Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

சரியாப் பார்த்திருக்கிறீர்கள். இங்கிலாந்துக் காரர், வேகப் பந்துக்கு சுழட்டுற ஆக்கள். ஆக இடப்பக்கம் அடிக்க முடியாத படி பண்ணிவிட்ட உடன, அவர்களால் அடிக்க முடியவில்லை. அவர்கள் அடித்தது ஆறே ஆறு. மேற்கிந்தியா 13 தரம் ஆறடித்திருந்தார்கள்.

இன்றைய போட்டிகள் முதலாவது முழுமையாக பார்த்தேன், கடைசி போட்டி இரண்டாவது பகுதி பார்த்தேன், இரண்டும் மிக சிறந்த போட்டிகள்.

  • Replies 1.1k
  • Views 34.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

நானும் இலங்கை அணியினையே தெரிவு செய்துள்ளதாக நினைவுள்ளது, சுப்பர் 8 இல் இலங்கை செல்வதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் செல்ல வேண்டும் எனும் விருப்பம் இருந்தது.

இலங்கை சுப்பர் 8 போகாமல் விட்டால் இலங்கை திருநாட்டிற்கு காசு மிச்சமாகும்.

என்னங்க சொல்றீங்க. இலங்கையைத் தெரிவு செய்து போட்டு, ஆப்கான் போக வேணும் என்றால். இது என்ன மாதிரியான கணக்கு. இந்த தர்க்கம்தான் எனக்குப் புரியுதில்லை.

கனபேர் இங்கே அப்பிடித்தான். இந்தியாவையும் இலங்கையையும் தெரிவு செய்து போட்டு, அவர்கள் தோக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறது. எப்பிடி. அப்ப ஏன் மற்ற அணியைத் தெரிவு செய்யேல.

இலங்கை வென்றால் எனக்கு புள்ளி கிடைக்கும் (எனக்கும் மட்டும் இலாபம்), மாறாக இலங்கை தோத்தால் கிரிக்கெட்டிற்கு இலாபம் (அனைவருக்கும் இலாபம்).

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

இலங்கை வென்றால் எனக்கு புள்ளி கிடைக்கும் (எனக்கும் மட்டும் இலாபம்), மாறாக இலங்கை தோத்தால் கிரிக்கெட்டிற்கு இலாபம் (அனைவருக்கும் இலாபம்).

🤣

ம்ம்ம்.... புள்ளி கிடைக்கும் என்டதுக்காக......வேணாம் இதொட விட்டுடுவம். 😉

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

நானும் இலங்கை அணியினையே தெரிவு செய்துள்ளதாக நினைவுள்ளது, சுப்பர் 8 இல் இலங்கை செல்வதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் செல்ல வேண்டும் எனும் விருப்பம் இருந்தது.

இலங்கை சுப்பர் 8 போகாமல் விட்டால் இலங்கை திருநாட்டிற்கு காசு மிச்சமாகும்.

என‌க்கும் அப்கானிஸ்தான் அணிய‌ பிடிக்கும்

போட்டி என்று வ‌ரும் போது புள்ளி முக்கிய‌ம்

தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளின் அன்மைக் கால‌ விளையாட்டு அமோக‌ம் அத‌னால் தான் அவ‌ர்க‌ளை தெரிவு செய்தேன்

அப்கானிஸ்தான் அணி இப்போது உள்ள‌ இல‌ங்கை அணிய‌ விட‌ ந‌ல்ல‌ அணி இது நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌.....................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

இன்றைய போட்டிகள் முதலாவது முழுமையாக பார்த்தேன், கடைசி போட்டி இரண்டாவது பகுதி பார்த்தேன், இரண்டும் மிக சிறந்த போட்டிகள்.

எனக்கும் போட்டி பார்க்கிறது குதிரைக் கொம்பாக் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

ம்ம்ம்.... புள்ளி கிடைக்கும் என்டதுக்காக......வேணாம் இதொட விட்டுடுவம். 😉

இந்த யாழ்கள போட்டி ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புவதனை வழங்குகின்றது, சிலர் தாம் தோற்ககூடாது (தமது தெரிவு) என நினைக்கிறார்கள் (ஈகோ), சிலர் இதனை ஒரு விளையாட்டாக பார்க்கிறார்கள், சிலர் இதனை நல்ல மகிழ்வான பொழுதுபோக்காக பார்க்கிறார்கள், எல்லோருக்கும் அவர்கள் விரும்பினது கிடைக்கிறது.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில ஒரு பாதை இருக்கணும். என்ன நடந்தாலும் அது மாறவே கூடாது. விளையாட்டானாலும் சரி. புள்ளி கிடைத்தாலும் சரி. போறது ஒரு பாதை.

