Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள தேசத்தின் யுத்தப் பிரகடனம் - பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தின் யுத்தப் பிரகடனம் - பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவு -சண். தவராஜா-

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசு விலகிக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் பலத்த கண்டனங்கள், விமர்சனங்கள் என்பவற்றைச் சட்டை செய்யாமல் விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்துவிடும் நோக்குடன், அதற்கூடாக தமிழ் மக்களின் எதிர்ப்பை நிர்மூலம் செய்து விடும் நோக்குடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தை இலக்காகக் கொண்டு போர் முடுக்கி விடப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னான காலப்பகுதியில் ஒரு சில வருடங்கள் மென்னிலையாக நடந்து வந்த யுத்தம் 2005 நவம்பரில் தற்போதைய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னால் உக்கிரமடையத் தொடங்கியது. தொடர்ந்த காலப் பகுதியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரசுத் தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ மீதான கிளைமோர்த் தாக்குதல், கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மற்றும் கொலன்னாவ எண்ணைய்க் குதம் என்பவற்றின் மீது நடாத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல், அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட அழித்தொழிப்புத் தாக்குதல் போன்றவை நிகழ்த்தப்பட்ட காலத்தில் பிரகடனம் செய்துவிடாத யுத்தத்தை சிங்கள தேசம், இன்று எதுவுமேல்லாத ஒரு சூழலில், அதுவும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்காக சிங்களப் படைகளும் ஒட்டுக் குழுக்களும் சர்வதேசத்தின் பலத்த கண்டனத்திற்கு இலக்காகியுள்ள சூழலில் எதற்காகப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் கண்டறிய சர்வதேச சமூகம் துடியாய்த் துடிக்கின்றது.

சிங்கள தேசம் யுத்தத்தைப் பிரகடனம் செய்த விதம் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கவில்லை. ஒருவகையில் இந்த முடிவு அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. சிங்களக் கடும் போக்காளர்களான ராஜபக்ஷ சகோதரர்கள் இந்த முடிவை கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு முன்பாக மேற்கொள்ளக் கூடும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. ~போர்நிறுத்த உடன்படிக்கை 5 வருடங்களைக் கடந்தும் நீடித்தால் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து விடும். எனவே அதற்கு முன்பாக ஒப்பந்தத்திலிருந்து சிங்கள தேசம் வெளியேறிவிட வேண்டும்| என சிங்களக் கடும்போக்கு வாதிகள் அப்போது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அப்போது கூட மகிந்த ராஐபக்ஷ இந்த முடிவை எடுக்கவில்லை. ஆனால் இப்போது அம்முடிவை எடுத்திருக்கின்றார் என்றால் யுத்தத்தில் வெல்ல முடியும் என்ற துணிவு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதானே அர்த்தம்? சர்வதேச சமூகத்தைச் சமாளித்துவிட முடியும் என்ற துணிவு உருவாகியிருக்கின்றது என்பதுதானே அர்த்தம்? அதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?

முதலில், கடந்த டிசம்பரில் வெளியான செய்திகளைப் பார்த்தால் இதனை ஓரளவு ஊகிக்க முடியும். டிசம்பர் மாத ஆரம்பத்தில் மகிந்த யப்பானுக்குச் சென்றிருந்தார். அவரால் நிதியுதவிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 1.9 பில்லியன் யென் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்களுக்காக சிங்கள தேசம் மீது கடுமையான கண்டனங்களைச் சர்வதேச சமூகம் முன்வைத்திருந்த வேளையிலேயே இந்த நிதியுதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி ஊடாக யப்பான் சொல்ல விரும்பும் சேதி மனித உரிமைகளை சிறிலங்கா மீறுவதையிட்டுத் தான் கவலைப்படவில்லை என்பதே. யப்பானின் கடந்த கால வரலாற்றை அதுவும் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முந்திய காலகட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் யப்பானுக்கும் மனித உரிமைகளுக்கும் உள்ள சம்பந்தம் என்னவென்பது புரியும்.

