Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்

26 Dec, 2025 | 01:19 PM

image

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதிகளில் நேற்று (25) வீசிய “கிறிஸ்மஸ் புயல்” மற்றும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தினத்தன்று எழுந்ததால் “கிறிஸ்மஸ் புயல்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது. 

அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை மற்றும் கடும் காற்று, பனிப்பொழிவுக்கு சாத்தியமிருப்பதாக அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. 

குறிப்பாக, தெற்கு கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் கனமழையும் மேற்கு மற்றும் வடக்கு கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, கிறிஸ்மஸ் புயல் கடுமையாக வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/234467

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ‘டெவின்’ குளிர்கால புயல் ; ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து

27 Dec, 2025 | 10:56 AM

image

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ‘டெவின்’ (Devin) குளிர்கால புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெள்ளிக்கிழமை (26)  அமெரிக்காவிலிருந்து மற்றும் அமெரிக்கா வழியாக இயக்கப்பட வேண்டிய 1,581 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 6,883 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. 

இதனிடையே, அமெரிக்காவில் ‘டெவின்’ குளிர்கால புயல் காரணமாக “ பயண நிலைமைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் தாமதம் மற்றும் ரத்து குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, கலிபோர்னியாவில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் புயல் அபாயம் நிலவுவதுடன், 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகும் அதிகபட்ச பனிப்பொழிவாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/234518

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் உங்கள் இடம் எப்படி?

சுகமாக இருக்கிறீர்களா?

எமதுகரை பனியால் மூழ்கியுள்ளது.

அதே மாதிரி உங்கள்கரையை வழிந்தோடும் சேறுகளை அள்ளி எறிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை.

நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை குளிர்காலப் புயல் தாக்கியதைத் தொடர்ந்து, கடுமையான இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் 4.3 அங்குலம் (11 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவசரகால நிலை

ஜனவரி, 2022க்குப் பிறகு இதுவே அதிகபட்சமான பனிப்பொழிவு என அந்நாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை | New York Blanketed In Snow United States

அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் 7.5 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது.

புயலுக்கு முன்னதாக, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்திந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதன் காரணமாக, சுமார் 1500இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் பயணிகள் கடும் சிரமத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். 

Tamilwin
No image preview

2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை -...

நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அ...

இப்போது நியூயோர்க்கில் நிற்கிறேன்.

8 அங்குல பனிப்பொழிவு என்றார்கள்.

எமது இடத்தில் 5" அடித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏதாவது அவசரகால முன் ஆயத்தங்கள் செய்துள்ளீர்களா? அமெரிக்காவில் வாழும் கள உறவுகள் கவனமாக இருங்கள், உங்களிடையே ஒரு தொடர்பினை பேணினால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன் நிலமை மோசமாகாது என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன் உங்கள் இடம் எப்படி?

சுகமாக இருக்கிறீர்களா?

எமதுகரை பனியால் மூழ்கியுள்ளது.

அதே மாதிரி உங்கள்கரையை வழிந்தோடும் சேறுகளை அள்ளி எறிகிறார்கள்.

அந்த வாழை மரங்களும் முறியாமல் நிக்குதோ என்று கேட்டுச் சொல்லவும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

@ரசோதரன் உங்கள் இடம் எப்படி?சுகமாக இருக்கிறீர்களா?

எமதுகரை பனியால் மூழ்கியுள்ளது.அதே மாதிரி உங்கள்கரையை வழிந்தோடும் சேறுகளை அள்ளி எறிகிறார்கள்.

புதனும், வெள்ளியும் நல்ல மழை அண்ணா. இன்றும், நாளையும் வெயில். பின்னர் மீண்டும் மழை வருகின்றது. மலை அடிவார வீடுகளுக்கு ஆபத்தாகும் நிலை அடுத்த வாரம்.

பொதுவாக இவ்வளவு மழை இந்த லாஸ் ஏஞ்சலீஸ் பாலைநிலத்தில் பெய்வதில்லை. மழை கொண்டு வரும் யாரோ ஒரு நல்லவர் இங்கே வந்து தங்கியிருக்கின்றதாக தகவலும் இல்லை.................. அமெரிக்க அதிபர் இந்தப் பக்கம் வருவதேயில்லை........... அது தான் அடைமழைக்கு காரணமோ தெரியவில்லை...................🤣.

20 minutes ago, alvayan said:

அந்த வாழை மரங்களும் முறியாமல் நிக்குதோ என்று கேட்டுச் சொல்லவும்

🤣.............

அடிக்கிற மழையில் ஆடுகள் குழை தேட.............. நீங்கள் வாழையை தேடுகின்றீர்கள்............😜.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

ஏதாவது அவசரகால முன் ஆயத்தங்கள் செய்துள்ளீர்களா? அமெரிக்காவில் வாழும் கள உறவுகள் கவனமாக இருங்கள், உங்களிடையே ஒரு தொடர்பினை பேணினால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன் நிலமை மோசமாகாது என நம்புகிறேன்.

