Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறக்கணி சிறீலங்கா, சில கேள்வி பதில்கள்

Featured Replies

-1- பல்தேசி நிறுவனங்கள் நாடுகளிற்கு எதிரான புறக்கணிப்பு முயற்சிகள் பொதுவாகவே தாக்கத்தை உண்டு பண்ணுமா, அதன் மூலம் மாற்றங்களை உருவாக்க முடியுமா?

ஜனநாயக உலகில் தனிமனிதரின் வாக்குரிமைக்கு அடுத்தாக அவர்களது நுகர்வு ஏற்படுத்தும் பொருளாதாரம் ஒரு பலமான ஆயுதமாக இருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் நுகர்வோரை மய்யப்படுத்திய முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தனிமனிதரின் தெரிவு என்பது மேலும் முக்கியத்துவமடைகிறது.

தனிமனிதரின் வாக்குரிமை எவ்வாறு குறித்த கொள்கைகள் நிலைபாடுகள் நோக்கி குவிக்கப்படும் பொழுது ஒருமித்த வெகுஜன பலமாகி ஒரு நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறதோ அதேபோலவே ஒற்றுமையாக தமது நுகர்வுகளில் மேற்கொள்ளும் தெரிவுகளும் ஒருமித்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார பலமாக மாற்றம் பெறும்.

-2- சிறீலங்காவிற்கு எதிராக புறக்கணிப்பை நடத்துவதாலும் அதை மற்றவர்களை செய்யுமாறு சர்வதேச அளவில் கேட்பதாலும் கிடைக்கும் நன்மைகள் என்ன?

சிறீலங்காவை பொருளாதாரரீதியில் கணிசமான அளவில் பாதிப்படைய வைக்கலாம்.

ஒரு அரசியல் செய்தியாக ஜனநாயக வடிவில் சர்வதேசத்திற்கு எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறும்.

சிறீலங்காவின் ஒரு அங்கமாக இருப்பதால் கிடைக்கும் பொருளாதார அனுகூலங்களை முற்கூட்டியே திட்டமிட்டு படிப்படியாக குறைத்து இல்லாது செய்வது சுதந்திரத்தின் பின்னரான சவால்களை இலகுவாக்கும்.

-3- நாடுகளிற்கோ நிறுவனங்களிற்கோ எதிராகப் புறக்கணிப்பிற்கு கோருவது சட்டத்திற்கு முரணானதா?

நாடுகளிற்கோ நிறுவனங்களிற்கோ எதிராக புறக்கணிப்பைக் கோருவது சட்டத்திற்கு முரணானது அல்ல. புறக்கணிப்பு என்பது மக்களை நோக்கி வைக்கப்படும் வேண்டுகோள் மாத்திரமே. அதற்கு பயன்படுத்தப்படும் தகவல்கள் நியாயப்பாடுகள் ஆதாரபூர்வமானதாக இருக்க வேண்டும். பொய்யான தகவல்களை அடிப்படையாக கொண்ட புறக்கணிப்பு வேண்டுகோள்கள் விசமப்பிரச்சாரமாக சட்டத்தினால் பார்க்கப்படும். மற்றும் படி புறக்கணிப்பின் வெற்றி தோல்வி என்பது அதன் நியாயப்பாடுகளிலும் அவை வெற்றிகரமாகப் பரப்பப்பட்டு மக்களின் மனங்கள் ஒற்றுமையாக வெல்லப்படுவதிலும் தான் தங்கியுள்ளது.

-4- சிறீலங்காவை புறக்கணிப்பது அங்கிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் புலம்பெயர்ந்த எம்மவர்களின் வியாபார முயற்சிகளை பொருளாதாரரீதியில் பாதிக்காதா?

புறக்கணிப்பை ஒரு திடீர் சட்டமாக ஒரு நாளிலோ வாரத்திலோ அமுலாக்க முயன்றால் அது பொருளாதாரரீதயில் எம்மைப் பாதிப்பது மாத்திரமல்ல தக்கவைக்க முடியாததாக கூட இருக்கும். திட்டமிட்ட முறையில் படிப்படியாக சிறீலங்காவின் பொருட்களின் புறக்கணிப்ப ஆரம்பிப்பது நடைமுறைப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும்.

