Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழக்கோரிக்கை சட்ட விரோதமானதல்ல - பிரிட்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் முன்வைத்துள்ள தனிநாட்டுக் கொள்கையான ஈழக் கோரிக்கை சட்டவிரோதமானதல்ல. ஆனால் விடுதலைப்புலிகள் அதை அடைய கையாளும் சில வழிமுறைகள் சரியானதாகத் தென்படவில்லை என்று தெரிவித்துள்ள சிறீலங்காவுக்கான பிரிட்டன் தூதுவர் சிறீலங்கா அரசு மனித உரிமைகள் விவகாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த மறுப்பின் அனைத்துலகத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று மேலும் எச்சரித்துள்ளார்.

UK: "Eelam demand not illegitimate, but LTTE tactics unacceptable"

[TamilNet, Monday, 10 December 2007, 22:10 GMT]

The British High Commissioner to Sri Lanka, Dominick Chilcott, said Monday that whilst his country condemned the tactics of the Tamil Tigers, it did not consider the demand for an independent Tamil Eelam as illegitimate. He also warned the Sri Lankan government it risked international sanctions if Colombo did not improve its human rights record.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23967

புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்களின் ஈழ விடுதலைக்கு ஆதரவான குரலுக்கு தற்போது கொஞ்சம் மதிப்பளித்து வரும் பிரிட்டனின் அண்மைக்கால அணுகுமுறைகள் சிறீலங்கா அரசை சாடுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை விடுதலைப்புலிகளின் சில அணுகுமுறைகளையும் தாக்குதல் வழிமுறைகளையும் பிரிட்டன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இவை குறித்து தமிழர் தரப்பினரும் சிந்திக்க வேண்டியதும் சில மாற்றங்கள் குறித்து ஆலோசிப்பதும் அவசியமாகிறது..!

அண்மையில் நடந்த மாவீரர்தின நிகழ்வில் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..! இதற்கு சிறீலங்கா கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தூதுவர் ஆற்றிய உரையின் முழுவடிவம்

http://www.britishhighcommission.gov.uk/se...d=1196170259582

There is one other aspect of Dudley Senanayake’s life that I wish to mention, the agreement he signed with the moderate Tamil leadership in 1965. This agreement addressed three key issues for the minorities: language, devolution and land. It was an agreement that could have re-enfranchised the Tamil-speaking minorities. Dudley Senanayake’s failure to muster sufficient support for it in the South had tragic consequences for the country. Had it been implemented, it is quite possible that Sri Lanka today would have been a vibrant, prosperous, multi-ethnic country at peace with itself.

This episode showed Dudley Senanayake’s strength and weakness. He had the insight to understand what was needed to reach an accommodation with the minorities. But he did not have the political skills or muscle to convince his fellow Sinhalese.

-பிரித்தானிய தூதுவரின் உரையிலிருந்து

அடுத்த ஆண்டு ஐக்கிய அமெரிக்க இராச்சியத்துக்கு பணிக்காக போகவிருக்கும் பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் அவர்களின் பேச்சு மிகக்கனதியானது. தமிழர் தலைமையின்பால் உள்ளார்ந்த ஒரு மென்போக்கை மேற்குலகம் இன்னும் கொண்டிருப்பதை அவரது உரையின் வரிகளுக்கிடையில் உள்ள பேசப்படாத அர்த்தமாக கொள்ளலாம்.

உண்மையில் ஆயுதப்போராட்ட வழிமுறைமூலம் தமிழர் தரப்பு ஒரு திடமான செய்தியை சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் 2002இல் சொல்லியாயிற்று. அதனைத்தொடர்ந்து வந்த சமாதான பேச்சுகளில் இன்னும் சிறப்பாக நாம் காரியமாற்றி இருக்கமுடியும்.

எனவே ஒரு சமாதான தூதன் உலகுக்கு வந்த நாளான வரும் நத்தார் காலத்தில் ஒருதலைப்பட்சமான ஒரு யுத்த தவிர்ப்பு அறிவிப்பை தமிழர் தலைமை வெளியிட்டு தமது நல்லெண்ணத்தை உலகிற்கு ஓங்கி உரைக்கவேண்டும்.

