Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான்  

03 Apr, 2026 | 02:56 PM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஈரானின் பெரிய பாலம் தாக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கப்போவதாக தெரிவித்துள்ள ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் உள்ள 8 முக்கிய பாலங்களை தாக்கி அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இலக்குவைத்துள்ள பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டுள்ளதையடுத்து வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் முக்கியமாக குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா பாலம் இடம்பெற்றுள்ளது.

அதைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம், ஷேக் கலீஃபா பாலம், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே பாலம், ஜோர்தானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம், அப்தூன் பாலம் ஆகிய பாலங்களை ஈரான் இலக்குவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (2) இரவு ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களை இணைக்கும் 136 மீட்டர் உயரமுடைய மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அழித்தது.

அதற்கு முன்னதாக, போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் போடப்படாவிட்டால் ஈரானை கற்காலத்துக்குத் தள்ளிவிடுமளவு பாரிய குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கடுத்த நாளே ஈரான் பாலம் தாக்கப்பட்டது.

அதன் பின்னர், ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இன்னும் பல தாக்குதல்கள் தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்பின் மிரட்டலுக்கும் ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கும் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் 8 பெரிய பாலங்களை அழிக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

https://www.virakesari.lk/article/242643

  • கருத்துக்கள உறவுகள்

லிஸ் போட்டு அடி

தம்பர் வாயை கொடுத்தா…

அரபு நாடுகளில் backfire ஆகிறது😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

லிஸ் போட்டு அடி

தம்பர் வாயை கொடுத்தா…

அரபு நாடுகளில் backfire ஆகிறது😂

அண்ணை, கலகலப்பு கொமடி தான் எனக்கு ஞாபகம் வருது!

"இங்க அடிச்சா இங்கதான் வலிக்கும்"

https://www.instagram.com/reel/DVfEirBjDfi/?utm_source=ig_web_copy_link

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்... பலே... சரியான போட்டி.

இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி...

யார் பெரிசு என்று, அடித்துக் காட்டு(ங்க.) 😂

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

அண்ணை, கலகலப்பு கொமடி தான் எனக்கு ஞாபகம் வருது!

"இங்க அடிச்சா இங்கதான் வலிக்கும்"

https://www.instagram.com/reel/DVfEirBjDfi/?utm_source=ig_web_copy_link

இத…இத…இதத்தான் தேடிகிட்டு இருந்தேன்😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அதைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம், ஷேக் கலீஃபா பாலம், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே பாலம், ஜோர்தானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம், அப்தூன் பாலம் ஆகிய பாலங்களை ஈரான் இலக்குவைத்துள்ளதாக அறிவித்துள்ளது

ஓமானும் கத்தாரும் டீலுக்கு போய்விட்டார்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்

659818905_122215445414553852_21272420255

"தாக்குதலில் சேதமடைந்த பாலங்களை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்; ஆனால் அமெரிக்காவைத் தண்டிப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி-

Ceylon Focus News

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் "பன்னாடை" யின் அமைச்சரவையில் அவர்களது துறையில் கீழ்மட்டத் தகுதி கூட இல்லாத பலர் இருக்கின்றனர். அவர்களுள் முக்கியமானவர் பீற் ஹெக்செத் என்ற "யுத்த😎 அமைச்சர்".

புகழ் பெற்ற பிரின்ஸ்ரன் பல்கலையில் அரசியலில் கலைமாணிப் பட்டம் பெற்ற ஹெக்செத், அதிக பட்சமாக ஒரு 50 பேரை நிர்வாகம் செய்த கப்ரன் தர அதிகாரி மட்டுமே. சீரூடை அணியும் விருப்பத்தால் தொண்டர் படை (National Guard) யில் சேர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக முக்கி முக்கி, தலைமை அனுபவம் வெளிப்படக் கூடிய மேஜர் பதவி கிடைத்தவுடன், இராணுவத்தில் இருந்து வெளியேறி செய்தி ஊடக நிறுவனத்தில் சேர்ந்து நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தார்.

3 / 4 நட்சத்திர ஜெனரல்களும், West Point luminaries உம் மட்டுமே பெரும்பாலும் வகிக்கும் பதவியை இந்த "பிளாட்டூன் லீடரிடம்" கொடுத்து விட்டு பன்னாடை படும் பாடு ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது😂!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் பெரும்பாலும் இராணுவ இலக்குகளை இலக்கு வைத்து இரதரப்பும் இராணுவத்தாக்குதல்களை நடத்தினார்கள். இப்பொழுது பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்பான ஈரானின் பாலத்தை அமெரிக்கா தாக்கி பெரும்தவநைச் செய்கிறது. ஈரான் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளின் பொதுக் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த இது வாய்ப்பாகி விட்டது. ஈரான் அடிக்கிற அடியில் அண்டை நாடுகள் பிச்i வேண்டாம் நாயைப்பிடி என்று அமெரிக்காவை குற்றஞ்சாட்டி அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பவும் வாய்ப்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Live. 30,168 viewing30168 viewing

Live pageUpdated 8 minutes ago

American fighter jet shot down over Iran, US and Iranian media report

தம்பருக்கு கால்வைச்ச இடங்களில எல்லாம் கண்ணி வெடியாய் இருக்கிறதே.அமெரிக்கா விமானியை அமெரிக்கபடையினர் தேடி வருகின்றனராம். அந்த விஞ்ஞானி ஈரான்கையில் கிடைத்தால் அவ்வளவுதான். சீனாக்காரரின் ஆயுதப் பரிசோதனைநன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது போலும்.;

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எங்கள் "பன்னாடை" யின் அமைச்சரவையில் அவர்களது துறையில் கீழ்மட்டத் தகுதி கூட இல்லாத பலர் இருக்கின்றனர். அவர்களுள் முக்கியமானவர் பீற் ஹெக்செத் என்ற "யுத்த😎 அமைச்சர்".

புகழ் பெற்ற பிரின்ஸ்ரன் பல்கலையில் அரசியலில் கலைமாணிப் பட்டம் பெற்ற ஹெக்செத், அதிக பட்சமாக ஒரு 50 பேரை நிர்வாகம் செய்த கப்ரன் தர அதிகாரி மட்டுமே. சீரூடை அணியும் விருப்பத்தால் தொண்டர் படை (National Guard) யில் சேர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக முக்கி முக்கி, தலைமை அனுபவம் வெளிப்படக் கூடிய மேஜர் பதவி கிடைத்தவுடன், இராணுவத்தில் இருந்து வெளியேறி செய்தி ஊடக நிறுவனத்தில் சேர்ந்து நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தார்.

3 / 4 நட்சத்திர ஜெனரல்களும், West Point luminaries உம் மட்டுமே பெரும்பாலும் வகிக்கும் பதவியை இந்த "பிளாட்டூன் லீடரிடம்" கொடுத்து விட்டு பன்னாடை படும் பாடு ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது😂!

https://tamilwin.com/article/fallout-cost-us-army-chief-randy-george-his-job-1775217191?itm_source=article

திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.