Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெனசீர் பூட்டோ தற்கொலைத் தாக்குதலில் மரணம்

Featured Replies

பாக். முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ இன்று கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மரணமடைந்துள்ளதாகவும் மேலும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர், என தற்போது கிடைக்கப் பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம். எல்லாம் பதவி ஆசை. நவாஸ் செரிப் என்ன செய்யப் போகின்றார்? அவரும் அஞ்ஞானவாசத்தில் இருந்து விலத்துற எண்ணத்தில் இருந்தாரே

Benazir Bhutto 'killed in blast'

Pakistani former Prime Minister Benazir Bhutto has been killed in a presumed suicide attack, a spokesman for the Pakistan People's Party (PPP) says.

Other reports said Ms Bhutto had only been injured and taken to hospital.

Ms Bhutto had just addressed a rally of PPP supporters in the town of Rawalpindi when the rally was hit by a blast.

At least 15 other people are reported killed in the attack.

Ms Bhutto has twice been the country's prime minister and was campaigning ahead of elections due in January.

BBC

  • கருத்துக்கள உறவுகள்

Benazir Bhutto 'killed in blast'

Pakistani former Prime Minister Benazir Bhutto has been killed in a presumed suicide attack, a spokesman for the Pakistan People's Party (PPP) says.

Other reports said Ms Bhutto had only been injured and taken to hospital.

Ms Bhutto had just addressed a rally of PPP supporters in the town of Rawalpindi when the rally was hit by a blast.

At least 15 other people are reported killed in the attack.

Ms Bhutto has twice been the country's prime minister and was campaigning ahead of elections due in January.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7161590.stm

--------

அமெரிக்கா வல்லாதிக்கம் விதைச்சதுக்கான அறுவடைகளில் இவையும் ஒன்று..!

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்களின் ஒரு பகுதியால் வெறுக்கப்படும் நிலையையே இது காட்டி நிற்கிறது. மக்களின் ஆசைகள் நிராசைகளாகின்ற போது.. ஜனநாயகம் தோற்று விடுகிறது..! ஜனநாயகம் 60% மக்களைப் பற்றிக் கவலைப்படும் போது 40% மக்களுக்கு துரோகம் இழைக்கிறது. அந்த 40% மக்களும் மனிதர்கள் என்பதை மிகச் சுலபமாக மறந்துவிடுகிறது ஜனநாயகம்.

உலகில் அமெரிக்க வல்லாதிக்க நோக்கோடமைந்த இராணுவ மயப்படுத்தப்பட்ட ஜனநாயகம் தோற்று வருவதன் அறிகுறியின் தொடர் வெளிப்பாடே பாகிஸ்தானில் வன்முறை அதிகரிப்புக்குக் காரணம்.

Edited by nedukkalapoovan

பெனாசிர் பூட்டோ மரணமடையவில்லை. காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

Former Prime Minister Benazir Bhutto Killed in Homicide Attack at Rally in Pakistan

Thursday, December 27, 2007

RAWALPINDI, Pakistan — Pakistani opposition leader Benazir Bhutto was assassinated Thursday in a homicide attack that also killed at least 20 others at a campaign rally, a party aide and a military official said.

The former prime minister died in Rawalpindi General Hospital, where she had been rushed to surgery after she was wounded in the attack.

• FOX Facts: Benazir Bhutto

Top party leaders were outside the hospital, crying.

A homicide bomber attacked the former prime minister's supporters as they were leaving a rally.

An Associated Press reporter at the scene saw body parts and flesh scattered at the back gate of the Liaqat Bagh park in Rawalpindi, where the rally was held.

He counted about 20 bodies, including police, and could see many other wounded.

The road outside was stained with blood and people screamed for ambulances. Others gave water to the wounded lying in the street. The clothing of some of the victims was shredded and people put party flags over their bodies.

