Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ம்பீயா

க‌ன‌டா

ஒமான்

இந்த‌ மூன்று அணிக‌ளும் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஒரு போட்டியில் கூட‌ வெல்லாம‌ நாடு திரும்ப‌ போகின‌ம்..........................

  • Replies 1.3k
  • Views 40.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை க‌ப்ட‌ன் விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் சுத‌ப்ப‌ல்.................

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் அமோக‌ வெற்றி

க‌ன‌டா அணி இந்த‌ உல‌க‌ கோப்பையில் த‌ங்க‌ளை த‌யார் ப‌டுத்தி வ‌ந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை...............க‌ன‌டாவின் முன்ன‌னி வீர‌ர் ஒருத‌ர் விளையாட‌ வில்லை................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஆடு அறுக்க முன்னர் டுபுக்கு வேணும் என்று ஆசைப்பட்டால் இப்படித்தான்😂🤣

😁🫢🤣

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

இந்தியா மைதானங்களும் இலங்கை மைதானங்களும் வித்தியாசமானவை. இங்கிலாந்து இலங்கையில் சிறப்பாக விளையாடலாம் என நினைக்கிறேன்

பிரேமதாசா மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. இங்கு இலங்கை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கு மிச்சல் சாண்டருடன் இஷ் ஸோதியும் விளையாடுவார் என நினைக்கிறேன்

அவுஸ்திரேலியாவை வென்றதைவைத்து இலங்கை இனிமேலும் சிறப்பாக விளையாடும் என்றும் சொல்லமுடியாது. நான் பாகிஸ்தான், இங்கிலாந்தினை அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் என்று விடை எழுதியிருக்கிறேன்

நிசாங்க , ரத்நாயக்க, கமிண்டு மெண்டிஸ் , குசால் மெண்டிஸ் போன்றவர்கள் கவனமாக விளையாடினால் இலங்கைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மற்றைய அணிகளும் பலமானவை.

இஸ் சோதி மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர், மைக்கல் பிராஸ்வெல் ஒரு சுழல் பந்து வீச்சாளரும் 5 ஆம் நிலை துடுப்பாட்டக்காரரும் கூட, யாரை நியுசிலாந்து பயன்படுத்தும் என்பது ஆடுகளத்தின் தன்மையில் இருக்கும், சுப்பர் 8 போட்டிகள் அனைத்தும் பகல் இரவு போட்டியாக வேறு நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, vasee said:

இப்படி தனிய விட்டு விட்டார்களே!

தனிய நின்று சாதித்து விட்டீர்களே...................👍.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செம்பாட்டான் said:

இன்றைக்கு இன்னும் சிறப்பாகவே விளையாடினார்கள் போல் உள்ளது. போட்டியைப் பார்க்கவில்லை.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இன்று ஓய்வு. ஆனால் அதைத் தோல்விக்குக் காரணம் என்று சொல்ல முடியாது.

பதும் நிசங்க இன்றும் ஒரு அகோரப் பிடி ஒன்று எடுத்திருக்கிறார் போல.

சுகவீனம் காரணமாக வேலைக்கு செல்லவில்லை முழுப்போட்டியினையும் பார்த்துவிட்டேன்.

இல்லை!

சிம்பாவே வேகப்பந்து வீச்சாளர்கள்தான் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர் 7 ஓவர்களுக்கு 73 ஓட்டங்கள் சராசரி 10.42 இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் 8 ஓவர்களுக்கு 69 ஓட்டங்களை விட்டுக்குகொடுத்தனர் சராசரி 8.6.

https://www.espncricinfo.com/series/icc-men-s-t20-world-cup-2025-26-1502138/sri-lanka-vs-zimbabwe-38th-match-group-b-1512756/full-scorecard

1 minute ago, ரசோதரன் said:

தனிய நின்று சாதித்து விட்டீர்களே...................👍.

அதுதான் கவலையாக இருக்கின்றது,

இலங்கை இரசிகர்கள் ஆட்டம் பாட்டமாக இருந்தவர்கள் போட்டியின் போக்கு மாறியது மயான அமைதி, பின்னர் விக்கெட்டுக்கள் விழ மீண்டும் ஆர்ப்பாட்டம் இறுதியில் அதுவும் ஓய்ந்து போய்விட்டது, எனது நினைவில் முன்பு இலங்கை இரசிகர்கள் தோற்றாலும் வென்றாலும் சந்தோசமாக இருப்பார்கள், தற்போது இந்திய இரசிகர்கள் போல மாறிவருகிறார்கள்!

விளையாட்டினை விளையாட்டாக பார்க்கும் நிலை மாறிவருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது.

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை.

இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_5184.jpeg

@vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

எனக்கு மிஞ்சி போனால் 60 புள்ளிகள்தான் என நினைக்கிறேன்.

சூப்பர் எட்டில் 7/8 அணிகளை சரியாக தேர்ந்தாலும் முதல் எது, இரெண்டாவது எது, கடைசி எது என்பதற்கான பதில்கள் எல்லாமும் எங்க எங்க இருக்க கூடாதோ, அங்க அங்க இருக்கிறது😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

சுகவீனம் காரணமாக வேலைக்கு செல்லவில்லை முழுப்போட்டியினையும் பார்த்துவிட்டேன்.

