Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,Getty Images

இரான் மீதான போர் குறித்து நேற்று (மார்ச் 19) உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “எவ்வளவு காலம் தேவையோ அதுவரை போர் நடக்கும், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தப் போரில் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஆயுதக் கிடங்கு, ஏவுகணை ஏவுதளங்கள், மற்றும் ஏவுகணை பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்ற அணுசக்தி உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட, இரானில் இஸ்ரேலிய ராணுவம் அழித்து வரும் அனைத்து விஷயங்களையும் நெதன்யாகு பட்டியலிட்டார்.

“இரானியத் தொழில்துறையை இதற்கு முன்பு நாம் தாக்காத வகையில் அழித்து வருகிறோம், ஆனால் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன, அதை நாம் செய்யப்போகிறோம்” என்றும் அவர் கூறினார்.

“இஸ்ரேல் தான் அமெரிக்காவை இரானுடனான மோதலுக்குள் இழுத்துச் சென்றது என்ற ‘போலிச் செய்தியை’ தான் அகற்ற விரும்புவதாக” நெதன்யாகு கூறினார்.

"அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவரிடம் போய் சொல்ல முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறீர்களா? அதற்கு வாய்ப்பே இல்லை," என்று அவர் கூறினார்.

“டிரம்ப் எப்போதும் அமெரிக்காவிற்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் எது நல்லது என்று அவர் நினைக்கிறாரோ அதன் அடிப்படையிலேயே தனது முடிவுகளை எடுக்கிறார்" என்றும் அவர் தெரிவித்தார்.

‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? - டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,Ronen Zvulun/POOL/AFP via Getty Images

படக்குறிப்பு,வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இரானின் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை 'கட்டாயப்படுத்தியது' என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர், "அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்றார்.

பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. இதில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்ட இரானிய தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

'இஸ்ரேல் தன்னை போரில் ஈடுபட கட்டாயப்படுத்தியது' என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

'நாங்கள் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம், அவர்கள் முதலில் தாக்குவார்கள் என்று நான் நம்பினேன்' என்று இந்த மாதத் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறினார்.

இருப்பினும், இரான் போர் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, புதன்கிழமையன்று இரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலை டிரம்ப் மறைமுகமாக விமர்சித்தார். அது குறித்துத் தனக்கு "எதுவும் தெரியாது" என்றும் அவர் கூறினார்.

இரானின் எரிவாயு வயல்கள் மீதான சமீபத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல், டிரம்புக்குத் தகவல் தெரிவித்ததா என்று நெதன்யாகுவிடம் கேட்டபோது, "இஸ்ரேல் தனித்தே செயல்பட்டது" என்று அவர் கூறினார்.

மேலும்,"மேற்கொண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் எங்களைக் கேட்டுக்கொண்டார், நாங்கள் அவ்வாறே செய்கிறோம்," என்றும் கூறினார்.

"இரானின் உயர்மட்டத் தலைமையில் பிளவு"

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம்,ATTA KENARE/AFP via Getty Images

படக்குறிப்பு,இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் (கோப்புப் படம்)

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா குறித்த தனது திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டபோது, இஸ்ரேல் தற்போது ஒரு "பாதுகாப்பு அமைப்பை " உருவாக்கியுள்ளதாகவும், இது அதன் போராளிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் என்றும் நெதன்யாகு கூறினார்.

"எங்களிடம் எதிர்காலத்திற்கான திட்டங்களும் உள்ளன," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "எங்களது மிகப்பெரிய முன்னுரிமை இரான் தான். அங்கிருக்கும் அரசாங்கம் வீழ்ந்தால், ஹெஸ்பொலாவும் முடிவுக்கு வரும்," என்றார்.

இரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே பிளவுகளும் உள்நாட்டு பதற்றங்களும் இருப்பதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, முன்னாள் அதி உயர் தலைவரைப் போன்ற "பிடிமானமும் அதிகாரமும்" இனி எவருக்கும் இருக்கப்போவதில்லை என்று கூறினார்.

இரானிய ஆட்சியில் விரிசல்கள் தோன்றி வருவதாகவும், "இந்த விரிசல்கள் அதிகரித்தால், ஆட்சி மாறக்கூடும்" என்றும் அவர் கூறினார்.

மேலும், "இரானிய ஆட்சி பலவீனமடைந்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன," என்று அவர் தெரிவித்தார்.

"இந்த ஆட்சி வீழும் வகையிலான சூழலை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அது நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம்" என்றார்.

இந்த ஆட்சி நீடித்தாலும், "அது மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும்" என்றும்,

இறுதியாக, "இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வது இனி இரானிய மக்களின் கைகளில்தான் உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றனவா?