கடந்த ஆண்டு இவ்வாறான விவாதங்கள் மாவிலாறு சரசரப்புக்குள் யாழ்களத்தில் நீண்ட பயனுள்ள விவாதங்களை நிகழ்த்தியது பலருக்கு நினைவிருக்கலாம். மீண்டும் சமாதான முன்னெடுப்புகள் குறித்த ஆக்க பூர்வமான கருத்துரையாடல் அவசியமாகிறது.

''Let me be clear. I am not saying that the political aspiration for Eelam is illegitimate, any more than I would argue that the Scottish National Party’s goal of an independent Scotland is illegitimate. Similarly, I see nothing illegitimate in some crackpot demanding that Yorkshire or some other English county should become an independent state. What is crucial, however, is what methods are used by the SNP or the LTTE to achieve their goals. And the LTTE’s methods are simply unacceptable.” எனும் டொமினிக் சில்கொட்டின் கருத்துரை எம்மால் ஆழமாக பார்க்கவேண்டிய அறிவுரை.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகம் தான் "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும்" ஆட்டுகிறது.அதை பற்றி எள்ளவும் சிந்திக்காமல் தமிழ் மக்கள் போராடுவதை 30 வருடங்களாக பார்த்துக்கொண்டிருத்து விட்டு இப்போ மட்டும் அறிக்கையும் அறிவுரையும் ஏனோ?. சந்தர்ப்பத்தை பார்த்து "சிக்சர்" அடிப்பதில் வெள்ளைகளுக்கு நிகர் அவர்கள் தான் என்பது எனது தனி அபிப்பிராயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகம் தான் "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும்" ஆட்டுகிறது.அதை பற்றி எள்ளவும் சிந்திக்காமல் தமிழ் மக்கள் போராடுவதை 30 வருடங்களாக பார்த்துக்கொண்டிருத்து விட்டு இப்போ மட்டும் அறிக்கையும் அறிவுரையும் ஏனோ?. சந்தர்ப்பத்தை பார்த்து "சிக்சர்" அடிப்பதில் வெள்ளைகளுக்கு நிகர் அவர்கள் தான் என்பது எனது தனி அபிப்பிராயம்.

சிறீலங்காவுக்கான பிரிட்டன் தூதுவரின் இப்பேச்சில் இந்திய சார்பு என்பது நிலையெடுத்திருக்கிறது இருப்பினும் பிரிட்டனின் நிலைப்பாடு இந்தியாவினதும் அமெரிக்காவினதும் ஐக்கிய இலங்கை என்ற நிலைக்கு அப்பாலும் சென்று தீர்வைப் பற்றிச் சிந்திக்கத் தயங்கவில்லை. அது தனிநாடு என்ற எல்லை வரை விரிவது முக்கியமான ஒரு விடயமே..!

சிறீலங்காவின் அரசியலமைப்பின் 13வது சரத்துத் திருத்தத்தை பகுதியாக பெயரளவில் அமுல்படுத்தி மட்டுப்படுத்திய பெயரளவிலான அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தை (சட்ட ரீதியாக ஏலவே பிரிக்கப்பட்டாயிற்று) மிதவாதத் தமிழர்கள் (இந்திய அரசின் மிதவாதம் என்பது புலியெதிப்பு என்பதே. புலியை எதிர்ப்பவர்கள் பலர் முழு நேரக் கொலைக் கும்பல்களை நடத்தும் தமிழின இனத் துரோகிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) என்று நாமம் சூட்டப்பட்ட அரசு ஆதரவுக் குழுக்களிடம் கையளித்தல் என்ற இந்தியாவின் திட்டத்தை பிரிட்டன் தூதுவரும் தனது பேச்சில் உள்வாங்க தயங்கவில்லை.

வரவிருக்கும் இந்திய தயவு தீர்வில்... வடக்குக் கிழக்கு பெயரளவில் இணைந்த மாகாணமாக இருக்க.. நிர்வாகம் பிரிக்கப்பட இருக்கிறது. வடக்கு நிர்வாகம் டக்கிளசிடம் போக கருணா நாட்டை விட்டு ஓடிவிட்டதால் கிழக்கின் முதன்மைப் பொறுப்பை பிள்ளையானிடம் ஒப்படைத்து இவர்களுக்கு தலைவராக ஆனந்த சங்கரியை நியமிப்பதும் முஸ்லீம்களையும் சிங்களவர்களையும் இவர்களுக்கு கைத்துணைக்கு வைத்து விட்டு தங்கள் இராணுவ ஆதிக்கத்தின் கீழ் பேரினவாத அதிகாரங்களை தமிழர் தேசத்தில் நிலைநிறுத்த முனைகிறது சிங்களப் பேரினவாத அரசு. இதற்கு பெயர் மிதவாதத் தமிழர்களுடன், அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய ஆட்சி அதிகாரத்தைப் பரவல் செய்து தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் ஆட்சியை ஒப்படைத்தலாகும்.

