Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும்.

- வீ ஆனந்தசங்கரி

கோட்டை புகையிரத நிலைய மிருகத்தனமான தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து 100 பொது மக்கள் படுகாயம் அடைந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கண்டியிலிருந்து தம்புள்ள நோக்கி வந்த பேருந்தில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் மரணித்தும் 16 பேர் காயமுற்ற சம்பவமும் படு கோழைத்தனமான செயலாகும். கடந்த வாரம் மன்னார் மடுவுக்கு அண்மையில் ஏற்பட்ட கிளைமோர் தாக்குதலில் மாணவர்கள் சிலர் உட்பட 18 பேர் மரணித்தது மற்றும் பல பேர் படுகாயமடைந்ததும் மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல. இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி தற்கொலைக் குண்டுதாரி முட்டாள் தனமாக தனது உயிரையும் மேலும் நான்கு பேரின் உயிரை எடுத்ததோடு 18பேருக்கு மேல் காயம் ஏற்படுத்தியிருந்தார்.கடந்த வாரம் கெப்பிற்றிக்கொலாவில் இனம் தெரியாத கடுமையாக பழுதடைந்திருந்த சடலங்கள் கிடங்குகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 70உயிர்கள் பறித்தெடுக்கப்பட்டு படுகாயமடைந்த 150 பேருக்கு மேற்பட்டோருக்கு சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தி பல விதவைகள் அனாதைகள் அங்கவீனர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இந் நிலமையை உருவாக்கியதில் தமிழ் ஊடகங்களுக்கு ஓரளவு பங்குண்டு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஊடகங்கள் அத்தனையும் ஒரு முகமாக இச்செயலை வன்மையாக கண்டிக்காமை விடுதலைப் புலிகளுக்கு கணிசமான அளவு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. ஊடகங்கள் பரந்தளவில் செயற்படும் தம் நிருபர்கள் மூலம் இத்தகைய சம்பவங்கள் சம்பந்தமான துப்புக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவலாம்.அத்தகைய தமது கடமைகளை மறந்த ஊடகங்கள் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது. ஒருவரின் உயிரை இன்னுமொருவர் எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என நம்புவதால் நான் ஒவ்வொரு கொலையையும் கண்டித்து வந்துள்ளேன்.

தற்சமயம் நான் ஐக்கிய ராச்சியத்தில் நிற்பதால் யாழ் நகரில் பிரசுரமாகும் ஒரு தமிழ் தினசரியில் நான் சிங்கள மக்களின் கொலைகளுக்கு மட்டும் கண்டனம் தெரிவிப்பதாகவும் தமிழர்களின் கொலைகள் பற்றி கண்டிப்பது இல்ii எனவும் குற்றம் சாட்டியுள்ளாதாக அறிவிக்கபட்டுள்ளது அத்தகைய ஒரு முடிவுக்கு வருவது மிகவும் தவறாகும். அப்பத்திரிகை குறிப்பாக அடையாளம் காணப்படாத 16 சடலங்கள் பற்றியே குறிப்பிட்டுள்ளது. நான் நாட்டில் இருக்கும் வரை அச்சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

இப் 16 துர்பாக்கியவான்களின் சடலங்களின் இன அடையாளம் சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் அறிந்திருப்பின் என்னை வீண்வம்புக்கு இழுக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விபரம் தெரிவிப்பதே கண்ணியமான செயலாகும். வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் அதிகமான கொலைகளுக்கு விடுதலைப்புலிகளே பொறுப்பானவர்கள். விடுதலைப்புலிகள் நினைத்தால் ஏனைய கொலைகளையும் நிறுத்த முடியும்.

தென்னிலங்கையில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளுக்கு சந்தேகமின்றி விடுதலைப்புலிகளே பொறுப்பு. இப்பத்திரிகை ஏன் இக் கொலைகளை கண்டிப்பதில்லை. என்னை என்ன செய்ய வேண்டும?; என இப்பத்திரிகை ஆசிரியர் ஏன் வாசகர்களைக் கேட்க வேண்டும். திடசங்கமாக இவ் ஆசிரியர் யாருக்கோ ஓர் செய்தி அனுப்புகிறார். அந்த நபர் யார்? ஆசிரியர் அனுப்பும் செய்தி தான் என்ன?.

