Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியம் என் தாத்தா வீட்டுச்சொத்து

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்றைப் புரிந்து கொள்ளுங்கள். செயற்பாட்டாளர்களைப் பற்றி நீங்கள் குறை கூறுவதாக இருந்தால், முதலில் நீங்கள் எவ்வாறான செயற்பாட்டைச் செய்திருக்கிறீர்கள் என்பதைத் தான் முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் பணப்பங்களிப்பு மட்டும் செய்துவிட்டு, முழுமையாகச் செயற்படுபவரைப் பற்றிக் குறைகூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் உங்கள் பணத்தைக் கையாடினால் அதைப் பற்றிக் குறை கூறலாம். ஆனால் நீங்கள் செயற்பாட்டாளராகச் செயற்படாமல் மற்றவரைப் பற்றி எப்படிக் குறை கூறலாம்?

தமிழிச்சியின் பல சந்தேகங்களிற்கு ஆதி வந்து தெளிவு கொடுக்கக்கூடிய பதிலை எழுதி எனது எழுத்து வேலையை குறைத்தமைக்கு முதலில் ஆதிக்கு நன்றி அடுத்ததாக தமிழிச்சி நிங்கள் கேட்டது போல நான் செய்த செயற்பாடுகளை பட்டியலிடுவதை விட அண்மையில் நான் முன்னெடுத்த இரண்டு செயற்பாடுகள் பற்றியும் அதற்கு வந்த தடங்கல்கள் பற்றியும் நான் விபரித்தால் பிரயோனமாக இருக்கும் என நினைக்கிறேன். முதலாவது அண்மையில் பிரித்தானியாவில் வாழும் அனைத்து தமிழர்களையுமே திருடர்களாக பார்த்த ஒரு செய்தி அறிந்திருப்பீர்கள் அதாவது கடன்அட்டை மோசடி இந்த மோசடி மூலம் பெறும் பணம் புலிகளிற்கு ஆயுதம் வாங்க பயன்படுகிறதென்று ஒரு செய்தி அந்த செய்தியை பிரபலமான பி.பி.சி செய்தியில் வெளிவந்திருந்த காலகட்டம். ஒட்டுமொத்த ஈழத்தமிழரை திருடராக்கியது மட்டுமல்ல எங்கள் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திய செயல்.

இந்தச்செய்தியின் பின்னர் ஒரு றேடியோவில் இதைப்பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடந்தது. அந்தக்கலந்துரையாடலில் தமிழ்சமூகத்தில் தாங்களும் ஒரு பிரதிநிதிகள் என்று இரண்டு பேர் கலந்து கொண்டிருந்தனர் அப்பொழுது நான் தொலைபேசியடித்து .அந்த செய்திக்கு தமிழர் தங்கள் தார்மீக எதிர்ப்பை தெரிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் உதாரணமாக லண்டன் பகுதிகளில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எம்மவரால் நடாத்தப்பட்டும் அல்லது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எம்மவர்கள் வேலை செய்கின்றனர் எனவே எமது எதிர்ப்பை காட்ட ஒரு நாள் காலை நெரம் ஒரு மணிநேர வேலை நிறுத்தததை செய்ய ஒரு அழைப்பை விடலாம் அதற்கு வேண்டிய ஊடகங்களினுடான பரப்புரையை செய்யும் வசதி எங்களிடம் உள்ளது வேண்டுமானால் அந்த பொறுப்பை நானே செய்கிறேன் ஆனால் அந்த ஒழுங்கினை இங்கிலாந்தில் உள்ள ஒரு பலமான தமிழர் அமைப்பு ஒழுங்கு படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டோர் தாங்கள் முயற்சிக்கிறோம் என்றவிட்டு போனவர்கள் அவ்வளவுதான் . அடுத்ததாய் தேசியத்திற்கு சொந்தம்கொண்்டாடும் சிலரிடம் கதைத்தபொழுது அவர்கள் உடனடியாகவே என்னிடம் திருப்பி சொன்ன விடயம் இது சாத்தியப்படாது என்பது அனால் அதற்கான காரணத்தை சொல்லவில்லை . சரி வேலை நிறுத்தம் சாத்தியப்படாவிட்டால் எதிர்ப்பை தெரிவிக்க கையில் கறுப்பு பட்டி அணிந்து வேலையை செய்தபடி எமது பக்க நியாயத்தை சிறு துண்டுப்பிரசுரமாக அடித்து அனைவருக்கும் கொடுக்கலாம் என்று கேட்டுப்பார்த்தேன். பார்க்கலாம் என்றவர்கள் அவ்வளவுதான். ஆனால் வெவ்வேறு தனியான தமிழ் அமைப்பக்கள் மற்றும் தனியாக தமிழ்ப்பிரதி நிதிகள் தங்கள் எதிர்ப்பை இதற்கு காட்டினார்கள்.அதற்காக அதை தாங்கள் தான் சொல்லி செய்வித்தோம் என்று இப்ப ஒடிவந்து சொல்லக் கூடாது. இதை நான் இங்கு எழுதுவதற்கு காரணம்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் வெண்புறா நிறுவனமும் இணைந்து தாயகத்தமிழர் பணிக்காக ஒரு கலை விழாவினை ஒழுங்கு செய்த பொழுது. அதற்கு போட்டியாக தங்களுடைய சக்தியையும் ஆழுமையைகாட்டி தேசயத்தலைமைக்கு பந்தம் பிடிப்பதற்காக தை மாதம் 16ம் திகதி வீரமரணம் அடைந்த தளபதி கிட்டுவின் நினைவு தினத்தை அவசர அவசரமாக ஒரு வாரத்திற்கு முதலே மண்டபம் எடுத்து பணம் செலவழித்து கிட்டுவிற்கு நினைவு தினம் கொண்டாட முடிந்த பந்தம் பிடிப்பவர்களால் ஏன் முக்கியமான தமிழினத்தின் மீது பழி போடப்பட்ட ஒரு செய்திக்கு எதிர்ப்பு நிகழ்வை ஒழுங்கு பண்ண முடியாமல் போனது.

இரண்டாவது. இது இதே யாழ்களத்தில் நடந்த சம்பவம். பிரான்சில் கைதாகி இருக்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணியாளர்கள் விடுதலையையும் சிறீலங்காவில் இலங்கையராசால் படுகொலை செய்யப்பட்ட அக்சன் பாம் நிறுவன ஊழியர்கள் பற்றிய வழக்கினை நீதியாக நடாத்த இலங்கையரசினை வலியுறுத்த கோரியும் பிரெஞ்சு அரசிற்கு அனுப்ப ஒரு கையெழுத்து சேகரிப்:பு ஒன்றினை நான் இணையவனின் உதவியுடன் செய்து யாழில் இணைத்திருந்தேன்.அதனை மோகன் நீக்கி விட்டு பிரான்சில் இருந்து யாரோ ஒருவர் அந்த விபரத்தில் தவறு இரப்பதால் அதை நீக்க சொல்லி விட்டார் என்று தனிமடல் போட்டிருந்தார். எனக்கு குளப்பம் ஒரு வேளை இதை செய்த இணையவனிற்கும் எனக்கும் பிரெஞ்சு மொழியில் புலமை போதாது இரக்கலாம் என்று நினைத்து பிரெஞ்சு புலமை பெற்ற பலரிடம் அந்த விபரத்தை காட்டி அதில் தவறு இல்லையென்று உறுதிசெய்து மீண்டும் இணைத்தேன்.

