Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2025 at 16:59, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் சொல்ல வருவது அமெரிக்க நியூயோர்க் நகரமே முஸ்லிம் மதத்தின் கட்டுபாட்டின் கீழ் வந்துள்ளது.அடுத்து அமெரிக்க நாடு. அமெரிக்காவை முஸ்லிம் மதம் ஆண்டால் உலகையே முஸ்லிம் மதம் ஆட்சி செய்யும் 🤣

எனக்குச் சரியாக நினைவில் இல்லை, முந்தி இலங்கையில இறுதி யுத்தம் நடந்தபோது அமெரிக்காவிலை பராக் ஹுசைன் ஒபாமா என்றொரு முகமதியர் அதிபராக இருந்தவர். அவர் அதிபராக வந்து ஒரு வருடம் முடியுறதுக்குள்ள அவர் செய்த அளப்பரிய சேவைகளுக்காக சமதானத்துக்கான நோபல் பரிசும் அவருக்குக் கிடைச்சது!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வாலி said:

எனக்குச் சரியாக நினைவில் இல்லை, முந்தி இலங்கையில இறுதி யுத்தம் நடந்தபோது அமெரிக்காவிலை பராக் ஹுசைன் ஒபாமா என்றொரு முகமதியர் அதிபராக இருந்தவர். அவர் அதிபராக வந்து ஒரு வருடம் முடியுறதுக்குள்ள அவர் செய்த அளப்பரிய சேவைகளுக்காக சமதானத்துக்கான நோபல் பரிசும் அவருக்குக் கிடைச்சது!

😄

என்ன செய்வது எத்தனை காலத்திற்க்கு முஸ்லிம் மதம் உலகை ஆளும் என்று புலுடா விட்டு கொண்டிருப்பது சில வருடங்களுக்கு முன்பு மேற்குலகநாட்டு பெண்கள் எல்லாம் புர்க்காவை ஆசைபட்டு வாங்கி மூட ஆரம்பித்து விட்டார்கள் விரைவில் முஸ்லிம் மதம் ஆளபோகின்றது என்று தீவிர பிரசாரம் தங்களது ஆட்களிடம் செய்தார்கள் இப்போது சோர்ந்து போய்விட்டனர்.

On 5/11/2025 at 23:16, வாத்தியார் said:

இப்படியான ஒரு நப்பாசை அமெரிக்காவிற்கு வெளியே இல்லாமல் இல்லை 😂

ஓம் அவர்களிடம் போதிக்கபட்ட மத போதனை 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/11/2025 at 23:26, ரசோதரன் said:

இந்த தேர்தல் முடிவுகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், ஆளும் குடியரசுக் கட்சிக்கு சார்பானவர்கள் மிக அதிக இடைவெளிகளில் தோற்றுப் போயிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. அந்த இடைவெளியே அதிபர் ட்ரம்பையும், அவருடைய கட்சியினரையும் பதற்றப்படவைக்கின்றது. 'வாக்குச் சீட்டுகளில் என் பெயர் இல்லை. அதனாலேயே தோற்றோம்..................' என்று அதிபர் ட்ரம்ப் காரணம் சொல்வது அவரது சிறுபிள்ளைத்தனமான கூற்றுகளில் ஒன்று. நாட்டின் அதிபராக, குடியரசுக்கட்சியின் முகமாக அவர் எல்லா தேர்தல்களிலும் குடியரசுக்கட்சியின் சார்பாக நிற்கின்றார். அதிபர் ட்ரம்பிற்கு மட்டும் இல்லை, எல்லா நாடுகளிலும், ஆட்சியில் இருக்கும் எல்லா தலைவர்களுக்கும் இது பொருந்தும்.

உலக நாடுகளில் தவறான கொள்கை உள்ள அரசியல் தலைவர்களை மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகின்றது.

என் நாடு,என் தேசம், என் மக்கள், என் இனமே என்ற கோஷசங்களும் இனி வரும் காலங்களில் எடுபடாது போலவும் தெரிகின்றது.

தம் இனத்தை விட்டு ஏனைய இனத்தவர்களுக்குள் தம் தலைவனை தேட ஆரம்பித்து விட்டார்கள் போல் உள்ளது.மாற்றான் மல்லிகை மணக்கும் என்பது போல்.....🤣

உங்களிடம் ஒரு கேள்வி?