நான் கிழக்கில் அத்திலாந்திக் சமுத்திரத்தில்

ரசோதரன் மேற்கில் பசுபிக் சமுத்திரத்தில்

3000 மைல்கள்

விமான பயணம் 6 மணித்தியாலம்.

இரண்டு இடங்களுக்கும் 3 மணிநேர வித்தியாசம்.

@Maruthankerny இருக்குமிடம் குளிர் தொடங்கினால் முடியும் வரை அடிக் கணக்காக பனி கொட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நான் கிழக்கில் அத்திலாந்திக் சமுத்திரத்தில்

ரசோதரன் மேற்கில் பசுபிக் சமுத்திரத்தில்

3000 மைல்கள்

விமான பயணம் 6 மணித்தியாலம்.

இரண்டு இடங்களுக்கும் 3 மணிநேர வித்தியாசம்.

@Maruthankerny இருக்குமிடம் குளிர் தொடங்கினால் முடியும் வரை அடிக் கணக்காக பனி கொட்டும்.

அமெரிக்காவினை போல அவுஸ்ரேலியாவும் பெரிய நாடுதான் பூமியின் விளிம்பில் இருப்பதால் அது வரைபடத்தில் பார்ப்பதற்கு சிறிதாக தெரியும், சிட்னிக்கும் பேர்த்திற்குமிடையே 4 மணிநேர வித்தியாசம் காணப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, alvayan said:

அந்த வாழை மரங்களும் முறியாமல் நிக்குதோ என்று கேட்டுச் சொல்லவும்

குத்தியனுக்கு அழிவிலையும் வாழைமர எரிச்சல் சுடர் விட்டு எரியுது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

குத்தியனுக்கு அழிவிலையும் வாழைமர எரிச்சல் சுடர் விட்டு எரியுது.🤣

அழகான ஒரு கதையுடன் சேர்ந்த வாழைமரம் ...முறிந்திட்டால் ...பக்கத்து வீட்டுக்காரியின் ..பாசம் கெட்டுடுமேயென்ற ..பச்சாதாபம்தான்....

4 hours ago, ரசோதரன் said:

அடிக்கிற மழையில் ஆடுகள் குழை தேட.............. நீங்கள் வாழையை தேடுகின்றீர்கள்............😜.

பக்கத்து வீட்டுக்ககாரியின் சாபம் பட்டென்று ...பலிக்கக்கூடாது பாருங்கோ....அதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ; 1,500 விமான சேவைகள் இரத்து ; நியூயோர்க்கில் அவசரநிலை பிரகடனம்

28 Dec, 2025 | 04:53 PM

image

அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் குளிர்கால பனிப்புயலினால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நியூயோர்க் நகரில் சுமார் 4 அடி உயரத்துக்கு பனி பொழிந்துள்ளது. 

வெள்ளிக்கிழமை இரவு முதல் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்  தாமதமாகியுள்ளதாகவும் விமான கண்காணிப்பு நிறுவனம் ஃப்ளைட் அவேர் (FlightAware) தெரிவித்துள்ளது.

ஜோன் எப். கென்னடி, நியூவர்க் லிபர்டி, லாகார்டியா விமான நிலையங்கள் சமூக ஊடகங்களில் பனி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு, மேலும் விமான சேவை பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளன.

நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், எக்ஸ் தளத்தில், 

“நியூயோர்க் நகரமே, அந்த வெள்ளை பனி வருகிறது! எவ்வளவு பொழிந்தாலும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

நகர விதிகளில் உப்பு தெளிப்பான் வாகனங்கள் மற்றும் பனி அகற்றும் இயந்திரங்கள் முழு வீச்சில் செயல்படும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

2022-ம் ஆண்டு நியூயோர்க்  நகரில் கடைசியாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது சென்ட்ரல் பார்க் பகுதியில் 8 அடி உயரத்துக்கு பனி பொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கடும் குளிர் அலை அமெரிக்கா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென் பிரான்சிஸ்கோ மற்றும் ஆர்லாண்டோ நகரங்களிலும் போக்குவரத்து தாமதமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை நியூவர்க் விமான நிலையத்தில் பனி பொழிய ஆரம்பித்தது.

என்பிசி நியூஸ் தகவலின்படி, ஃப்ளோரிடா மாநில விமான நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.

இதற்கிடையே, யோசமைட்டி தேசிய பூங்கா அருகே உள்ள மாமத் மவுண்டன் பனிச்சறுக்கு ஓய்வு விடுதி பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், இரண்டு பனிச்சறுக்கு  பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை முதல் 5 அடி-க்கும் அதிகமான பனி பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரீனோ நகரத்திற்கு அருகிலுள்ள மவுண்ட் ரோஸ் ஸ்கீ ரிசார்ட் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்ட ஒரு பின்நாட்டு பனிச்சறுக்கு வீரரை உள்ளூர் அதிகாரிகள் உயிருடன் மீட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/234595

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூ யார்க் நகரில் உறைபனி - தாக்கத்தை உணர்த்தும் புகைப்படங்கள்

நியூயார்க், பனிப்புயல், பனிப்பொழிவு, போக்குவரத்து பாதிப்பு, அவசர நிலை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ப்ரூக்ளினில் குவிந்திருக்கும் பனியில் குழந்தைகள் சறுக்கி விளையாடுகின்றனர்.