The bomb went off just minutes after Bhutto spoke to thousands of supporters, and she appeared to be the target of the attack. Farahtullah Babar, the spokesman for her party, said her vehicle was about 50 yards away from blast, which went off as she was leaving the rally venue.

http://www.foxnews.com/story/0,2933,318510,00.html

  • தொடங்கியவர்

RAWALPINDI, Pakistan (CNN) -- Pakistan former Prime Minister Benazir Bhutto has died after a suicide attack, according to media reports.

Geo TV quoted her husband saying the politician had died following a bullet wound in the neck.

art.bhutto.

Bhutto is helped from her vehicle following the October 18 suicide attack on her motorcade.

The suicide attack left at least 14 dead and 40 injured, Tariq Azim Khan, the country's former information minister, told CNN in a telephone interview.

The attacker is said to have detonated a bomb as he tried to enter the rally where thousands of people gathered to hear Bhutto speak, police said.

Bhutto is said to have been leaving the rally when the attack occurred and was taken to a hospital in an unconcious state, the Geo TV report said.

Earlier, a spokesman for Bhutto told CNN she was safe and taken away from the scene.

Video from the scene of the blast broadcast from Geo TV showed wounded people being loaded into ambulances.

Up to 20 people are dead, the report said.

Earlier, four supporters of former Pakistan Prime Minister Nawaz Sharif died when members of another political party opened fire on them at a rally near the Islamabad airport Friday, local police said.

Several other members of Sharif's party were wounded, police added.

While President Pervez Musharraf has promised free and fair parliamentary elections next month, continued instability in the tribal areas and the threat of attack on large crowds has kept people from attending political rallies and dampened the country's political process.

Campaigners from various political groups say fewer people are coming out to show their support due to government crackdowns and the threat of violence.

At least 136 people were killed and more than 387 wounded on October 18 when a suicide bomber attacked Bhutto's slow-moving motorcade. The former PM returned to the country after eight years of self-imposed exile to a massive show of support in the southern port city of Karachi.

Bhutto called it "an attack on democracy" and vowed it would not deter her political campaign.

Today's violence come less than two weeks ahead of January parliamentary elections and as many days after President Pervez Musharraf lifted a six-week-old state of emergency he said was necessary to ensure the country's stability.

Critics said Musharraf's political maneuvering was meant to stifle the country's judiciary as well as curb the media and opposition groups to secure more power.

http://edition.cnn.com/2007/WORLD/asiapcf/...arif/index.html

பெனாசிர் இறந்துவிட்டதாக தற்பொழுது அவருடைய கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஒரு அபாயகராமான கட்டத்தை நோக்கிச் செல்கிறது. அணு ஆயுத வலு படைத்த ஒரு நாட்டில் இப்படியான நிலை இருப்பது அப் பகுதிக்கு மிகவும் ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் வருவது பற்றி தீவிரவாதிகளை விட முஸ்ராவ் தான் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

அமெரிக்காவும் முஸ்ராவை தொடர்ந்து பேணுவதற்கு அது வைத்திருக்கும், அணு ஆயுதமே காரணம். 5 வருடத்திற்கு ஒரு தடவை வருகின்ற ஒவ்வொரு பிரதமரையும் பின்வாசல் வழியாகப் பேச்சுநடத்துவதை விட, குறித்த ஒருவரைத் தொடர்ந்து வைத்திருப்பது தான் மே;றகுலகநாடுகளுக்கு இலகு.

கவலைப்படாதீங்கோ எல்லாம் அமெரிக்கா மாமா கட்டுபாட்டுக்க கொண்டருவார். சிலவேளை

சிரிலங்கா ராயபக்சே தனது படைகளை அவசரத்துக்கு அனுப்புகிறாரோ தெரியாது. பொறுத்துப் பாப்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: பேநசீர் புட்டோ சுட்டுக்கொலை

27blast.jpg

குண்டு வெடிப்பில் பலியானோரின் உடல்கள் சிதறிக்கிடக்கும் காட்சி

ராவல் பிண்டி, டிச. 27: தற்கொலைப் படைத் தாக்குதலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ (54) படுகொலை செய்யப்பட்டார்.

ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்டபோது, அவரை நோக்கி யாரோ சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் பலியானார். அதே நேரத்தில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வந்த நபர், வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறி பலியானார்கள்.

ராவல்பிண்டியில் லியாகத் பக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார். அவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.16 மணிக்கு அவர் இறந்தார்.

அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே நேரத்தில் மனித குண்டும் வெடித்துச் சிதறியது. பூட்டோவுக்கு அருகே அவருக்குப் பாதுகாப்புக்குச் சென்ற பலர் உடல் சிதறி இதில் இறந்தனர். மனித குண்டாக வந்தவரின் தலை துண்டாகி 70 மீட்டர் தூரத்தில் காணப்பட்டது

dinamani.com

பெனாசிர் பூட்டோ படுகொலை

ராவல்பிண்டி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவியுமான பெனாஸிர் பூட்டோ நேற்றுமாலை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பலியானார். அவருடன் மேலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிவிட்டு, திரும்புகையிலேயே அவர் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த பெனாஸிர் பூட்டோ வை ராவல்பிண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதும், அங்கு சிகிச்சை பலனளிக்காது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடவிருந்த பெனாஸிர் பூட்டோ, பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் நேற்று ராவல்பிண்டியில் உள்ள பூங்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, இருக்கைக்கு திரும்பும்போதே தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவுடன் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்கள் பலர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், ராவல்பிண்டியில் பெரும் பதற்றம் நிலவியது. சுமார் 4 கிலோ கிராம் எடையுள்ள வெடி குண்டே தற்கொலைதாரியால் வெடிக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக பெனாஸிர் பூட்டோவின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதும், அவர் அதனை பொருட்படுத்தாது தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

-- வீரகேசரி நாளேடு ----

செய்தியைப் பாக்க மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. பெனாசிர் பூட்டோவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

பேனசீர் புட்டோ படுகொலை

பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

20071227140010071227benazirfora.jpg

கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னர் பேனசீர் புட்டோ

ராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

இது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்

20071227141242blastscene203b2afp.jpg

கொலை நடந்த இடம்

பேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.

பேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை....

20071226152329benazir-bhutto-.jpg20071217214850benazir_203.jpg

1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.

இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.

அவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.

இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.

ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.

நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.

அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

-BBC

  • கருத்துக்கள உறவுகள்

பெனசீர் புட்டோ அவர்களது பொதுக்கூட்டத்தில் தற்கொலை வெடிகுண்டு வெடித்து 20 பேர்கள் பலியானார்கள். பெனசீர் புட்டோ நேரடியாக துப்பாக்கியாலும் வெடிகுண்டுகளாலும் தாக்கப்பட்டு, கழுத்து நெஞ்சு ஆகியவற்றில் துளைக்கப்பட்டு மரணமடைந்தார்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் கொண்டுவந்துவிடமுடியும் என்றவீண் நம்பிக்கை காரணமாக உயிர் கொடுத்த அன்னாருக்கு அஞ்சலிகள்.

Bhutto Assassinated by Suicide Attacker

Pakistan Rocked by Latest Killing

Benazir Bhutto was among at least 20 killed in a coordinated suicide attack. A party security adviser said Bhutto was shot in the neck and chest as she got into her vehicle to leave the rally in Rawalpindid, near the capital city of Islamabad. Dec. 27, 2007

Share Pakistan opposition leader Benazir Bhutto was killed today by an assassin who shot her and then blew himself up as she was leaving a campaign rally, ABC News has confirmed.

Bhutto was among at least 20 killed in the blast. A security adviser to Bhutto's party said she was shot in the neck and chest as she got into her vehicle to leave the rally in Rawalpindi, near the capital city of Islamabad.

"At 6:16 p.m. she expired," Wasif Ali Khan, a member of Bhutto's party who was at Rawalpindi General Hospital, told The Associated Press.

