Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விமான சேதம் / அழிவு நேற்று நடந்தகாக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல்

hindutamil-prod%2F2026-04-04%2F89gwid5b%

டெஹ்ரான்: ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு ஆதாரமாக, போர் விமானங்களின் உடைந்த பாகங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க ராணுவமும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்யவில்லை. அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது ஒரு விமானி பாராாசூட் மூலம் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

அந்த விமானியை ஈரான் ராணுவம் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க விமானி பிடிபட்டது தொடர்பான புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். தற்போது இரண்டாவது எப்-35 ரக போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.hindutamil.in/news/world/iran-military-says-it-shot-down-us-f-35-and-f-15-jets

  • கருத்துக்கள உறவுகள்

இராக் விமனநிலையத்தில் இரகசியமாக தரித்து இருந்த black hawk என்ற உலங்கு வானூர்தியின் வால் பகுதி காக்கப்பட்டு வால் பகுதி அழிக்கபட்டு இருப்பதாக தகவல்.

இந்த தாக்குதலின் நோக்கம் ஈராக் விமான நிலையத்தின் குறிப்பிட்ட மிகவும் பாதுகாப்பான பகுதியை தாக்கப்பட முடியும் என்று காட்டுவதற்கு.

இது அமெரிக்காவின் ஈராக் green zone இல் தப்பி ஓடுவதற்கான , (வியட்நாம் இல் செய்து வைத்து இருந்தது போன்ற) ஓர் ஏற்பாடு என்றும் தகவல்.

ஒன்றும் உறுதிபடுத்தப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

ஈரான் இன்று அடித்த ஏவுகணையும்

சென்ற வாரம் இஸ்ரேலுக்கு அடித்த Khorramshahr-4 (குஹ்யபேர்) உலகில் இதுவரையில் பாவனையில் இல்லாதா தொழில்நுட்பம்

சீனா ஈரானுக்கு இதை கொடுத்து இருக்க வேண்டும்

புதிய passive - Radar system மும் பாவிக்க தொடக்கி இருக்கிறார்கள் இதும் ரசியா அல்லது சீனா கொடுத்து இருக்கலாம்

இன்று அடித்த ஏவுகணை ரேடார்களின் உதவி இன்றி தானியங்கியாக இயங்க்கி இலக்கை அழிக்க கூடியது

பிற ஊதா கதிரியக்க (IIR + EO) மூலம் வழி நடத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையே Passive System என அழைக்கிறார்கள்.

ரடாரின் மூலம் வழி நடத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Active system என அழைக்கிறார்கள், விமானத்திலிருந்து விமானத்திற்கு ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை விமானத்திலிருந்து வெளியேறும் ராடர் சிக்னலை உள்வாங்கி செயல்படுவதனை semi active system என அழைக்கிறார்கள்.

ராடர் வழிநடாத்தப்படாத விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Passive System என அழைக்கிறார்கள்.

விமானங்களில் உள்ள பாதுகாப்பு பொறிமுறைகள் ராடர் இயக்கப்படுவதனை இனங்காணக்கூடியதாக காணப்படுவதால் நீண்ட குறுந்தூர ராடரில் இயங்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை செலுத்திகளை விமானங்கள் இலகுவாக இனங்காணுவதாக கூறுகிறார்கள், அத்துடன் F-35 போன்ற உரு மறைப்பு விமானங்கள் அதிக அதிர்வு கொண்ட ராடரிற்கு புலப்படாது ஆனால் VHF வகை ராடரிற்கு புலப்படும் அதிர்வு அலை அகலமாக இருப்பதால் தாக்குதல் துல்லியமாக இருக்காது என்பதால் இரஸ்ஸிய தரப்பு VHF + UHF + L band(microwave) போன்றவற்றின் மூலம் F-35 போன்ற உருமறைப்பு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழிநடத்துகிறார்கள்.

ஈரான் பாவிக்கும் IIR வகை குறுந்தூர (0.7KM - 8KM) விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விமானம் இனங்காண முன்னரே விமானம் தாக்கப்பட்டுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

Khorramshahr-4

Khorramshahr-4 இது ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணை இல்லை என கூறப்பட்டுள்ளது

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

தரமான அறிவுசார் விளகங்கள் @vasee 🙏.

