Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில இப்ப என்ன நடந்துகொண்டு இருக்கிது எண்டு உங்களுக்கு தெரியுமோ?

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

நான் அண்மையில ஒரு புத்தகம் படிச்சன். இதிண்ட பெயர் "மைக்கிரோ டிரண்ட்ஸ் - த சிமோல் போர்சஸ் பிகைண்ட் டுமோரோஸ் பிக் சேன்ஜஸ்" எண்ட ஒரு அருமையான புத்தகம். இத எழுதினவரிண்ட பெயர் மார்க் ஜே பென். இவர் அமெரிக்காவில இருக்கிற ஒரு பிரபலமான தலை. இப்ப ஜனாதிபதி தேர்தலில போட்டிபோடுற ஹிலாரி கிலிங்டனுக்கு ஆலோசகரா இருக்கிறார். இதவிட இருபத்துஐஞ்சு உலகத்தலைவர்களுக்கும், இன்னும் ஐநூறு கம்பனிகளுக்கும் கூட ஆலோசகரா இருக்கிறார்.

போனவருசம் வெளிவந்த இந்தப் புத்தகத்தில ஏராளமான பல சுவையானதும், பயனுள்ளதுமான தகவல்கள் இருக்கிது. உங்களுக்காக நான் வாசிச்சத இஞ்ச சிறிய அளவில தமிழில தொகுத்து தாறன். விருப்பமான ஆக்கள் வசதி இருந்தால் ஒரிஜினல வாசிச்சு பாருங்கோ. (ஐ.எஸ்.பி.என்-13: 978-0-446-58096-6, ஐ.எஸ்.பி.என்-10: 0-446-58096-1)

புத்தகதிண்ட சாரம்சம் என்ன எண்டால் சின்னச் சின்ன விசயங்கள் ஒண்டு சேந்து பெரிய, பெரிய பாதிப்புகள உருவாக்கும் என்பது! அதாவது எங்கட பாசையில சொன்னா கடுகு சிறிது எண்டாலும் காரம் பெரிது, இல்லாட்டி அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு... இப்பிடி ஏதும் சொல்லலாம்.

இந்தப்புத்தகம் அமெரிக்கவ பற்றி முக்கியமாக கதைச்சாலும், உலகத்தில வாழுற எல்லாருமே தெரிஞ்சு இருக்கவேண்டிய பலவிசயங்கள் இதில சொல்லப்பட்டு இருக்கிது. நானூற்று இருபத்துஅஞ்சு பக்கங்கள் கொண்ட இந்த நூலில இருக்கிற பதினைஞ்சு தலைப்புகளில எனக்கு பிடிச்சமானது அல்லது முக்கியமானது எண்டு நான் நினைக்கிற விசயங்கள மட்டும் உங்களுக்கு சுருக்கமா சொல்லிறன்.

புத்தகத்தில கூறப்படுற விசயங்கள் சும்மா எழுந்தமானமான அபிப்பிராயங்கள் இல்ல. புள்ளிவிபரங்களோட நிரூபிக்கப்பட்டுள்ள, மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் விபரிக்கப்படுகின்ற தகவல்கள்.

1. காதல், செக்ஸ், உறவுகள்:

* உங்களுக்கு தெரியுமோ? அமெரிக்காவில இருக்கிற பெண்களுக்கு காதல் செய்ய, கலியாணம் செய்ய ஆண்கள் போதாதாம். அதாவது விகிதாசாரம் பெண்கள் ஆண்கள விட எக்கச்சக்கமா இருக்கிது. ஒரு சமூகத்தில இருக்கிற பல ஆம்பளைகள் கலியாணம் கட்டாம இருந்தா அங்கு ஏதாவது போர் உருவாக வாய்ப்பு இருக்கிதாம். அப்பிடி இல்லாமல் நிலமை மாறி ஒரு சமூகத்தில இருக்கிற பெண்கள் கலியாணம்

கட்டாம, காதல் செய்யாமல் இருந்தா என்ன நடக்கும்? எதிர்கால அமெரிக்கா இதுக்கு பதில் சொல்லும்.

* எங்கட சமூகத்தில ஆண்களாகிய நாங்கள் வயசு குறைஞ்ச பெண்களையே விரும்புவம். காதல் அல்லது கலியாணம் செய்வம். ஆனா அமெரிக்காவில மாறி நடக்கிது. ஆண்கள் தங்களவிட வயசுகூடின பெண்கள விரும்புறீனம் அல்லது கலியாணம் கட்டுறீனம். இதுமாதிரி பெண்கள் வயசு குறைஞ்ச ஆண்களோட உறவு வச்சு இருக்கிறீனம். வயசு குறைஞ்ச ஆண்கள காதல் செய்யுறீனம். கலியாணம் கட்டுறீனம்.

* வேல செய்யுற இடத்தில சில்மிசம் கூடாது. வேல செய்யுற இடத்தில காதல்செய்தா வேலையாலையே நிப்பாட்டி போடுவாங்கள். ஆனா அமெரிக்காவில வேல செய்யுற இடத்தில ஆண்களும், பெண்களுமா கண்டபடி டா அடிச்சுக்கொண்டு இருக்கிறாங்களாம். வேலைத்தளத்தில நிறைய புதுமணதம்பதிகள் உருவாகிக்கொண்டு இருக்கிதாம்.

