Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கிருபன் said:

நியூஸிலாந்து கப் தூக்கினால் ஒருத்தருக்கும் புள்ளி இல்லை😂

புள்ளி வேணும். நிறையப் புள்ளி வேணும். 😆

  • Replies 2k
  • Views 63.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மின்னல்வேக 89 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் வேகமான 43 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் அதிரடியான 39 (18 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் விரைவுச் சூடான 27 (12 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் அதிவேகமான 21 (07 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து பின்தொடர ஆரம்பித்ததனால் விக்கெட்டுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. எனினும் ஜேக்கப் பெத்தெல்லின் அபாரமான மரண அடியுடன் எடுத்த செஞ்சுரியான 105 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், வில் ஜக்ஸின் வேகமான 35 (20 பந்துகள்) ஓட்டங்களோடும் வெற்றி இலக்கை அண்மித்தபோதும் இறுதி ஓவரில் ஜேக்கப் பெத்தல் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்த பின்னர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 3 சிக்ஸர்களை அடித்தும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ஓட்டங்களையே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ஓட்டங்களை இறைத்திருந்தார்!

முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது.

யாழ் களப் போட்டியாளர்களில் 21 பேர் இந்திய அணி ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டி வெல்லும் எனக் கணித்திருந்தமையால், தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது! இருவர் இந்திய அணி வெல்லும் எனக் கணிக்காததால் அவர்களுக்கு புள்ளிகள் இல்லை.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_6082.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு அரை இறுதியும் அதிரடி. நேற்று நிசியின் போட்டி ஒரு சர வெடி என்றால் இன்று இங்கிலாந்து செய்தது புயலடி. சழைக்காமல் கடைசி வரையும் நின்றான் பெத்தல். அருமையான ஆட்டம். வடிவா கணிச்சு ஒவ்வொரு பந்துப் பரிமாற்றத்திலும் ஓட்ட விகிதத்த கட்டுக்குள்ளேயே வைத்திருந்தான். ஆனால் விக்கட்டுகளை இழந்ததால், உதவி இல்லாமல் போய்விட்டது. ஜாக்ஸின் விக்கட் இழப்புடன் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது.

அக்ஸர்தான் நாயகன். ஜாக்ஸின் பிடியை எல்லைக் கோட்டில் வைத்துப் பிடித்து, தான் விழ முதல், சிவத்தின் கையில் எறிந்தான். அது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

21 minutes ago, கிருபன் said:

இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மின்னல்வேக 89 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் வேகமான 43 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் அதிரடியான 39 (18 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் விரைவுச் சூடான 27 (12 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் அதிவேகமான 21 (07 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து பின்தொடர ஆரம்பித்ததனால் விக்கெட்டுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. எனினும் ஜேக்கப் பெத்தெல்லின் அபாரமான மரண அடியுடன் எடுத்த செஞ்சுரியான 105 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், வில் ஜக்ஸின் வேகமான 35 (20 பந்துகள்) ஓட்டங்களோடும் வெற்றி இலக்கை அண்மித்தபோதும் இறுதி ஓவரில் ஜேக்கப் பெத்தல் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்த பின்னர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 3 சிக்ஸர்களை அடித்தும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ஓட்டங்களையே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ஓட்டங்களை இறைத்திருந்தார்!

முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது.

யாழ் களப் போட்டியாளர்களில் 21 பேர் இந்திய அணி ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டி வெல்லும் எனக் கணித்திருந்தமையால், தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது! இருவர் இந்திய அணி வெல்லும் எனக் கணிக்காததால் அவர்களுக்கு புள்ளிகள் இல்லை.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_6082.jpeg

உலகக் கிண்ணம் ஒருவாறு முடிவுக்கு வருகிறது. சிறப்பாகச் செய்தீர்கள் கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடேய்…புரூக்ஸ்….அநியாயப்படுவான்…

எனக்கு இனி புள்ளியே வராது என்றதை விட…

இந்தியா பைனலுக்கு போனதை என்னால் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கு😂.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அடேய்…புரூக்ஸ்….அநியாயப்படுவான்…

எனக்கு இனி புள்ளியே வராது என்றதை விட…

இந்தியா பைனலுக்கு போனதை என்னால் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கு😂.

போயி ...ஐஸ் வாட்டரில் குளித்து எழுங்க....

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அடேய்…புரூக்ஸ்….அநியாயப்படுவான்…

எனக்கு இனி புள்ளியே வராது என்றதை விட…

இந்தியா பைனலுக்கு போனதை என்னால் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கு😂.