வரப்போகும் பதில்களுக்கு தயாராகவும்😂.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலே பெரியவன் அல்லாஹ்வின் கைவரிசைகள் ஒன்றும் இல்லையா

அல்லாகு அக்பர் முழக்கங்கள் கேட்கின்றனவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவிற்கு... அடி மேல் அடி விழுந்து கொண்டுள்ளது. 😂

அமெரிக்காவிற்கு... இன்னொரு வியட்நாம் தான், ஈரான். 🤣

வெட்கப் படாமல்... வெள்ளைக் கொடியுடன்,

ஈரானிடம் சரண் அடைவதே புத்திசாலித்தனம்.

உக்ரேன் கருத்து வெற்றிக்காக அமெரிக்காவும் மேற்குலகும் தெய்வம் என்ற குரல்கள் இன்று அமெரிக்காவையும் திட்டி தீர்க்கின்றன.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரானில் எஃப்-15 போர் விமானம் வீழ்ந்த இடத்தில் தேடப்பட்ட 2வது அமெரிக்க வீரரும் மீட்பு - என்ன நடக்கிறது?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், F15E, இரண்டாவது அமெரிக்க வீரரும் மீட்பு

பட மூலாதாரம்,CHRIS RADBURN/AFP via Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

5 ஏப்ரல் 2026, 05:32 GMT

புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் காணாமல் போன விமானப்படை வீரரைத் தேடும் பணியில் இரானும் அமெரிக்காவும் போட்டிபோட்டு ஈடுபட்டிருந்தன.

இந்தச் சூழலில் தேடப்பட்டு வந்த விமானப்படையின் இரண்டாவது வீரர் கிடைத்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தகவலை தனது ட்ரூத் சோசியல் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

அந்த அதிகாரி எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் இந்த நடவடிக்கையை நெருக்கமாக கண்காணித்த ஒருவர், தெற்கு இரானில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணி நடத்தப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த மீட்பு பணியின்போது அமெரிக்க மற்றும் இரானிய படைகள் இடையே சண்டை நடைபெற்றதாக பிபிசிக்கு தகவல் கிடைத்தது. விமானத்திலிருந்து வெளியேறிய போது விமானி காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேடுதல் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்

முன்னதாக காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இரான் ராணுவத்துடன் பொதுமக்களும் அமெரிக்க வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடித்து மீட்டு விட்டதாக டிரம்ப் உறுதி செய்வதற்கு முன்பாக இரானிய பொதுமக்களும் தேடுதல் பணியின் இணைந்திருந்தனர்.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் தென்மேற்கு இரானில் உள்ள மலைப்பகுதி நோக்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

வான் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டதாக இரான் தகவல்

காணாமல் போன அமெரிக்க வீரர் இருந்ததாக நம்பப்பட்ட பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

உள்ளூர் ஆளுநர் ஒருவரை மேற்கோள்காட்டி தஸ்னிம் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின்படி, தென் மேற்கு இரானில் உள்ள போயர்-அஹமது மாகாணத்திலும் கோகிலுயேவின் மலைப்பகுதிகளிலும் நடந்த தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆளுநர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அதன் பிறகு மாகாணத்தின் துணை ஆளுநரான ஃபட்டா முகமது உள்ளூர் இரானிய ஊடகங்களிடம் பேசுகையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த தாக்குதல்கள் அமெரிக்க வீரர் மீட்புப் பணிகளுடன் தொடர்புடையதா என்பதில் தெளிவில்லை.

அமெரிக்க டிரோன் வீழ்த்தப்பட்டதா?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், F15E, இரண்டாவது அமெரிக்க வீரரும் மீட்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

இரானிய ஊடகங்களில் வந்துள்ள செய்தியின்படி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த தேடுதல் பணியின்போது அமெரிக்க டிரோன் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஃபார்ஸ் செய்தி முகமை மற்றும் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை ஆகியவற்றை மேற்கோள்காட்டி அதன் செய்தித் தொடர்பு அலுவலகம் கொடுக்கும் தகவல்களின்படி, அந்த டிரோன் இரானின் தெற்கு இஸ்ஃபஹான் மாகாணத்தில் விழுந்தது.

ஆனால் இந்த தகவல் அமெரிக்க தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை.

டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?

