Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு

Mar 12, 2026 - 10:11 PM

ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு

ஈரானுக்கு எதிரான போரின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவினம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகள் இந்த வாரம் பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது மதிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

செனட்டர்களுக்கான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூடிய கதவு விளக்கக் கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்தத் தொகையில், போரின் முழுமையான செலவுகள் சேர்க்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. 

இருப்பினும், மோதல் குறித்து மேலதிக தகவல்களைக் கோரி வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

போருக்கான கூடுதல் நிதியுதவியைக் கோரும் கோரிக்கையை வெள்ளை மாளிகை விரைவில் காங்கிரஸிடம் சமர்ப்பிக்கும் எனப் பல பாராளுமன்ற உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தக் கோரிக்கை 50 பில்லியன் டொலராக இருக்கலாம் எனச் சில அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், மற்றவர்கள் அந்த மதிப்பீடு குறைவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmmnozhp30010356puzuzkiv3

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா / மேற்றுகின் ஆயுத உற்த்தி / கொள்வனவு மற்றும் அதன் செலவு / பொருளாதார model ஐயே புதைகுழியாக மாற்ற்றும் வியூகத்தை இரான் பாவிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கின் கதை முடிந்தது.

எல்லாரும் பெட்டி படுக்கையோடு ஈரான், ரஸ்யா பக்கம் போங்கோ😂.

#வெளிக்கிடடி விளாடிவாஸ்டொக்குக்கு😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/3/2026 at 18:41, ஏராளன் said:

ஈரானுக்கு எதிரான போரின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவினம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகள் இந்த வாரம் பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது மதிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

அமெரிக்காவிட்டையும்,ஐரோப்பாவிட்டையும் இல்லாத காசே? 11 பில்லியன் அவங்கள் பின்னேரம் கோப்பி,தேத்தண்ணி குடிக்க செலவழிக்கிற காசு. 😎

அவங்களை அசைக்கேலாது கண்டியளோ....wink

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான ஜனாதிபதி 😂😂😂 தம்பருக்கு ஒரு நல்ல ஆலோசனை…

பேசாமல் வெக்கத்தை கக்கத்துக்க வச்சுகொண்டு, உக்ரேனிடம், டிரோன் எதிர்ப்பு, 2வது பெரிய 😂😂😂 இராணுவத்தை எப்படி ஓட விட்டு அடிப்பது என்பதை பற்றி கோமாளி😂😂😂 செலன்ஸ்கியிடம் ஆலோசனை, உதவி கோரினால், சண்டையில் சுளுவாய் வெல்லலாம்.

ஆனால்…உதவி கேட்க போகும் போது

  1. கோர்ட் சூட் போட்டு போக வேணும்

  2. சென்ஸ்சிக்கு நன்றி சொல்ல வேண்டும்

    புஹா ஹா ஹா 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவிட்டையும்,ஐரோப்பாவிட்டையும் இல்லாத காசே? 11 பில்லியன் அவங்கள் பின்னேரம் கோப்பி,தேத்தண்ணி குடிக்க செலவழிக்கிற காசு. 😎

அவங்களை அசைக்கேலாது கண்டியளோ....wink

அவங்களை அசைக்கேலாது மட்டுமல்ல. அசையவும் மாட்டார்கள். அழிவது என்னவோ அப்பாவி மக்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான போர்: அமெரிக்காவிற்கு நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்கள் செலவு

Mar 14, 2026 - 05:34 PM

ஈரான் மீதான போர்: அமெரிக்காவிற்கு நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்கள் செலவு

ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்காக அமெரிக்கா நாளொன்றுக்கு 890 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வொஷிங்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தினசரி வான்வழி நடவடிக்கைகளுக்காக 30 மில்லியன் டொலர்களும், கடற்படை நடவடிக்கைகளுக்காக 15 மில்லியன் டொலர்களும், தரைவழி நடவடிக்கைகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களும் செலவிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பமான முதல் ஆறு நாட்களில் மட்டும் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இதன் மூலம், "ஆபரேஷன் எபிக் பியூரி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளிலேயே அதிக செலவுமிக்க ஒன்றாக மாறியிருப்பது சிறப்பம்சமாகும்.

குறித்த அறிக்கையின்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான தாக்குதல்களின் முதல் 100 மணிநேரத்திற்கு மட்டும் 3.7 பில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது. முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்க வரி வருவாயில் இருந்து 11 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பென்டகன் காங்கிரஸிற்கு அறிவித்துள்ளது.

முன்னதாக, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" நடவடிக்கைக்கு 2.26 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. அந்த நடவடிக்கை இரண்டரை மணிநேரம் மட்டுமே நீடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 https://adaderanatamil.lk/news/cmmq9z7dd000h356pgd9rfuts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சமாதான ஜனாதிபதி 😂😂😂 தம்பருக்கு ஒரு நல்ல ஆலோசனை…

பேசாமல் வெக்கத்தை கக்கத்துக்க வச்சுகொண்டு, உக்ரேனிடம், டிரோன் எதிர்ப்பு, 2வது பெரிய 😂😂😂 இராணுவத்தை எப்படி ஓட விட்டு அடிப்பது என்பதை பற்றி கோமாளி😂😂😂 செலன்ஸ்கியிடம் ஆலோசனை, உதவி கோரினால், சண்டையில் சுளுவாய் வெல்லலாம்.

ஆனால்…உதவி கேட்க போகும் போது

  1. கோர்ட் சூட் போட்டு போக வேணும்

  2. சென்ஸ்சிக்கு நன்றி சொல்ல வேண்டும்

    புஹா ஹா ஹா 😂

ட்ரம்ப் உக்கிரேனின் உதவி தேவையில்லை என கூறியுள்ளார், அதற்கு செலன்ஸ்கியின் எதிர்வினை.

https://www.pravda.com.ua/eng/news/2026/03/13/8025403/

https://www.pravda.com.ua/eng/news/2026/03/13/8025443/

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

ட்ரம்ப் உக்கிரேனின் உதவி தேவையில்லை என கூறியுள்ளார், அதற்கு செலன்ஸ்கியின் எதிர்வினை.

https://www.pravda.com.ua/eng/news/2026/03/13/8025403/

https://www.pravda.com.ua/eng/news/2026/03/13/8025443/

என்னதான் இருந்தாலும் உலக வல்லரசெல்லே…இப்படி சட் எண்டு காலில் விழ ஒரு மாரி லஜ்ஜையாத்தான் இருக்கும்😂

ஆனால் மறைமுகமாக மத்திய கிழக்கு நாடுகள் மூலம் உதவி கோரப்பட்டு, உக்ரேனியர்களும் அங்கு அனுப்ப பட்டுள்ளனராம்.

உக்ரேனும் தாக்குதலுக்கு உள்ளாகும் என ஈரான் மிரட்டி உள்ளதாம்.

உக்ரேன் பார்க்காத அடியா, மிரட்டலா.

செத்த கிளிக்கு சப்போர்ட் பண்ணாமல் இருந்திருந்தால் ஈரானுக்கு எதிராக உக்ரேன் இறங்கி இராது.

ஈரானை தக்க நேரத்தில் செத்த கிளி கைவிட்டு விட்டது. தேவையில்லாமல் உக்ரேனை பகைத்ததே மிச்சம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.