Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தில் நடைமுறைக்கு வந்தது "நல்லளிப்பு"

Featured Replies

தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இப்ப இது ரொம்ப முக்கியம், புலிகளை சுற்றி இருக்கிற "மங்குனி பாண்டியர்கள்" ரொம்பதான் ஓவரா போய்ட்டாங்கப்பா. வன்னியின் அத்தனை முனைகளையும் ஆமி முட்டித்தள்ளுது...இந்த நேரத்தில இது எல்லாம் தேவையா? புலிகள் தமது சகல வளங்களையும் ராணுவ மயப்படுத்த வேண்டிய தருணம் இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேரத்தில இது எல்லாம் தேவையா?

இதென்ன.. வெளிநாடு வந்த எல்லாரும் இயல்பு வாழ்க்கை வாழ்கினம். அங்கையிருக்கிற சனம் வாழ முடியாதோ ?

அப்போ தாயகத்திலும் தைப்பொங்கலை புத்தாண்டாக்கி கலாச்சார சீரழிவு நடக்கிறதா? :unsure:

ஆரிய திராவிட மாயை தயாகத்திலும் பரவி வருகிறதா? பழந்தமிழர்களான இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் பகுதியை நாம் தாயகம் என்று சொல்ல முடியுமா? இப்படி ஒரு விடுதலைப் போராட்டம் வேணுமா எங்களிற்கு? இதிலும் பார்க்க சிறீலங்கா எவ்வளவோ மேல் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களது பாடவிதானங்களில் கூட இப்படியான சீரழிவுகள் ஆரியம் திராவிடம் என்ற அவதூறுகள் இருப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் திருநாளான உழவர் திருநாளை.. தமிழர்களின் புத்தாண்டு என்று விடுதலைப்புலிகளோ அல்லது எந்த ஒரு தரப்புமோ உலகில் உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்த சிலர் நடத்தும் புல்லுருவிகள் ஆதிக்கம் செய்யும் ஊடகங்கள் தங்கள் இஸ்டத்துக்கு வழமை போல செய்தியைத் திரித்து வழங்குகின்றன.

தமிழீழ வைப்பம்.. விசேட தினங்களில் மக்களுக்காக விசேட வைப்புத் திட்டங்களை ஆரம்பிப்பது வழமை. அந்த வகையில் பொங்கல் திருநாளில் பண வைப்பை ஊக்கிவிக்கும் வையில் இந்த நல்லளிப்பு என்பது அறிமுகமாக்கப்படுகிறதே அன்றி.. தைப் பொங்கலை தமிழர் புத்தாண்டாக பிரகடனப்படுத்தி.. நல்லளிப்பை செய்யவில்லை..!

சிங்கள அரசின் பொருளாதாரத் தடைகளுக்குள் இருக்கும் வன்னியில் பணப்புழக்கத்தை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் நோக்கோடு தமிழீழ வைப்பகம்.. இவ்வாறான நடவடிகைகளை ஊக்கிவிப்பது வரவேற்க வேண்டிய ஒன்று..!

புலம்பெயர்ந்தவர்கள் சிலர் நடத்தும் ஊடகங்களின் திருகுதாளங்களை இது அப்பட்டமாக இனங்காட்டுகிறது..! புதினம் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளது என்றே தோன்றுகிறது. தன்னிஸ்டத்துக்கு தமிழர் புத்தாண்டு என்ற தனது சுய நிலைப்பாட்டை அதற்குள் திணித்து செய்தி வெளியிட்டுள்ளது..!

அப்படி ஏதேனும் உத்தியோக பூர்வ மாற்றங்கள் வந்திருப்பின் சர்வதேச கவனம் மிக்க தமிழ்நெற் போன்ற ஊடகங்கள்.. இதைக் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி இருக்கும். ஆனால்ல் தமிழ்நெற் வழமை போல பொங்கல் வாழ்த்து மட்டுமே தெரிவித்துள்ளது..!

pongal_front.jpg

TamilNet wishes its readers a Happy Pongkal 2008

http://www.tamilnet.com/ :unsure:

Edited by nedukkalapoovan

"நல்லளிப்பு" என்ற பெயரில் வேறு நிகழ்வுகளிற்கு அன்பளிப்புச் செய்வதில்லை. அவற்றை அன்பளிப்பு பரிசு ஊக்குவிப்பு என்ற பெயர்களில் தான் செய்கிறார்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்களிற்குத்தான் (அது எந்த நாட்காட்டி முறையில் எந்தக் கலாச்சாரத்தில் நடந்தாலும்) ஆண்டின் இலக்கத்தையும் குறிப்பிட்டு வாழ்த்துச் சொல்வது வழமையாக இருக்கிறது. மற்ற நிகழ்வுகளிற்கு ஆண்டின் இலக்கத்தைச் சொல்லி வாழ்த்துச் சொன்னதை காணவில்லை.

நல்லளிப்பு என்பது பல சந்தர்ப்பங்களில் வழங்கப்படுகின்றன. உதாரணம் புதுக் கடைத் திறப்பு விழாவில் விற்பனையின் ஆரம்பத்தில் இது நிகழ்த்தப்படும். இப்படிப் பல சந்தர்ப்பங்கள். இவை பிறிதொரு தலைப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2008க்குரிய பொங்கல் வாழ்த்து என்பதுதான் அதன் அர்த்தம். தமிழ் புத்தாண்டு வாழ்த்தும் பொங்கல் வாழ்த்தும் என்ற குறிப்பு அங்கில்லை.

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை அப்படியே குறிப்பிட ஆங்கிலப் பதம் உள்ள போது எதற்காக 2008 என்று குறிப்பிட வேண்டும்..??!

Happy New Year என்றும் வாழ்த்துவதுண்டு. Happy Deepavali 2007 என்றும் வாழ்த்துவதுண்டு.

தலைவரின் பேச்சு 2007 என்பது.. அவ்வாண்டுக்குரிய பேச்சு என்பதைக் காட்டத்தானே தவிர.. 2007க்கு வாழ்த்துச் சொல்லும் தலைவரின் பேச்சு என்பதல்ல அர்த்தம்..! :unsure::wub:

Edited by nedukkalapoovan

ஆம் நல்லளிப்பு என்பது புதிதாக ஆரம்பிக்கும் வியாபார முயற்சிகளில் அந்த முயற்சியில் இறங்கியிருப்பவர்களிற்கும் புதிதாக ஆரம்பிக்கும் ஆண்டில் பரவலாகவும் வழங்கப்படுகிறது.

ஏனைய சந்தர்ப்பங்களில் அது அன்பளிப்பு, பரிசு, ஊக்குவிப்பு, உதவி

தலைவரினுடைய பேச்சு என்பதால் அது ஆண்டின் இலக்கத்தோடு குறிப்பிடப்படுகிறது. அது கடந்த 12 மாதகால நிகழ்வுகளின் தொகுப்பு அடுத்த 12 மாதகால எதிர்பார்ப்புகள் நிலைப்பாடுகள் என்று ஒருவகை கொள்கை பிரகடன உரையாகத்தான் பார்க்கப்படுகிறது. அதை வாழ்த்தாக ஒருவரும் பார்ப்பதில்லை. :unsure:

அடுத்து வாழ்த்துகள் என்னும் பொழுது ஆங்கிலத்திலோ தமிழிலோ எப்பொழுதும் புத்தாண்டு வாழ்த்துக்களிற்குத்தான் ஆண்டின் இலக்கம் குறிப்படப்படுகிறது.

தீபாவளி நத்தார் போன்றவற்றிற்கு ஆங்கிலத்திலோ தமிழிலோ ஆண்டின் இலக்கம் குறிப்பிடுவது வழமையல்ல.

மலர்ந்திருக்கும் ஒரு புதிய ஆண்டிற்கான வாழ்த்தில் தான் அந்த ஆண்டிற்கு என்று குறிப்பிட்டு வாழ்த்துகிறார்கள்.

தீபாவளியோ நத்தாரோ ஒவ்வொரு முறையும் புதியதான ஒன்றாக பார்க்கப்பட்டு அந்த ஆண்டிற்கு என்று குறிப்பிட்டு வாழ்த்தப்படுவதில்லை.

