Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?

பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளில் விசாரணைக்காக ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார்.

பட மூலாதாரம்,US Department of Justice

படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன்

4 பிப்ரவரி 2026

''நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது" என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார்.

பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர் இழந்தார்.

ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதற்காக அவர் தண்டிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாக அவர் பதிவு செய்யப்பட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

சிறுமிகளை பாலியல் உறவுக்காக பயன்படுத்தும் "பெரிய வலையமைப்பு" ஒன்றை நடத்தினார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

நவம்பர் 2025-ல், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தை' பெருமளவில் அங்கீகரித்தன.

அதன் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மசோதாவில் கையெழுத்திட்டார். எப்ஸ்டீன் மீதான குற்றவியல் விசாரணைகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் டிசம்பர் 19-க்குள் வெளியிடுமாறு நீதித்துறைக்கு அது உத்தரவிட்டது.

ஜனவரி 30 அன்று, அமெரிக்க நீதித்துறை மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை வெளியிட்டது. அதில் ஒரு வீடியோவில், "நீங்கள் உங்களை ஒரு டெவில் என்று நினைக்கிறீர்களா?" என கேட்கப்பட்டபோது, "என்னிடம் ஒரு நல்ல கண்ணாடி இருக்கிறது" என்று எப்ஸ்டீன் கூறுவது பதிவாகியுள்ளது.

கிட்டத்தட்ட அந்த இரண்டு மணி நேர முழு வீடியோவில், அவர் நேர்காணல் செய்பவரின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைக் காண முடிகிறது. ஆனால் அந்தக் கேள்விகளைக் கேட்பது யார், அந்த வீடியோ எப்போது, எதற்காகப் படமாக்கப்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், ''வெள்ளிக்கிழமை ஆவணங்கள் வெளியிடப்பட்டது, மிகவும் விரிவான ஆவண அடையாளம் காணுதல் மற்றும் மறுஆய்வு செயல்முறை முடிவுக்கு வந்ததை குறிக்கிறது." என்றார்

ஆனால், முறையான காரணங்கள் இன்றி நீதித்துறை பல ஆவணங்களை மறைத்து வைத்திருப்பதாகப் போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த சிலரும் வாதிடுகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகளால் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்பட்ட தகவல்கள், மறைந்த எப்ஸ்டீன் மற்றும் அவரது உயர்மட்ட நட்பு வட்டாரத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளன.

எப்ஸ்டீனின் கடந்தகாலம்

பட மூலாதாரம்,Getty Images

எப்ஸ்டீனின் கடந்தகாலம்

நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த எப்ஸ்டீன், 1970-களின் நடுப்பகுதியில் அங்குள்ள டால்டன் என்ற தனியார் பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் கற்பித்தார். அவர் பல்கலைக்கழகத்தில் இந்த பாடங்களைப் படித்திருந்தாலும், பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.

அவரது மாணவர் ஒருவரின் தந்தை எப்ஸ்டீனின் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக, 'பியர் ஸ்டியர்ன்ஸ்' என்ற வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியின் மூத்த பங்குதாரரிடம் எப்ஸ்டீனை அவர் அறிமுகப்படுத்தினார்.

நான்கே ஆண்டுகளில் அங்கு எப்ஸ்டீன் ஒரு பங்குதாரராக உயர்ந்தார். 1982-க்குள் அவர் 'ஜே எப்ஸ்டீன் அண்ட் கோ' என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

அந்த நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாடிக்கையாளர்களின் சொத்துக்களை நிர்வகித்தது. இது அவருக்கு உடனடி வெற்றியைக் கொடுத்தது.

விரைவிலேயே எப்ஸ்டீன் தான் சேர்த்த செல்வத்தைச் செலவிடத் தொடங்கினார்.

புளோரிடாவில் ஒரு மாளிகை, நியூ மெக்ஸிகோவில் ஒரு பண்ணை மற்றும் நியூயார்க்கிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படும் ஒரு தனியார் வீடு ஆகியவற்றை வாங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பழகத் தொடங்கினார்.

"எனக்கு ஜெஃப்பை 15 ஆண்டுகளாகத் தெரியும். அருமையான மனிதர். அவருடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என்னைப் போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு, அவர்களில் பலர் இளவயதுடையவர்கள்" என்று 2002-ல் எப்ஸ்டீன் பற்றிய ஒரு கட்டுரைக்காக நியூயார்க் இதழிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

"இதில் சந்தேகமே இல்லை" ஜெப்ரி தனது சமூக வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்" என்றும் டிரம்ப் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2000-களின் தொடக்கத்தில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகப் பின்னாளில் டிரம்ப் கூறினார். எப்ஸ்டீன் விவகாரத்தில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் கூறுகிறார்.

"தனது கிளப்பில் வேலை செய்த பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதால்", பல ஆண்டுகளுக்கு முன்பே எப்ஸ்டீனை டிரம்ப் அங்கிருந்து வெளியேற்றிவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

தனது 'மார்-ஏ-லாகோ' கடற்கரை கிளப் ஸ்பாவில் பணிபுரிந்த இளம் பெண்களை எப்ஸ்டீன் "திருடிச் சென்றார்" என்றும், அதன் பிறகு அவரோடனான உறவு முடிந்துவிட்டது என்றும் டிரம்ப் கூறினார்.

1997ஆம் ஆண்டு டிரம்ப் உடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,1997ஆம் ஆண்டு டிரம்ப் உடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன்

முக்கியப் பிரமுகர்களுடன் நட்பு

டிரம்பைத் தவிர, இன்னும் பல முக்கியப் பிரமுகர்களுடன் எப்ஸ்டீன் நட்பு பாராட்டியுள்ளார். ஆனால், அவருடன் நட்பாக இருந்த காரணத்தினாலேயே அவர்கள் அனைவரும் தவறு செய்தவர்கள் என்று அர்த்தமல்ல.

2002-ல், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், நடிகர்கள் கெவின் ஸ்பேசி மற்றும் கிறிஸ் டக்கர் ஆகியோரை ஒரு பிரத்யேக தனியார் விமானத்தில் எப்ஸ்டீன் ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றார்.

2003-ல், திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து நியூயார்க் இதழை வாங்க அவர் முயற்சி செய்து தோல்வியடைந்தார். அதே ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 3 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார்.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோர், எப்ஸ்டீன் குறித்த விசாரணையில் சாட்சியம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் பிரிட்டன் அரசியல்வாதி பீட்டர் மண்டெல்சனுடனும் நட்பாக இருந்தார். இந்த நட்பிற்காக தான் வருந்துவதாக மண்டெல்சன் தெரிவித்தார். இந்த உறவின் காரணமாக, 2025-ல் அமெரிக்காவிற்கான தூதர் பதவியையும் அவர் இழந்தார். பின்னர் மண்டெல்சன் தொழிலாளர் கட்சியிலிருந்தும் விலகினார்.

தற்போது ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, மண்டெல்சன் மீது பிரிட்டன் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் 2009-ல் வர்த்தகச் செயலாளராக இருந்தபோது, அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களை எப்ஸ்டீனுக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்தபோதிலும், எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைக்கவே முயன்றார். அவர் பொது நிகழ்ச்சிகளையும் உணவகங்களில் நடக்கும் விருந்துகளையும் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.

மிஸ் ஸ்வீடன் பட்டம் வென்ற ஈவா ஆண்டர்சன் டுபின் மற்றும் பதிப்பாளர் ராபர்ட் மேக்ஸ்வெல்லின் மகள் கிஸ்லேன் மேக்ஸ்வெல் போன்ற பெண்களுடன் அவர் பழகினார். ஆனால் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளவில்லை.

டிஃப்பனி அண்ட் கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரோசா மங்க்டன், 2003-ல் வேனிட்டி ஃபேர் இதழுக்கு அளித்த பேட்டியில், எப்ஸ்டீன் "மிகவும் புதிரானவர்" மற்றும் "மர்மமானவர்" என்று கூறினார்.

"அவரை உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் ஒரு வெங்காயத்தின் தோலை உரிப்பது போல அடுத்தடுத்த அடுக்குகளைப் பிரிக்கும்போது, அடியில் இன்னும் வியக்கத்தக்க விஷயங்கள் இருக்கும். நீங்கள் எப்ஸ்டீனிடம் எதைப் பார்க்கிறீர்களோ அது உண்மை அல்ல" என்று அவர் கூறினார்.

எப்ஸ்டீனின் கடந்தகாலம்

பட மூலாதாரம்,US Department of Justice

தண்டனை மற்றும் ஒப்பந்தம்

2005-ஆம் ஆண்டு, 14 வயது சிறுமியின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்தனர். எப்ஸ்டீன் தனது பாம் பீச் இல்லத்தில் வைத்து தங்கள் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர்கள் கூறினர். அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் இருப்பதை காவல்துறை கண்டறிந்தது.

சிறுமிகளுக்கு எதிரான எப்ஸ்டீனின் அத்துமீறல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக மியாமி ஹெரால்டு இதழ் செய்தி வெளியிட்டது.

"இது 'ஒரு தனிப்பட்ட நபர் இன்னொருவர் மீது சுமத்திய குற்றம்' அல்ல," என்று பாம் பீச் காவல்துறை அதிகாரி மைக்கேல் ரெய்டர் அந்த நாளிதழுக்குத் தெரிவித்தார்.

"இது 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒருவருக்கு எதிராகக் கொடுத்த புகார். மேலும் அந்தச் சிறுமிகள் அனைவரும் அடிப்படையில் ஒரே மாதிரியான தகவல்களையே கூறினர்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

எப்ஸ்டீன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, 2007-ல் நியூயார்க் இதழுக்காக எழுதிய கட்டுரையில், "அவர் அந்தச் சிறுமிகளைப் பற்றி ஒருபோதும் ரகசியம் காத்ததில்லை" என்று கட்டுரையாளர் மைக்கேல் வுல்ஃப் குறிப்பிட்டார்.

"அவருக்குப் பிரச்னைகள் தொடங்கிய ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் பேசும்போது, 'எனக்குச் சிறுமிகளைப் பிடிக்கும்' என்றார். அதற்கு நான், 'ஒருவேளை நீங்கள் ' இளம் பெண்களைப் பிடிக்கும்' என்று சொல்லலாமே' என்றேன்," என வுல்ஃப் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், 2008-ல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எப்ஸ்டீனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதன் மூலம், அவருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பினார்.