மனித குல வரலாற்றில் ஹிட்லர் நடாத்திய வதைமுகாம் படுகொலைகளுக்கு நிகராக சீனாவின் நான்கிங் பிரதேசத்தில் யப்பானியப் படைகள் நடாத்திய படுகொலைகளும் அட்டூழியங்களும் மறக்கப்பட முடியாதவை. அதேவேளை, போரின் வலி, அதன் கொடூரம் என்ன என்பதை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் யப்பானியர்கள் நேரடியாக அனுபவித்திருந்தும் கூட இன்னொரு மக்கள் கூட்டம் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கக் கூடாதென அவர்கள் நினைக்கவில்லை.

யப்பான் உட்பட வெளிநாடுகள் வழங்கிய நிதியுதவியின் பலத்திலேயே 2008 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரவு செலவு திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இம்முறை கையாண்ட வழிமுறைகள் மிகவும் கீழ்த்தரமானவை வெட்கக் கேடானவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சிலர் அரசின் பக்கம் சேரவுள்ளதாக ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே அரசு பிரசாரத்தில் ஈடுபட்டது. அது சாத்தியமற்றுப் போன நிலையில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக அல்லது எதிராக வாக்களிப்பதைத் தடுத்து விடுவதற்காக மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் சிலர் கடத்தப்பட்டு வாக்களிப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒரு தடவையல்ல இரு தடவை இந்தச் சம்பவம் அரங்கேறியது. எதிர்க்கட்சிகள் இதனைக் கண்டித்த போதிலும் அரச சார்புக கட்சிகளோ அரச பிரதிநிதிகளோ இதனைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் எதிர்வினையோ வெறும் வாய்ப்பேச்சு அளவிலேயே இருந்தது.

இதேவேளை, எமது கிட்டிய அயல்நாடான இந்தியாவும் உலகப் பொலிஸ்காரனான அமெரிக்காவும் சமாதானம் மூலம் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என உதட்டளவில் கூறிக்கொண்டு மறைமுகமாக சிங்கள தேசத்திற்கு ஆயுத பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறிலங்கா விலகிக் கொண்டமை தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஐp கருத்துக் கூறுவதற்கு மறுத்தமை, அமெரிக்க கப்பற்படையின் பசுபிக் பிராந்திய கமாண்டர் அண்மையில் சிறிலங்காவுக்கு விஐயம் மேற்கொண்டு கடற்படைக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை, கடற்பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து என்பவை மேற்கூறிய வாதத்தை மெய்ப்பிக்கச் சிறந்த உதாரணங்களாகும்.

சிங்கள தேசமானது தமிழ் மக்களின் எதிர்ப்பை முறியடிக்கத் தேதி குறிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. 1978 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்திய போது அப்போதைய ஐனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களின் எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகச் சூழுரைத்திருந்தார். அந்த எதிர்பார்ப்பு, அதனால் உருவான நம்பிக்கை என்பவையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தரமான சட்டமாக்காமல் தற்காலிக ஏற்பாடுகள் என்ற பதப்பிரயோகத்தோடு அறிமுகப்படுத்தும் துணிவை அவருக்கு வழங்கியது. இதனைத் தொடர்ந்து தனது மருமகனான பிரிகேடியர் புல் வீரதுங்காவை யாழ்ப்பாணம் அனுப்பினார். அப்போது அவருக்கு சிறிலங்கா படைகளால் சிறந்த புலனாய்வு அதிகாரிகளாக விளங்கிய தமிழர்கள் உதவிக்கு இருந்தார்கள். ஆனாலும அவர்களால் தமிழர் போராட்டத்தை நசுக்கி விட முடியவில்லை. மாறாக அவர்களால் போராட்டத்தை விசுவரூபம் கொள்ளச் செய்யவே முடிந்தது.

பின்னர் சந்திரிகா அம்மையார் காலத்தில் தமிழர் எதிர்ப்பை முறியடிக்க மற்றுமோர் கெடு விதிக்கப்பட்டது. இம் முறை அவரின் மாமன் அநுருத்த ரத்வத்த களமிறக்கப்பட்டார். பல ஒட்டுக் குழுக்களும் அனுசரனையாக இருந்தன. ஆனாலும் கூட தமிழர் போராட்டத்தை நசுக்கிவிட முடியவில்லை.

~எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்| என்பதைப் போல இப்போது 2008 இல் மீண்டுமொரு கெடு விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் தமிழர் எதிர்ப்பை முறியடிக்கப் போவதாக சூழுரைக்கப்பட்டுள்ளது. முன் அனுபவத்தை வைத்தும் தமிழர் தரப்பிலுள்ள பலத்தை வைத்துக் கொண்டும் பார்க்கும் போது முடிவு ஊகிக்கக்கூடியதாகவே உள்ளது.

