Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவை ஆதரித்ததால் பெனாசிரை கொன்றோம்: அல்கொய்தா தீவிரவாதிகள் அறிவிப்பு

Featured Replies

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று மாலை ராவல்பிண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

பெனாசிர் உடல் அடக்கம் இன்று மதியம் சிந்து மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடக்கிறது.

பெனாசிரை படுகொலை செய்தது யார் என்பது இன்று காலைவரை மர்மமாக இருந்தது. நேற்றிரவு எந்த தீவிரவாத இயக்கமும் பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை "பெனாசிரை படுகொலை செய்தது நாங்கள்தான்'' என்று சர்வதேச பயங்கரவாதி பின்லேடனின் அல்- கொய்தா இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.

இந்த தகவலை அல்- கொய்தா இயக்கம் தங்களது இணையத் தளங்களில் வெளியிட்டது. ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் அவை வெளியிடப்பட்டிருந்தன. "பெனாசிரை ஏன் கொலை செய்தோம்?'' என்று அதில் அல்- கொய்தா தீவிரவாதிகள் விளக்கம் தெரிவித்திருந்தனர்.

அல்- கொய்தா வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெனாசிர் அமெரிக்காவுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்பட்டார். அமெரிக்கா துணையுடன் எங்களை ஒழித்துக்கட்ட போவதாக சபதம் செய்தார். எனவேதான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவரை கொலை செய்ததன் மூலம் பாகிஸ்தானில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய, விலை மதிப்பில்லாத சொத்தை துண்டித்து நிறுத்திவிட்டோம். பெனாசிரை கொல்ல வேண்டும் என்ற முடிவை அல்- கொய்தாவின் மூத்த தலைவர் அய்மன்- அல்-ஜவகரி எடுத்தார். அதன்படி உடனடியாக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அல்- கொய்தா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அல்- கொய்தாவின் ஆப்கானிஸ் தான் கமாண்டர் அல்- யாஜீத் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக பெனாசிர் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் பரவியதும் பாகிஸ்தான் முழுவதும் நேற்று இரவு கலவரம் வெடித்தது. பாகிஸ்தான் முழுக்க ரத்தக் களறியை உருவாக்கிய வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெனாசிரின் சொந்த மாகாணமான சிந்து மாகாணத்தில்தான் கலவரம் அதிக அளவில் இருந்தது.

இஸ்லாமாபாத், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் கடை உடைப்பு, தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. ஆயுதங்கள் ஏந்திய கும்பல்கள் கடைகளை உடைத்து சூறையாடின.

பெனாசிரின் தீவிர ஆதரவாளர்கள், தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த எதிர்க் கட்சியினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. ராணுவம் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போதிலும் பெனாசிர் ஆதரவாளர்களின் ஆவேசத் தாக்குதல்களை கட்டுப்படுத்த இயலவில்லை.

பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கலவரம் நடந்தது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் மக்க ளிடம் பதட்டம் நீடிக்கிறது. மிக வும் பதட்டம் நிலவும் பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சில இடங்களில் கலவரம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. கலவரத்தில் 30 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கராச்சி நகரில் மட்டும் 12 பேர் கொல்லப்பட்டனர். சிந்து மாகாணத்தில் முஷரப் கட்சியைச் சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கராச்சி நகரில் 12 பெட்ரோல் நிலையங்களுக்கு பெனாசிர் கட்சியினர் தீ வைத்தனர். இரவு முழுவதும் அந்த பெட்ரோல் நிலையங்கள் எரிந்தபடி இருந்தன. நிறைய இடங்களில் தீ வைக்கப்பட்டதால் தீயணைப்புத் துறையினர் திணறிப் போனார்கள்.

குலிஸ்டன், மலிர்சோத் எனும் ஊர்களில் போலீஸ் நிலையங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்து நாசமாக்கப்பட்டன. பெஷாவர் நகரில் பெனாசிர் கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை அடித்து உடைத்து துவம்சம் செய்தனர்.

"முஷரப் நாய் ஒழிக'' என்று பெனாசிர் கட்சியினர் தெருமுனைகளில் கோஷமிட்டப்படி இருந்தனர். முல்தான் நகரில் சுமார் 2 ஆயிரம் பெனாசிர் ஆதரவாளர்கள் திரண்டு வந்து தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். ரோடு முழுக்க டயர்கள் போட்டு எரிக்கப்பட்டால் முல்தான் நகரில் போக்குவரத்து அடியோடு முடங்கியது.

இன்று காலை கலவரம் சற்று தணிந்தது. என்றாலும் மக்கள் மனதில் எந்த நேரத்தில் என்ற நடக்குமோ என்ற பீதி காணப்படுகிறது. தீவிரவாதிகளை ஒடுக்க இயலாததால் மக்கள் மனதில் முஷரப் மீது வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே பாகிஸ்தானின் பல பகுதிகளில் சன்னி- ஷியா முஸ்லிம்களிடையே இனக் கலவரமும் மூண்டுள்ளது. பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் 20 சதவீதம் உள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் பாஸ்தானில் கலவரத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

பெனாசிர் உடல் இன்று அடக்கம் செய்யப்படுவதாலும், கலவரம் நீடிப்பதாலும் பாகிஸ்தான் முழுக்க இன்று கடைகள் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் நகரம்- கிராமம் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன.

