Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொனறாகல தாக்குதலை நடத்தியோரிடம் நவீன ரக தொலைத் தொடர்புக்கருவிகள்: "சண்டே ரைம்ஸ்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொனறாகல தாக்குதலை நடத்தியோரிடம் நவீன ரக தொலைத் தொடர்புக்கருவிகள்: "சண்டே ரைம்ஸ்"

[ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 07:27 மு.ப ஈழம்] [பி.கெளரி]

சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக தொலைத்தொடர்புக் கருவிகளை வைத்திருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள்:

கொழும்பில் இருந்து 238.4 கி.மீ தூரத்தில் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தல பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (15.01.08) இராணுவச் சீருடையுடன் மூன்று பேர் வெலிபரச் சந்தி வீதியை கடந்து செல்வதனை கிராமவாசி ஒருவர் பார்த்தார். அந்த கிராமம் ஒக்கம்பிட்டியாப் பகுதியின் முனையில் உள்ளது. கடந்து சென்றவர்கள் இராணுவத்தினர் என்றே அவர் நம்பினார். ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர் கிராம சேவையாளரை நேரில் சந்தித்து தான் கண்டவற்றினைக் கூறினார்.

அந்த நபர்களை அரை மைல் தொலைவில் இருந்தே தான் கண்டதாக அவர் கிராம சேவையாளரிடம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கிராம சேவையாளர் புத்தல பகுதி காவல்துறை பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு இந்த சம்பவத்தை கொண்டு சென்றார். காவல்துறை அதிகாரி 12 காவல்துறை உறுப்பினர்களுடன் அந்தப் பகுதிக்குச் சென்று கிராமவாசியிடம் விசாரணைகளை நடத்தினார்.

வெல்பர சந்திக்கு கிராமவாசியை அழைத்துச் சென்று திசையை காண்பிக்குமாறும் அவர்கள் கேட்டுள்ளனர். பின்னர் இராணுவத்தினர் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் சென்ற பாதை வழியாக சிறிது தூரம் சென்ற காவல்துறையினர் திரும்பிச் சென்றுவிட்டனர். எனினும் இராணுவத்தினரின் நடமாட்டத்திற்கான எந்தத் தடயங்களும் இருக்கவில்லை.

புதன்கிழமை காலை (16.01.08) காலை 6:45 மணியளவில் ஒக்கம்பிட்டியா மருத்துவமனை சிற்றூழியரான மனல் விஜேசிங்க என்ற பெண் வேலைக்கு உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது இராணுவத்தினர் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை வெலிபர சந்தியில் கண்டார்.

அவர்களில் சிலர் நின்று கொண்டிருந்தனர், சிலர் மரத்தின் பின்னால் மறைந்திருந்தனர், தனது உந்துருளியில் இருந்து இறங்கிய அவர் இராணுவத்தினர் போன்று நின்றவர்களை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தார். அப்போது அவர்களில் ஒருவர் தமக்கு அருகில் வரவேண்டாம் என்று சைகை மூலம் காண்பித்தார். அவர்களின் அணுகுமுறைகள் அவர்கள் ஒரு பதுங்கித் தாக்குதல் சம்பவத்திற்கு காத்திருப்பதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆயுததாரிகளில் ஒருவர் தனது முதுகில் பெரிய தொலைத் தொடர்பு கருவி ஒன்றை வைத்திருந்தார். அதன் அலைவாங்கி (Antenna) மிகவும் நீளமாக இருந்தது. இது அவர்கள் வேறு ஒரு தளத்தில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பதனை உறுதிப்படுத்துகின்றது. அவர்கள் எல்லோரும் தாக்குதல் துப்பாக்கிகளை தாங்கியிருந்தனர்.

வேலைக்குச் சென்ற மனல் விஜேசிங்க, தனது சகாக்களிடம் வெலிபர சந்தியில் ஏதோ ஒரு நடவடிக்கைக்காக இராணுவத்தினர் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவத்தினர் விரைவில் சுற்றிவளைத்து பிடிதிருப்பதாக செய்தி வரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

காலை 7:25 மணியளவில் பேருந்து ஒன்று சில பத்து பயணிகளுடன் வெலிபர சந்தியை கடந்து சென்றது. அதன் பின்னர் ஆயுததாரிகளைக் காண்பதற்காக சில கிராமவாசிகள் வெலிபரச் சந்தியை நோக்கிச் சென்றனர். ஆனால் அவர்களைக் கலைந்து செல்லுமாறு ஆயுததாரிகள் சைகை காட்டினர். எனவே இராணுவத்தினர் தாக்குதல் ஒன்றுக்காக பதுங்கியிருப்பதாகவே அவர்கள் நம்பியிருந்தனர்.