ஆனால், இங்கு நாம் கவனத்தில் கொண்டுள்ள விடயம் இந்தக் காலவரை பற்றியது. 2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னான காலப்பகுதியில் உலக அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது அதிகம் பேசப்படும் விடயமாக இருந்து வருகின்றது.

விடுதலைப் புலிகள் தரப்பில் விடப்பட்ட சில தவறுகள், புலம்பெயர் தமிழர் சமூகத்தின் அசமந்தப் போக்கு, சிறிலங்கா தரப்பில் லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற சிறந்த இராஐதந்திரிகளின் வெளியுலகப் பிரசாரம் ஆகியவை தமிழர் போராட்டத்தை பயங்கரவதாத போராட்டமாக சர்வதேச சமூகம் கருதுவதற்கு வழி சமைத்தது.

அமெரிக்கா தலைமையிலான ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| எனும் நடவடிக்கையின் கவர்ச்சி தற்போது உலக அரங்கில் மங்கத் தொடங்கியுள்ளது. பின்லாடனை ஒழித்துக் கட்டுவது என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும், சதாம் ஹாசைனை அகற்றி விட்டு ஐனநாயகத்தை நிலைநாட்டுவதாககு; கூறிக் கொண்டு ஈராக்கிலும் Nஐhர்ஐ; புஷ் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தங்களில் இணைந்து கொண்ட ஆரம்ப கட்டக் கூட்டாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேயர் பதவி விலகியமை, அமெரிக்க மக்களிடையே உருவாகி வரும் யுத்தத்துக்கு எதிரான மனோபாவம், உலகெங்கும் அமெரிக்கப் பிரiஐகளுக்கு உருவாகியுள்ள ஆபத்துக்கு அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் என்ற புரிதல் ஆகியவை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அரசுத் தேர்தலில் ஐனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு போன்ற விடயங்கள் சிறி லங்காவின் கண்களுக்கு ஆபத்தை முன்னறிவிக்கும் சகுனங்களாகத் தென்படுகின்றன. தனது ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| எனும் வெற்றுக்கோஷம் இனிமேல் கவனத்தில் எடுக்கப்படாது என்பது புரியத் தொடங்கியுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள பதட்டமே சிங்கள தேசத்தை நிதானமாக யோசிக்க விடாமல் யுத்தத்தை ஜோர்ஜ் புஷ்சின் காலத்திலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் எனச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. ஏனைய காரணங்கள் யாதாவது இருக்குமானால் அவை நிச்சயம் துணைக் காரணங்களே.

ஆனால், தனது முடிவு பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு பிழையான முடிவு என்பதைச் சிங்கள தேசம் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. போர்க் களத்திலும் இராஜதந்திரக் களத்திலும் தற்போது உள்ள நிலைமைகள், ஏற்பட்டுவரும் மாற்றங்கள் என்பவை இதையே குறித்து நிற்கின்றன.

நன்றி: நிலவரம் வார ஏடு (25.01.08)

http://www.tamilnaatham.com/articles/2008/...jah20080126.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரைச்ச மாவை அரைப்போமா என்பது தான் தமிழர் தரப்பு வாதமா?

சிங்களம் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்துள்ளது ஆனால் தமிழர் தரப்பு இரண்டும் கெட்டான் நிலையிலுள்ளதா?

அல்லது இப்படியே ஏதாவது நொண்டிசாட்டுகளுடன் தமிழர் தரப்பு தொடர்ந்து செல்லலாம் என்ற எண்ணமா?

தமிழர் தரப்பு தான் மேற்கொண்ட நகர்விலேயே சென்றுகொண்டிருக்கின்றது. மற்றவர்களுடைய மாற்றங்களைத் தனது தடுமாற்றமாகக் கொள்ளவில்லை. அவ்வப்போது தேவைக்கேற்றவாறு உரிய இலக்கை நோக்கி சில மாற்றங்களுக்குள்ளாகி நகர்ந்தே செல்கிறது. அதனைக் களமே தீர்மானிக்கும்.