அதற்குப் பதிலாக அவருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை கிடைத்தது. அந்தத் தண்டனையின் போது கூட, வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர "பணி நிமித்தமான விடுப்பு" அவருக்கு வழங்கப்பட்டது. 13 மாதங்களுக்குப் பிறகு அவர் நிபந்தனையுடன் வெளியே வந்தார்.

இளவரசர் ஆண்ட்ரூ என அறியப்பட்ட ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்–வின்ட்சர்,

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்–வின்ட்சர், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் அகோஸ்டா, எப்ஸ்டீனின் குற்றங்களின் அளவை மறைக்கும் வகையிலும், இதில் தொடர்புடைய மற்ற சக்திவாய்ந்த மனிதர்கள் அல்லது பாதிக்கப்பட்ட கூடுதல் நபர்கள் உள்ளார்களா என்பது குறித்த எப்.பி.ஐ விசாரணையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலும் இந்த ஒப்பந்தத்தைச் செய்ததாக மியாமி ஹெரால்டு செய்தி வெளியிட்டது.

அந்தப் பத்திரிகை இதனை "நூற்றாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தம்" என்று விவரித்தது.

இந்த ஊழல் தொடர்பாக ஜூலை 2019-ல் அகோஸ்டா ராஜினாமா செய்தார்.

2008 முதல், நியூயார்க் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் எப்ஸ்டீன் 'நிலை 3' பட்டியலில் சேர்க்கப்பட்டார். இது அவர் மீண்டும் குற்றம் செய்ய அதிக வாய்ப்புள்ளவர் என்பதைக் குறிக்கும் வாழ்நாள் அடையாளமாகும்.

ஆனால், தண்டனைக்குப் பிறகும் எப்ஸ்டீன் தனது சொத்துக்களை பராமரித்து வந்தார்.

டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (அப்போது இளவரசர் ஆண்ட்ரூ என்று அறியப்பட்டவர்), நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நவம்பர் 2019-ல் பிபிசி-க்கு அளித்த நேர்காணலில், 1999 முதல் எப்ஸ்டீனைத் தனக்குத் தெரியும் என்றும், 2010-ல் அந்த நட்பை முறித்துக் கொள்வதற்காகவே தான் நியூயார்க் சென்றதாகவும் ஆண்ட்ரூ கூறினார்.

அங்கு இருந்தபோது எப்ஸ்டீன் வீட்டில் தங்கியதற்காகத் தான் வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ஆண்ட்ரூ முன்பு ஒப்புக்கொண்டதை விட அதிக காலம் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த 2011-ஆம் ஆண்டின் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால், 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் பறிக்கப்பட்டன.

எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய விர்ஜினியா ராபர்ட்ஸ் (பின்னர் விர்ஜினியா ஜூஃப்ரே என அறியப்பட்டவர்), தான் 17 வயதாக இருந்தபோது 2000-களின் தொடக்கத்தில் ஆண்ட்ரூவுடன் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

ஆண்ட்ரூ இதனை திட்டவட்டமாக மறுத்தார். மேலும், லண்டனில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது குறித்து தனக்கு எதுவும் நினைவில்லை என்றும் கூறினார்.

ஆனால் ஆண்ட்ரூ 2022-ல் அவர் ஜூஃப்ரேயிடம் பல மில்லியன் டாலர்களை வழங்கி ஒரு சமரசத்திற்கு வந்தார். ஆண்ட்ரூ தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஜூஃப்ரே தாக்கல் செய்திருந்த வழக்கைத் தொடர்ந்து இந்தச் சமரசம் ஏற்பட்டது.

நியூயார்க்கில் கைது

பாரிஸிலிருந்து தனது தனி விமானத்தில் திரும்பி வந்தபோது, 6 ஜூலை 2019 அன்று நியூயார்க்கில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.

எப்ஸ்டீனின் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் அவரது நியூயார்க் வீட்டை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பறிமுதல் செய்ய முயன்றதாகத் தகவல்கள் தெரிவித்தன.

எப்ஸ்டீன் எப்போதும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றே கூறி வந்தார். மேலும் தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்ததையடுத்து, அவர் நியூயார்க்கின் பெருநகர சீர்திருத்த மையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

ஜூலை மாதம் அவருக்குக் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டு சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இது குறித்து சிறை அதிகாரிகளோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஜூலை 31 அன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, அவர் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பதும், 2020 கோடைக்காலத்திற்கு முன்பாக விசாரணை நடக்காது என்பதும் உறுதியானது. ஆனால், வழக்கை தாமதப்படுத்தாமல் விரைவாக நடத்துவது பொது நலனுக்கு உகந்தது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

எப்ஸ்டீன் ஒருபோதும் விசாரணையை எதிர்கொள்ளவில்லை.

மேக்ஸ்வெல் விசாரணை

எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு, அவரது முன்னாள் காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல் கவனத்துக்கு வந்தார்

எப்ஸ்டீன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்காக பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிந்தும் சிறுமிகளை அனுப்பியது மற்றும் அவர்களைத் தயார்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜூலை 2020-ல் அவர் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 2021-ல், நியூயார்க் நீதிமன்றத்தில் அவர் மீதான ஆறு குற்றச்சாட்டுகளில் ஐந்து நிரூபிக்கப்பட்டன. இதில் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காக கடத்தியது உள்ளிட்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டும் அடங்கும். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆக்ஸ்போர்டில் படித்த மேக்ஸ்வெல் தான், பில் கிளிண்டன் மற்றும் ஆண்ட்ரூ போன்ற பல செல்வந்தர்களையும் சக்திவாய்ந்த நண்பர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேக்ஸ்வெல் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான காதல் சில ஆண்டுகளே நீடித்தாலும், அதன்பிறகு நீண்ட காலம் அவர் எப்ஸ்டீனுடன் இணைந்து பணியாற்றியதாக நண்பர்கள் தெரிவித்தனர்.

எப்ஸ்டீன்-மேக்ஸ்வெல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தண்டனை உறுதியான பிறகு மேக்ஸ்வெல் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். "ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு" என்று அவர் கூறினார்.

எப்ஸ்டீனின் பாம் பீச் மாளிகையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், மேக்ஸ்வெல்லை அந்த வீட்டின் மேலாளராக விவரித்தனர். அவர் ஊழியர்களைக் கவனிப்பது, நிதி விவகாரங்களைக் கையாளுவது மற்றும் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளைச் செய்து வந்துள்ளார்.

2003-ல் வெளியான வேனிட்டி ஃபேர் இதழின் கட்டுரையில், மேக்ஸ்வெல் தனது சம்பளம் பெறும் ஊழியர் அல்ல என்றும், மாறாக தனது "சிறந்த நண்பர்" என்றும் எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, எப்ஸ்டீனின் பாலியல் தேவைகளுக்காக மேக்ஸ்வெல் சிறுமிகளை கண்டறிந்து, அவர்களைத் தயார் செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், எப்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு அவரது குற்றங்களுக்காகத் தன்னை ஒரு பலிகடாவாக ஆக்குகிறார்கள் என்று மேக்ஸ்வெல் தரப்பு வாதிட்டது.

தண்டனை உறுதியான பிறகு மேக்ஸ்வெல் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். "ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு ," என்று அவர் கூறினார்.

"ஆனால் இன்றைய நாள் எப்ஸ்டீனைப் பற்றியது அல்ல. இன்று, எனக்கு தண்டனை வழங்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் என்னிடம் நேரடியாக பேசுவதற்குமான நாள். உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான். நீங்கள் அனுபவித்த வலிக்கு நான் வருந்துகிறேன். எனது தண்டனையும் சிறைவாசமும் உங்களுக்கு ஒரு நிம்மதியைத் தரும் என்று நம்புகிறேன்," என அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேக்ஸ்வெல்லின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால், அந்த மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இறுதியில் நிராகரித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62vy172znvo

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSv-i4rDbRudAOqr0dhhAe images?q=tbn:ANd9GcQXhUhl5EuuadQl1K7euTW

2009-ஆம் ஆண்டு, மெக்சிகோவின் மாண்டெரி நகரில் 21 வயது மாடல் அழகி Gabriela Rico Jimenez ஒரு சொகுசு ஹோட்டலுக்கு வெளியே அரை நிர்வாண நிலையில் அலறிக் கொண்டிருந்தார். "அவர்கள் மனித மாமிசத்தைச் சாப்பிடுகிறார்கள்... அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள்... என்னை விட்டுவிடுங்கள்!" என்று அவர் கதறியது கேமராவில் பதிவானது.

அதிகாரிகள் அவரை 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று முத்திரை குத்தி அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்ற விவரங்கள் இன்றுவரை மர்மமாகவே உள்ளன.

ஒரு மாபெரும் உண்மையைச் சொன்னதற்காக அவர் “மௌனமாக்கப்பட்டாரா” என்ற கேள்வி இன்றும் நீடிக்கிறது.

பல ஆண்டுகள் கழித்து, அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டபோது, கேப்ரியலா சொன்ன வார்த்தைகளுக்கும் எப்ஸ்டீன் தீவில் நடந்தவைகளுக்கும் இடையே ஒரு அதிர்ச்சியூட்டும் ஒற்றுமை தென்பட்டது.

எப்ஸ்டீனின் 'Little St James ' தீவில் ஒரு விசித்திரமான கோவில் போன்ற கட்டிடம் இருந்தது.

அங்கு செல்வாக்கு மிக்க மனிதர்கள் ரகசிய வழிபாடுகளிலும், இருண்ட சடங்குகளிலும் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன.

எப்ஸ்டீன் மீதான FBI அறிக்கைகளில், சாட்சிகள் விவரித்த கொடுமைகள் , வன்முறை, நரமாமிசம் மற்றும் குழந்தைகளின் மீதான சித்திரவதை கேப்ரியலா 2009-ல் சொன்ன அதே வார்த்தைகளை எதிரொலித்தன.

உலகை ஆளும் சில உயர்மட்ட அதிகார வர்க்கத்தினர், தங்களின் செல்வம், புகழ் மற்றும் அதிகாரம் அழியாமல் நிலைத்திருக்க, இத்தகைய இருண்ட சக்திகளை நாடுகிறார்களா?