At the hospital, her supporters began chanting "dog, Musharraf, dog," a reference to Pakistan's president, Pervez Musharraf.

The attack took place as Bhutto was leaving a political rally where she addressed thousands before the country's Jan. 8 parliamentary elections.

Bhutto twice served as prime minister of the Islamic nation between 1988 and 1996.

Oct. 18, she returned to Pakistan from an eight-year exile. During her triumphant arrival in Karachi, Pakistan, a suicide attacker blew himself up, killing more than 140 people. Bhutto escaped injury in that attack.

Bhutto has been the target of nine previous assassination attempts.

Information from The Associated Press contributed to this report.

http://nesamudan.blogspot.com/2007/12/by.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் மறைவுக்கு இரங்கல் படவே முடியவில்லை. அந்தளவுக்கு பாகிஸ்தானின் அணுகுமுறை ஈழத்தமிழ் மக்களின் நலனுக்கு பாதகமாகவே தொடர்சியாக இருந்து வந்துள்ளது.

அதுமட்டுமன்றி ஊடகங்கள் வழங்கும் பக்கச்சார்பான முன்னுரிமைகளே இவர்களைப் பெரிய மனிதர்களாக்கி உலகின் முக்கிய மனிதர்களாக இனங்காட்டிக் கொண்டிருக்கின்றன..! ஒவ்வொரு மக்களுக்கும் அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்கள் உறவினர்கள் முக்கியமானவர்களே. அதை சிந்தித்து இவர்கள் ஆயுத விநியோகங்களை நிறுத்தி இருந்தால்.. இன்று இவர்களைப் போன்று எத்தனை அப்பாவி மனிதர்களின் உயிரைப் பாதுகாத்திருக்க முடியும். சந்திரிக்கா அம்மையாரோடு நெருங்கிச் செயற்பட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்..!

ஜனநாயகம் என்ற போர்வையில் அமெரிக்கா நடத்தும் ஆயுத அரசியலில் இவ்வாறான நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை. இந்தப் பூமிப் பந்து என்று ஆயுதங்களற்ற பூமி ஆகிறதோ அன்றுதான் மக்களின் உரிமைகள் சமனாக மதிக்கப்படும் நிலை தோன்றும்.

காக்கா குருவி ஆயுதம் வைச்சுக் கொண்டா ஜனநாயகம் பேசிக் கொண்டா பூமியில் வாழுது. இல்லையே. அவற்றிடம் (ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம் பேணப்படுவதுடன்.. பூமியில் வாழ்வதற்கு சுதந்திரமும் உள்ளது. யாரையும் கேட்டு யாரும் வாழனும் என்ற உரிமையில் அவை இல்லை..!) மனிதரை விட ஒற்றுமையும் கூட்டு வாழ்வும் இருக்கக் காரணமே.. இந்த ஆயுதம் மூலம் அடிபணிய வைப்பது என்பது இல்லாமையே..! மனிதன் என்று ஆயுதங்களற்ற உலகை உருவாக்கிறானோ அன்று பயங்கரவாதம் என்பதும் இருக்காது இராணுவ வல்லாதிக்கமும் இருக்காது.. கொடிய ஆயுத வன்முறை என்பதும் இருக்காது.. அமெரிக்காவின் உலகின் குரலுக்கும் அவர்கள் போடும் மனித உரிமைப் பிச்சைக்கும் காத்திருக்க வேண்டிய நிலையும் இருக்காது.. எல்லா அடிமைத்தனமும் தானே அகலும்..! :huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெனசீர் பூட்டோ தன்னுடைய உயிருக்கு ஏதும் நிகழ்ந்தால் அதற்கு முஷரப் தான் பொறுப்பு என்று தன்னுடைய 25 வருட கால நெருங்கிய நண்பர் Mark Siegel க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். CNN.