7:35 மணியளவில் தரித்து நின்ற பேருந்து வெலிபர சந்தியை அண்மித்தது, அப்போது கிளைமோர் வெடித்தது. பேருந்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்களின் மீது மறைந்திருந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். அதன் பின்னர் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்த ஆயுததாரிகள் கடுமையான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதுடன், ஒருவர் முன்வாசல் வழியாக பேருந்துக்குள் ஏறி அதில் இருந்தவர்கள் மீதும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளார்.

கிளைமோர்த் தாக்குதலில் 10 பயணிகளே காயமடைந்திருந்தனர். ஆனால் சம்பவத்தில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 51 பேர் காயமடைந்துள்ளனர். பின்னர் முற்பகல் 11:00 மணியளவில் அவர்கள் அங்கிருந்து பயிர்ச்செய்கைப் பகுதிக்கு சென்றனர். அங்கு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 விவசாயிகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

முற்பகல் 9:55 மணியளவில் இந்த செய்தி இராணுவத்தினரின் சிறப்பு அணியினரின் பயிற்சிப் பாசறையான கல்கே பகுதியை எட்டியது. அது கதிர்காமத்திற்கும் புத்தல பகுதிக்கும் இடையில் உள்ளது. தளத்தில் இருந்த அதிகாரி, மூன்று படையினருடன் அருகில் இருக்கும் இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரை எச்சரிக்கும் நோக்குடன் "யுனிக்கோன்" கவச வாகனத்தில் சென்றார். அப்போது மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று வெடித்ததினால் அதில் சென்ற மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர். அவர்கள் அம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் அந்த கிளைமோரும் பயணிகள் பேருந்து ஒன்றை குறிவைத்தே வைக்கப்பட்டிருந்தாக சந்தேகிக்கப்படுகின்றது. அந்த கிளைமோரின் சில குண்டுகள் கவச வாகனத்தின் இரும்புத் தகட்டை ஊடறுத்துச் சென்று மற்றைய தகட்டின் ஊடாக வெளிவந்திருந்தது.

எனவே அதிக தடிப்புக்கொண்ட தகடுகள் பொருத்தப்பட்ட பேருந்துகளே தாக்குதலில் இருந்து பயணிகளை பாதுகாக்கக்கூடியது என்பது தெளிவானது. ஆனால் அவ்வாறு பேருந்துகள் வடிவமைக்கப்பட்டால் அவை மெதுவாக நகர்வதுடன், அதிக எரிபொருட்களும் தேவை.

புதன்கிழமை மாலை வெலிபர சந்திக்கு அண்மையான காட்டுப் பகுதிக்குள் கொமோண்டோப் படையணி தேடுதலை ஆரம்பித்தது. பின்னர் ஆயுததாரிகளுடன் நடைபெற்ற மோதலில் கொமோண்டோப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாக செய்தி பரவியிருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

கொமாண்டோப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் பொறித் துப்பாக்கியில் தவறுதலாக காலை வைத்த போது அது வெடித்ததனால் அவர் காயமடைந்துள்ளார். ஆனால் ஆயுததாரிகள் அந்தப் பகுதியில் இருந்து சென்றுவிட்டனர். அதன் பின்னர் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது.

அதனுடன் அந்த சம்பவங்கள் முடிவுக்கு வரவில்லை. அதற்கு மறுநாள் வியாழக்கிழமை ஆயுதததாரிகள் அருகில் உள்ள இரு கிராமங்களான கலவெலிகம, ஹம்பேகமுவ பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் மொனறாகல மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் காணப்பட்டனர். அங்கு இரு கிராம சேவையாளர் உள்ளிட்ட 10 பேரை சுட்டுக்கொன்றனர். அதாவது கடந்த இரண்டு நாளில் தெற்கின் ஆழமானப் பகுதியில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மொனறாகல மாவட்டத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக உதவி காவல்துறை ஆணையாளரை நியமிப்பதற்கு அரசு சிந்தித்து வருகின்றது. முன்னாள் சிறப்பு அதிரடிப்படை உதவி காவல்துறை ஆணையாளரான கே.எம்.சரத்சந்திரா நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்ரோபர் மாதம் விடுதலைப் புலிகள் யாலப் பகுதியில் இருந்த படை நிலையை தாக்கியதன் பின்னர் இந்தப் பகுதியின் பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வாரம் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளது.

அதாவது காவல்துறையினர், ஊர்காவல் படையினர் ஆகியோரை நியமிப்பதுடன், கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. பின்னர் அவர்களை ஊர்காவல் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் அரசின் திட்டமாகும். இந்த திட்டங்கள் பல கிராமங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஆனால் அதற்கான வளங்கள் போதாது.

இதுவே ஆழமான தென்னிலங்கையில் தாக்குதலை நடத்தும் விடுதலைப் புலிகளின் உத்திகளின் நோக்கம். இதற்கு அப்பால் தம்மால் ஆழமான தென்னிலங்கையில் தாக்குதல் நடத்தும் வலிமை உண்டு எனவும் அவர்கள் காட்டியுள்ளனர். சில காரணங்களுக்காக கொழும்பு நகரம் உள்ளிட்ட இது பல பகுதிகளுக்கும் பரவலாம்.