* புருசன், பெண்சாதி வேலை காரணமா வேற வேற இடங்களில பிரிஞ்சு இருக்கிறது அல்லது பிரயாணம் செய்யுறது பல்வேறு பிரச்சனைகள உருவாக்கிது. இதேமாதிரியே வேற, வேற இடங்களில இருக்கிற ஆக்கள் புதிய பந்தங்களில இணைஞ்சு கொள்ளுறீனம். இண்டர்நெட்டுக்கால திருமணம் செய்பவர்களிண்ட எண்ணிக்கை அமெரிக்காவில அதிகரிச்சு வருகிது.

2. வேலை - வாழ்க்கை:

* வீட்டில இருந்து வேல செய்யுற ஆக்களிண்ட எண்ணிகை அதிகரிச்சு வருகிது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமா வீட்டில இருந்தே அமெரிக்கர் எல்லா பிஸ்னசுகளையும் செய்யக்கூடியதா இருக்கிது. வீட்டில இருந்து வேல செய்யுற ஆக்கள் நல்லா பணம் சம்பாதிச்சு வருகிறீனம்.

* பெண்கள் ஆண்கள விட நல்லா கதைப்பீனமாம். இதால கதைக்கிறது, வாய்ப்பேச்சு சம்மந்தமான வேலைகள பெண்களே அமெரிக்காவில அதிகமா செய்துவருகிறீனமாம். இவையள வாய்ப்பேச்சுக்காரிகள் எண்டு ஆசிரியர் சொல்லிறார்.

3. இனம் - மதம்:

* வெவ்வேறு இனங்கள சேந்த ஆக்கள திருமணம் செய்யுற அமெரிக்கர்களிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிது. இன்று சுமார் மூன்று மில்லியன் அமெரிக்க திருமணங்கள் இப்படி இனம்விட்டு இனம் பாய்ந்த கலப்பு திருமணங்களாக இருக்கிது. 83% அமெரிக்கர்கள் கலப்பு திருமணத்தை ஆதரிக்கின்றார்கள். இப்படி கலப்பு திருமணம் செய்யும் அமெரிக்கஆண்கள் ஆசியநாடுகளில் வாழும் பெண்களை அதிகளவில் விரும்பி திருமணம் செய்கின்றார்கள். ஆனா கலப்பு திருமணம் செய்யும் அமெரிக்க பெண்கள் கறுப்பு இனத்தை சேர்ந்த ஆண்களை அதிகளவில் விரும்பி திருமணம் செய்கின்றார்கள்.

4. உடல் ஆரோக்கியம் - சுகவாழ்வு:

* தங்களுக்கு தாங்களே வைத்தியம் பார்க்கிற ஆக்களிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிது. இண்டர்நெட்டுக்கால பலவித மருத்துவ தகவல்கள இலகுவாக பெறக்கூடியதாக இருக்கிறது இப்பிடி தங்களுக்கு தாங்களே டாக்டரா இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமா இருக்கிதாம். வசதி இருக்கிற ஆக்கள் ரீவி,றேடியோ வாங்கிறமாதிரி வைத்தியசாலையில் இருக்கின்ற விலை உயர்ந்த பெரிய, பெரிய மருத்துவ உபகரணங்கள வாங்கி வீட்டில வச்சு, வீட்டில இருந்தே டாக்டர்மாதிரி தங்கட உடம்ப கவனிச்சு வருகின்றார்கள். டாக்டர்களில இருக்கிற நம்பிக்கையீனம், மற்றது அளவுக்கு மிஞ்சிய மருத்துவ செலவுகளும் இப்பிடி ஆக்கள் தங்களுக்கு தாங்களே வைத்தியம் பார்க்க காரணமா இருக்கிதாம்.

5. குடும்ப வாழ்க்கை:

* நாய், பூனை இப்படி செல்லப்பிராணிகளை வளர்க்கும் பெற்றோரிண்ட எண்ணிக்கை அமெரிக்காவில அதிகரிச்சு வருகிது. அமெரிக்க குடும்பங்களில 63% ஆக்கள் ஏதாவது செல்லப்பிராணிகள வீட்டில வளர்க்கிறீனம். செல்லப்பிராணிகளும் குழந்தைகள் மாதிரி அன்பைத் தரக்கூடியவை. இதால செல்லப்பிராணிகள் பிள்ளைகள் இல்லாத வீடுகளில முக்கியத்துவம் பெற்று வருகிது. 2006ம் ஆண்டு அமெரிக்காவில சுமார் ஒன்பது பில்லியன் அமெரிக்கன் டாலருகள் செல்லப்பிராணிகளின் மருத்துவதேவைகளிற்காக செலவளிக்கப்பட்டது. மனிதர்களுக்கு சுகபோக வாழ்க்கை இருக்கிறமாதிரி செல்லப்பிராணிகளிற்கும் சுகபோக வாழ்க்கையை அமெரிக்காவில பெறக்கூடியதாக இருக்கிது. அடுத்த பிறப்பில யாராவது நாய். பூனையா பிறக்கிறதா இருந்தா அமெரிக்காவில போய் பிறவுங்கோ.