மகிந்த அரசினது முடிவு பிழையானதாகவே உலகத்தால் நோக்கப்படுகிறது. அதை விளக்குவதே கட்டுரையாளரின் நோக்கம். இரண்டு விடயங்கள் முன்னிறுத்தப்பட்டே யுத்த நிறுத்தம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது 1. இராணுவத்தீர்வின் மூலம் பிரச்சினையைத் தீர்த்தல். 2 . தனது ஆட்சியை மேலும் தக்கவைப்பதற்கு யுத்தம் என்ற ஒன்றையே நம்பியிருத்தல். இந்த இரண்டைத் தவிர வேறு காரணங்கள் தேவையற்ற உருவாக்கமே என நான் கருதுகிறேன்.

இந்தத் தேவைகளுக்காக தமிழர் தரப்ப தனது முடிவுகளை மாற்றிக் கொள்ள முடியாது. எதிரக்கு சாதகமற்ற சூழ்நிலை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்படும். இது யாவரும் அறிந்தவிடயமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எத்தனை வருடங்கள் தொடர்ந்து சொல்லப் போறிங்க? ?? கொரில்லா தாக்குதல் மேற்கொள்வதை எமது பலம் என்று தொடர்ந்து சொல்ல முடியாது.

போற போக்க பார்த்தால் மகிந்த தான் நினைத்ததை சாதிக்க போறார் போல தான் இருக்கு. :lol:

எத்தனை காலமா? ... போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி இன்று உலக நாடுகளின் பார்வையை உறுத்த வைத்தவர்களுக்கு தெரியும் என்ன செய்வதென்று...

விடுதலை என்பது ஒன்றும் சுரங்கபொருள் இல்லை சிலநாடகளில் தோண்டியெடுக்க... தமிழ்த்தரப்புகளின் தடர் போராட்டங்களும் தியாகங்களும்மே இன்று இந்த விடுதலை தீயை சர்வதேச கதவு வாசலில் வைதுளது.

இப்படி கஸ்டப்பட்டு உருவாக்கின நிலமையை சும்மா போட்டுடைக ஏலாது... அதானாலேயே புலிகளின் பொறுமை இன்று எல்லோ ரையும் வியற்க வைக்கின்றது.

அதுகிடக்கட்டும்.. புலிகள் முடியாதெண்றா உவர் லினிக்ஸ் என்ன செயப்போறார்... சிங்களவங்கள் வெல்லபோறாங்களாம் எல்லாரும் போய் லினிக்ஸ் சின்ர காலில் விளுந்து சிங்களவங்களை ஆதரிபோமாக. அல்லது என்ன சங்கரியிட்டையும் டக்கிளசுட்டையும் போவொமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை காலமா? ... போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி இன்று உலக நாடுகளின் பார்வையை உறுத்த வைத்தவர்களுக்கு தெரியும் என்ன செய்வதென்று...

விடுதலை என்பது ஒன்றும் சுரங்கபொருள் இல்லை சிலநாடகளில் தோண்டியெடுக்க... தமிழ்த்தரப்புகளின் தடர் போராட்டங்களும் தியாகங்களும்மே இன்று இந்த விடுதலை தீயை சர்வதேச கதவு வாசலில் வைதுளது.

இப்படி கஸ்டப்பட்டு உருவாக்கின நிலமையை சும்மா போட்டுடைக ஏலாது... அதானாலேயே புலிகளின் பொறுமை இன்று எல்லோ ரையும் வியற்க வைக்கின்றது.

அதுகிடக்கட்டும்.. புலிகள் முடியாதெண்றா உவர் லினிக்ஸ் என்ன செயப்போறார்... சிங்களவங்கள் வெல்லபோறாங்களாம் எல்லாரும் போய் லினிக்ஸ் சின்ர காலில் விளுந்து சிங்களவங்களை ஆதரிபோமாக. அல்லது என்ன சங்கரியிட்டையும் டக்கிளசுட்டையும் போவொமோ?

கெப்பிட்டிக்கொலாவையில் 16 சடலங்கள் கண்டெடுப்பு- சிறீலங்கா பொலீஸ் தகவல்.

Sooravali' date='Jan 24 2008, 01:25 PM' post='376869'

நல்லாத்தான் நடக்குது போல கிடக்கு...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33747

Sooravali உங்களுக்கு ஈழத் தமிழர் கொல்லப்படுதலை பார்த்து மகிழ்சியா?