'Ba’al' வழிபாட்டின் மூலம் குழந்தைகளை பலியிடுகையில் ஒருவித 'சக்தி மாற்றம்' (Energy Transfer) ஒன்றை இந்த ரகசியக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

Ba’al' என்பது ஒரு குறிப்பிட்ட பெயரல்ல; பண்டைய செமிடிக் மொழிகளில் (Semitic languages) இதற்கு 'எஜமானன்', 'ஆளுபவர்' என்று பொருள். இது ஆரம்பத்தில் ஒரு கௌரவப் பெயராகவே இருந்தது.

கி.மு. 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே, பண்டைய கானானியர்கள் (Canaanites) மற்றும் போனீசியர்கள் (Phoenicians) Ba’al-ஐ ஒரு முதன்மைத் தெய்வமாக வழிபட்டனர்.

Ba’al’ மழையின் கடவுளாகவும், இடி-மின்னல் மற்றும் விவசாயத்தின் தெய்வமாகவும் கருதப்பட்டார். நிலத்தின் செழிப்புக்கு அவரே காரணம் என நம்பப்பட்டது.

Ba’al-ன் கோபத்தைத் தணிக்கவும், நிலம் செழிக்கவும் மக்கள் அவருக்குப் பல்வேறு சடங்குகளைச் செய்தனர்.

Ba’al-ன் வழிபாடு மிகவும் இருண்டதாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருந்த 'குழந்தை பலி' (Child Sacrifice) முறைதான்.

மர்மமான புராணங்களின்படி, ba’al-ன் ஆசீர்வாதத்தைப் பெறவும், பஞ்சத்தில் இருந்து தப்பிக்கவும் உயர்மட்டக் குடும்பத்தினர் தங்கள் முதல் குழந்தையை நெருப்பில் பலியிடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் (ப்ளூடார்க் போன்றவர்கள்) மற்றும் Bible குறிப்பிடுகின்றன.

இதில் குழந்தைகள் எரியும் நெருப்பிற்குள் எறியப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன.

நவீன மர்மக் கோட்பாடுகளில், 'Baal' என்பது வெறும் பண்டைய தெய்வம் மட்டுமல்ல, அது இன்று உலகை மறைமுகமாக ஆளும் சில ரகசியக் குழுக்களின் (Secret Societies) அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

இன்றும் உலகின் பெரும் செல்வந்தர்களும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள 'baal ' போன்ற இருண்ட சக்திகளுக்குப் பலி கொடுத்து வணங்குகின்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரு உயிரைப் பலியிடுவதன் மூலம் ஒரு பெரும் சக்தியைப் பெற முடியும் என்ற ரகசியக் கோட்பாட்டை (Occultism) பின்பற்றுபவர்கள் தான் இன்று உலகை ஆளும் அதிகார வர்க்கம்.

எப்ஸ்டீன் வழக்குகளில் 'ba’al' என்ற பெயர் அடிபடுவதற்குப் பின்னால் உள்ள காரணங்கள்

எப்ஸ்டீனின் நிதிப் பரிமாற்றங்களில் 'ba’al' என்ற குறியீட்டுப் பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது, அவர் ஒரு ரகசிய சாத்தானியக் குழுவின் (Cult) உறுப்பினராக இருந்திருக்கிறார் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

எப்ஸ்டீன் தீவில் இருந்த விசித்திரமான நீலக் கோடுகள் கொண்ட கோவில் போன்ற அமைப்பு, பண்டைய வழிபாட்டுத் தலங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது அதிகாரப் பசி கொண்டவர்கள் குழந்தைகளை பலிகொடுத்து தங்களின் 'எஜமானனுக்கு' (Baal) செய்யும் அர்ப்பணிப்பாகப் பார்க்கப்படுகிறது.

அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள், தங்களைச் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளவும், தங்களின் ரகசியக் கூட்டமைப்பை (Elite Cult) வலுப்படுத்தவும் இத்தகைய 'Ba’al' காலத்து இருண்ட சடங்குகளை நடாத்துகின்றனர்.

பண்டைய கார்த்தேஜ் நகரில் செல்வந்தர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படி குழந்தைகளைப் பலி கொடுத்தார்களோ, அதையேதான் நவீன கால "நிழல் உலக மனிதர்களும்" (Shadow Elite) செய்கிறார்கள்.

Gabriela rico jimenez போன்றவர்கள் அலறியது இதைப் போன்ற ஒரு கொடூரமான சடங்கைக் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம் என்பதே பலரது வாதம்.

Gabriela rico jimenez ஒரு மனநோயாளி அல்ல, மாறாக ஒரு இருண்ட கதவைத் தவறுதலாகத் திறந்துவிட்ட சாட்சி என்பதை எப்ஸ்டீன் வழக்கு நமக்கு உணர்த்துகிறது.

இந்த அதிகார வர்க்கத்தின் பின்னணியில் இருக்கும் சாத்தானிய சடங்குகளும், பண பலமும் எத்தனையோ உண்மைக் குரல்களை நசுக்கியுள்ளன.

Gabriella rico jimenez இன்று எங்கே என்பது தெரியவில்லை, ஆனால் அவர் எழுப்பிய அந்த அலறல் சத்தம், இந்த உலகை ஆளும் நிழல் மனிதர்களின் முகத்திரையை ஒரு நாள் கிழித்து தொங்க விடும்.

Mukinthan Thurairajasingham

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

627232431_1044592198727165_6045996375510

627467937_1402235431917968_4837325161213

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘எனது திருமண வாழ்க்கையின் மிக வலிமிகுந்த காலங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது’ ; எப்ஸ்டீன் ஆவணங்களில் முன்னாள் கணவர் பெயர் இடம்பெற்றது குறித்து மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ்

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 10:49 AM

image

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய அமெரிக்க நீதித்துறை ஆவணங்களில், தனது முன்னாள் கணவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவுநருமான பில் கேட்ஸின் பெயர் இடம்பெற்றுள்ளது, தனது “திருமண வாழ்க்கையின் மிக வலிமிகுந்த காலங்களை மீண்டும் கிளறியுள்ளதாக” கோடீஸ்வர பரோபகாரரும் சமூக செயற்பாட்டாளருமான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் என்.பி.ஆர் (NPR) ஊடகத்தின் ‘Wild Card’ என்ற பொட்காஸ்டிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தாம் “நம்பமுடியாத சோகத்தை” உணர்வதாகவும், அந்த ஆவணங்களில் தனது முன்னாள் கணவருர் உட்பட, பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், தங்களது நிலைப்பாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இந்தக் குழப்பங்கள் மற்றும் அசுத்தங்களிலிருந்து நான் விலகி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தெரிவித்தார். 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின்னர், பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

அமெரிக்க நீதித்துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களில், ஜெப்ரி எப்ஸ்டீன், பில் கேட்ஸுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய் ஏற்பட்டதாக கூறியுள்ள குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூற்றுகள் குறித்து பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர், “நிரூபிக்கப்பட்ட, நம்பகத்தன்மையற்ற பொய்யரிடமிருந்து வந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானவை மற்றும் முழுமையாகத பொய்யானவை” என்று தெரிவித்தார்.

எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் எந்த நபராலும் பில் கேட்ஸ்மீது பாலியல் தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டு இதுவரை முன்வைக்கப்படவில்லை. மேலும், இந்த ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெற்றிருப்பது எந்தவொரு குற்றச் செயலையும் குறிக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொட்காஸ்டில் தொடர்ந்து பேசிய மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், “அந்த விவரங்கள் வெளிவரும் போதெல்லாம் அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில், அது எனது திருமண வாழ்க்கையின் மிக மிக வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது” என்று கூறினார்.

“இன்னும் எஞ்சியிருக்கும் கேள்விகள் எவை இருந்தாலும், அவை அந்த நபர்களுக்கும், எனது முன்னாள் கணவருக்கும் உரியவை. அவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும்; நான் அல்ல” என்று தெரிவித்தார்.

அவர்களின் விவாகரத்திற்கு முன்னரே, எப்ஸ்டீனுடன் தனது கணவரின் தொடர்பு குறித்து மெலிண்டா அதிருப்தியடைந்திருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன. விவாகரத்து அறிவிக்கப்பட்ட பின்னர், 2019 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவருடன் தனக்கு தொடர்பு இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார்.

2013 ஜூலை 18 திகதியிட்ட இரண்டு மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை பில் கேட்ஸுக்கு அனுப்பப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. குறித்த மின்னஞ்சல்கள் எப்ஸ்டீனின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து அதே கணக்கிற்கே மீண்டும் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் பில் கேட்ஸுடன் தொடர்புடைய எந்த மின்னஞ்சல் முகவரியும் காணப்படவில்லை.

இந்த மின்னஞ்சல்களில் ஒன்றில், “ரஷ்யப் பெண்களுடன் ஏற்பட்ட உறவுகளின் விளைவுகளை சமாளிக்க” பில் கேட்ஸுக்கு மருந்துகள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளதுடன், மற்றொன்றில் அவரது நட்பு முறிந்தது குறித்த புலம்பல்களும் இடம்பெற்றுள்ளன.

நீதித்துறையால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், பிரபலங்கள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் உலக அரசியல் தலைவர்களுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த பரந்த தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 2008 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக தண்டனை பெற்ற பின்னரும், இந்த தொடர்புகள் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு பாலியல் கடத்தல் வழக்கில் விசாரணைக்காகக் காத்திருந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் நியூயோர்க் சிறையில் உயிரிழந்தார்.

https://www.virakesari.lk/article/237863

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சல் போலியானது - எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் பில்கேட்ஸ் விளக்கம்

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 05:48 PM

image

எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது என எப்ஸ்டீன் விவகாரம் தொடர்பில் பில்கேட்ஸ் விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி வழங்கும் பணியை மேற்கொண்டார். இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சர்ச்சைக்குரிய கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை அண்மையில் இலட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது. அதில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூயார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதியிட்ட மின்னஞ்சலில், “ரஷ்ய பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் பில் கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயை குணப்படுத்தும் மருந்தை அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு தெரியாமல் அனுப்புமாறு பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மெலிண்டாவுக்கும் பால்வினை நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில், அவருக்கு தெரியாமலேயே உணவில் மருந்தை கலக்க என்னிடம் உதவி கோரினார்” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். பில் கேட்ஸ் குறித்த இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக பில் கேட்ஸ் அளித்த விளக்கத்தில் தெரிவித்திருத்திப்பதாவது,

“எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் என் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக எப்ஸ்டீனைச் சந்தித்தேன். அதன்பின்னர் மூன்று ஆண்டுகளில் பலமுறை அவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டேன். ஆனால், அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருபோதும் சென்றதில்லை; பெண்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை. எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/237932

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

Ba’al-ன் வழிபாடு மிகவும் இருண்டதாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருந்த 'குழந்தை பலி' (Child Sacrifice) முறைதான்.

