Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன் ; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

02 Mar, 2026 | 06:48 PM

image

(நா.தனுஜா)

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி அவசியம் என்ற தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருப்பதன் காரணமாகவே நான் அதனை நிராகரித்தேன் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நானறிந்தவரை பாரதி மிகப்பண்பானவர். யாருடைய மனமும் நோகாதபடி நடந்துகொள்ளக்கூடியவர். நான் கூறியதாக ஏதேனும் செய்திகள் வரும்போது எல்லாம், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'இப்படி ஒரு செய்தியைப் பார்த்தேன். நீங்கள் இவ்வாறு கூறினீர்களா?' எனக் கேட்பார். அவ்வாறு அவர் கேட்ட பல சந்தர்ப்பங்களில் எனது பதில் 'இல்லை' என்பதாகவே இருந்திருக்கிறது. எனவே ஒரு செய்தியைப் பிரசுரிப்பதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மை பற்றி உரிய நபரிடமே கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தது.

அடுத்தது பொதுவாக அஞ்சலிக் கூட்டங்களில் நான் அரசியல் பேசுவதற்கு விரும்புவதில்லை. ஆனால் இங்கு எம்மை நோக்கி சில மோசமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையினால், அவற்றுக்குப் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது.

அதாவது மலையக அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவதாகக்கூறி அவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டதுடன் மாத்திரமன்றி, தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது சுயதேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்தும் இணையாமலும் செயற்படுவதாக மிக அபாண்டமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மனோகணேசன் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ரவூப் ஹக்கீம் பல்வேறு அரசாங்கங்களில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளான நாங்கள் எந்தவொரு அரசாங்கத்திலும் அமைச்சர்களாகப் பதவி வகித்ததில்லை.

மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி இருக்கவேண்டும் என்ற தமிழ்மக்களின் அபிலாசையில் நாம் எப்போதும் உறுதியாக நின்றிருக்கிறோம். தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம்.

நாம் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் சுமுகமான அறிமுகத்தைப் பேணியிருந்தாலும் அவர்களுக்கும் எமக்கும் இடையில் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக ஆரம்பத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணி இருந்தது.

ஆனால் 1989 ஆம் ஆண்டு கட்சிக்குள் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக மாற்றிக்கொண்டது.

அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையையும் கடுமையாக எதிர்த்தது. இன்று அக்கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தான் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

உண்மையைக் கூறவேண்டுமானால், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருந்திருக்கிறது என்றார்.

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... தேர்தலில் வென்று பாராளுமன்ற உறுப்பினராகக் கூட முடியவில்லை. இதற்குள் நீதி அமைச்சர் ஆகின்ற ஆசையும்... எட்டிப் பார்க்குது. 😂

பேசாமல்... ஜனாதிபதி கதிரையில் போய் உட்கார வேண்டியதுதான். அப்பதான்... இந்த நோய், குணமாகும். 🤣

கேட்கிறவன் கேனையன் என்றால்.... எருமை, ஏரோப்பிளேன் ஓட்டுமாம். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-gefuehl-smilies-bild-0119.gif சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்... சிற்றுவேஷன் சாங்க். animiertes-gefuehl-smilies-bild-0029.gif

என்னை மதுரையில கேட்டாக…

மன்னார்குடியிலும் கேட்டாக…

அந்த மாயவரத்தில கேட்டாக....

அனுரா மாத்தையாவும் கேட்டாக..... animiertes-gefuehl-smilies-bild-0013.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... தேர்தலில் வென்று பாராளுமன்ற உறுப்பினராகக் கூட முடியவில்லை. இதற்குள் நீதி அமைச்சர் ஆகின்ற ஆசையும்... எட்டிப் பார்க்குது. 😂

பேசாமல்... ஜனாதிபதி கதிரையில் போய் உட்க்கார வேண்டியதுதான். அப்பதான்... இந்த நோய், குணமாகும். 🤣

கேட்கிறவன் கேனையன் என்றால்.... எருமை, ஏரோப்பிளேன் ஓட்டுமாம். 😂 🤣

அவர் தன்ரை ஆதங்கத்தை மறைமுகமாக கிலோ கணக்கில கொட்டுறார்.நீங்கள் வேற வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுற மாதிரி......😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார்.