இப்படி அடி நுனி தெரியாதவங்க எல்லாம் அரசியல் பேசுறாங்க :lol:

காட்டில் மீட்கப்பட்ட 16 சடலங்களும் தமிழர்களுடையவையென சந்தேகம்

http://www.thinakkural.com/news/2008/1/26/...s_page44778.htm

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் போராடும் போராளிகளுக்கு தெரியும் எப்படி காய்களை நகர்த்த வேண்டும் என்று.யாரின் உதவியும் இன்றி போராட்டத்தை கொண்டு செல்வது மிகவும் கடினமானது. அதனை தலைவர் செய்து காட்டிக்கொண்டிருக்கிறார். மகிந்தவை போல பல சிங்கள தலைவர்களை தமிழினம் கண்டு விட்டது.மகிந்த எல்லோரையும் விட ஒன்றும் வித்தியாசமாக செய்துவிடவில்லை.

சிங்களம் சரியான நேரத்தில் என்ன முடிவை எடுத்தது? ஆக அப்பாவி தமிழர்களை கொன்று புலிகளை கொன்றதாக சிங்கள மக்களுக்கு சாட்டு போக்கு சொல்லி காலத்தை கடத்துகிறது.

போர் நிறுத்தத்தில் இருந்து விலகியதால் என்னத்தை தான் சாதித்து விடப்போகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் சிந்தனை வேறுபட்டது. அடுத்த கட்டமாக புலிகளை தடை செய்தல் தான் அவருடைய நோக்கம். அதன் பின்னர் தான் எமது நிலை மிகவும் மோசமானதாக இருக்கும். யாரும் வல்லரசுகள் தலையிட்டால் சரி இல்லாவிட்டால் நமது பாடு??????????????????????????????

சரி சரி வழமைபோல் உவையள் ஊழையிடுறது தான் சரி எண்டே வைச்சுக் கொள்வம் அப்பிடி எண்டாலும்... "Never interrupt your enemy when he is making a mistake." -Napolean

அப்பிடிப் பார்க்கும் பொழுது உப்பிடியான சோடினையான ஆக்கங்கள் எதற்கு? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது சிந்தனை எப்போதும் எதிரி முட்டாள் என்பது தான். அதுக்காக தான் இப்படியான ஆக்கங்கள்

சிறிலங்கா தரப்பில் லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற சிறந்த இராஐதந்திரிகளின் வெளியுலகப் பிரசாரம் ஆகியவை தமிழர் போராட்டத்தை பயங்கரவதாத போராட்டமாக சர்வதேச சமூகம் கருதுவதற்கு வழி சமைத்தது.

கட்டுரையாளரின் கருத்து ஈழத் தமிழரிடம் சிறந்த இராஐதந்திரிகள் இல்லை என்பதா????

ஈழத்தமிழரென்ன எவர் இறந்தாலும் மனம் வருந்துவதே சாதாரண மனிதமனம்... அதிலும் தமிழர்கள் இறந்தால் தாங்கமுடிவதில்லைதான்... நான் கூறிது நல்லாத்தான் நடக்குது என்பது அங்கு நடக்கும் அனியாத்தை கேக்க பார்க்க யாருமில்லாததை வைது நடப்பதுகளைத்தான்.

எங்களவுக்கு உங்களளாவுக்கு அரசியல் தெரியாது தான் ஆனால் தமிழரின் நிலமையும்.. தற்போதுள் நிலமைகளும் நன்கு அறிவோம்.

ஈழத்தமிழரின் இன்றைய நிலமையில் மாற்றம் வர நீங்களே அறிவுரை தாருங்கோ... அதை விடுத்து யாரும் சொன்னதுக்கு எதிர்க்கருத்து சொல்லவேணுமென்று இருந்தால்.. ஒன்றும் ஆகப்போற்து கிடையாது...

Edited by Sooravali

எதிரிகளை முட்டாள்களாகப் பார்ப்பதும் அவர்களின் வலிமையை எடையிடுவதிலும் தவறியிருந்தால் போராட்டம் என்றோ முடிந்து போயிருக்கும். உங்களிடமுள்ள ஆதங்கம் என்னவென்று புரிகிறது. புலிகள் உடனடியாக யுத்தமிட வேண்டும், நோக்கம் என்பதை பின்பு பார்க்கலாம் என்கிறீர்கள். மகிந்த சிந்தனையை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பதற்கான வழியையே கூறுகின்றீர்கள்.

