Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணோடு காண்பதெல்லாம் .....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோடு காண்பதெல்லாம் .....

வினாயகம் வேகமாக வீதியோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தார். குளிர்கால ஆரம்பத்தின் அறிகுறியாய் மெல்லிய குளிர்காற்று சில் என்று முகத்தில் மோதியது. பாடசாலை ஆரம்பித்து விட்டதால் வீதியின் இருமருங்கும் பாடசாலை மாணவரின் அவசர ஓட்டமும், தம்மைக் காப்பகத்தில் விடுவதற்காக அழைத்துச் செல்லும் பெற்றவரின் கையை இறுகப் பற்றியபடி விழிகளில் வழியும் ஏக்கப் பார்வையுடன் செல்லும் மழலைகள் மறுபுறமும், எதையும் பார்க்கவோ ரசிக்கவோ நேரமின்றி கையில் கோப்பிக் கோப்கைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்குச் செல்வோரின் அவசரமும், வீதியில் வரிவரியாகச் செல்லும் வாகன வரிசைகளும் ரொறன்ரோவின் காலைநேரக் காட்சிகளாக கண்முன் விரிந்திருந்தன.

வினாயகம் ஒருவினாடி தன் கிராமத்தின் காலைநேரக் காட்சிகளை மனக்கண்ணில் நிறுத்தி நெடுமூச்செறிந்தார். "என்ன செய்வது

இந்த அவசர உலகத்தினுள் அகப்பட்டாயிற்று. ஓடுகின்ற ஊருடன் ஒத்து ஓடவேண்டியதுதான்" எண்ணியபடியே பஸ் நிறுத்தத்தை நோட்டமிட்டார். அங்கு நான்கைந்துபேர் கைக்ககாரத்தைப் பார்ப்பதுவும் நீண்டுகிடந்த தெருவின் முனையைப் பார்ப்பதுமாக நின்றனர். எல்லோரின் பார்வையிலும் பரபரப்பு. "இன்னும் 8.30 பஸ் போகவில்லை." நிம்மதிப் பெருமூச்சுடன் சிக்னலுக்கு நிற்கப் பொறுமையின்றி வாகன வரிசைகள் குறைவாக வரும் நேரத்தில் வீதியின் குறுக்கே ஓடி பாதியில் நின்று மறுபுறம் நோட்டமிட்டு அங்கிருந்தும் ஓர் ஓட்டம் ஓடி மறுகரையைத் தொட்டார் வினாயகம்.

வீதியில் சென்றுகொண்ருந்த சிலர் அவரை வினோதமாகப் பார்ப்பதுபற்றி அவருக்கு எந்த அக்கறையமில்லை. அப்படி யாராவது ஏதும் சான்னால் "அவனுக்கென்னஇ என்ர அவசரம் எனக்கு, அவன் காரில சொகுசாப் போவான். இந்த பஸ்சை விட்டா இன்னும் 20 நிமிசம் நிக்க வேணும்." என்று இடக்காகப் பதில் வரும்.

பஸ்நிறுத்தத்தை வந்தடைந்து அங்கு காத்து நிற்போரில் ஒருவராக வினாயகமும் சேர்ந்து கொண்டார். தெருவின் திருப்பத்தில் பஸ்சின் முகம் தெரிந்தது. அனைவரும் பரபரப்பாகினர். அனைவர் கைகளிலும் ரிக்கற்றுக்களை ஆயத்தமாக்கிக் கொண்டனர். அவசரமாக பஸ்சில் ஏறியதும் சுற்றும்முற்றும் பார்த்தார். ஓரத்தில் ஒரு சீற் வெறுமையாகத் தெரிந்தது. விரைந்து சென்று வெறுமையை நிரப்பி;க் கொண்டார்.