கட்டுரை தகவல்

  • குவாசி ஜியாம்ஃபி அசிடூ

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவைச் சந்தித்துள்ளது.

நியூயார்க், பனிப்புயல், பனிப்பொழிவு, போக்குவரத்து பாதிப்பு, அவசர நிலை

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,சென்ட்ரல் பார்கில் குவிந்திருக்கும் பனியில் ஒருவர் சறுக்கி விளையாடுகிறார்.

நியூ யார்க் நகரின் சென்ட்ரல் பார்கில், 11 செமீ அளவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

நியூயார்க், பனிப்புயல், பனிப்பொழிவு, போக்குவரத்து பாதிப்பு, அவசர நிலை

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,நியூ யார்க் நகரின் ப்ரூக்ளினில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாகாணத்தின் மற்ற இடங்களில் 19 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை துறை தெரிவித்துள்ளது.

சாலைகளில் உறைந்து கிடக்கும் பனியில் ஆர்வத்துடன் சறுக்கி விளையாடச் செல்லும் குழந்தைகள்

பட மூலாதாரம்,Kena Betancur/Getty Images

படக்குறிப்பு,சாலைகளில் உறைந்து கிடக்கும் பனியில் ஆர்வத்துடன் சறுக்கி விளையாடச் செல்லும் குழந்தைகள்

பனிப்புயல் காரணமாக மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட கவுன்டிகளில் நியூ யார்க் ஆளுநர் கேத்தி ஹோசுல் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

நியூயார்க், பனிப்புயல், பனிப்பொழிவு, போக்குவரத்து பாதிப்பு, அவசர நிலை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பனியில் விளையாடிய மக்கள் பனி மனிதன் உருவத்தை உருவாக்கியுள்ளனர்.

சனிக்கிழமை, நியூ யார்க் பகுதியில் 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதையில் குவிந்திருக்கும் பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images

படக்குறிப்பு,பாதையில் குவிந்திருக்கும் பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானங்களை கண்காணிக்கும் இணையதளமான ஃப்ளைட் அவேரின்படி, நாடு முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை மூடியுள்ள பனிப்பொழிவு

பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images

படக்குறிப்பு,சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை மூடியுள்ள பனிப்பொழிவு

சனிக்கிழமை அன்று நியூ யார்கின் மத்தியப் பகுதியான சிராக்யூஸிலிருந்து தென் கிழக்கு பகுதியான லாங் ஐலான்ட் வரை 15 செமீ முதல் 25 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

உறைந்திருக்கும் பனியில் சறுக்கி விளையாடும் குழந்தைகள்

பட மூலாதாரம்,Spencer Platt/Getty Images

படக்குறிப்பு,உறைந்திருக்கும் பனியில் சறுக்கி விளையாடும் குழந்தைகள்

அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நியூ ஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நியூ யார்கின் சென்ட்ரல் பார்க்கில் பனியால் சூழப்பட்ட குட்டையில் பறவைகள்

பட மூலாதாரம்,TIMOTHY A. CLARY / AFP via Getty Images

படக்குறிப்பு,நியூ யார்கின் சென்ட்ரல் பார்க்கில் பனியால் சூழப்பட்ட குட்டையில் பறவைகள்

கனெக்டிகட்டில் உள்ள ஃபேர்ஃபீல்ட் கவுன்டியில் 22 செமீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

நியூயார்க், பனிப்புயல், பனிப்பொழிவு, போக்குவரத்து பாதிப்பு, அவசர நிலை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பனிப்போர்வை போர்த்தியிருக்கும் நியூ யார்கின் சென்ட்ரல் பார்க்

பனிப்புயல் தற்போது குறைந்திருந்தாலும் வெப்ப நிலை உறைய வைக்கும் நிலையிலும் சாலைகள் ஆபத்தான நிலையிலும் உள்ளன.

பனியால் சூழப்பட்ட சென்ட்ரல் பூங்காவில் செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி

பட மூலாதாரம்,TIMOTHY A. CLARY / AFP via Getty Images

படக்குறிப்பு,பனியால் சூழப்பட்ட சென்ட்ரல் பூங்காவில் செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி

வீடற்றவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதற்கான கோட் ப்ளூ நியூ யார்க் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க், பனிப்புயல், பனிப்பொழிவு, போக்குவரத்து பாதிப்பு, அவசர நிலை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பனி போர்த்திய சாலையில் நடந்து செல்லும் மக்கள்.

நியூயார்க், பனிப்புயல், பனிப்பொழிவு, போக்குவரத்து பாதிப்பு, அவசர நிலை

பட மூலாதாரம்,Getty Images

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62vp1g5ky3o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.