எத்தனை காலந்தான் சென்றாலென்ன, இலக்குத் தவறின் போராட்டம் தடம்புரண்டுவிடும். போராட்டம் பற்றிய அனைத்து முடிவும் களம் தீர்மானிக்கும். ஆத்திரப்படுதலினால் பலம் இழக்கப்படுமே தவிர அடைதல் இல்லாது போகும்.

முப்பது தலைமுறைகள் காத்துக்கொண்டிருந்து உருவானதுதான் "இஸ்ரேல்" மூன்று தலைமுறைகளைக் கூடக் கடக்காத எமது போராட்டம், அதன் தன்மையை உணர்ந்து கொள்ளாதவர்களினால் எப்படி புரிந்து கொள்ளப்படுகின்றது என்பதை அறியும்போது வருந்தவேண்டியுள்ளது. இதென்ன வெறும் தெருச் சண்டையா?

உங்களிடம்தான் கேட்கிறேன்.

எமது பிரச்சனையிக்கு தீர்வென்பது, ஈழம் என்பதைத்தவிர வேற்றுவடிவில் உள்ளதா? அப்படியிருந்தால் அதனை அடைவதற்கான வழிகளென்ன? ஆக்கங்கள் அதனை எழுதுபவர்களின் எண்ணக்கரு. அதற்காக அவையெல்லாம் சரிக இருக்குமென்பதுமில்லை. சிந்தனை முரண்பாடற்ற மனிதர்களைக் காணமுடியாது. ஆக்கங்களும் அப்படிப்பட்டவைதான். தனியாள் கருத்திற்கும் சிந்தனை முரண்பாடுகளுக்கும் ஏற்ப அவை உருவாகின்றன.

இங்குள்ள பிரச்சனை அதுவல்ல. ஆக்கங்கள் பற்றிய எதிர்க் கருத்து, ஆதரவுக் கருத்துக்களுக்கு இங்கு விவாதிக்கையில் அதுபற்றிய பிழையான திசைதிருப்பல் இங்கு நிகழ்கின்றது. அந்தத் தடத்தை மாற்றுபவர்கள் புலிகள் என்ன செய்கிறார்கள் இதைத்தான் செய்ய வேண்மென அடம்பிடிப்பது போல் கருத்துக்களை எழுதுகின்றார்கள்.

போராட்டத்தின் பாதையை களமே தீர்மானிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டத்தின் பாதையை களமே தீர்மானிக்கும்.

இன்று களத்தின் நிலைமை என்ன?? இது தான் இன்று உள்ள கேள்வியே. அது புரியாமல் எழுதிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. ஏதோ நாம் சரியான வழியில் செல்கின்றோம் என்பது தான் எமது அடிப்படை கருத்து. ஆனால் அது தவறா பிழையா என்பதை சிந்திப்பதில்லை.

சிங்களம் எல்லாவற்றையும் செய்கின்றது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எழுதுவதும் அறிக்கை விடுவதும் தான் அல்லாவிட்டால் உலக நாடுகளை குறை சொல்வது .

சிங்களம் ஏன் அடிபணியாமல் நிற்கின்றது? அதற்கான விடை எம்மிடம் இல்லை?

இனி நாம் பின் நின்றால் எமக்கு தான் அழிவுகாலம்.

இன்றைய வன்னி செய்தி ஏதும் கேள்விப்பட்டனிங்களா? உண்மை தெரியவில்லை :lol:

Edited by tamillinux

30 தலைமுறைகள் காத்திருந்து உருவானது இஸ்ரேல். நமது போராட்டம் 3 தலைமுறை கூட கடக்கவில்லை. ஆனால் இறுதி யுத்தம் வரப்போகுது.

இன்னும் சொற்ப காலங்கள் தான் காத்திருக்க வேணும். இதோ அதோ எல்லா வேலிக்காலையும் பாஞ்சு கொடி ஏத்தப் போறம் களம் விரியப் போகுது மகிந்தவின்ரை கோவணம் சுருங்கிக் காணாமல் போகப் போகுது.

உங்களது ஆதங்கத்தை நான் சரியாகத்தான் புரிந்து கொடுள்ளேன். "யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிந்து விட்டதால் உடனடிப்போர்" அதனை நாம் செய்ய முடியாது செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.