தம் பூர்வீக மண்ணில் செய்ய வேண்டியதை ஏன் புலம்பெயர்ந்த மண்ணில் சாதிக்க நினைக்கிறார்கள்?

மம்தானி போன்றோர் அவர்களின் பூர்வீக மண்ணில் ஏன் சாதிக்க முடியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை? அங்கு தானே அதிக அடக்குமுறைகளும் அநீதிகளும் நடக்கின்றன?

பிழைக்க வந்த இடத்தில் அவரவர் கருத்துக்களை சொல்லலாமே தவிர .....பதவி வந்ததும் நாட்டு தலைவனையே அவமதிப்பது ஒரு வித கருடா சௌக்கியமா கதைதான்.😎

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க் மேயராக மம்தானி தேர்வு பற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன?

ஸோஹ்ரான் மம்தானி, அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள், நியூயார்க் நகர மேயர்

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி தனது தாயார் மீரா நாயருடன்.

8 நவம்பர் 2025, 09:17 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முஸ்லிமான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.

மம்தானியின் இந்த வெற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோஹ்ரான் மம்தானியின் வெற்றியை 'வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் அசாதாரணமானது' என்று அரபு ஊடகங்கள் கூறுகின்றன.

நியூயார்க் நகரத்தின் 'முதல் முஸ்லிம் மேயர்' என்று அவரது வெற்றி அரபு ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.

பல சேனல்கள் மம்தானி ஆதரவாளர்களின் கொண்டாட்டங்களை மையப்படுத்தி, அதை ஒரு சிறப்பான வெற்றி என்று வர்ணிக்கின்றன.

"இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, அதேசமயம் கம்யூனிஸ்டாக அறியப்படும் மம்தானி, நியூயார்க்கில் சரித்திரம் படைத்துள்ளார்" என்று கத்தாரின் அல்-ஜசீரா வலைத்தளம் தெரிவித்தது.

அல்-ஜசீரா சேனல், மம்தானியின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடும் காட்சிகளை ஒளிபரப்பி, "இது ஒரு அசாதாரணமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல்" என்று விவரித்தது.

அந்த சேனலின் செய்தியாளர், "இந்தத் தேர்தலில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது நியூயார்க் மேயர் தேர்தலில் கடந்த பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான வாக்குப்பதிவு ஆகும்." என்று கூறினார்.

அல்-அரேபியா சேனல் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பியது.

ஸோஹ்ரான் மம்தானி, அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள், நியூயார்க் நகர மேயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி

அல்-அரேபியா சேனலின் கூற்றுப்படி, சுமார் 60 சதவீத வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர், இது நியூயார்க் நகரத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.

அந்த சேனல், "மம்தானி இளைஞர்களை அதிகளவில் ஈர்த்துள்ளார். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்" என்று கூறியது.

லண்டனைச் சேர்ந்த அல்-குட்ஸ் அல்-அரபி வலைத்தளம், மம்தானியின் வெற்றி "நியூயார்க் நகரத்தில், முற்போக்கு கொள்கைகளுக்கான புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தது.

டிரம்புடனான முரண்பாடு

ஸோஹ்ரான் மம்தானி, அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள், நியூயார்க் நகர மேயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு நிதியளிப்பதில் சிரமம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

சௌதி அரேபியாவின், அல்-அரேபியா தொலைக்காட்சி அதிகாலை 4 மணி முதல் தனது ஒளிபரப்பில் இந்தச் செய்தியை பிரதானமாக காட்டத் தொடங்கியது. மம்தானிக்கும் டிரம்பிற்கும் இடையிலான 'வார்த்தைப் போர்' பற்றியும் அது குறிப்பிட்டது.

அல்-அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்கை நியூஸ் அரேபியா வலைத்தளங்கள் மம்தானியை "டிரம்பின் தீவிர எதிர்ப்பாளர்" என்று விவரித்தன.

"நாட்டிற்கு துரோகம் இழைத்த டொனால்ட் டிரம்பை எப்படி தோற்கடிப்பது என்பதற்கு யாராவது உதாரணம் காட்ட வேண்டுமென்றால், நியூயார்க் நகரத்தை தான் காட்ட வேண்டும்" என்று மம்தானி தனது உரையில் கூறியதாக, ஸ்கை நியூஸ் அரேபியா மேற்கோள் காட்டியது.

