Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 11 months later...
  • Replies 303
  • Views 146.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    நெய் விளக்கேற்றிடும் நேரம் | காந்தளின் கனவு

  • தமிழரசு
    தமிழரசு

    http://youtu.be/CXygUck4PI0 http://youtu.be/k-h8DzPaO14 http://youtu.be/OBN1_oFUjQE http://youtu.be/u8-tev6B93g

  • பாடல்:மேகம் வந்து கீழ் இறங்கி http://youtu.be/EHj_PW281lQ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தாய்மண்ணை நினைக்கையிலே

 

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

வரும் பகை திரும்பும் என்ற இறுவெட்டில் உள்ள

"நிலவினது ஒளிவந்து" 

"கூவி விழும் எறிகணைக்கு"

ஆகிய பாடல்கள் விடுதலைப் புலிகளின் சேணேவி(Artillery) படையணிகளின் 'முன்னிலை நோக்குநர் அணி'(FOT)களுக்காக பாடப்பட்டது ஆகும்.

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CMR Music Connects | இணைக்கும் இசை | Farnandu & Rachel 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

மாவீரர்நாள் 2021

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வண்ண மயில்/இசை,வரிகள்,குரல் /இராசெங்கதிர்

 

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

எஸ் ஜி சாந்தன் நினைவு பாடல்

 

நிகழ்படம்: https://eelam.tv/watch/வ-ன-வ-ள-தவழ-ம-vaanveli-thavazhum-new-eelam-song-எஸ-ஜ-ச-ந-தன-ந-ன-வ-ப-டல_qTndH7zRlbD3NmE.html

 

 

பாடல்: வான்வெளி தவழும்

பாடகர்: யெகதீஸ், கிருசிகா
பாடல் ஆசிரியர்: வன்னியூர் வரன்

பாடலின் சிறப்பு: எஸ் ஜி சாந்தன் அவர்களின் குரலையொத்த குரலில் பாடப்பெற்றிருப்பது ஆகும்.

 

பாடல்வரி:

  

ஆஆ....ம்ம்ம்...
ஆஆ...ம்ம்ம்...

வான்வெளி தவழும் வன்னிமண் காற்றே
விண்ணுலகம் சென்று வருவாயோ!
வயல்வெளி தழுவும் கதிரொளிக்கீற்றே
இசைக்குயில் சாந்தனைக் காண்பாயோ!

தாய்க்குயில் அன்று தூங்கியதென்று
தாயகக் குஞ்சுகள் கலங்குதிங்கே!
இசைமழை ஒன்று இடிந்ததேயென்று
ஈழத்தின் இதயங்கள் சிதைந்ததிங்கே! (ஈழத்தின்)

ஈழத்து இசைக்குயில் போனதெங்கே!
இதயங்கள் சோகத்தில் வாடுதிங்கே!
தாளத்தின் வேரக்குரல் ஓய்ந்ததிங்கே!
சாந்தனாகக் குயிலோய்வந்து சாய்ந்ததிங்கே!

காலங்கள் தந்த காவியனை காலனே வலைபோட்ட நீதியென்ன?
இசையென்னும் ஒளிதந்த பால்நிலவை மேகங்கள் திரைபோட்ட ஞாயமென்ன?
மாவீரம் பாடிய மாமலையில் நோய்வந்து வீழ்ந்ததன் ஞாயமென்ன?
மண்வீரம் பாடிய மாதவனின் மணிக்குரல் தான்கொண்ட காயமென்ன?
தலைமகன் நிலைபுகழ் பாடினின்ற கலைமகன் கண்மூடி போனதென்ன?

(ஈழத்து இசைக்குயில்)

தேசத்தின் ஆக மாளிகையில் புயல்வீசிப் போன வேகமென்ன?
பாசத்தின் வேத மாவிளக்கை மரணத்தினால் தின்ற பாவமென்ன?
தாலாட்டு பாடிய தாய்க்குருவின் வீரத்தின் இசைமூச்சு ஓய்ந்ததென்ன?
அழகோடு அடைகாத்து அவன்வளர்த்த இசையன்பு சொந்தங்கள் சோர்ந்ததென்ன?
எழில்கொஞ்சும் எமதீழத் தேசமெங்கும் சாந்தனின் சோகத்தில் காய்ந்ததென்ன?

(ஈழத்து இசைக்குயில்)
(வான்வெளி)
(தாய்க்குயில்)

 

 

 

ஆழமான வரிகளும் சாந்தன் போன்ற குரலும் நடைமுறையரசின்ர காலத்தில வந்த நினைவு இயக்கப்பாடல் ஒப்ப காட்டுகிறது.