ஆனால் மீண்டும் தூக்கப்பட்டது. அனால் இரண்டாவது தடைவை மோகன் அதை தூக்கும் பொழுது அந்த நபருடன் கதைத்து பிரச்சனையை கேட்கவும் என்றுஅதை தூக்கச்சொன்னவரின் பெயர் தொ.பே இலக்கத்தை பெற்று எனக்கு அனுப்பியிருந்தார்.. நானும் அந்த நபரிற்கு போனடித்து அந்த கையெழுத்து பக்கத்தை நிறுத்த சொன்னகாரணத்தை தெளிவுபடுத்தம்படி கேட்டேன். அதற்கு அவர் ஒரு அமைப்பின் பெரை சொல்லி அந்த அமைப்பில் தான் இருப்பதாகவும் தானும் இதே போன்றதொரு கையெழுத்து சேகரிக்கும் பக்கத்தை செய்து தான் ஒரு தளம் செய்து போடஇருப்பதால்தான் அதனை எடுக்கசொன்னேன் என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னார்.அதே நேரம் என்னுடைய நிலையில் உங்களை கொஞ்சம் வைத்துப்பாருங்கள்.பின்னர் நான் அவரிற்கு நான் யார் என்று அடையாளம் காட்டியபின்னர் இது தொடர்ந்து யாழ்களத்தில் இருக்கும். வேண்டுமானால் உமது பொறுப்பாளர்களுடன் கதைத்து எனக்கு போடியுங்கள் என்றுவிட்டு வைத்து விட்டேன் சிறிது நெரத்தில் அவரே போனடித்து குறை நினைக்க வேண்டாம் முதலில் உங்களை சரியாக தெரியாமல்கதைத்து விட்டேன் பிரச்சனையில்லை யாழிலும் போடுங்கோ அதே நேரம் தனக்கும் அப்பிடியொண்டு செய்யஉதவிசெய்யுங்கோ எண்டு கேட்டுக்கொண்டார்.

அதாவது எங்கள் உறவுகளிற்கு எங்கள் தேசத்திற்கு தேசியத்திற்கு நாங்கள் ஒரு உதவி செய்வதென்றாலே எங்களிற்கு ஒரு பலமான அடையாளம் அல்லது பலமான பின்னணி தேவைப்படுகிறது. இது இப்படியிருக்க சாதாரணமான ஒருவர் உதவிசெய்வதென்றால் எப்படி முடியும். தொடரும்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு குறிப்பு இங்கு தமிழிச்சியின் கருத்தும் அதன் பின்னர் வரும் கருத்துக்கள் தமிழ்த்தேசியத்திற்கான மற்றும் உதவிகள் செய்யும் செயற்பாட்டாளர்கள் மீதான கருத்தாடலாக இந்தக் கருத்தாடல் மாறிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது எனவே இது செயற்பாட்டாளர்கள் மீதான விவாதம் அல்ல தங்கள் சுய நலத்திற்காக தேசியத்திற்கு பந்தம் பிடிப்பவர்கள் மீதான கருத்தாடல் என்பதை நினைவில் வைத்து கருத்தாடல்களை தொடர தாள்மையாக கேட்டுகொள்கிறேன் நன்றி

Edited by sathiri

தமிழ்தேசியம் ஈழத்தில் உள்ள அனைத்து மக்களினதும் பொது அடயாளம் என்பது முன்நிலைக்கு வர ஆக்கபூர்வமான வழிகளையும் அணுகுமுறைகளையும் அனுசரிப்பு போக்குகளையும் முன்னெடுப்பது பற்றி கதைப்பது நன்மை தரும்.

ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிரதானமானது. அது சாதியாக இருக்கலாம் மதமாக இருக்கலாம் அல்லது அந்தஸ்தாக இருக்கலாம். ஆனால் இவைகளை பிரதானமான உணர்வதும் தேசியத்தை இரண்டாம் பட்சமாக உணர்வதும் தனது பிரதான காரணிகள் ஊடாக தேசியத்தை அணுகுவது என்பதே எமது பலவீனமாக உள்ளது. காரணம் சிங்களம் எம்மை ஒடுக்கும் போது தமிழன் என்ற அடயாளத்தையே வலியுறுத்துகின்றான். அந்த அடயாளத்தை சிதைப்பதாகவே மேற்கண்டவாறு உணர்வது உள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள வானொலிகளில் கிழக்கு பிரதேச மக்கள் கருத்தாடுவதும் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதும் மிக மிக குறைவு. ஒதுங்கி போகவே செய்கின்றனர். இஸ்லாமிய தமிழர்கள் அதனிலும் குறைவாக உள்ளனர். இதற்கு காரணம் தாத்தாவீட்டு சொத்து என்ற நிலைக்கு அப்பால் எங்க ஊர்ச்சொத்து என்ற நிலையும் தான். மக்கள் பிரிபடுகின்றனர். வானொலியின் பேச்சு வழக்கு உவமைக்கு எடுக்கப்படும் விளம்பரங்கள் எல்லாம் தாயகத்தின் குறிப்பிட்ட பகுதியை அடயாளப்படுத்துகின்றது. சரி தவறு என்பதற்கு அப்பால் சாதாரண மக்கள் ஒதுங்குவதை இனம் காணமுடிகின்றது.

தாயகம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் பொது மண்டபத்தில் நடப்பதற்கும் சமயத்தலங்களில் நடப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

தாயகம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளில் சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடப்பதிலும் பிரச்சனை இருக்கின்றது.

தேசியம் என்பதை வலியுறுத்த வாழ்விடம் மொழி கலாச்சாரம் பண்பாடு என்ற விடயங்கள் பலமாக உள்ளது ஆனால் இனத்தின் தேசியம் என்பதற்குள் இன்ன மதம் என்பது வராது இன்ன சாதி என்பது வராது. இன்ன ஊர் என்பது வராது. ஆனால் தேசியத்தை மக்கள் மேற்கண்ட காரணிகள் ஊடாகவும் அந்த காரணிகளை இணைத்தும் அணுகும் போது தேசியவாதம் பின்தள்ளப்பட்டு அவரவருக்குரிய காரணிகள் முன்னுக்கு வருகின்றது. இவற்றில் இருந்து தெளிவு நமக்கு கிடைக்க வேண்டும்.