உதாரணத்திற்கு:

இன்றய காலத்தில் இருந்து 1 வருட காலத்தில் 2008 கார்த்திகை மாவீரர் தினத்தோடு எமது தற்போதை மொத்த சிறீலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வுகளை 30 விகிதத்தால் குறைப்போம் என்ற இலக்கை அடைவது முதற்கட்டமாக இருக்கலாம்.

இரண்டாம் கட்டமாக 2009 ஆண்டு மாவீரர் தினத்தோடு அது மேலதிகமாக 30 விகிதத்தால் குறைக்கப்படுவது இலக்காக இருக்கலாம்.

-5- புலம்பொயர்ந்தவர்கள் வாங்கும் உணவுப் பொருட்களை விட தைத்த ஆடை இறப்பர் தேயிலை போன்றவை தான் அதிக இலாபத்தை சிறீலங்காவிற்கு ஈட்டித்தருகிறதே?

எமது உணவுப்பொருட்கள் சுவையூட்டிகளின் நுகர்வு தான் 1 ஆவது அல்லது 2 ஆவது பெரிய அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் வழியாக இல்லாவிட்டாலும் கணிசமான அளவில் உதவுகிறது. அதற்கும் அப்பால் எமது ஒருமித்த அரசியல் செய்தியை சர்வதேசத்திற்கு ஜனநாயகரீதியில் சொல்கிறது.

-6- தைத்த ஆடையை இறக்குமதி செய்யும் பலமுள்ள பல்தேசிய நிறுவனங்களிற்கு எதிராக எம்மால் என்ன செய்ய முடியும்?

பல்தேசிய நிறுவனங்களிற்கு எதிராக எடுத்த எடுப்பில் புறக்கணிப்பை அவர்களின் பெயரில் நடத்துவது பலனைத்தரப் போவதில்லை. ஆரம்பக் கட்டமாக சிறீலங்காவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இனங்காணப்பட்டு அவற்றிற்கு கைய்யெழுத்து வேட்டை மூலம் (pettition) எமது நியாயப்பாடுகளையும் ஒருமித்த குரலையும் தெரிவிக்கலாம். அதற்கு கிடைக்கும் பதில்களை ஆதாரமாகக் கொண்டு அந்தந்த நிறுவனங்களிற்கு எதிரான புறக்கணிப்பைக் கேருவது நியாயமான பொறுப்புள்ள நகர்வாக இருக்கும்.

பல்தேசிய நிறுவனங்கள் சாதாரண மக்களின் நுகர்வில் தங்கியிருப்பவர்கள். சாதாரண மக்களிற்கு அவர்களது பொறுப்பற்ற நடத்தை பற்றிய விபரங்கள் செல்வது அவர்களின் நற்பெயரைப் பாதிக்கும். இதை அன்றைய தென்ஆபிரிக்க அப்பாத்தே அரசுக் கெதிரான முயற்சிகள், அண்மைய conflict diamonds முதல் இன்றைய மியன்மார் மற்றும் sweat shops என பல சந்தர்ப்பங்களில் காணலாம்.

-7- எமது புறக்கணிப்புகள் சிறீலங்காவில் உள்ள தமிழர்களின் வியாபாரங்களை தொழில்வாய்ப்புகளை பாதிக்காதா?

இதற்கான பதிலை சில அடிப்படைக் கேள்விகள் மூலமான சுயவிசாரணையினால் நீங்களே பெற்றுக் கொள்ளலாம்

i:> தனிநாடுதான் ஒரே தீர்வு என்பதில் நம்பிக்கை உண்டா இல்லையா?