மர்மமான புராணங்களின்படி, ba’al-ன் ஆசீர்வாதத்தைப் பெறவும், பஞ்சத்தில் இருந்து தப்பிக்கவும் உயர்மட்டக் குடும்பத்தினர் தங்கள் முதல் குழந்தையை நெருப்பில் பலியிடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் (ப்ளூடார்க் போன்றவர்கள்) மற்றும் Bible குறிப்பிடுகின்றன.

இந்த வருட இறுதிக்குள் பல காட்சிகளை உலக அரங்கில் காணலாம் போல் உள்ளது.

ஐநா சபை,மனித உரிமைகள் சங்கம் அது இது என எல்லாம் நாறும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

ஒரு சில நம்வர்கள் பாவம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இந்த வருட இறுதிக்குள் பல காட்சிகளை உலக அரங்கில் காணலாம் போல் உள்ளது.

ஐநா சபை,மனித உரிமைகள் சங்கம் அது இது என எல்லாம் நாறும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

ஒரு சில நம்வர்கள் பாவம்.😂

HAaDqUNXIAsIhcL.jpg

விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

சிறுவர் பாலியற் குற்றவாளி எப்ஸ்ரெயின்(Epstein) கோப்புகள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்த கூல் சகோதரர்களும் எப்ஸ்ரெயினின் ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதன் மூலம் முதியவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் மூலம் பெறப்படுவதாக நம்பப்படும் அமானுஸ்ய சக்திகள் குறித்த ஆராய்ச்சியின் பகுதிகளுக்கும் தான் இவர்களது அறிவு பயன்பட்டதா என்பதனை கூல் சகோதரர்கள் தான் ஊடகத்தின் முன்னே வந்து பேச வேண்டும்.

இதே கூல் குடும்பம் தான் மேற்குலகின் வழிகாட்டலில் போதிய அளவு நிதியைப் பெற்று இலங்கையில் University teachers human rights (UTHR) என்ற ஓர் நிறுவனத்தை உருவாக்கி இன அழிப்புக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் குறித்தும் நபர்கள் குறித்தும் தகவல் சேகரித்து அந்த ஆவணத்தில் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல அந்த நாளில் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய அத்தனை இளைஞர்கள் பற்றிய தகவலகளையும் சேகரித்து அதனை அவர்களுக்கு எதிரான அரசின், மேற்குலகின் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பயன்படுமாறு உருவாக்கியவர்கள்.

உலகின் மிக மோசமான குரூரமான சிறுவர் பாலியல் குற்றமாகச் சொல்லப்படும் எப்ஸ்ரெயின் ஆராய்ச்சிக்கு உடந்தையாக இருந்த இந்த உத்தமர்கள் தான் , நேற்றுவரை UTHR என்ற அமைப்பை வைத்து எமது விடுதலைப் போராட்டதிற்கு எதிராக உலகெங்கும் எம்மையும் எமது போராட்டத்தையும், பயங்கரவாதமாக சித்தரித்தவர்கள், இதே கூட்டம் தான் முறிந்தபனை என்ற நூலையும் எழுதியது.

இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்லர். உலகில் நடைபெறும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒருவர் தான் ரஜினி திரணகம, உலகில் எந்தவொரு தேசிய இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடினாலும் அதனை மோசமாகச் சித்தரித்து அழித்துவிட மேற்குலகின் சக்திகள் இவர்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்கிறது, சர்வதேச பல்கலைக் கழகங்களில் புலமைப்பரிசில் வழங்குகிறது, கற்பிக்க வாய்ப்பு வழங்குகிறது. ஆனால் காலம் ஒரு கட்டத்தில் இவர்களை வெளிப்படுத்தும். வெளிப்படுத்தி இருக்கிறது. இது ஒரு சாதாரணமாக கடந்து போகும் சம்பவம் அல்ல,

1. UTHR

2. கூல் சகோதரர்கள்

3. அங்கிலிக்கன் திருச்சபை - இதற்கு பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா?

//அத்துடன் முக்கியமாக -

முறையாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அத்துமீறல்கள் குறித்த ஆவணத் தொகுப்பைப் பார்த்தபோது எப்ஸ்ரெயினின் குரூர வக்கிரத்திற்கு அங்குள்ள நம்மவர்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது.

பரமேஸ்வரா பள்ளி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்…//

நன்றி: Thiru Thirukumaran

SANGU-சங்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் “இலங்கை” என 188 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது!

Published By: Digital Desk 3

05 Feb, 2026 | 03:50 PM

image

அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தின் (U.S. Department of Justice) இணையதளத்தில் பொது மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில், ‘Sri Lanka’ (இலங்கை) என்ற சொல் 188 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக ஆவணங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

இந்த ஆவணக் காப்பகத் தரவுத்தளத்தில் ‘Sri Lanka’ என்ற சொல்லைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பல்வேறு தரவுத் தொகுதிகளில் இந்தக் குறிப்புகள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக மின்னஞ்சல்கள், பயணம் தொடர்பான தகவல்கள், தொடர்புப் பதிவுகள் மற்றும் மூன்றாம் தரப்பினரின் துணைத் தொடர்புகள் போன்றவற்றில் இவை இடம்பெற்றுள்ளன.

ஆவணங்களில் காணப்படும் பெரும்பாலான இலங்கை தொடர்பான குறிப்புகள், குற்றச்செயல்கள் அல்லது இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என ஆய்வு தெரிவிக்கிறது.

மாறாக, இலங்கைக்கு அல்லது இலங்கையிலிருந்து பயணம் செய்த தகவல்கள், வசிப்பிடம் குறித்த குறிப்புகள், கல்வி அல்லது தொழில்சார் பின்னணித் தகவல்கள், நேர மண்டலம் (Time Zone) தொடர்பான விவரங்கள், தனிப்பட்ட அல்லது தொழில்முறை உரையாடல்களில் இடம்பெற்ற சாமான்ய குறிப்புகள் போன்ற தற்செயலான சூழல்களிலேயே ‘இலங்கை’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில ஆவணங்களில், “இலங்கையில் இருந்தேன்”, “இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்” போன்ற சாதாரண தகவல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், சில நபர்களின் பிறப்பிடம், வசிப்பிடம் அல்லது தற்காலிக தங்குமிடமாகவும் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

இந்த தேடல் முடிவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, ஜெஃப்ரி எப்ஸ்டீனின் செயல்பாடுகளின் மையமாக இலங்கை இருந்ததாக எந்த சான்றுகளும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல்கள் மற்றும் இணைப்புகளில் பல நபர்கள் தொடர்பான உரையாடல்களில், இலங்கை என்பது வெறும் கடந்து செல்லும் குறிப்பாகவே (passing reference) இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த எப்ஸ்டீன் ஆவணங்களில், சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் தொடர்பாடல்கள் பெருமளவில் உள்ளன.

இதனால், ஆவணங்களில் இடம்பெறும் பெயர்கள் அல்லது இடங்கள் தவறான செயற்பாடுகளை குறிக்காது என்றும், அவற்றை முழுமையான சூழ்நிலையுடன் (context) புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வலையமைப்பு மற்றும் அவரது கடந்தகால செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை ஆராயும் பணியில், உலகளாவிய ஊடக நிறுவனங்கள் இந்த ஆவணக் காப்பகத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள் மேலதிக தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/237900

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான நிர்வாண படங்கள் - 'பெரும் பிழை' என சாடும் வழக்கறிஞர்கள்

எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தணிக்கை செய்யப்படாத நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகிறது.

படக்குறிப்பு,எப்ஸ்டீன்

கட்டுரை தகவல்

  • பெக்கி டேல் மற்றும் மாட் மர்பி

  • பிபிசி வெரிஃபை

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தணிக்கை செய்யப்படாத நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன.

இந்த கோப்புகளை தணிக்கை செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட அவை இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன.

இதனால் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஈடுசெய்ய முடியாத" தீங்கு ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பல்வேறு நபர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறிய கோப்புகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று எப்ஸ்டீன் கோப்புகளின் ஒரு பகுதியாக சுமார் 40 புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, வார இறுதியில் முதல்முறையாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வெளிப்படையாக பேசியது.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் படங்கள் முறையாகத் தணிக்கை செய்யப்படும் வரை அந்த வலைதளத்தை தடை செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இந்த பிரச்னையை விரைந்து சரிசெய்ய நீதித்துறை ஒப்புக்கொண்டுள்ளதாக நியூயார்க் நீதிபதி செவ்வாயன்று தெரிவித்தார்.

"தொழில்நுட்பம் அல்லது மனிதப் பிழையின்" காரணமாக இந்தக் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, இதுகுறித்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை நீதித்துறை தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் இது சார்ந்த புதிய புகார்களை ஆய்வு செய்து வருவதாகவும், கூடுதல் தணிக்கை தேவைப்படும் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்த்து வருவதாகவும் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம், முழுமையாக தணிக்கை செய்யப்படாத கோப்புகளை ஆய்வு செய்து திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) கூறிய போதிலும் கூட, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணத்தக்க படங்கள் புதன்கிழமை அன்றும் இணையத்தில் கிடைப்பதை பிபிசி வெரிஃபை கண்டறிந்தது.