மன நிம்மதியுடன் நின்றுகொண்டு பயணம் செய்வோரை நோட்டமிட்டார். பலநிற, பல மொழி பேசும் மக்கள் பலவிதமான ஒப்பனைகளுடன் ஒரு கூடைக்குள் குவிந்துள்ள மலர்க் கூட்டம்போல் காட்சியளித்தனர். இரண்டு சீற்றுக்கு முன்னால் அவரது கண்கள் நிலைகுத்தியது. நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண். கூர்ந்து கவனித்தார் "தமிழ்ப் பொம்பிளையாத்தான் இருக்க வேணும்." மனதிற்குள் கூறிக் கொண்டார். அவளை ஒட்னாற்போல் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன். வினாயகம் விழிவிரிய நோக்கினார். இடையிடையே இருவரும் ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டனர். அரும்பு மீசையுடன் அழகான அந்த வாலிபன் கையில் செலுலோர் தொலைபேசி. தோளில் புத்தகப்பை. காதுகளில் வோக்மன். தொள தொள உடை. நாகரிகமான வாலிபன்தான்.

வினாயகத்திற்கு வேறுசிந்தனைகள் மறந்து போயின. "இண்டைக்குப் பின்னேரம் சண்முகத்தை சந்திக்க வேணும்." இன்றைய மாலைப்பொழுதைக் கழிப்பதற்கு சுவாரசியமான விசயம் அகப்பட்ட அக்களிப்பு. "எங்கட பொம்பிளையள் கனடாவிற்கு வந்து நல்லாப் பழுதாப் போயிற்றினம். அங்க இருக்கேக்க சீலை கட்டி, ஆம்பிளையளக் கண்டால் வெக்கப்பட்டு, மரியாதை கொடுத்து, வாசல்படி தாண்டாமல் வாழ்ந்ததுகள். இங்க வந்து உடை, நடை, எல்லாம் மாறி இப்ப இளவட்டங்கள சோடி சேர்த்துக் கொண்டு திரியுதுகள். சீ, என்ன கேவலம்" அடிக்கடி அவரின் கண்கள் அவர்களைச் சுற்றியே அலைந்தது.

அவருக்குள் ஆத்திரம் உச்ச நிலையை அடைந்து கொண்டிருந்தது. "அவன்ர கை அவளில உரசுறதுகூடத் தெரியாமல் என்ன இது? சூடு சுரணை இல்லாம இப்ப பொம்பிளையள் மாறிப் போயிற்றினம். இது கலிகாலம். இன்னும் என்னென்ன காட்சியெல்லாம் நடக்கப் போகுதோ" சிந்தித்த வினாயகத்திற்கு இப்ப இதுபற்றிப் பேச தனது நண்பர்கள் ஒருவரும் அருகில் இல்லாதது ஏக்கமாக இருந்தது. இதைப்பற்றி இன்று மாலை ஒரு பெரிய கலந்துரையாடல் நடத்தத் திட்டமிட்டார். அது பட்டிமன்றமாக மாறினாலும் ஆச்சரியப்பட முடியாது.

வினாயகத்தார் உற்று நோக்கினர். அவரது ஆத்திரம் இன்னும் அதிகமாகியது. "இதுகளுக்குத் தாலி ஒரு கேடு. தாலி கட்டினவன் எங்கேயோ தெரியாது. சிலவேளை இரண்டு வேலை செய்யப் போயிருப்பான். இல்லாட்டி அவனை ஊரில விட்டுப் போட்டு வந்து இங்க இப்பிடி ஆடுதுகளோ"

"சீ, வெள்ளிக் கிழமையும் அதுகுமா இது என்ன? இப்பிடி எண்ணமெல்லாம் வருகுது." மனம் ஒருகணம் துணுக்குற்றது. "நான் என்ன சும்மாவா நினைக்கிறன். இதுகளைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆத்திரம் வராது" கையில handbag வேற வேலைக்குப் போறாவாம். "இதுகளை இப்பிடி விட்டுப்போட்டு புருசன் வீட்டில என்ன செய்யிறானோ?" மீண்டும் மனக்குரங்கு கொப்புக்குத் தாவியது. தன்னைச் சுற்றி நோட்டமிட்டார்.

