Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

don.jpg?resize=750%2C375&ssl=1

ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ன அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‛முல்லா கண்டிப்பாக போ’ என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது.

நேற்று ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருந்தார்

இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் நாட்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல், பல ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமெனவும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பில் பரசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2026/1461114

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

619295400_1024190590767326_4811998732722

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6858.jpeg

1979 ல் புறப்பட்ட கப்பல்கள் இன்னும் போய் சேரல்லையா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

சவுதி கட்டார் ஆகிய நாடுகளால் கொஞ்சம் தாமதம் போல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

தம்பரும் ஈரானும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தம்பரும் ஈரானும் 😂

அண்ணை, இதில கைப்புள்ள யாருன்னு சொல்லவே இல்லையே?!

'அமெரிக்க படை இரானை நோக்கி நகர்கிறது' - டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty

அமெரிக்கா இரானை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பெரிய படையொன்று இரானை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இரானை நோக்கி பெரிய படையொன்று நகர்ந்துவருகிறது. ஆனால், எதுவும் தற்போது நடைபெறும் என தோன்றவில்லை. ஆனாலும், நாங்கள் இரானை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்.” என்றார்.

இரானில் 837 பேரின் மரண தண்டனையை தாங்கள் நிறுத்தியதாக கூறியுள்ள டிரம்ப், அவர்களுள் பெரும்பாலானோர் இளம்வயதினர் என்றார்.

அவர் கூறுகையில், “நீங்கள் அவர்களை தூக்கிலிட்டால், உங்களுக்கு எதிராக இதுவரையிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கையை ஒப்பிடும்போது அணுசக்தி திட்டம் தொடர்பாக நாங்கள் எடுத்த நடவடிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.” என்றார்.

“அதை ரத்து செய்துவிட்டதாக அவர்கள் (இரான்) தெரிவித்துள்ளனர், ஒத்திவைத்துள்ளதாக அல்ல. அதுவொரு நல்ல அறிகுறி.”

மேலும், “இரானை நோக்கி மிகப்பெரிய படை நகர்ந்து வருகிறது. அதை நாங்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம், பொறுத்திருந்து பார்க்கலாம்.” என்றார்.

இரானில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றுக்கு எதிராக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட பலரும் இரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வார, இந்த போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க இரான் திட்டமிட்டிருந்ததாக பல செய்திகள் வெளியாகின. அதன்பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மரண தண்டனையை தான் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/live/c5y34pvmg43t?post=asset%3A1ff5bd8d-a995-4834-a281-c9c77f6c8139#asset:1ff5bd8d-a995-4834-a281-c9c77f6c8139

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

அண்ணை, இதில கைப்புள்ள யாருன்னு சொல்லவே இல்லையே?!

'அமெரிக்க படை இரானை நோக்கி நகர்கிறது' - டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty

அமெரிக்கா இரானை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பெரிய படையொன்று இரானை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இரானை நோக்கி பெரிய படையொன்று நகர்ந்துவருகிறது. ஆனால், எதுவும் தற்போது நடைபெறும் என தோன்றவில்லை. ஆனாலும், நாங்கள் இரானை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்.” என்றார்.

இரானில் 837 பேரின் மரண தண்டனையை தாங்கள் நிறுத்தியதாக கூறியுள்ள டிரம்ப், அவர்களுள் பெரும்பாலானோர் இளம்வயதினர் என்றார்.

அவர் கூறுகையில், “நீங்கள் அவர்களை தூக்கிலிட்டால், உங்களுக்கு எதிராக இதுவரையிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கையை ஒப்பிடும்போது அணுசக்தி திட்டம் தொடர்பாக நாங்கள் எடுத்த நடவடிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.” என்றார்.

“அதை ரத்து செய்துவிட்டதாக அவர்கள் (இரான்) தெரிவித்துள்ளனர், ஒத்திவைத்துள்ளதாக அல்ல. அதுவொரு நல்ல அறிகுறி.”

மேலும், “இரானை நோக்கி மிகப்பெரிய படை நகர்ந்து வருகிறது. அதை நாங்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம், பொறுத்திருந்து பார்க்கலாம்.” என்றார்.