இது குறித்து நீதித்துறையை அணுகிய பிபிசி, தணிக்கை செய்யப்படாத கோப்புகளின் பெயர்களையும் வழங்கியதுடன், இது பற்றிய கருத்தை கேட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பிராட் எட்வர்ட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஏற்பட்டுள்ள சேதம் ஈடுசெய்ய முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையின் மிகக் கொடூரமான தருணங்களில் ஒன்றை மீண்டும் பொதுமக்கள் முன் கொண்டுவந்துள்ளது," என்று எப்ஸ்டீனின் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட ஆஷ்லி ரூப்ரைட் பிபிசியிடம் கூறினார்.

பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த நான்கு படங்களில், முகம் மற்றும் உடல் தணிக்கை செய்யப்படாத நிலையில் முழுமையாக ஆடை அணியாத இளம்பெண்கள் காணப்பட்டனர்.

சமூக பிரபலங்கள் பலருடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த ஆதாரங்களுக்காக, வெளியிடப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோப்புகளில் தேடியபோது இவை கண்டறியப்பட்டன.

சிலரது புகைப்படங்கள் ஒரு சில ஆவணங்களில் தணிக்கை செய்யப்பட்டும், வேறு சிலவற்றில் தணிக்கை செய்யப்படாமலும் உள்ளன.

ஒரு கோப்பில் ஒரே படத்தின் இரண்டு பதிப்புகள் உள்ளன. அதில் ஒரு பதிப்பில் முகம் கருப்பு நிறக் கட்டத்தால் மறைக்கப்பட்டும், மற்றொன்றில் முகம் முழுமையாகத் தெரியுமாறும் உள்ளது.

மற்றொரு வீடியோவில், ஒரு பெண் தன் ஆடையை கழற்றி தனது மார்பகத்தை கேமராவிற்குக் காட்டுவதைப் போல் உள்ளது.

கிறிஸ்துமஸ் சமயத்தில் எப்ஸ்டீன் கோப்புகளின் சமீபத்திய தொகுப்பு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, பாலியல் ரீதியான புகைப்படங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டக்கூடிய தகவல்களைத் தணிக்கை செய்யும் பணியை நீதித்துறை (DoJ) அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

அமெரிக்க காங்கிரஸ் விதித்த காலக்கெடுவுக்கு முன்னதாக, பேசிய துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான பணிகளுக்காக கூடுதல் நேரம் தேவைப்படுவதால், கோப்புகள் சரியான நேரத்தில் வெளியிடப்படாது என்று கூறினார்.

"நாங்கள் வெளியிடப்போகும் ஒவ்வொரு துண்டு காகிதத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபர், அவர்களின் பெயர், அடையாளம், அவர்களின் கதை என, பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்தும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறோம்," என்று அவர் அப்போது தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, வெளியிடப்பட்ட கோப்புகளில் உள்ள மருத்துவத் தகவல்கள் மற்றும் சட்ட அறிக்கைகள் மூலமாகவும் பலரது அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது.

கருவின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் தொடர்பான இரண்டு வீடியோக்களில் ஒருவரின் பெயர் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட நேரம், தேதி மற்றும் அது எடுக்கப்பட்ட இடம் எனக் கருதப்படும் விபரங்களுடன், கருவின் வளர்ச்சிக் காலமும் தெளிவாகத் தெரிந்தது.

மற்றொரு ஆவணத்தில், எப்ஸ்டீனிடம் விசாரணை நடத்தப்பட்ட வீடியோ பதிவில், ஒரு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடுவது இடம்பெற்றுள்ளது.

இந்தக் கோப்புகளில் அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களைப் போதுமான அளவில் பாதுகாக்கத் தவறியதற்காக, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நீதித்துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

"பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எங்களுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் ஒருபோதும் பொதுவெளியில் வராதவர்கள், பொதுமக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் இப்போது பொதுப் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன," என்று வழக்கறிஞர்களில் ஒருவரான பிராட் எட்வர்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

"இது உண்மையில் மிகப்பெரும் பிழை."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy84vgp0d1o

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

HAaDqUNXIAsIhcL.jpg

விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

சிறுவர் பாலியற் குற்றவாளி எப்ஸ்ரெயின்(Epstein) கோப்புகள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்த கூல் சகோதரர்களும் எப்ஸ்ரெயினின் ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதன் மூலம் முதியவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் மூலம் பெறப்படுவதாக நம்பப்படும் அமானுஸ்ய சக்திகள் குறித்த ஆராய்ச்சியின் பகுதிகளுக்கும் தான் இவர்களது அறிவு பயன்பட்டதா என்பதனை கூல் சகோதரர்கள் தான் ஊடகத்தின் முன்னே வந்து பேச வேண்டும்.

இதே கூல் குடும்பம் தான் மேற்குலகின் வழிகாட்டலில் போதிய அளவு நிதியைப் பெற்று இலங்கையில் University teachers human rights (UTHR) என்ற ஓர் நிறுவனத்தை உருவாக்கி இன அழிப்புக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் குறித்தும் நபர்கள் குறித்தும் தகவல் சேகரித்து அந்த ஆவணத்தில் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல அந்த நாளில் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய அத்தனை இளைஞர்கள் பற்றிய தகவலகளையும் சேகரித்து அதனை அவர்களுக்கு எதிரான அரசின், மேற்குலகின் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பயன்படுமாறு உருவாக்கியவர்கள்.

உலகின் மிக மோசமான குரூரமான சிறுவர் பாலியல் குற்றமாகச் சொல்லப்படும் எப்ஸ்ரெயின் ஆராய்ச்சிக்கு உடந்தையாக இருந்த இந்த உத்தமர்கள் தான் , நேற்றுவரை UTHR என்ற அமைப்பை வைத்து எமது விடுதலைப் போராட்டதிற்கு எதிராக உலகெங்கும் எம்மையும் எமது போராட்டத்தையும், பயங்கரவாதமாக சித்தரித்தவர்கள், இதே கூட்டம் தான் முறிந்தபனை என்ற நூலையும் எழுதியது.

இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்லர். உலகில் நடைபெறும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒருவர் தான் ரஜினி திரணகம, உலகில் எந்தவொரு தேசிய இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடினாலும் அதனை மோசமாகச் சித்தரித்து அழித்துவிட மேற்குலகின் சக்திகள் இவர்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்கிறது, சர்வதேச பல்கலைக் கழகங்களில் புலமைப்பரிசில் வழங்குகிறது, கற்பிக்க வாய்ப்பு வழங்குகிறது. ஆனால் காலம் ஒரு கட்டத்தில் இவர்களை வெளிப்படுத்தும். வெளிப்படுத்தி இருக்கிறது. இது ஒரு சாதாரணமாக கடந்து போகும் சம்பவம் அல்ல,

1. UTHR

2. கூல் சகோதரர்கள்

3. அங்கிலிக்கன் திருச்சபை - இதற்கு பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா?

//அத்துடன் முக்கியமாக -

முறையாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அத்துமீறல்கள் குறித்த ஆவணத் தொகுப்பைப் பார்த்தபோது எப்ஸ்ரெயினின் குரூர வக்கிரத்திற்கு அங்குள்ள நம்மவர்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்றே தோன்றுகிறது.

பரமேஸ்வரா பள்ளி முழுவதுமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்…//

நன்றி: Thiru Thirukumaran

SANGU-சங்கு

வாசகர் தெளிவுக்காக:

எப்ஸ்டீன் பல விடயங்களில் மூக்கை நுழைத்த, ஈடுபட்ட ஒரு பெரும் பணக்காரார்.

தனியே சிறுவர் துஸ்பிரயோகம் மட்டும் அல்ல, அவர் வாழ்க்கை சம்பந்த பட்ட பலதை, பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது:

அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அவருக்கு கோப்பி வித்தவன், முடிவெட்டினவன், கார் பார்க்கிங்கில் கதவு திறந்தவன் எல்லாரும் சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டார்கள் என சொல்ல முடியாது.

இதுவரை நான் அறிந்த தகவல்களை:

ராஜன், ஜீவன் கூலை பொறுத்தவரை. எப்ஸ்டீன் scholars list என ஒரு லிஸ்டை தயாரித்துள்ளார். இது ஏன், தயாரிக்கபட்டதென தெரியவில்லை.

இலங்கையில் அரசியலில் ஆளுமை செலுத்த தமக்கு ஏதுவானவகளை தெரியும் முயற்சியோ அல்லது வேறு எதுவுமாகவும் இருக்கலாம்.

இந்த லிஸ்டில் இவர்கள் பெயர் - ஒரு பயோடேட்டா உள்ளது.

இந்த லிஸ்டில் தம் பெயர் இருப்பது இவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.

இதை வைத்து இவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் பங்கு என கூற முடியாது.

டிரம்ப்பை, கிளிண்டனை போல் எப்ஸ்டீனின் ஐலண்டுக்கு போனதாயோ, மசாஜ் எடுத்ததாயோ கூட எந்த தகவலோ படமோ இதுவரை இல்லை.

பிகு

  1. ஆனால் இவர்களின் பின்புலம், தாம் பள்ளிகூடம் கூட போகவில்லை ஆனால் இவர்கள் வெளிநாட்டில் போய் டாக்டரேட் எல்லாம் பண்ணி உள்ளனர் என்ற வயித்தெரிச்சலில் சிலர் இதை குற்றம் நிருபணம் என்ற ரீதியில் பரப்பி லைக்ஸ் பிச்சை எடுப்பது கண்கூடு.

  2. ரண்டஜீவனை யாழில் பலதடவை கோஷான் வறுத்துள்ளார்.

ஹூல்கள் பற்றிய எப்ஸ்டீன் கோப்பில் உள்ள பதிவுகள்.

large.061ee24d-cf3b-4f66-96a6-8aa165154321.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

👆இதில் சிந்தியா ரீட் எப்ஸ்டீனுக்கு இமெயில் போட்டுள்ளார். அதில்,

டாக்டர் ஜேரெக்கி உங்கள் ஆய்வுக்காக (study) தேவைப்படும் அறிஞர்களின் பெயர் பற்றி அறிந்துள்ளார். ஆனால் இந்த பெயர்களை பாதுகாப்பாக/ பரகசியமாக்காமல் வைத்திருக்கவும் என உள்ளது.

இது👇 ராஜன், ரன்ட ஜீவன் கூல்கள் பற்றி அனைவரும் அறிந்த தகவலகள் ஒரு அட்டவணையில் போடப்பட்டுள்ளது.

large.e3186492-4950-4641-aae6-25de5b494db2.jpeg


வழமை போல் ஈழத்தமிழ் மொக்கை பீசுகள் தும்பை விட்டு வாலை பிடிக்கிறன.