பிரிட்டனுக்கு என்ன உலகுக்கே தெரியும் விடுதலைப்புலிகளை நேரடியாகப் பகைத்துக் கொண்டு இந்தியாவும் தாங்களும் விரும்புவதை நிறைவேற்ற முடியாது என்று. எனவே விடுதலைப்புலிகளுக்கும் சில விடயங்களைச் சொல்லி உங்களை இக்காரணங்களால் தான் நாம் மிதவாதத் தமிழர்களாகக் கருதவில்லை எனவே நீங்கள் மிதவாதிகளாக மாறினால் நாம் அப்புறம் உங்களின் ஈழம் பற்றியும் அக்கறை செய்யலாம் என்பது போல ஒரு அறிக்கையை விடுவது. மிதவாத நிலைக்கு விடுதலைப்புலிகள் மாறின் ஈழத்தை வலியுறுத்தும் நிலையை அவர்கள் இழப்பார்கள் என்பது இந்தியாவின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

எது எப்படி இருப்பினும் இந்த உரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய விடயம் அது இந்தியாவால் நிராகரிக்கப்பட்டு வரும் விடயம். அதுதான் தமிழீழக் கொள்கையும் தமிழீழத்துக்கான சாத்தியப்பாடும். இது பிரிட்டனும் இந்தியாவும் ஒரே விடயத்தில் இரண்டு வேறுபட்ட பரிமானங்களூடு நகரக் கூடிய நிலைகளை கொண்டுள்ளன என்பதை தெளிவாக எடுத்துச் சொல்கிறது. பிரிட்டனின் இந்த அறிவிப்பை.. எமக்கு வலுவாக்குவதன் மூலம் எமது ஈழக் கோரிக்கையை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்த நாம் வழிவகை செய்யலாம். சர்வதேசம் எதிர்பார்க்கும் சில மாற்றங்களை (தமிழ் தரப்பின் பாதுகாப்பு மற்றும் பேரம் பேசும் பலத்தை பாதிக்காத வகையில்) முன்னெடுத்து பிரிட்டனின் கூற்றுக்கள் தொடர்பில் ஒரு பரீட்சை வைத்துப் பார்க்கலாம். அதனூடு பிரிட்டனின் அணுகுமுறையை தெளிவாக இனங்காட்டவும் இனங்காணவும் செய்ய முடியும்.

இதனால் தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் தீர்வு தனிநாடு என்பதை உலகம் ஏற்கக் கூடிய வகையில் நாம் அவர்களின் முன் நியாயங்களை சொல்ல வலுவான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இது விடயமாக உலகின் கரிசணையை ஈழக் கோரிக்கைக்கு சார்பாக காட்டுகின்ற நிலை தோன்றின் இந்திய சார்பு, அரச சார்பு தமிழ் குழுக்களை மிதவாத குழுக்கள் என்று இனங்காட்டியபடி இந்தியா செய்யும் நகர்வுகளை முறியடிக்கலாம்.

அண்மையில் இலங்கையின் கிழக்கில் பிள்ளையான் குழு நடத்திய மக்களை வற்புறுத்தி செய்த ஆர்ப்பாட்டம் என்பது கூட பிள்ளையானை மிதவாதியாகக் காட்ட இந்திய உளவுத்துறையும் சிறீலங்கா அரசும் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கையே அன்றி வேறல்ல..! இது மீண்டும் 1987 இந்திய ஆக்கிரமிப்பின் பின்னான சூழலை ஞாபகப்படுத்துவது மட்டுமன்றி சிங்கள இனவாதத்தின் பெரும் சூழ்ச்சிக்குள் மீண்டும் தமிழரின் தாயகத்தை சிக்க வைக்கப் போகிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

பிரிட்டன் தூதுவரின் பேச்சு.. தமிழர் தரப்புக்கு ஒரு சிக்னலாக வந்துள்ளதே தவிர.. அது எதனையும் உத்தரவாதமளித்துச் சொல்லவில்லை. ஆனால் சிறீலங்கா அரசின் இந்திய சார்பு அணுகுமுறைகளை பிரிட்டன் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாம் இப்பேச்சில் இருந்து இனங்காண முடிவதுடன் இந்தியா நிராகரிக்கும் விடுதலைப்புலிகள் முன்வைக்கும் தனித் தமிழீழத்தை பிரிட்டன் ஏற்கிறது என்பது பிரிட்டனும் இந்தியாவும் இரண்டு முனைகளூடு நகரக் கூடிய நிலைப்பாட்டை எமக்கு இனங்காட்டி நிற்கிறது.