மம்தானி தனது உரையில் டிரம்பிற்கு 'சவால் விடுத்தார்' என்றும், அவரைத் 'விமர்சித்துப் பேசினார்' என்றும் அல்-ஜசீரா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஆர்டி அரபிக் மற்றும் இரானின் அல்-ஆலம் தொலைக்காட்சியும் மம்தானி தனது உரையில் டிரம்ப் மற்றும் இஸ்ரேலை விமர்சித்ததை எடுத்துக்காட்டின.

ஆர்டி அரபிக் மம்தானியை, "நெதன்யாகுவைக் கைது செய்யக் கோரியவர் என்றும், இஸ்ரேல் மீதான டிரம்பின் கொள்கைகளை விமர்சித்தவர்" என்றும் விவரித்தது.

"சமீபத்திய அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சி ஒன்றை மம்தானி தந்துள்ளார்" என்று அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கூறியதை மேற்கோள் காட்டி எகிப்தின் அல்-காட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையையும் சாண்டர்ஸ் குறிப்பிட்டார். அதில், "குடியரசுக் கட்சியினரின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதில் முதலாவதாக, அவர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இல்லை, இரண்டாவதாக, அரசாங்க முடக்கம் (Shutdown)."

'அமெரிக்காவில் சியோனிஸ்டுகளின் தோல்வி'

ஸோஹ்ரான் மம்தானி, அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள், நியூயார்க் நகர மேயர்

பட மூலாதாரம், Getty Images

அரபு நாடுகளில் உள்ள சமூக ஊடக பயனர்கள் மம்தானியின் வெற்றியை அவரது இஸ்ரேல் எதிர்ப்பு மற்றும் பாலத்தீன ஆதரவு நிலைப்பாட்டின் வெற்றியாகப் பார்க்கின்றனர்.

'ப்ரோ முஸ்லிம் பிரதர்ஹுட்' ஆதரவு பத்திரிகையாளர் ஹம்சா சவ்பா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மம்தானியின் வெற்றி வெள்ளை மாளிகையில் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது அமெரிக்க அரசியலின் பழைய, வேரூன்றிய விதிகளை அசைத்துப் பார்க்கும்." என்று பதிவிட்டுள்ளார்.

அல்-வசத் கட்சித் தலைவர் அபு அலீலா மடி, மம்தானியின் வெற்றி "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது" என்றும், "அவர் இஸ்ரேலிய லாபிக்கு சவால் விடுகிறார்" என்றும் கூறினார்.

பாலத்தீன-அமெரிக்க எழுத்தாளர் சமர் ஜரா, "மம்தானி உலகின் மிகவும் பிரபலமான நகரமான நியூயார்க்கில் வெற்றி பெற்றுள்ளார். சியோனிஸ்டுகள் அவருக்கு எதிராக இருந்த போதிலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது" என்று கூறினார்.

மம்தானியின் வெற்றி 'இஸ்ரேலிய லாபிக்கு ஒரு மாபெரும் தோல்வி' என்று அல்-ஜசீரா பத்திரிகையாளர் அகமது மன்சூர் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன?

ஸோஹ்ரான் மம்தானி, அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள், நியூயார்க் நகர மேயர்

பட மூலாதாரம், CHANNEL 12

படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானியின் 'இஸ்ரேல் எதிர்ப்பு' நிலைப்பாடு இஸ்ரேலிய ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

மறுபுறம், இஸ்ரேலிய ஊடகங்கள் ஸோஹ்ரான் மம்தானியின் முஸ்லிம் அடையாளத்தையும், அவரது 'இஸ்ரேலிய எதிர்ப்புக் கொள்கைகளையும்' குறிப்பிட்டன.

ஒரு வலதுசாரி சேனல் அவரை 'பாலத்தீன ஆதரவாளர்' என்று குறிப்பிட்டது.

'இஸ்ரேல் ஹயோம்' செய்தித்தாள் மம்தானியை மிக முக்கியமான சியோனிச எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்று வர்ணித்தது.

பெரும்பாலான இஸ்ரேலிய செய்தி சேனல்கள் மம்தானியின் முஸ்லிம் அடையாளத்தை குறிப்பிட்டன.

'பாலத்தீன ஆதரவாளர் மம்தானி தனது வெற்றி உரையை அரபிக் மொழியில் தொடங்குகிறார்' என்று 'சேனல் 14'-இன் தலைப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

"கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் 'இஸ்ரேல் மீதான வெறுப்பு' அதிகரித்துள்ளதாகவும், அதன் விளைவாகவே மம்தானி வெற்றி பெற்றதாகவும்" அந்த சேனல் தனது நேரடி ஒளிபரப்பில் கூறியது.

