Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and car

இலங்கையில்.... X, Y, Z  என்ற ஆரம்ப எழுத்துடன், வாகனங்கள் இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்.

  • Replies 516
  • Views 131.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....!  👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

  • தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் :  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலு

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை மர்மக் குகைகள் கூறுவதென்ன? | தம்புள்ளை கற்பாறைக் குகைக் கோவில் 

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be a black-and-white image of 1 person and child

இரண்டாம் உலகப் போரின் போது 1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர்,
ஜோ ஓ டோனல் என்பவர் எடுத்த புகைப்படம்.

ஒரு ஜப்பானிய சிறுவன் ஒரு தகனம் / அடக்கம் செய்யும் இடத்தில், 
இறந்த தனது சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையில் நிற்கிறான்.

அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் கண்ணீரைக் கட்டுப்படுத்த 
தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால் வழியும் இரத்தம் 
சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது.

“நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு”என்று காவலர் கேட்டபோது,
“சுமப்பதற்கு கடினமாக உணர இது சரக்கு அல்ல, என் சகோதரன்” என்று 
சிறுவன் பதில் அளித்ததாக புகைப்படம் எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார்.

இன்றைக்கும் ஜப்பானில்,  இந்த புகைப்படம் 
வலிமையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறதாம்.

ஆம்,
எதை சுமக்குறோம் என்பதல்ல;
அதை எவ்வாறு உணர்கிறோம் என்பது முக்கியம்.

பணம் காசுகளுக்காக உறவினரை ஏமாற்றும்,
உடன் பிறந்தவரை துண்டிக்கும்
இன்றைய தலைமுறைக்கும், இதில்... பாடம் இருக்கிறது.

குறிப்பு : நான் பலமுறை இந்த கட்டுரை படித்து இருக்குறேன் 
ஏதோ மனித வாழ்வில் ஒரு அங்கம் போல் தெரிகிறது....... 

Joseph Anthony Raj

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Ethnic Groups of the United States 1820-2023 | US Population by Ancestry

 

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கருவில் இருக்கும் குழந்தை, கொட்டாவி விடுவது ஏன்? | Detailed explanation of yawning 

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2024-ly-ex.jpg

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 
434933331_6902668086503966_2233529687811
 
தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளைப் பேசிவரும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை மொழிவாரியாகக் கீழே தரப்பட்டுள்ளன.
TAMIL = 88.37% தமிழ்
TELUGU = 5.87% தெலுங்கு
KANNADA = 1.78% கன்னடம்
URUDU = 1.75% உருது
MALAYALAM = 1.01% மலையாளம்
HINDI = 0.55% இந்தி
சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் 50 பேர் மட்டுமே என்கிறது 2011 கணக்கெடுப்பு
#தமிழ் - இந்தியாவில் மொத்தம் 6,90,26,881 மக்கள் தமிழ் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 6,37,53,997 மக்கள் வசித்து வருகின்றனர்.
#தெலுங்கு - இந்தியாவில் மொத்தம் 8,11,27,740 மக்கள்தெலுங்கு மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 42,34,302 மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த தெலுங்கர்களின் 5.21% மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்
#கன்னடம் - இந்தியாவில் மொத்தம் 3,79,24,011 மக்கள் கன்னடம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 10,45,238 மக்கள் வசித்து வருகின்றனர்.
#உருது - இந்தியாவில் மொத்தம் 5,07,72,631 மக்கள் உருது மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 12,64,537 மக்கள் வசித்து வருகின்றனர்.
#மலையாளம் - இந்தியாவில் மொத்தம் 3,30,66,392 மக்கள் மலையாளம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,705 மக்கள் வசித்து வருகின்றனர்.
#சௌராட்டிரம் - இந்தியாவில் மொத்தம் 3, 61,000 மக்கள் சௌராட்டிர மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 2, 41,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
#இந்தி - இந்தியாவில் மொத்தம் 42,20,48,642 மக்கள் இந்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 1,89,474 மக்கள் வசித்து வருகின்றனர்.
#மராத்தி - இந்தியாவில் மொத்தம் 7,19,36,894 மக்கள் மராத்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 60,614மக்கள் வசித்து வருகின்றனர்.
#ஆங்கிலம் - இந்தியாவில் மொத்தம் 2,26,449 மக்கள் ஆங்கிலம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 25,151 மக்கள் வசித்து வருகின்றனர்.
#வங்காளம் - இந்தியாவில் மொத்தம் 8,33,69,769 மக்கள் வங்காளம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8,805 மக்கள் வசித்து வருகின்றனர்.
#சிந்தி - இந்தியாவில் மொத்தம் 27,72,264 மக்கள் சிந்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8,448 மக்கள் வசித்து வருகின்றனர்.
#ஒரியா - இந்தியாவில் மொத்தம் 3,30,17,446 மக்கள் ஒரியா மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 6,154 மக்கள் வசித்து வருகின்றனர்.
#பஞ்சாபி - இந்தியாவில் மொத்தம் 2,91,02,477 மக்கள் பஞ்சாபி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 5,696 மக்கள் வசித்து வருகின்றனர்.
#கொங்கணி - இந்தியாவில் மொத்தம் 24,89,015 மக்கள் கொங்கணி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 4,657 மக்கள் வசித்து வருகின்றனர்.
#நேபாளி - இந்தியாவில் மொத்தம் 28,71,749 மக்கள் நேபாளி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 4,323 மக்கள் வசித்து வருகின்றனர்.
#துளு - இந்தியாவில் மொத்தம் 17,22,768 மக்கள் துளு மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 1,872 மக்கள் வசித்து வருகின்றனர்
#அசாமிய - இந்தியாவில் மொத்தம் 1,31,68,484 மக்கள் அசாமிய மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 527 மக்கள் வசித்து வருகின்றனர்.
#அரபி - இந்தியாவில் மொத்தம் 51,728 மக்கள் அரபி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 404 மக்கள் வசித்து வருகின்றனர்
#மணிப்பூரி - இந்தியாவில் மொத்தம் 14,66,705 மக்கள் மணிப்பூரி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 370 மக்கள் வசித்து வருகின்றனர்.
#சமஸ்கிருதம் - இந்தியாவில் மொத்தம் 14,135 மக்கள் சமஸ்கிருதம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 50 மக்கள் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆதி மொழியை 298 நபர்களும், பிலிமொழியை 708 நபர்களும், கொடகுமொழியை 111 நபர்களும், காரோமொழியை 17 நபர்களும், கோண்டிமொழியை 30 நபர்களும், ஹாலம்மொழியை 10 நபர்களும், கர்பிமொழியை 29 நபர்களும், காந்தேசிமொழியை 67 நபர்களும், காரியாமொழியை 14 நபர்களும், கோண்ட்மொழியை 20 நபர்களும், கோடமொழியை 262 நபர்களும், கோர்வாமொழியை 14 நபர்களும், குரூக்மொழியை 76 நபர்களும், லஹவ்லிமொழியை 33 நபர்களும், லஹண்டாமொழியை 37 நபர்களும், லுசாய்மொழியை 82 நபர்களும், முண்டாமொழியை 30 நபர்களும், முண்டாரிமொழியை 14 நபர்களும், நிகோபரிசிமொழியை 25 நபர்களும், பார்ஜிமொழியை 10 நபர்களும், பார்சிமொழியை 8 நபர்களும், தாடோமொழியை 56 நபர்களும், திபேதிமொழியை 191 நபர்களும் பேசி வருகின்றனர்
 