பாகிஸ்தான் மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். கலவரம் மீண்டும் வெடிக்காமல் இருப்பதற்காக ராணுவ ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தக்கூடும் என்று மிரட்டல் எழுந்துள்ளது. இதனால் இஸ்லாமாபாத்தில் வரலாறு காணாத அளவுக்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்

paraparappu.com

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அமெரிக்காவின் பொம்மையாக உள்ள முசாரப்பையல்லோ அல்கைடா முதலில் போட்டு தள்ளியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அமெரிக்காவின் பொம்மையாக உள்ள முசாரப்பையல்லோ அல்கைடா முதலில் போட்டு தள்ளியிருக்க வேண்டும்.

அல்கைடாவும் இல்லை ஆட்டுக் குட்டியும் இல்ல. அமெரிக்காவோட கூட்டு வைக்கிறவைக்கு அமெரிக்காவாலதான் அழிவு. அதுக்கு பெனாசிரும் விதிவிலக்கல்ல..! அமெரிக்காவே விதைச்சு அறுவடையும் செய்து கொள்கிறது. :rolleyes:

மேற்குலக ஊடகங்களும் அமெரிக்க சார்பு அரசுகளின் ஊடகங்களும் தரும் செய்தியை வைச்சு உண்மைகளைத் தீர்மானிக்க முடியாது..!

சிறீலங்கா அரசு தாற செய்திகளை வைச்சு.. நாங்க உண்மைகளைத் தீர்மானிக்க முடியும் என்பது போன்றதே.. இந்த ஊடகங்களின் செய்தியை நம்புறதும்.

அல்கைடா.. அறிக்கை விட்டிச்சோ.. இல்ல அமெரிக்காதான் அல்லது முசாரப்தான் அல்கைடா என்று அறிக்கை விட்டிச்சினமோ யார் அறிவார்..??!

பெனாசிர் துப்பாக்கியால் சுடப்பட்டோ குண்டு வெடிப்பிலோ மரணமாகவில்லை கார் கம்பி இடித்து மரணம் எங்கிறது பாகிஸ்தான் அரசு. பெனாசிருக்கு சிகிச்சை அளித்த வைத்தியரோ துப்பாக்கியால் அவர் சுடப்படவில்லை குண்டுச் சிதறலால் தலையில் அடிபட்டு இறந்தார் எங்கிறார். ஆனால் அமெரிக்க சார்பு ஊடகங்களோ துப்பாக்கியால் சுட்ட நபர் தற்கொலைத்தாக்குதலும் நடத்திக் கொன்றதாகச் சொல்கின்றனர்.

தற்கொலைத்தாக்குதல் உண்மையில் நடந்ததா.. இல்ல குண்டு வெடிக்க வைக்கப்பட்டதா என்பது கூட சரிவரத் தெளிவில்லை..! அப்படி இருக்க அமெரிக்க ஊடகங்களுக்கு எப்படி தற்கொலைத்தாக்குதல் என்பது துள்ளியமாகத் தெரிந்தது..??!

ஆக பெனாசிர் இறந்த விதத்திலேயே குழப்பம் விளைவிக்க முயன்றிருப்பது.. பெனாசிர் ஒரு கூட்டுச் சதிக்கு பலியாக்கப்பட்ட பலி ஆடு என்பதைத்தான் இனங்காட்டுகிறது.

இவ்விவகாரத்தில் அல்கைடா என்ற உச்சரிப்பு.. அமெரிக்காவின் வல்லாதிக்க நோக்கத்துக்கு இச்சம்பவத்தை பயன்படுத்த இழுக்கப்படுகிறது.. அவ்வளவும் தான்..! அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுக்குள் தனது இராணுவத்தை நிறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதால்.. (இஸ்லாமியர்களின் இராணுவ பலத்தை கட்டுப்படுத்தவும் சீனா இந்தியா மீதான தனது இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கவும்) இது புஷ் - முசாரப்பின் கூட்டுச் சதியாகவே தென்படுகிறது.

சும்மா கிடந்த பிரிட்டன் கோடன் பிறவுன்.. ஜனநாயகத்தை தோற்கடிக்க நினைப்பவர்களை அழிப்பேன் என்று உளறுவதில் இருந்தே உண்மையை புரிஞ்சுக்கனும்..! அமெரிக்க வல்லாதிக்கம் ஜனநாயகம் என்ற போலி வடிவெடுத்து இராணுவ ரீதியில் விரிவாக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே சான்று..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் அமெரிக்கக் கூட்டாளி சர்வதேசமும் அமெரிக்க ஆதரவு பாகிஸ்தான் தலைவர் முசாரப்பும் குற்றம் சாட்டியது போலன்றி, பெனாசிர் படுகொலையில் தனது பங்களிப்பை முற்றாக நிராகரித்துள்ளார் Baitullah Mehsud. அமெரிக்காவும் அமெரிக்கக் கூட்டாளிகளும் இவரை அல்கைடா மற்றும் தலிபானுடன் கூட்டு வைத்துள்ள தீவிரவாதியாக இனங்கண்டுள்ளதுடன்.. பெனாசிரைப் படுகொலை செய்ய இவரே உத்தரவிட்டதாக பாகிஸ்தான் முசாரப் அரசு குற்றம் சாட்டி இருந்தது..!