Edited by kurukaalapoovan

2 பேர் இதுக்கை நின்று கத்துறீங்க.. உங்களுக்கு ஆதரவா யாராவது கருத்தெழுதினாங்களா? எதிர்த்்து எழுதாங்கன்னு தெரியும்.. ஏன்னா கருத்துகளத்தில நீங்க உடும்பு பிடி பிடிப்பீங்கன்னு தெரியும்.. கழருவது கஸ்டம். அதால பேசாம இருக்கிறாங்க..

உங்களைப்போல 2 பேர் போதும்.. தமிழன் சுயத்தை அடையாமல் மேலும் மேலும் அடிமையாக மற்றவனைத் தொழ..!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரினுடைய பேச்சு என்பதால் அது ஆண்டின் இலக்கத்தோடு குறிப்பிடப்படுகிறது. அது கடந்த 12 மாதகால நிகழ்வுகளின் தொகுப்பு அடுத்த 12 மாதகால எதிர்பார்ப்புகள் நிலைப்பாடுகள் என்று ஒருவகை கொள்கை பிரகடன உரையாகத்தான் பார்க்கப்படுகிறது. அதை வாழ்த்தாக ஒருவரும் பார்ப்பதில்லை. :unsure:

அடுத்து வாழ்த்துகள் என்னும் பொழுது ஆங்கிலத்திலோ தமிழிலோ எப்பொழுதும் புத்தாண்டு வாழ்த்துக்களிற்குத்தான் ஆண்டின் இலக்கம் குறிப்படப்படுகிறது.

தீபாவளி நத்தார் போன்றவற்றிற்கு ஆங்கிலத்திலோ தமிழிலோ ஆண்டின் இலக்கம் குறிப்பிடுவது வழமையல்ல.

மலர்ந்திருக்கும் ஒரு புதிய ஆண்டிற்கான வாழ்த்தில் தான் அந்த ஆண்டிற்கு என்று குறிப்பிட்டு வாழ்த்துகிறார்கள்.

தீபாவளியோ நத்தாரோ ஒவ்வொரு முறையும் புதியதான ஒன்றாக பார்க்கப்பட்டு அந்த ஆண்டிற்கு என்று குறிப்பிட்டு வாழ்த்தப்படுவதில்லை.

இதோ இந்த இணைப்பில் கிறிஸ்மஸ் காட் 2007 என்று தலைப்பிடப்பட்டு அவை விற்பனைக்கு சேர்க்கப்பட்டுள்ளன. ஏன் வெறுமனவே கிறிஸ்மஸ் காட் என்று போடவில்லை.

http://www.royalacademy.org.uk/christmas-cards-2007-102

ஒரு வாதத்துக்கு பொங்கல் 2008 இல் தமிழ் ஆண்டைக் குறிக்கவே 2008 என்று போட்டது என்பது கூடப் பொருத்தமில்லாத வாதம்.

தமிழ் ஆண்டு வரிசையில் (வள்ளுவர் ஆண்டையே தமிழாண்டாக நோக்குகின்றனர்) 2008 தாண்டி போய் கிட்டத்தட்ட 3 தசாப்தம் கடந்துவிட்டது..! அப்போ.. பொங்கல் ஆங்கில ஆண்டு 2008 என்ற அர்த்தமா அது..???!. உண்மையில் அதன் அர்த்தம் 2008 ஆங்கில ஆண்டுக்கான பொங்கல் என்பதே..!

எப்படியாவது திரிச்சுத் திணிப்பம் என்று பார்க்கிறியள் எல்லாப் பக்காத்தாலும் இறுக்கமோ இருக்குப் போல..! :wub::wub:

Edited by nedukkalapoovan

ஒவ்வொரு வருடம் season இற்கு வரும் விற்பனைப் பொருட்களை அந்த வருடத்தை season குறித்து தானே அழைக்க முடியும் :wub:

ஒவ்வொரு ஆண்டும் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளிற்கான விளம்பரங்கள் தயாரிக்கப்படும் பொருட்களின் விளம்பரங்களை காட்டி மோசடி செய்ய வேண்டாம். :unsure:

இங்கு கேள்வி ஒரு குறிப்பிட்ட பண்டிகை தொடர்பாக "...வாழ்த்து" என்று சொல்லப்படும் வசனத்தில் ஆண்டிலக்கம் வருவது பற்றியது.