இரானில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றுக்கு எதிராக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட பலரும் இரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வார, இந்த போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க இரான் திட்டமிட்டிருந்ததாக பல செய்திகள் வெளியாகின. அதன்பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மரண தண்டனையை தான் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/live/c5y34pvmg43t?post=asset%3A1ff5bd8d-a995-4834-a281-c9c77f6c8139#asset:1ff5bd8d-a995-4834-a281-c9c77f6c8139

டாவோசில் வைத்து கனேடியன் கட்டதுரை குடுத்த குடுவையில் கிறீன்லாந்தும் வேண்டாம், ஐஸ்லாந்தும் வேண்டாம் என யார் ஓடினார்? அவரேதான்😂

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால் மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரான் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

24 Jan, 2026 | 01:54 PM

thumb_large_2.jpg

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளின் காரணமாக வன்முறை வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ள நிலையில், இது ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படை படையணி (Armada) நகர்த்தப்பட்டு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“ஈரான் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலையும், அது எவ்வளவு வரையறுக்கப்பட்டதாக இருந்தாலும், முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம். அமெரிக்கா எங்களை தாக்கினால், அதற்குப் பதிலாக அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சி தனது வசம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் என்றும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர மிகக் கடுமையான வழிகளில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்கானதல்ல என்று ஈரான் நம்புவதாகக் கூறிய அந்த அதிகாரி, இருப்பினும் மோசமான சூழ்நிலைக்கும் ஈரான் இராணுவம் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, ஈரான் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், “தாக்குதலுக்கான பொத்தானில் ஈரான் விரல் வைத்துள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை, ஈரான்–அமெரிக்கா இடையிலான மோதல் முழுமையான போராக மாறக்கூடும் என்ற அச்சத்தை உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது.

https://www.virakesari.lk/article/236898

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முல்லாக்களின் ஆதரவாளன் இல்லை.
ஆனால் ஈரான் நாடு என்று பார்த்தால் சீனாவின் பின் பலம் அதிகமாக உள்ளது. இது நான் தீர்மானித்து எழுதிய கருத்து அல்ல. என்னுடன் வேலை செய்யும் தம் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனி வந்த ஈரானியர்கள் சொன்னது. அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள்..... ஈரானில் அரச மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என.....

ஐ திங்......அமெரிக்காவிற்கு வெளிப்படை எதிரிகள் அதிகரித்து வீட்டார்களோ என திங் பண்ண வேண்டிக்கிடக்கு....😜

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இராணுவம் கடற்படை, விமானப்படை மத்திய கிழக்கு நாடுகளுக்கு நகர்த்துகிறது

image_d7bc6aa9dc.jpg

அமெரிக்க இராணுவம் கடற்படை, விமானப்படை சொத்துக்களை மத்திய கிழக்கிற்கு நகர்த்துகிறது: தெரிந்து கொள்ள வேண்டியது என்ன அமெரிக்க 'ஆர்மடா' வளைகுடாவை நோக்கி நகர்கிறது என்று டிரம்ப் கூறுகிறார், இது பிராந்தியத்தில் இராணுவ விரிவாக்கம் குறித்த அச்சத்தை எழுப்புகிறது.

 ஈரானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு வளைகுடாவை நோக்கிச் செல்கிறது. அமெரிக்க இராணுவம் கடைசியாக ஜூன் மாதம் மத்திய கிழக்கில் ஒரு பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது

 இஸ்ரேல் தெஹ்ரானுடனான 12 நாள் போரின் போது மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு. இந்த மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரித்தார்.

அரசாங்கம் ஒடுக்கப்பட்டபோது "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று அவர் அவர்களிடம் கூறினார். ஆனால் கடந்த வாரம், அவர் இராணுவ சொல்லாட்சியை நிறுத்தினார். அதன் பின்னர் போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 எனவே அமெரிக்க இராணுவ சொத்துக்கள் வளைகுடாவிற்கு நகர்கின்றன என்ன? அமெரிக்கா மீண்டும் ஈரானை தாக்கத் தயாராகி வருகிறதா? வியாழக்கிழமை டிரம்ப், அமெரிக்காவின் "ஆர்மடா" வளைகுடா பிராந்தியத்தை நோக்கிச் செல்கிறது, ஈரானை மையமாகக் கொண்டுள்ளது என்று கூறினார். வரும் நாட்களில் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு மற்றும் பிற சொத்துக்கள் மத்திய கிழக்கிற்கு வரும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

 "நாங்கள் ஈரானை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஈரானை நோக்கி எங்களிடம் ஒரு பெரிய படை செல்கிறது" என்று டிரம்ப் கூறினார்.