இல்லை!

சிம்பாவே வேகப்பந்து வீச்சாளர்கள்தான் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர் 7 ஓவர்களுக்கு 73 ஓட்டங்கள் சராசரி 10.42 இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் 8 ஓவர்களுக்கு 69 ஓட்டங்களை விட்டுக்குகொடுத்தனர் சராசரி 8.6.

https://www.espncricinfo.com/series/icc-men-s-t20-world-cup-2025-26-1502138/sri-lanka-vs-zimbabwe-38th-match-group-b-1512756/full-scorecard

இவ்வாறான போட்டிகளில் பந்து வீச்சாளர்களையோ துடுப்பாட்டக் காரர்களையோ குறை சொல்ல முடியாது. ஓரிரண்டு பந்துகளில் திரும்பிய போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

முதல் எது, இரெண்டாவது எது, கடைசி எது என்பதற்கான பதில்கள் எல்லாமும் எங்க எங்க இருக்க கூடாதோ, அங்க அங்க இருக்கிறது😂

🤣.....................

மண்டை தீவுச் சாத்திரியார் எழுதிக் கொடுத்த என்னுடைய ஜென்மபலன் போல............🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளி 20 பெப் பிரித்தானிய நேரப்படி ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS எதிர் OMA

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெல்லுவதை பல்லேகலவில் மழை வந்து தடுக்குமா?

cloud-with-rain_1f327-fe0f.webpcloud-with-rain_1f327-fe0f.png

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

@vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!

வசி, பிடித்திடலாம் என்று சொன்னேனில்லையா. ஒரே நாளில் பெரும் பாய்ச்சல்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நாளை வெள்ளி 20 பெப் பிரித்தானிய நேரப்படி ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS எதிர் OMA

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெல்லுவதை பல்லேகலவில் மழை வந்து தடுக்குமா?

cloud-with-rain_1f327-fe0f.webpcloud-with-rain_1f327-fe0f.png

இந்த‌ விளையாட்டில் விறுவிறுப்பு இருக்காது

ஓமான் த‌லைகீழா நின்று விளையாடினாலும் தோல்வி தான்...................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அமெரிக்கா அணிக்கு சூப்ப‌ர்8க்கு போகும் வாய்ப்பு கிடைச்சு இருந்தால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அமெரிக்கா வீர‌ர் தான் அதிக‌ விக்கேட் எடுத்து இருப்பார் ஏராள‌ன் அண்ணா

இவ‌ரின் ப‌ந்து வீச்சு பாராட்ட‌ த‌க்க‌து 4விளையாட்டில் விளையாடி 13விக்கேட்😍..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ விளையாட்டில் விறுவிறுப்பு இருக்காது

ஓமான் த‌லைகீழா நின்று விளையாடினாலும் தோல்வி தான்...................

முதல் சுற்று புள்ளிகள் எல்லாம் கணக்குப் பார்த்தாயிற்று😁 ஆனால் நாளை போட்டி முடிந்த பின்னர்தான் பதிய முடியும்! நிலைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.. 🤪

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

இவ்வாறான போட்டிகளில் பந்து வீச்சாளர்களையோ துடுப்பாட்டக் காரர்களையோ குறை சொல்ல முடியாது. ஓரிரண்டு பந்துகளில் திரும்பிய போட்டி.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசியிருந்தனர், இலங்கை அணி புத்திசாதுரியமாக இறுதி ஓவர்களை சுழல் பந்து வீச்சிற்கு பயன்படுத்தினார்கள், அது ஒரு துணிச்சலான சிறப்பான முடிவாக கருதுகிறேன்.

இலங்கை அணி கடினமான புதிய பந்தில் நல்ல சிறப்பான தொடக்கத்தினை கொடுத்தார்கள் 1-6 ஓவர்கள் விக்கெட் இழப்பில்லாமல் 60 ஓட்டங்கள் வரை எடுத்திருந்தார்கள் (55 ஓட்டம் சிறப்பான தொடக்கமாக இருக்கும் என கருதியிருந்தேன்).

சிம்பாவே 1-6 ஓவர்களுக்கு 55 ஓட்டங்களை விக்கட் இழப்பின்றி எடுத்திருந்தது.

