ழூட்டுவதாக இருக்கின்றது...ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான்

சென்னை, நவ. 6-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி பத விப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்-அமைச்சர் ஆகிய கருணாநிதி தமிழக அரசின் செய்தித்துறை மூல மாக அதிகாரபூர்வமாக கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரி வித்து இருந்தார்.

இதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து, மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை கலைக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.

அதற்குக் கருணாநிதி தனக்கே உரித்தான பாணியில் "எனது உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது அதனால் தான் இவ்வாறு எழுதினேன்'' என்கிறார். இவர் உடம்பில் மட்டும் தான் தமிழ் ரத்தம் ஓடுகிறதாப

கருணாநிதி எந்த அர்த்தத் தில் இவ்வாறு சொல்கிறார் என்பது தெரியும். நான் மைசூரில் பிறந்ததை வைத்து இவ்வாறு சொல்கிறார். நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில் தான் பிறந்தேன். தமிழ் ரத்தம் தான் எனது உடலில் ஓடுகிறது. எனது தாய்மொழி தமிழ் தான். இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும் போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்தவரையும் தமிழர் என ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எந்த அளவிற்கு எனக்கு தமிழின உணர்வு ஆரம்பம் முதலே இருந்துள்ளது என் பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 1972 ஆம் ஆண்டு என்னுடைய 24 ஆவது வயதில் "கங்கா கவுரி'' என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூருக்குப் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் நான் அளித்த பேட்டி அங்குள்ள பத்திரிகைகளிலே வெளி வந்திருந்தது. அந்தப் பேட்டியில் நிருபர், "நீங்கள் கன்னடியர் தானேப'' என்று கேட்டிருந்தார்.

அதற்கு நான் "இல்லை'' என்று தெரிவித்தேன். உடனே நிருபர் "நீங்கள் மைசூரில் தானே பிறந்தீர்கள்ப'' என்று கேட்டார். அதற்கு "ஆமாம்'' என்று சொன்னது மட்டும் அல்லாமல், "நான் தமிழ் குடும்பத்தில் பிறந்தவள், என்னுடைய தாய் மொழி தமிழ், நான் ஒரு தமிழச்சி'' என்றும் தெரிவித்தேன். இதைப் பார்த்த கன்னட வெறியர்கள் கத்தி, வாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் படப்பிடிப்பு நடைபெற்ற பிரிமியர் ஸ்டுடியோவிற்குத் திரண்டு வந்துவிட்டார்கள். அந்தப் படத்தினுடைய தயாரிப்பாளர் பி.ஆர். பந்தலு நடிகர்கள் ஜெமினி கணேசன், அசோகன் ஆகியோரும் அந்தப் படப்பிடிப்பில் என்னுடன் இருந்தனர். திரண்டு வந்த அந்த கன்னட வெறியர்கள் சுமார் 1000 பேர் வெளியிலே கூடி "கன்னட துரோகியே மன்னிப்பு கேள்!'' என்று பெரிய ரகளை செய்து படப்பிடிப்பு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்துவிட்டார்கள்.

"கன்னடியர் ஆகிய நீ, தமிழச்சி என்று எப்படி பேட்டி கொடுக்கலாம்ப நீ கன்னடியர் தான் என்று சொல்'' என்று மிரட்டினார்கள். "நான் இல்லாததை எப்படிச் சொல்ல முடியும்ப'' என்று தெரிவித்தேன். உடனே அவர்கள் என்னை தாக்க வந்தார்கள். போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வரவில்லை. பிரச்சினை கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருந்தது. பந்தலு இந்தப் படப்பிடிப்பு சம்பந்தமான செய்திகளை சேகரிப்பதற்காக சென்னையில் இருந்து தமிழ் பத்திரிகை நிருபர்கள் குழுவை அழைத்து வந்திருந்தார்.