நான் ஒவ்வொரு கொலையையும் மிருகத்தனமான கொலை என்றே கண்டிப்பேன். யாரும் யாரையும் கொலை செய்யுமாறு தூண்ட மாட்டேன். விடுதலைப்புலிகள் இக் கொலையை உடன் நிறுத்த வேண்டும். அது அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. மாறாக நாளுக்கு நாள் தமது மதிப்பை தான் இழந்து கொண்டு போவார்கள் சர்வதேச சமூகமும் அப்படி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கை விடுமாறு விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கை விட வேண்டும். இராணுவத்தினர் மத்தியில் கறுப்பு செம்மறிகள் உண்டு. அத்தகைய கறுப்பு ஆடுகள் பொது மக்களை தாக்கும் போது எல்லாம் இனம்கண்டு தமது உயர் அதிகாரிகளின் கவனத்திற்க்கு ஏனையவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

இப்போ விடுதலைப்புலிகளுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி ஓர் இனகலவரத்தை ஏற்படுத்துவதே. அதற்காக சிங்கள மக்கள் தயார் இல்லை. ஏன் எனில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பாதிக்கு மேற்பட்டோர் சிங்கள முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழுகிறார்கள் என்பதை நன்கு அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு தமது என்பதை அறிந்து வைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் சுயநலத்துடன் இரத்த வெறி பிடித்தவர்கள் என்பதை தமிழ் மக்கள் அறிந்துள்ளார்கள். விடுதலைப்புலிகளுடன் வாழ்வது எவ்வளவு சங்கடம் என்பதை நன்கறிந்துள்ளனர்.

தமது பொறுப்பை உணர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் குண்டுகள் கிளைமோர் குண்டுகள் புதைக்கப்படும் இடங்;களை பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். மன்னார் சம்பவம் அரச படையினரின் ஊடுருவித்தாக்கும் பிரிவினரால் ஏற்பட்டதென்று விடுதலைப்புலிகள் கூறுவர்களேவானால் அவர்கள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் திறமையை இழந்துவிட்டார்கள் என ஒப்பு கொண்டு தமது போராளிகளை அரசிடம் சரணடைய வைக்கவேண்டும். திருநெல்வேலிச் சம்பவத்துக்கு யார் பொறுப்பு? சுதந்திர தினத்தன்றும் தம் கடமையை செய்யத் தவறாத புலிகள் 15 உயிர்களை அன்றும் எடுத்துள்ளனர்.

தாம் தொடர்ந்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என விடுதலைப்புலிகள் கருதக் கூடாது. இங்கே குறிப்பிட்டுள்ள 5 சம்பவங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டவை. எவை அரச படைகள் சம்பந்தப்பட்டவை எவை என்பதை தமிழ் மக்கள் அறியப்பட வேண்டும். இந்திய அரசு தலையிட்டு அப்பாவி பொதுமக்கள் மீது கை வைக்காதே என் புலிகளை எச்சரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

வீ ஆனந்தசங்கரி

தலைவர்

தமிழர் விடுதலை கூட்டணி

நகைச்சுவையை நகைச்சுவை பகுதியில் பிரசுரிக்காத குரலுக்கு கண்டனங்கள்.இதற்காக நண்பர் குரல் அவர்களை 1 வருடம் யாழ் இணையத்தில் இருந்து தடை செய்யும்படி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுகின்றேன் இதனை சக கருத்துகள உறவுகளும் வழிமொழிவார்கள் என நம்புகின்றேன் :huh::wub:

எச்சில் பிழைப்பு பிழைபவரின் அரசியல் வங்குரோத்தன அறிக்கை.

who is this V.Aadusankari (anandasankari) I think this guy was past away from the world? still he is?

thanks

அதுசரி குரல், எந்த ஊடகத்தில் இருந்து சங்கரியாரின் அலட்டலை இங்கு இணைத்துள்ளீர்கள்?. ஊடகத்தின் பெயரைக் குறிப்பிடாததினால், ஒருவேளை சங்கரியார் குரலுக்கு தனிமடலில் அனுப்பி யாழில் இணைக்கச் சொன்னரா?.

சென்ற முறையும் குரல், சங்கரியாரின் அலட்டல் ஒன்றை ஊடகத்தின் பெயரைக் குறிப்பிடாது இங்கு இணைத்துள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33799

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குப்பை நாய்களின் குரைப்புக்களை இங்கே கொட்டி புனிதமான யாழ் களத்தை தயவுசெய்து கெடுக்காதீர்கள்.

ஆன(நொ)ந்த சங்கரியின் சப்பைக்கட்டுகளை இங்கே இணைத்தமைக்கு "குரல்" அவர்களுக்கு நன்றிகள்.

அதற்கான சரியான பதிலை கொடுக்காமலோ அல்லது கொடுக்க வழியிலாமலோ யாழ்களம் தவிப்பது வருத்தத்திற்குரியது.