6. அரசியல்:

* விபரமான வாக்களர்களிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிது. அதாவது அமெரிக்காவில வாக்களிப்பவர்கள் அ தொடக்கம் ஃ மட்டும் ஓட்டு கேப்பவரபற்றி எல்லாம் அறிஞ்சு இருக்கிறாங்கள். நீங்கள் அமெரிக்க ஜனாதிபதிய தெரிவு செய்யேக்க பின்வரும் எந்த எந்த விசயங்கள் முக்கியமானவை எண்டு கேட்டபோது பின்வருமாறு பதில் வந்தது:

பிரச்சனைகள்: 48% [வாக்களிச்ச மொத்த ஆக்களில படிச்சு டிகிரி வாங்கின 48% பேர் இதுக்கு வாக்களிச்சு இருக்கிறீனம்]

கரெக்டர்: 32% [வாக்களிச்ச மொத்த ஆக்களில படிச்சு டிகிரி வாங்கின 35% பேர் இதுக்கு வாக்களிச்சு இருக்கிறீனம்]

அனுபவம் - 19% [வாக்களிச்ச மொத்த ஆக்களில படிச்சு டிகிரி வாங்கின 15% பேர் இதுக்கு வாக்களிச்சு இருக்கிறீனம்]

தெரியாது - 1% [வாக்களிச்ச மொத்த ஆக்களில படிச்சு டிகிரி வாங்கின 2% பேர் இதுக்கு வாக்களிச்சு இருக்கிறீனம்]

7. டீன் ஏஜர்ஸ்:

* குழந்தை தொழில் அதிபர்கள் - அதாவது சிறுவர்களாக இருக்கும்போதே பெரிய நிறுவனங்களை தொடங்கி பணம் சம்பாதிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிச்சு வருகிது. இந்தக்கால சிறுவர்களிற்கு எல்லா செப்படி வித்தைகளும் பெரியவர்களைவிட நன்றாக தெரிஞ்சு இருக்கின்றது. எங்கபோனா எத மலிவா வாங்கலாம் எண்டு பெரிய ஆக்களவிட சின்ன ஆக்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கிது. இதால சிறுவர்கள் பெரிய, பெரிய பிஸ்னஸ்களில ஈடுபடுகின்றார்கள். நல்லா காசு சம்பாதிக்கின்றார்கள்.

8. உணவு, குடிபானம், உணவுப்பழக்கம்:

* தாவரபோசண உணவை விரும்பி உண்கின்ற சிறுவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில அதிகரிச்சு வருகிது. மீன், புலால் உணவுகளை வெறுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சு வருகிது. அம்பது வருசத்துக்கு முன்னம் தாவரபோசண உணவுகள உண்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடியதாய் இருந்திச்சுதாம். ஆனா இப்ப எட்டு வயதுக்கும் பதினெட்டு வயதுக்கும் இடைப்பட்ட 1.5 மில்லியன் சிறுவர்கள் தாவரபோசணிகளா இருக்கிறீனமாம்.

9. வாழ்க்கை முறை:

* உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ? 2004ம் ஆண்டு உலக ஒலிம்பிக் கமிட்டி ஒரு புதிய சட்டவிதி கொண்டுவந்தது. அது என்னவெண்டா பிறப்பால ஆணாக அல்லது பெண்ணாக இருந்துவிட்டு பின் பெண்ணாக அல்லது ஆணாக பால் மாறுபவர்கள் தாங்கள் பாலியல் மாற்ற சத்திரசிகிச்சை செய்து இரண்டு வருடங்களின் பின் தமது புதிய பாலில் ஒலிம்பிக்போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்று!

அமெரிக்காவில பால் மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சு வருகிது. மேலும், பால் மாற்றம் சம்மந்தமா வேலை செய்யும் இடங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிது. அமெரிக்காவில ஆணா, பெண்ணா எண்டு பார்க்கும் மனநிலைய விட ஆளுக்கு மண்டையுக்க என்ன இருக்கிது? இவர எப்படி நமக்கு பிரயோசனப்படுத்தலாம், காசு சம்பாதிக்கலாம் எண்டு இப்படி வித்தியாசமான பாணியில் ஆக்களை அணுகும்தன்மை அதிகரிச்சு வருகிது. ஒருவரின் பாலைப்பற்றி அலட்டிக்கொளும் தன்மை குறைஞ்சு வருகிது. உங்களுக்கும் யாருக்கும் பால்மாற்றம் செய்து வாழவிருப்பமாய் இருந்தால் அமெரிக்காவில போய் நிம்மதியா இருக்கலாம்.

