Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 Nov, 2025 | 04:19 PM

image

வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் 'கழிவிலிருந்து மின்சார உற்பத்தி' (Waste-to-Energy) திட்டத்தை நிறுவுவதற்கான உதவியை இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ மியோனிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்துள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கொரியத் தூதுவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆளுநர் வரவேற்றதோடு, மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் திண்மக் கழிவகற்றலில் எதிர்கொள்ளும் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுச்சூழல் சமநிலை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட மங்குரோவ் நடுகை ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் யோசனையையும் தூதுவர் முன்வைத்தார்.

மேலும், கொரியாவின் சர்வதேச சுகாதார அறக்கட்டளை (Korea Foundation for International Healthcare) ஊடாக இலங்கையில் 11 சுகாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதனுள் வடக்கு மாகாணமும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரிக்காக கொய்கா (KOICA) திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டட வசதிகளுக்காக ஆளுநர் நன்றியைத் தெரிவித்தார்.

தற்போதைய தேவைகளுக்கேற்ப தொழில்நுட்ப உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் கட்டட மேம்பாட்டு தேவைகளைவும் அவர் சுட்டிக்காட்டினார். கொய்கா திட்டம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலும் இவற்றை கவனத்தில் கொள்ளுவதாக தூதுவர் உறுதியளித்தார்.

கொரியா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகளவில் முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டதோடு, வடக்கு மாகாண இளையோருக்கான தொழில்துறை வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதற்கான முதலீடுகளை ஊக்குவிக்குமாறு அவர் கோரினார். மேலும், கொரிய மொழிப் பயிற்சி மையம் அல்லது மொழிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதற்கான உதவியையும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பச்சை வீட்டு (Greenhouse) விவசாயம் மற்றும் நுண்ணறிவு பாசன முறைகள் (Smart Irrigation) பற்றியும் ஆளுநர் கூறி, வடக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து இத்திட்டங்களைப் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பைத் தூதுவரிடம் கோரினார்.

வடக்கு மாகாண விவசாயிகள் கடின உழைப்பாளர்களாக இருந்தாலும், பாரம்பரிய முறைகளால் உற்பத்தி செலவு அதிகரித்து விளைச்சல் குறைந்து வருவதாக அவர் எடுத்துக்காட்டினார்.

இத்திட்டங்கள் அறிமுகமானால் குறைந்த செலவில் அதிக உற்பத்தி பெற முடியும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதனைத் தூதுவர் சாதகமாக ஆராய்வதாகத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

IMG-20251117-WA0066.jpg

IMG-20251117-WA0068__1_.jpg

IMG-20251117-WA0065.jpg

https://www.virakesari.lk/article/230585

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று யாருக்காவது தெரியுமா? கழிவிலிருந்து உயிர்வாயு (Biogas) எனப்படும் மீதேன் வாயுவை உற்பத்தியாக்கி, அதன் மூலம் நீராவி உருவாக்கி மின்சாரமா?

மீதேன் வாயு, காபனீரொட்சைட்டை விட 6 மடங்கு மோசமான ஒரு பச்சை வீட்டு விளைவு வாயு. இதனால் சூழல் மாசடைதல் மோசமாகாதா?

  • கருத்துக்கள உறவுகள்

கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது பற்றிய விளக்கம் இந்திய தமிழ் படங்களில் வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

இந்த கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று யாருக்காவது தெரியுமா? கழிவிலிருந்து உயிர்வாயு (Biogas) எனப்படும் மீதேன் வாயுவை உற்பத்தியாக்கி, அதன் மூலம் நீராவி உருவாக்கி மின்சாரமா?

மீதேன் வாயு, காபனீரொட்சைட்டை விட 6 மடங்கு மோசமான ஒரு பச்சை வீட்டு விளைவு வாயு. இதனால் சூழல் மாசடைதல் மோசமாகாதா?

கழிவுகளை எரிப்பதன் மூலம் நீராவி உடற்பத்தியாக்கி அதன் மூலம் செய்வார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Thumpalayan said:

கழிவுகளை எரிப்பதன் மூலம் நீராவி உடற்பத்தியாக்கி அதன் மூலம் செய்வார்கள் என நினைக்கிறேன்.

ஓம் கழிவுகளை எரித்து நீராவி ஆற்றல் மூலம் மின்சாரம் பெறலாம் என்று சொல்லபடுகின்றது.

பிரச்சனை கழிவை எரிப்பதன் மூலம் வருகின்ற மீதேன் வாயு CO₂ வை விட மோசமானது தானே... அப்படி இருக்க நிலகரி மின்சாரத்தையே குறைக்க வேண்டும் என்று விட்டு...