விடுதலைப்புலிகளிடம் அதிகம் ஜனநாயகப் பண்புகளை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறதே தவிர அவர்களை ஆயுதக்களைக் கைவிடச் சொல்லவில்லை. விடுதலைப்புலிகளின் சில வன்முறை வடிவங்கள் உள்ளிட்ட சில ஜனநாயக விரோதப் பண்புகள் (தற்கொலைத் தாக்குதல்கள்.. பொதுமக்கள் மீதான இலக்கு வைத்த தாக்குதல்கள்.. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மீதான அக்கறை.. பல கட்சி அரசியலுக்கான உத்தரவாதம் (துரோகக் கும்பல்களின் செயற்பாடுகளை அரசியலாகக் கருத முடியாது என்பதை உலகுக்கு சரிவரச் சொல்ல வேண்டும்)மற்றும் பிரிட்டனுக்கு வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் அமையும் சிறுவர் படையணிக்கு ஆட்சேர்ப்பு.. கட்டாய நிதி சேகரிப்பு)தொடர்பில் பிரிட்டன் மட்டுமன்றி சர்வதேச சமூகம் கவலைகளை அடிக்கடி வெளியிட்டு வருவது வெளிப்படையானது. இவை விடுதலைப்புலிகளுக்கும் தெரியும். இது தொடர்பில் விடுதலைப்புலிகள் சர்வதேசத்துக்கு விளக்கமளிப்பதுடன் அவர்கள் நம்பும் படி மாற்றங்களை அல்லது உறுதிமொழிகளை வழங்கும் போது.. சர்வதேசத்தின் இந்த அறிவிப்புக்களின் பின்னணியில் அமையக் கூடிய அணுகுறை மாற்றங்கள் உண்மையானவையா அல்லது வெறும் அறிக்கைக்குரியவையா என்பதை இனங்காண முடியும்.

எந்த வகையிலும் சிறீலங்காவையோ இந்தியாவையோ சர்வதேசத்தையோ 100% நம்பி காரியங்களில் இறங்கக் கூடாது. விடுதலைப்புலிகளின் பலம் என்பது குன்றாத நிலை இருக்கும் வரையே அவர்களின் மீதான அக்கறை இத்தரப்புகளிடம் இருக்கும். விடுதலைப்புலிகளிடம் மாற்றங்களை எதிர்பார்க்கும் சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்தக் கூடிய நகர்வுகளையும் ஒருங்கே கொண்டு செல்வதானது சர்வதேச சமூகத்தை இலகுவில் நம்ப முடியாது என்பதை தெளிவாகக் காட்டி நிற்கிறது. இந்தியாவுடனான கடந்த காலப் பாடங்கள் இதில் புலிகளுக்கு இராஜதந்திரக் காய்நகர்த்தலைச் செய்ய உதவும்.

தலைவரின் மாவீரர்தினப் பேச்சுக்கு முதன்மை அளிக்கப்பட்டிருப்பது பிரிட்டனின் தூதுவரின் பேச்சில் அடங்கி இருப்பினும் தூதரின் பேச்சுக் குறித்த நம்பிக்கை என்பது தமிழர் தரப்பை திருப்திப்படுத்தும் படி முழுமை பெறவில்லை..!

மொத்தத்தில் சர்வதேச சமூகம் தமிழர்களின் தனிநாட்டு நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது. ஐக்கிய இலங்கை என்ற நிலைக்கு வெளியில் அவர்கள் தங்கள் பார்வையை முதன்முறையாக நகர்த்தி வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருப்பதை வரவேற்க வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை இதர (பிராந்திய நாடுகளின், சிங்களப் பேரினவாதத்தின்) அரசியல் இராணுவ நகர்வுகளுக்கு ஏற்பவே விடுதலைப்புலிகளாலும் வழங்க முடியும் என்பதை சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் சாரும்.

