Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூய தமிழ்ச் சொற்கள்

Featured Replies

மொழி என்பது என்ன?

ஒரே குழுமம் அல்லது இனம் அல்லது ஒருமித்து வாழும் சமூகக்கூட்டம் தங்களுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள (ஒருவர் என்ன நினைக்கிறார் அல்லது என்ன சொல்ல வருகிறார் என்பதை மற்றவர் புரிந்து கொள்ள) உதவும் ஊடகம். இது ஒலியாகவோ அன்றி எழுத்து வடிவிலோ இருக்கலாம்.

ஆனால் தூய தமிழ் ஆக்குகிறேன் பேர்வழி என்று, புறப்பட்டு ஒருவருக்குமே புரியாத புது மொழி உருவாக்கப்பட்டு விடக்கூடாது. இல்லாவிடில் எல்லோரும் ஒரு பென்னாம்பெரிய தூய தமிழ் அகராதியுடன் அலைய வேண்டி வரலாம் :lol::lol::)

அல்லது சங்க காலத்து நூல்களைப் படிப்பதற்கு எமக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படலாம்

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக ஆங்கிலம் பல தரப்பட்ட மக்களால் பேசப்பட்டாலும் சேக்ஸ்பியர் எழுதியது போல் இது வரை யாரும் பேசியதாக நான் பார்க்கவில்லை.ஆனால் பலர் எழுதியுள்ளார்கள்.ஆகவே பேச்சு மொழி என்றும்,எழுத்து மொழி என்றும் நிச்சயாமாக எந்த மொழியிலும் உண்டு என்று சொல்லலாம்.பேச்சு மொழி இடத்துக்கு இடம் வேறுபடும்.உ+ம்: ஆங்கிலம் நியூசிலாந்தில் பேசப்படுவதற்கும்,ஸ்கொட்லாண்

ஆனால் தூய தமிழ் ஆக்குகிறேன் பேர்வழி என்று, புறப்பட்டு ஒருவருக்குமே புரியாத புது மொழி உருவாக்கப்பட்டு விடக்கூடாது. இல்லாவிடில் எல்லோரும் ஒரு பென்னாம்பெரிய தூய தமிழ் அகராதியுடன் அலைய வேண்டி வரலாம் :D:D:lol:

ஐயா ராசா தூய தமிழாக்கம் என்பது புதுமொழி உருவாக்கமல்ல.

எமது மொழியில் கலந்துள்ள வேற்றுமொழிச் சொற்களிற்குப் பதிலாக எமது தமிழ்மொழிச் சொற்களை பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த வேண்டும்.

நாம் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களிற்கு பதிலாக எமது மொழியில் ஏற்கனவே உள்ள சொற்களையே மீளப்பயன்படுத்துமாறு தமிழறிஞர்களால் வேண்டப்படுகிறது. அதேவேளை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய தமிழ்ச்சொற்களும் தமிழறிஞர்களால் உருவாக்கப்படுகிறது.

தமிழனாகப் பிறந்து ஆங்கிலமோ அல்லது பிறமொழிகளை நாம் கற்கத் தொடங்கும்வேளையே நாம் அந்த மொழி அகராதிகளை பயன்படுத்துகிறோம். போகப் போக அகராதியை உதறிவிட்டு இலகுவாக அந்த மொழிகளைப் பேசுகிறோம்.

மற்ற மொழிகளைப் பேச அகராதி தேவைப்படாத உங்களைப் போன்றவர்களிற்கு தூய தமிழைப் பேச மட்டும் பென்னம் பெரிய அகராதி தேவைப்படுமென கேலிப்பேச்சு வருகிறது. இது தமிழுக்கு இழுக்கல்ல. உங்களுக்குத்தான்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

Optical Illusion : காட்சிப்பிழை

சாணக்கியன் அண்ணா நான் தூய தமிழில மொழி பெயர்த்து தருவோ. :D .........கண்டிப்பா பல்லு கொழுவாம நான் மொழி பெயர்பேன் சரி இப்ப பெயர்கிறேன்!! :wub:

