Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20260204-WA0015-scaled.jpg?resize=75

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

IMG-20260204-WA0014.jpg?resize=600%2C338&ssl=1

தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந் நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.

இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

IMG-20260204-WA0013.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2026/1463127

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

26-6982d1c9ca62d.jpeg?resize=750%2C375&s

கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு – கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

26-6982d1ca826e5.jpeg?resize=600%2C450&ssl=1 26-6982d1c79dd3c.jpeg?resize=600%2C450&ssl=1 26-6982d1c6e216b.jpeg?resize=600%2C450&ssl=1

https://athavannews.com/2026/1463133

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

Feb 4, 2026 - 01:20 PM

சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் இன்று (4) போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் கறுப்பு நிறக் கொடியினை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்ட பேரணி டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இதன்போது அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதிகளவான பொலிஸார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் பேரணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேநேரம் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://adaderanatamil.lk/news/cml7q97j404t3o29nppugd9gi

  • கருத்துக்கள உறவுகள்

"இது சுதந்திர தினம் அல்ல; எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள்!" - காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

04 Feb, 2026 | 02:09 PM

image

காலனித்துவ முடிவில் ஏற்பட்ட அரசியலமைப்பு தோல்வியை இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

இன்றைய தினம் (4) அவர்கள் தமது போராட்ட பந்தலில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

1948ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் காணாமலாக்கும் ஒரு நீண்ட, இருண்ட பாதையின் தொடக்கமாக மாறியது. நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் சட்ட நிபுணர்கள் அல்லர். நாங்கள் தாய்மார்கள். எங்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள். 

அவர்களை வளர்த்தவர்கள். அவர்களை இழந்தவர்கள். இன்று, வவுனியா நகரில், இந்த வன்னிப்பந்தலில் 3271நாட்களாக நாங்கள் அமர்ந்திருக்கிறோம். 

IMG_20260204_110645.jpg

மழையிலும் வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை. 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. 

ஆனால், அந்த சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களை காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை. 

 இந்த அநீதியின் வேர்கள், சொல்பரி கமிஷன் உருவாக்கிய அரசியல் அமைப்பிலேயே உள்ளன. இங்கிலாந்து இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறி, பெரும்பான்மை ஆட்சியை ஜனநாயகமாக்கி, தமிழர்களை பாதுகாப்பு அற்றவர்களாக விட்டுச் சென்றது. 

காலனித்துவத்திற்கு முன்பு, தமிழர்களுக்கு தங்கள் சொந்த அரசியல் அதிகாரம் இருந்தது. தங்கள் சொந்த நிலமும் நிர்வாகமும் இருந்தது. இந்த உண்மை அரசியலமைப்பில் சொல்லப்படவில்லை. 

சொல்லப்படாத உண்மை, பின்னர் எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஒரு சட்டபூர்வ அநீதியாக மாறியது. அந்த தவறுகளின் விலையையே இன்று நாங்கள் இந்த பந்தலில் எங்கள் கண்ணீரோடு செலுத்துகிறோம். 

எங்கள் கேள்வி எளிமையானது. எங்கள் குழந்தைகள் எங்கே? அவர்கள் எங்கே? யார் பொறுப்பு? எப்போது நீதி? கரி நாள் எங்களுக்கு ஒரு சடங்கு நாள் அல்ல. அது ஒரு நினைவூட்டல். 

சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்று தெரிவித்தனர்.

IMG_20260204_110701.jpg

IMG_20260204_110800.jpg

IMG_20260204_110910.jpg

IMG_20260204_111017.jpg

IMG_20260204_112122.jpg

https://www.virakesari.lk/article/237803

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் துன்பங்களுக்கு தீர்வுவரும், விடிவுவரும். அடுத்த பொங்கல், வருடபிறப்பு, தீபாவளி என்று ஆறுதல் சொல்லச் சம்பந்தரும் இல்லையே!😭

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

Feb 4, 2026 - 05:44 PM

மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்லமுடியாது என பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் தமது போராட்டம் வழமையாக காந்திபூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

எனினும் அங்குசெல்வதற்கு அனுமதிக்கமுடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறவினர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பல்வேறு கோசங்களுடன் பேரணியானது நினைவு ஊர்தியுடன் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு திருகோணமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் நோக்கிசென்றபோது வெள்ளைப்பாலம் அருகில் பொலிஸாரினால் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் மறிக்கப்பட்டு புதுப்பாலம் ஊடாக பேரணியானது செல்லுமாறு பணிக்கப்பட்டது.

எனினும் தாங்கள் தமது போராட்டத்தினை நகர் ஊடாகவே செல்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸாருடன் முரண்பட்டு தள்ளுப்பட்ட நிலையில் பொலிஸார் அப்பகுதி ஊடாக செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் பிரகடனம் வாசிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://adaderanatamil.lk/news/cml7zo5a00007356n66zcofgo

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!

04 Feb, 2026 | 03:28 PM

image

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (4) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, பசுமைப் பூங்கா வரை ஊர்வலமாக சென்றது. 

