Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

தம்பருக்கு முன்பே காரிய விசர்..

இப்ப முழு விசர் 😂

ஈரானை.... நொட்டிப் பார்த்ததில் இருந்து,

நிம்மதி இழந்து... முத்தீட்டுது. animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Edited by தமிழ் சிறி

  • Replies 131
  • Views 6.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இதில பகிடி என்னவென்றால் ஈரானிய மக்கள் கமெனி கொல்லப்பட்டதை கொலுவிருத்துறாங்கள் (celebrate)..ஆனால் எங்கட நாட்டு முஸ்லீம்கள் அத நினைச்சு வருந்துறாங்கள் .. போதாக்குறைக்கு புலிகளையும் இழுக்கிறாங்கள்... மதம

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஈரானின் சுப்ரீம் லீடரும், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவே இங்கு அமெரிக்காவில் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கின்றது. ஈரானில் பாடசாலைப் பிள்ளைகளும், பொதுமக்களுமாக நூற்றுக்கு மேற்பட்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    வெற்றி வெற்றி .... இஸ்லாமிய உச்ச பயங்கரவாதி கமேனி .... கொல்லப்பட்டான் ... 🤣🤣🤣 ஒரே மகிழ்ச்சியாக உள்ளது ... உலகை பயங்கரவாதத்திடமிருந்து காத்த அமெரிக்க இஸ்ரேலிய வான்படையினருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

தமிழ் யூடியூபர்கள் வியூவுக்காகவோ தமது குறை அறிவினாலோ செய்வதாக இருக்கலாம்….

அது கூட ஓக்கே…

ஆனால் வெளிநாட்டில் வாழும்,

ஆங்கிலத்தில் செய்திகளை வாசிக்க கூடிய இயலுமை இருக்கும்,

வெளிநாட்டில் எதோ ஒரு தொழிலை செய்யும் அளவுக்கு அடிப்படை திறமையாவது இருக்கும்,

ஈழத்து அங்கிள்கள், இந்த பைத்தியகார வீடியோக்களை நம்பி பார்ப்பதும்….

அதை உண்மை என நம்பி யாழுக்கு காவி வருவதும்தான் ஏன் என்பதை என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை.

உண்மையில் இது எனக்கு கொஞ்சமும் விளங்கி கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கின்றது. பொய்கள் போலிகளை கேட்டு சந்தோசபடுவது ஏன் என்பது விளங்கி கொள்ள முடியாதது தான். இது பற்றி நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டது இவர்கள் இராமன் பெரியவனா இராவணன் பெரியவனா சீதையா இப்படியான கற்பனைகளை கேட்பதில் அலாதியான விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர். இப்போது இவர்களுக்கு ரஷ்யா ஈரான் வட கொரியா. மேற்குலக நாடுகளில் இவர்கள் மிகவும் வசதியான சுதந்திரமான பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து கொண்டு இப்படியான யுரியுப்புகளை கேட்டு சந்தேசபடுகின்றார்கள். இப்படியான தமிழ்யுரியுப்பர்கள் காட்டில் பண மழை.

கவனித்தீர்களா தமிழ் அடியான் யுரியுப்பர் இவர்களை சந்தோசபடுத்துவதற்காக பொய் செய்தி தயாரிக்கின்றார் அதை ரஞ்சித் அண்ணா சுட்டிகாட்டி எழுதிய கருத்தையே தமிழ் அடியான் நீக்கிவிட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி?

கோப்புப்படம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • ,கிறிஸ் பார்ட்ரிட்ஜ்

  • பிபிசி

  • 20 மார்ச் 2026, 09:50 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரான் உடனான போரில் அமெரிக்கா "திட்டமிட்டபடியும்", "இலக்கின் மீதும்" சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான கால வரம்பை வழங்கவில்லை.

நேற்று செய்தியாளர்கள் வலியுறுத்திக் கேட்டபோது, "ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை." எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா தற்போது 7,000 இரானிய இலக்குகளைத் தாக்கியதாகக் கூறும் அவர், "படைகளுக்கு தாங்கள் எதை தாக்குகிறோம், ஏன் தாக்குகிறோம் என்பது பற்றிய தெளிவான உணர்வு இருக்கிறது." என்றார்.

குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எரிந்த கட்டடம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எரிந்த கட்டடம்

பூமிக்கு அடியில் இரானின் ஆயுதங்கள்

பீட் ஹெக்செத் கூற்றுப்படி அமெரிக்கப் படைகளால் மட்டுமே 7,000 இரானிய இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.

குறிப்பிடத்தக்க விமானப்படை மற்றும் கடற்படை இல்லாத நிலையில், இந்த ஏவுகணைகளையும் டிரோன்களையும்தான் இரான் தன்னால் இயன்ற வழிகளில் பாதுகாக்க முயல்கிறது.

இரானின் நிலப்பரப்பு மற்றும் பல தசாப்த கால திட்டமிடல் காரணமாக, இந்த ஆயுதங்களின் இருப்பு பூமிக்கு அடியில் ஆழமாக அல்லது உண்மையில் மலைகளின் பக்கவாட்டில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த இலக்குகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வது கடினம், எனவேதான் இந்த வாரம் பயன்படுத்தப்பட்ட 5,000 பவுண்ட் (2,270 கிலோ) எடை கொண்ட ஜிபியு-72 மேம்பட்ட ஆழமாக ஊடுருவி செல்லும் குண்டு உட்பட பல்வேறு வகையான பங்கர்-பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்கா, இரான்

பட மூலாதாரம்,USAF

படக்குறிப்பு,ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும்

உற்பத்தி அழிக்கப்பட்டாலும் தொடரும் தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், "இரானின் முழு பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தித் திறன், அந்த ஏவுகணைகளின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கும் ஒவ்வொரு நிறுவனமும், செயல்பாட்டு ரீதியாக வீழ்த்தப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன. இரான் முழுவதும் உள்ள கட்டடங்கள், வளாகங்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திக் கூடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன," என்றார்.

இந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் நிறுத்தப்பட்டாலும், எஞ்சியிருப்பவை இன்னும் ஏவப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

அமெரிக்கா, இரான்

பட மூலாதாரம்,USAF

படக்குறிப்பு,பங்கர்-பஸ்டர் குண்டு

எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் உளவுத் தகவல்கள் மற்றும் விமானங்கள் மூலம், நடமாடும் ஏவுகணை ஏவுதளங்களை "தேடிக் கண்டுபிடித்து அழிப்பதிலும் கவனம் செலுத்தும்.

1991-ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில், இஸ்ரேலை அச்சுறுத்திக் கொண்டிருந்த சதாம் உசைனின் ஸ்கட் ஏவுகணைகளை அழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையின் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் மற்றும் எஃப்-16 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தப் பணிகள் 'ஸ்கட் ஹண்டிங்' என்று அழைக்கப்பட்டன. அதே உத்திகள் இன்றும் இரானில் பயன்படுத்தப்படுகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல்

2021-இல் பரிசோதிக்கப்பட்ட குண்டு

2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட ஜிபியு-72 குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது.

இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, "கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது." என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது.

ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp86n3l35e1o

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இவர்கள் இராமன் பெரியவனா இராவணன் பெரியவனா சீதையா இப்படியான கற்பனைகளை கேட்பதில் அலாதியான விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர். இப்போது இவர்களுக்கு ரஷ்யா ஈரான் வட கொரியா. மேற்குலக நாடுகளில் இவர்கள் மிகவும் வசதியான சுதந்திரமான பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து கொண்டு இப்படியான யுரியுப்புகளை கேட்டு சந்தேசபடுகின்றார்கள். இப்படியான தமிழ்யுரியுப்பர்கள் காட்டில் பண மழை

இது இப்படியானவர்களின் மனநிலை பற்றிய சரியான அலசலாகவே எனக்கும் படுகிறது.

எம்ஜிஆர் படம், கம்பன் கழக ஜெயராஜ், திண்டுகல் லியோனி, சாலமன் பாப்பையா வகையில் இதையும் ரசிக குஞ்சு மனநிலையில், அணுகுகிறார்கள்.