நான் கற்ற பாடம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ரஹ்மனுல்லா குர்பாஸினின் மின்னல்வேக 84 (42) ஓட்டங்களின் உதவியுடன் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமப்படுத்தியது. லுங்கி என்கிடியும் கேஷவ் மஹராஜும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில், விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற முதலாவது சுப்பர் ஓவர் முடிவிலும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படவில்லை.

அடுத்த சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றது. 24 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 19 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி இரண்டாவது சுப்பர் ஓவர் முடிவில் வெற்றியீட்டியது

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடியான 45 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஜொஷ் இங்லிஸின் மின்னல்வேக 37 (17 பந்துகள்) ஓட்டங்கள், மற் றென்ஷோ 37 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணியில் ஜோர்ஜ் டொக்ரல் 41 (29 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாகப் பவிலியனுக்குத் திரும்பியதால் 16.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. நாதன் எலிஸும் அடம் ஸாம்பாவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

முடிவு: அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் வேகமாக ஓட்டங்களைப் பெற்றதாலும், ஷேர்ஃபான் ரதர்போர்ட்டின் புயல்வேக 76 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டரின் மின்னல்வேக 33 (17 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் வேகமாக அடித்தாட முயன்று ஆட்டமிழந்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டதாலும், பின்னணி வீரர்கள் குறைவான ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்ததாலும், சாம் கரனின் ஆட்டமிழக்காது எடுத்த 43 (30 பந்துகளில்) ஓட்டங்களுடன் 19 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5140.jpeg

இன்றைய முதல்வராக @வீரப் பையன்26 கதிரையில் வீற்றிருக்கின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

நானும் இலங்கை அணியினையே தெரிவு செய்துள்ளதாக நினைவுள்ளது, சுப்பர் 8 இல் இலங்கை செல்வதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் செல்ல வேண்டும் எனும் விருப்பம் இருந்தது.

இலங்கை சுப்பர் 8 போகாமல் விட்டால் இலங்கை திருநாட்டிற்கு காசு மிச்சமாகும்.

சொந்த‌ நாட்டில் இதுவ‌ரை ச‌ர்வ‌தேச‌ போட்டி ந‌ட‌ந்த‌து இல்லை

அதிக‌மான‌ கிரிக்கேட் மைதான‌ங்க‌ள் இல்லை

பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளும் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளும் சேர்ந்து பாக்கிஸ்தானில் சின்ன‌ தொட‌ரில் விளையாடுவின‌ம்.............அப்கானிஸ்தானின் கிரிக்கேட் வ‌ள‌ர்ச்சி இப்ப‌டியே தான் இருக்கு...................

ஏதோ ஒரு நாள் ஆசியா கோப்பை தூக்குவின‌ம் உல‌க‌ கோப்பை இவையால் இப்போது தூக்க‌ முடியாது அதுக்கு நீண்ட‌ தூர‌ம் ப‌ய‌ணிக்க‌னும்................................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

இந்த யாழ்கள போட்டி ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புவதனை வழங்குகின்றது, சிலர் தாம் தோற்ககூடாது (தமது தெரிவு) என நினைக்கிறார்கள் (ஈகோ), சிலர் இதனை ஒரு விளையாட்டாக பார்க்கிறார்கள், சிலர் இதனை நல்ல மகிழ்வான பொழுதுபோக்காக பார்க்கிறார்கள், எல்லோருக்கும் அவர்கள் விரும்பினது கிடைக்கிறது.

உண்மைதான். எனக்கு அந்த முரண்தான் அசெளகரியமா இருக்கு. வேறொன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

உண்மைதான். எனக்கு அந்த முரண்தான் அசெளகரியமா இருக்கு. வேறொன்றும் இல்லை.