10. காசு, வகுப்பு:

* நிறைய காசு இருந்தால், நீங்கள் ஒரு மில்லியனராய் இருந்தால் என்ன செய்வீங்கள்? ஊருக்கு கட்டாயம் படம் காட்டுவீங்கள்தானே? நான் எண்டால் கட்டாயம் படம் காட்டுவன். ஆனா, அமெரிக்காவில என்ன நடக்கிது எண்டால் காசவச்சுக்கொண்டு வெக்கப்பட்டு ஒளிஞ்சு வாழுற மில்லியனர்களிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிதாம். இவர்கள் காசு இருந்தும், மிகவும் பணிவுடனும், வெக்கத்துடனும், ஏதோ ஒண்டும் இல்லாதவர்கள் மாதிரி வாழுறீனமாம். அப்ப நாங்கள் இவேளையும் ஞானிகள் எண்டு சொல்லலாமோ?

11. தோற்றம், பசன்:

* பொதுவா ஒருவருக்குமே சேர்ஜரி - சத்திரசிகிச்சை செய்யுறதுக்கு விருப்பம் இருக்காது. நான் இதுவரை ஆறு சத்திரசிகிச்சைகளை எண்ட வாழ்க்கையில கண்டுவிட்டன். இன்னும் ரெண்டு மிச்சம் இருக்கிது. இது ஒரு துன்பியல் அனுபவம். ஆனா அமெரிக்காவில என்ன நடக்கிது எண்டால் பாருங்கோ சத்திரசிகிச்சைய விரும்புற ஆக்களிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிதாம். என்ன சத்திரசிகிச்சை எண்டு கேக்கிறீங்களோ? உடலை அழகுபடுத்துற பிளாஸ்ரிக் சேர்ஜரிகள்தான் அவை!

12. தொழில்நுட்பம்:

* உங்களில எல்லாருக்கும் இண்டர்நெட் பாவிக்க விருப்பம்தானோ? அமெரிக்காவில என்ன நடக்கிது எண்டால் இண்டர்நெட்டை வெறுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சு வருகிதாம். 2003ம் ஆண்டு அமெரிக்காவில பதினைஞ்சு மில்லியன் சனம் இண்டர்நெட் பாவிக்கிறத நிப்பாட்டிப் போட்டுதுகள். அமைதியான, ஆடம்பரம் இல்லாத, விலைகுறைவான வாழ்க்கைய தேடிப்போற அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிச்சு வருகிதாம்.

13. பொழுதுபோக்கு:

* வீடியோ கேம் விளையாடுற ஆக்களிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிதாம். வீடியோகேம் விளையாடுது குழந்தைகள் எண்டு நீங்கள் நினைக்ககூடாது. அமெரிக்காவில வீடியோகேம் விளையாடுற ஆளிண்ட சராசரி வயசு முப்பத்துமூண்டாம்! வீடியோகேம் விளையாடுற மொத்த சனத்தொகையில கால்வாசி பேருக்கு வயசு அம்பதுக்கு கூடவாம்!

14. கல்வி:

* அமெரிக்காவில மத் - கணிதத்த விரும்பி படிக்கிற ஆக்களிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிதாம். 2006ம் ஆண்டு அமெரிக்காவில அதிக சம்பளம் உழைச்ச ஆக்களில முதலாவதா வாற ஆக்கள் யூனிவர்சிட்டியில கணிதபாடத்த பிரதான பாடமா - மேஜரா படிச்ச ஆக்களாம்.

15. சர்வதேசம்:

* இந்தியாவில பெண்களிண்ட எண்ணிக்கையும், செல்வாக்கும் அதிகரிச்சு வருகிதாம். இது இந்தியாவிலையும், உலகத்திலயும் மிகப்பெரிய பாதிப்புக்கள ஏற்படுத்துமாம்.

* கல்விகற்ற பயங்கரவாதிகளிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிதாம். இதுமிகவும் ஆபத்தானதாம். இதில பயங்கரவாத அமைப்புக்கள் எண்டு சொல்லிற சில நிறுவனங்களிண்ட விபரமும் சுருக்கமா சொல்லப்பட்டு இருக்கிது.

அல்குவைடா - 45 நாடுகளில இயங்கிது - 50,000 உறுப்பினர்கள் இருக்கிறீனம்

ஏ.யூ.சி - கொலம்பியாவில இயங்கிது - 20,000 உறுப்பினர்கள் இருக்கிறீனம்

புதிய மக்கள் இராணுவம் - பிலிப்பைன்ஸில இயங்கிது - 16,000 உறுப்பினர்கள்

எவ்.ஏ.ஆர்.சி - கொலம்பியாவில இயங்கிது - 12,000 உறுப்பினர்கள்

எல்.டீ.டீ.ஈ - சிறீ லங்காவில இயங்கிது - 8,000 உறுப்பினர்கள்

ஈ.எல்.என் - கொலம்பியாவில இயங்கிது - 3,000 உறுப்பினர்கள்

Aum Shinrikyo/ Aleph - ஜப்பானையும் சேத்து ஏழு நாடுகளில இயங்கிது - 2,000 உறுப்பினர்கள்

ஹமாஸ் - இஸ்ரேல், வெஸ்ட்பாங்க்/ காசாவில இயங்கிது - 1,000 உறுப்பினர்கள்

ஹிஸ்புல்லா - லெபனானில இயங்கிது - 1,000 பேர்

பி.கே.கே - துருக்கியில இருக்கிது - 1,000 பேர்

டீ.எச்.கே.பி/சீ - துருக்கியில இருக்கிது - 1,000 பேர்

பலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் - இஸ்ரேல், லெபனான், சிரியா, வெஸ்ட்பாங்க்/ காசாவில செயற்படுகிது - 1,000 பேர்