அவர்கள் அங்கே தான் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இதற்கு சாட்சி. அந்தக் கன்னட வெறியர்கள் "நீ கன்னடியர் என்று ஒத்துக் கொள்! இல்லையென்றால் குத்துவோம், வெட்டுவோம்!'' என்று கூச்சலிட்டார்கள். உடனிருந்த பந்தலு, ஜெமினி கணேசன், அசோகன் ஆகி யோர் "எதுக்கம்மா வம்புப போலீஸ் வேறு இன்னும் வர வில்லை.

அவர்கள் கேட்பது போல் சொல்லிவிடு'' என்று கூறி னார்கள். நான் அவர்கள் சொல்வதை ஏற்காமல், கன்னட மண்ணில், தமிழ் உணர்வுடன், வீரமறத்தியாக அன்றைக்கே "நான் ஒரு தமிழச்சி'' என்று பெருமையுடன் தைரியமாகச் சொன்னேன்.

கர்நாடகாவில் பிறந்ததால் கன்னடியர் ஆவது கிடையாது. தமிழ் நாட்டில் பஞ்சாபி குடும்பங்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடி குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை. அதே போல், இலங்கையில் பிறக்கின்ற தமிழர்களை சிங்களர்கள் என்று சொல்வதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்று தான் சொல்கின்றோம். நான் கர்நாடகாவில் பிறந்திருந்தாலும், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி.

இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கும், அ.தி.மு.க.வுக்கு எப்போதும் பரிவும், பாசமும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் நல் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோரது விருப்பமும் ஆகும். ஆனால் கருணாநிதி, கடந்த 2 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த போதும், பலர் மரணமடைந்த போதும் வருத்தம் தெரிவிக் காமல், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் மறைவிற்கு மட்டும் தற்போது கவிதை வடி வில் இரங்கல் தெரிவித்து இருக் கிறார்.

இதன் தீவிரத்தை உணராது மத்திய அரசு இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதால், இவ்விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரி வித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS BY SNS NEWS SERVICE AND THANKS TO MAALAIMALAR.COM

  • கருத்துக்கள உறவுகள்

"அவர்கள் கேட்பது போல் சொல்லிவிடு'' என்று கூறி னார்கள். நான் அவர்கள் சொல்வதை ஏற்காமல், கன்னட மண்ணில், தமிழ் உணர்வுடன், வீரமறத்தியாக அன்றைக்கே "நான் ஒரு தமிழச்சி'' என்று பெருமையுடன் தைரியமாகச் சொன்னேன்."

சொன்னால் மட்டும் போதாதுங்க அம்மா.செயலிலும் காட்ட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது றோவுக்கு ஊதுறது எங்க செயல்ல காட்டிறது...

இது றோவுக்கு ஊதுறது எங்க செயல்ல காட்டிறது...

என்னத்தை ஊதுறது சுண்டல் அண்ணா!! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் வழக்குகள்ள இருந்து தப்ப றோ என்ன சொல்லுதோ அத கேட்டு கேட்டு ஊதுறது....

எதைச் சொல்லியாவது பதவிக்கு வரத் துடிக்கிறார்.

உச்ச நீதிமன்றமும் பாவம்

இவரும் பாவம் விட்டு விடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தராதரம் அற்ற பெண்மணியை பற்றி நாம் விவாதித்து நமது பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.

இறந்தவர் எதிரி என்றால் கூட மரியாதை செலுத்தும் இனம் நம் தமிழ் இனம். ஆனால் எம் அருமை சகோதரரும், தன் புன்னகையால் எங்களை எல்லாம் கட்டிப்போட்டவரும் ஆன தமிழ் செல்வன் அண்ணாவின் வீர மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததை கூட அரசியலாக்கும் இவர் தமிழச்சி என்று தன்னை சொல்லிகொள்வது தமிழ் இனத்துக்கே பெருத்த அவமானம் ஆகும்.

தமிழ் நாட்டு தமிழர்கள் இனியாவது இவரை சமூக புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

இப்படி ஒரு கேடு கெட்ட அரசியல் தேவையா ? இதற்கு பேசாமல் இதுவரை இவர் கொள்ளை அடித்து சேர்த்த கொட நாட்டில் போய் மிச்ச காலத்தை யாருக்கும் தொந்தரவு இல்லாமல் கழிக்கலாம்.