 

Edited by நன்னிச் சோழன்

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெருப்போடு என்னடா விளையாட்டு

 

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

                                          மாவீரர்கள் வாரத்தில் மாவீரர் பாடல்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கண்ணுக்குள்ளே வைத்து காத்திருந்தீர்

 

  • கருத்துக்கள உறவுகள்

🪔🪔வரி வரியாய் உங்கள் நினைவுகள் மாவீரர் பாடல்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யூடுப்பில் நாம் என்ன‌ தான் இணைத்தாலும் பின்னைய‌ கால‌ங்க‌ளில் பாட‌ல்க‌ளை நீக்குவாங்க‌ள்...............ப‌ல‌ காணொளிக‌ள் யூடுப்பில் இருந்து காணாம‌ போய் விட்ட‌து.............

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

 

புலிகள் யாரென எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்தியம்பும் பாடல்

பாடலிற்கான கொழுவிவேங்கை மாவீரரெல்லாம்

பாடலாசிரியர்: கோ.கோணேஸ்

Composed by: சிறீகுகன், 1997-1998, Mangkulam

Singer: எஸ். ஜி. சாந்தன்

"வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள்" எனத் தொடங்கும் இப் பாடலின் வரிகள்: 

  • பல்லவி:

வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள், 
வேலுப்பிள்ளை பிரபாகரன் சொல் நடந்தார்கள்!

  • அனுபல்லவி

தம் இனிய நாளையெல்லாம் தந்தார் அன்று - அதில்
நாளை எங்கள் சந்ததிகள் வாழ்வாரென்று!

  • சரணம்:

மாண்டவர்கள் மீண்டுமினிப் பிறப்பதில்லையே - எங்கள்
மாவீரர் புகழ் மண்ணில் இறப்பதில்லையே!
தமக்காக இவர்கள் என்றும் வாழ்ந்ததுமில்லை - இவர் 
தாள்போற்ற மறுப்பவனும் தமிழனுமில்லை!

பொய், களவு, மது, மாது, புகை, சூது - என்றும் 
புன்செயல்கள் இல்லை இவர் ஒருபோதும்.
பொன் பொருளில் ஆசையில்லை இவர்களுக்கு 
புகழ் கொடுத்தார் ஈன்று பெற்ற தாய்களுக்கு!

தன்மானத் தமிழர்களாய் பிறந்தார்கள் - ஏற்றத்
தாழ்வின்றி ஒரு குலமாய் சிறந்தார்கள்.
உண்மையான இறைவன் இவர்கள் தானே - எங்கள்
உரிமைக்காய் ஈடுவைத்த மறவர்கள் தானே!

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

'செம்மணி' நினைவாக ஒரு பாடல்

 

 

 

பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை

பாடியவர்கள்: திருமலைச் சந்திரன்மணிமொழிஇசைவாணர் கண்ணன்

இசை: முரளி

 

 

குரல்

 

ஊருமற்றுப் பேருமற்று உப்புத்தரைக்குள் உறங்கும்

உறவுகளுக்காகப் பாடுறோம் - கேட்க

யாருமற்றுப் புதைகுழிக்குள் போனவருக்காக இசைப்

பாடலொன்றை நாங்கள் பாடுறோம்.

 

பல்லவி

 

செம்மணியின் மீதெழுந்து ஓலமிடும் சின்னச்

சிட்டுக் குருவியே கூவி அழு – அந்த

"வெண்புறாப் பாடலைதந்தவர் வீட்டில் எம்

வேதனைப் பாடலைத் தூவி விடு.

 

சரணங்கள்

 

சின்னச்சின்ன ஆசைகளைக் கண்ணிற் சுமந்தோடி வந்து

செம்மணியிற் புதைந்ததேனம்மா? - இந்த

வண்ணவண்ணக் கனவுகளை வாசலிலே புதைத்துவிட்டு

வாக்களிக்கச் சொன்னது யாரம்மா ?

 

நாய்கதறத் தாய்கதற நம்பிவந்த பேய்குதற

நள்ளிரவில் நடந்ததென்னம்மா? - அந்த

வாய்கள் திறந்து அலறும்போது யாரருகில் இருந்ததென்று

சொல்லும் வாய்கள் இல்லைத்தானம்மா

 

காலப்பெருவெளியில் எங்கள் ஓலக்குரல் தமிழனென்ற

காரணத்தால் தொடர்வதேனம்மா - இது

ஆளவந்தோர் அமைதிப்புறா ஆனதென உலகம் நம்பும்

காலம்வரை நீளும் தானம்மா.