பதில் இல்லை என்றால் எமக்கு இதுவரை கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் அதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

ii:> தனிநாடுதான் ஒரே தீர்வு என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் பிரிந்து செல்லுவது என்பது மலேசியா சிங்கப்பூர் போல் அமைதியான முறையில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

iii:> பிரிந்து செல்வது என்பது அமைதியான முறையிலோ அல்லது ஒருதலைப்பட்சமான பிரகடனத்தின் மூலமோ நடந்த பின்னர் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கிற்கு வெளியில் தமிழர்களின் இருப்பை முதலீடுகளை நியாயப்படுத்த பாதுகாக்க முடியுமா?

iv:> ஒருதலைப்பட்சமாக சுதந்திரப்பிரகடனம் செய்ய முதல் தமிழர் தாயகப்பகுதிகள் முற்றிலும் விடுதலை செய்யப்பட்டாலே அதன் பின்னர் தமிழரின் தாயகத்திற்கு வெளியில் தமிழரின் இருப்பையோ பாதுகாப்பையோ எப்படி நியாயப்படுத்த முடியும்?

v:> இறுதியாக நாம் சிறீலங்காவை 100 விகிதம் புறக்கணிக்க முன்னர் சுதந்திரப்பிரகடனம் செய்ய முடியுமா? அப்படி செய்தாலும் அது அர்த்தமுள்ளதாக இருக்குமா?

இந்தக் கேள்விகளுக்கும் முடியுமானால் பதில் தரவும்..

சிறீ லங்காவில் செய்யப்படும் ஊறுகாய் கனடாவில் செய்யப்படும் ஊறுகாயை விட ருசி கூடியதா?

சிறீ லங்காவில் இருந்து தருவிக்கப்படும் எட்னா சொக்கலேட் சுவிசில் தயாரிக்கப்படும் சொக்கலேட்டை விட ருசி கூடியதா?

சிறீ லங்காவின் லெமன் பொப்பைவிட மலிவான விசுக்கோத்து பக்கெற்றை கனடாவில் எங்கு வாங்கலாம்?

சிறீ லங்கன் எயார் லைன்சில் பயணம் செய்யாவிட்டால் எப்படி தமிழ் சினிமாப் பாட்டுக்களை பறப்பின்போது கேட்பது? எயார் கனடாவில் தமிழ் சனல் உள்ளதா?

மிகுதிக் கேள்விகள் தயார் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன..

இந்தக் கேள்விகளுக்கும் முடியுமானால் பதில் தரவும்..

சிறீ லங்காவில் செய்யப்படும் ஊறுகாய் கனடாவில் செய்யப்படும் ஊறுகாயை விட ருசி கூடியதா?

சிறீ லங்காவில் இருந்து தருவிக்கப்படும் எட்னா சொக்கலேட் சுவிசில் தயாரிக்கப்படும் சொக்கலேட்டை விட ருசி கூடியதா?

சிறீலங்காவில் செய்யப்படும் ஊறுகாய் மற்றும் சொக்லட் இரத்தவாடையுடன் வருவதால் ருசி கூடவாக இருக்கும்

சிறீ லங்காவின் லெமன் பொப்பைவிட மலிவான விசுக்கோத்து பக்கெற்றை கனடாவில் எங்கு வாங்கலாம்?

................................................................................

......................... [விரும்பிய கொட்டவார்த்தைகளை போட்டு கற்பனை செய்க]

சிறீ லங்கன் எயார் லைன்சில் பயணம் செய்யாவிட்டால் எப்படி தமிழ் சினிமாப் பாட்டுக்களை பறப்பின்போது கேட்பது? எயார் கனடாவில் தமிழ் சனல் உள்ளதா?

போர்டபிள் டிவிடி பிளயர் மற்றும் mp3 பிளயரின் உதவி முயன்று பாருங்கோ இல்லாட்டி பறக்காம வீட்ட இருங்கோ அப்படியும் இல்ல பறக்க வேண்டுமாயின் போயிங் அல்லது எயர்பஸ்ஸில சொல்லி பிரைவேட் ஜெட் ஒன்றினை வாங்கி விரும்பிய பாட்டை போட்டு கும்முங்கோ

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்று கூறி...மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.. விக்கரமாதித்தன்.. சிந்தனையில் ஆழ்ந்து கொண்டே நித்திரைக்குப் போனான்..! :lol::lol:

தன் முயற்சியில் சளைக்காத விக்கிரமாதித்தன் மீண்டும்

வேதாளத்தை பிடித்து தோள்களில் ஏற்றினான்.....

இறுதியில் விக்கிரமாதித்தன் வென்றானா இல்லையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும்..... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குசாமி!என்னெண்டுதான் ஒரே நேரத்திலை எல்லாயிடத்திலையும் சமாளிக்கிறியளோ தெரியேல்லை? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.