Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

Jan 10, 2026 - 07:00 AM

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கணொளி ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். 

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் பல காரணங்களுக்காக. 

அதேபோன்று, எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்துடன், அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவான் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்." என்றார்.

2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

பின்னர் நேற்றைய தினம் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmk7moi8a03qmo29nsw0hd480

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் பல காரணங்களுக்காக.

பல காரணங்கள். அதில் ஒன்றையாவது சொல்லவேண்டியது, நாங்களும் தெரிந்துகொள்வோம் அவர் எப்படியான நல்ல மனிதர் என்று. ராஜபக்ச குடும்பத்தை காட்டிக்கொடுக்கிறேன் என்று பேரம் பேசியிருப்பாரோ, அல்லது காட்டிக்கொடுத்துவிட்டுதான் பிணையில் வந்தாரோ? "துரோகி துரோகத்தாலேயே அழிவான்."

2 hours ago, ஏராளன் said:

எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். 

வெடிகொழுத்தியதை மறைக்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

“அப்பன் குதிருக்குள் இல்லை”

அத்தியடிக் குத்தியனும் குற்றவாளி இல்லை.🧐

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

“அப்பன் குதிருக்குள் இல்லை”

அத்தியடிக் குத்தியனும் குற்றவாளி இல்லை.🧐

2 hours ago, satan said:

பல காரணங்கள். அதில் ஒன்றையாவது சொல்லவேண்டியது, நாங்களும் தெரிந்துகொள்வோம் அவர் எப்படியான நல்ல மனிதர் என்று. ராஜபக்ச குடும்பத்தை காட்டிக்கொடுக்கிறேன் என்று பேரம் பேசியிருப்பாரோ, அல்லது காட்டிக்கொடுத்துவிட்டுதான் பிணையில் வந்தாரோ? "துரோகி துரோகத்தாலேயே அழிவான்."

வெடிகொழுத்தியதை மறைக்கிறாரோ?

இன்னும் போட்டுத் தள்ள வேண்டிய தமிழர்கள் நிறைய உள்ளார்கள் என...

ஓட்டுக் குழுத் தலைவன் "டக்கி" சொல்கிறார் போலுள்ளது.

இவர் அரசுடன் ஒட்டி உறவாடிய சமயம்... 20 ஆயுதங்களுக்கு மேல் அன்பளிப்பாக பெற்றுள்ளார். அதில் ஒன்றுதான்... சிங்கள பாதாளக் குழுவினருக்கு இவரால், கொடுக்கப் பட்டுள்ளது. மிகுதிக்கு அலுவல் பார்க்கப் போகுது... டக்கி.

  • கருத்துக்கள உறவுகள்

தீவூப்பகுதியில் காணாமல் போன ஒவ்வொரு பெண் பிள்ளைகளின் அவலக் குரல்களும் இவரது அரசியல் பற்றி சொல்லும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

5 hours ago, ஏராளன் said:

அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவான் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்."

அப்போ, எதிர்க்கட்சிகள் கூவுவதுபோல் இது அரசியல் பழிவாங்கல் அல்ல. நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கை விசாரித்து பிணை வழங்கியிருக்கிறது. பிணை மட்டுந்தான் விடுதலையல்ல.

5 hours ago, ஏராளன் said:

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

அரசியல் செய்வார்கள், சவால் விடுவார்கள், கொலை, கொள்ளை, எல்லா குற்றங்களும் செய்வார்கள், கைது, விசாரணை என்று வந்துவிட்டால்; இல்லாத நோயெல்லாம் வந்து வைத்தியசாலையில் படுத்து விடுவார்கள். அவசரசிகிச்சை, சத்திரசிகிச்சை என்று சிபாரிசு வேற. பிணையில் வந்தவுடன் மீண்டும் விறுவிறுப்பான அரசியலை, விட்ட இடத்திலிருந்து தொடருவார்கள். இவருக்காக வாதாடிய சட்டத்தரணி சாலிய பிரீஸ் சொல்லி இவரை பிணை எடுத்த விடயம், முன்பு சிறையில் தாக்கியதால் இவருக்கு ஞாபக மறதி, ஒழுங்காக காதுகேக்காது, பார்வைக்கோளாறு, நீரிழிழிவு இன்னும் பல்வேறு நோய்கள் இருப்பதாக அடுக்கி, இவரால் திருப்பி கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளால் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, அதற்குரிய எந்த விசாரணைகளும் நடத்தப்படவில்லை, சிறையில் அவருக்கு உயிரச்சுறுத்தல் இருக்கிறது, அதனாலேயே அரசாங்கம் அவருக்கு மெய்ப்பாதுகாவலர்களை அளித்திருக்கிறது என்று சொல்லி பிணை பெற்று கொடுத்துள்ளார். சொன்னவர் ஒரு வைத்தியரல்ல, இவருக்காக ஆஜரான சட்டத்தரணி. இவரோ தனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும் என்கிறார். தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்சித்திரவதைப்படிருக்கிறார்கள்,அடித்துக்கொல்லப்பட்டிருக்கிறார்கள், பல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்றி இறந்திருக்கிறார்கள், அரசியல்வாதிகளால் பலவகை துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக எந்த அரசியல்வாதிகளும் சட்ட வல்லுனர்களும் நீதிபதிகளும் குரலெழுப்பியதுமில்லை, இரக்கம் காட்டியதுமில்லை, பிணை வழங்கியதுமில்லை. எதிலும் பாரபட்ஷம்.

26 minutes ago, தமிழ் சிறி said:

இவர் அரசுடன் ஒட்டி உறவாடிய சமயம்... 20 ஆயுதங்களுக்கு மேல் அன்பளிப்பாக பெற்றுள்ளார். அதில் ஒன்றுதான்... சிங்கள பாதாளக் குழுவினருக்கு இவரால், கொடுக்கப் பட்டுள்ளது. மிகுதிக்கு அலுவல் பார்க்கப் போகுது... டக்கி.

இவரது சொந்தப்பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள உலக தலைவனிடம் கைமாறியிருக்கிறது. மிகுதிக்கு என்ன நடந்தது என்று சொல்லத்தவறியிருக்கிறார். அதுக்கு என்ன நடந்தது என மறந்துவிட்டாராம். அதை தான் அவரது வக்கீலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் ஞாபக மறதியாம். ஆனால் மக்களால் நிராகரிக்கப்படும்வரை அவர் அரசியல் செய்திருக்கிறார், அன்று எதை சொன்னேனோ அதையே இன்றுவரை சொல்லி வருகிறேன் என்று வேறு அடிக்கடி ஞாபகமூட்டுகிறார். அன்று சொன்னது எதுவென இன்றுவரை ஞாபகமிருக்கிறது, தொடர்ந்தும் தடையின்றி அரசியல் செய்வேன் என்கிறார், இத்தனை வியாதிகள் உள்ளவரால் எப்படி அரசியல் செய்ய முடியும்? அதைவிட இராணுவ புலனாய்வாளரால் இவருக்கு வழங்கப்படாத முப்பத்தொன்பது துப்பாக்கிகளை திரும்ப கையளித்துள்ளாராம். அவை எங்கிருந்து இவருக்கு கிடைத்தன? யாரை கொலை செய்து இவற்றை அபகரித்தார்? புலிகளையா? இராணுவத்தினரையா? விரிவாக விசாரணை நடத்தப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

614387191_25916086761320323_829734994159

சிறீலங்காவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகார கும்பலின் தலைவனோடு (ராஜபக்ச குடும்பத்தின் அடியாள்) இணைந்து அட்டூழியங்களை செய்த இந்த நபரை சிறையில் அடைத்தமைக்காக மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் . ஆனால் பாரிய குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகவே அநுரகுமார அரசும் தமிழ் மக்களை நன்றாகவே ஏமாற்றுகின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

இதே குற்றத்தை வேறு ஒரு சாதாரண தமிழ் பொதுமகன் செய்திருந்தால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறைந்தது 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து என்னவெல்லாம் செய்து விசாரணை செய்திருப்பார்கள்.

Kunalan Karunagaran is with தமிழ் அரசுக் கட்சி தீவகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.