 

ஸ்ரீலங்கா அரசின் ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் சமாதானத்துக்கான ஒரு பாடல்

 

 

 

 

 

 

 

 

 

Official English Translation of the Song

Writer: Vaanan and Michael

 

 

In memory of our blood relations,

Gone into this mass grave,

Without names or addresses and with no one to question,

Sleeping under this salt land

We sing this song!

 

Oh little bird!

Flying high from the bottom of Chemmani wasteland. 

Sing louder!

And sow our painful song to the home of the hypocrites who gave the White Dove song…

 

How do your little hopes cherished in your eyes get buried in Chemmani?

What made you bury your colourful dreams at your doorstep?

 

What happened at midnight?

When the dogs were barking and your mother was screaming?

While the saviour ghosts were tearing you into pieces…

Mouths opened to scream but no mouths dared to say who they were!

 

In the open space of time, our sorrowful voice continues…

Why? Just because we are Tamils…

This will continue till the world believes that the Ruler is a Peace Dove…

 

உசாத்துணைகள்

  • நிதர்சனம் ஒளிவீச்சு டிசம்பர் - 1998

Edited by நன்னிச் சோழன்

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் - அடி முடி அறியமுடியா அதிசயங்கள்

 

 

 

இசை: இசைப்பிரியன்
இறுவட்டு: அறியில்லை/ தனிப்பாடல்
மூலம்: ஒளிவீச்சு கதிர் 81 ஜூலை - 2000 (பாகம்1)

 

 

கரும்புலிகள் நாங்கள் இங்கு கானம் இசைக்கிறோம்
பெருமொலியாய் வெடித்து உயிரைத் தானம் செய்கிறோம்
தலைவன் வழியில் நின்றுகொண்டு தணலை மூட்டுறோம்
தமிழர் வாழ்வை வசந்தமாக்க வெடிகள் ஆகிறோம்

உங்களின் வாழ்வுக்காய் நாங்கள் வெடிப்போம்
வென்றுமே அண்ணனின் ஆணை முடிப்போம் 

வேகம் கொண்டு வேங்கை நாங்கள் பகையில் மோதி வெடிப்போம்
தாகம் தமிழீழமென்று சாவை வாழ்வாய்ப் படைப்போம்
அண்ணனின் அணியிலே பொங்கும் கரும்புலிகள் நாம்
எண்ணமெல்லாம் எங்களுக்கு தமிழர் வாழ்வு ஒன்றுதான்

விடிவின் வழியை கொடிய பகைவன் அடைத்தால் தகர்த்தெறிவோம்
இனத்தை எவனும் அழிக்க நினைத்தால் இடித்தே கதை முடிப்போம்
இறந்த பிறகும் உறங்க எமக்கு ஆறடி நிலம் கேளோம்
பிறந்த மண்ணில் தமிழர் மூச்சில் கலந்து நின்று வாழ்வோம்

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
22 hours ago, nunavilan said:

 

 

 

இது இயக்கச்சி ஆட்டிலறிப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் தொடர்பான ஈரத்தீ திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நானும் முதன் முதலில் இங்கு தான் இப்பாடலை செவிமடுத்தேன். அன்றிலிருந்து எல்லா இசைத்தட்டுக்களிலும் தேடிய போதிலும் எங்கினும் கிடைக்கவில்லை.

பின்னர் நேற்று தற்செயலாக ஒரு ஒளிவீச்சை கேட்க நேர்ந்த போதுதான் கண்டுபிடித்தேன். அதில் பாடும் ஆணின் குரல் பாடல் வரிக்கு கொஞ்சம் கூட நன்றாக இல்லை; நித்திரை வாற மாதிரி இருக்குது. ஆனால் பாடல் வரிகள் அந்த மாதிரி இருக்கு. எழுச்சியாக பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

 

 

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம்

 

இசையமைத்தவர்: இசைத்தென்றல்
பாடல் வரிகள் கு. வீரா
பாடகர்: திருமலைச் சந்திரன் மற்றும் இளங்கீரன் 

இறுவெட்டு: அறியில்லை/ தனிப்பாடல்

கேட்க: https://eelam.tv/watch/கர-ம-ப-ல-கள-வ-ழ-ம-எர-மல-ய-ன-த-சம-karumpulikal-vaazhum-erimalaiyin-theesam-original-version_53JtPtQqjAwM5Xr.html

 

கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம் - அந்தக்
காலனையே கலக்கிடும் கந்தக வாசம்!
(இது கரும்புலிகள்)