கூடவே இப்போ ஏ ஐ கூட இருப்பதால் - காசுக்காக அடியான் தரவழிகள் பொய்யாக தெரிந்து கொண்டே வீடியோக்களை போட்டதும் இவர்கள் அதை அப்படியே கவ்வுகிறார்கள்.

இவர்கள் எவருக்கும் நான் யாழுக்கு வெளியே எந்த எதிர்வினையும் செய்வதில்லை.

அடிக்கடி சிலர் என்னை அங்க வா, இங்க வா என கூப்பிடுவதும் உண்டு.

நான் யாழை விட்டு அரங்குவதில்லை😂.

ஏன் எண்டால் எலோன் மஸ்க் போன்றோருக்கும் அடியானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவரும் பொய்யை காசாக்கும் ஆட்கள்தான்.

அந்த சகதியில் போய் நாம் தரவு போராட்டம் நடத்தினால் கும்பலாக ஜோம்பிகள் போல வந்து கடித்து குதறி விடுவார்கள்.

இந்த ஜோம்பிகளை யூடிப்பில் கேள்வி கேட்கும்

@ரஞ்சித் மிகவும் பொறுமை, தைரியசாலி. என்னால் முடியாது.

ஆனால் அடியானுக்கு ரஞ்சித் சொன்னது உண்மை என தெரியும். ஆகவே அவரோடு வாதிக்காமல் கொமெண்டை நீக்கி விட்டார்.

கொமெண்டை வைத்திருந்தால் ஜோம்பிகள் விழித்து கொண்டால் அவர் சோத்தில் மண் விழும் என்ற பயம்.

இந்த அப்பட்டமான பேச்சுரிமை மீறல், பொய் உரைத்தலை யூடியூப் எதுவும் செய்யவில்லை.

இதுவே யாழ்களத்தில் எண்டால் உறுப்பினரே தோய்த்து தொங்க விட்டிருப்பார்கள். நிர்வாகம் செய்ய வேண்டியதை செய்திருக்கும்.

யாழில் கூட பலர் இப்போ இந்த மாதிரி பொய்களை, அரை பொய்களை, பிரச்சாரத்தை இணைக்க முடியாது என்பதால் தாம் எழுதுவதில்லை என கூறுவதை கண்டுள்ளேன்.

அவர்களுக்கு ஒரு ஆங்கில சொல்லாடல்தான் என் பதில்.

Good riddance to bad rubbish !

உங்கள் குப்பையை மஸ்கின், மார்க்கின் குப்பை தொட்டிகளில் போய் போதுமானளவு கொட்டி கொள்ளுங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் அமெரிக்காவை ஈரானில் தரை இறக்க தயாராகிவிட்டார் என செய்திகள் வருகிறது.

ஈராக்கில் இரெண்டு தரம், ஆப்கானிஸ்தானில் ஒரு தரம்- இறங்க முன் பல மாத ஆயத்தம் நடந்தது.

தம்பர் இதை விரைவாக செய்கிறார்.

ஈராக் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு வெற்றியாகியது.

தொடர்ந்து நிலைத்ததில்தான் தோல்வி.

ஈரானில் இறங்கும் போதே பலத்த எதிர்ப்பு இருக்கும்.

ஈராக்கில் பிரிட்டன் கூடப்போனது.

ஆப்கானிஸ்தானில் முழு நேட்டோவும் அவுஸ் போன்ற நாடுகளும் கூட போயின.

இப்ப இஸ்ரேலோடு சேர்ந்து இறங்க போகினம்.

வியட்நாம் வெர்சன் 2.0?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

தம்பர் அமெரிக்காவை ஈரானில் தரை இறக்க தயாராகிவிட்டார் என செய்திகள் வருகிறது.

ஈராக்கில் இரெண்டு தரம், ஆப்கானிஸ்தானில் ஒரு தரம்- இறங்க முன் பல மாத ஆயத்தம் நடந்தது.

தம்பர் இதை விரைவாக செய்கிறார்.

ஈராக் ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு வெற்றியாகியது.