இதவிட இன்னும் ஒன்பது தீவிரவாத அமைப்புக்களிண்ட விபரமும் கொடுக்கப்பட்டு இருக்கிது. உலக சனத்தொகையில 0.002% பேர் அதாவது 125,000 தீவிரவாதிகள் இருக்கிறீனமாம். இவர் சொல்லிற கணக்கு எங்கையோ சறுக்கிற மாதிரி இருக்கிது. புலிகள் இயக்கத்தில ஆக 8,000 பேரோ இருக்கிறீனம்? இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள பற்றி முக்கியமா அல்குவைடாவ பற்றித்தான் நிறைய சொல்லப்பட்டு இருக்கிது. புலிபற்றி வேற ஒண்டும் எழுத இல்ல.

* அமெரிக்காவில ஒரு குடும்பத்தில இருக்கிற பிள்ளைகளிண்ட எண்ணிக்கைய விட ஐரோப்பிய நாடுகளில குடும்பங்களில இருக்கிற பிள்ளைகளிண்ட எண்ணிக்கை குறைவா இருக்கிதாம். முக்கியமா இப்ப பல ஐரோப்பிய நாட்டு குடும்பங்களில பிள்ளைகளிண்ட எண்ணிக்கை ஒண்டு இல்லாட்டி ரெண்டாகத்தான் இருக்கிதாம். இதனால பெற்றோரின் கூடுதலான கவனிப்புடன் வளரும் இந்த பலசாலிகளான குழந்தைகள் எதிர்காலத்தில புதுமைகள் பல செய்து பிரகாசிச்சு மின்னுவார்களாம். ஐரோப்பாவின் பல சவால்களை குடும்பங்களில ஒற்றைக்குழந்தைகளாக வளரும் எதிர்கால சந்ததி அந்தமாதிரி முகம்கொடுத்து அவற்றில் வெற்றிகள் பெறுமாம்.

* உலகத்தில மொத்தம் 10,000 வித்தியாசமான, தனித்துவமான மதங்கள் இருக்கிதாம். ஒவ்வொரு நாளும் புதுசு, புதுசா மதங்கள் தோன்றிக்கொண்டு இருக்கிதாம். அதாவது சிறிய, சிறிய குழுக்களாக இப்ப புதிய, புதிய மதங்களை ஆக்கள் பின்பற்றி வருகின்றார்களாம். பெரிய மதங்களில கும்பலில கோவிந்தா எண்டு ஆடு, மாடு மாதிரி இல்லாமல் சிறிய, சிறிய குழுக்களாக இருக்கும் மதங்களில் இருப்பவர்கள் மற்றவர்கள விட சந்தோசமா இருக்கிறீனமாம்.

வேறென்ன? இன்னும் எவ்வளவோ எவ்வளவோ விசயங்கள பற்றி ஏராளம் எழுதி இருக்கிறார். எனக்கு கைநோகிது. இவ்வளத்தோட நிப்பாட்டுறன். நான் இதில எழுதி இருக்கிறதுகள வாசிக்கிறதோட மட்டும் நிக்காமல் இதுகள பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எண்டும் சொல்லுங்கோ.

நன்றி! வணக்கம்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் கலைஞன்

மிகவும் கஸ்ரப்பட்டு தொகுத்து வாசித்த விசயங்களை வாசகர்களுக்குத் தந்திருக்கிறியள். பாராட்டுக்கள். நானும் எல்லாத்தையும் வாசிக்கயில்ல. மேலோட்டமாத்தான் போன நான் எனக்கும்கண் நோகுது. நேரமிருந்தால் விட்டதுகளை திரும்பவும் ஒருக்கா வாசிக்கலாமெண்டிருக்கிறன். ஒரேயொரு விசயம். பேச்சுத் தமிழில எழுதவேணுமெண்டு கஸ்ரப்படாமல் இப்பிடியான தகவல்களை சாதாரண கட்டுரைத்; தமிழில தந்தால் வாசிக்கிறது இன்னும் சுலபமாயிருக்கும் எண்டிறது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா எந்தெந்த சிறிய நாடுகளை, இனங்களை உருப்படவிடாமல் கபளீகரம் செய்துகொன்டிருக்கிறது என்று ஏதாவது கணக்கு வழக்குகள் உண்டா?

ஜெனரல்!!

அட..அட..அட நல்ல புத்தகமாக இருக்கிறதே பல விசயங்களை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி :lol: ...புத்தகத்தில் உள்ள விசயங்களை தொகுத்து கூறிய விதம் நன்றாக இருக்கிறது அக்சுவலா கட்டுரையா இருந்தா நான் வாசிக்கவே மாட்டேன் ஏனென்றா செம போரா இருக்கும் இப்படி இருந்தா தான் வாசிப்பேன் பிகோஸ் நமக்கு பொறுமை இல்லை..:D (நம்மளை மாதிரி பல பேர் இருக்கீனம் சோ நான் வொறி பண்ணுறதில்லை இதற்கு எல்லாம் :lol: ) சரி இப்ப விசயதிற்கு வாரேன்!!