அவனவன் அவனவனது அடயாளங்களையும் பழக்கவழக்கம் பண்பாட்டை பேணுவது எந்த வகையிலும் பிரச்சனை இல்லை ஆனால் அதற்காக தேசியவாதத்தை இரண்டாம் நிலைக்கு கொண்டுவரக்கூடாது. சிங்களம் தான் தமிழ்தேசியவாதத்தை தமிழரை விட முதன் நிலையில் வைத்துள்ளது. சிங்களம் தமிழர் தமிழினம் என்றுதான் எம்மை நசுக்குகின்றது தவிர எமக்குள் இருக்கும் பிரச்சனைகளை பிளவுபடுத்தி அது பார்த்து நீ இந்து தமிழன் நீ இஸ்லாமிய தமிழன் நீ கிறீஸ்தவ தமிழன் நீ இன்ன சாதி தமிழன் என்று கொல்வதில்லை. சிங்களம் தமிழரை கொல்கின்றது. எம்மை தமிழர் என்றும் தமிழினம் என்றும் எமது முரண்பாடுகளை கடந்து அணுகுகின்றது. இந்த விடயத்தில் நாம் சிங்களவனை விட மோசமாக உள்ளோம் என்பதே உண்மை.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது எமது விடயத்தில் நாம் நூறாக பிரிபட்டு கிடக்கின்றோம். அதை உரிய முறையில் சிங்களம் பயன்படுத்துகின்றது. சிங்களத்தின் கோரப்பிடியில் தமிழினம் அழிந்து சிதைந்து கொண்டிருக்கும் போதும் அந்த செய்திகளை படித்துக்கொண்டும் இணையங்களில் கொல்லப்பட்ட மக்களின் படத்தை பார்த்துக்கொண்டும் பல கல்விமான்கள் இடது சாரியம்பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றனர் சாதியம் பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றனர் வர்க்கம் பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்னும் எத்தனையோ விடயங்கள் பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றனர் சமூக நன்மைக்காக எழுதுவது தப்பில்லை ஆனால் அவைகள் முதன் நிலையில் உள்ளது. சேர்த்து ஒரு கண்டனம் எழுதக்கூட முன்வராதவர்கள் எத்தைனயோ கல்விமான்கள். கொல்லப்பட்டு கிடக்கும் மக்களை சாதியாக வர்க்மாக பிரதேசமாக பிரிக்கவா முடியும்? பல புத்திஜீவிகளுக்கு அவர்களின் புத்திஜீவி அடயாளம் முதன் நிலை இரண்டாம் நிலையிலேதான் தேசியவாதம்.

எமக்குள் இருக்கும் முரண்பாடுகளால் பிளவுபட்டுக்கிடக்கின்றோம். சக மக்களை தமிழனாக உணர்ந்ததை விட சாதியாக வர்க்கமாக பிரதேசமாக அணுகி உணர்ந்து நீண்டகாலம் பழக்கப்பட்டு வந்தோம். அதன் விழைவுகளை அனுபவிக்கின்றோம். சிங்களத்தின் பலமான இன அழிப்பிற்கும் சர்வதேசத்தின் பாராமுகத்திற்கும் இந்த முரண்பாட்டு நிலை பிரதான காரணம்.

ஒருவன் தேசிய சார்பாக இருந்தான். பணம் சேர்த்தான். அவனது நண்பர் ஒருவர் மூலம் ஒரு வீடு வாங்க காசு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. வீடு வாங்கினான். இருநூறு போர் இனி உவங்களுக்கு காசு கொடுக்கப்படாது எக்கேடும் கெட்டுப்போகட்டும் என்று விலகினர். இருநுர்று பேரும் அளுக்கு இருபது பேருக்கு கதை சொன்னார்கள். எமது மக்களை கையாள சில நேரம் சிங்களம் சற்று யோசித்hலும் போதும். நல்ல வெற்றி கிடைக்கும்.

நாம் அதிக முரண்பாட்டை கொண்டவர்கள். பிற சமூகங்களை விட சிங்களவரை விட அதிக இடைவெளிகளை மக்களுக்கிடையில் கொண்டவர்கள். அவ்வாறு நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றோம். இந்த வாழ்க்கைமுறையில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. தவறுகள் உள்ளது. இவை எல்லாம் இப்போது எமது இன அழிவுக்கு பயன்படுத்தப்படுகின்றது. நாம் அறிந்தும் அறியாமலும் துணைபோகின்றோம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் இனம் அழிபடாமல் இருந்தால் தான் இனத்துக்குள் இருக்கும் முரண்பாடுகளையும் தீர்க்க முடியும். இனமாக உணர்ந்து இனத்தின் இருப்பை உறுதி செய்ய முதலில் தேசியத்தை உணர்வின் முதன்நிலைக்கு ஒவ்வொருவரும் கொண்டுவர வேண்டும்.

சாத்திரி, உங்களின் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு நடந்ததுபோல் நிறையப் பேருக்கு இது நடந்திருக்கிறது. இந்தக் கருத்தாடலின் ஆரம்பத்தில் கருத்தெழுதியவர்களின் கருத்துக்கள் தாயக அமைப்பைக் குறை கூறுவதாக அமைந்திருந்தது. அதனால்தான் அக்கருத்துக்களை எழுதியிருந்தேன். இந்தப் பிரச்சனை எல்லா இடமும் நடப்பதுதான். அதற்காக நாம் யாழ்களம் போன்றதொரு களத்தில் இவ்வாறு வெளிப்படையாக அவர்களைக் குறை கூறுவது சரியல்ல. இப்படிப்பட்டவர்களை அடையாளங் கண்டுபிடித்து, உரியவர்களுக்குத் தெரியப்படுத்துவதை விடுத்து, இதனை இக்களத்தில் விவாதிப்பதுதான் தவறு எனக் கூறுகிறேன். நீங்கள் செய்ததுபோல, அனைவரும் உரிய இடங்களிற்கு இவற்றைப் பற்றித் தெரியப்படுத்துங்கள் எனத்தான் கூறுகிறேன். மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும். அதுவரைக்கும் நாம் பொறுக்கத்தான் வேண்டும்.

சமாதான காலத்திற்கு முன்னர், சில நாடுகளில் இதைவிடப் பலமடங்கு மோசமாக அமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. சமாதான காலத்தின்போது, அதற்குக் காரணமானவர்களை வெளியேற்றி, பல மாற்றங்களைக் கொண்டு வந்தனர். ஆனால், அவை இன்னும் முழுமையடையவில்லை. அதற்கான கால அவகாசம் போதவில்லை. ஆனால், படிப்படியாக அவை சரிவரும்.

தேசியத்திற்குப் பங்களிப்பு செய்வதற்கு உங்களுக்குப் பலமான பிண்ணனியோ, அடையாளமோ தேவையில்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது, நீங்கள் சேர்ந்த உடனேயே உங்களுக்கு ஒரு பொறுப்பைத் தரவேண்டும் என்று. இப்படியான எதிர்பார்ப்புகளால்தான் பலரால் அமைப்பிற்காக வேலை செய்ய முடியாமல் உள்ளது. எதிர்பார்ப்பின்றி வேலை செய்பவர்கள்தான் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால்தான் அமைப்பில் தாக்குப் பிடிக்க முடியும். ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளுங்கள். எங்கள் அமைப்பு, மற்றைய அமைப்புகள் போலல்ல. அதில் ஒருவர் தாக்குப் பிடிப்பதென்பது கடினம். ஆனால் அவர்கள் உங்களில் நம்பிக்கை வைத்துவிட்டால் அதனை மாற்ற மாட்டார்கள். தாயகத்திற்காக செய்கிறோம் என்று நினைத்தால், உங்களால் எப்படியும் வேலை செய்ய முடியும். உணர்வுதான் முக்கியம். கல்வித் தகைமை, திறமைகள் எல்லாம் அங்கு இரண்டாம் பட்சம்தான்.