மச்சி என்னடா இன்னைக்கு புது ஜீன்ஸ் எல்லாம் போட்டு கலக்குறாய் என்ன நைனா இன்றைக்கு சம்திங் ஸ்பேசலோ :wub: .........நத்திங் ஸ்பேசல் பசங்களோட டவுண் பக்கம் ரவுண்ட்ஸ் போனனாங்க அப்ப பேமர்ண்டில நம்ம துட்டிற்கு ஏற்ற மாதிரி இருந்தது அது தான் தூக்கிட்டோம் :lol: .........சும்மா பிலிம் காட்டாதே எப்படா உன்ட பேர்டே......நெஸ்ட் மந் தானே எங்க சாக்கில இருந்து பர்சை எடுடா எங்கே ஜசியை காட்டு நமக்கு :lol: .......இது தான் இந்த ஏரியா பக்கமே வாரதில்லை நான் விடுங்கடா சும்மா.........நான் கிளம்புறேன்.........டேய் போடா போடா துண்டு வாற நேரம் என்றவுடனே ஆள் நமக்கே அல்வா தாரான்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

உது என்ன, சாதுவா மட்டக்குளி வாசம் அடிக்குது? :(

என்ன செய்யிறது என்ட பேஷ்ன்ட் என்ன செய்தாலும் கேட்கதானே வேண்டும் sad.gif சரி கூல்டவுண் இப்ப என்ன ஊசி போடுற நேரமோ சரி சரி வாரேன் smile.gif .........என்றாலும் இப்ப நல்ல இம்புருமன்ட் கவலைபடவேண்டாம் wub.gif இப்ப தான் தொடக்கம் குணபடுத்திடலாம்!! biggrin.gif

அப்ப நான் வரட்டா!!

துயவனையே வலு சமர்த்தா சமாளிக்கிறியள், உங்களுக்கு கூல்பேபி MBBS என்ற டாக்டர் பட்டத்தை வழங்குகிறேன்!

Edited by சாணக்கியன்

ஐயா ராசா தூய தமிழாக்கம் என்பது புதுமொழி உருவாக்கமல்ல.

அதேவேளை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய தமிழ்ச்சொற்களும் தமிழறிஞர்களால் உருவாக்கப்படுகிறது.

அறிவியல் படுவேகமாக (உந்துகணை வேகத்தில்) வளர்ந்து கொண்டு போகுதண்ணா. அதேவேகத்தில் தமிழ்மொழிக்கு புதுப்புது சொற்களும் கூடிக்கொண்டு போகுதண்ணா.

இதைவிட ஏற்கனவே தமிழுடன் கலந்துள்ள திசைச்சொற்கள் (வடமொழி, ஆங்கில மொழி, போர்த்துகேய மொழி, ஒல்லாந்து மொழி, அராபிய மொழி) அத்தனையும் நீக்கி அனைத்துக்கும் புதுச் சொற்கள் சேர்க்க வேணும்.

நான் படித்த காலத்தில் இருந்த பல சொற்கள் இப்போது இல்லை. மன்னிச்சிடுங்கண்ணா. எனக்கு இழுக்கெண்டாலும் இதைச் சொல்லாம இருக்க முடியேல்லை.

எனக்கு பென்னாம் பெரிய தமிழ் அகராதி தேவை.

உது என்ன, சாதுவா மட்டக்குளி வாசம் அடிக்குது? :unsure:

நேக்கு அந்த ஏரியா பிரண்சும் இருந்தவை சாணக்கியன் அண்ணா அவங்களோட கதைத்துபோட்டு வீட்டை போய் வாய் தடக்கி அந்த பாஷை வர மம்மியிட்ட ஏச்சுவிழுறது நேக்கு தானே தெரியும்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

துயவனையே வலு சமர்த்தா சமாளிக்கிறியள், உங்களுக்கு கூல்பேபி MBBS என்ற டாக்டர் பட்டத்தை வழங்குகிறேன்

அட அட நல்லா இருக்கே இந்த பட்டம் சாணக்கியன் அண்ணா நேக்கு பொன்னாடை எல்லாம் போர்த்த மாட்டியளோ!! :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

