Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007, 11:41 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறிலங்காப் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது என்று தென்னிலங்கை வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.

"லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது:

அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மிகப்பெரும் கேள்விகளை படை அதிகாரிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் மிகவும் நவீன ஆயுதங்களை இந்த தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் சில ஆயுதங்களை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவதில்லை.

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆர்பிஜி உந்துகணை செலுத்திகளில் அமெரிக்கா தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் (EOtech HOLOsight holographic Target Acquisition Systems) சாதனங்கள் பெருத்தப்பட்டிருந்தன.

இந்த சாதனங்கள் தாக்குதல் இலக்குகளை விரைவாக கண்டறியக் கூடியதுடன் எந்த வெளிச்சத்திலும் இலக்குகளை கண்டறியக்கூடியது. மேலும் இந்த சாதனமானது எந்த கோணத்திலும் இலக்கின் மையத்தை குறிவைக்கக்கூடியதுடன், கடும் சமரின் போதும் மாற்றமடையாதது.

அவர்கள் பயன்படுத்திய சில ரைப்-69 (Type 69-1) ரக உந்துகணை செலுத்திகள் சீனத தயாரிப்பான இரவு பார்வை சாதனங்களையும் கொண்டதாக அமைந்திருந்தன.

இந்த சாதனங்கள் புறஊதா கதிர்களின் தொழிற்பாடுடையவை. மற்றுமொரு விடுதலைப்புலி உறுப்பினர் சிங்கப்பூர் தயாரிப்பான சிஜஎஸ்-40 ரக எறிகுண்டு செலுத்தியை பயன்படுத்தியிருந்தார்.

பெரும்பாலான ஆயுதங்களில் அமெரிக்கத் தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சிங்கப்பூர் தயாரிப்பான சிஜஎஸ்-40 ரக எறிகுண்டு செலுத்தி சீனத் தயாரிப்பாகும்.

இவை தவிர ரைப்-69-1 சீனத் தயாரிப்பு ஆர்பிஜி-7, ஆர்பிஜி ரைப்-61, ரெக்கரேவ் ஒலிஅமுக்கி (Type 85 silenced with Tokarev) பொருத்தப்பட்ட ரைப்-85 தாக்குதல் துப்பாக்கி, ரைப்-82 உப இயந்திர துப்பாக்கி, கியூபி இசற்-97 ரக உப இயந்திர துப்பாக்கி போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த ஆயுதங்களில் பெரும்பாலனவை சீனாவின் நொறிங்கோ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனமே பர்மிய அரசிற்கான பிரதான ஆயுத விநியோகிப்பாளருமாகும்.

விடுதலைப் புலிகளின் இந்த நவீன ஆயுதப் பாவனை படை அதிகாரிகளின் மத்தியில் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கத் தயாரிப்பான இலக்குகளை துல்லியமாக கண்டறியும் சாதனங்கள் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கப் படை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அனுராதபுரம் வான்படைத் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த சாதனங்களை அமெரிக்க அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

இதனிடையே அனுராதபுரம் வான்படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த எல்-70 ரக 40 மி.மீ வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தாக்குதல்களை நடத்தியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நவீனரக இந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியை விடுதலைப் புலிகள் எவ்வாறு இயக்க முடிந்தது என்பது தொடர்பான கேள்விகள் படைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளன.

விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியை சேர்ந்த கப்டன் ஈழப்பிரியாவே இந்த பீரங்கியை கைப்பற்றி தாக்குதல்களை நடத்தியிருந்தார்.

இந்தப் பீரங்கியை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதை தளத்தில் இருந்த படையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் அதனை இயக்குவதற்கு கடுமையான பயிற்சிகள் தேவை. எனவே எல்-70 வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்த விடுதலைப் புலிகள் எவ்வாறு கற்றுக்கொண்டனர் என்பது தொடர்பான பலமான கேள்விகள் படை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007, 11:41 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

http://www.puthinam.com

இப்படி புலிகளின் புகழ் பாடியே சிங்கள அரசு எல்லா நாடுகளிலும் ஆயுத உதவி பெறுகின்றது என்பதை விளங்காமல் நாங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் <_<

நூலை விட்டு வாலை பிடித்தல் என்று குறுகால போகாம இதை வடிவாக கலந்தாலொசிப்போம்.

சிங்களவன் மடையனில்லை....

மற்றவையும் மடையரில்லை....