பிபிசி செய்தியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியரின் கூற்றுப்படி, இரானுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடங்கிய 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைக் காட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முயன்று வருகிறார்.

பட மூலாதாரம்,Joe Raedle/Getty Images

படக்குறிப்பு,அமெரிக்கா ஏன் போரில் நுழைந்தது என்பது குறித்து அந்நாட்டில் உள்நாட்டு விவாதம் நடைபெற்றுள்ளது.

பிபிசி செய்தியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியரின் கூற்றுப்படி, இரானுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடங்கிய 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைக் காட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முயன்று வருகிறார்.

அமெரிக்கா ஏன் இந்தப் போரில் இறங்கியது மற்றும் அதில் இஸ்ரேலின் பங்கு என்ன என்பது குறித்து அமெரிக்காவிற்குள் கணிசமான உள்நாட்டு விவாதங்கள் எழுந்துள்ளன.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் இந்த வாரம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது.

ஜோ கென்ட் டிரம்பின் நீண்டகால கூட்டாளியாகவும், அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் பிரிவுடனும் தொடர்புடையவராக இருந்தார்.

தனது ராஜினாமா கடிதத்தில், "இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் எழுதியுள்ளார்.

பின்னர் கன்சர்வேட்டிவ் வர்ணனையாளர் டக்கர் கார்ல்சனுடனான சுமார் இரண்டு மணி நேர நேர்காணலில் தனது கருத்துகளை அவர் விரிவாக விளக்கினார்.

"இந்த முடிவு இஸ்ரேலால் உந்தப்பட்டது" என்றும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை போருக்குச் சம்மதிக்க வைக்க இஸ்ரேலிய அதிகாரிகள் வழக்கமான நடைமுறைகளை மீறிச் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் புதன்கிழமையன்று, இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அமெரிக்காவிற்கு முன் கூட்டியே தெரியாது என்று ட்ரூத் சோசியல் சமூக ஊடகத் தளத்தில் டிரம்ப் எழுதியிருந்தார்.

சிலர் இதனை அமெரிக்க அதிபரின் கோபத்தின் அறிகுறியாகப் பார்த்தனர்.

தனது அறிக்கைகளின் மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நோக்கங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்ற கருத்தை நிராகரிக்க நெதன்யாகு தெளிவாக முயற்சி செய்து வருகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0le8kn6k2zo

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

"அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்றார்

அமெரிக்காவுக்கு நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, தன் அதிகாரமே பெரிது. நாளைக்கே இஸ்ரேலுக்கு எதிரான அறிக்கையும் வரலாம், அதே போலவே நெத்தன்யாகுவும், ஈரான் தனது சொந்த தாக்குதலாலேயே வீழ்ந்தது என்று உரிமை கொண்டாட நினைக்கிறார். இவர்களில் யாருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையானவர்களுமில்லை. சிலர் நெத்தன்யாகுவை வாலாட்டும் நாய் என்று விமர்ச்சிக்கிறார்கள்.

ட்ரம்புக்கு பெருத்த அவமானம், நட்பு நாடுகள் அவருக்கு கை கொடுக்க மறுத்தது. அவர் போய் சீண்டுவார் மற்றைய நாடுகள் அவரை காப்பாற்ற தங்கள் வீரரை பலி கொடுக்க வேண்டும். இப்படி இவரை தனித்து விட்டாற்த்தான் பாடம் படிப்பார். இது எங்கள் போரல்ல, எங்களை கேட்டு போர் தொடங்கப்படவில்லையென முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கு அமெரிவுக்கு தெரியவில்லை, இஸ்ரேலின் உள் திட்டம், அமெரிக்காவும் அழியவேண்டும், மதிக்கிழக்கில் அமேரிக்கா எந்த செல்வாக்கும் செலுத்த முடியாத அளவுக்கு என்பது

அறப்படித்த அமெரிக்கா. உலகத்தில் மூலை முடுக்கில் நடப்பதை அறிய திறன்களும் , வசதிகளும் இருந்தும், இஸ்ரயேலின் உல் திட்டத்தை உணராமல், இஸ்ரேல் ஆக்கிய கூல் பானைக்குள் விழுந்து விட்டது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நம்பீட்டம். 😁

இஸ்ரேலின் கதையை நம்பாதவன்…

இரத்தம் கக்கி சாவான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் நம்பீட்டம். 😁

இஸ்ரேலின் கதையை நம்பாதவன்…

இரத்தம் கக்கி சாவான். 😂

இச்செய்தியை யாழ்கள ஆய்வாளர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய விரைவில் ஆஜர் ஆகின்றார்கள், கவலைப்படவேண்டாம் சகோதரா😁😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாங்கள் நம்பீட்டம். 😁

