Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

இந்த பெர்ணாந்து புள்ளேயை “தமிழ் வந்தேறி” என்று சிங்களவர்கள் திட்டுவதில்லையா? 13 ம் நூற்றாண்டு அதாவது 8 நூற்றாண்டுக்கு முன்னர் வந்த வரலாற்றை வைத்து அப்படி முத்திரை குத்தி சிலரை வந்தேறி என்று திட்டும் போது 100 - 200 வருடத்திக்கு முன்னர் சிங்களவராக மாறியவர்களை அப்படி திட்டுவதில் தவறில்லையே!

😂 முன்பே சொல்லி உள்ளேன்னே ஐலண்ட்…

அவர்கள் வட்டத்தை பெருப்பிக்கும் ஆட்கள்…

மலையாளி, தெலுங்கன், பாண்டியன், கரைநாட்டு தமிழன், மலைநாட்டு சிங்களவன், கரை நாட்டு சிங்களவன், தெலுங்கு பழங்குடியினன் எல்லோரையும் சிங்களவர் என்ற ஒற்றை வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் எனும் தமிழனா? கவலையே இல்லை…தேவநம்பிய திஸ்ச சிங்களவனே என வரலாற்றை புனைந்தாவது அவனையும் வட்டத்து@ இழுத்து விடுவார்கள்.

நாம்?

வட்டத்தை சிறுபித்து, அதற்குள் மேலும் பல வட்டங்களை கீறும் இனம்.

அண்மையில் தமிழகம் இருந்தும்…2000 ஆண்டுகளா ஏன் சிங்கள இனம் தொடர்ந்தும் இலங்கை தீவில் கோலோச்சுகிறது என்பதற்கான பதிலும் இதுவே.

  • Replies 159
  • Views 7.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயர

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்ற

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2025 at 10:43, goshan_che said:

சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும்.

7 hours ago, goshan_che said:

வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு இப்படி தரவுகளை தலைகீழாக வியாக்கியானம் செய்வது பெயருக்கு அழகல்ல.

என்னாது ஒருவாட்டி நீங்க சொல்வீங்க..... கருத்தைப்பார் நல்லாயிக்கீதா ......

சொன்னவனா.... அது யாருன்னு பாக்காதே..... அப்பிடீன்னு...

மறுக்காலை வந்து குந்திக்கின்னு ..... நீ ஏன் வாத்தின்னு பேரை வைச்சுக்கிட்டேனு கேக்கிறாப்பல...... என்னாய்யா இது ............

சாமி இதுக்கு எனக்கு விளக்கம் வேணாம்😂

சுமந்திரன் எந்தூண்டு பெரியாம் தலீவர்...... அவரு சும்மா அறிக்கை உடலாம்......... 😇நாம யாரு .......வரியக் கட்டி வாறீக 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

மலையாளி, தெலுங்கன், பாண்டியன், கரைநாட்டு தமிழன், மலைநாட்டு சிங்களவன், கரை நாட்டு சிங்களவன், தெலுங்கு பழங்குடியினன் எல்லோரையும் சிங்களவர் என்ற ஒற்றை வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் எனும் தமிழனா? கவலையே இல்லை…தேவநம்பிய திஸ்ச சிங்களவனே என வரலாற்றை புனைந்தாவது அவனையும் வட்டத்து@ இழுத்து விடுவார்கள்.

நாம்?

நாம்

தமிழ்நாட்டு சீமான் பெரும் கட்சிகள் மீது தெலுங்கர் என்று இனவெறுப்பை கக்கினால் நாமும் சேர்ந்து கக்குவோம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

என்னாது ஒருவாட்டி நீங்க சொல்வீங்க..... கருத்தைப்பார் நல்லாயிக்கீதா ......

சொன்னவனா.... அது யாருன்னு பாக்காதே..... அப்பிடீன்னு...

மறுக்காலை வந்து குந்திக்கின்னு ..... நீ ஏன் வாத்தின்னு பேரை வைச்சுக்கிட்டேனு கேக்கிறாப்பல...... என்னாய்யா இது ............

சாமி இதுக்கு எனக்கு விளக்கம் வேணாம்😂

சுமந்திரன் எந்தூண்டு பெரியாம் தலீவர்...... அவரு சும்மா அறிக்கை உடலாம்......... 😇நாம யாரு .......வரியக் கட்டி வாறீக 🤣

வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு தரவுகளுக்கு பிறழ்விளக்கம் கொடுப்பது அழகல்ல என்பதும்…

சுமன் சொன்னார் என்பதால் ஒரு கருத்தை எதிர்ப்பதும் …

ஒரே போன்ற விடயங்கள் அல்ல.

இதை நீங்களும் அறிந்தபடியால்தான் விளக்கம் வேண்டாம் என்கிறீர்கள் 😂.


  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்களை வட, கிழக்கில் குடியேறுமாறு வற்புறுத்தவில்லை சுயவிருப்பின்பேரில் வருவோரை வரவேற்கத்தயார் என்றே கூறினோம்; எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்

21 Dec, 2025 | 02:40 PM

image

(நா.தனுஜா)

மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா" சூறாவளியை அடுத்து உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயும், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும், இன்னமும் முழுமையாக மதிப்பிடப்படாத பெருந்தொகை சொத்துக்கள் சேதமடைந்தும் நாடு பேரழிவுக்கு முகங்கொடுத்துள்ளது.

குறிப்பாக மலையக மக்கள் கடும் எதிர்கொண்டிருக்கும் பின்னணியில், மலையகத் தமிழர், மலையக மண்ணில் தான் வாழவேண்டும் என நானும் விரும்புகிறேன்.