ஓ..ஓ அமெரிக்க ஆண்கள் வந்து வயது கூடிய பெண்களை தான் காதலிக்கும் அளவு கூடவா...நல்ல விசயம் தான் ஆனா உதில எத்தனை பேர் திருமணம் செய்து விவாகரத்து பெறாம இருக்கீனம் என்று அந்த புத்தகத்தில போடவில்லையோ....ஏனேன்றா எனக்கு டவுட்டா இருக்கு!! :mellow:

பிறகு நானும் யோசிக்கிறனான் தான் பேசாம நாய்,பூனையா அவுஸ்ரெலியாவில பிறந்திருக்கலாம் என்று அமோக மரியாதை அங்கையும் அப்படியா...சா அடுத்த ஜென்மத்திலையாவது அங்கே போய் நாயா பிறந்திடவேண்டும் (கடவுளே என்று அமெரிக்காவில இருக்கிற தமிழ் வீட்டில நாயா போயிட கூடாது :huh: )...

டீன் ஏர்ஜ் பற்றி குறிபிட்டு இருந்தீர்கள் அதனுடன் நானும் ஒத்து போகின்றேன் ஏனென்றா சிறுவயதிலே இருந்து சிறுவர்களிற்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கோ அதே துறையில் அவர்களை ஊக்குவிப்பதால் (மேற்கத்தைய நாடுகள் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் அப்படி தான் :lol: )...அவர்களினால் சிறு வயதிலேயே நல்லா உழைக்கிறார்கள்....நாட்டிலே பார்த்தீங்க என்றா டாடி ஒரு துறையில படிக்க சொல்ல மம்மி ஒரு துறையில படிக்க சொல்ல...வீட்டில இருக்கிற பெரிசு என்னொரு துறையில படிக்க சொல்ல அப்படியே அதிலேயே காலம் போயிடும்!! :(

அட கொஞ்ச காசு இருந்தாலே ஊருக்கு ரவுசு காட்டுற நம்ம ஆட்கள் மத்தியிலே..பல மில்லியன்களிற்கு சொந்தகாரங்களாக இருந்தும் வெளியே காட்டி கொள்ளாம இருக்கிறார்களே உவை ஞானியை விட ஒரு ஸ்டெப் கூட என்றே சொல்லலாம்!! :lol:

எல்லாம் சரி ஜெனரல் கல்தோன்றி,மண் தோன்ற முன்னம் உருவான நம்ம டமிழ்சை பற்றியும் அவையின்ட லாங்வேஜ் பற்றியும் சொல்லாதது சரியான பிழை :D ...நீங்களே பாருங்கோ யாழில எத்தனை பக்கம்...பக்கமா தமிழை வளர்க்கிறார்கள்,தமிழின்ட பெருமையை வளர்க்கிறார்கள் அப்படி இருந்துமா...எனிவே அடுத்த சாப்டரில போடுவீனமோ தெரியவில்லை!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றி.பல சுவையான தகவல்கள் உள்ளது.ஆணால் நீங்ள் குறிப்பிட்டுள்ளீர்கள் எல்லாம் புள்ளி

விபரங்களுடன் ஆதரப்பட்டது என்று.அப்ப இந்த தகவல்களின் அடிப்படையில் தானோ நம்ம மகிந்த கூட்டம்

காலக்கெடுக்கள் விதிக்கினம்.எது எப்படியோ எங்கள் விசயத்தில் உள்ள தகவல் கேள்விக்குறிதான். :mellow:

ஓ.........நிறைய தகவல்கள். The Secret ஐயும் வாசியுங்கோ கலைஞன்.

எல்லாருக்கும் வணக்கம்,

நான் அண்மையில ஒரு புத்தகம் படிச்சன். இதிண்ட பெயர் "மைக்கிரோ டிரண்ட்ஸ் - த சிமோல் போர்சஸ் பிகைண்ட் டுமோரோஸ் பிக் சேன்ஜஸ்" எண்ட ஒரு அருமையான புத்தகம். இத எழுதினவரிண்ட பெயர் மார்க் ஜே பென். இவர் அமெரிக்காவில இருக்கிற ஒரு பிரபலமான தலை. இப்ப ஜனாதிபதி தேர்தலில போட்டிபோடுற ஹிலாரி கிலிங்டனுக்கு ஆலோசகரா இருக்கிறார். இதவிட இருபத்துஐஞ்சு உலகத்தலைவர்களுக்கும், இன்னும் ஐநூறு கம்பனிகளுக்கும் கூட ஆலோசகரா இருக்கிறார்.

. .புத்தகத்தில கூறப்படுற விசயங்கள் சும்மா எழுந்தமானமான அபிப்பிராயங்கள் இல்ல. புள்ளிவிபரங்களோட நிரூபிக்கப்பட்டுள்ள, மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் விபரிக்கப்படுகின்ற தகவல்கள்.