இஸ்ரேலின் கதையை நம்பாதவன்…

இரத்தம் கக்கி சாவான். 😂

நான்தான் உலக வல்லரசு என கொக்கரித்த, மற்றைய நாடுகளை அச்சுறுத்திய அமெரிக்காவின் முகத்திரை கிழிந்தது. ட்ரம்ப் சொல்லுவார், தனது திட்டம் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் என்று, எவ்வளவு காலம் தான் உயிரோடு இருப்பேனோ தெரியாது என்றும் சொன்னார். இன்று இரானியர்களையும் அவர்களது போர்த்திறமைகளையும் போற்றுகிறார். நெதன்யாகுவோ, எங்களின் இலக்குகளை அடையும் வரை போர் செய்வோம் என்றவர், விழுந்தவன் மீசையில மண் ஒட்ட வில்லையாம். ஈரானின் அச்சுறுத்தலுக்குரிய காரணிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்தது வெளியேறுகிறோம் என்கிறார். நெதென்யாகுவும் ட்ரம்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஈரானை அழிக்க ஒன்றுபட்டு புறப்பட்டவர்கள், வேறுபட்டு நிற்கிறார்கள். இந்தப்போரினால் ட்ரம்ப் உலக நாடுகளாலும் சொந்த மக்களாலும் கைவிடப்படுகிறார். நெதன்யாகுவின் பேராசை, பயம், அவரின் நாட்டுக்கும் அழிவை கொடுத்துள்ளது. ஈரான் இதை, சும்மா விடப்போவதில்லை. இனிமேற்தான் அது தனது பழிவாங்கலை தொடங்கும். அதை தாங்க ட்ரம்பும் நெதன்யாகுவும் தயாராக இருக்க வேண்டும். இனி அமெரிக்கா தலைக்கனம் காட்ட முடியாது. முட்டாள் ட்ரம்பால் அமெரிக்காவை எந்த நாடும் மதிக்காது, இனிமேல் நட்பு நாடுகளை நம்பி வலிச்சண்டைக்கு போகாது அமெரிக்கா. உண்மையிலேயே நட்பு நாடுகள் எடுத்த முடிவே சரியானது. நட்பு நாடுகள் எந்தச்சந்தர்ப்பத்தில் உதவி புரியும், சும்மா எதேச்சாதிகாரமாய் பிடிக்கும் சண்டைகளுக்கு எங்கள் வீரர்களை நாங்கள் இழக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இது கூட தெரியாத ட்ரம்ப், சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்படாதவர் உலக தலைவராம், அவர் எப்படி மற்றவர்களின் உதவியை மட்டும் எதிர்பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

- சாணி அடி வாங்கிய ட்ரம்பு - 😂 (சிற்றுவேஷன் வீடீயோ.) animiertes-gefuehl-smilies-bild-0048.gif

ஊர் உலகம் எல்லாம் பயந்து கிட்டிருந்த என்னை கொண்டாந்து, ஒரு சின்ன சந்துக்குள்ளை நிறுத்தி... பயந்துக்கிட்டு இருந்தவங்களை எல்லாம்... எறி எறி என்று எறிய வைச்சத்தும் இல்லாம, நாத்தம் அடிக்குது என்றா சொல்லுறாய். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

- சாணி அடி வாங்கிய ட்ரம்பு - 😂 (சிற்றுவேஷன் வீடீயோ.) animiertes-gefuehl-smilies-bild-0048.gif

ஊர் உலகம் எல்லாம் பயந்து கிட்டிருந்த என்னை கொண்டாந்து, ஒரு சின்ன சந்துக்குள்ளை நிறுத்தி... பயந்துக்கிட்டு இருந்தவங்களை எல்லாம்... எறி எறி என்று எறிய வைச்சத்தும் இல்லாம, நாத்தம் அடிக்குது என்றா சொல்லுறாய். 🤣

😂 அருமையான சிச்சுவேசன் காமெடி😂.

தம்பர் - நாறுது…நாறுது கருமம், கருமம்😂

அடுத்து தைவான், தென்கொரியா, குவாம், அவுஸ்ரேலியா….

அத்தோடு அமெரிக்காவின் உலக ஆட்டம் குளோஸ்.

தம்பரை கொண்டு அமெரிக்கா 1st எண்டு சொல்லி சொல்லியே செத்த கிளி அமெரிக்காவை நடுத்தெருவில் நிற்பாட்ட போகுது.

3 வருடத்தில் கதையை முடிப்பார்களா என்பதே கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சாணி அடி வாங்கிய ட்ரம்பு - 😂 (சிற்றுவேஷன் வீடீயோ.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.