நியூயார்க்கின் யூத வாக்காளர்களில் 16 முதல் 30 சதவீதம் பேர் மம்தானிக்கு வாக்களித்ததாக 'சேனல் 12' செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இது அந்த சேனலின் ஸ்டுடியோவில் இருந்த குழு உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்தியது.

ஒரு தொகுப்பாளர், "யூதர்கள் இப்போது நியூயார்க்கை விட்டு வெளியேறும் நிலை வருமா?" என்று கேட்டார்.

'சேனல் 12' தனது காலை செய்தி ஒளிபரப்பில், ட்ரூத் சோஷியல் தளத்தில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவை குறிப்பிட்டுக் காட்டியது.

அதில், "ஸோஹ்ரான் மம்தானிக்கு வாக்களிக்கும் எந்தவொரு யூதரும் யூத எதிர்ப்பாளராகவும் முட்டாளாகவும் இருப்பார்" என்று எழுதப்பட்டிருந்தது.

'பாலத்தீன ஆதரவு மற்றும் சியோனிச எதிர்ப்பு'

ஸோஹ்ரான் மம்தானி, அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள், நியூயார்க் நகர மேயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஸோஹ்ரான் மம்தானி தனது மனைவி ரமா துவாஜியுடன்.

மம்தானியின் வெற்றியைத் தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள அவரது பிரசார தலைமையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடி, 'சுதந்திர பாலத்தீனம்' என்று கோஷமிட்டனர் என்று பாதுகாப்பு செய்தித்தாளான மாரிவ் செய்தி வெளியிட்டுள்ளது.

மம்தானி இஸ்ரேலை வெளிப்படையாக எதிர்க்கிறார் என்றும், 'இஸ்ரேலை ஒரு யூத நாடாக தான் கருதவில்லை என்றும், பாலத்தீனர்களின் உரிமையை ஆதரிப்பதாகவும்' அவர் முன்னர் கூறியதாக மாரிவ் தெரிவித்துள்ளது.

'இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியூயார்க்கிற்கு வரும்போது அவரைக் கைது செய்வேன்' என்று அவர் கூறியிருந்தார்.

மாரிவ் செய்தித்தாள் மம்தானியின் 2023-ஆம் ஆண்டு கருத்தை மேற்கோள் காட்டி, அது ஏறக்குறைய யூத-விரோதத்தை ஒட்டியே இருந்தது என்று கூறியது. 2023இல் மம்தானி, "நியூயார்க் காவல்துறை மக்களை வன்முறை மூலம் அடக்குகிறது, அது இஸ்ரேலிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார்.

பல இஸ்ரேலிய ஊடகங்களும் மம்தானியின் "இன்டிஃபதாவை (Intifada- அரபு மொழியில் 'எழுச்சி') உலகமயமாக்க வேண்டும்" என்ற முழக்கத்தைக் குறிப்பிட்டன.

பாலத்தீன ஆதரவாளர்கள் இதை பாலத்தீனத்துடன் உலகம் துணை நிற்பதற்கான அழைப்பு என்று விவரிக்கின்றனர்.

ஆனால் பலர் அதை யூதர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் ஒரு முழக்கமாகக் கருதுகின்றனர்.

"இந்த மனிதர் தனது முழு தேர்தல் பிரசாரத்தையும் இஸ்ரேல் மீதான கடுமையான விமர்சனத்திலும், 'இன்டிஃபதாவை உலகமயமாக்க வேண்டும்' போன்ற முழக்கங்களை பரவலாக்குவதிலும் கவனம் செலுத்தினார்" என்று Ynet வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது.

மம்தானியின் வெற்றி 'நியூயார்க்கின் அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மையைக் குறிக்கிறது' என்றும் 'இஸ்ரேலுக்கு ஒரு எச்சரிக்கை மணி' என்றும் Ynet விவரித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c04g3q150kdo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cc713e835a128e13a03467dbe043d921-300a342

"Mississippi Masala"(12.02.1992) எனும் திரைப்பட வெளியீட்டிற்கு வந்த மீரா நாயர் தன் குழந்தை மம்தானியுடன் வந்த புகைப்படத்தை வைத்து....நியூயோர்க் மேயர் சம்பவம் மாதிரி ஜேர்மனியிலும் நடக்கக்கூடிய சாத்தியம் உள்ளதா என அச்ச செய்தியை விவாதமாக்கியுள்ளது.