ஆனால் பாதுகாப்பான காணி உரிமையை வழங்குவதற்கு மறுத்தால், எமது மக்கள் மலை மண்சரிவில் சிக்குண்டு தொடர்ச்சியாகப் பலியாவதா? எனக் கேள்வி எழுப்பியிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், எனவே மாற்றுயோசனையாக வட, கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர்வினால்

வெற்றிடங்களாகி காடாகிக்கொண்டிருக்கும் காணிகளை, அவற்றின் உரிமையாளர்கள் மனமுவந்து வழங்குவார்களாயின், அங்குசென்று குடியேறி உழைத்து வாழ விரும்புகிறீர்களா என நான் சந்தித்த மக்களிடம் கேட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் கண்டிக்கும் கம்பளைக்கும் விஜயம் மேற்கொண்டபோது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம் எனவும், தற்போது மனோகணேசனும் மலையக மக்களும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அம்மக்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், மலையகம் எமது தாயகமாகும். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாரில்லை. அதனால் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியை வழங்கி, அந்த மக்கள் அங்கு வாழ்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அதற்குப் பதலளிக்கும் வகையில் கருத்துரைத்த இலங்கைத் சுமந்திரன், மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என விளக்கமளித்தார்.

அதேபோன்று புலம்பெயர் தமிழர்கள் சிலர் அவர்களது காணிகளை வழங்குவதற்கான விருப்பத்தை தம்மிடம் வெளிப்படுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், எனவே சுயவிருப்பின்பேரில் வட, கிழக்கில் குடியேற விரும்பும் மலையக மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்குவதற்கும், அவர்களது விவசாயம், பயிர்ச்செய்கை உள்ளிட்ட அவர்களது வாழ்வாதாரத்துக்கு அவசியமான அரச காணகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/234000

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களை வடகிழக்கை விட்டு புலிகள் அனுப்பியது இன சுத்திகரிப்பு என்று சொல்லியவர் தற்போது அவர்களை மீள் குடியேற அழைப்பு விடலாமே ? புயலால் அவர்களும் பாதிக்க பட்டு உள்ளார்கள் இங்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதுபவர்கள் எங்கு போனார்கள் ?

இங்கு இதய சுத்தியுடன் கருத்துக்கள் வருவதில்லை முஸ்லிம் ஆதரவாளர் போன்று நடிப்பவர்களுக்கு குழம்பிய குட்டையை மேலும் மேலும் குழப்புவதே நோக்கம் அன்றி வேறொன்றும் இல்லை .

தற்போதைய நிலையில் பலபக்கமும் அடிவாங்கிய அரசியல்வாதி சுமத்திரன் முஸ்லிம்களுக்கு ஆதரவாய் இந்த நேரம் அறிக்கை விட்டு பார்க்கட்டுமே பார்க்கலாம் .

தனது சுயநல அரசியலுக்காக சுமத்திரன் பிச்சைகாரனை விட கேவலமாய் நடந்து கொள்ள கூடியவர் நடந்து கொள்பவர் .

பசிக்கு யாசகம் பெறுபவர்களை கூட அனுதாபம் காட்டலாம் சுமத்திரன் போன்றவர்கள் திருட்டு யாசகம் பெறுபவர்களில் ஒருத்தர் .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

முஸ்லிம்களை வடகிழக்கை விட்டு புலிகள் அனுப்பியது இன சுத்திகரிப்பு என்று சொல்லியவர் தற்போது அவர்களை மீள் குடியேற அழைப்பு விடலாமே ? புயலால் அவர்களும் பாதிக்க பட்டு உள்ளார்கள் இங்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதுபவர்கள் எங்கு போனார்கள் ?

பெருமாள்... ஒரு கருத்தில் நின்று பேசலாமே.

வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை தேசிய தலைவர் காலத்திலேயே அவர்களை மீள வந்து குடியிருக்கும் செயல்பாடுகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்தாயிற்றே. இனி புதிதாக ஒரு அறிக்கை விட நீங்களோ, நானோ யார்?

அது தவிர ஓரளவுக்கு விருப்பமும், ஆர்வமும் கொண்ட முஸ்லீம் மக்கள் மீளவும் வடக்கில் வந்து தமது வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள் தானே?

வினயமாக கேட்கிறேன், இது உண்மையில் சுமந்திரன் சொன்னார் என்பதற்காக இப்படி 6, 7 பக்கம் கடந்து இந்த திரி ஓடுகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

பெருமாள்... ஒரு கருத்தில் நின்று பேசலாமே.

வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை தேசிய தலைவர் காலத்திலேயே அவர்களை மீள வந்து குடியிருக்கும் செயல்பாடுகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்தாயிற்றே. இனி புதிதாக ஒரு அறிக்கை விட நீங்களோ, நானோ யார்?

முஸ்லிம்களை வெளியேற்றியது இன சுத்திகரிப்பு என்றவரின் தற்போதைய அமைதி பற்றிதான் சுட்டிகாட்டபட்டது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Sasi_varnam said:

வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை தேசிய தலைவர் காலத்திலேயே அவர்களை மீள வந்து குடியிருக்கும் செயல்பாடுகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்தாயிற்றே. இனி புதிதாக ஒரு அறிக்கை விட நீங்களோ, நானோ யார்?

வெளியேற்றம் பற்றி தலைவர் அறிக்கை விட்ட பின்னரும்.... முஸ்லீம்களின் வெளியேற்றம் இன சுத்திகரிப்பு என சமாந்திர சுமந்திரனார் அறிக்கை விட்டதெல்லாம் கண்களுக்கு தெரியவில்லையோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் என்பவர் கபட வேட தாரி அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.