Edited by அருண்

ஐயோ... ஐயோ.... :D :D :D:huh:

இராணுவ சர்வாதிகார ஆட்சி மாறி பெனாசிர் பூட்டோ பிரதமர் ஆகியிருந்தால் பாக்கிஸ்தானின் சிறீலங்கா ஆதரவுப் போக்கு மாற்றம் கண்டிருக்கலாம். தமிழரின் போராட்டத்திற்கு எதிராக அவர் இருந்தார் என்பதற்கோ இருப்பார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. மாறாக நவா செரிப் காலத்தில் தான் சிறீலங்காவுடனான இராணுவ ரீதியான நெருக்கங்கள் ஏற்படத் தொடங்கியது. அதன் பின்னர் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் அது மேலும் பலமடங்காக அதிகரித்திருக்கிறது. இதற்கு ஒரு உதவிக் காரணம் இராணுவத் தளபதிகளிடையோயான இராணுவக் கல்லூரியில் ஏற்பட்ட நட்பு. அதன் உதவியுடன் ஏனைய நலன் சார்விடையங்கள் விரைவாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

  • தொடங்கியவர்

பெனா‌‌சி‌ர் படுகொலை: அல்காய்தா பொறுப்பேற்பு

வாஷிங்டன் (ஏஜென்சி, வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2007 (10:27)

பா‌கி‌ஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனா‌சிர் பூ‌ட்டோ படுகொலைக்கு அல்காய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் பூட்டோ ராவல் பிண்டியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்தகொண்டு புறப்பட்டபோது, சில மர்ம ஆசாமிகள் பெனாசிரை சூழ்நது கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் உயிரிழந்தார்.

அடுத்த சில நிமிடங்களில். அங்கு நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 27க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவகள் தெரிவிக்கின்றன. பெனாசிர் படுகொலைக்கு இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெனாசிர் படுகொலை எதிரொலியாக பாகிஸ்தானில் கலவரம் வெடித்துள்ளது. ஆங்காங்கே வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த கலவரச் சம்பவங்களில் 14க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பெனாசிர் படுகொலைக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பான அல் காய்தா பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து அல் காய்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முஸ்தபா அபு அல் யாசித், பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஓன்றை தொடர்பு கொண்டு, பெனாசிர் கொலைக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஆதரவாக பெனாசிர் செயல்பட்டு வந்ததால் பெனாசிரை கொலைசெய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா)

பெனாசிர் பூட்டோவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில் தமக்கு தொடர்பில்லை என அல் - காய்தா தலைவர்களில் ஒருவரான பைதுல்லா மெசூத் மறுத்துள்ளார்.

பெனாசிர் பூட்டோ கொலைக்கு அல் - காய்தா இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்களான பைதுல்லா மெசூத் மற்றும் மவுல்வி சாகிப் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடலை இடைமறித்துக் கேட்டதாக கூறி பாகிஸ்தான் அரசு இன்று உரையாடல் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆனால் பெனாசிர் கொலையில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பைதுல்லா மெசூத் மறுத்துள்ளார்.

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் மற்றும் உளவுப் பிரிவும் சேர்ந்து மேற்கொண்ட சதித்திட்டம்தான் பெனாசிர் கொலை.இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உரையாடல் தொகுப்பு, ஒரு நாடகமாகும்.

இவ்வாறு பைதுல்லா கூறியதாக அவரது செய்தி தொடர்பாளர் ஒமர் தெரிவித்தார்.

பெனாசிர் பாகிஸ்தானுக்கு மட்டுமான தலைவரல்ல ; உலகப் புகழ் வாய்ந்த தலைவராகவும் விளங்கினார்.அவர் கொல்லப்பட்டது குறித்து நாங்கள் அதிர்ச்சியும் , துயரமும் அடைந்துள்ளோம் என அவர் மேலும் கூறினார்.

பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது என்பது பாகிஸ்தான் பழங்குடியின மரபுக்கு மாறானது.

paraparappu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.