உங்களில் தப்பேதும் இல்லையே! அதனால் எதனைப்பற்றியும் சிந்திக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு நேபாள‌ம் இத்தாலிய‌ வென்றால் ப‌ரிட்சை ந‌ல்ல‌ மாதிரி முடியும்

இத்தாலி சிறு நெருக்க‌டி கொடுப்பின‌ம்..............

ம‌ற்ற‌ இர‌ண்டு விளையாட்டும் வெறி சிம்பில்...............................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

இலங்கை வென்றால் எனக்கு புள்ளி கிடைக்கும் (எனக்கும் மட்டும் இலாபம்), மாறாக இலங்கை தோத்தால் கிரிக்கெட்டிற்கு இலாபம் (அனைவருக்கும் இலாபம்).

🤣

என‌க்கு இங்லாந் உள்ளூர் கில‌ப் போட்டிக‌ள் பிடிக்கும்

இங்லாந் தேசிய‌ அணியையும் பிடிக்கும்

இங்லாந் அவுஸ்ரேலியாவிட‌ம் வேண்டி க‌ட்டின‌தை யாரும் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம்..............

அது தான் வெஸ்சின்டீஸ் அணிய‌ தெரிவு செய்தேன்.....................போட்டிகளை பார்த்த‌ மாதிரியும் இருக்கும் பொழுது போன‌ மாதிரியும் இருக்கும் யாழில் வ‌ந்து குப்பை கொட்ட‌வும் பிடிக்கும்😄😁.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வியாழன் 12 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL எதிர் OMA

22 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும்  ஒரே ஒருவர் மாத்திரம் ஓமான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஓமான்

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? man-shrugging_1f937-200d-2642-fe0f.png

backhand-index-pointing-down_1f447.png

17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

ITA எதிர் NEP

06 பேர் இத்தாலி அணி வெல்லும் எனவும் 17 பேர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

இத்தாலி

  • சுவைப்பிரியன்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • கோஷான் சே

  • ரசோதரன்

  • நிலாமதி

நேபாளம்

  • செம்பாட்டான்

  • ஏராளன்

  • வசீ

  • புலவர்

  • அல்வாயன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • அஹஸ்தியன்

  • கந்தப்பு

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • பிரபா

  • நந்தன்

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? bear_1f43b.webp

backhand-index-pointing-down_1f447.png

18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND எதிர் NAM

22 பேர் இந்தியா அணி வெல்வதாகவும்  ஒரே ஒருவர் மாத்திரம் நமீபியா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நமீபியா

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? duck_1f986.webp

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, செம்பாட்டான் said:

வாழ்க்கையில ஒரு பாதை இருக்கணும். என்ன நடந்தாலும் அது மாறவே கூடாது. விளையாட்டானாலும் சரி. புள்ளி கிடைத்தாலும் சரி. போறது ஒரு பாதை.

நான் கற்ற பாடம்.

இதற்கு உடனேயே பதில் எழுத நினைத்துவிட்டு பின்னர் அது ஒருமுன் பின் வாதமாகிவிடும் என நினைத்து விட்டு விட்டேன்.

நாம் விரும்புவதுமாதிரி எனக்கு நடக்கும் கொடுப்பினை எப்போதும் இருந்ததில்லை, அபூர்வமாக சிலருக்கு அவர்கள் நினைப்பது போல அமைந்து விடுகிறது.

அப்படி நடக்காத போது அதற்காக வருந்துவதும் இல்லை (எல்லாம் அவன் செயல் - விளையாட்டாக நகைசுவைக்காக🤣).

எனக்கென ஒரு பாதையெல்லாம் போடுகிற அளவிற்கு வசதியும் இல்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை கோப்பை தூக்காத‌ நியுசிலாந் அல்ல‌து தென் ஆபிரிக்கா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தூக்கினால் கூட‌ ம‌கிழ்ச்சி அடைவேன்

நான் யாழ்க்க‌ள‌ போட்டியில் ப‌ல‌ வாட்டி நியுசிலாந்தை தெரிவு செய்து ஏமாந்து விட்டேன்..................நியுசிலாந் எப்ப‌வும் ந‌ல்ல‌ அணி ஆனால் அவைக்கும் கோப்பைக்கு ஆகாது....................தென் ஆபிரிக்காவும் அதே நிலை தான்............................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நாளை வியாழன் 12 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL எதிர் OMA

22 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும்  ஒரே ஒருவர் மாத்திரம் ஓமான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஓமான்