IMG-20260204-WA0047.jpg

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி எனபவற்றைக் கோரி கோஷங்களை எழுப்பியதுடன், தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தியும், தமிழர் தாயகப் பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி, பதாதைகளைத் தாங்கியவாறு சென்றனர். 

அதேவேளை தமிழர்கள் இந்நாட்டில் அடிமைப்படுத்தப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தும் வகையிலான காட்சிப் பொருட்களைத் தாங்கியவாறு "சிங்கக்கொடி அவமானச் சின்னம், இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள்" எனக் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றபோது A9 பிரதான வீதியின் ஒருபக்க வழித்தடத்தில் வீதிப் போக்குவரத்து சிறிதுநேரம் தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20260204-WA0062_resized_1.jpg

IMG-20260204-WA0061.jpg

IMG-20260204-WA0059.jpg

IMG-20260204-WA0060_resized_1.jpg

IMG-20260204-WA0053.jpg

IMG-20260204-WA0052.jpg

IMG-20260204-WA0050.jpg

IMG-20260204-WA0049.jpg

IMG-20260204-WA0048.jpg

IMG-20260204-WA0046.jpg

IMG-20260204-WA0045.jpg

IMG-20260204-WA0044.jpg

IMG-20260204-WA0012.jpg

IMG-20260204-WA0043.jpg

கிளிநொச்சியில் கரிநாள் அனுஷ்டிப்பு ; கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மட்டகளப்பு வன்னியால்தான் தமிழ் தேசியம் ஐ சி யூவிலாவது உயிர்வாழ்கிறது.

அங்கால படகு ஓட்டுறதுலயும், மேளம் பீப்பீ, காவடி ஆடுறதுலயும் பிசி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

மட்டகளப்பு வன்னியால்தான் தமிழ் தேசியம் ஐ சி யூவிலாவது உயிர்வாழ்கிறது.

அங்கால படகு ஓட்டுறதுலயும், மேளம் பீப்பீ, காவடி ஆடுறதுலயும் பிசி.

தலைமுறை தலைமுறையாக ஒரே விடயத்தை செய்ய சொன்னால் போரடிக்காதா? பிறக்கிற பிள்ளை பிறக்க போற பிள்ளை எல்லாத்துக்கும் நீ இப்படி தான் யோசிக்கவேண்டும் இதை தான் செய்ய வேண்டும் என thinking framework போடுவது காலப்போக்கில் அவர்களுக்கு போரடிக்கவே செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

தலைமுறை தலைமுறையாக ஒரே விடயத்தை செய்ய சொன்னால் போரடிக்காதா? பிறக்கிற பிள்ளை பிறக்க போற பிள்ளை எல்லாத்துக்கும் நீ இப்படி தான் யோசிக்கவேண்டும் இதை தான் செய்ய வேண்டும் என thinking framework போடுவது காலப்போக்கில் அவர்களுக்கு போரடிக்கவே செய்யும்.

சக மனிதனாக, என் சொந்த மண்ணில் கெளரவமாக வாழ வேண்டும் என்ற உந்தல்…

சுதந்திரவேட்கை….என்றும் போரடிக்காது.

ஆனால் ஈரச்சாக்கால் மூடி மழுங்கடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சக மனிதனாக, என் சொந்த மண்ணில் கெளரவமாக வாழ வேண்டும் என்ற உந்தல்…

சுதந்திரவேட்கை….என்றும் போரடிக்காது.

ஆனால் ஈரச்சாக்கால் மூடி மழுங்கடிக்கலாம்.

மக்களின் வேட்கை, கௌரவமாக வாழ்வது, theoretically அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை எடுத்தாளவேண்டிய தலைமைகள் இப்படி வருடாந்த கொண்டாட்டங்கள், வெற்று சுலோகங்களை தமது அரசியல் நலனுக்காக மட்டும் பாவித்துவருவதும், நம்பியிருந்த மக்களை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற மனநிலைக்கு கொண்டுவந்த தலைமைகளது செயற்பாடுகள் மேலும் மக்கள் வாழ்வை எதிர் மறையிலேயே( அவர்கள் வாழ்வை அல்ல) செல்லல வைக்குமேயொழிய எந்த முன்னேற்றத்தையும் காணப்போவதில்லை.

இப்போதைய நிலையில் தாயகத்தில் படித்து அங்கு தொழில் செய்யலாம், சுய வியாபாரங்களைச் செய்யலாம் என்ற மன நிலையை அங்குள்ள படித்துக்கொண்டிருக்கும் இளவயதினரிடைநே துளிர் விட தொடங்கியுள்ளதை அங்கு சென்ற போது அவதானித்தேன். அதையும் கெடுத்து அவர்களையும் வெளிநாடு நோக்கி படையெடுக்க வைத்து டயஸ் போரா தமிழ் தேசியத்தை கட்டியெழுப்புவது (சிறு திருத்தம் கொத்து ரொட்டி தமிழ் தேசியம் என்றும் அழைக்கலாம்😂) ஒரு சிலருக்கு வாழ்வை வளமாக்கவும் உதவுமேயொழிய எதுவும் நடக்கப்போவதில்லை.

Edited by island

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.