Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்

16 Mar, 2026 | 07:56 PM

image

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இந்த விடுமுறை நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/241136

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

Mar 16, 2026 - 07:10 PM

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (18) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார். 

மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இருப்பினும், இந்த விடுமுறையானது சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார். 

அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். 

அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் விடுமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்படுவதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmmt8czcu000s356p1s37ivhg

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் முன்பு போர்க்காலத்தில் எரிபொருள் தடை இருந்தது. அக்காலத்தில் எங்கட சனம் துவிச்சக்கரவண்டியில்தான் பெரும்பாலும் வேலைக்கு சென்றார்கள். இப்ப?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

Mar 17, 2026 - 02:16 PM

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் யாப்பு சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள விடுமுறை காரணமாக, அன்றைய தினத்திற்குரிய பணிகளை வாரத்தின் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். 

எவ்வாறாயினும், ஏதேனும் ஒரு அதிகாரியை புதன்கிழமை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமென நிறுவனத் தலைவர் தீர்மானித்தால், அந்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை. ஆனால் அதற்காக விடுமுறை தின சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவு அல்லது பதில் விடுமுறை வழங்கப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, புதன்கிழமைகளில் மூடப்படும் அலுவலகங்களின் அதிகாரிகள், அந்த வாரத்தின் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்படக் கூடாது. 

இருப்பினும், சேவையின் அவசரத் தேவை கருதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் அதிகாரிகளை சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் / மாகாண பிரதம செயலாளர் / திணைக்களத் தலைவர் அல்லது அரச கூட்டுத்தாபனத் தலைவர்களின் அனுமதியுடன் அந்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை என குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறு சேவைக்கு அழைக்கப்படும் அதிகாரிகளுக்கு மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை வழங்குவதற்குத் தடையில்லை என்றும் அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmudawyw000o356p5x2lrj67

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கந்தப்பு said:

வடக்கு கிழக்கில் முன்பு போர்க்காலத்தில் எரிபொருள் தடை இருந்தது. அக்காலத்தில் எங்கட சனம் துவிச்சக்கரவண்டியில்தான் பெரும்பாலும் வேலைக்கு சென்றார்கள். இப்ப?

அது அந்தக் காலம் கந்தப்பு. அப்ப நீங்கள் சைக்கிளோடிய வீதியில் எத்தனை கார்கள், பஸ்கள், ரிப்பர்களைக் கண்டீர்கள் என்று நினைவிருக்கிறதா?

2012 இலங்கை போன போது நானும் சைக்கிள் தான் ஓடினேன், வவுனியாவில். 2016 இலும் - கொஞ்சம் ஆபத்தாகத் தெரிந்தாலும் - சைக்கிள் ஓடினேன். இந்த ஆண்டு போகிறேன், ஆனால் "சைக்கிள் ஓட முயற்சிக்காதே" என்று தான் ஆலோசனைகள் வருகின்றன! அந்தளவுக்கு வீதிகள் வாகனங்களுக்காக செம்மை செய்யப் பட்டு, ஓரங்கள் (shoulders) குறுகி சைக்கிள் ஓடுவதை ஏதோ ஆபத்தான செயல் போல மாற்றி வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் வவுனியாவில் இது தான் நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

அப்படியானால் திருந்த வேண்டியது வண்டி ஓட்டிகளா சைக்கிள் ஓட்டிகளா? ஐரோப்பிய நாடுகளில் ஓடாத வாகனங்களா இலங்கையில்,????

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அப்படியானால் திருந்த வேண்டியது வண்டி ஓட்டிகளா சைக்கிள் ஓட்டிகளா? ஐரோப்பிய நாடுகளில் ஓடாத வாகனங்களா இலங்கையில்,????

எல்லாவற்றையும் ஐரோப்பிய, வட அமெரிக்க தரத்திற்கே இலங்கையில் கொண்டு வரக் கூடிய இயலுமை இருக்குமாக இருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே இருக்கிறோம்?

வாகன ஓட்டிகள் திருந்த வேண்டும், அப்படித் திருந்தும் வரை சைக்கிளோடுவோர் உயிரைப் பணயம் வைத்துப் பயணிக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கந்தப்பு said:

வடக்கு கிழக்கில் முன்பு போர்க்காலத்தில் எரிபொருள் தடை இருந்தது. அக்காலத்தில் எங்கட சனம் துவிச்சக்கரவண்டியில்தான் பெரும்பாலும் வேலைக்கு சென்றார்கள். இப்ப?

எனக்கும் கிளீநொச்சிவரை போய்வந்த அனுபவம் இருக்கு.....சந்தோசமான கஸ்ட காலம்..நினைவில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.