Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08 Jan, 2026 | 04:58 PM

image

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த 10 ஹெலிகொப்டர்களும் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Bell 206 SEA RANGER ரக ஹெலிகொப்டர்களே இலங்கை விமானப்படைக்கு வழங்கப்படவுள்ளது. 

திட்வா பேரிடரின் போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்கள் மிகவும் உதவியது. 

இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார்.

G-IW8yeboAAEors.jpg

G-IW8yda0AAwOa5.jpg

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இந்த 10 ஹெலிகொப்டர்களும் இலங்கை விமானப்படையையும் விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவும் எனவும் நம்பப்படுகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலாக என்ன வழங்கப்படும்?

திருகோணமலை?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

இதற்குப் பதிலாக என்ன வழங்கப்படும்?

திருகோணமலை?

10 கெலி பத்தாது அண்ணை! கூட எதிர்பார்க்கிறோம்!

பெரிய ஐயாட்ட நீங்க தான் எடுத்து சொல்லவேணும். அடுத்த அமுக்கமோ புயலோ வருதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

10 கெலி பத்தாது அண்ணை! கூட எதிர்பார்க்கிறோம்!

பெரிய ஐயாட்ட நீங்க தான் எடுத்து சொல்லவேணும். அடுத்த அமுக்கமோ புயலோ வருதாம்.

இது உங்கள் பாவனைக்கு இல்லை.

சீனாவுக்கு எதிரான போரின் போது

அமெரிக்கா பாவிப்பதற்கே.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இது உங்கள் பாவனைக்கு இல்லை.

சீனாவுக்கு எதிரான போரின் போது

அமெரிக்கா பாவிப்பதற்கே.

அண்ணோய் இனிமேல் சண்டை எம்மண்ணிலோ கடலிலோ வானிலோ வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அண்ணோய் இனிமேல் சண்டை எம்மண்ணிலோ கடலிலோ வானிலோ வேண்டாம்.

இந்த சண்டையால் இலங்கை செல்வந்த நாடாகப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த சண்டையால் இலங்கை செல்வந்த நாடாகப் போகிறது.

அண்ணை, வெனிசுலா சம்பவத்தின் பின் கிரீன்லாண்ட் கைப்பற்றப்பட்டால் இலங்கையையும் அமெரிக்கா பிடிக்காதோ என தம்பி ஒருத்தன் கேக்கிறான்! போறபோக்கை பார்த்தால் நடந்தாலும் நடக்குமோ?!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திரம்

  1. இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம்.

  2. டிட்வா புயலில் இலங்கையிடம் 3 ஹெலி மட்டும் இருந்தாதால் விரைந்து செயல்பட முடியவில்லை. இதை அறிந்துள்ள இலங்கை மக்கள்- இந்த 10 ஹெலியின் பின் அமெரிக்கா மீது கொஞ்சம் நல்லெண்ணம் அடைவர்.

  3. திருத்தம், உதிரிபாகம் என அமெரிக்க நிறுவனம் தொடர்ந்து இலஙகையிடம் பணம் பார்க்கும்.

  4. தொடர்ந்தும் இலங்கை விமானிகள் பயிற்ச்சிக்கென அமெரிக்கா போவார்கள், அவர்கள் வருவார்கள். இதன் மூலம் இலங்கை விமானப்படையின் அதிகார வர்க்கத்கை கையில் வைத்திருக்கலாம்.

தம்பரின் அதிரடி ராஜதந்திரத்துக்கு நேர் எதிரானது ஜூலியின் அணுகுமுறை.

ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஜூலி இனி எங்கே போகிறார் என்பது தெரியவில்லை - தம்பர் இருக்கும் மட்டும் இந்தவகை இராஜதந்திரிகள் முன்னிலை படுவது கடினமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!

தென்னமெரிக்காவில் எங்கோ ஆட்சியை கவிழ்த்துவிட்டே இலங்கை வந்தவராம்.