 "ஒருவேளை நாம் அதைப் பயன்படுத்த வேண்டியிருக்காது. ... அந்த திசையில் நிறைய கப்பல்கள் பயணிக்கின்றன. ஒருவேளை, அந்த திசையில் ஒரு பெரிய கடற்படை எங்களிடம் இருந்தால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று அவர் மேலும் கூறினார். ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கிக் கப்பல் தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி ஒரு வாரத்திற்கு முன்பு தனது பாதையை மாற்றியது. அதன் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவில் ஈரானுக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட டோமாஹாக் கப்பல் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஆர்லீ பர்க்-வகுப்பு அழிப்பாளர்கள் உள்ளனர்.

மத்திய கிழக்கு நோக்கிச் செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல்கள் ஏஜிஸ் போர் அமைப்பையும் கொண்டுள்ளன, இது பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வழங்குகிறது.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமெரிக்க-இராணுவம்-கடற்படை-விமானப்படை-மத்திய-கிழக்கு-நாடுகளுக்கு-நகர்த்துகிறது/50-371568

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வெறும் உளவியல் யுத்தமாகவே கருதுகிறேன் நடைமுறையில் இதன் பயன்பாடு அதன் பெறுபேறும் மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.

இந்த காணொளியில் கூறப்படுவது போல மிகைப்படுத்தப்பட்ட விளைவுகளை எந்த ஒரு ஆயுதத்தினாலும் தேர்ந்தெடுத்த இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்படுத்த முடியாது.

வெனிசுலா அதிபர் இதனால் பாதிக்கப்படவில்லை எனவே மிக குறுகிய அளவான தனித்தனியான இலக்குககள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறிருக்கையில் ஒட்டுமொத்த தற்காப்பு பொறிமுறைக்கெதிராக பரந்தளவிலான வகையில் இது பாவிக்கப்பட்டது போல கருத்துருவாக்கத்தினை இக்காணொளி ஏற்படுத்துகிறது அது தவறாக இருக்க வாய்ப்பு அதிகம்.

இந்த ஆயுதம் பரவலாக பாவிக்கப்பட்டதற்கான பாதிப்புக்களை மக்கள் உணர்ந்த மாதிரி எந்த செய்திகளும் வரவில்லை.

விமான எதிர்ப்பு பாவிக்கப்படாமல் இருக்கப்படுவதற்காக அமெரிக்க தரப்பு கூறிய விடயம் இலத்திரனியல் போரியல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக ஆரம்பத்திலேயே கூறியிருந்தது, அதுதவிரவும் வேறு வதந்திகளும் அது தொடர்பில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார்.

மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா தனது வான்வெளியையோ, நிலப்பரப்பையோ பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. எந்த ஒரு நாடாக இருந்தாலும் இவ்விஷயத்தில் சவூதி அரேபியா உறுதியுடன் இருக்கும்.

பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றம் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு முயற்சிகளுக்கும் சவூதி அரேபியா ஆதரவு அளிக்கும்’ என்று இளவரசர், ஈரான் ஆட்சியாளரிடம் உறுதிபட தெரிவித்தார்.

இதையடுத்து, சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் அதிபர் பாராட்டு தெரிவித்தார். மேலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான பட்டத்து இளவரசரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீதான-தாக்குதலுக்கு-துணைபோக-மாட்டோம்/50-371716

  • கருத்துக்கள உறவுகள்

'நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது' இரானை எச்சரித்த டிரம்ப் - வளைகுடாவில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்   ஓடிக்கொண்டிருக்கிறது

பட மூலாதாரம்,Handout via Reuters

படக்குறிப்பு,இந்தக் கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தலைமை தாங்குகிறது (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்

  • 29 ஜனவரி 2026, 07:18 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைப் பிரிவு "மிகுந்த வலிமையுடனும், வேகத்துடனும், உற்சாகத்துடனும் நகர்ந்து வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதில் அளித்துள்ள இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் நாட்டுப் படைகள் "துப்பாக்கியின் விசையில் விரல்களை வைத்தபடி" தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ ஏதாவது தாக்குதல் நடந்தால், அதற்கு உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது, மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக சுமத்தும் குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இரானில் போராட்டங்கள் நடந்தன. கடுமையான முறையிலும், இதுவரை இல்லாத அளவிலும் அப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தலையிடும் என்று டிரம்ப் முன்பு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரது சமீபத்திய எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இரானிய நாணயத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின.

ஆனால் அவை விரைவிலேயே நாட்டின் மதகுரு ஆட்சியின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நெருக்கடியாக மாறின.

"உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று டிரம்ப் கூறினார். பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, நம்பகமான தகவல்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிட்ஸ் நியூஸ் ஏஜென்சி (HRANA) அமைப்பு, டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கலவரங்களுக்குப் பிறகு, 5,925 பேர் போராட்டக்காரர்கள் உட்பட, 6,301 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், மேலும் 17,000 இறப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த அமைப்பு கூறுகிறது.

மற்றொரு குழுவான நார்வேயைத் தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் அமைப்பு, இறுதி எண்ணிக்கை 25,000 ஐ தாண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

போராட்டக்காரர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள பாதுகாப்பு படையினர்

பட மூலாதாரம்,Vahid Online

படக்குறிப்பு,இரானில் போராட்டக்காரர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள பாதுகாப்பு படையினர் (ஜனவரியின் முற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்)

இரான் குறித்து டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய கருத்துகள், அந்த நாட்டின் அணுசக்தி திட்டத்தையே அதிகமாகக் கவனத்தில் கொண்டதாகத் தெரிகிறது.

"இரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வந்து, நியாயமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் என நம்புகிறேன். அணு ஆயுதங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக வெனிசுவேலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டபோது இருந்ததை விட, தற்போது வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை மிகவும் பெரியது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் படை "தனது இலக்கை மிக வேகமாகவும், விருப்பத்துடனும், தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் நிறைவேற்றத் தயாராக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரான்–இஸ்ரேல் இடையிலான 12 நாள் போரின் போது இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் குறிப்பிடும் வகையில், "அடுத்த தாக்குதல் இன்னும் மிகக் கடுமையானதாக இருக்கும். அது மீண்டும் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்," என்று அமெரிக்க அதிபர் எச்சரித்தார்.

புதன்கிழமையன்று செனட் வெளிநாட்டு உறவுகள் குழுவில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "இரானின் ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்க வாய்ப்பு உள்ளது," என்றார்.

"போராட்டக்காரர்களின் அடிப்படைக் குறைகளைத் தீர்க்க அவர்களிடம் எந்த வழியும் இல்லை. அதாவது, அவர்களின் பொருளாதாரம் சிதைந்த நிலையில் உள்ளது," என்றும் ரூபியோ கூறினார்.

மேலும், "தற்போது நீங்கள் காண்பது, எங்கள் பணியாளர்களுக்கு எதிராக இரானிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, பிராந்தியத்தில் வளங்களை நிலைநிறுத்தும் திறனே ஆகும்," என்று அவர் தெரிவித்தார்.

டிரம்பின் சமீபத்திய எச்சரிக்கைக்குப் பதிலளித்த இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி,

"இரான் எப்போதும் பரஸ்பர நன்மை தரும், நியாயமான மற்றும் சமமான அணு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. அந்த ஒப்பந்தம் சமமான நிலைப்பாட்டில், கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல், மிரட்டல் விடுத்தல் போன்றவற்றில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அது அமைதியான முறையில் அணு ஆயுத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இரானின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.மேலும் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதற்கும் இரான் உத்தரவாதம் அளிக்கிறது" என்றார்.

"எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் அத்தகைய ஆயுதங்களுக்கு இடம் இல்லை. அவற்றைப் பெற நாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை," என்றும் அவர் கூறினார்.

"செய்தி பரிமாற்றங்கள் நடந்தாலும், அமெரிக்காவுடன் தற்போது எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை," என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாதி தெரிவித்தார்.

பிபிசி வெரிஃபை தனது ஆய்வின் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகளைக் கண்டறிந்துள்ளது.

சாட்டிலைட் புகைப்படங்களின்படி, குறைந்தது 15 போர் விமானங்கள் ஜோர்டானின் முவாஃபக் விமானத் தளத்திற்கு வந்துள்ளன.

மேலும் ஜோர்டான், கத்தார் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளங்களிலும் அமெரிக்க விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு சரக்கு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வருவதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இரானிய வான்வெளிக்கு அருகில் இயங்கும் ஃப்ளைட்ராடார்24 கண்காணிப்பு தளத்தில் ட்ரோன்களும் பி-8 போஸிடான் உளவு விமானங்களும் காணப்பட்டுள்ளன.

டிரம்ப் குறிப்பிட்ட , யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலின் தலைமையிலான கடற்படையான "ஆர்மடா", மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசி வெரிஃபையிடம் உறுதிப்படுத்தினார்.