தொடர்ந்து நிலைத்ததில்தான் தோல்வி.

ஈரானில் இறங்கும் போதே பலத்த எதிர்ப்பு இருக்கும்.

ஈராக்கில் பிரிட்டன் கூடப்போனது.

ஆப்கானிஸ்தானில் முழு நேட்டோவும் அவுஸ் போன்ற நாடுகளும் கூட போயின.

இப்ப இஸ்ரேலோடு சேர்ந்து இறங்க போகினம்.

வியட்நாம் வெர்சன் 2.0?

ஈரான் தனது பலமாக நினைக்கும்நிறுத்தமுடியாத (Off switch) தொடர் தாக்குதலை நடத்தும் 31 மானிலங்களுக்கும் தனித்தனியான கட்டளை அமைப்பு கொண்ட மொசைக் பாதுகாப்பு உத்தியே அவர்களுக்கு பாதகமாக அமையலாம்.

இறங்கும் போதே பெருமளவான எதிர்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன், வான் மேலாதிக்கம், கடல் மேலாதிக்கம் அமெரிக்க துருப்புகளுக்கு உண்டு, இரஸ்சியாவின் கேர்க்ஸ் பிராந்தியத்தில் ஊடுருவல் தாக்குதலில் மேற்கினால் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவிணைந்த வேகமான முன்னேற்றம், ஈரானை நிலை குலைய செய்யும்.

தனித்தனி கட்டளைப்பீடங்கள் கொண்ட ஈரான் தற்காப்பு அணி மட்டுப்படுத்தப்பட்ட வளங்கல் மற்றும் தொடர்பாடல் இருப்பதால் அது அவர்களுக்கு சிக்கலாக இருக்கும்.

ஆனால் ஈரான் தரைத்தாக்குதலை மையமாக கொண்டு இந்த மொசைக் பாதுகாப்பு திட்டம் வரைந்திருந்தால் அவர்களின் திட்டம் ஒரு நீண்ட கெரில்லா யுத்தமாகவிருக்கும் என கருதுகிறேன்.

அமெரிக்க தரப்பு இறங்குவது பிரச்சினையாக இருக்காது என கருதுகிறேன் ஆனால் ஈரானின் மொசைக் திட்டம் வியட்நாமினை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கலாம்.

இது ஒரு தற்கொலை தாக்குதல் முயற்சியாகவும் இருக்கலாம், தமக்கு தேவையான எதிர்கால தரவுகளை திரட்டுவதற்காக ஒரு சிறிய அணியினை தரை இறக்கி ஈரானின் தனித்தனி கட்டளைப்பீடங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என உண்மையான தரவு திரட்டும் முயற்சியாக இருக்கலாம் (இவ்வளவு வந்தாயிற்கு அதனையும் செய்துவிட்டு கையினை தூக்கலாம் அதன் மூலம் எதிர்காலத்திற்கு தேவையான தரவுகளை திரட்டுவதற்கு என முயற்சிக்கலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஈரான் தனது பலமாக நினைக்கும்நிறுத்தமுடியாத (Off switch) தொடர் தாக்குதலை நடத்தும் 31 மானிலங்களுக்கும் தனித்தனியான கட்டளை அமைப்பு கொண்ட மொசைக் பாதுகாப்பு உத்தியே அவர்களுக்கு பாதகமாக அமையலாம்.

இறங்கும் போதே பெருமளவான எதிர்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன், வான் மேலாதிக்கம், கடல் மேலாதிக்கம் அமெரிக்க துருப்புகளுக்கு உண்டு, இரஸ்சியாவின் கேர்க்ஸ் பிராந்தியத்தில் ஊடுருவல் தாக்குதலில் மேற்கினால் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவிணைந்த வேகமான முன்னேற்றம், ஈரானை நிலை குலைய செய்யும்.

தனித்தனி கட்டளைப்பீடங்கள் கொண்ட ஈரான் தற்காப்பு அணி மட்டுப்படுத்தப்பட்ட வளங்கல் மற்றும் தொடர்பாடல் இருப்பதால் அது அவர்களுக்கு சிக்கலாக இருக்கும்.