இதில் ஹூல்கள் எந்த சிறுவர் துஸ்பிரயோகம் செய்த ஆதாரமும் இல்லை. அப்படி வந்தால் அப்போ பார்க்கலாம்.

ஆனால் ஜெப்ரி என்ன ஆய்வை மேற்கொண்டார் அல்லது, மேற்கொள்ள முயன்றார்?

அது ஈழதமிழர் பற்றியதா?

புலிகளை அழிப்பது பற்றியதா?

அல்லது கணிதம், எலேரிக்கல், எலெக்ரோனிகல் சம்பந்தபட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2026 at 14:37, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcSv-i4rDbRudAOqr0dhhAe images?q=tbn:ANd9GcQXhUhl5EuuadQl1K7euTW

2009-ஆம் ஆண்டு, மெக்சிகோவின் மாண்டெரி நகரில் 21 வயது மாடல் அழகி Gabriela Rico Jimenez ஒரு சொகுசு ஹோட்டலுக்கு வெளியே அரை நிர்வாண நிலையில் அலறிக் கொண்டிருந்தார். "அவர்கள் மனித மாமிசத்தைச் சாப்பிடுகிறார்கள்... அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள்... என்னை விட்டுவிடுங்கள்!" என்று அவர் கதறியது கேமராவில் பதிவானது.

அதிகாரிகள் அவரை 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று முத்திரை குத்தி அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்ற விவரங்கள் இன்றுவரை மர்மமாகவே உள்ளன.

ஒரு மாபெரும் உண்மையைச் சொன்னதற்காக அவர் “மௌனமாக்கப்பட்டாரா” என்ற கேள்வி இன்றும் நீடிக்கிறது.

பல ஆண்டுகள் கழித்து, அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டபோது, கேப்ரியலா சொன்ன வார்த்தைகளுக்கும் எப்ஸ்டீன் தீவில் நடந்தவைகளுக்கும் இடையே ஒரு அதிர்ச்சியூட்டும் ஒற்றுமை தென்பட்டது.

எப்ஸ்டீனின் 'Little St James ' தீவில் ஒரு விசித்திரமான கோவில் போன்ற கட்டிடம் இருந்தது.

அங்கு செல்வாக்கு மிக்க மனிதர்கள் ரகசிய வழிபாடுகளிலும், இருண்ட சடங்குகளிலும் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன.

எப்ஸ்டீன் மீதான FBI அறிக்கைகளில், சாட்சிகள் விவரித்த கொடுமைகள் , வன்முறை, நரமாமிசம் மற்றும் குழந்தைகளின் மீதான சித்திரவதை கேப்ரியலா 2009-ல் சொன்ன அதே வார்த்தைகளை எதிரொலித்தன.

உலகை ஆளும் சில உயர்மட்ட அதிகார வர்க்கத்தினர், தங்களின் செல்வம், புகழ் மற்றும் அதிகாரம் அழியாமல் நிலைத்திருக்க, இத்தகைய இருண்ட சக்திகளை நாடுகிறார்களா?

'Ba’al' வழிபாட்டின் மூலம் குழந்தைகளை பலியிடுகையில் ஒருவித 'சக்தி மாற்றம்' (Energy Transfer) ஒன்றை இந்த ரகசியக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

Ba’al' என்பது ஒரு குறிப்பிட்ட பெயரல்ல; பண்டைய செமிடிக் மொழிகளில் (Semitic languages) இதற்கு 'எஜமானன்', 'ஆளுபவர்' என்று பொருள். இது ஆரம்பத்தில் ஒரு கௌரவப் பெயராகவே இருந்தது.

கி.மு. 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே, பண்டைய கானானியர்கள் (Canaanites) மற்றும் போனீசியர்கள் (Phoenicians) Ba’al-ஐ ஒரு முதன்மைத் தெய்வமாக வழிபட்டனர்.

Ba’al’ மழையின் கடவுளாகவும், இடி-மின்னல் மற்றும் விவசாயத்தின் தெய்வமாகவும் கருதப்பட்டார். நிலத்தின் செழிப்புக்கு அவரே காரணம் என நம்பப்பட்டது.

Ba’al-ன் கோபத்தைத் தணிக்கவும், நிலம் செழிக்கவும் மக்கள் அவருக்குப் பல்வேறு சடங்குகளைச் செய்தனர்.

Ba’al-ன் வழிபாடு மிகவும் இருண்டதாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருந்த 'குழந்தை பலி' (Child Sacrifice) முறைதான்.

மர்மமான புராணங்களின்படி, ba’al-ன் ஆசீர்வாதத்தைப் பெறவும், பஞ்சத்தில் இருந்து தப்பிக்கவும் உயர்மட்டக் குடும்பத்தினர் தங்கள் முதல் குழந்தையை நெருப்பில் பலியிடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் (ப்ளூடார்க் போன்றவர்கள்) மற்றும் Bible குறிப்பிடுகின்றன.

இதில் குழந்தைகள் எரியும் நெருப்பிற்குள் எறியப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன.

நவீன மர்மக் கோட்பாடுகளில், 'Baal' என்பது வெறும் பண்டைய தெய்வம் மட்டுமல்ல, அது இன்று உலகை மறைமுகமாக ஆளும் சில ரகசியக் குழுக்களின் (Secret Societies) அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

இன்றும் உலகின் பெரும் செல்வந்தர்களும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள 'baal ' போன்ற இருண்ட சக்திகளுக்குப் பலி கொடுத்து வணங்குகின்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரு உயிரைப் பலியிடுவதன் மூலம் ஒரு பெரும் சக்தியைப் பெற முடியும் என்ற ரகசியக் கோட்பாட்டை (Occultism) பின்பற்றுபவர்கள் தான் இன்று உலகை ஆளும் அதிகார வர்க்கம்.

எப்ஸ்டீன் வழக்குகளில் 'ba’al' என்ற பெயர் அடிபடுவதற்குப் பின்னால் உள்ள காரணங்கள்

எப்ஸ்டீனின் நிதிப் பரிமாற்றங்களில் 'ba’al' என்ற குறியீட்டுப் பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது, அவர் ஒரு ரகசிய சாத்தானியக் குழுவின் (Cult) உறுப்பினராக இருந்திருக்கிறார் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

எப்ஸ்டீன் தீவில் இருந்த விசித்திரமான நீலக் கோடுகள் கொண்ட கோவில் போன்ற அமைப்பு, பண்டைய வழிபாட்டுத் தலங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது அதிகாரப் பசி கொண்டவர்கள் குழந்தைகளை பலிகொடுத்து தங்களின் 'எஜமானனுக்கு' (Baal) செய்யும் அர்ப்பணிப்பாகப் பார்க்கப்படுகிறது.

அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள், தங்களைச் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளவும், தங்களின் ரகசியக் கூட்டமைப்பை (Elite Cult) வலுப்படுத்தவும் இத்தகைய 'Ba’al' காலத்து இருண்ட சடங்குகளை நடாத்துகின்றனர்.

பண்டைய கார்த்தேஜ் நகரில் செல்வந்தர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படி குழந்தைகளைப் பலி கொடுத்தார்களோ, அதையேதான் நவீன கால "நிழல் உலக மனிதர்களும்" (Shadow Elite) செய்கிறார்கள்.

Gabriela rico jimenez போன்றவர்கள் அலறியது இதைப் போன்ற ஒரு கொடூரமான சடங்கைக் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம் என்பதே பலரது வாதம்.

Gabriela rico jimenez ஒரு மனநோயாளி அல்ல, மாறாக ஒரு இருண்ட கதவைத் தவறுதலாகத் திறந்துவிட்ட சாட்சி என்பதை எப்ஸ்டீன் வழக்கு நமக்கு உணர்த்துகிறது.

இந்த அதிகார வர்க்கத்தின் பின்னணியில் இருக்கும் சாத்தானிய சடங்குகளும், பண பலமும் எத்தனையோ உண்மைக் குரல்களை நசுக்கியுள்ளன.

Gabriella rico jimenez இன்று எங்கே என்பது தெரியவில்லை, ஆனால் அவர் எழுப்பிய அந்த அலறல் சத்தம், இந்த உலகை ஆளும் நிழல் மனிதர்களின் முகத்திரையை ஒரு நாள் கிழித்து தொங்க விடும்.

Mukinthan Thurairajasingham

21 hours ago, புலவர் said:
18 hours ago, குமாரசாமி said:

இந்த வருட இறுதிக்குள் பல காட்சிகளை உலக அரங்கில் காணலாம் போல் உள்ளது.

ஐநா சபை,மனித உரிமைகள் சங்கம் அது இது என எல்லாம் நாறும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

ஒரு சில நம்வர்கள் பாவம்.😂

👆 சும்மாவே சின்னராசுகளை கைல பிடிக்க ஏலாது.

இதில் வாயில் லட்டை வேறு கொடுத்தால் சும்மாவா😂

உங்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிடும் ஒருத்தர் இருக்கார்….

அவர் ஏதோ பெரிசா கடையிறார்…

வந்ததும் திரையிடப்படும் சதி லீலாவதி😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியும் ஒண்டு போகுதா? யார் இந்த மொக்கராசு, திரு திருக்குமரன்? என்ன ஆராய்ச்சிக்கு ஹூல்கள் உதவினார்கள் என்றே தெளிவாகச் சொல்கிறார்? இவரும் பங்கு பற்றியிருப்பாரோ😂??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

கவலை வேண்டாம் இவர்களுக்கு உதவி செய்ய நமது தமிழ் அரசியல்வாதிகள் 24 மணி நேரமும் காத்திருப்பார்கள்.😂

4 hours ago, goshan_che said:

👆 சும்மாவே சின்னராசுகளை கைல பிடிக்க ஏலாது.

இதில் வாயில் லட்டை வேறு கொடுத்தால் சும்மாவா😂

உங்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிடும் ஒருத்தர் இருக்கார்….

