Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

download-3-7.jpg?resize=294%2C171&ssl=1

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் கூடுதல் சேவைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் பரிமாற்ற செயலியாக அறிமுகமான வாட்ஸ் அப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இன்று பொது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறி விட்ட நிலையில் இவற்றில் கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம்.

இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமை மேம்படுத்தி வரும் மெட்டா நிறுவனம், கூடுதல் சேவைகளை வழங்கி அதற்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, மேனஸ் என்ற ஏஐ நிறுவனத்தை சுமார் 19,000 கோடி ரூபாய்க்கு வாங்கிய மெட்டா, அதனை பயன்படுத்தி அதிக அளவில் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் சந்தா செலுத்தும் பயனாளர்கள் எத்தனை நபர்களை வேண்டுமானாலும் பின் தொடரலாம் என்றும், தங்களை பின் தொடராத நபர்களின் ஸ்டோரிகளை பார்க்கும் வகையிலும் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்தியாவசிய தகவல் பரிமாற்ற சேவைகள் கட்டணமின்றி தொடரும் என்றும், ஏஐ உதவியை நாடுவதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மெட்டா நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2026/1462014

  • கருத்துக்கள உறவுகள்

பழக்கபடுத்து .. அடிமையாக்கு.. வசூல் பண்ணு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பழக்கபடுத்து .. அடிமையாக்கு.. வசூல் பண்ணு..

தேர்தல் நேரம்… வோட்டுக்கு,

பணம், குவாட்டர், பிரியாணி கொடுத்து வென்று..

மக்களை ஐந்து வருடம், கொத்தடிமையாக வைத்திருப்பதும், இதே வகைதான் தோழர். 😂

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் ஈட்டும் புதிய முறை , இங்கே உள்ள சிலர் மற்ற திரியில் youtube பற்றி நான் சொன்னதை ஏளனமாக / பகிடியாக குறித்து இருந்தனர்

முதலில் meta க்கு தான், இருந்த்து பாருங்கள் மெட்டா இதை socialfi க்கு கொண்டுவருவதை. அப்படி கொண்டுவரும் பொது meta இந்த வருமானம் இன்னும் கூடும்.

(ஒன்று மட்டும் சோலா முடியும் அவர்களுக்கு செல்வத்தின் , அதை ஈட்டும் போக்கு எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பதை சிறிதளவேனும் அறியவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நீங்கள் முதலில் எழுதியிருந்ததற்கு நான் தான் சிரிப்பு குறி போட்டிருந்தேன்..இப்போ எடுத்து விட்டேன்.அங்கே நான் எந்த நக்கல் நளினமும் செய்யவில்லை... நீங்கள் சொல்லி இருந்தவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது. காரணம்.எத்தனையோ யூருப்பர்ஸ் அடுத்தவர்களின் குடும்ப பிரச்சனைகளை கூட மிகைப் படுத்தி பதிவிடுவதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமிலிருக்கலம் ,ஆனால் எல்லாரும் அப்படி என்று இல்லைத் தானே..குறிப்பாக ஜேர்மனியில் நடக்கும் திருமணங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை பாதிக்கப்பட்ட பெண்கள் எடுத்து அவரிடம் சொல்கிறார்களாம் அதனை பதிவிடுகிறாராம்..இப்படி ஒரு பதிவை சோடனை செய்து பதிவிட்டு பணம் சம்பாதிக்க வேணுமா..இப்படி எத்தனையோ வருகிறது..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவில் வெள்ளைக்காரன் தேயிலையை அறிமுகப்படுத்தி

ஓரிரு வருடங்கள் இலவசமாக சந்திக்கு சந்தி கொடுத்தார்கள்.

பெரும்பாலவர்கள் அடிமையாகி விட்டார்கள் என்று தெரிந்ததும்

பணத்தைக் கொடுத்து தேயிலையை வாங்கி

நீயே வைத்துக் குடி என்றான்.

இப்போதும் என்னவிலை என்றாலும் வாங்கி குடிக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/1/2026 at 12:58, தமிழ் சிறி said:

இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!

வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் கூடுதல் சேவைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நல்ல விசயம்.👍

ஓசியில பணியாரம் சுடுற கொம்பனியளுக்கு நல்ல சூடு.👁🗨

வணக்கம் யாழ்களம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்தனமாக ஆதவன் செய்திக்கு தலையங்கம் கொடுத்துள்ளது.

தலையங்கத்தை மட்டும் மேய்ந்து விட்டு கச்சேரி வேறு களை கட்டுகிறது😂.

On 28/1/2026 at 11:58, தமிழ் சிறி said:

அத்தியாவசிய தகவல் பரிமாற்ற சேவைகள் கட்டணமின்றி தொடரும் என்றும், ஏஐ உதவியை நாடுவதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதான் செய்தி.

இதை ஏலவே எக்ஸ் செய்கிறது. எக்ஸுக்கு சந்தா கட்டினால் சில சலுகைகள், ஏ ஐ கருவியான கொரொக்கின் முழு பாவிப்பு கிடைக்கும். இல்லை எண்டால் அடிப்படை சேவை இலவசம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.