இந்த தகவலை உறுதிபடுத்திய டொனால்ட் டிரம்ப், தனது பதிவில் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

"அமெரிக்க ராணுவம் வரலாற்றில் மிகவும் சவாலான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டது. இது மிகவும் மதிக்கத்தக்கவரும் மிகச் சிறந்த அதிகாரியுமான கர்னல் ஒருவருக்காக நடத்தப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது." எனத் தெரிவித்திருந்தார்.

தனது பதிவில், "இந்த தைரியமிக்க அதிகாரி இரானின் ஆபத்தான மலைகளில் எதிரிகளால் சூழப்பட்டிருந்தார். ஒவ்வொரு மணி நேரமும் இரானிய ராணுவம் தன்னை நெருங்கி வருவதை அவர் பார்த்து வந்தார். ஆனால் அவர் ஒருபோதும் தனியாக இருக்கவில்லை. முப்படைகளின் தளபதியான நான் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர், கூட்டு படை தளபதிகள் மற்றும் சக வீரர்கள் அவரது இருப்பிடத்தை 24 மணி நேரமும் கண்காணித்து மீட்புப் பணி திட்டமிடப்பட்டது." என்றார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், F15E, இரண்டாவது அமெரிக்க வீரரும் மீட்பு

பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images

படக்குறிப்பு,டிரம்ப்

எனது உத்தரவின்பேரில் அவரை மீட்க, உலகின் மிகவும் நவீன ஆயுதங்களைக் கொண்ட விமானத்தை அமெரிக்க ராணுவம் அனுப்பி வைத்திருந்தது எனக் கூறுகிறார் டிரம்ப்.

அந்த வீரர் காயமடைந்துள்ளதாகக் கூறிய டிரம்ப் அவர் மீண்டு வருவார் என்றும் தெரிவித்தார்.

"நேற்று நாம் நடத்திய வெற்றிகரமான ஆபரேஷனைத் தொடர்ந்து இந்த மீட்புப் பணி நடைபெற்றது. ஆனால் மற்ற அதிகாரிகள் ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்காக நாம் பொதுவெளியில் அதனை தெரிவிக்கவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிரியின் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு அமெரிக்க விமானிகள் மீட்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் குறிப்பிடும் டிரம்ப், "எந்த அமெரிக்க வீரரையும் விட்டுவிட்டு நாங்கள் செல்ல மாட்டோம். இந்த இரண்டு மீட்புப் பணிகளிலும் எந்த அமெரிக்க வீரரும் கொல்லப்படவுமில்லை காயமடையவுமில்லை. இது இரானிய வான்பரப்பு மீது முழுமையான கட்டுப்பாட்டை நாம் அடைந்துவிட்டோம் என்பதை நிருபிக்கிறது." என்றார்.

அமெரிக்க அதிகாரிகள் கூறுவது என்ன?

வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்னட் டெபுஸ்மேன் ஜூனியர் வழங்கும் தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் மீட்புப் பணி வெற்றியடைந்ததைக் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

"எவரையும் கைவிடுவதில்லை என்பதே அமெரிக்க ராணுவத்தின் கொள்கையாக உள்ளது," என்றார் மத்திய கிழக்கிற்கான பாதுகாப்பு துணை உதவி செயலாளர் மிக் முல்ராய். "இன்றைய தினம் அந்த முக்கிய அர்ப்பணிப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டு." என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர், "அமெரிக்க ராணுவம், உளவு அமைப்புகள் மற்றும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் அமெரிக்க மக்களின் நன்றிக்கு உரித்தானவர்கள்." என்றார்.

கடந்த கால மீட்பு நடவடிக்கைகள்

2009-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் போவி பெர்க்டால் என்கிற அமெரிக்க வீரர் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.

  • அவரை விடுவிக்க 2014-இல் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமாவின் நிர்வாகம் குவாண்டநாமோ விரிகுடா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 5 தாலிபன் சிறைவாசிகளை விடுவித்தது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், F15E, இரண்டாவது அமெரிக்க வீரரும் மீட்பு

Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

Contact form

  • 1979-இல் அமெரிக்க ராஜதந்திரிகள் இரானால் 444 நாட்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மீட்கும் ராணுவ முயற்சி தோல்வியடைந்த நிலையில், இரான் மீதான சில பொருளாதார தடைகளை நீக்கியும் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான இரானின் சொத்துகளை விடுவித்ததன் மூலமும் தனது ராஜதந்திரிகளின் விடுதலையை அமெரிக்கா உறுதி செய்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c070pr14z7ro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.