எனக்குத் தெரிந்து பல படித்தவர்கள் பல வருடங்களாகத் தொகுதி வேலைகள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கேற்ற வேலைகள் தரவில்லையென்பதற்காக, அவர்கள் வேலை செய்வதை நிறுத்தவோ அல்லது அமைப்பிடம் சண்டையோ பிடிக்கவில்லை. இன்றுவரை தங்களால் முடிந்தளவு வேலைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை விடத் திறமை குறைந்தவர்கள் தாங்கள் அமைப்பில் சேர்ந்த குறுகிய காலங்களிலேயே தங்களுக்கேற்ற வேலைகள் தரவில்லையென நின்றவர்களும் இருக்கிறார்கள். இவற்றிற்கான பலாபலன்கள் காலப்போக்கில், தாயகத்தில் தெரிய வரும்.

தங்கள் சுயநலத்திற்காக தேசியத்தைப் பயன்படுத்துபவர்களை நான் முதலில் கூறியதுபோல, உரிய இடத்திற்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களைப் பற்றி இக்களத்தில் கருத்தாடுவதன் மூலம், தாயக அமைப்பிற்குக் கெட்ட பெயரைத்தான் தேடித் தரும் என நான் நினைக்கிறேன். இத்துடன் எனது கருத்துக்களை முடித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

:D இங்கு அவுஷ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் ஒரு தமிழின ஆர்வலர்( இவர் இப்பகுதியின் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பொறுப்பாளர்) பல்கலைக்கழக விடுமுறை நாட்களில் நிர்வாகத்தின் அநுமதியுடன் புதிய தமிழ் திரைப்படங்களை கழக மண்டபத்தில் திரையிட்டு வந்தார். இதன்மூலம் சேர்க்கப்படும் நிதியானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது. இவ்வரின் செயற்பாடுகளினால் பொறாமைப்பட்ட இன்னொரு தமிழர், வன்னியுடன் தொடர்பு கொண்டு இவர் நிதிக் கையாடல் புரிவதாகவும், இவருக்குப் பதிலாக தன்னை அப்பகுதியின் பொறுப்பாளராக நியமிக்குமாறும் கோரினார். ஆனால் முன்னையவரின் செயற்பாடுகளினால் திருப்தியடைந்த தலைமை இவரின் கோரிக்கையை மறுத்து விட்டது. இதனால் கொதிப்படைந்த இவர் தனக்குத் தெரிந்த ஒரு சிங்கள நபரூடாக இலங்கை உயர்ச்தானிகராலயத்துடன் தொடர்பு கொண்டு விரிவுரையாளர் புலிகளுக்காக பணம் சேர்ப்பதாகக் கூறியிருக்கிறார்.

இலங்கை உயர்ச்தானிகராலயமும் அவுஷ்திரேலிய வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொண்டு இதுபற்றி முறையிடவே, விரிவுரையாளரும் விசாரிக்கப்பட்டார். விரிவுரையாளரின் துணைக்கு வந்த பல்கலைக்கழக நிர்வாகம், தமது அநுமதியுடனேயே இது நடைபெறுவதாகவும், அவ்விரிவுரையாளர் பல்கலைக்கழக விதிமுறைகளையோ, நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராகவோ செயற்படவில்லை என்று கூறி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இவர்கள் தேசியத்தை குத்தகைக்கு எடுக்கவில்லை, விற்றிருக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

'ஜெனீவாப் பேச்சுவார்த்தைகள் வெளிவராத இரகசியங்கள்" இத்தலைப்பைக் கண்டதும் ஏதோ பெரியதொரு புதிர் அவிழப்போகிறது என்ற எரிர்பார்ப்புடன் பத்திக்குள் நுளைந்து வெளிவந்த பின் எழுந்த எதிர்வினையிது.

உலகமயமாக்கல் , திறந்த பொருளாதாரம் என ஆரம்பமான பத்தியானது அமெரிக்க பிரித்தானியாவையும் சுற்றி வந்து ஜெனீவாப் பேச்சுக்களில் கலந்து கொண்ட தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலாக மாறியது மட்டுமல்லாது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு 'இலங்கை அழகிகளோடு படுக்கும் வாய்ப்பும் கிடைத்தது" என்ற பெருமை பேசும் ஒரு எழுத்திற்கு உரியவரின் சுயத்தை படம் பிடித்துக் கோடிட்டுள்ளது. கோட்பாடுகளைச் சொல்லி கேவலமான வக்கிரமான தூற்றலையே நிலவரம் தனது முதல் பதிப்பில் சுமந்து வந்திருப்பது வேதனை தருகிறது.

ஊடகவியலாளர்கள் என்பவர்கள் உண்மையை துணிவை நேர்மையைக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நேரடியான ஊடகச் செயற்பாட்டாளர்களாகவும் உண்மைகள் தறிபடும் தருணங்களில் அங்கு உண்மையின் மறுவடிவாகவும் இருப்பவர்கள். இந்தப் பதத்தினுள் தங்கள் உயிர்களையும் இரையாக்கிய எமது தாயகத்து ஊடகவியலாளர்களின் தியாகங்களும் இழப்புக்களையும் மறந்து போய் நன்றி மறந்த தன்மையினை கட்டுரையாளர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒவ்வொரு ஊடகவியலாளரும் அவர்கள் சார்ந்த குடும்பங்களும் இலங்கையென்ற தேசத்துக்குள் படுகின்ற அவலங்களும் இங்கிருந்து உணரவோ அனுபபவிக்கவோ முடியாதவை. பனியுறையும் தேசத்துக் குளிருக்குள் வசதிகள் யாவையும் சுற்றி அடுக்கி வைத்துக் கொண்டு தாயகம் , தேசியம் , சுயநிர்ணயம் என்று மேடைகளில் அறிக்கை வாசித்து உணர்ச்சிக் கவிதை படிக்கும் சுயநலம் மிக்கவர்களால் புரிய முடியாதவை.

தாயகத்து மக்களுக்கு ஒரு மணித்தியாலம் பாலம் கட்டி யாழ்மாவட்டத்திலிருந்து வரும் பத்திரிகையிலிருந்தும் அல்லது கொழும்புப் பத்திரிகைகளிலிருந்து , அல்லது இணையங்களில் பொறுக்கி செய்தி சொல்வதுடன் கடமையை முடித்துக் கொள்ளும் புலத்து ஊடகம் , ஊடகவியலாளர்களை விட அந்த மண்ணுக்குள் நிற்கின்ற அந்த மனிதர்களின் தேவையென்பது எமது தேசத்துக்கு நிறையவே தேவைப்படுகிறது. இந்த யதார்த்தத்தை மறந்து புலத்து உறவுகளை விழிப்படைய வைப்பதான பம்மாத்தை ஜரணிக்க முடியவில்லை. தமிழ் ஊடகவியலாளர்கள் ஜெனீவாவில் வந்து நின்று கொடிபிடிக்கவோ ஆர்ப்பாட்டம் செய்யவோ முடியாது. உள்ளதை உள்ளபடி சொல்லவும் செய்தி சேகரிக்கவும் தான் வந்தார்கள். அதனையே சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களும் செய்கிறார்கள் , செய்தார்கள். இல்லை அவர்களெல்லாம் அழகிகளுடன் சல்லாபித்துவிட்டுப் போனார்கள் , கள்ள பில் போட்டுப் போனார்கள் என்றெல்லாம் சேறடித்து செய்தியாளர்களின் சுயத்துக்குள் நுளைந்து நாகரீகம் தவறி விமர்சிப்பது கண்டிக்க வேண்டியது.

