Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்கம் விற்பனை என்ற போர்வையில் பணம் மோசடி செய்ததாக கானா தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாகக் கூறி குறித்த சந்தேக நபர்கள் 2 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த பணத்தைப் பெற்ற பின்னர், சந்தேக நபர்கள் பாராளுமன்ற உறுப்பினருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு 50 கிலோகிராம் தங்கத்தை விற்பனை செய்ய சந்தேகநபர்கள் இணங்கியதாகவும் அதன் சட்டப்பூர்வமான தன்மையைக் கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கானா தேசிய பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி சந்தேக நபர்களை கைது செய்தது.

அவர்கள் கைது செய்யப்பட்டபோது தங்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு மஞ்சள் உலோகங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.samakalam.com/ஹிஸ்புல்லாவிடம்-இருந்து/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லாஹ் தங்க மோசடியில் பாதிக்கப்பட்டதாக வந்த செய்தி: ஊடகப் பிரிவு மறுப்பு

27 October 2025

1761589466_4236355_hirunews.jpg

தங்க வியாபாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக கானா ஊடகங்களில் வெளிவந்ததாகக் கூறப்பட்டு, பல ஊடகங்களில் வெளியான செய்தியை அவரது ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது.

அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைச் சம்பவம் குறித்து பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார்.

அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அவர், உடனடியாக இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, ஏமாற்ற முயன்ற 11 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாவுக்கும் இந்த மோசடி விவகாரத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

https://hirunews.lk/tm/427651/media-unit-denies-reports-that-hezbollah-was-a-victim-of-a-gold-scam

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஹிஸ்புல்லாஹ்

கோவிலை இடித்து மீன் சந்தை கட்டுவதில் புகழ்பெற்றவர் இவர்தானா.????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

கோவிலை இடித்து மீன் சந்தை கட்டுவதில் புகழ்பெற்றவர் இவர்தானா.????

அவரு 2 கோடியென்ன ...50 கோடியும் முதலிடுவார்... அவருக்கு..பின் புலம் மத்திய கிழக்கு ...இலங்கைக்கு வால் காட்ட ..முசுலிம்தரப்பு மாதாமாதம் அரசுதரப்பு அமைச்சர்களை சந்தித்து ..தங்கடை குறைகளை சொல்லுகினமாம்...அப்ப அமைச்சர்மாரும் .. வாக்கு வேட்டைக்காக ஓகே சொல்லுகினமாம் ...இதிலை கிசிபுல்லா சொன்னால் தங்கமென்ன வைரமே கடத்தலாம் ...பறித்த பல்கலை கழகத்தையே திருப்பியெடுத்த...புல்லாவுக்கு ..இது ஒரு தூசி

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லாவிடம் அந்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் எப்படி வந்து என்று, லஞ்ச ஊழல் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

ஹிஸ்புல்லாவிடம் அந்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் எப்படி வந்து என்று, லஞ்ச ஊழல் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அந்தப் பக்கத்தில் ..அது முடியாது சிறியர்.....அனுரவந்து ஒரு வருடம் ஆச்சு...அந்தப் பகுதியில் ஏதாவது விசாரணை நடந்ததா....போதாக் குறைக்கு அமைச்சுப் பதவி ஒன்றும் புரமோட் பண்ணப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஹிஸ்புல்லாவிடம் அந்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் எப்படி வந்து என்று, லஞ்ச ஊழல் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

May be an image of one or more people, hospital and text that says 'COS Paragahadeniya Nanban இந்த சின்ன வித்தியாசத்துக்கா சிலர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்!'

இதையும் பாருங்க சிறி...அனுரவினால் கொடுக்கப்பட்ட விசேட சலுகையாம்..

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, alvayan said:

May be an image of one or more people, hospital and text that says 'COS Paragahadeniya Nanban இந்த சின்ன வித்தியாசத்துக்கா சிலர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்!'

இதையும் பாருங்க சிறி...அனுரவினால் கொடுக்கப்பட்ட விசேட சலுகையாம்..