இலங்கை அணியில் துடுப்பாட்ட மத்திய வரிசை ஆடுகளத்தின் போக்கினை பந்து மாற்றத்திற்கேற்ப உள்வாங்க சிரமப்பட்டாலும் சிறப்பாக செயற்பட்டார்கள், இந்த போட்டியில் தோல்வியினடிப்படையில் இலங்கை அணியினை பார்க்கவில்லை மாறாக அதன் ஏதுவான நிலைக்கு சிறப்பாகவே செயற்பட்டதாக கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

இல‌ங்கை க‌ப்ட‌னை உண்மையில் அணியில் இருந்து நீக்க‌னும்..............அவ‌ர் விளையாடின‌ 4விளையாட்டில் பெரிசா சாதிக்க‌ வில்லை

சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌தெஷ‌னா இவ‌ர் இல‌ங்கை அணிக்கு விளையாட‌ வ‌ந்த‌ போது ந‌ல்லா ப‌ந்து போட்டார் இப்போது இவ‌ரின் ப‌ந்து சுழ‌ல் ப‌ந்து ச‌ரி இல்லை அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறார் விக்கேட் பெரிதா எடுப்ப‌தில்லை....................இவ‌ருக்கு சிறு ஓய்வு கொடுத்தால் ப‌ழைய‌ ப‌டி ந‌ல்லா விளையாடுவார்............................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

ல‌ங்கை அணி வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்...............175ர‌ன்ஸ் அடிக்க‌ கூடும்..................

நல்ல தொடக்கம் கொடுத்து நல்ல முடிவை பெர்ரிருக்கினம்

11 minutes ago, கிருபன் said:

முதல் சுற்று புள்ளிகள் எல்லாம் கணக்குப் பார்த்தாயிற்று😁 ஆனால் நாளை போட்டி முடிந்த பின்னர்தான் பதிய முடியும்! நிலைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.. 🤪

என்னைய குண்டைதூக்கிப் போடுறியள் ... நாளைக்கே என் பதவி இறக்கநாளை வைத்திடலாமா....கிருபன் ஜீ இவ்வளவு நாளும் முதல்வராக வைத்திருந்ததிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

முதல் சுற்று புள்ளிகள் எல்லாம் கணக்குப் பார்த்தாயிற்று😁 ஆனால் நாளை போட்டி முடிந்த பின்னர்தான் பதிய முடியும்! நிலைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.. 🤪

அது முன்பே தெரிந்த‌து தான் லொள்😄😛..............

  • கருத்துக்கள உறவுகள்

நாளையான் விளையாட்டு முடிந்த‌ பின் தான் சூப்ப‌ர்8 போட்டி விறுவிறுப்பாக‌ இருக்கும்

ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டிக‌ளில் சின்ன‌ அணிக‌ளில் சிம்பாவே ம‌ற்றும் அமெரிக்கா அணி தான் ந‌ல்லா விளையாடின‌வை.................ம‌ற்ற‌ அணிக‌ளின் விளையாட்டு எதிர் பார்த்த‌ மாதிரி விளையாட‌ வில்லை

சின்ன‌ அணிக‌ள் தானே சில‌ கால‌ம் எடுக்கும் பெரிய‌ அணிக‌ளுக்கு தொல்லை கொடுக்க‌.................................

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே கோப்பை வெல்ல‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு

முன்னைய‌ ச‌ம்பிய‌ன் அணி இர‌ண்டுக்கும் ந‌ல்ல‌ சாத்து சாத்தி விட்டின‌ம் ஆர‌ம்ப‌ சுற்றுப் போட்டியில் ஹா ஹா ம‌கிழ்ச்சி ம‌கிழ்ச்சி😍😍😍😍😍😍😍..............................

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, செம்பாட்டான் said:

வசி, பிடித்திடலாம் என்று சொன்னேனில்லையா. ஒரே நாளில் பெரும் பாய்ச்சல்🤣

அந்த நாட்களில் காத்தவராயன் கூத்து - ஆரியமாலா திருமணம் என்று விடிய விடிய கோவில் வீதியில் நடத்துவார்கள். அதில் ஒரு பாட்டு வரும் என்று ஞாபகம்.

'ஓராம் படியில் காலை வைத்தேன் பெற்றவளே தாயே

எனக்கு.................' என்று ஏதாவது ஒரு இக்கட்டைச் சொல்லுவார்கள்.

இப்படி எக்கச்சக்கமான படிகளைச் சொல்லிப் பாடி நடிப்பார்கள்.

யாழ் களத்திலும் கீழே இருந்து மேலே போவது அதே கடினம் தான்...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

அந்த நாட்களில் காத்தவராயன் கூத்து - ஆரியமாலா திருமணம் என்று விடிய விடிய கோவில் வீதியில் நடத்துவார்கள். அதில் ஒரு பாட்டு வரும் என்று ஞாபகம்.

'ஓராம் படியில் காலை வைத்தேன் பெற்றவளே தாயே

எனக்கு.................' என்று ஏதாவது ஒரு இக்கட்டைச் சொல்லுவார்கள்.

இப்படி எக்கச்சக்கமான படிகளைச் சொல்லிப் பாடி நடிப்பார்கள்.

யாழ் களத்திலும் கீழே இருந்து மேலே போவது அதே கடினம் தான்...............🤣.

ப‌ழைய‌ நினைவுக‌ள்..............அந்த‌ கோயில் நிக‌ழ்ச்சி என‌க்கு மிக‌வும் பிடிக்கும்....................எங்க‌ட‌ ஊர் கோயில்லை போன‌ வ‌ருட‌ம் இந்த‌ நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்த‌து அண்ணா🙏....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.