பஸ்சிற்குள் இருந்த ஒவ்வொருவரும் தத்தமது பாட்டில் ஏதோ சிந்தனையுடன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க தான் மட்டும் வசதியான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நெரிசலுக்குள் இடருடன் பிரயாணம் செய்யும் மக்களை, அதிலும் குறிப்பாக தன் இனத்து மக்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தார். சிறிது வெட்கமாகவும் இருந்தது. வேதனையாகவும் இருந்தது.

தானாடாவிட்டாலும்தன் தசையாடுமென்பார்கள். "அதுகளுக்கென்ன யார் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன எண்டு இருக்குதுகள். நான் அப்பிடியே, நான் தமிழன், இங்க இரண்டு தமிழர் கேவலமா நடக்கேக்க எனக்கு ஆத்திரும் வரும்தானே" இது என்ன நாடோ, என்ன சனமோ? எங்கட ஊர், சனம், பழக்கவழக்கம், பண்பாடு, எல்லாமே போச்சு. எல்லாமே மண்ணாப் போச்சு.

பஸ் குலுக்கலுடன் ஸ்டேசனில் நின்றது. வினாயகம் கனவிலிருந்து விழித்தது போல எழுந்தார். ஏல்லோரும் அவசரம் அவசரமாக பஸ்சைவிட்டு இறங்கி ஓடிக்கொண்டிருந்தனர். வினாயகமும் எப்படியோ இடித்துப் பிடித்து அந்தப் பெண்ணும் வாலிபனும் நின்ற இடத்தை ஒட்டினாற் போல இறங்கினார். இறங்கியவர் இடத்தைக் காலி பண்ணாமல் மெதுவாக அவர்கள் அகலும் திசையிலேயே கால்களை நகர்த்தினார். இவர்களைப் பற்றி இன்னும் அறியும்ஆவல். எங்கே போகிறார்கள் என்று அறிந்தால் மாலை நேரம் மனம்போல கலந்துரையாடலாம்.

இவர் அருகில் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. அடுத்த நிறுத்தத்தில் கல்லூரிக்குச் செல்லும் பஸ் வந்து புறப்பட ஆயத்தமாக நின்றது. பட்டாம் பூச்சிகள் போல பல வர்ண இளைஞர்களும் யுவதிகளும் பஸ்சிற்குள் ஏற ஆயத்தமாகினர். இடை அழகும், நடை அழகும், எல்லோர் கண்களுக்கும் விருந்தாக இருந்தும் விருந்தை ரசிக்க முடியாமல் அனைவருக்கும் விரைந்து செல்ல வேண்டிய அவசரம்.

பஸ் புறப்பட ஆயத்தமாவதை அறிந்த வாலிபன் அப் பெண்ணின் பக்கம் திரும்பி "bye mom" என்று கையசைத்துவிட்டு விரைந்து சென்று பஸ்சில் தாவினான். அந்த வாலிபனின் பஸ் நகர்வதைப் பார்த்துவிட்டு அப் பெண் தனது பஸ்சை நோக்கி விரைய,

"bye mom" என்ற சொற்கள் வினாயகத்தின் செவிப்பறையில் வந்து வந்து மோதின. அப்படியென்றால், அப்படியென்றால் அந்த அரும்புமீசை வாலிபனுக்கு இவள் அம்மாவா? "அம்மா, அம்மா" என்று அவரது வாய் சூழ்நிலையையும் மறந்து சத்தமாக முணுமுணுத்தது. யாரோ கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைவது போன்ற வேதனையுடன் பஸ்சில் ஏற மறந்து விக்கித்து நின்றார் வினாயகம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

Edited by yarlpaadi

கதையை பயணித்த விதம் மிகவும் அழகு அதில் முடிவு வித்தியாசமான முடிவை போட்டு கதையை மேலும் மேருகூட்டி உள்ளீர்கள் வாழ்த்துகள் :lol: !!நீங்க சொன்ன கதையின் முடிவு மாதிரி பல சம்பவங்களை நானும் அறிந்துள்ளேன் என் நண்பனிற்கும் இதே பிரச்சினை இருக்கு.... :lol:

அப்ப நான் வரட்டா!!