1. காதல், செக்ஸ், உறவுகள்:

* உங்களுக்கு தெரியுமோ? அமெரிக்காவில இருக்கிற பெண்களுக்கு காதல் செய்ய, கலியாணம் செய்ய ஆண்கள் போதாதாம். அதாவது விகிதாசாரம் பெண்கள் ஆண்கள விட எக்கச்சக்கமா இருக்கிது. ஒரு சமூகத்தில இருக்கிற பல ஆம்பளைகள் கலியாணம் கட்டாம இருந்தா அங்கு ஏதாவது போர் உருவாக வாய்ப்பு இருக்கிதாம். அப்பிடி இல்லாமல் நிலமை மாறி ஒரு சமூகத்தில இருக்கிற பெண்கள் கலியாணம்

கட்டாம, காதல் செய்யாமல் இருந்தா என்ன நடக்கும்? எதிர்கால அமெரிக்கா இதுக்கு பதில் சொல்லும்.

* எங்கட சமூகத்தில ஆண்களாகிய நாங்கள் வயசு குறைஞ்ச பெண்களையே விரும்புவம். காதல் அல்லது கலியாணம் செய்வம். ஆனா அமெரிக்காவில மாறி நடக்கிது. ஆண்கள் தங்களவிட வயசுகூடின பெண்கள விரும்புறீனம் அல்லது கலியாணம் கட்டுறீனம். இதுமாதிரி பெண்கள் வயசு குறைஞ்ச ஆண்களோட உறவு வச்சு இருக்கிறீனம். வயசு குறைஞ்ச ஆண்கள காதல் செய்யுறீனம். கலியாணம் கட்டுறீனம்.

* வேல செய்யுற இடத்தில சில்மிசம் கூடாது. வேல செய்யுற இடத்தில காதல்செய்தா வேலையாலையே நிப்பாட்டி போடுவாங்கள். ஆனா அமெரிக்காவில வேல செய்யுற இடத்தில ஆண்களும், பெண்களுமா கண்டபடி டா அடிச்சுக்கொண்டு இருக்கிறாங்களாம். வேலைத்தளத்தில நிறைய புதுமணதம்பதிகள் உருவாகிக்கொண்டு இருக்கிதாம்.

* புருசன், பெண்சாதி வேலை காரணமா வேற வேற இடங்களில பிரிஞ்சு இருக்கிறது அல்லது பிரயாணம் செய்யுறது பல்வேறு பிரச்சனைகள உருவாக்கிது. இதேமாதிரியே வேற, வேற இடங்களில இருக்கிற ஆக்கள் புதிய பந்தங்களில இணைஞ்சு கொள்ளுறீனம். இண்டர்நெட்டுக்கால திருமணம் செய்பவர்களிண்ட எண்ணிக்கை அமெரிக்காவில அதிகரிச்சு வருகிது.

வெவ்வேறு இனங்கள சேந்த ஆக்கள திருமணம் செய்யுற அமெரிக்கர்களிண்ட எண்ணிக்கை அதிகரிச்சு வருகிது. இன்று சுமார் மூன்று மில்லியன் அமெரிக்க திருமணங்கள் இப்படி இனம்விட்டு இனம் பாய்ந்த கலப்பு திருமணங்களாக இருக்கிது. 83% அமெரிக்கர்கள் கலப்பு திருமணத்தை ஆதரிக்கின்றார்கள். இப்படி கலப்பு திருமணம் செய்யும் அமெரிக்கஆண்கள் ஆசியநாடுகளில் வாழும் பெண்களை அதிகளவில் விரும்பி திருமணம் செய்கின்றார்கள். ஆனா கலப்பு திருமணம் செய்யும் அமெரிக்க பெண்கள் கறுப்பு இனத்தை சேர்ந்த ஆண்களை அதிகளவில் விரும்பி திருமணம் செய்கின்றார்கள்.

நன்றி! வணக்கம்!

பேசாமல் அமெரிக்காவில குடியேறிடலாமெண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் அமெரிக்காவில குடியேறிடலாமெண்டு நினைக்கிறன்.

சத்தியமா சொல்லுறேன் இங்கே 40மணித்தியாலம் கிழமைக்கு வேலை செய்யாவிட்டால் கஸ்டம் இறைவா.

ஜரோப்பாவை போல ஒன்றும் இலவசம் இல்லை. ஏதோ அமெரிக்கா கனடா என்று ஒடித்திரியலாம்.

6000 டொலர் எடுத்தால் அரைவாசி டக்ஸ்சுக்கு போகும். மீதி மோட்டெஜ் அப்பிடி இப்படி என்று போக சரி.

மாதக் கடசியில் கிரடிட் காட் தான் தஞ்சம்

  • தொடங்கியவர்

ஒரேயொரு விசயம். பேச்சுத் தமிழில எழுதவேணுமெண்டு கஸ்ரப்படாமல் இப்பிடியான தகவல்களை சாதாரண கட்டுரைத்; தமிழில தந்தால் வாசிக்கிறது இன்னும் சுலபமாயிருக்கும் எண்டிறது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

நன்றி கரு. நீங்கள் சொல்லிறதும் சரிதான். ஆனா நான் பேச்சுத்தமிழில எழுதுறதத்தான் அதிகம் விரும்புறன். கட்டுரை மாதிரி எழுதினா பிறகு மற்றவர்களில இருந்து அந்நியப்பட்டு பிரிஞ்சு போறமாதிரி ஒரு உணர்வு. அதான்.