புதிதாக வருபவர் இவரைவிட பாயக் கூடியவராம்.

4 hours ago, goshan_che said:

இவை கொஞ்சம் பழைய ஹெலிகள். அமெரிக்க கடற்படைக்கு புதியன வாங்கும் போது இதை கிளியரன்ஸ் உள்ளோருக்கு மட்டும் ஏலத்தில் குறைந்த விலைக்கே கொடுக்கலாம்.

வழமையாக பாவனைக்கு உதவாத கப்பல்கள் விமானங்கள் என்று இப்படி ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பு செய்வது.

இந்ததடவை அகப்பட்டது இலங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

தென்னமெரிக்காவில் எங்கோ ஆட்சியை கவிழ்த்துவிட்டே இலங்கை வந்தவராம்.

தேடியதில் கொலம்பியாவில் வேலை பார்த்துள்ளார். ஆனால் அங்கே அமேரிக்க எதிர் அரசே உள்ளது.

8 hours ago, ஏராளன் said:

அண்ணை, இந்தம்மா ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் கொழும்பு வர முதல் எங்கோ வாசித்தோ கேட்டோ இருக்கிறேன். அதே போல கோட்டா ஆட்சி மாறியது!

Key Overseas Assignments

  • Deputy Chief of Mission, U.S. Embassy Phnom Penh, Cambodia (senior embassy leadership role).

  • Consular Officer, U.S. Consulate Guangzhou, China (first overseas assignment).

Additional Overseas Service

In various diplomatic functions across multiple countries — either as political/economic officer or in other capacities:

  • Tokyo, Japan

  • Hanoi, Vietnam

  • Bangkok/Thailand

  • Bogotá, Colombia

  • Baghdad, Iraq
    These postings include positions such as Deputy Political Counselor and Economic/Political roles

அப்படியாகத்தெரியவில்லை. ஒரு வேளை தாய்லாந்தாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

இது உங்கள் பாவனைக்கு இல்லை.

சீனாவுக்கு எதிரான போரின் போது

அமெரிக்கா பாவிப்பதற்கே.

இந்தியாவை கொஞ்சம் எச்சரித்த மாதிரியும் இருக்கும். இந்தியா பதறியடித்துக்கொண்டு ஓடி வரும், வந்துவிட்டது என்றும் செய்தி சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தேடியதில் கொலம்பியாவில் வேலை பார்த்துள்ளார். ஆனால் அங்கே அமேரிக்க எதிர் அரசே உள்ளது.

Key Overseas Assignments

  • Deputy Chief of Mission, U.S. Embassy Phnom Penh, Cambodia (senior embassy leadership role).

  • Consular Officer, U.S. Consulate Guangzhou, China (first overseas assignment).

Additional Overseas Service

In various diplomatic functions across multiple countries — either as political/economic officer or in other capacities:

  • Tokyo, Japan

  • Hanoi, Vietnam

  • Bangkok/Thailand

  • Bogotá, Colombia

  • Baghdad, Iraq
    These postings include positions such as Deputy Political Counselor and Economic/Political roles

அப்படியாகத்தெரியவில்லை. ஒரு வேளை தாய்லாந்தாக இருக்குமோ?

அப்ப ஆய்வாளர்(வாய்வாளர் (அவற்றை பேரை சொல்லமாட்டன்) சொன்னது பொய்யா அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப்பிடித்து பார்க்கக்கூடாது.- பழமொழி.🤣

தானம் கொடுத்த கெலின் விசிறியைச் சுற்றிப் பார்க்கக்கூடாது.- புதுமொழி.😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அப்ப ஆய்வாளர்(வாய்வாளர் (அவற்றை பேரை சொல்லமாட்டன்) சொன்னது பொய்யா அண்ணை?!

தாய்லாந்தில் ஆட்சி மாற்றம், மக்கள் வீதிக்கு இறங்கிய நேரம் அங்கே நிண்டாவோ தெரியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.