யூத மடியிலிருந்து காஸா அழிப்பை இனக்கொலை என குற்றம் சாட்டியவர் எவ்வளவு காலம் நீடிப்பார் என காத்திருந்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2025 at 15:54, குமாரசாமி said:

உங்களிடம் ஒரு கேள்வி?

தம் பூர்வீக மண்ணில் செய்ய வேண்டியதை ஏன் புலம்பெயர்ந்த மண்ணில் சாதிக்க நினைக்கிறார்கள்?

மம்தானி போன்றோர் அவர்களின் பூர்வீக மண்ணில் ஏன் சாதிக்க முடியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை? அங்கு தானே அதிக அடக்குமுறைகளும் அநீதிகளும் நடக்கின்றன?

பிழைக்க வந்த இடத்தில் அவரவர் கருத்துக்களை சொல்லலாமே தவிர .....பதவி வந்ததும் நாட்டு தலைவனையே அவமதிப்பது ஒரு வித கருடா சௌக்கியமா கதைதான்.😎

அண்ணா,

நாட்டின் தலைவர்களை மட்டும் அன்றி, மதங்களை, மக்களின் நம்பிக்கைகளை, சடங்குகளை வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ அவமதிப்பது அல்லது ஏளனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், அவை மிக அவசியமும் கூட மனிதர்கள் தொடர்ந்து முன்னே செல்ல, ஆனால் சொல்லும் முறைகளில், பொது வெளிகளில், சில அடிப்படை நாகரிகம் பின்பற்றப்படவேண்டும்.

மம்தானியின் பேச்சில் இருந்த சவால்களும், சவடால்களும் கண்டிக்கப்படவேண்டியவையே.

அதே போன்றே அதிபர் ட்ரம்பின் பேச்சுகளில், செயல்களில் இருக்கும் பல விடயங்களும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. முதலில் இவர் பொய்களை சொல்வதை நிற்பாட்ட வேண்டும். எந்த அடிப்படையும் இல்லாமல், எந்த வித பொறுப்புகளும் இல்லாமல் இவர் சொல்லும் விடயங்களும், மனிதர்களை பிளவுபடுத்தும் பேச்சுகளும் ஒரு தலைவருக்கு உரியது மட்டும் இல்லாமல், நீண்ட காலப் போக்கில் மிக ஆபத்தானதும் கூட.

அரசியலில் மட்டும் இல்லை, தொழில்துறைகளில், ஆராய்ச்சிகளில், இலக்கிய முயற்சிகளில் கூட, புலம்பெயர்ந்த மக்கள் புலம் பெயர்ந்த மண்ணிலேயே சாதிக்க முடிகின்றது. தாயகங்களில் இருக்கும் தான்தோன்றித்தனமான போக்கும், குழு மனப்பான்மையும், மிகப் பரவலான தனிமனித வழிபாடுகளும், அசையா நம்பிக்கைகளும் தாயக மண்ணில் கடக்கவே முடியாத, மீறவே முடியாத கட்டுப்பாடுகளாக இருக்கின்றன.

இங்கு அமெரிக்காவில் நாசா முழுவதும் இந்திய விஞ்ஞானிகள். வைத்தியசாலை முழுவதும் இந்திய மருத்துவர்கள். தொழில்நுட்பத்துறையில் மேலிருந்து கீழ் வரையும் அவர்களே. இவர்கள் ஏன் இவ்வளவு பாடுபட்டு அமெரிக்காவை முன்னேற்றுகின்றார்கள்............ இந்தியாவை முன்னேற்றி, அதை 2020 இல் ஒரு வல்லரசாக இவர்களால் மாற்றி இருக்க முடியாதா.......... முடியவே முடியாது என்பதே உண்மை. இந்தியாவில் இருக்கும் சூழல் இவர்களை எதுவுமே செய்ய விடுவதில்லை. இதுவே தான் அரசியலுக்கும், சமூகநீதிப் போராட்டங்களுக்கும்.