ஆனால் ஈரான் தரைத்தாக்குதலை மையமாக கொண்டு இந்த மொசைக் பாதுகாப்பு திட்டம் வரைந்திருந்தால் அவர்களின் திட்டம் ஒரு நீண்ட கெரில்லா யுத்தமாகவிருக்கும் என கருதுகிறேன்.

அமெரிக்க தரப்பு இறங்குவது பிரச்சினையாக இருக்காது என கருதுகிறேன் ஆனால் ஈரானின் மொசைக் திட்டம் வியட்நாமினை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கலாம்.

இது ஒரு தற்கொலை தாக்குதல் முயற்சியாகவும் இருக்கலாம், தமக்கு தேவையான எதிர்கால தரவுகளை திரட்டுவதற்காக ஒரு சிறிய அணியினை தரை இறக்கி ஈரானின் தனித்தனி கட்டளைப்பீடங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என உண்மையான தரவு திரட்டும் முயற்சியாக இருக்கலாம் (இவ்வளவு வந்தாயிற்கு அதனையும் செய்துவிட்டு கையினை தூக்கலாம் அதன் மூலம் எதிர்காலத்திற்கு தேவையான தரவுகளை திரட்டுவதற்கு என முயற்சிக்கலாம்).

உங்கள் கருத்தும் தர்க்க ரீதியாகவே உள்ளது.

தரையிறக்கம் மட்டுப்பட்டதாக இருக்கலாம் என்பதை நானும் ஏற்கிறேன்.

நிச்சயமாக ஈரானில் இவர்களுக்கு சாதகமானவர் பலர் இருக்கிறார்கள் என்பது தெளிவு.

சதாமின் உள்ளக வட்டத்தை அவரை பிடிக்கும் வரை நெருங்கவில்லை, ஆனால் ஈரானில் கிட்டதட்ட உயர் பீடத்தை சொல்லி, சொல்லி அடிக்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேலை பொறுத்தவரை - ஈரானின் அணு ஆயுத வல்லமை, மிசைல் வல்லமையை உடைத்தால் போதும்.

அணு வல்லமை இப்போதே 20 வருடமாவது பின்னோக்கி தள்ளபட்டிருக்கும். செறிவாக்க பட்ட யுரேனியம் 450 கிலோவை மீட்டு விட்டால் - போதும்.

இந்த இலக்குகள் அடையபட்டால்- அதாவது ஈரானின் அணு, மிசைல் வல்லமை நீக்கப்பட்டால், அதன் பின் ஈரானில்:

  1. இஸ்ரேலுக்கு சார்பான அரசு

  2. அல்லது குழப்ப நிலை

எது அமைந்தாலும் இஸ்ரேலுக்கு ஓக்கேதான்.

நேற்று ஒரு இஸ்ரேலி சொன்னார், we can live with chaos. We lived with chaos in Gaza, we lived with chaos in Lebanon, Syria, we can live with chaos in Iran too.

ஆனால் ஸ்திரமான, எதிர்வினை காட்டும் ஈரான் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆபத்து.

அதை நீக்கும் ஒரு மட்டுப்பட்ட தரை இறக்கத்தை இந்த முறை செய்யலாம்.

இப்படியான நகர்வுகளில் இஸ்ரேல் ஸ்பெசலிஸ்ட் என்பதையும், அமெரிக்கா போல் இஸ்ரேல் அகல கால்வைத்து மூக்குடைவது இல்லை என்பதையும் கூட கருத்தில் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பிகு

இங்கே யூடியூப் வீடியோ பகிர, அல்லது நிர்வாகத்தை குறை சொல்ல, குதர்கம் கதைக்க மட்டும் வரும் பூமர் அங்கிள் இதை வாசித்து விட்டு, எம்மை யாழ்கள இராணுவ ஆய்வாளர் என கிண்டல் செய்யலாம்.

இது ஆய்வு ஒண்டும் அல்ல, சந்தியில் குந்தி இருந்து முன்பு நீங்கள் பேய் கதை கதைத்தை இப்போ நாம் இணையத்தில் செய்கிறோம்.

அம்மட்டும்தான்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.