நல்லது தற்போதைக்கு ஒரு வாதத்திற்கு பொங்கலை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ளுங்கோ. மிச்சம் பிறகு படிப்படியாக வரும்.

சமூகத்தில் சந்ததி சந்ததியாக புரையோடியுள்ள மத மூட நம்பிக்கைகள், முரண்பாடுகள், திணிப்புகளை, திரிப்புகளை புரட்சிகரமாக திடீர் என்று மாற்ற முடியாது. ஏற்றுக்கொள்ளக் கூடிய வேகத்தில் படிப்படியாக மாற்றங்கள் வரும். அப்படியான மாற்றங்கள் தான் நோக்கத்தை நிறைவு செய்யும் எம்மைப் பலப்படுத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேரத்தில இது எல்லாம் தேவையா? புலிகள் தமது சகல வளங்களையும் ராணுவ மயப்படுத்த வேண்டிய தருணம் இது.

ஏனென்றால் நாங்கள் புலம்பெயர் நாட்டிலிருந்துகொண்டு சின்னத்திரை பார்த்துமகிழ வேண்டிய தருணரமிது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடம் season இற்கு வரும் விற்பனைப் பொருட்களை அந்த வருடத்தை season குறித்து தானே அழைக்க முடியும் :wub:

ஒவ்வொரு ஆண்டும் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளிற்கான விளம்பரங்கள் தயாரிக்கப்படும் பொருட்களின் விளம்பரங்களை காட்டி மோசடி செய்ய வேண்டாம். :unsure:

இங்கு கேள்வி ஒரு குறிப்பிட்ட பண்டிகை தொடர்பாக "...வாழ்த்து" என்று சொல்லப்படும் வசனத்தில் ஆண்டிலக்கம் வருவது பற்றியது.

நல்லது தற்போதைக்கு ஒரு வாதத்திற்கு பொங்கலை புத்தாண்டாக ஏற்றுக் கொள்ளுங்கோ. மிச்சம் பிறகு படிப்படியாக வரும்.

சமூகத்தில் சந்ததி சந்ததியாக புரையோடியுள்ள மத மூட நம்பிக்கைகள், முரண்பாடுகள், திணிப்புகளை, திரிப்புகளை புரட்சிகரமாக திடீர் என்று மாற்ற முடியாது. ஏற்றுக்கொள்ளக் கூடிய வேகத்தில் படிப்படியாக மாற்றங்கள் வரும். அப்படியான மாற்றங்கள் தான் நோக்கத்தை நிறைவு செய்யும் எம்மைப் பலப்படுத்தும்.

இந்தப் பொங்கலும் 2008 சீசனுக்குரியது என்பதாலதான் பொங்கல் வாழ்த்து 2008 என்று போட்டார்களே தவிர அவர்கள் அதனை வேறு தகவல் சேர்க்க இடவில்லை என்பது தெளிவு.

அப்படிப் போடுவதென்றால்.. பொங்கல் வாழ்த்து 2008 அண்ட் தமிழ் நியு இயர் வாழ்த்து என்று போட்டிருப்பர்..! அவர்கள் ஒன்றும் கேணயர்கள் இல்லையே ஏரோபிளேன் ஓட்ட..! :lol::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்துக்கும், யாழ்களத்துக்கும் தொடர்பு தெரியாமே..... அந்தச் செய்தி ஏன் இணைச்சவை என்று தெரியாம.... சண்டை வேணுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கரையும் குறுக்கரையும் இனிமேல் வேறைவேறை பட்டியிலைதான் அடைச்சு விடோணும் போலை கிடக்கு :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கரையும் குறுக்கரையும் இனிமேல் வேறைவேறை பட்டியிலைதான் அடைச்சு விடோணும் போலை கிடக்கு :unsure:

ஒண்டு குறுக்காலயும் இன்னொண்டு நெடுக்காலயும் போனால்தானே ஒரு சமநிலை இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.