புலிகளுக்கு ஆதரவு : கருணாநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – ஜெயலலிதா!

செவ்வாய், 6 நவம்பர் 2007( 16:57 IST )

Webdunia

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவிற்கு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய கருணாநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு எப்போதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு பிரிக்க முடியாத, அசைக்க முடியாத பிணைப்பு இருந்து வருவதை அனைவரும் நன்கு அறிவார்கள். அதை நிரூபிக்கும் வகையில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்‌‌ச்செல்வன் மறைவுக்கு, இந்திய அரசமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்து கொண்ட முதலமைச்சர் கருணாநிதி, தமிழக அரசின் செய்தி துறை மூலமாக அதிகாரப்பூர்வமாக கவிதை வடிவில் இரங்கல் வெளியிட்டிருந்தார்.

இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதற்கு கருணாநிதி எனது உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது என்று கூறியிருந்தார். தான் செய்த தேச விரோத செயலுக்கு தமிழன் பெயரை கருணாநிதி இழுக்கிறார்.

எனது உடலிலும் தமிழ் ரத்தம்தான் ஓடுகிறது. ஆனால் கருணாநிதிக்கு ஓடுகிறமாதிரி தேசத் துரோக ரத்தம் எனக்கு ஓடவில்லை. நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில்தான் பிறந்தேன். எனது தாய்மொழி தமிழ்தான். இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என்று ஏற்றுகொள்ளும் போது, இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்த என்னையும் தமிழர் என ஏற்று கொள்ள வேண்டும். நான் கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி.

இலங்கை தமிழர்கள் மீது எனக்கும், எப்போதும் பரிவும், பாசமும் உண்டு. அவர்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோருடைய விருப்பமுமாகும். ஆனால் கருணாநிதி கடந்த 2 ஆண்டு காலமாக இலங்கை தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்து கொண்டிருந்த போது வருத்தம் தெரிவிக்காமல், தமிழ் செல்வன் மறைவுக்கு மட்டும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். நான் இலங்கை தமிழர்களை ஆதரிக்கிறேன். கருணாநிதியோ, பயங்கரவாத புலிகளை ஆதரிக்கிறார். இதுதான் வித்தியாசம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருப்பது பற்றி கருணாநிதி குறிப்பிடுகிறார். வைகோ அரசியல் சாசனப்படி பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டு முதலமைச்சராகவோ, முக்கிய அரசாங்க பொறுப்பையோ வகிக்கவில்லை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் ஒருவர் முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க முடியாது. இதன் தீவிரத்தை உணராமல் மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இவ்விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை தவிர அ.தி.மு.க.வுக்கு வேறுவழியில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/t...071106058_1.htm

அங்கங்களை அசைத்து பணம் பார்க்க போன இடத்தில் குதர்க்க வாதம் செய்த ஒரு சம்பவத்தை (யாருக்கு தெரியும்?) துணைக்கு இழுக்க வேண்டிய பரிதாபம்!

1972 இல் நடந்த ஒரு சொத்தை சம்பவம் மூலம் தான் ஒரு தமிழிச்சி என்று நிருபிக்க வேண்டிய நிர்ப்பந்தம்!

நீவீர் உண்மையிலேயே மான தமிழிச்சி என்றால் ஏன் கன்னடக்காரனிடம் தொழிலுக்குப் போனாய்? உந்தன் தமிழ் மண்ணிலல்லவா நீவீர் நின்றிருக்க வேண்டும்!

ஈழத் தமிழ் மக்களிடம் பாசம் என்கிறீர்! கருணாநிதியிடம் மக்களுக்காக குரல் கொடுத்தாயா என்று எதிர் கேள்வி வேறு கேட்கிறீர்! சரி நீர் நாங்கள் கொல்லப்படும் போது எப்போதாவது குரல் கொடுத்தீரா?

செல்வி கங்கா கவுரி, இப்போது சொல்லும் ஒரு உண்மை தமிழிச்சிக்கு தமிழனின் மரண ஓலம் பெரிதா, சத்தியப்பிரமாணம் பெரிதா?

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.