ந.வெற்றியழகன்

சாந்தம் - அடக்கம்

சாந்தி - அமைதி

சாரம் - சாறு; பிழிவு

சாராம்சம் - சாறு; பிழிவு

சாத்தியமான - இயலக்கூடிய

சாம்ராச்சியம் - பேரரசு

சிகரம் - உச்சி; முகடு

சிகை - தலைமயிர்

சிரம் - தலை

சிரசு - தலை

சிங்கம் - அரிமா

சிங்காரம் - ஒப்பனை; அழகு

சிசு - குழந்தை; சேய்

சித்தப்பிரமை - மனமயக்கம்

சிகிச்சை - மருத்துவம்

சித்தாந்தம் - கோட்பாடு

சிந்தனை - எண்ணம்

சிரமம் - கடுமை

சிலை - படிமம்

சிநேகம் - நட்பு

சிருங்காரம் - காமம்

சிதிலம் - சிதைவு

சீக்கிரமாக - சுருக்காக

சீதபேதி - வயிற்றுக்கடுப்பு

சீலம் - நல்லொழுக்கம்

சீ(ஜீ)ரணம் - செரிமானம்

சீ(ஜீ)வன் - உயிர்

சீ(ஜீ)வனம் - பிழைப்பு

சுகம் - நலம்

சுலபம் - எளிது

சுகவீனம் - நலக்குறைவு

சுகாதாரம் - நலவாழ்வு

சுத்தம் - தூய்மை

சுத்திகரிப்பு - துப்புரவு

சுதந்திரம் - விடுதலை; தன்னுரிமை

சுந்தரம் - எழில்

சுபம் - நன்மை

சுபீட்சம் - செழிப்பு

சுபாவம் - இயல்பு

சுய(நலம்) - தன்(னலம்)

சுயமாக - தானாக, சொந்தமாக

சுவாசம் - மூச்சு

சுரணை - உணர்ச்சி

சுயாதீனம் - தன்னுரிமை

சு(ஜு)வாலை - தீக்கொழுந்து

சுயேச்சை - தன்விருப்பம்

சூட்சுமம் - நுட்பம்

சூசகம் - மறைமுகம்

சூத்திரம் - நூற்பா

சூன்யம் - வெறுமை; பாழ்; இன்மை

சேட்டை - குறும்பு

சொகுசு - பகட்டு

சொப்பனம் - கனவு

சொற்பம் - சிறுமை; கொஞ்சம்

சோகம் - துயரம்

சோதனை - ஆய்வு

சோரம் - கள்ளம்

சவுக்யம் - நலம்

சவுபாக்யம் - நற்பேறு

ஞாபகம் - நினைவு

ஞானம் - அறிவு

தண்டனை - ஒறுத்தல்

தத்துவம் - மெய்யியல்; மெய்யுணர்வு; மெய்ப்பொருளியல்

தயவு (தயை) - இரக்கம்

தயாளம் - இரக்கம்

தந்தி - தொலைவரி

தயிலம் - எண்ணெய்

தரிசு - வறள்நிலம்; விடுநிலம்

தருணம் - வேளை

தனம் - செல்வம்

தரித்திரம் - வறுமை

தயாரிப்பு - விளைவாக்கம்

தகனம் - எரியூட்டல்

தய்ரியம் - துணிச்சல்

தானம் - கொடை

தாகம் - நீர்வேட்கை

தாசன் - அடியான்

தாட்சண்யம் - கண்ணோட்டம்; இரக்கம்

தாமதம் - காலநீட்சி; காலத்தாழ்ச்சி; நெடுநீர்

திடம் - திண்மை

திடகாத்திரம் - உடலுறுதி; உடற்கட்டு; கட்டுடல்

தியாகம் - ஈகம்

திரவம் - நீர்மம்

திரவியம் - செல்வம்

திராணி - தெம்பு; வலிமை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழ்ச்சொல்