இலங்கை மன்னாரில் காற்றாலை மின்சாரமே சுற்றாடலை மாசுபடுத் திவிடும் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் கழிவுகளை எரித்து நீராவி ஆற்றல் மூலம் மின்சாரம் பெறலாம் என்று சொல்லபடுகின்றது.

பிரச்சனை கழிவை எரிப்பதன் மூலம் வருகின்ற மீதேன் வாயு CO₂ வை விட மோசமானது தானே... அப்படி இருக்க நிலகரி மின்சாரத்தையே குறைக்க வேண்டும் என்று விட்டு...

இலங்கை மன்னாரில் காற்றாலை மின்சாரமே சுற்றாடலை மாசுபடுத் திவிடும் என்கிறார்கள்.

இதே முறையில் சிங்கப்பூரில் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். சிறிய நாடான சிங்கப்பூரில் land fill முறை முடியாதது. பின்னர் வரும் சாம்பலை பாவித்து சிறிய தீவுகளை உருவாக்குகிறார்கள். சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுக்களை வடிகட்டி அகற்ற முடியும் என நினைக்கிறேன். வடமாகாணத்துக்கு ஏற்ற முறை, ஆனால் எரிப்பதற்கு போதுமான அளவு திண்மக் கழிவுகள் இருக்கிறதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Thumpalayan said:

இதே முறையில் சிங்கப்பூரில் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். சிறிய நாடான சிங்கப்பூரில் land fill முறை முடியாதது. பின்னர் வரும் சாம்பலை பாவித்து சிறிய தீவுகளை உருவாக்குகிறார்கள். சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுக்களை வடிகட்டி அகற்ற முடியும் என நினைக்கிறேன். வடமாகாணத்துக்கு ஏற்ற முறை, ஆனால் எரிப்பதற்கு போதுமான அளவு திண்மக் கழிவுகள் இருக்கிறதோ தெரியவில்லை

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Thumpalayan said:

ஆனால் எரிப்பதற்கு போதுமான அளவு திண்மக் கழிவுகள் இருக்கிறதோ தெரியவில்லை.

மாநகரசபையை அண்டிய பகுதிகளிலேயே கழிவுத் திண்மங்களை சேகரிக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் சேகரித்தால் முடியும் என எண்ணுகிறேன்.

கிராமப் புறங்களில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் மக்கள் பெருந் தொகையான கழிவுகளை கொட்டுகிறார்கள்.

அதிலும் சுகாதாரத் துறையினர் வருகிறார்கள் என்றால் இன்னும் கூடுதலாக கொட்டுவார்கள்.

சுகாதாரத் துறையினரின் கெடுபிடிகளால் எல்லோருமே எரிக்கிறார்கள்.

கிராமங்களில் மக்களின் கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டும் சுகாதார துறையினர் மாநகர சபையில் வாய்க்கால்களில் தேங்கிக் கிடக்கும் துர்மணம் வீசும் கழிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

மாநகரசபையை அண்டிய பகுதிகளிலேயே கழிவுத் திண்மங்களை சேகரிக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் சேகரித்தால் முடியும் என எண்ணுகிறேன்.

கிராமப் புறங்களில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் மக்கள் பெருந் தொகையான கழிவுகளை கொட்டுகிறார்கள்.

அதிலும் சுகாதாரத் துறையினர் வருகிறார்கள் என்றால் இன்னும் கூடுதலாக கொட்டுவார்கள்.

சுகாதாரத் துறையினரின் கெடுபிடிகளால் எல்லோருமே எரிக்கிறார்கள்.

கிராமங்களில் மக்களின் கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டும் சுகாதார துறையினர் மாநகர சபையில் வாய்க்கால்களில் தேங்கிக் கிடக்கும் துர்மணம் வீசும் கழிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

சுயநலம் மிக்க எம்மவர்கள்தான் பிரச்சனை. அதைவிட குப்பை அள்ளுவதற்கு உரிய வாகனங்களோ, குப்பைத் தொட்டிகளோ இல்லை. சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் இல்லை. பருத்தித்துறையில் நகரசபை தற்போது பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குப்பைகளின் முக்கியத்துவம் சீனாக்காரனுக்கு நன்றாகவே தெரியும். அதே போல் ஜப்பானியர்களுக்கும் தெரியும். அதுமட்டுமல்ல ஜேர்மன்காரனுக்கும் குப்பையின் முக்கியத்துவம் நன்றாக தெரியும்.

வீதிகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீசாத வரைக்கும் குப்பையும் உபயோகரமான பொருள் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.