கண்மணி,

கதை மிகச்சிறப்பாக உள்ளது. நான் யாழில் இதுவரை காலமும்வாசித்த மிகச்சிறந்த குறுங்கதைகளில் ஒன்று என்று சொல்லலாம்.

கதையில் ஒரே ஒரு சின்னமாற்றம் செய்து இருக்கலாம் எண்டு தோனிச்சுது.

அரும்பு மீசையுடன் அழகான அந்த வாலிபன் கையில் செலுலோர் தொலைபேசி. தோளில் புத்தகப்பை. காதுகளில் வோக்மன். தொள தொள உடை. நாகரிகமான வாலிபன்தான்.

இப்ப ஆக்கள் வோக்மன் பாவிப்பது குறைவு. இதற்கு பதிலாக ஐபொட் எண்டு சொல்லி இருக்கலாம்.

தமிழ்செல்வன் அண்ணா பற்றி அழகிய கவிதை ஒன்றையும் யாழில் அண்மையில் படைத்து இருந்தீர்கள்.

யாழில் உங்கள் இலக்கியப்பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்!!

நன்றி!

பஸ்சிற்குள் இருந்த ஒவ்வொருவரும் தத்தமது பாட்டில் ஏதோ சிந்தனையுடன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க தான் மட்டும் வசதியான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நெரிசலுக்குள் இடருடன் பிரயாணம் செய்யும் மக்களை, அதிலும் குறிப்பாக தன் இனத்து மக்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

நல்லாக இருக்குது உங்கள் கதை.

ஆனால் பாருங்க நம்மட ஆக்கள் விடுப்பு பார்க்கிறதில் வல்லுநர்கள் என மேற்குறிப்பிட்ட பதியில் அழகாக சொல்லி இருக்கிறீங்க.

பார்ப்பவற்றை எப்பவுமே தப்பாக பார்த்து பார்த்து பழகிட்டினம். வேறை ஒண்ணுமே இல்லை

கதை நன்றாக இருந்தது நீங்கள் எழுதியபாங்கும் ரசிக்கத்தக்கமாதிரி இருந்தது....நாட்டில் ரியூசனுக்கு சித்தப்பாவின் மகளை(தங்கையை) கொண்டுபோய் விடும் போதும் சிலரது பார்வையும் பேச்சும் இப்படி இருந்தது.... !

அதேசமயம் வெளிநாடு வந்து காதலியுடன் கோவில் ஒன்றுக்கு போகும் போது யார் இது தங்கையா என்று என்னை அதிர்ச்சி அடையச் செய்தவர்களும் உண்டு.... ! :wub:

பார்வைகள் பலவிதம் :wub: :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ்கள உறவுகளுக்கு சிறுகதையை வாசித்து பாராட்டிய யமுனா கலைஞன் வெண்ணிலா கௌரிபாலன் அனைவருக்கும் கண்மணியின் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

காவலூர் கண்மணி நல்லதொரு சிறு கதை.மற்றவை என்ன செய்கினம் என்பதில் எங்கடை ஆட்களை கேட்டு தான்.என்னவென்று அறியாட்டி சிலபேருக்கு நித்திரையே வராது. :(:lol:

கதை நன்றாக இருந்தது நீங்கள் எழுதியபாங்கும் ரசிக்கத்தக்கமாதிரி இருந்தது....நாட்டில் ரியூசனுக்கு சித்தப்பாவின் மகளை(தங்கையை) கொண்டுபோய் விடும் போதும் சிலரது பார்வையும் பேச்சும் இப்படி இருந்தது.... !

அதேசமயம் வெளிநாடு வந்து காதலியுடன் கோவில் ஒன்றுக்கு போகும் போது யார் இது தங்கையா என்று என்னை அதிர்ச்சி அடையச் செய்தவர்களும் உண்டு.... ! :)

பார்வைகள் பலவிதம் :( :)