தமிழீழ மண்ணில் உயிராய் வைத்தோம் பாசம் - அந்தப்
பாச உணர்வில் தேசப்புயலாய் நாங்கள் உருவானோம்! 
(இது கரும்புலிகள்)

தலைவனின் விழிகளில் தீப்பிழம்பினால்,
தடைகளை உடைத்துமே தூள் கிளப்புவோம்! 
(தலைவனின்)
(கரும்புலிகள்)

வெடிமருந்தில் உடையணிந்து விரைவோம் - எந்த
வேளையிலும் காற்றுக்குள் நுழைவோம்!
(வெடிமருந்தில்)

கொடிகொண்டு ஆளும் தமிழீழ மண்ணில்  - நாங்கள் 
கொலுவிருந்து பார்ப்போம் தலைவனது கண்ணில்!
(கொடிகொண்டு)
(தலைவனின்)
(தலைவனின்)

தீயாக எரியுமே பகைவீடு - அந்தக் 
கனலோடு தெரியும் எங்கள் வரலாறு!
(தீயாக)

இரும்பிலும் இறுகிய மனமென்பார் - எங்கள்
இதயத்தின் மென்மையை எவர் அறிவார்?!
(இரும்பிலும்)
(தலைவனின்)

நெய் விளக்கை ஏற்றிவைத்து நெஞ்சம் அழும் - அந்த 
நினைவினிலே விடுதலைத்தீ விஞ்சி எழும்!
(நெய் விளக்கை)

மெய்யுணர்வு விழித்துவிட களம் வந்தோம் - நாங்கள்
மீண்டும் தமிழ் ஆளவென்று பலம்கொண்டோம்!
(தலைவனின்)
(தலைவனின்)
(கரும்புலிகள்)
(இது கரும்புலிகள்)
(தமிழீழ)
(இது கரும்புலிகள்)
(தலைவனின்)
(தலைவனின்)

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

கரையிலே காத்திருக்கும் கடற்கரும்புலிகள் நினைவாய்

பாடல்: அலையே நீயும் பொங்காதே
இறுவட்டு: நெய்தல்
இசை: 'இசைவாணர்' கண்ணன்
பாடலாசிரியர்: உதயலட்சுமி
பாடியவர்: பார்வதி சிவபாதம்
வெளியீடு: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள்
பாடல் வரிகள்:

பல்லவி

அலையே நீயும் பொங்காதே - என்
இலக்கினை இனியும் மறைக்காதே
சிலைபோல் இப்போது இருக்கின்றேன் - கொடுஞ்
சிங்களம் வந்தால் சிதைத்திடுவேன்

சரணங்கள்

மறைந்த நம் வீரர் கனவேந்தி - அவர்
நினைவுடன் கருவியும் கைப்பிடித்தேன்
கத்தாதே அலையே கணப்பொழுது - ஏதோ
சத்தங்கள் கேட்குதே கடல்மீது

கருவியை ஏந்திக் கரையினிலே - பகைப்
படகினை உடைக்கவே நிலையெடுத்தேன்
திரையே நீ ஏன் ஒலிக்கின்றாய் - பெருந் திரை
போட்டென்னை மறைக்கின்றாய்

வேதனை கொண்டுதான் ஒலித்தாயா - வேங்கை
வெல்வதால் வேகம் பெற்றாயா
சற்றே நீ அமைதியாய் இருந்துவிடு - பகை
முற்றையும் பொடிப் பொடியாக்கிடலாம்

 

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

பாடல்: தனியொருத்தியாக நின்று
இறுவட்டு: தாயகத்தாய்
இசை: தமிழீழ இசைக்குழு
பாடலாசிரியர்: அறியில்லை
பாடியவர்: பிறின்சி ரஞ்சித்குமார்
வெளியீடு: தமிழீழ இசைக்குழு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்
பாடல் வரிகள்:

பல்லவி

தனியொருத்தியாக நின்று தியாகதீபம் ஏற்றிவைத்து
புவியினிலே பெரும் தெய்வம் ஆகினாள் - அம்மா
பூபதித்தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள்

சரணங்கள்

வதைபட்டுக் கிடந்தவரை வாழ்விக்க வந்த படை
வதைசெய்தல் கண்டு மனம் பொங்கினாள் - அவரை
வழியனுப்பி வைத்திடவே முந்தினாள்

வயது பார்த்து வருவதில்லை வசதி பார்த்து வளர்வதில்லை
தமிழுணர்வு தணியாத தாகமம்மா - இதைத்
தரணியெங்கும் தெரியவைத்தாள் பூபதியம்மா

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜகோபுரம் எங்கள் தலைவன்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.