திங்கட்கிழமை, ஃப்ளைட்ராடார்24-ல் ஒரு ஆஸ்ப்ரே விமானத்தின் கண்காணிப்புக் கருவி, அது வளைகுடாவில் உள்ள கடலோரப் பகுதியை விட்டு புறப்பட்டு ஓமனில் தரையிறங்கியதாக காட்டியது. இதன் மூலம், லிங்கன் கப்பல் அருகில் எங்கோ இயங்கக்கூடும் எனத் தெரிகிறது.

"அமெரிக்கா கடந்த இரண்டு வாரங்களில் இப்பகுதியில் தனது கடற்படை மற்றும் வான்படை பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் அதன் ராணுவ நிலை நிறுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது," என்று அபாய ஆலோசனை நிறுவனமான சிபிலைனின் முதன்மை பகுப்பாய்வாளர் மேகன் சட்கிளிஃப் தெரிவித்தார்.

குறைந்தது இரண்டு வழிநடத்தும் ஏவுகணைகளை உடைய கப்பல்கள் (guided missile destroyers) மற்றும் மூன்று போர் கப்பல்கள் பல மாதங்களாக பஹ்ரைனில் நங்கூரமிட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

இதற்கிடையில், கடந்த ஆண்டு பணியில் இணைந்த இரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஐஆர்ஐஸ் ஷாஹித் பாகேரியை, கரைக்கு அருகில் இரான் நிறுத்தியுள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் கூறுகின்றன.

ஐஆர்ஐஎஸ் ஷாஹித் பகேரி

பட மூலாதாரம்,Maxar Techn

படக்குறிப்பு,டிசம்பர் 2024 இல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் காட்டப்பட்டுள்ள ஐஆர்ஐஎஸ் ஷாஹித் பகேரி

2015 ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் படி, 3.67% விட அதிகமாக தூய்மை கொண்ட யூரேனியத்தை செறிவூட்ட இரான் அனுமதிக்கப்படவில்லை. இந்த அளவுதான் வணிக அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தரமாகும். மேலும், இரான் தனது ஃபோர்டோ அணு நிலையத்தில் 15 ஆண்டுகள் எந்தவித செறிவூட்டல் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.

ஆனால், 2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அது அணுகுண்டு தயாரிப்பதற்கான பாதையைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், இரான் மீது மீண்டும் தடை விதித்தார். இதனால் இரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக, ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இரான் படிப்படியாக மீறத் தொடங்கியது. குறிப்பாக, அணு உலை எரிபொருளுக்கும் அணு ஆயுதங்களுக்கும் பயன்படக்கூடிய செறிவூட்டப்பட்ட யூரேனியம் உற்பத்தி தொடர்பான கட்டுப்பாடுகளை அதிகமாக மீறியது.

இந்நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரான் யூரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், தனது ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் மத்திய கிழக்கில் உள்ள தனது பினாமி அமைப்புகளுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறின.

இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா கடைசியாக நடவடிக்கை எடுத்தது.

அப்போது ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று யூரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

"மிட்நைட் ஹாமர்" எனப் பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கை, இரான் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பின்னடையச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இரான் அரசுத் தொலைக்காட்சியின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி இதுகுறித்துக் கூறுகையில், "அந்தத் தளங்களில் இருந்த பொருட்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், நாட்டுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை," என்று கூறினார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை டிரம்ப் "மிகவும் பலவீனமானது" என்றும் "எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்" என்றும் விவரித்தார்.

கூடுதல் தகவல் -ஜோசுவா சீதம், மாட் மர்பி, அலெக்ஸ் முர்ரே, பார்பரா மெட்ஸ்லர் மற்றும் சோபியா ஃபெரீரா சாண்டோஸ்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce8rj1g01n4o

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

'நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது' இரானை எச்சரித்த டிரம்ப் - வளைகுடாவில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்

ரம்பின் நகர்வைப் பார்த்தால்

வெனிசூலா ஜனாதிபதியை தூக்கிய மாதிரி

கொமெனியை தூக்குவதற்கு ஆயத்தம் நடக்குது போல.

  • கருத்துக்கள உறவுகள்

US-ஆல் மத்திய கிழக்கில் பதற்றம்; இரானை தாக்கினால் என்ன நடக்கும்?

அமெரிக்கா இரானை தாக்க தயாராக இருப்பதுபோலத் தெரிகிறது. எந்தெந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது கணிக்கப்படக் கூடியதாக இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும்?

#Iran #America #Trump

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.