'செய்திகளை உடனுக்குடன் தருவதுதான் ஒரு செய்தியாளரின் கடமை" உலகச் செய்தி நிறுவனங்களின் ஒவ்வொரு பணியாளரினதும் கடமையும் அதுதான். ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் பொய் நான் சொல்வதே மெய்யென்று முரண்டுபிடிக்கின்றவர்களின் தன்மையானது உண்மையை மறைத்து தமிழ் ஊடகவியலாளர்களை இழித்த செயலே அன்றி வேறில்லை.

சரி அவர்கள் சொன்னது பொய்யென்று வைத்துக் கொள்வோம் நிலவரம் வெளிவரும் வரை காத்துக் கிடக்காமல் உண்மையை உடனடியாகக் கட்டுரையாளர் சொல்ல மறந்ததேன் ? தமிழ்த்தேசிய ஆன்மாவின் ஆணிவேர்களென அடையாளமிட்டிருக்கும் ஊடகங்களும் , ஊடகவியலாளர்களும் அந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் மடிப்புக்கலையாமல் இருந்தார்களல்லவா ? அவர்கள் ஏன் உண்மையை உரைக்காமல் போனார்கள் ?

ஊரிலிருந்து வந்தவர்களை விட ஐரோப்பாவிலிருந்து ஜெனீவாவில் போயிறங்கிய ஊடக ஜாம்பவர்களெல்லாம் என்ன ஒளி ஒலி வாங்கிகளில் யார் குரல் ஒலிக்க வேண்டுமென்பதில் அக்கறையாக இருந்தார்களா ? வானலைகளை அதிர்க்கின்ற காந்தங்கள் சிம்மங்களால் அரச தரப்பை நோக்கி ஒரு கேள்வி கேட்க முடிந்ததா ? என்ன உண்மையைச் சொல்ல முடிந்தது ? வெறும் பார்வையாளர்களாக சிலர் மட்டும் தமிழில் தமிழர்களுக்குச் செய்தி சொன்னார்கள். இவர்களுக்கும் தமிழில் செய்தி சொல்லாவிட்டால் அடுத்த வெளிநாட்டுப் பயணமும் இல்லை கூலியும் இல்லை.

பாதுகாப்பான தேசங்களில் இருந்து கொண்டு பம்மாத்துப் பண்ணிக் கொள்ளும் தேசியத்தின் குரல்களெனத் தம்மைக் கூறிக்கொள்ளும் எந்த ஊடகரால் இதுவரை ஒரு சுள்ளியைத் தானும் தூக்கிப் போட முடிந்தது ? (மேடைகளில் நின்று அறிக்கை வாசித்ததைத் தவிர). மக்களின் முன் வந்து நின்று ஒளி ஒலிவாங்கிகளை நீட்டி 'இந்த எழுச்சியில் கலந்து கொள்ளும் உங்கள் உணர்வு எப்படி ? சூடு எப்படி" எனக் கேட்பதுடம், மேடையில் ஏறி நின்று உலகத்துக்குப் பெரியதொரு செய்தியை சொல்லியதாக தம்பட்டமடித்து ஊடகக்கடமையை முடித்துக் கொள்ளும் போலிகளை விட ஏதோ ஒரு வகையில் தனது மக்களுக்கும் மண்ணுக்குமான பங்களிப்பை அங்கிருந்து செய்யும் ஊடகர்கள் மேல் என்பதற்கும் அப்பால் அவர்கள் எமக்குத் தேவையென்பதையும் இத்தருணத்தில் கூறவேண்டியுள்ளது.

கட்டுரையாளர் தாக்கிப் போட்டிருக்கும் ஊடகவியலார்கள் சிங்கள அரசாலும் , ஒட்டுண்ணிகளாலும் தினம் தினம் செத்துக் கொண்டுதான் செய்தி சேகரிக்கிறார்கள் , வெளியிடுகிறார்கள். எந்த நேரமும் உயிர் பறிக்கப்படலாம் என்றதொரு சூழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாளைய பொழுதில் இவர்களது வாழ்வு நிச்சயமற்றதான சூழலில் நின்றுதான் கடமை புரிகிறார்கள். அதுவும் கட்டுரையாளரின் இலக்கான வித்தியாசமான பத்திரிகையாளரின் உயிருக்கும் கூட அச்சுறுத்தல் மேலோங்கித் தான் இருக்கிறது. இந்த வித்தியாசமான பத்திரிகையாளரின் பத்திரிகையை இன்று யாழ் மண்ணின் தமிழர்களுக்கான செய்தியூடகமாகவும் விளங்குகிறது. நாளை இந்த மனிதரும் ஒட்டுண்ணிகளால் அல்லது அரசகூலிகளால் பலிவாங்கப்படலாம். அப்போது இதே கட்டுரையாளரால் ஆக்ரோசக் கவிபடிக்கப்பட்டு ஜெனிவாவில் வித்தியாசமான பத்திரிகையாளருடனான அனுபவங்கள் என புழுகுக் கதைகளும் அவிழ்த்து விடப்படும்.

நிமலராஜன் முதல் அண்மைய மதிமுகராசா வரையிலும் பார்க்காத கேட்காதவையா ! ஒவ்வொரு ஊடகரும் பாதிக்கப்படும் போது அந்தப்பாதிப்பானது அந்நபர்களையே தாக்குகிறது. ஆனால் அவர்களுக்கு மாதம் நூறு யூரோ அல்லது நூறு பவுண்ஸ் கொடுத்துவிட்டு அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் அவர்கள் குடும்பத்திற்கு பத்துச் சதத்தைக் கூட உய்யாத ஊடகங்களும் இறந்த நாட்டுப்பற்றாளர் நடேசனுக்காக வானொலியொன்றில் சேர்க்கப்பட்ட பணம் நடேசனின் குடும்பத்தின் கண்ணிலும் காட்டாத உண்மைகளும் அந்தக் குடும்பத்தின் இழப்பின் வலியென்பது வெறும் உணர்ச்சி மிக்க கவிதைகளாலும் , கண்ணீரஞ்சலியாலும் கழுவப்பட்டுப் காற்றலையோடு காற்றாகக் கரைந்து போனதும் சொல்லப்படாத நிசங்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் சுய சிந்தனைத் தெளிவும் தகவல்களையும் செய்திகளையும் பிரித்தறியவும் ஆய்வு செய்யவும் தெரிந்தவர்கள். ஆயுங்கள் பிரித்தறியுங்கள் என நாம் யாரும் பயிற்றுவிக்கத் தேவையில்லை. எம் மக்கள் மந்தைகள் இல்லை. தமிழனின் இருப்பின் குறியீடான எங்கள் தலைவனின் வழியை நேசிக்கும் வல்லவர்கள். வல்லமை தரும் பலம் நம்பி பலமாகும் இனம் தமிழினம்.( புலமும் நிலமும் இங்கு ஒன்றே )

ஜெனீவா வந்தவர்களால் செய்ய முடியாது போனவையெனக் கருதும் விடயங்களையும் இலங்ஐக அழகிகளுடன் சல்லாபித்துப்போனார்கள் ஊடகவியலாளர்கள் என்று நிலவரத்தில் தனது குழறகை தனிமனித சாடலாக எழுதிய சுவிஸ் நாட்டிலிருந்து ஊடகம் புரியும் அகதித்தமிழன் கிருஸ்ணா அம்பலவாணரும் செய்யலாம். யாரும் தடையில்லை. ஆனால் விமர்சனம் என்கின்ற போது எழுந்தமானமான கணிப்பீடுகளையும் தனிமனித குணங்களையும் தவிர்த்து விமர்சித்தலே நன்றாகும்.