அவர் ஏதோ பெரிசா கடையிறார்…

வந்ததும் திரையிடப்படும் சதி லீலாவதி😂

பெற்ற தகப்பனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை பெற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

தனியே சிறுவர் துஸ்பிரயோகம் மட்டும் அல்ல, அவர் வாழ்க்கை சம்பந்த பட்ட பலதை, பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது:

அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அவருக்கு கோப்பி வித்தவன், முடிவெட்டினவன், கார் பார்க்கிங்கில் கதவு திறந்தவன் எல்லாரும் சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டார்கள் என சொல்ல முடியாது.

இவர் யாருக்கோ வெள்ளை அடிக்க முனைகின்றார். 😎

என்னால் இவருக்காக அனுதாபப்பட்டு இப்போதைக்கு சொல்லக்கூடியது ஐயோ பாவம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

289bd6d0-fe17-11f0-8a1e-69aa641f4cb6.jpg

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக மின்னஞ்சல்கள் தெரிவிப்பு.

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம் தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன.

2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், லண்டனுக்கு வரும் ஒரு பெண்ணை இளவரசர் ஆண்ட்ரூ இரவு உணவிற்கு அழைக்கலாம் என ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இடைத்தரகராக அரச குடும்பத்துடன் தொடர்புடைய டேவிட் ஸ்டெர்ன் செயற்பட்டதாக கூறப்படுகிறது.

இளவரசர் ஆண்ட்ரூ, 2010 ஆம் ஆண்டிலேயே ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தாம் உறவை துண்டித்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதிய மின்னஞ்சல்கள் அதன் பின்னரும் எப்ஸ்டீன், அரச குடும்ப வட்டாரத்துடன் தொடர்பில் இருந்ததை வெளிப்படுத்துகின்றன.

மேலும், 2017 ஆம் ஆண்டு விண்ட்சர் கோட்டையில் நடைபெற்ற இரவு உணவு விருந்துபசாரமொன்றுக்கு, இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய உதவியாளரான டேவிட் ஸ்டெர்ன், ஜெஃப்ரி எப்ஸ்டீனை அழைக்க முயற்சி செய்ததாக மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்கள், ஜெஃப்ரி எப்ஸ்டீன் குழந்தை பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இளவரசர் ஆண்ட்ரூ எந்த தவறும் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் எப்ஸ்டீனின் அழகான நண்பருடனான ஆண்ட்ரூவின் சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த புதிய தகவல்கள், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2026/1463589

  • கருத்துக்கள உறவுகள்


அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை

அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை.

பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் “எப்ஸ்டீன் கோப்புகள்”.

ஒரு சாதாரணக் கணித ஆசிரியராகத் தொடங்கி, உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச வம்சத்தினரைத் தனது விரல் நுனியில் ஆட்டிப்படைத்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் மர்ம மனிதனின் பின்னணி என்ன?

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்க வைத்தது முதல், அமெரிக்காவின் முன்னாள், இன்னாள் அதிபர்கள் வரை பலரது பெயர்களைப் பதற வைத்துக் கொண்டிருக்கும் அந்த 30 லட்சம் பக்கங்கள் சொல்லும் ரகசியங்கள் என்ன? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திப் பிஞ்சுயிர்களைச் சிதைத்த அந்தப் ‘பீடோபைல் தீவு’ (Pedophile Island) கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் செய்த அநீதிகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது ஆதவன் செய்திப் பிரிவின் இந்தச் சிறப்புப் பதிவு

தவறு யார் செய்தாலும் தண்டிக்கும் பிரித்தானியா! நூற்றாண்டு காலப் பாரம்பரியமும், கண்ணியமும் கொண்ட பிரித்தானிய அரச குடும்பத்தில், ஒரு தனி நபர் செய்த தவறால் இன்று அந்தப் பெயருக்கே ஒரு கறை படிந்திருக்கிறது! அந்த வம்சத்தின் ஒரு வாரிசு, ஒரு தகாத ஒருவரோடு நட்பு வைத்ததால், இன்று அந்தப் பரம்பரையின் கௌரவமான பொறுப்புகளில் இருந்தே அவர் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இதற்கு ஒரே ஒரு பெயர்தான் காரணம்… அது ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் சர்ச்சைக்குரிய நபர்!

டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் இந்த கொடூரன் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உலகையே அதிர வைத்தது. 2019-ல் பிபிசி நேர்காணலில், ‘அந்த நட்பை முறிக்கத்தான் நான் அங்கு சென்றேன்’ என்று ஆண்ட்ரூ தெரிவித்த போதிலும், 2011-ன் ரகசிய மின்னஞ்சல்கள் அவர் சொன்னது பொய் என்பதை நிரூபித்தன!

விளைவு? தவறு செய்தவர் இளவரசராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்தது! 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் கிரீடத்தையே குழிதோண்டிப் புதைத்தது இந்த எப்ஸ்டீன் சிஸ்டம்!”

ஆசிரியர் முதல் கோடீஸ்வரன் வரை: அந்த மர்ம வளர்ச்சி

“இன்று நாம் பார்க்கப்போவது ஒரு தனிமனிதனைப் பற்றிய கதையல்ல… அதிகாரத்தின் இருண்ட பக்கம், செல்வம் இருந்தால் எதையும் மறைக்கலாம் என்று நினைத்தவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்த ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ பற்றிய ஒரு அலசல்!

1970-களில் ஒரு சாதாரணக் கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், தனது தந்திரத்தால் வால் ஸ்ட்ரீட் வங்கியாளர்களை வளைத்துப் போட்டார். ஒரு மாணவனின் தந்தை மூலம் ‘பியர் ஸ்டியர்ன்ஸ்’ வங்கிக்குள் நுழைந்த எப்ஸ்டீன், நான்கே ஆண்டுகளில் பங்குதாரராக உயர்ந்தான்! 1982-ல் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, 1 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அதன் பிறகு அவர் சேர்த்த செல்வம், அவனது காமவெறிக்கும் அதிகார ஆட்டத்திற்கும் எரிபொருளானது!

30 லட்சம் பக்கங்கள்… நடுங்கும் உலகத் தலைவர்கள்!

“ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆவணங்கள் உலகையே உலுக்கி வருகின்றன. சுமார் 30 லட்சம் பக்கங்கள், 2,000 வீடியோக்கள், 1.8 லட்சம் படங்கள்! இதில் பில் கிளிண்டன் முதல் டொனால்ட் டிரம்ப் வரை, பில் கேட்ஸ் முதல் எலான் மஸ்க் வரை எனப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுகின்றன.

எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் டிரம்ப் பெயர் இருப்பதைப் பதிவிட்டு விட்டு பின் அதை நீக்கியது பெரும் சர்ச்சையானது. 2002-லேயே டிரம்ப், ‘ஜெப் ஒரு அருமையான மனிதர், என்னைப் போலவே அவருக்கும் இளம் பெண்களைப் பிடிக்கும்’ என்று புகழ்ந்து தள்ளினார். ஆனால், விவகாரம் முற்றியவுடன், ‘அவர் என் கிளப் பெண்களிடம் தவறாக நடந்ததால் விரட்டிவிட்டேன்’ என்று மாற்றி பேசினார். இதற்கிடையே, இந்தியப் பிரதமர் மோடி, அம்பானி போன்றோரின் பெயர்களும் மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகக் கசிந்த செய்தியை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எது எப்படியோ, இந்த ஆவணங்கள் அதிகார வர்க்கத்தின் உறக்கத்தைக் கலைத்துள்ளன என்பதுதான் நிதர்சனம்!”

இதனிடையே, ‘இலங்கை’ என்ற பெயர் 188 இடங்களில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதிகாரத்தின் பலமும்… ‘வசதியான’ சிறைவாசமும்

“2003-லேயே பத்திரிகையாளர் விக்கி வார்டு இவனது மர்மங்களைக் கண்டுபிடித்தார். 1996-ல் மரியா ஃபார்மர் என்ற பெண்ணும் அவரது 14 வயது தங்கையும் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்த முயன்றார். ஆனால், எப்ஸ்டீன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் செய்தியையே நசுக்கியுள்ளார்!

2005-ல் 14 வயது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்தும், ‘நூற்றாண்டின் மிகப்பெரிய ரகசிய ஒப்பந்தம்’ மூலம் இவருக்கு வெறும் 13 மாதங்கள் மட்டும் சிறைத் தண்டனை கிடைத்தது. அதுவும் எப்படி? வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர ‘பணி நிமித்தமான விடுப்பு’ வழங்கப்பட்டது! இதுதான் அதிகாரத்தின் பலம்! இதுதான் அநீதியின் உச்சம்

மர்மமான மரணம்: தற்கொலையா? கொலையா?

“பாதிக்கப்பட்ட வர்ஜீனியா ஜூஃப்ரேயின் நீண்ட சட்டப் போராட்டத்தால், நீதிபதி லோரெட்டா பிரெஸ்கா இந்த ரகசியங்களை வெளியிட உத்தரவிட்டார். ஆனால், 2019-ல் மீண்டும் கைதான எப்ஸ்டீன், உண்மைகளைச் சொல்லப்போகும் நேரத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்.

கேமராக்கள் திடீரென வேலை செய்யவில்லை!

காவலர்கள் தூங்கிவிட்டார்கள்! இது தற்கொலையா? இல்லை உண்மைகளைத் மறைக்க பெரிய இடத்து ஆட்கள் செய்த கொலையா? இன்றும் மர்மம் நீடிக்கிறது. அதனால்தான், இந்த வழக்கின் விசாரணையும் ஆதாரங்களும் இப்போது வெளிப்படையாக வெளியிடப்பட்டு வருகின்றன!”

கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல்: கொடுரனின் ஏஜென்ட்!

“இந்தக் காமப் கொடுரனின் வலது கையாக இருந்தவள் அவனது காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல். உலகத் தலைவர்களையும் கோடீஸ்வரர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காகக் கடத்திய குற்றத்திற்காக இன்று இவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். 17 வயதில் இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய வர்ஜீனியா ஜூஃப்ரேயுடன், ஆண்ட்ரூ பல மில்லியன் டாலர்கள் கொடுத்து சமரசம் செய்து கொண்டது எதை உணர்த்துகிறது?

இறுதி எச்சரிக்கை: சிஸ்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!

இவர்களெல்லாம் அந்த ‘பீடோபைல் தீவுக்கு’ (Pedophile Island) ஏன் சென்றார்கள்? அங்கு நடந்த அசிங்கங்களில் இவர்களுக்குப் பங்கு என்ன? அதிகாரம் என்பது ஏழை மக்களைக் காக்கவா? அல்லது இதுபோல பிஞ்சுயிர்களைச் சிதைக்கும் காமவெறிக்குக் கேடயமாக இருக்கவா?