நாங்கள் கூட தாயகத்தில் சொந்த ஊர்களில் இருந்திருந்தால், இங்கே இவ்வளவு சுதந்திரமாக கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கமாட்டோம் என்றே நம்புகின்றேன்...........❤️.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2025 at 23:54, குமாரசாமி said:

மம்தானி போன்றோர் அவர்களின் பூர்வீக மண்ணில் ஏன் சாதிக்க முடியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை? அங்கு தானே அதிக அடக்குமுறைகளும் அநீதிகளும் நடக்கின்றன?

  1. மம்தானியின் பூர்வீகம் உகண்டாவா? இந்தியாவா?

  2. இதே அணுகுமுறைப்படி டிரம்ப் ஜேர்மனியில் அல்லது ஸ்கொட்லாந்தில் அல்லவா சாதிக்க முயலவேண்டும்?

மம்தானியின் பேச்சுக்கள், எனக்கே எரிச்சலூட்டுகிறன. பெருநகரங்களுக்கு அப்பாலான அமெரிக்கன் வாக்காளரை இது செம்ம கடுப்பாக்கும், என்பதும், ஜனாதிபதியாக வரமுடியாத இவர் நாடளாவிய ரீதியில் தன் கட்சிக்கே பின்னடைவை ஏற்படுத்துவார் என்பதும் என் நிலைப்பாடுமே.

ஆனால் “பூர்வீகம்” பற்றிய உங்கள் கருத்து காலாவதியாகுவிட்ட கருத்தாக எனக்கு படுகிறது.

குறிப்பாக பூர்வகுடிகளை ரிசவேசன் எனும் திறந்த சிறைகளில் வைத்துள்ள அமெரிக்கா போன்ற நாடொன்றில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/11/2025 at 02:10, ரசோதரன் said:

அண்ணா,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

On 9/11/2025 at 03:07, goshan_che said:
  1. மம்தானியின் பூர்வீகம் உகண்டாவா? இந்தியாவா?

  2. இதே அணுகுமுறைப்படி டிரம்ப் ஜேர்மனியில் அல்லது ஸ்கொட்லாந்தில் அல்லவா சாதிக்க முயலவேண்டும்?

என்னைப்பொறுத்தவரை இருவருமே அமெரிக்காவிற்கு பஞ்சம் பிழைக்க சென்றவர்கள்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

On 9/11/2025 at 03:07, goshan_che said:

ஆனால் “பூர்வீகம்” பற்றிய உங்கள் கருத்து காலாவதியாகுவிட்ட கருத்தாக எனக்கு படுகிறது.

On 9/11/2025 at 03:07, goshan_che said:

குறிப்பாக பூர்வகுடிகளை ரிசவேசன் எனும் திறந்த சிறைகளில் வைத்துள்ள அமெரிக்கா போன்ற நாடொன்றில்

பூர்வீகம் என்றுமே காலாவதியாகி விடாது.பூர்வீகம் என்பது குடியேற்ற/பல்லின கலாச்சார நாடான அமெரிக்காவிற்கு சரிவரலாம்.இங்கிலாந்திற்கும் சரி வரலாம்/வரும். அவுஸ்ரேலியா கொஞ்சம் ஆங்கில பூர்வீகத்தை கெட்டியாக பிடிக்கின்றது என நினைக்கின்றேன்.இந்த நாடுகள் எல்லாம் ஒரு சந்தைக்கு சமம். பணம் இருந்தால் கடை போடலாம்.தாய் தந்தையை தவிர எதையும் விற்கலாம்.வாங்கலாம்.இருந்தாலும் கௌ போய் கட்டி வளர்த்த நாட்டை கண்டவன் கிண்டவன் எல்லாம் கதைத்து வெற்றியாட்டம் போட விடமாட்டார்கள் என நினைக்கின்றேன்.

கனடாவிற்கு வேறு வழியில்லை.🤣😁

ஆனால்...👇

போலந்து தொடக்கம் உக்ரேன் ஊடாக ஜேர்மனி,சுவிற்சலாந்து,ஆஸ்திரியா போன்ற நாடுகள் போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பூர்வீகம் கவனிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் பூர்வீகம் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது.தென்னமெரிக்க நாடுகளில் பூர்வீகம் பார்க்கப்படுகின்றது. ஆசிய நாடுகளில் பூர்வீகம் அதி முக்கியமாக உற்று நோக்கப்படுகின்றது.