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? man-shrugging_1f937-200d-2642-fe0f.png

backhand-index-pointing-down_1f447.png

17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

ITA எதிர் NEP

06 பேர் இத்தாலி அணி வெல்லும் எனவும் 17 பேர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

இத்தாலி

  • சுவைப்பிரியன்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • கோஷான் சே

  • ரசோதரன்

  • நிலாமதி

நேபாளம்

  • செம்பாட்டான்

  • ஏராளன்

  • வசீ

  • புலவர்

  • அல்வாயன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • அஹஸ்தியன்

  • கந்தப்பு

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • பிரபா

  • நந்தன்

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? bear_1f43b.webp

backhand-index-pointing-down_1f447.png

18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND எதிர் NAM

22 பேர் இந்தியா அணி வெல்வதாகவும்  ஒரே ஒருவர் மாத்திரம் நமீபியா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நமீபியா

  • நிலாமதி

இப்போட்டியில் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? duck_1f986.webp

போர‌ போக்கை பார்த்தால் கோசான்ட‌ ரெக்கோட்டை நிலாம‌தி அக்கா உடைப்பா போல் தெரியுது லொள்😄😁..............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

கனபேர் இங்கே அப்பிடித்தான். இந்தியாவையும் இலங்கையையும் தெரிவு செய்து போட்டு, அவர்கள் தோக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறது. எப்பிடி. அப்ப ஏன் மற்ற அணியைத் தெரிவு செய்யேல.

கணிப்பு வேறு விருப்பம் வேறு.

விருப்பபடி தேர்வு செய்தால் நான் இந்தியா, அவுஸ், இலங்கை சுப்பர் எட்டுக்கு கூட போகாது, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து பைனல் விளையாடும் எண்டுதான் எழுத வேண்டும் 😂.

1 hour ago, செம்பாட்டான் said:

வாழ்க்கையில ஒரு பாதை இருக்கணும். என்ன நடந்தாலும் அது மாறவே கூடாது. விளையாட்டானாலும் சரி. புள்ளி கிடைத்தாலும் சரி. போறது ஒரு பாதை.

நான் கற்ற பாடம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_cheநான் சொல்லுறேன் நிலாம‌தி அக்கா உங்க‌ட‌ ரெக்கோட்டை உடைப்பா ஹா ஹா😄😁.................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

உண்மைதான். எனக்கு அந்த முரண்தான் அசெளகரியமா இருக்கு. வேறொன்றும் இல்லை.

உண்மையில் இங்கே “விருப்பின்” அடிப்படையில் நீங்கள் தெரிவுகளை மேற்கொள்கிறீர்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது.

நான் முழுக்க முழுக்க ஒரு போட்டியில் எந்த அணி வெல்லும் என நான் நினைக்கிறேனோ அதை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

அந்த கணிப்பு தலைகரணமாக போவது வேறு விடயம் 😂.

மீதி ஆட்களும் இப்படித்தான் என்றே கருதினேன்.

40 minutes ago, வீரப் பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தால் கோசான்ட‌ ரெக்கோட்டை நிலாம‌தி அக்கா உடைப்பா போல் தெரியுது லொள்😄😁.............................

அக்காவுக்கும் எனக்கும் 4 புள்ளி வித்தியாசம். நாளைக்கு சமனாக வந்தாலும் அக்கா என்னை விட முன்னுக்கு பதில் போட்டதால் எனக்கு eviction நோட்டிஸ் தர முடியாது என நினைக்கிறேன்.

வாதவூரார் எண்ட வீட்டின் மீது ஒரு கண் வைப்பது போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

உண்மையில் இங்கே “விருப்பின்” அடிப்படையில் நீங்கள் தெரிவுகளை மேற்கொள்கிறீர்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது.

நான் முழுக்க முழுக்க ஒரு போட்டியில் எந்த அணி வெல்லும் என நான் நினைக்கிறேனோ அதை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

அந்த கணிப்பு தலைகரணமாக போவது வேறு விடயம் 😂.

மீதி ஆட்களும் இப்படித்தான் என்றே கருதினேன்.

அக்காவுக்கும் எனக்கும் 4 புள்ளி வித்தியாசம். நாளைக்கு சமனாக வந்தாலும் அக்கா என்னை விட முன்னுக்கு பதில் போட்டதால் எனக்கு eviction நோட்டிஸ் தர முடியாது என நினைக்கிறேன்.