விளையாட்டுத்தானே. தாங்கித்தான் ஆகனும். தாங்கனும். ஆகனும்.😉

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

விளையாட்டுத்தானே. தாங்கித்தான் ஆகனும். தாங்கனும். ஆகனும்.😉

நாங்க தாங்காத சுமையா…

பைனலில் வெண்டா போகும் இடமெல்லாம் பானிபூரி வாயனுகள் கெட்ட ஆட்டம் போடுவானுகளே😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நாங்க தாங்காத சுமையா…

பைனலில் வெண்டா போகும் இடமெல்லாம் பானிபூரி வாயனுகள் கெட்ட ஆட்டம் போடுவானுகளே😂

உறைப்பா ரண்டு பானிப்பூரியச் சாப்பிட்டுப் போக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நியூஸிலாந்து கப் தூக்கினால் ஒருத்தருக்கும் புள்ளி இல்லை😂

புள்ளகள்போனால் போகட்டும்.நியூசிலாந்து சாம்பியன்வென்றுபாணிப்பூரிவாயன்களைஅடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புலவர் said:

புள்ளகள்போனால் போகட்டும்.நியூசிலாந்து சாம்பியன்வென்றுபாணிப்பூரிவாயன்களைஅடக்க வேண்டும்.

ஏனிந்தக் கோபம்.

புலவருக்கும் ரண்டு பானிப்பூரி பார்சல். காரம் தூக்கலா. 😉

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியாவின் நான்காவது இறுதிப் போட்டி. நியுசிலாந்தின் இரண்டாவது.

இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மூன்று முறை இறுதிப் போட்டிக்குப் போயிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேன்வில்சியம்சன் அணியில் இல்லா விட்டாலும் அந்த குழந்தை முக்துக்காகவாது நீயுஸ் வெல்ல வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகக் கிண்ணத்தின் சிறந்த வீரருக்கான குறும்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. வாக்குளை அளிக்கலாம்.

  • வில் ஜாக்கஸ்

  • சகிப்சாடா பஃர்கான்

  • லுங்கி ங்கிடி

  • எய்டன் மார்க்ரம்

  • ரச்சின் ரவீந்த்ரா

  • ஸாட்லி வான் ஸால்க்விக்

  • ரிம் ஸிபேஃட்

  • சாஞ்ஜு சாம்சன்

icc
No image preview

ICC Men's T20 World Cup, 2026 | ICC

Official ICC Men’s T20 World Cup, 2026 website – live cricket scores, fixtures, results, teams, rankings, news, videos and exclusive updates from the International Cricket Council.
  • கருத்துக்கள உறவுகள்

sonSoptdre008ma34ma1g0hh1ca 6hha14a0cg4fmai97gttm11h9i9tu01f
 ·

ஜெயிச்சது இந்தியா… ஆனா போராட்டத்தால் மனசை ஜெயிச்சது பெத்தல்! அரையிறுதி… அழுத்தம்… உலகக்கோப்பை கனவு… இந்த மூன்றும் சேரும் போது தான் ஒரு வீரனின் உண்மையான மதிப்பு தெரிய வரும். இன்று நடந்த இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி போட்டி அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது சஞ்சு சாம்சன் தான். Knockout போட்டி என்ற அழுத்தத்திலும் அவர் ஒரு நிமிஷமும் பதட்டப்படாமல் விளையாடினார். 42 பந்துகளில் 89 ரன்கள்… 8 பவுண்டரி, 7 சிக்சர்கள்… இது ஒரு இன்னிங்ஸ் மட்டும் இல்ல, ஒரு Statement. Powerplayலேயே ரன் வேகத்தை உயர்த்தி இந்தியாவை சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்தியாவை காப்பாற்றியவர்… இன்று மீண்டும் அதே மாதிரி பெரிய மேடையில் இந்தியாவுக்கு backbone ஆக நின்று இருக்கிறார்.

இந்தியா இறுதியில் 253 ரன்கள் குவித்தது. அந்த ஸ்கோர் பெரியதாக இருந்தாலும், அரையிறுதிப் போட்டி என்பதால் எந்த நேரத்திலும் மேட்ச் திரும்பலாம் என்ற பதட்டம் இருந்தது. அதற்கான காரணம் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் . எதிரணியாக இருந்தாலும் அவருடைய இன்னிங்ஸ்க்கு நாம தலை வணங்கியே ஆகணும்.