இது எதிரியின் பிரச்சாரத்திற்கு துணை போகும் செயலாகும்!

எதிரியின் பிரச்சார தாக்குதலுக்கு யாழ்களம் உரிய எதிர்வினையை ஆற்றி அதனை முறியடித்து போராட்டத்திற்கு வலுச் சோர்க்க வேண்டிய கடமையில் இருந்து தவறக் கூடாது!

நியாயத்தை ஆதாரங்கள் மற்றும் பக்குவமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பவற்றுடன் எடுத்துரைத்து எதிரி சங்கரிக்கு செலவு செய்யும் பணத்தை விழலுக்கு இறைத்த நீராக்குவோம்!

நகைச்சுவையை நகைச்சுவை பகுதியில் பிரசுரிக்காத குரலுக்கு கண்டனங்கள்.இதற்காக நண்பர் குரல் அவர்களை 1 வருடம் யாழ் இணையத்தில் இருந்து தடை செய்யும்படி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுகின்றேன் இதனை சக கருத்துகள உறவுகளும் வழிமொழிவார்கள் என நம்புகின்றேன்

நான் உங்களை வழிமொழிகின்றேன் ஈழவன்

திரு வீ ஆனந்தசங்கரி,

வணக்கம், நல்லாதான் அறிக்கை விடுகிறீர்கள், தாங்கள் விடுதலைப்புலிகள் நோக்கி வேண்டுகோல் விடுத்துள்ளீர்கள், நன்றி.

"மன்னார் சம்பவம் அரச படையினரின் ஊடுருவித்தாக்கும் பிரிவினரால் ஏற்பட்டதென்று விடுதலைப்புலிகள் கூறுவர்களேவானால் அவர்கள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் திறமையை இழந்துவிட்டார்கள் என ஒப்பு கொண்டு தமது போராளிகளை அரசிடம் சரணடைய வைக்கவேண்டும் -வீ ஆனந்தசங்கரி "

திறமையற்றவர்கள் திறமையானவர்களிடம் சரனடைய வேண்டும் என்பது தங்கள் நிலைபாடு என்றால், கீழ்கண்ட நிகழ்வுகளை சர்வதேசமே முண்டுக்கொடுத்து, உதவியும் தடுக்க முடியாத, தங்களை போன்றர்வர்கள் தொழுது போற்றும் பேரினவாத சிங்களவர்கள் திறமையானவர்களா? சிங்களதாசரே அவர்களை யாரிடம் சரணடைய சொல்கிறீர்கள்?

கோட்டை புகையிரத நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து 100 பொது மக்கள் படுகாயம் அடைந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

கண்டியிலிருந்து தம்புள்ள நோக்கி வந்த பேருந்தில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் மரணித்தும் 16 பேர் காயமுற்ற சம்பவமும்

கடந்த வாரம் கெப்பிற்றிக்கொலாவில் இனம் தெரியாத கடுமையாக பழுதடைந்திருந்த சடலங்கள் கிடங்குகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் 70உயிர்கள் பறித்தெடுக்கப்பட்டு படுகாயமடைந்த 150 பேருக்கு மேற்பட்டோருக்கு சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தி பல விதவைகள் அனாதைகள் அங்கவீனர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

பலம் குறைந்தவனின் மனைவி பலமுள்ளவனிடம் சோரம் போக வேண்டும் என்று கூறுவது போல் உள்ளது உங்கள் கூற்று?

விபீடணனாக இருப்பதை விடுத்து வீரராக மாறுங்கள்!

"வீ ஆனந்தசங்கரி, தலைவர், தமிழர் விடுதலை கூட்டணி" , சரி நீங்கள் யாரிடமிருந்து விடுதலை பெற தமிழர் விடுதலை கூட்டணி அமைத்துள்ளீர்கள்?

மக்களின் பதில்கள் ஊடகங்கள் வாயிலாக விபீடனர்களை செல்லுமிடமெல்லாம் துரத்திட வேண்டும்!

சளைக்காமல் முயலும் எதிரிக்கு நாமும் சளைக்காமல் பதில் கொடுப்போம்!

வீ ஆனந்தசங்கரி

தலைவர்

தமிழர் விடுதலை கூட்டணி

தம்பி ஆனந்த சங்குரி ..! நீயே அந்த ஆமியோட நிண்டு தமிழீழத்துக்கு போராடுற பெடியன்...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆன(நொ)ந்த சங்கரியின் சப்பைக்கட்டுகளை இங்கே இணைத்தமைக்கு "குரல்" அவர்களுக்கு நன்றிகள்.