QBZ-95-97 ஒரு சிறந்த துவக்கு... கொல்லும் தூரம் குறைவாக இருந்தாலும் துளைப்புவீதம் SA-80(UK) M-4(US) விட அதிகம்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QBZ-95-97 ஒரு சிறந்த துவக்கு... கொல்லும் தூரம் குறைவாக இருந்தாலும் துளைப்புவீதம் SA-80(UK) M-4(US) விட அதிகம்.

இது ஒரு சீன தயாரிப்பு. 1997 ஹொங்கொங்கில் சீன பாதுகாவலர்கள் முதல் தரம் உபயோகிக்க தொடங்கினர்.

ஆனால் 1995-ல் QBZ-95 உருவாக்கபட்டுவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: புலிகள் வைத்திருக்கும் ஆயுதங்கள் பற்றி நாங்கள் ஆராயத் தேவையில்லை. அனால் சிங்களம் புதிது புதிதாக ஆயுதம் வாங்கிக் குவிக்கும்போது, புலிகள் இன்னும் ஏ. கே.47 ஐயும் டி.56 ஐயும் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காடுகிறார்கள் என்று நினைக்க முடியாது அல்லவா ?

புலிகளின் ஆயுதபலம் யாரும் அறியாதது. ஒரு சின்ன உதாரணம், மல்ரி பரல் ரொக்கெட் லோன்சர் முதன் முதலில் பாவித்தது புலிகள்தான் என்று எமது தேசத்தின் குரல் சொன்னதாக நினைவு !!!!!

ரகுநாதன் அண்ணை அதை ஏன் சின்ன உதாரணம் என்றியள்? portable MBRL எண்ட படியாலோ இல்லாட்டி சிங்களவன் முதல் முதல் பாவிச்சதுகள் எண்ட பட்டியலோடு பார்க்கும் போது எங்கடை முதன் முதல் பட்டியல் சின்னன் எண்டதாலோ?

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: குறுக்காலபோவான்,

நீங்கள் சொன்னது சரி. அது காவித்திரியக் கூடிய மல்ரி பரல்தான். அனால் நான் "சின்ன உதாரணம் " என்று சொன்னது அந்த அர்த்தத்தில் இல்லை. ஒரு உதாரணம் என்ற வகையில் சொன்னேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: புலிகள் வைத்திருக்கும் ஆயுதங்கள் பற்றி நாங்கள் ஆராயத் தேவையில்லை. அனால் சிங்களம் புதிது புதிதாக ஆயுதம் வாங்கிக் குவிக்கும்போது, புலிகள் இன்னும் ஏ. கே.47 ஐயும் டி.56 ஐயும் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காடுகிறார்கள் என்று நினைக்க முடியாது அல்லவா ?

புலிகளின் ஆயுதபலம் யாரும் அறியாதது. ஒரு சின்ன உதாரணம், மல்ரி பரல் ரொக்கெட் லோன்சர் முதன் முதலில் பாவித்தது புலிகள்தான் என்று எமது தேசத்தின் குரல் சொன்னதாக நினைவு !!!!!

என்ன இப்பவும் Cyclic rate of fire 600 rounds per minute பற்றி பேசிக்கொண்டு இருகிங்க :D

ஆயுதங்கள் பழயவையாக இருப்பினும் அதன் பயன்னபட்டு முறை நவீனப்படுத்தப்பட்டதாக இருப்பின் நோக்கம் வெற்றிபெறும். ஈழப்பிரியா ஆயுதத்தை இயக்கிய திறன், புலிகளிடம் அவ்வகை ஆயுதங்கள் உண்டென்பதைக் கூறாது. அதற்கும் மேற்பட்ட திறனுடைய ஆயுதங்களும் இருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம். ஆனால் பயன்பாடுகள் நவீனத்துவமுடையவை.

இது பொழுதுபோக்குக் களம். அது போர்க்களம். இந்த பொழுதுபோக்குக் களத்தில் தேடினால் ஒன்றும் கிடைக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதங்களின் பயன்பாடு கள நிலைமையை பொறுத்தது தான். உதாரணமாக அமெரிக்க எம்16 எடுத்துக்கொள்ளுங்கள். இது 1964 ல் பாவனைக்கு வந்தது. ஆனால் இதை மிக கவனமாக பராமரிக்க வேண்டும்.

அதே போல் ஏ கே 47 ஆகக் கூடிய துரம் 400 மீற்றர் என நினைக்கிறேன்.

ஆனால் இப்போ ஏ கே 108 வந்துள்ளது 1000 மீற்றர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.