வாதவூரார் எண்ட வீட்டின் மீது ஒரு கண் வைப்பது போல உள்ளது.

அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் சின்ன‌ அணிக‌ள் பெரிய‌ அணிக‌ளை மிர‌ட்டினவை

இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிய‌ அணிக‌ள் சின்ன‌ அணிக‌ளை சாப்பிட்டு ஏப்ப‌ம் விடுகின‌ம்.....................

நேபாள‌ம் ம‌ற்றும் ஸ்கொட்லாந் இந்த‌ இர‌ண்டு அணிக‌ளும் தான் அங்கினேக்க‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

உண்மையில் இங்கே “விருப்பின்” அடிப்படையில் நீங்கள் தெரிவுகளை மேற்கொள்கிறீர்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது.

நான் முழுக்க முழுக்க ஒரு போட்டியில் எந்த அணி வெல்லும் என நான் நினைக்கிறேனோ அதை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

அந்த கணிப்பு தலைகரணமாக போவது வேறு விடயம் 😂.

மீதி ஆட்களும் இப்படித்தான் என்றே கருதினேன்.

அக்காவுக்கும் எனக்கும் 4 புள்ளி வித்தியாசம். நாளைக்கு சமனாக வந்தாலும் அக்கா என்னை விட முன்னுக்கு பதில் போட்டதால் எனக்கு eviction நோட்டிஸ் தர முடியாது என நினைக்கிறேன்.

வாதவூரார் எண்ட வீட்டின் மீது ஒரு கண் வைப்பது போல உள்ளது.

நான் விருப்பின் அடிப்படையிலேயெ தெரிவு செய்வேன். புள்ளிக்காக, வேண்டா வெறுப்பா தெரிவு செய்துபோட்டு, குத்துதே குடையுதே என்று என்னால் இருக்க முடியாது. அது சரியும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, செம்பாட்டான் said:

நான் விருப்பின் அடிப்படையிலேயெ தெரிவு செய்வேன். புள்ளிக்காக, வேண்டா வெறுப்பா தெரிவு செய்துபோட்டு, குத்துதே குடையுதே என்று என்னால் இருக்க முடியாது. அது சரியும் அல்ல.

ம்ம்ம்…பறவைகள் பலவிதம்….

எனக்கு உலக கிண்ண கிரிகெட் போட்டியில் எந்த நாடு வெண்டாலும், கணிப்பு போட்டியில் நான் வெண்டாலும், புள்ளி எடுத்தாலும் - பொருட்டே இல்லை.

உண்மையில் இப்போ எந்த போட்டியில் யார் வெல்வார்கள் என கணித்தேன் என்பதே மறந்து விட்டது.

அதேபோல் கடைசியாக வரவேண்டும் எனவும் அறம்புறமா எழுதுவதில்லை. ஆனால் தெய்வாதீனமாக 😂😂😂 அப்படித்தான் அமைகிறது 😂.

தேர்தல் போட்டியில் கொஞ்சம் அதிக சிரத்தை எடுப்பேன். அதில் கிரிகெட்டை விட கொஞ்சம் அப்டேட் ஆக இருப்பதால் - ஆனால் அங்கும் யார் வெல்வார்கள் என கணிப்போரை மட்டுமே தேர்வேன். விருப்பின் அடிப்படையில் அல்ல.

தேர்தல் போட்டியில் பலர் அபிமான கட்சிக்கு அதிகம் கணிப்பை கொடுப்பதை கண்டுள்ளேன்.

உங்களை தவிர வேறுயாரும் கிரிகெட் போட்டியில் விருப்ப அடிப்படையில் தெரிகிறார்களா என அறிய ஆவல்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

நான் விருப்பின் அடிப்படையிலேயெ தெரிவு செய்வேன். புள்ளிக்காக, வேண்டா வெறுப்பா தெரிவு செய்துபோட்டு, குத்துதே குடையுதே என்று என்னால் இருக்க முடியாது. அது சரியும் அல்ல.

நானும் எனது விருப்பின் அடிப்படையில்தான் தெரிவுசெய்வேன் ...அவர்களின் திறமையை அப்புறம்தான் பார்ப்பேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.