எப்ஸ்டீன் செத்துவிட்டார். ஆனால் அவர் உருவாக்கிய அந்த ‘எப்ஸ்டீன் சிஸ்டம்’ இன்றும் உயிரோடுதான் இருக்கிறது. அதிகாரமும் பணமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற அந்தத் தைரியத்தை இந்த சிஸ்டம் இன்னும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இது ஏதோ அமெரிக்காவில் நடந்த கதை என்று கடந்து போகாதீர்கள். நமது சமூகத்திலும் அதிகார மிரட்டலுக்குப் பயந்து எத்தனை பிஞ்சுயிர்கள் மௌனமாக அழுகின்றனவோ? ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ வெறும் காகிதங்கள் அல்ல; அவை அதிகார வர்க்கத்தின் முகத்தில் பூசப்பட்ட கரி! நீதியைத் தற்காலிகமாகப் புதைக்கலாம், ஆனால் அது ஒருநாள் எரிமலையாக வெடிக்கும் என்பதற்கு எப்ஸ்டீன் கோப்புகளே சாட்சி!

எப்ஸ்டீன் செத்துட்டார்… ஆனா எப்ஸ்டீன் சிஸ்டம் இன்னும் உயிரோட இருக்கு. அதை வேரோடு அழிக்க நாம் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!”

– D. Rasmila

https://athavannews.com/2026/1463499

  • கருத்துக்கள உறவுகள்

626558752_1477406661051655_2113503465993

"வல்லவனுக்கு வல்லவன்" எப்ஸ்டீன். 😜

"முற்பகல் செய்யின்... பிற் பகல் விளையும்." 😂

ஹ்ம்ம்... நடக்கட்டும். 🤣

கருத்தோவியம்... வேறை லெவல். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கவலை வேண்டாம் இவர்களுக்கு உதவி செய்ய நமது தமிழ் அரசியல்வாதிகள் 24 மணி நேரமும் காத்திருப்பார்கள்.😂

தமிழ் அரசியல்வாதிகள் எப்பதான்...

தமது வேலைகளை ஒழுங்காக செய்திருக்கின்றார்கள்.

எல்லாம்.... "அணில் ஏற விட்ட நாய்" மாதிரி,

"போன பஸ்சுக்கு, கை காட்டுகின்ற" ஆட்கள் தானே. animiertes-gefuehl-smilies-bild-0145.gif

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

பெற்ற தகப்பனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை பெற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு

நிச்சயமாக….

ஆனால் நடப்பதென்ன?

ஒரு சின்ன உதாரணம்.

பீட்டர் மண்டல்ஸன் ஒரு முன்னாள் அரசியல்வாதி. ஸ்டாமர் அரசியலுக்கு வர முன்னர் அமைச்சர். ஒரு காலத்தில் ஈயூ கொமிசனர். ஆனால் காசு, ஊழல் விசயத்தில் அப்படி, இப்படி.

அமெரிகாவில் பெரும் புள்ளிகள், டிரம்ப் உள்வட்டத்துடன் நெருங்கியவர்.

டிரம்ப்பை தாஜா செய்ய இவர்தான் சரி என அவரை அமெரிக்காவுக்கான யூகே தூதுவராக்கினார் ஸ்டாமர். அவரும் கடமையை நன்றாகவே செய்தார்.

முக்கிய தகவல் இவர் ஒரு ஓரினசேர்க்கையாளர்.

நியமிக்கும் போது எப்ஸ்டீன் நட்பு பற்றி தான் கேட்டபோது “மேலோட்டமாக தெரியும்” என தனக்கு பொய் கூறினார் என்கிறார் ஸ்டாமர்.

முதல் முறை கோப்புகள் வெளிவந்த போது - இது பொய் என தெரிந்து கொண்டு அதிகாலை 1 மணிக்கு போன் போட்டு ஆளை வேலையில் இருந்து தூக்கினார் ஸ்டாமர்.

கடைசியாக வந்த கோப்புகள் இவரும் கணவரும் எப்ஸ்டீனிடம் பண உதவி பெற்றனர், அமைச்சராக இருந்தபோது நிதி தகவல்களை அவருக்கு கொடுத்தார் என்பதை காட்டுகிறன.

ஆனால்….

அவர் கட்சிகாரர் உட்பட பலர் ஸ்டாமர் பதவி விலக வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள்.

அநேகமாக நடக்கும் போலவே தெரிகிறது.

அப்படி நடப்பின்….

எப்ஸ்டீன் விடயத்தில் பதவி விலகிய ஒரே அரசியல்வாதி….எப்ஸ்டீனோடு ஒரு சம்பந்தமும் அறவே அற்ற, தான் அரச தலைமை வாதியாக இருந்த போது பல சிறார் கொடுமை வழக்குகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த ஸ்டாமராகவே இருக்கும்.

இது போல பல கூத்துக்கள் இந்த எப்ஸ்டீனை சுற்றி நடக்கிறன.

குற்றவாளிகள் தண்டிக்கப பட வேண்டும் எனபதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இவர் யாருக்கோ வெள்ளை அடிக்க முனைகின்றார். 😎

என்னால் இவருக்காக அனுதாபப்பட்டு இப்போதைக்கு சொல்லக்கூடியது ஐயோ பாவம் 🤣

எவருக்கும் வெள்ளை அடிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

குறிப்பாக சிறுவர் துஸ்பிரயோகிகள் மீதும், அவர்களுக்கு கவர் எடுத்து எழுதுபவர் மீதும் யாழில் நான் எடுக்கும் அணுகுமுறை யாவரும் அறிந்ததே.

ஆனால் அடிப்படை நியாயம் எண்டு ஒன்று உள்ளது.

இன்னொரு சின்ன உதாரணம்.

நான் யாழ்கள உறவுகள் என ஒரு லிஸ்ட் போடுகிறேன் என வையுங்கள். யாருக்கும் நான் ஏன் அந்த லிஸ்டை போட்டே. என தெரியாது.

அதில் குமாரசாமி, தமிழ் சிறி பெயர்கள் உள்ளன. உங்கள் வேலை, படிப்பு விபரம் உள்ளது.

இப்படி ஒரு லிஸ்டை நான் போட்டது உங்களுக்கு தெரியுமா என்பது குஇட எவருக்கும் தெரியாது.

பிண்னார் பொலிஸ் என்னை கள்ள மட்டை கள்ளன் என கைது செய்து தீர்ப்பும் ஆகிறது.

நான் (தற்)கொலையான பின், ஒரு நாள் இந்த லிஸ்ட வெளி வருகிறது.

இதை மட்டும் வைத்து குமாரசாமியும். தமிழ் சிறியும் கள்ள மட்டை கள்ளர் என யூடியூப் வீடியோ போட்டால் - அது நியாயமான செயல்தானா?

பிகு

  1. இவர்கள் இருவரையும் நான் தனிப்பட்டு அறியேன்.

  2. ராஜன் கூல் கொழும்பு டெலிகிராபில் எழுதிய ஆக்கங்கள், அவர் புலி, அரச தரப்பை சமனாக சாடும் ஒருவர் என என்ண வைத்தது.

  3. ஜீவன் அவரின் செயல்பாடுகள் மூலம் தான் ஒரு வெக்கங்கெட்ட சுயநல போக்க்கிரி என்பதை பலதடவை நிரூபித்துள்ளார். நானும் அதை யாழில் விமர்சித்துள்ளேன். மதம், சாதி, இனம் என தருணம் பார்த்து சுயநலனுக்கு பாவிக்கும் ஒரு கிருமிதான் ஜீவன் கூல்.

  4. ஆனால் இந்த காரணங்களுக்காகத்தான் நீங்கள் இவர்களை போட்டு அடிக்கிறீர்கள் என்பது புரிகிறது. மேலே சொன்ன ஸ்டாமருக்கு விழும் அடிக்கும் இதுக்கும் வித்தியாசமில்லை. இதுதான் அரசியல். ஆனால் நான் அரசியல்வாதி அல்ல, என் மனதில் பட்டதை எழுதும் கருத்தாளர்.

2 hours ago, தமிழ் சிறி said:

626558752_1477406661051655_2113503465993

"வல்லவனுக்கு வல்லவன்" எப்ஸ்டீன். 😜

"முற்பகல் செய்யின்... பிற் பகல் விளையும்." 😂

ஹ்ம்ம்... நடக்கட்டும். 🤣

கருத்தோவியம்... வேறை லெவல். animiertes-gefuehl-smilies-bild-0090.gif

இருவருமே இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவும் இல்லை, இதனால் அவர்கள் பதவி ஆட்டம் காணவும் இல்லை.

நாம் எம்மை சமாதானப்படுத்த அப்படி நினைத்து, கார்டூன் வரைந்து மகிழ்ந்து கொள்ள மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கோப்புகளில் பெயர் இடம்பெற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று நியாயமில்லை. ஆனால் ஒரு கொரடூரமான குற்றவாளிக்கு இவர்களைப்பற்றித் தெரிந்திருக்கிறது.இவர்களைச் சிபாரிசு செய்யும் அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு நெருடலான விடயம்.எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டியதில்லை.இப்பொழுது வரை அவர்கள் இந்த விடயத்தில் நிபராதிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

35 லட்சம் Pages.. சங்கடத்தில் பிரபலங்கள் - தொடரும் Epstein files சர்ச்சை | Explained

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால் என்ன? உலகின் பெரும் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்படுவது ஏன்? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

#EpsteinFiles #JeffreyEpstein

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/2/2026 at 09:50, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல்வாதிகள் எப்பதான்...

தமது வேலைகளை ஒழுங்காக செய்திருக்கின்றார்கள்.

எல்லாம்.... "அணில் ஏற விட்ட நாய்" மாதிரி,

"போன பஸ்சுக்கு, கை காட்டுகின்ற" ஆட்கள் தானே. animiertes-gefuehl-smilies-bild-0145.gif

தமிழ் மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி அதில் சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள்.இயக்கங்கள் வராவிட்டால் தங்களை சோழர் பரம்பரையாகவே கதையை முடித்திருப்பர். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.