:lol::lol::(:D:lol: எங்கை அண்ணி. ஒருக்கா சந்திக்கணும் அண்ணியை

:lol::lol::(:D:lol: எங்கை அண்ணி. ஒருக்கா சந்திக்கணும் அண்ணியை

இத்தோடா....உங்க பார்வைகூட பிழையாகிவிட்டதே... :( கல்யாணத்துக்கு முதல் நடந்ததை சொன்னேன் .... :) இப்ப கையுக்கை ஒன்று காலுக்கை ஒன்று என்று எப்படி கோவிலுக்கு போறது ( பிள்ளைகளைச் சொன்னேன் :) )

கதை நன்றாக இருந்தது நீங்கள் எழுதியபாங்கும் ரசிக்கத்தக்கமாதிரி இருந்தது....நாட்டில் ரியூசனுக்கு சித்தப்பாவின் மகளை(தங்கையை) கொண்டுபோய் விடும் போதும் சிலரது பார்வையும் பேச்சும் இப்படி இருந்தது.... !

அதேசமயம் வெளிநாடு வந்து காதலியுடன் கோவில் ஒன்றுக்கு போகும் போது யார் இது தங்கையா என்று என்னை அதிர்ச்சி அடையச் செய்தவர்களும் உண்டு.... ! :D

பார்வைகள் பலவிதம் :( :)

பேபி கூட கோயிலிற்கு போகும் போது யூனியில படிக்கிற கேள்ஸ் வந்து கதைத்து கொண்டிருந்தா அண்ணா :lol: வாறவை வந்து இவாவா உங்களின்ட தங்கைச்சி அல்லது அக்காவென்று கேட்பீனம் நேக்கு எப்படி இருக்கும் அண்ணா :lol: நீங்களே யோசித்து பாருங்கோ வாறவை இது தான் உங்க ஆளா என்று கேட்டா நேக்கு வேலை பளு கொஞ்சம் குறையும் தானே :( இந்த லோகத்தை என்னால புரிந்து கொள்ளவேமுடியவில்லை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இத்தோடா....உங்க பார்வைகூட பிழையாகிவிட்டதே... :( கல்யாணத்துக்கு முதல் நடந்ததை சொன்னேன் .... :lol: இப்ப கையுக்கை ஒன்று காலுக்கை ஒன்று என்று எப்படி கோவிலுக்கு போறது ( பிள்ளைகளைச் சொன்னேன் :lol: )

இப்ப உங்க பார்வை பிழையாகிட்டுது பார்த்தியளாஅ.

நான் சும்மா என் அண்ணியை சந்திக்கணூம் என்று சொன்னேன். இது தப்பா? :(

பேபி கூட கோயிலிற்கு போகும் போது யூனியில படிக்கிற கேள்ஸ் வந்து கதைத்து கொண்டிருந்தா அண்ணா :( வாறவை வந்து இவாவா உங்களின்ட தங்கைச்சி அல்லது அக்காவென்று கேட்பீனம் நேக்கு எப்படி இருக்கும் அண்ணா :D நீங்களே யோசித்து பாருங்கோ வாறவை இது தான் உங்க ஆளா என்று கேட்டா நேக்கு வேலை பளு கொஞ்சம் குறையும் தானே :lol: இந்த லோகத்தை என்னால புரிந்து கொள்ளவேமுடியவில்லை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

பாவம் ஜம்மு.

ஜம்மு இப்படியான நேரங்களில் நீங்களேஎ சொல்லிட வேண்டியதுதானே இவா நம்மட ஆள் என்று. :(

பாவம் ஜம்மு.

ஜம்மு இப்படியான நேரங்களில் நீங்களேஎ சொல்லிட வேண்டியதுதானே இவா நம்மட ஆள் என்று. :lol:

ம்ம்ம்ம் நிலா அக்கா பாவம் ஜம்மு :lol: கூட்டத்தில யாரை தான் சொல்லுறது வந்தவை சொல்லிட்டா லேசா இருக்கும் தானே நிலா அக்கா!!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி உங்கள் கதை அழகு. வாழ்த்துகள் .

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE(வெண்ணிலா @ Nov 15 2007, 12:38 AM)

"பாவம் ஜம்மு.