முஸ்லீம் தாதிகளுக்கு சீருடையில் விலக்கு அளிக்கப் பட்டமைக்கு சில பிக்குகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அரசு அறிவித்த சீருடையில் வேலை செய்ய விரும்பாவிடில்… வேறு வேலையை தேடச் சொல்லி உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லா 2 கோடிக்கு தங்கம் வாங்க முயற்சித்தார் என்றால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு? அவர் அரசியல்திவிர என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார். அவரது மாதவருமானம் எவ்வளவு?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புலவர் said:

ஹிஸ்புல்லா 2 கோடிக்கு தங்கம் வாங்க முயற்சித்தார் என்றால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு? அவர் அரசியல்திவிர என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார். அவரது மாதவருமானம் எவ்வளவு?

அதை அறிய முடியாதுங்க...காத்தான்குடி ஒரு இரும்பு மதில் வலையம் ...யாரு எளிதில் நுழையமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஹிஸ்புல்லாவிடம் அந்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் எப்படி வந்து என்று, லஞ்ச ஊழல் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

3 hours ago, புலவர் said:

ஹிஸ்புல்லா 2 கோடிக்கு தங்கம் வாங்க முயற்சித்தார் என்றால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு? அவர் அரசியல்திவிர என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார். அவரது மாதவருமானம் எவ்வளவு?

நீங்கள் எல்லோரும், நான் உட்பட உந்தக்கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரது ஊடகப்பிரிவு முந்திக்கொண்டது உங்களுக்கு முதல்.

17 hours ago, கிருபன் said:

அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

17 hours ago, கிருபன் said:

கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார்.

அவர், தங்கம் வாங்கவோ கடத்தவோ முயன்றது உண்மை. ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும். நடத்துவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

571251621_1277532277722961_5606073411754

🔴 கடுமையாக ஏமாற்றப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லா!

கானா நாட்டின், அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களைக் கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் மேலும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

573539064_10172726444015370_586483881161

இலங்கைத் திருநாட்டின் பெருமைகள்.

தங்கமகள் மற்றும் தங்கமகன்

சர்வதேச விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கத்தை வென்று வந்த முஸ்லீம் பெண்ணும், கானா நாட்டில் 50 கிலோ தங்கம் வாங்க, இரண்டு மில்லியன் அமெரிக்க டொலரை கொடுத்து ஏமாந்த முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் ஹிஸ்புல்லாவும்.

Rooban Mahan 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/10/2025 at 14:11, alvayan said:

அவரு 2 கோடியென்ன ...50 கோடியும் முதலிடுவார்... அவருக்கு..பின் புலம் மத்திய கிழக்கு ...இலங்கைக்கு வால் காட்ட ..முசுலிம்தரப்பு மாதாமாதம் அரசுதரப்பு அமைச்சர்களை சந்தித்து ..தங்கடை குறைகளை சொல்லுகினமாம்...அப்ப அமைச்சர்மாரும் .. வாக்கு வேட்டைக்காக ஓகே சொல்லுகினமாம் ...இதிலை கிசிபுல்லா சொன்னால் தங்கமென்ன வைரமே கடத்தலாம் ...பறித்த பல்கலை கழகத்தையே திருப்பியெடுத்த...புல்லாவுக்கு ..இது ஒரு தூசி

ஏற்கெனவே... "ஆசன வாயிலில்" வைத்து தங்கம் கடத்தும் கோஷ்டிகள் தானே இவர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

571251621_1277532277722961_5606073411754

🔴 கடுமையாக ஏமாற்றப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லா!

கானா நாட்டின், அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களைக் கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் மேலும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

Vaanam.lk

அவரு பொய் சொல்லாத இனத்தில் இருந்து வந்த மாமனிதர்...

  • கருத்துக்கள உறவுகள்

571793297_839103341999025_12723080609024

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லாவையும் விசாரிக்க வேண்டும்..அத்தோடு

2020 இல் அயோத்தியில் இராமர் கோவில் கட்ட தங்கக் கல் அனுப்பிய முன்னாள் பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரனையும் விசாரிக்க வேண்டும்??😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.