இலங்கையில் கூட பூர்வீகம் அச்சில் வார்த்து வைக்கப்பட்டுள்ளது.பூர்வீகம் என ஒன்று இல்லையென்றால் தமிழினத்தை என்றோ அழித்து துடைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

என்னைப்பொறுத்தவரை இருவருமே அமெரிக்காவிற்கு பஞ்சம் பிழைக்க சென்றவர்கள்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

பூர்வீகம் என்றுமே காலாவதியாகி விடாது.பூர்வீகம் என்பது குடியேற்ற/பல்லின கலாச்சார நாடான அமெரிக்காவிற்கு சரிவரலாம்.இங்கிலாந்திற்கும் சரி வரலாம்/வரும். அவுஸ்ரேலியா கொஞ்சம் ஆங்கில பூர்வீகத்தை கெட்டியாக பிடிக்கின்றது என நினைக்கின்றேன்.இந்த நாடுகள் எல்லாம் ஒரு சந்தைக்கு சமம். பணம் இருந்தால் கடை போடலாம்.தாய் தந்தையை தவிர எதையும் விற்கலாம்.வாங்கலாம்.இருந்தாலும் கௌ போய் கட்டி வளர்த்த நாட்டை கண்டவன் கிண்டவன் எல்லாம் கதைத்து வெற்றியாட்டம் போட விடமாட்டார்கள் என நினைக்கின்றேன்.

கனடாவிற்கு வேறு வழியில்லை.🤣😁

ஆனால்...👇

போலந்து தொடக்கம் உக்ரேன் ஊடாக ஜேர்மனி,சுவிற்சலாந்து,ஆஸ்திரியா போன்ற நாடுகள் போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பூர்வீகம் கவனிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் பூர்வீகம் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது.தென்னமெரிக்க நாடுகளில் பூர்வீகம் பார்க்கப்படுகின்றது. ஆசிய நாடுகளில் பூர்வீகம் அதி முக்கியமாக உற்று நோக்கப்படுகின்றது.

இலங்கையில் கூட பூர்வீகம் அச்சில் வார்த்து வைக்கப்பட்டுள்ளது.பூர்வீகம் என ஒன்று இல்லையென்றால் தமிழினத்தை என்றோ அழித்து துடைத்திருப்பார்கள்.

பூர்வீகம் பார்க்கப்படுவதை நான் இல்லை என சொல்லவில்லை, ஆனால் அமெரிக்காவில் பூர்வ குடிகள் செவ்விந்தியர் மட்டுமே, அவுஸ், கனடா, நியூசிலாந்து எல்லாரும்தான்.

இலங்கையில் கூட வேடுவர் மட்டுமே பூர்வ குடிகள் என்கிறனர்.

ஆக, அனைவரும் ஆபிரிக்காவின் ரிட் சமவெளொயில் மட்டும்தான் பூர்வகுடிகள்.

உலகின் மிச்ச பாகம் எங்கும் மனித குலமே வந்தேறிகள்தான்.

ஆனால் இதை எந்த நாட்டிலும் பெரும்பானமை ஒத்து கொள்ளாது.

எனவேதான் மம்தானியின் வாய்சவாடல் - வெள்ளை, வலதுசாரி அமெரிக்கர்களை மேலும் டிரம்ப் நோக்கி திருப்பும் என நான் எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

பூர்வீகம் பார்க்கப்படுவதை நான் இல்லை என சொல்லவில்லை, ஆனால் அமெரிக்காவில் பூர்வ குடிகள் செவ்விந்தியர் மட்டுமே, அவுஸ், கனடா, நியூசிலாந்து எல்லாரும்தான்.

இலங்கையில் கூட வேடுவர் மட்டுமே பூர்வ குடிகள் என்கிறனர்.

ஆக, அனைவரும் ஆபிரிக்காவின் ரிட் சமவெளொயில் மட்டும்தான் பூர்வகுடிகள்.

உலகின் மிச்ச பாகம் எங்கும் மனித குலமே வந்தேறிகள்தான்.

ஆனால் இதை எந்த நாட்டிலும் பெரும்பானமை ஒத்து கொள்ளாது.

எனவேதான் மம்தானியின் வாய்சவாடல் - வெள்ளை, வலதுசாரி அமெரிக்கர்களை மேலும் டிரம்ப் நோக்கி திருப்பும் என நான் எண்ணுகிறேன்.

இதற்காகத்தான் குலம்,கோத்திரம், பூர்வீகம் பாராத சமதர்ம அரசுகள் இந்த உலகில் வேண்டும் என்கிறேன்.🤣

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி. 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.