உலகில் எமக்கென்றான நேரம் எனித் தோன்றலாம். அதற்கான வாய்ப்பும் சூழலும் எழுகின்ற போது அதைப் பயன்படுத்த பிந்நிற்கக் கூடாது. தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளின் நகர்வுகளுக்கு முழுமையான ஆதரவையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டியது இவ்வேளையில் புலிகளைப் பலவீனப்படுத்த நினைக்கும் நகர்வுகளை முறியடித்து உலக அங்கீகாரமுள்ள சுதந்திர தமிழீழத்தை தமிழர்கள் பெற வழி செய்யும் என்றால் அது மிகையல்ல..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 11-12-2007 05:46 மணி தமிழீழம் [மயூரன்]

ஆயுதப் போராட்டதை புலிகள் முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - பிரித்தானியா

ஆயுதப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என, பிரித்தானியா கூறியுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற, டட்லி சேனநாயக்கா ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்க்கொற், சிறீலங்கா அரசாங்கத்தின் அரசியல் தீர்வு முயற்சிகள், மிதவாத தமிழ் சிந்தனையாளர்களை நோக்கியவையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏற்கனவே பேர்ச்சுவார்த்தைகளின் மீது தனது நம்பிக்கையீனத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சூழலில், தனியரசை தவிர வேறு எந்த தீர்வை அரசாங்கம் முன்வைத்தாலும், அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளன. ஐக்கிய சிறீலங்காவிற்குள், சனநாயக விழுமியங்களை உள்ளடக்கிய தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.

தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக, தம்மை அவர்கள் முன்னிறுத்த முற்படுவது, சனநாயக விரோதமான நிலைப்பாடாகும். எவ்வாறாயினும், வன்முறைகளற்ற, சனநாயக முறைகளை அவர்கள் தழுவும் வரை, எதிர்கால சமாதான முயற்சிகளில் இருந்து அவர்களை தம்மைத் தாமே ஒதுக்கிக்கொள்ளப் போகின்றார்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது, மேலதிக அழுத்தத்தை அனைத்துலக சமூகம் பிரயோகிக்கத் தவறியிருப்பதாக, இவ்வருட மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டில் சில நியாயங்கள் உள்ளன. ஆனால் சனநாயக வழியைத் தழுவி, அமைதி வழியில் அரசியல் இலக்குகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அடைய வேண்டும் என்பதே, அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். தமிழீழத்தை நோக்கிய அரசியல் அபிலாசை தவறானது என நான் கூறமாட்டேன். ஆனால் அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் கையாளும் முறைகளை நாம் ஏற்க முடியாது.

இந்த வகையில், மிதவாதத் தமிழர்களை நோக்கியே, அரசியல் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இங்கு யுத்தம் தீவிரமடைவது, பிரித்தானியாவில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அகதித் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. எமது நாட்டில் உள்ள தமிழ் வணிகர்களிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக நிதியைப் பெறுகின்றார்கள்.

இலண்டனின் வீதிகளில் தமிழ் குழுக்கள் ஒன்றோடொன்று மோதுகின்றன. எவ்வாறாயினும், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கும், அவர்களின் நிதி சேகரிப்புக்களை தடுப்பதற்கும், நாம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்க்கொற் கூறியுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி நெடுக்கின் நீண்டவிடைக்கு.இருந்த போதும் தமிழ் மக்களை ஆயுதம் தூக்க வைத்ததில் மேற்குலகின் பங்கு ஆணித்தரமாக உண்டு.ஆதாரம் தேட தேவையில்லை.ஆக 30 வருடங்கள் கழித்து ஏதோ ஒன்றை கண்டு பிடித்துவிட்டது போல் "விடுதலை புலிகள் கையாளும் விதத்தில் தான்" ஏதோ பிழை என மாய்மாலம் கொட்டுவது எதைதான் சொல்லி நிற்கிறது?

ஏதோ விடுதலை புலிகளுக்கு ஆயுதம் மேல் அன்பு கூடி விட்டதாக கூட தலைப்பு மாறி விடுமோ என அச்சமாக இருக்கிறது.கடைசி ஆயுதமாக தமிழ் மக்கள் ஆயுதத்தை தமது கதாயுதமாக தமிழ் மக்கள் தரித்துள்ளார்கள் என்பது தான் யதார்த்தம்.