அமெரிக்கா எந்தெந்த சிறிய நாடுகளை, இனங்களை உருப்படவிடாமல் கபளீகரம் செய்துகொன்டிருக்கிறது என்று ஏதாவது கணக்கு வழக்குகள் உண்டா?

யாருக்கு தெரியும். யாரிட்ட காசு, செல்வாக்கு இருக்கிதோ அவேள் சொல்லிறது மட்டும்தான் இந்தக்காலத்தில எடுபடும்.

ஜெனரல்!!

எல்லாம் சரி ஜெனரல் கல்தோன்றி,மண் தோன்ற முன்னம் உருவான நம்ம டமிழ்சை பற்றியும் அவையின்ட லாங்வேஜ் பற்றியும் சொல்லாதது சரியான பிழை :huh: ...நீங்களே பாருங்கோ யாழில எத்தனை பக்கம்...பக்கமா தமிழை வளர்க்கிறார்கள்,தமிழின்ட பெருமையை வளர்க்கிறார்கள் அப்படி இருந்துமா...எனிவே அடுத்த சாப்டரில போடுவீனமோ தெரியவில்லை!! :o

கவலப்படாதிங்கோ. ஈழப்பிரியன் அண்ணை, இல்லாட்டி நுணாவிலான வாற அமெரிக்க தேர்தலுக்கு களம் இறக்குவம். இதுக்கு பிறகு டமிழ்ஸ் பற்றியும் கதைப்பீனம்.

இனைப்புக்கு நன்றி.பல சுவையான தகவல்கள் உள்ளது.ஆணால் நீங்ள் குறிப்பிட்டுள்ளீர்கள் எல்லாம் புள்ளி

விபரங்களுடன் ஆதரப்பட்டது என்று.அப்ப இந்த தகவல்களின் அடிப்படையில் தானோ நம்ம மகிந்த கூட்டம்

காலக்கெடுக்கள் விதிக்கினம்.எது எப்படியோ எங்கள் விசயத்தில் உள்ள தகவல் கேள்விக்குறிதான். :(

அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய தனது முக்கிய முடிவுகளை எடுக்கிறதுக்கு இப்படியான புத்தகங்கள் முக்கிய செல்வாக்கை செலுத்துது. நீங்கள் சொல்லிறதும் சரியா இருக்கலாம்.

ஓ.........நிறைய தகவல்கள். The Secret ஐயும் வாசியுங்கோ கலைஞன்.

அது யார் எழுதின புத்தகம் சினேகிதி? முடிஞ்சால் ஐ.எஸ்.பி.என்ன தாங்கோ. லைப்பிரரியில இருந்தா வாசிக்கிறன். நன்றி!

பேசாமல் அமெரிக்காவில குடியேறிடலாமெண்டு நினைக்கிறன்.

கையில காசு இருந்தால் குடியேறலாம் இறைவன்.

சத்தியமா சொல்லுறேன் இங்கே 40மணித்தியாலம் கிழமைக்கு வேலை செய்யாவிட்டால் கஸ்டம் இறைவா.

ஜரோப்பாவை போல ஒன்றும் இலவசம் இல்லை. ஏதோ அமெரிக்கா கனடா என்று ஒடித்திரியலாம்.

6000 டொலர் எடுத்தால் அரைவாசி டக்ஸ்சுக்கு போகும். மீதி மோட்டெஜ் அப்பிடி இப்படி என்று போக சரி.

மாதக் கடசியில் கிரடிட் காட் தான் தஞ்சம்

ஐரோப்பாவில ஏதோ இலவசமா கிடைக்கிதா? என்ன கிடைக்கிது இலவசமா? கனடாவில எண்டால் இடியப்பமாவது இலவசமா வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன். புத்தகம் நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்.

கவலப்படாதிங்கோ. ஈழப்பிரியன் அண்ணை, இல்லாட்டி நுணாவிலான வாற அமெரிக்க தேர்தலுக்கு களம் இறக்குவம். இதுக்கு பிறகு டமிழ்ஸ் பற்றியும் கதைப்பீனம்.

உங்கள் ஆசீர்வாதம் தேவை. :lol:

  • தொடங்கியவர்

கட்டாயம், கட்டாயம் இது கூட செய்யாட்டி பிறகு என்ன. ஆனா ஒண்டு அமெரிக்க எலெக்ஷலின நிக்கிறது எண்டால் உங்களுக்கு ஆகக்குறைஞ்சது 35 வயசாவது இருக்கவேணும். உங்கட வயசு ஓகே தானே? இந்த எலெக்ஷன் டூ லேட். வாற எலெக்ஷனுக்கு பூசை போட்டு களத்தில இறக்கிவிடுறம். ஆனா அதுமட்டும் சும்மா குத்துக்கல் மாதிரி இருக்காமல் ஸ்போக்கின் இங்கிலிஷுகள் படிச்சு, மற்றது பிளாஸ்ரிக் சேர்ஜரிகள் செய்து உங்கட பேர்சனாலிட்டிய உசத்திக் கொள்ளுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.