எனவே கொழும்பின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பின் பாதுகாப்பிற்கான இணைப்பு அதிகாரியாக சிறப்பு அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியான நிமால் லெவ்கேயை காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேரா நியமித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள் அரசிற்கு பெரும் செலவீனங்களை எற்படுத்தியுள்ளது. அதாவது காவல்துறை, ஊர்காவல் படையினரை பெருமளவில் சேர்ப்பதுடன், பொதுமக்களுக்கும் பெருமளவு ஆயுதங்களை வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. எனவே தான் கிராமவாசிகளுக்கு சொட்கண் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

எரிபொருள் மற்றும் உணவு விலைகள் உயர்ந்து செல்கையில் போர்ச் செலவும் வேகமாக அதிகரித்து செல்வது குறிப்பிடத்தக்கது. இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை. எனவே முன்னைய ஈழப்போர்களை விட நான்காம் ஈழப்போர் மிகவும் நெருக்கடி மிக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

puthinam.com

சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக தொலைத்தொடர்புக் கருவிகளை வைத்திருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

என்னடாப்பா வழமையாக கை கால் எல்லாம் வைச்சு பூச்சுத்திற இக்பால் அத்தாஸே எழுதியிருக்கிறார வைத்தியசாலை ஊழியர் அவதானித்தது சீருடையில் நின்ற ஒருவர் நீண்ட அலைஉணரி கொண்ட முதுகில் காவும்தொலைத்தொடர்பு கருவியுடன் நின்றிருந்தார் எண்டு மட்டும் தான். எங்கடையள் அதை நவீன தொலைத் தொடர்புக்கருவி ஆக்கி தலையங்கமுமாக்கிப்போட்டுதுக

  • கருத்துக்கள உறவுகள்
:lol: இக்பால் அத்தாசின் கதையைப் பார்த்தால் ஏதோ தானே முன்னால நிண்டு பாத்தமாதிரியெல்லொ கிடக்கு. ஆக்கள் புலிகளைக் கண்டிச்சினமாம் ஆனால் ராணுவம்தான் நிக்குதெண்டு பேசாமல் போட்டினமாம். கவச வாகனத்தின்ற ஒரு பக்கத்தால உள்ளெட்ட குண்டு மற்றப் பக்கத்தால் வெளிக்கிட்டு போச்சுதாம். ஆனால் சாதாரண காயம்தான் அவைக்கு ஏற்பட்டதாம். சுத்துறாங்கையா பூ !
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விஷயம் , சிங்கள ஊடகங்களில எழுதப்படுகிற விஷயங்களை தமிழ் ஊடகங்கள் ஏதோ புலிகள் உலகத்தில் இல்லாத தொழிநுட்பத்தைப் பாவிப்பதாக காட்டி எழுதுவது வாசகர்களை ஏமாற்றும் வேலை. நீண்ட அன்ரெனா கொண்ட தொலைதொடர்புக் கருவி என்பது எல்லா ராணுவத்தினரும் பாவிக்கும் சாதாரண கருவிதான். இதைப் போய் பெரிதுபடுத்தி சும்மா புலுடா விடூது புதினம். மக்களை அநியாயத்திற்கு ஆசை காட்டி விடுவதும் பின்னர் புலிகள் இவ்வளவு இருந்தும் ஏன் இன்னும் அடிக்கவில்லை என்று சனத்தைக் கேக்க வைக்கிறதும் இவ்வாறான ஊடகங்கள் தான். இவர்கள் மக்களை உற்சாகப் படுத்த எழுதுவது சில வேளைகளில் அது போராட்டத்தில் தேவையற்ற ஒரு தொய்வையும், மக்களிடையே நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்த வழிவகுத்து விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தாக்குதல் ஜே வி பியால் தான் மேற்கொள்ளப்பட்டது

இந்த தாக்குதல் ஜே வி பியால் தான் மேற்கொள்ளப்பட்டது

குழப்பத்தில் இருக்கும் மகிந்தவை நீங்களும் குழப்ப வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதல் ஜே வி பியால் தான் மேற்கொள்ளப்பட்டது

என்ன அவ்வளவு நிச்சயமாக கூறுகிறீர்கள்?

Edited by nunavilan

இந்த தாக்குதல் ஜே வி பியால் தான் மேற்கொள்ளப்பட்டது

என்ன அவ்வளவு நிச்சயமாக கூறுகிறீர்கள்?

அவர்தானே ஜேவிபிக்கு பயற்சி கொடுத்து அனுப்பினவர். அவர் இதுவும் சொல்லுவார் இதுக்கு மேலையும் சொல்லுவார்.

இல்லை இல்லை பாதாள உலக கும்பல்தான் காரணம். May be Karuna?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.