இவர்களை போல் பலர் அறிக்கை விடலாம்.ஆக்கபூர்வமாக என்ன நடக்கிறது என்றால் பூச்சியம் தான்.

நெடுக்ஸ், உங்களின் நீண்ட விளக்கத்துக்கு நன்றிகள் கோடி.

ஏற்றுகொள்ள முடியாவிட்டால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதானே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் பிரித்தானியா என்பதை ஏன் ஏற்றுகொள்வதில்லை இந்த நாய்கள் நாட்டினை முழு சிங்களவனுக்கு கையளித்து இனப்பிரச்சினைக்கு வித்திட்டது இந்த பரதேசிகள்தானே ஊர் ஊரா நாடு நாடாக கொள்ளையடித்த நாய்கள் இன்று பயங்கரவாதம் பேசுதுகள் கொடுமை

Let me be clear. I am not saying that the political aspiration for Eelam is illegitimate, any more than I would argue that the Scottish National Party’s goal of an independent Scotland is illegitimate. Similarly, I see nothing illegitimate in some crackpot demanding that Yorkshire or some other English county should become an independent state.

Don't be fools Guys.. He is making a Joke of everything thats happening in the Tamil Context in Sri Lanka.

Just take alook at his last line in his statement. He is making a joke of the "Demand for Eelam".

There are several points to note in his speech.

I say moderate Tamil opinion because I don’t believe the aim of the government’s devolution offer should be to put something on the table that will engage the attention of the LTTE.

This means .. Dont bother about LTTE. No need to talk to them now or in the future about any solutions.

Who are the moderate tamils.. Where have they been all these time ? Who represents the TAMIL'S now. Who fought and died for the tamils untill now ?? Who brought this Tamil Issue into the International Arena ?

Without Talking to the LTTE.. Can there be any viable Solution to the Problem ??

- Do we need to " Announce a Ceasefire during Christmas ??" Who is engaged in Offencive operations until this moment ? Why tamils are dying everyday ? Why LTTE soldiers are dying everyday ? Because we are engaged in offencive operations ????

PLEASE .. WAKE UP TO THE REALITY !!

Edited by rajasinl

ஆயுத போர் தொடங்கி 30 வருசமா போய்ச்சு இந்த சேமனை இப்ப சொல்லுது ஆயுத போராட்டத்தை ஏற்கேலாதெண்டு.

இவன் யார் எங்களுக்கு புத்திமதி சொல்ல பறித்த சுதந்திரத்தை வெள்ளை நாய்கள் தான் திருப்பி தர வேண்டும் .சிங்களவனா தமிழனா என்று ஒரு கை பார்க்க களம் இறங்கி விட்டோம். தமிழன் நிம்மதி இல்லாமல் இருக்கும் வரை சிங்கள நாய்களும் நிம்மதியாக இருக்க விடக்கூடாது.

"தேசியத் தலைவரின் மாவீரர் தின உரையில் நியாயம் உள்ளது - பிரித்தானித் தூதுவர் தெரிவிப்பு"

தமிழீழம் நோக்கிய அபிலாசை தவறானது அல்ல - பிரித்தானியத் தூதுவர் தெரிவிப்பு"

இப்படியெல்லாம் தலைப்பு போடாமல் சரியான தலைப்பைப் போட்ட "பதிவு" இணையத்தை பாராட்ட வேண்டும்

இதில நீங்க நெடுக்ஸ் எழுதி உள்ளது போல அங்க ஒண்டும் சொல்லேல்ல. விடுதலை போராட்டத்தை எவ்வாறு மட்டுப்படுத்தலாம் என்றும், மிதவாத தமிழ் குழுக்களுக்கு ஒரு தீர்வு கொடுத்தால் புலிகளை தனிமைப் படுத்தி

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும், புலிகளையும் புலம் பெயர் பிரிட்டிஸ் தமிழர்களையும் கொச்சை படுத்தி லண்டனில் தனி நபர் நடக்கும் குற்றங்களை புலிகளோடு இணத்து கூடாத மாதிரி சொல்லியும் தான் பேசி உள்ளார்.

ஏன் புலிகளுடன் பேசி தீர்வுக்கு வாருங்கள் என்று ஒரு வார்த்தை சிரிலங்கனுக்கு சொல்ல இல்லை?

என்ன மிதவாதிகளா ஆயுதம் வைத்துள்ளார்கள்?