கருத்தை கருத்தால் வெல்வோம். கண்டனங்கள் என்ற பெயரிலான கசப்புக்கள் வேண்டாம். அந்தந்த இடத்தில் நின்று அதை அதைச் செய்யும் போதுதான் அவற்றின் கனம் புரியும். ஆக கண்டனங்களே தீர்வாகவும் மாட்டாது.

- சாந்தி ரமேஷ் வவுனியன் - (இவ் எதிர்வினையானது வித்தியாதரன் அவர்களைக் குறிவைத்து கிருஸ்ணா அம்பலவாணர் அவர்கள் எழுதிய போது நிலவரம் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இக்கருத்தை நிலவரம் பத்திரிகையில் வெளியிடவிடாமல் தடுத்தது மட்டுமல்லாமல் நிலவரத்தில் எழுதவும் கூடாதென மேற்படி நபரால் எச்சரிக்கபட்டது)

கடந்தவருடம் டிசம்பர் மாதம் எழுதப்பட்டது.

தம்மை தேசத்தின் காவலர்களாக நினைத்து ஆட்டம் போடும் கூட்டத்தால் இதே யாழ்க்களமுட்பட பல தளங்களில் தமக்கு வேண்டப்படாதோரை விபச்சாரிகளாகவும், நடத்தை கெட்டவர்களாகவும், தேசவிரோதிகளாகவும் சித்தரித்து எழுதிய போதெல்லாம் உங்கள் பேனாமுனை கண்மூடி மௌனம் சாதித்து இரசித்ததா?? ஆனால் இப்போ அவர்கள் உள்வீட்டிலும் சேறடிக்கும் போதுதான் உங்களுக்கும் குமட்டுகின்றதா??

தம்மை தேசத்தின் காவலர்களாக நினைத்து ஆட்டம் போடும் கூட்டத்தால் இதே யாழ்க்களமுட்பட பல தளங்களில் தமக்கு வேண்டப்படாதோரை விபச்சாரிகளாகவும், நடத்தை கெட்டவர்களாகவும், தேசவிரோதிகளாகவும் சித்தரித்து எழுதிய போதெல்லாம் உங்கள் பேனாமுனை கண்மூடி மௌனம் சாதித்து இரசித்ததா?? ஆனால் இப்போ அவர்கள் உள்வீட்டிலும் சேறடிக்கும் போதுதான் உங்களுக்கும் குமட்டுகின்றதா??

வசம்பு அண்ணா

நீங்கள் கூறிய வேண்டாத்தகவர்கள் யாரென எனக்கு புரியவில்லை ஆனால் நான் தமிழ் தேசியத்தை விமர்சித்து,போராட்டத்தை கொச்சைபடுத்தி, போராளிகளின் தியாகத்தை கொச்சை படுத்துபவர்கள் என எடுத்துகொள்கின்றேன் அவர்களை விபச்சாரிகள் என்பதிலோ தேசவிரோதிகள் என்பதிலோ எந்த தவறும் இல்லை என்பதே என் வாதம் உதாரணத்துக்கு ஆனந்த சங்கரியை எப்படி அழைக்க முடியும் தேசியவாதி அல்லது சிறந்த மனிதர் அல்லது பெரியவர் என அழைக்க முடியுமா நிச்சயம் முடியாது தமிழர்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் கொச்சைப்படுத்தும் இப்படிபட்டவர்களை அழைக்க முடியுமா???

யதார்த்தம் என்னவென கொஞ்சம் புரியுங்கள்

உள்வீட்டில் சேறடிக்கும் சியநலவாதிகளை பற்றி கதைப்போம்

நாம் முரண்பட்டால் யாருக்கு நல்லம் என சில சுயநலவாதிகள் சிந்திப்பதில்லை அப்படிப்பட்ட சுயநலவாதிகளை பற்றி எழுதவும் விருப்பம் இல்லை அதனால் எமது குப்பைகளை நாமே வெளியே கொண்டுவருகின்றோம் என கோவம் மட்டுமல்ல அப்படி எழுதுபவர்களை துரோகி என அடையாளம் காட்டி அறிக்கை சமர்பிக்கும் சுயநலவாதிகளின் மேல் இருக்கும் கடுப்புமே காரணம்.நான் அனுபவித்திருகின்றேன் எப்படி தலைவரின் உரைக்கு விளக்க வுரை கொடுக்கலாம் என கேட்டதற்கு துரோகி ஆக்கப்பட்டேன் கருணா குழுவாக்கப்பட்டேன்,இதனை வேதனையுடன் சொல்லி கொள்கின்றேன்.அதிலிருந்து என் வேலை உண்டு நானுண்டு என இருக்க முடிவு செய்தேன்.

******

இந்த இரு பக்கத்தவரும் தங்களுக்கிடையே இருக்கும் தனிப்பட்ட ஈகோ பிரச்சினைகளால் மக்களை பிளவு படுத்தி எதிரி என்னத்தை விரும்புகின்றானோ அதையே செய்து கொண்டிருகின்றனர் பொது வாழ்கை என வந்தால் அதில் விளம்பரம் இருக்க கூடாது ஈகோ இருக்க கூடாது உங்கள் ஈகோவாலும் சுய விளம்பரம் தேடும் நினைப்புகளாலும் அந்த அந்த நாட்டு தமிழ் மக்களை அந்த நாட்டு பிற நாட்டு மக்களிடம் அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் புலிகளையும் வீணான தர்ம சங்கடத்துக்கு உருவாக்குகின்றனர்.இதனால் நன்மை யாருக்கு எமக்கா அல்லது இரு தரப்பும் சொல்லி கொள்ளும் தமிழ் தேசியத்துக்கா??