Pakistan (Reuters) - Al Qaeda-linked Pakistani militant Baitullah Mehsud was not involved in the assassination of opposition leader Benazir Bhutto, his spokesman said on Saturday, and blamed the government for killing her.

"I strongly deny it. Tribal people have their own customs. We don't strike women," Mehsud's spokesman Maulvi Omar said by telephone from an undisclosed location.

http://www.reuters.com/article/newsOne/idUSISL22143320071229

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக பெனாசிர் இறந்த விதத்திலேயே குழப்பம் விளைவிக்க முயன்றிருப்பது.. பெனாசிர் ஒரு கூட்டுச் சதிக்கு பலியாக்கப்பட்ட பலி ஆடு என்பதைத்தான் இனங்காட்டுகிறது.

இவ்விவகாரத்தில் அல்கைடா என்ற உச்சரிப்பு.. அமெரிக்காவின் வல்லாதிக்க நோக்கத்துக்கு இச்சம்பவத்தை பயன்படுத்த இழுக்கப்படுகிறது.. அவ்வளவும் தான்..! அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுக்குள் தனது இராணுவத்தை நிறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதால்.. (இஸ்லாமியர்களின் இராணுவ பலத்தை கட்டுப்படுத்தவும் சீனா இந்தியா மீதான தனது இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கவும்) இது புஷ் - முசாரப்பின் கூட்டுச் சதியாகவே தென்படுகிறது

பெனாசிருக்கு வேட்டு வைத்தவுடனேயே என் மனதில் பொறி தட்டிய விடயம்

என்னைப்பொறுத்தவரைக்கும் பாவம் பாரதநாடு சீனா அல்ல :)

  • கருத்துக்கள உறவுகள்

அல்கைடாவில் சந்தேகப்பட காரணங்கள்: பின்லாடன் இறந்து விட்டார் என பூட்டோ அறிக்கை விட்டமை.

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தை முழுமையாக அனுமதித்து அல்கைடாவை அழித்தல்.

அமெரிக்கா, முசாரவில் சந்தேகப்பட வைப்பது: கொலை நடைபெற்ற இடத்தை அவசர அவசரமாக சுத்தம் செய்து தடயங்களை அழித்தல்.

பூட்டோவின் உடல் போஸ்மோட்டம் செய்யப்படவில்லை.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானம்

[30 - December - 2007] [Font Size - A - A - A]

* பெனாசிர் படுகொலையில் தொடர்பு இல்லை என்கிறது அல்-ஹைடா

* அரசு மூடி மறைப்பதாக பூட்டோவின் மக்கள் கட்சி கடும் குற்றச்சாட்டு

சர்வதேச அரங்கில் புகழும் செல்வாக்கும் மிக்க தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படுகொலையால் அந்நாட்டில் தோன்றியிருக்கும் அமைதியற்ற சூழ்நிலையால் எதிர்வரும் ஜனவரி- 8 இல் நடைபெறவிருந்த பாராளுமன்றம் மற்றும் மாகாண நிர்வாகங்களுக்கான தேர்தலை ஒத்திவைப்பதென அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை தீர்மானித்திருக்கிறது.

அதேசமயம், வியாழக்கிழமை ராவல்பிண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெனாசிர் பூட்டோ படுகொலை யுண்டதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாராப்பின் அரசாங்கமே பொறுப்பு என்று பெனாசிரின் உதவியாளர்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் இந்தக் கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்ஹைடா நேற்று சனிக்கிழமை மறுத்திருக்கிறது.

பெனாசிரின் படுகொலையையடுத்து பாகிஸ்தான் முழுவதும் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. 38 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் அரச சொத்துகள் நாசமாக்கப்பட்டுமிருக்கும் நிலைமையில் ஜனவரி 8 இல் தேர்தல் திட்டமிடப்பட்ட படி நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை அந்நாட்டுப் பிரதமர் அறிவித்திருந்தார். ஆனாலும், நேற்று தேர்தலை ஒத்தி வைப்பதென தேர்தல் ஆணைக்குழு முடிவெடுத்திருக்கிறது.

"இன்று தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்தனர். நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை பின்போடுவதென முடிவு எடுக்கப்பட்டதென தன்னை அடையாளம்காட்ட விரும்பாத தேர்தல் ஆணைக்குழு அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உத்தியோக பூர்வமாக கலந்துரையாடியபின் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான அறிவித்தல் திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் யாவுமே பாதிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. சில மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.