Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Police.jpg?resize=750%2C375&ssl=1

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, 

சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பான நான்கு வெவ்வேறு சம்பவங்களையும் கனடாவின் காவல்துறை பகிர்ந்து கொண்டுள்ளது.

அத்துடன், டொராண்டோ காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். 

அதனால், தகவல் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குற்றத் தடுப்பாளர்கள் மூலம் பெயர் தெரியாத உதவிக்குறிப்புகளை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்கத்கது.

Image

https://athavannews.com/2026/1463740

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

https://athavannews.com/2026/1463740சிற்

இது உண்மையான பெயரும் ..படமும் என்பதை உறுதிப்படுத்தவும் ...எந்தப் பத்திரிகையும் அப்பட்டமாக பெயரை வெளியிட தயங்குமே...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, alvayan said:

இது உண்மையான பெயரும் ..படமும் என்பதை உறுதிப்படுத்தவும் ...எந்தப் பத்திரிகையும் அப்பட்டமாக பெயரை வெளியிட தயங்குமே...🤣

அந்த “நானா”, கனடா என்ற படியால்….

உங்களது படமும், அவரின் கமெராவில் இருக்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

அந்த “நானா”, கனடா என்ற படியால்….

உங்களது படமும், அவரின் கமெராவில் இருக்கலாம். 🤣

சிவ...சிவா ...சிறித்தம்பி ...அவருடைய அட்ரஸ் .. இருந்தால் தாங்க ...தேடிப்பிடித்து அதை அழிப்பிப்பம் ...புடின் ..பில்கேட்ஸ் ..கூல் ..வரிசையில் ..பின்னுக்கு கயிட்டப்படவேணும்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இது உண்மையான பெயரும் ..படமும் என்பதை உறுதிப்படுத்தவும் ...எந்தப் பத்திரிகையும் அப்பட்டமாக பெயரை வெளியிட தயங்குமே...🤣

CP24
No image preview

Man charged with criminal harassment after multiple filmi...

Toronto police say a man has been arrested following a Criminal Harassment investigation involving multiple alleged incidents which included filming people across the city.

  • கருத்துக்கள உறவுகள்

நானா இப்போது கொரியாவில் கம்பி என்னும் ஜானி சோமாலியின் பிசினஸ் மாடலை பின்பற்றி (அடுத்தவர்களை கடுப்பேற்றி,தரக்குறைவாக பேசி,மட்டம்தட்டி ) வியூஸ் ஏற்றி காசு பார்த்தவர்.
ஆனாலும் நானாவோட எந்த வீடியோவிலும் முக்காடு அணிந்த அவரது தீன் குல மாணிக்கங்கள் வராது. காபீர்களாக தேடி தேடி வீடியோ எடுப்பார். அவாளை விட மோசமானவர்கள் இந்த பச்சை சங்கிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“நானா” வின், காணொளி: 📽️👉 https://www.facebook.com/reel/905203261910665 👈

“Creepy Camera man” என அழைக்கப்படும் இவரது பெயர் முஹம்மது அஸ்கார் முஹம்மது-ராசிக் (Mohamed Askar Mohamed-Razik). 45 வயதான இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

அண்மையில் கனடாவின் டொராண்டோ நகரில் இவர் செய்த காரியங்கள் ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது.

நீண்ட நாட்களாக பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அச்சுறுத்தி வந்த முஹம்மது அஸ்கார் ராசிக் என்பவரின் அட்டகாசங்களுக்கு ஒருவழியாக கனடா காவல்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

"சமூக வலைதளப் பிரபலம்" என்கிற போர்வையில் இவர் செய்த அநாகரீகச் செயல்கள் தற்போது உலகறிய வந்துள்ளன.

இவரது வீடியோக்களைப் பார்த்த எவருக்கும் ஒன்று தெளிவாகத் தெரியும், இவர் ஒரு சாதாரண படைப்பாளி அல்ல. ஆள் ஒரு மோசமான நபர் என்பது….

பொது இடங்களில் செல்லும் பெண்களை வழிமறிப்பது, அவர்களை வம்புக்கு இழுப்பது, மற்றும் அவர்கள் பயப்படும் வரை கேமராவை முகத்திற்கு நேரே பிடித்து ஆக்ரோஷமாக நடந்து கொள்வது இவரின் வாடிக்கை.

இவரது வன்முறை கலந்த அணுகுமுறை மற்றும் இவர் பெண்களிடம் காட்டிய ஆக்ரோஷம் பலரை பொது இடங்களில் அச்சத்துடன் நடமாட வைத்தது.

“வீடியோ எடுக்க வேண்டாம்" என்று பெண்கள் மறுத்த பிறகும், ஒரு நிழலைப் போல பின்தொடர்ந்து துன்புறுத்துவதை ஒரு ‘மிகவும் அனுபவித்து’ செய்து வந்துள்ளார்.

பல நாட்களாக இவரை ஏன் யாரும் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது கனடா காவல்துறை இவரை 'Criminal Harassment' (குற்றவியல் துன்புறுத்தல்) பிரிவில் கைது செய்துள்ளது.

இனி சட்டத்தின் பிடியில் இருந்து “மைனர் மாப்பிளை” தப்புவது இனி கடினம்.

"இலங்கையர்" என்ற அடையாளத்தோடு இவர் செய்த இந்த அருவருப்பான காரியங்கள், உலகெங்கிலும் வாழும் கண்ணியமான இலங்கை மக்களுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளது.

இவரைப் போன்ற ஒரு தனிநபரின் வக்கிரமான குணத்திற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறை கூற முடியாது.

ஆனால், இவரைப் போன்றவர்கள் சமூகத்தின் பெயரால் உலவுவதை அனுமதிக்கக்கூடாது என்பதில் இலங்கைச் சகோதரர்கள் உறுதியாக உள்ளோம்.

காவல்துறை இவருக்கு உரிய தண்டனையை வழங்கும் என நம்புவோம்.

அதே சமயம், சமூக ரீதியாக இவரைப் போன்றவர்களைப் புறக்கணிப்பதன் மூலமே எமது சமூகத்தின் கண்ணியத்தை நாம் நிலைநாட்ட முடியும்.

Mukinthan Thurairajasingham

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"😄தமிழ் பேசும் இலங்கையர்" என்ற தலையங்கம் போட்டு எம்மவர்கள் தேசிய நல்லிணக்கத்தை காட்ட வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.