நாம் ஒன்றுபட்டாலே வெல்ல முடியும் பினாத்துதல் தான் பெரியவன் நீ பெரியவன் என அரைவேக்காட்டுத்தனமாக சண்டை பிடித்தல்,நல்ல திட்டங்கள்க்கு முட்டுகட்டை போடுதல்,பிரிவு பட்டு நிற்தல் என்பது எல்லாம் இன்றைய காலகட்டத்துக்கு தேவையானது அல்ல.சுயவிளம்பரமான செயற்பாடுகளும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் ஈகோவும் எம்மை பலமாக்க மாட்டாது இது இல்லாமல் மக்கள் ஒன்று பட்டாலே நாம் நினைத்ததை நாம் சாதிக்க முடியும் இதற்கு உதாரணமாக யூத மக்களை உதாரணமாக்கலாம் ஒற்றுமையாக இருந்தார்கள் பொது நோக்காக இஸ்ரேல் என்னும் தேசத்தை மனதில் வைத்தார்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தின் கணிசமான பகுதியை கைபற்றினார்கள் உலகை பணியவைத்தார்கள் தமது தேசத்தை உருவாக்கினார்கள் சுற்றிவர எதிரி நாடுகள் இருந்தும் ஒரு குட்டி தேசம் அத்தனை எதிரி நாடுகளையும் சமாளிக்கும் வல்லமையுடன் இருகின்றது.அதற்காக நான் இஸ்ரேன் செய்யும் எல்லாவற்றுக்கும் தலையாட்டவில்லை நான் இஸ்ரேலை உதாரணம் காட்டியது அவர்களின் ஒற்றுமையையே

ஆனால் நாம் ஈகோ பிரச்சினையால் பிளவு பட்டு நிற்கின்றோம் இதுதான் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன், உங்கள் கருத்துத்தான் எனது கருத்தும். துரோகிகளையும், காட்டிக்கொடுப்பவர்களையும் அந்தந்தப் பெயர்களால் அழைப்பது தவறில்லை.

பிறரின் தவறான விமர்சனங்களுக்காக நீங்கள் விலகிக் கொள்வது ஏற்கமுடியாதது. உங்களின் ஆக்கங்களை தவறாமல் படிப்பவன் நான். உங்கள் ஆக்கங்கள் தொடர்ந்து வரவேண்டும். களத்திலுள்ள தமிழ்தேசியத்தை நேசிக்கும் சிலரில் நீங்களும் ஒருவர்.

நீங்கள் தொடர்ந்து உங்கள் பணியைச் செய்யுங்கள்.

நன்றி ரகுநாதன் களத்தில் என்னை யாரும் குறை சொல்லவில்லை நிஜத்தில் சொன்னேன் சிலதை பற்றி எழுத முனைந்து கருணா குழு உறுப்பினன் என ஆக்கப்பட்டேன் .என்னை துரோகி என்றால் என்ன என்னை எந்த பட்டங்களை சூட்டினாலும் பிரபாகரனே என் தலைவன் தமிழ் தேசியமே எனக்கு முக்கியம் என்பதில் உறுதியாக உள்ளேன் நான் சொன்ன பிரச்சினைகள் களத்தில் பலருக்கு தெரிந்திருக்கும் நீங்களும் அவுஸில் இருப்பதால் அறிந்திருக்க கூடும்

மோகன் அண்ணா சில விடயங்களை தணிக்கை செய்திருகின்றார் அவர் தனிமடலில் கூறிய காரணங்களுடன் ஒத்து போகின்றேன் ஆனால் எமது சமூகத்தில் இருக்கும் திருகுதாளங்களை நிச்சயம் வெளியில் கொண்டுவரவேண்டும் இப்படியே விட்டு விடுவோமானால் புற்றுநோய் போல பரவிவிடும்.

வசம்பு அண்ணா

நீங்கள் கூறிய வேண்டாத்தகவர்கள் யாரென எனக்கு புரியவில்லை ஆனால் நான் தமிழ் தேசியத்தை விமர்சித்து,போராட்டத்தை கொச்சைபடுத்தி, போராளிகளின் தியாகத்தை கொச்சை படுத்துபவர்கள் என எடுத்துகொள்கின்றேன் அவர்களை விபச்சாரிகள் என்பதிலோ தேசவிரோதிகள் என்பதிலோ எந்த தவறும் இல்லை என்பதே என் வாதம் உதாரணத்துக்கு ஆனந்த சங்கரியை எப்படி அழைக்க முடியும் தேசியவாதி அல்லது சிறந்த மனிதர் அல்லது பெரியவர் என அழைக்க முடியுமா நிச்சயம் முடியாது தமிழர்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் கொச்சைப்படுத்தும் இப்படிபட்டவர்களை அழைக்க முடியுமா???

யதார்த்தம் என்னவென கொஞ்சம் புரியுங்கள்

ஈழவன்

நான் இங்கு முக்கியமாக் குறிப்பிட்டது தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள விமர்சிக்கப் பட்டதையே. ஆனாலும் நீங்கள் சொல்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. காரணம் ஒருவரின் கருத்திலோ அல்லது அவரது செய்கையிலோ எமக்கு உடன்பாடில்லையெனின் அவரது கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளலாம் அல்லது அவரைப்பற்றி அக்கறை எடுக்காமல் அவரைப் புறக்கணித்து விடலாம். ஆனால் கீழ்த்தரமாக விமர்சித்து மகிழச்சியடைய நினைத்தால் அது விமர்சிக்கப்படுபவரைவிட விமர்சித்தவரின் வக்கிரத்தைத்தான் வெளிப்படுத்தும். இதனால் எம்மைப்பற்றிய அடுத்தவர்களின் பார்வையில் யார் அசிங்கப்படுவது. அண்ணாந்து மேலே பார்த்து நாம் துப்பினால் அது நம்மீதுதான் விழும்.

சிங்களவர்களைப் பொறுத்தவரை ஈழவிடுதலைக்காக குரல் கொடுப்போர் போராடுவோர் எல்லோரும் தேசத்துரோகிகள்தான் அதற்காக அவர்கள் எம்மையோ போராளிகளையோ கேவலமாக சித்தரித்து எழுதவில்லை. எமக்கெதிரான பரப்புரைகளையே மேற்கொள்ளுகின்றார்கள்.

ஆனால் நாம் சிந்தித்தால் அசிங்கம் புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் உங்கள் தலைப்பையும் முதன்முதலாக நீங்கள் இட்ட கருத்தையும் தான் வாசித்தேன்.

மற்றவற்றை மேலோட்டமாக பார்த்தேன்.

நண்பர் வசம்பு சந்திலை சிந்து பாடியிருந்தார். சிலவற்றை ஏற்றுக்கொள்ளலாம். என் மனதிலும் ஆயிரம் போராட்டங்கள் வேதனைகள் சுய நலபுலிகளின் செயற்பாடுகள் வேதனைகள்................ ஆனால் ......

சிலவற்றை பொறுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் கேட்கலாம் ஏன் என்று ?

களமுனையில் தூங்காமல் உண்ணாமல் தங்கள் உயிரை துச்சமாக மதித்து எதிரிகளின் ஷெல் மழையில் காற்றை காப்பாக வைத்து போராடும் எங்கள் உறவுகளை ஒரு கணம் நினையுங்கள். அவர்கள் சோர்ந்துவிடக் கூடாது. உங்களை நான் அறிவேன். இங்குள்ள சுயநல புலிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல .................

விமர்சிப்போம். இன்றைக்கல்ல எம் நாடு எமக்கானதும் இவர்களை விரட்டியடிப்போம்..

அதுவரை வம்பர்களுக்கு அவலை கொடுக்காதீர்கள்.