அகராதி, அகாலம், அகிம்சை, அகில, அகிலம் ஆகிய சொற்களுக்ககான தூய தமிழ்ச்சொல்

அகராதி - அகரமுதலி, அகரவரிசை

அகாலம் - தகாக்காலம், அல்காலம், இயற்கையல்லாத

அகிம்சை - துன்புறுத்தாமை, இன்னாசெய்யாமை

அகில - அனைத்து, முழு

அகிலம் - உலகம்,வையகம்

அக்கிரமம், அக்கினி, அகங்காரம், அகதி, அகந்தை ஆகிய சொற்களுக்கான தூய தமிழ்ச்சொல்

அக்கிரமம் - முறைகேடு,ஒழுங்கின்மை

அக்கினி - நெருப்பு, தீ, அனல், தழல்

அகங்காரம் - செருக்கு, தற்பெருமை

அகதி - ஏதிலி

அகந்தை - செருக்கு, இறுமாப்பு

http://www.sooriyan.com/index.php?option=c...4&Itemid=30

Edited by nunavilan

உங்களைத் திருத்த முடியாது. நுணாவிலான் சொல்லுறதைப் பார்த்தா நான் இப்ப வடமொழிதான் கதைத்துக்கொண்டிருக்கிறேன் போல கிடக்குது. எங்கள் மதத்தில் சில இடைச்செருகல்களைச் செய்து அதைத் தங்கள் மதம் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து இந்து சமயத்தை பிரிக்க நினைக்கின்றார்கள் சிலர். அதற்கு பகுத்தறிவுச் சிங்கங்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சிலர் துணைபோகின்றார்கள். அதே போல் தமிழில் சில சொற்களைப் புகுத்தி தமிழிலிருந்து சில சொற்களை களவாடி அதற்குத் திருத்தம் செய்து அதை வடமொழிச்சொல் என்று என்று உரிமை கொண்டாடுகின்றார்கள். அந்த கருத்தை வலுவூட்ட மின்னல் மற்றும் நுணாவிலான் போன்றவர்கள் சிறப்பான சேவை செய்துகொண்டிருக்கின்றார்க

Edited by Sujeenthan

தமிழால் வளர்ந்த சமயம் இன்று தமிழைக் கொல்ல வழிசமைக்கிறது.......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழைக் காப்பாற்றப் புறப்பட்டதாகச் சொன்ன கழகத்தினர் ஆங்கிலத்துக்கு ஆலவட்டம் பிடிக்கின்றார்கள்.

நாங்கள் பயன்படுத்தும் வேற்று மொழிச் சொற்களிற்கான மாற்றாக தமிழர்களால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொற்களை தமிழறிஞர்கள் உங்களிற்கு அடையாளம் காட்டுகிறார்கள். சில சொற்களே புதிதாக பொருள் பட உருவாக்குகிறார்கள். நுணாவிலான் இணைத்துள்ள பிறமொழிச் சொற்களிற்கான தூய தமிழ் சொற்கள் அனைத்தும் எமது முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்தவை.

எமது மொழி பல்லாயிரம் சொற்களைக் கொண்ட செழிப்பான மொழி. இப்படியான வளமான மொழியை தாய் மொழியாகக் கொண்ட நாம் பிறமொழிச் சொற்களை அதிக அளவில் கலந்து எமது பேச்சில் எழுத்தில் பயன்படுத்தி வருகிறோம்.

வட மொழிச் சொற்கள் உள்ளிட்ட பிற மொழிச் சொற்கள் எமது மொழிக்குள் கலந்து இன்று அவையும் தமிழ்தான் என்று நீங்கள் சொன்னால் நாம் தற்போது பேசும் போது பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களையும் எமது அடுத்த தலைமுறைகள் தமிழ்தான் என்று கூறும்.

அப்போது தமிழ் மொழியில் அக்கறை கொண்டு அந்த ஆங்கிலச் சொற்களிற்குரிய தமிழ்ச் சொல்லை அடையாளம் காட்டினால், உங்களைப் போன்ற எமது வருங்காலத் தலைமுறைகள் எமது மொழியில் இருந்த சொற்களை வெள்ளைக் காரன் திருடி தனது மொழியில் சேர்த்துள்ளான் என்று ஆங்கிலச் சொல்லிற்குக்கூட உரிமை கொண்டாடுற நிலை வரும்.

Edited by மின்னல்

தமிழைக் காப்பாற்றப் புறப்பட்டதாகச் சொன்ன கழகத்தினர் ஆங்கிலத்துக்கு ஆலவட்டம் பிடிக்கின்றார்கள்.

கழகத்தினர் ஆங்கிலத்திற்கு ஆல வட்டம் பிடிக்கட்டும். தமிழைக் காக்கும் முயற்சியைக் கைவிடடட்டும்.

ஆனால் நாம் எம்மால் முடிந்தவரை தமிழில் உள்ள களைகளை அகற்ற முயற்சிப்போமே!

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தூய தமிழ்ச்சொல்

அத்தம், அஞ்ஞானி, அஞ்ஞானம், அஞ்சலி, அசாத்தியம் ஆகிய சொற்களுக்கான தூய தமிழ்ச்சொல்

அத்தம்/அஸ்தம் - கை

அஞ்ஞானி - அறிவிலி

அஞ்ஞானம் - அறியாமை, அறிவின்மை

அஞ்சலி - வணக்கம்

அசாத்தியம் - இயலாமை, இயலாதது,

pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.