ஹா ஹா..... நான் தான் அவர்களின் வழக்குகளை கையாள்கிறேன், எனக்கு பிரதம மந்திரியாக பதவியேற்பதற்கு அழைப்பு வருமென காத்திருப்பதாக அறிவித்திருந்தார், இப்போ இப்படி ஒரு கதை விடுகிறார். கொஞ்ச நாளாய் அமைதி நிலவுகிறதே என நினைத்தேன், அவர் கற்பனையில் இருந்திருக்கிறார் பாவம். ஜனாதிபதி தேர்தலில், தமிழ் வாக்காளருக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால், அது இனவாதமாம். ஆனால் மாகாணசபைத்தேர்தலில், பாராளுமன்றத்தேர்தலில் தமிழர் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும், அதுதான் தமிழரின் ஏகோபித்த கட்சி என்று சொல்வது என்ன வாதம்? அது இருக்க, ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்க கேட்டு விட்டு, அனுராவிடம் பதவி எதிர்பார்க்கிறார். அமைதியாக இருந்த கட்சியில் பிரச்சனையை ஏற்படுத்தி, தெருவுக்கு கொண்டுவந்து, நீதிமன்றத்தில் நிற்கவைத்துவிட்டு நீதியமைச்சர் பதவியை எப்படி இவர் எதிர்பார்க்கிறார்? சிலர் இப்படித்தான் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பது, கிடைக்காத போதுஎச்சரிப்பது, சவால் விடுவது, பயமுறுத்துவது. பின் சீசீ இந்தப்பழம் புளிக்கும் என்பார்கள்.

எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்பாடு இல்லாமல் பதவிக்காக சாயும் இவருக்கு அனுரா பதவி தருவேன் என்று சொன்னாராம். என்று இவர் சொல்வதிலிருந்து இவர் கடந்த காலங்களில் எதற்காக முண்டு கொடுத்தார் என்பது தெரிகிறது. எந்தக்காலத்திலும் இவர் தனக்கு வாக்கு போட்ட மக்களின் கவலைகளை தேவைகளை முன்னிறுத்தியதேயில்லை, இப்போ அவருக்கு பதவிக்காக மக்கள் நினைப்பு வருகிறது. தமிழ் மக்கள், தங்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல் இல்லாமல் தாங்களாகவே அனுராவை தேர்ந்தெடுத்தனர், யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே தமிழரின் கவலைகளை, அபிலாசைகளை, உணர்வுகளை மதித்து அவற்றிற்கு தீர்வு வழங்குவது அனுராவின் கடமை. அதைவிட்டு சுமந்திரனுக்கு பதவி வழங்குவதால் தமிழரின் பிரச்சனை தீர்ந்துவிடாது என்பது அனுராவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே புரியும். இப்போ தெரிகிறதா யார் பதவிக்காக நாக்கைத்தொங்க போட்டுகொண்டு அலைவது என்பது?

8 hours ago, ஏராளன் said:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி இருக்கவேண்டும் என்ற தமிழ்மக்களின் அபிலாசையில் நாம் எப்போதும் உறுதியாக நின்றிருக்கிறோம். தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம்.

இருங்கோ. யார் வேண்டாம் என்றது? அதற்காக என்ன செய்தீர்கள்? அனுரா நீதியமைச்சர் பதவி தருகிறேன் என்று சொல்வதாலோ, அல்லது நிராகரிப்பதாலோ எதுவும் நிகழாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன் ; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

02 Mar, 2026 | 06:48 PM

image

(நா.தனுஜா)

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

கொழும்பிலை இதை பேசுவதற்கு ...ஒரு தில்லு வேணும் ...உங்களுக்கு இருக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_9523.jpeg.69949375e36ee1ec9012

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாவா.?🤭

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அவர் தன்ரை ஆதங்கத்தை மறைமுகமாக கிலோ கணக்கில கொட்டுறார்.நீங்கள் வேற வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுற மாதிரி......😂

10 hours ago, alvayan said:

கொழும்பிலை இதை பேசுவதற்கு ...ஒரு தில்லு வேணும் ...உங்களுக்கு இருக்கா..

சுத்துமாத்து சுமந்திரனை இப்போது எவரும் கணக்கில் எடுப்பதில்லை.

அந்தளவுக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில்... இவருக்கு விழும் பேச்சுக்களை காத்து கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு திட்டித் தீர்க்கிறார்கள்.

இவர்.... பல தோல்விகளை சந்தித்ததால், மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டு, வைத்திய சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக பலரும் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

645401023_26177876381844095_311335372358

MP ஆகாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு, அமைச்சராக ஆசை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே தொடர்ந்து சொல்வது தான்.

நாங்கள் இவரை தாரை வார்க்கும் வேலையை செய்யவே கூடாது. இவர் வெளியே போனால் இப்பொழுது இருப்பதைவிட மேலோங்கியே இருப்பார். அது எமக்கு இப்போது இருப்பதை விட அதிக இடைஞ்சல்களை தரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.