ஜம்மு இப்படியான நேரங்களில் நீங்களேஎ சொல்லிட வேண்டியதுதானே இவா நம்மட ஆள் என்று. "

ம்ம்ம்ம் நிலா அக்கா பாவம் ஜம்மு கூட்டத்தில யாரை தான் சொல்லுறது வந்தவை சொல்லிட்டா லேசா இருக்கும் தானே நிலா அக்கா!!!

எதோ குரு மாறுதாம்.அப்போவாவது எங்கட அல்லா துணை புரியட்டும். :lol::lol:

எதோ குரு மாறுதாம்.அப்போவாவது எங்கட அல்லா துணை புரியட்டும். :lol::D

ஓ நுணாவிலன் அண்ணா குரு மாறுதோ அப்பவாது நல்ல காலம் பிறகட்டும் பேபிக்கு :lol: அது சரி உங்களுக்கு எப்படி கிடைச்சிட்டோ :D !!எல்லாம் அல்லாவின் செயல் நீங்களும் அல்லாவையா கும்பிடுறனீங்க நானும் தான்!! :D

அப்ப நான் வரட்டா!!

அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்

தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்

உயிர்காதல் இன்று உண்டானது இருஜீவன் ஒன்று என்றானது

:lol::lol::D

ஜம்முவுக்கும் நுனாவுக்கும் அல்லாவின் ஆசிகள் கிடைக்க வாழ்த்துக்கள் :D

Edited by வெண்ணிலா

அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்

தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்

உயிர்காதல் இன்று உண்டானது இருஜீவன் ஒன்று என்றானது

:lol::lol::lol:

ஜம்முவுக்கும் நுனாவுக்கும் அல்லாவின் ஆசிகள் கிடைக்க வாழ்த்துக்கள் :lol:

நிலா அக்கா நீங்களும் அல்லாவையா கும்பிடுறனீங்க அக்கா........ :wub: !!அட யாரப்பா இரு ஜீவன் நேக்கு அப்படி ஒன்றும் இல்லை நுணாவிலன் அண்ணா உங்களுக்கு எப்படி!! :wub:

நன்றி நிலா அக்கா வாழ்த்துகளிற்கு :) தங்களுக்கு என்ன மாதிரி என்று சொல்லவே இல்லை!! :(

அப்ப நான் வரட்டா!!

நிலா அக்கா நீங்களும் அல்லாவையா கும்பிடுறனீங்க அக்கா........ :wub: !!அட யாரப்பா இரு ஜீவன் நேக்கு அப்படி ஒன்றும் இல்லை நுணாவிலன் அண்ணா உங்களுக்கு எப்படி!! :wub:

நன்றி நிலா அக்கா வாழ்த்துகளிற்கு :lol: தங்களுக்கு என்ன மாதிரி என்று சொல்லவே இல்லை!! :(

அப்ப நான் வரட்டா!!

:lol: நாம எப்பவும் முருகனை தான் வழிபடுவம்.

தங்களுக்கு எதுவுமே இல்லைப்பா. விட்டால் ஜம்மு என்ன எல்லாமோ வைச்சு கதை எழுதிடும்

:wub: நாம எப்பவும் முருகனை தான் வழிபடுவம்.

தங்களுக்கு எதுவுமே இல்லைப்பா. விட்டால் ஜம்மு என்ன எல்லாமோ வைச்சு கதை எழுதிடும்

ஓ நீங்க முருகனையா வழிபடுறனீங்க நிலா அக்கா பேபி அவரை சுகம் விசாரித்ததா சொல்லிவிடுங்கோ :( !!அட உங்களுக்கு ஒன்றும் இல்லையா சா கதை எல்லாம் எழுதமாட்டேன் பயப்பிடாம சொல்லுங்கோ நிலா அக்கா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கவலூர் பண்டிதர் சீ சீ கவலூர் கண்மணி கதை அழகு வாழ்த்துக்கள் .தொடர்ந்து இப்படியான் படைப்புக்களை தரவும்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் கறுப்பி புத்தன் மற்றும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகள்

நல்லதொரு கதை.

காலமாற்றம் கலாச்சார மாற்றம் கோல மாற்றம் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள பழைய கண்களுக்கு புதிய பார்வை கொடுக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.