அவர் ஆடிய அந்த போராட்டம்… அது வெறும் ரன் எடுப்பதல்ல. கடைசி மூச்சு வரை போராடும் ஒரு வீரனின் மனநிலையை காட்டியது. எந்த பவுலர் வந்தாலும் முதல் மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து அழுத்தத்தை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பினார். ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்துக் கொண்டு 18வது ஓவர் வரை இங்கிலாந்தை போட்டிக்குள் வைத்திருந்தது அவர் மட்டும்தான்.

ஒரு தருணத்தில் கூட “இங்கிலாந்து ஜெயிக்கலாம்” என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் கிரிக்கெட்டில் சில சமயம் ஒரே ஒரு வீரன் போட்டியை மாற்றிவிடுவான். இன்று அந்த வீரன் ஜஸ்ப்ரித் பும்ரா.

எல்லா பவுலர்களும் ரன் கொடுத்த நேரத்தில் கூட, பும்ரா மட்டும் ரன்னை கட்டுப்படுத்தினார். 16வது ஓவரில் வெறும் 8 ரன்கள்… 18வது ஓவரில் 6 ரன்கள்… கடைசி இரண்டு ஓவர்களில் மொத்தம் 14 ரன்கள் மட்டும். அந்த இரண்டு ஓவர்கள்தான் இந்த போட்டியின் திருப்புமுனை. அவர் “Boom Boom Bumrah”!

இறுதியில் இங்கிலாந்து 246 ரன்களில் முடிந்தது. இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்கோர்போர்டில் இந்தியா வென்றது என்று எழுதப்பட்டாலும், அந்த மைதானத்தில் இருந்த அனைவரின் மனதையும் கவர்ந்த வீரன் பெத்தெல் தான். அவர் அவுட் ஆன தருணத்தில் இந்திய வீரர்கள் கொண்டாடிய அந்த ஆர்ப்பரிப்பு கூட அவருக்கான மரியாதைதான்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றவர் சஞ்சு சாம்சன். 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றதற்காக அந்த விருது அவருக்கே உரியது. இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் அந்த விருதை வென்றுள்ளார்.

இன்று ஒரு உண்மை மட்டும் தெளிவாக தெரிய வந்தது… பெரிய மேடைகளில் தான் சாம்சன், பெத்தல் போன்ற உண்மையான வீரர்கள் பிறக்கிறார்கள்.

இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் இந்த அரையிறுதி போட்டியின் நினைவில் இரண்டு பெயர்கள் எப்போதும் இருக்கும் சஞ்சு சாம்சன்… மற்றும் ஜேக்கப் பெத்தெல்.

இந்தியா ஜெயிச்சிருக்கலாம்…

ஆனா இந்த மேட்ச்சின் அடையாளம் அந்த கடைசி வரை போராடிய இன்னிங்ஸ்தான். 🏏"

வாழ்த்துக்கள்!

#easternsports | #INDvsENG | #T20WC2026.......!

646040313_896008619899456_90773055214043

645762429_896008643232787_77038768661491

646182373_896008706566114_64684074115978

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இன் இறுதிப் போட்டி நாளை மறுதினம் ஞாயிறு (08 மார்ச்) நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

73)   உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்

நியூஸிலாந்து அணி எதிர் இந்திய அணி

NZ   எதிர்   IND

ஒருவரும் இறுதிப் போட்டியில் விளையாடும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. 

14 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 

09 பேர் பிற அணிகள் வெல்வதாகக் கணித்தமையால் அவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

IND

ஏராளன்

AUS

வசீ

AUS

புலவர்

AUS

சுவைப்பிரியன்

AUS

அல்வாயன்

IND

ஈழப்பிரியன்

ENG

நியூ பலன்ஸ்

IND

வாத்தியார்

IND

கறுப்பி

AUS

வாதவூரான்

IND

வீரப் பையன்26

PAK

சுவி

IND

கிருபன்

IND

கோஷான் சே

ENG

அஹஸ்தியன்

SA

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

IND

நிலாமதி

IND

நந்தன்

IND

நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு வாய்க்குமா அல்லது எல்லோருக்கும் நியூஸிலாந்து அணி முட்டைகளைப் பரிமாறுமா?

cooking_1f373.webp

குறிப்பு: யாழ் களப் போட்டியில் வெற்றிவாகை சூடுபவர் உலகக் கிண்ணப் போட்டி 2026 இன் சாதனைப் தரவுகளுக்கான இன்னும் 12 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னரே அறிவிக்கப்படுவார்!!!

tenor.gif

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.