அயர்லாந்து தீர்வில் மிதவாதிகளிடமா தீர்வு வழங்கப்பட்டது?

அவர் பேசியது எல்லாம் தெளிவாகதான். தழிழ் ஊடகங்களும் மொழி பெயர்ப்பும் குழப்பி அடிக்கிறார்கள்

Edited by நேசன்

தமிழீழம் நோக்கிய அபிலாசை தவறானது அல்ல - பிரித்தானியத் தூதுவர் தெரிவிப்பு"

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு இந்த வரிகள் ஒரு தகவலை சொல்லி நிற்கவில்லையா? இந்தியாவை விட உலகநாடுகள் ஓரளவு யதார்தத்தை ஏற்றுகொள்கின்றன என, யார் என்ன சொன்னாலும் தலைவர் நினைத்ததுதான் நடக்கும் என்று உலகுக்கே தெரியுமல்லவா?

தமிழ் ஊடகங்களையும் அவையின் மொழிபெயர்ப்பையும் குற்றம் சாட்டிறவை தாங்கள் ஒரு ஊடகத்தை நடத்திக் காட்டலாமே?

இந்தியா தந்த பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்ற சொல்லுகிரார் பிரிட்டிஸ் தூதுவர், குடிச்ச வரதராஜபெருமாள் பேதியாகி அசாமில் படுத்து இருக்கிறார், டக்கிளசும், பிள்ளையானும், ஆனந்த சங்கரியும் எங்கபோய் படுப்பினம், ஆனந்த சங்கரிக்கு உந்த பழைய கள்ளு ஒத்து வருமா? உடம்பு தாங்குமா? ஆசை ஆரை விட்டது அவையளும் குடிச்சு பாப்பம் என்றுதான் நிற்கினம்.பேதி புடுங்கும்போதுதான் விபரீதம் புரியும். :wub::wub::lol:

தமிழ் ஊடகங்களையும் அவையின் மொழிபெயர்ப்பையும் குற்றம் சாட்டிறவை தாங்கள் ஒரு ஊடகத்தை நடத்திக் காட்டலாமே?

ஊடகம் நடத்திறது பிரச்சனை இல்லை நீரே பாரும் எத்தனை தலையங்கம் எத்தனை வியாக்கானம் அவர் ஒருத்தர் பேசினதுக்கு. பொய் மாயைக்குள் இழுத்து செல்கிறார்கள். அவர் பேசியது 99 வீதம் எங்களை கண்டித்து அவமானப்படுத்தி 1 வீதம் சும்மா ஒரு மெழுகல் அவ்வளவுதான்.

அப்ப மொழிபெயர்ப்புக்கான தலையங்கம் 99 வீத பேச்சை வைத்து வந்திருக்க வேண்டும்.

"தேசியத் தலைவரின் மாவீரர் தின உரையில் நியாயம் உள்ளது - பிரித்தானித் தூதுவர் தெரிவிப்பு"

தமிழீழம் நோக்கிய அபிலாசை தவறானது அல்ல - பிரித்தானியத் தூதுவர் தெரிவிப்பு"

இந்த இரண்டு உண்மையான விடயங்களையும் பேசி இருக்கிறார்தானே, இதனால் உண்மையை உணர்ந்து இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். உணர்ந்து என்ன? விட்டு என்ன? நடப்பதுதானே நடக்கும். அதை தெளிவாக தலைவர் சொல்லிவிட்டாரே.

அனைத்துலக சமூகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை அல்ல என்று சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் ஒப்புக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசின் போலியான, பொய்யான பரப்புரைகளின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலக நாடுகள் எமது பிரச்;சனையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும், எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகின்றது| என்று தலைவர் சொல்வது மூலம், மிக நாசூக்கான செய்தியொன்றையும் சேர்த்தே தெரிவிக்கின்றார். அது என்னவென்றால் சிறிலங்காவின் பொய்ப் பரப்புரையில் மயங்கி விழுவதற்கு நீங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! அது எங்களுக்குத் தெரியும். நீங்கள் மயங்குவது போல் நடிக்கிறீர்கள்! அதுவும் எங்களுக்குத் தெரியும். இவையெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பதும் உங்களுக்குத் தெரியும்| என்பதைத்தான் இராஜ தந்திர மொழியில் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த மொழியின் அர்த்தம் சர்வதேசத்திற்கு நன்கு விளங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.