Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எப்படி தோற்றது?

சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள்.

இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிரியன் ........! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா எப்படி தோற்றது?

சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள்.

இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?

நான் நினைக்கிறேன் புதிய கட்டுப்பாடுகள்/விதிகளின்படி அவ்வாறு நடைபெறுகிறது போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

நன்றி பிரியன் ........! 🙂

7 hours ago, ஏராளன் said:

நான் நினைக்கிறேன் புதிய கட்டுப்பாடுகள்/விதிகளின்படி அவ்வாறு நடைபெறுகிறது போல.

இப்போதும் இது பெரிய அதிசயமாக உள்ளது.

@வீரப் பையன்26 @கந்தப்பு

இப்போதும் இது பெரிய அதிசயமாக உள்ளது.

இதுபற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ஆட்டமிழக்க , புதிதாக இன்னுமொருவர் விளையாடலாம். அதாவது ஒரு அணி சார்பாக அதிக பட்சம் 3 பேரே துடுப்பாட முடியும். 2 வது வீரரும் ஆட்டமிழந்தால் அந்த அணியின் ஆட்டம் முடிவடையும். இது பலகாலமாக நடைபெறும் விதிகளில் ஒன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கந்தப்பு said:

சூப்பர் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ஆட்டமிழக்க , புதிதாக இன்னுமொருவர் விளையாடலாம். அதாவது ஒரு அணி சார்பாக அதிக பட்சம் 3 பேரே துடுப்பாட முடியும். 2 வது வீரரும் ஆட்டமிழந்தால் அந்த அணியின் ஆட்டம் முடிவடையும். இது பலகாலமாக நடைபெறும் விதிகளில் ஒன்று.

ஓஓஓ நன்றி கந்தப்பு.

இதுவரை இப்படி ஒரு விதி இருப்பது தெரியாமல் போய்விட்டது.

எனக்கு மட்டுமல்ல மற்றைய உறவுகளுக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது.

இந்திய அணியில் ஒவ்வொரு பந்துக்கும் 6 6 6 என்று அடித்த வீரர்கள் இருக்க ஏன் இந்த வீரர்களை இறக்கி தோல்வியை தாங்களே தேடிக் கொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

2008 இல் நடைபெற்ற மேற்கிந்தியா நியூசிலாந்து போட்டியில் இரு அணிகளும் 155 ஓட்டங்கள் பெற்றன. சூப்பர் ஓவரில் மேற்கிந்தியா அணி 25 ஒட்டங்களை ஒரு விக்கெட் இழப்புடன் பெற்றது. நியூசிலாந்து அணி 4 வது பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தாலும் 2 விக்கேற்றுகள் இழந்ததினால் மிகுதி 2 பந்துகள் இருக்கமுன்பே நியூசிலாந்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. கீழே உள்ள இணைப்பில் சுப்பர் ஓவரினை commentary இல் பாருங்கள்

https://www.espncricinfo.com/series/west-indies-tour-of-new-zealand-2008-09-366700/new-zealand-vs-west-indies-1st-t20i-366707/ball-by-ball-commentary

  • கருத்துக்கள உறவுகள்

30 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்திய அணியில் ஒவ்வொரு பந்துக்கும் 6 6 6 என்று அடித்த வீரர்கள் இருக்க ஏன் இந்த வீரர்களை இறக்கி தோல்வியை தாங்களே தேடிக் கொண்டனர்.

இந்த போட்டி ஆசிய அணிகளுக்கு இடையிலான Rising Stars (உயரும் நட்சத்திரங்கள்) போட்டி. இதில் இந்தியா அணிதான் பலம் பொருந்திய அணி. இந்தியா அணியில் பிரபல ஐபிஎல் வீரர்கள் Jithesh Sharma,vaibav suriyavamsi, Arya உட்பட பலர் விளையாடினார்கள், இலங்கை அணியில் விஜயகாந்த் சிறப்பாக 2 போட்டிகளில் விளையாடியதால் தற்போது பாகிஸ்தானில் நடைபெறும் முக்கோண t20 இல் சேர்க்கப்பட்டார்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியும் சூப்பர் ஓவரில்தான் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஒட்டங்களை பெற்றது. வங்காளதேசம் அணி 9 விக்கெட் இழப்புடன் 125 பெற்று சமநிலை அடைந்தது. சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய வங்காளதேசம் அணி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளும் இழந்தது 6 ஓட்டங்களை பெற்றது. இன்னும் 3 பந்துகள் இருந்தும் 2 விக்கெட் இழப்பினால் வங்காளதேசத்தின் ஆட்டம் முடிவடைந்து விட்டது. பாகிஸ்தான் அணி 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 7 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

அதாவது இந்தியாவுக்கு ..பங்களதேசு அடித்த லூட்டியை ...பங்களாதேசு ...பாகிஸ்தானிடம் வாங்கிக் கட்டியது ...

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2025 at 13:48, ஈழப்பிரியன் said:

இந்தியா எப்படி தோற்றது?

சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள்.

இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?

ஆசிய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் சுப்பர் ஓவரில் இலங்கை அணி வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து மிக சொற்ப ரண்களில் ஆட்டமிழந்ததனால் இந்தியா இலகுவாக வென்றிருந்த்து.

அந்த சுப்பர் ஓவரில் வேறு ஒரு சுவாரசியமான நிகழ்வும் நடந்தது ஆனால் அதனால் கூட இலங்கை அணிக்கு எந்த பலனும் பெரிதாக ஏற்படவில்லை.🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.