அதற்கான சரியான பதிலை கொடுக்காமலோ அல்லது கொடுக்க வழியிலாமலோ யாழ்களம் தவிப்பது வருத்தத்திற்குரியது.

இது எதிரியின் பிரச்சாரத்திற்கு துணை போகும் செயலாகும்!

எதிரியின் பிரச்சார தாக்குதலுக்கு யாழ்களம் உரிய எதிர்வினையை ஆற்றி அதனை முறியடித்து போராட்டத்திற்கு வலுச் சோர்க்க வேண்டிய கடமையில் இருந்து தவறக் கூடாது!

நியாயத்தை ஆதாரங்கள் மற்றும் பக்குவமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பவற்றுடன் எடுத்துரைத்து எதிரி சங்கரிக்கு செலவு செய்யும் பணத்தை விழலுக்கு இறைத்த நீராக்குவோம்!

அய்யா!

சாணக்கியன் சங்கரியாரின் கருத்துக்களுக்கு பதில் நாம் எழுதித்தான் குட்டு உடைபட வேண்டும் என்ற நிலையே இல்லையே, வெறும் பிழைப்பனவு வித்தை என்பதை குழந்தைகூட அப்பட்டமாக அறியக்கூடிய சிங்கள விசுவாசம் தான் அங்கே மைய்யப் பட்டிருக்கும்.

புலிகள் தங்கள் பகுதிகளில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இராணுவத்தின் தாக்குதல்களை தடுக்கும் திறன் இல்லை என்றால் இராணுவத்திடம் சரணடைவதே நியாயம் என்றால்.

புலிகளால் எத்தனை இராணுவ இல்லக்குகள் தென்பகுதிகளில் மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது எனவே ஏன் சிங்கள இராணுவம் புலிகளிடம் சரணடைவதன் நியாயத்தன்மையை சங்கரியாரின் தர்க்கசாமர்த்தியம் ஏன் ஒதுக்கி வைத்திருக்கிறதாம்.

இந்தக் குரங்கு தமிழரின் பிரதிநிதி என்று சொல்ல என்ன அடிப்படை இருக்கிறது?

சிங்கள விசுவாசத்துக்கு செருப்புகாவிய புண்ணியத்தில் பதவி வாங்கி வைத்திருக்கின்றான்.

காட்டிக்கொடுக்கும் வரலாறுகளுக்கு போகும் வழிகளில் ஒன்றுதான் இந்த பீடையின் வாழ்கையும்!

அடுத்த விருது வாங்கவேணும் என்றா இப்படி எல்லாம்

அறிக்கை விடவேணும் :D

அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும்.

- ஆனந்தசங்கரி

இதில் இரண்டு கேள்விகள் உள்ளன.

ஒன்று: அப்பாவி பொது மக்கள் மீது கை வைப்பது யார்?

இரண்டு: யாராக இருந்தாலும், அவர்களை எச்சரிக்க இந்தியாவுக்கு தகுதி இருக்கா?

வாயில ஒரு பழமொழியும் வரமாட்டுதாம். யாராவது இதுக்கு ஒரு நல்ல பழமொழி சொல்லுங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இரண்டு கேள்விகள் உள்ளன.

ஒன்று: அப்பாவி பொது மக்கள் மீது கை வைப்பது யார்?

இரண்டு: யாராக இருந்தாலும்இ அவர்களை எச்சரிக்க இந்தியாவுக்கு தகுதி இருக்கா?

வாயில ஒரு பழமொழியும் வரமாட்டுதாம். யாராவது இதுக்கு ஒரு நல்ல பழமொழி சொல்லுங்கோ.

இவர் ஏன் எதற்கெடுத்தாலும் இந்தியா இந்தியா என்று கூப்பாடுபோடுகின்றார்???

எங்கே அடிபட்டாலும் ஒருமிருகம் காலைத்தான் தூக்குமாம்

இதுவும் அந்த நோய்தானோ???

அல்லது அந்த இனம்தானோ???

"எங்கே அடிபட்டாலும் ஒருமிருகம் காலைத்தான் தூக்குமாம்"

:D நல்லா இருக்கே பழமொழி. நன்றி குகதாசன்.

கிளிநொச்சிக்குப் போய் மாம்பழம் சாப்பிடும் ஆசை விட்டுவைக்குதில்லைப்போலும். அதான் சுந்தரியார் தன்னை அப்பாவித்தமிழனாக்கி மாம்பழம் சாப்பிட கிளிநொச்சி செல்லும்போது கைவைக்க வேண்டாமென கோரிக்கை விடுக்கிறார் போலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.