நன்றியுடன் நடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன்

நான் இங்கு முக்கியமாக் குறிப்பிட்டது தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள விமர்சிக்கப் பட்டதையே. ஆனாலும் நீங்கள் சொல்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. காரணம் ஒருவரின் கருத்திலோ அல்லது அவரது செய்கையிலோ எமக்கு உடன்பாடில்லையெனின் அவரது கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளலாம் அல்லது அவரைப்பற்றி அக்கறை எடுக்காமல் அவரைப் புறக்கணித்து விடலாம். ஆனால் கீழ்த்தரமாக விமர்சித்து மகிழச்சியடைய நினைத்தால் அது விமர்சிக்கப்படுபவரைவிட விமர்சித்தவரின் வக்கிரத்தைத்தான் வெளிப்படுத்தும். இதனால் எம்மைப்பற்றிய அடுத்தவர்களின் பார்வையில் யார் அசிங்கப்படுவது. அண்ணாந்து மேலே பார்த்து நாம் துப்பினால் அது நம்மீதுதான் விழும்.

சிங்களவர்களைப் பொறுத்தவரை ஈழவிடுதலைக்காக குரல் கொடுப்போர் போராடுவோர் எல்லோரும் தேசத்துரோகிகள்தான் அதற்காக அவர்கள் எம்மையோ போராளிகளையோ கேவலமாக சித்தரித்து எழுதவில்லை. எமக்கெதிரான பரப்புரைகளையே மேற்கொள்ளுகின்றார்கள்.

ஆனால் நாம் சிந்தித்தால் அசிங்கம் புரியும்.

வசம்பு என்பவர் யார் எனத்தெரிந்ததால் சொல்கிறேன். இங்கு கருத்தாடப்படும் விடயம் வேறு வசம்பு சொல்ல நினைப்பது வேறு.. துரோகிகள் .. கோடாலிக்காம்புகள் .. மண்டையிலைபோட்டதுகள் .. கற்பளிப்புகளை செய்து புதைத்தவர்களை யாரும் மாற்றுக் கருத்தாளர்கள் என மதிப்பு அளிப்பதில்லை.

சிங்களவர்கள் எங்களை கேவலமாகச் சித்தரிப்பதில்லையா? இந்தாள் என்ன சொல்லுது? சிங்களவர்கள் நாடாத்துகிற ஊடகங்கள்.. இணையத்தளங்கள் பக்கம் தலைகாட்டுறது இல்லையா?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எடுத்த காரியம் யாவிலும் வெற்றி இதை படிச்சதும் கன பேருக்கு ஒரு வானொலியின்ரை பெயர் நினைவுக்கு வந்திருக்கும் உண்மைதான் அதை மறைக்க வேண்டிய தேவை இல்லை அதுதான் ஜ.பி.சி.இந்த வானொலியிலை நூல்நேரம் எண்டொரு நிகழ்ச்சி அனேகமானவர்கள் கேட்டிருப்பீங்கள் இல்லாட்டி கேள்ளிவிப்பட்டிருப்பீங்கள். இந்த நிகழ்ச்சியை நடத்திறவர் இங்கிலாந்திலை நூல்கள் அதாவது தைக்கிற நூல் இல்லை புத்தகங்கள் சேர்க்கிற செல்வராசா என்பவர். சரி நல்ல விசயம்தானே அதுக்கு என்ன எண்டுறீங்காளா?? நல்ல விசயம்தான் அனால் அவர் செய்யிற அடுத்த விசயம்தான் நல்லாயில்லை அதாவது தமிழ்தேசியத்தையும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்ற . அது மட்டுமல்ல சிலகாலங்களிற்கு முன்னால் என்னால் மற்றும் சபேசனால் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான மகாநாடு என்று பகிரங்கப்படுத்தப்பட்ட பிரான்ஸ் தலித் மகாநாடு பற்றியவிபரங்களை வெளிட்டும் தமிழ்தேசியம் ஈழவிடுதலைப்போராட்டம் என்பனவற்றிற்கும் எதிராக எழுhதிவரும் தேசம் என்கிற இணையத்தளத்தில் ஒரு ஆசிரியராகவும் திருவாளர் செல்வராசா இருக்கிறார். அப்படியானால் இவர் யார்?? நாயகன் படத்தில் வருகின்றது போல ஒரு கேள்வி நல்லவரா?? கெட்டவரா?? அல்லது இவர் பேன்றவர்களை வைத்து நிகழ்ச்சி நடாத்தும் ஜ.பி;.சி போன்ற ஊடகத்தை தேசிய போர்வை போர்த்த எஸ்.கே ராஜன் போன்ற நரிகளால் நடாத்தபடும்வரை எடுத்த காரியம் யாவிலும் வெற்றியா?? இதனை நிருவாகம் வெட்டினாலும் இந்தக்கருத்தை வெட்டுபவரும் போலி தேசியத்திற்கு துணை போகின்றவரே எனவே போலிகள் தோலுரிக்கப்படவேண்டும். தொடரும்..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாய் தாங்க முடியாத உணர்வகளை அடக்க முடியாத சில விடயங்கள் எங்களிற்றகாய் ஒரு இனத்திற்காய் இனத்தின்உணர்வுகளிற்காக உயிரை கொடுத்து பேராடி உயிர் நீர்த்து இன்று எமக்காய் எம் விடுதலைக்காய் எமது வாழ்விற்காய் எமக்காக எல்லாத்திற்குமாய் தம்முயிரை ஈர்ந்து போராடிய எம் உறவுகளை புலம்பெயர் தேசத்தில் இத்தனை வேகமான வாழ்க்கை முறையிலும் மானமுள்ள தமிழரெல்லாம் மனவுமந்து கூடும் தேசிய நினைவெழுச்சி நாளிலும் சில புகழிற்காய் அலையும் பிணங்களின் கதைகள். எரிகிறதய்யா எம்மனங்கள் எரிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் நண்பர் ஒருவர் இருக்கின்றார். இந்தப் பேச்செடுத்தாலே "இவங்களெல்லாம் முழு கள்ளன்கள்" என்பார். ஆனால் யாருக்காகவும் எவ்வேளையிலும் ஒரு சதமேனும் ஈயமாட்டார்.

பொதுவாகவே எம்மவர்கள் குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். ஆனால் அந்த குறைகளை நிவர்த்தி செய்ய நான் என்ன செய்தேன் என தம்மைத் தாமே கேட்டிருப்பார்களா? சரி அப்படி யாராவது அவர்களைப் பார்த்து "நீ என்ன செய்தாய்" என்று கேட்டால், சிறிது தயக்கம் கூட இல்லமல் "எங்கே செய்ய விட்டார்கள்" என்று பதில் வரும். அந்தப் பதில் நியாயமானதுதான். ஆனால் தன்னாலானதைச் செய்யமுயற்சித்தவன் மட்டும் தான் அதைக்கூற அருகதை உள்ளவன்.

இங்கு குறை கூறுபவர்கள் எல்லோரும் உண்மையிலேயே அருகதை உள்ளவர்களென நான் நம்புகிறேன்.

Edited by காட்டாறு

முற்றிலும் உண்மை..இந்த போலிகளிற் சிலர் தங்களுக்கான கடமைகளைத் தாங்களும் செய்யாமல், மனத்தூய்மையோடு செய்ய முன்வருவோர் மனங்களைக் காயப்படுத்தி-- தாயகத்திலிருந்து யாராவது வந்தால் அவர்களுடன் நின்று படம் பிடித்து பகட்டுக் காட்டுவதை தொழிலாகவே கொண்டுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.