ஆதாரம் - இந்திய மக்கள் தொகை மொழிவாரி கணக்கெடுப்பு 2011
 
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

447175217_7930424216988404_2710869254250

படத்தில் நீங்கள் பார்க்கும் மரங்கள் நடமாடும் மரங்கள் என்றால் நம்புவீர்களா?
ஆம், பனை இனத்தைச் சேர்ந்த (Socratia exorrhiza,) எனப்படும் இந்த மரங்களை நடமாடும் மரங்கள் என தாவரவியல் விஞ்ஞானிகள்  அழைக்கின்றனர்.
தென் அமெரிக்காவில் ஈரப்பதமான வெப்பமண்டல காடுகளில் நிலத்தில் மிதந்து வளரும் இம்மரங்களானது, கால்களைப் போன்ற அதிசய வேர்களை பெற்றிருக்கும். 
வளமான மண்ணையும் சூரிய வெளிச்சத்தையும் தேடி நாளந்தம் 2-3 சென்டிமீட்டர் வீதம் வருடாந்தம் 20 மீட்டர் வரை நகர்ந்து செல்ல வல்லவை.
அவைகள் நகரும் திசையில் புதிய வேர்கள் வளர்ந்து வேர்பதிக்கும். பின் வேர்கள் அப்படியே இறந்து போகும். இந்த வளர்ச்சி அங்குலம் அங்குலமாகவே தொடரும்.

✍ தமிழாக்கம் / imran farook

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

படத்தில் நீங்கள் பார்க்கும் மரங்கள் நடமாடும் மரங்கள் என்றால் நம்புவீர்களா?
ஆம், பனை இனத்தைச் சேர்ந்த (Socratia exorrhiza,) எனப்படும் இந்த மரங்களை நடமாடும் மரங்கள் என தாவரவியல் விஞ்ஞானிகள்  அழைக்கின்றனர்.

நாம நட்டுவிட பக்கத்து வீட்டுகாரன்ரை வளவுக்குள் போக பிரச்சனை வராதோ?

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

451299062_491229546778350_42121557397426

ஒரு நாளைக்கு... 3 கோடி வீதம் செலவு செய்தாலும், அம்பானியின் சொத்து கரைய 932 ஆண்டுகள் ஆகுமாம். 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

456443208_521118553822866_78454360157019

இவ தான்...  ஹலோ.

 "போனை எடுக்கும்போது 'ஹலோ' சொல்வோம். 
ஆனால் 'ஹலோ' என்றால் என்ன?
இது வாழ்த்து அல்ல, ஒருவரின் பெயர்.

இது 'மார்கரெட் ஹலோ' என்ற தொலைபேசி கண்டுபிடிப்பாளர்
 'கிரஹாம் பெல்லின் வருங்கால மனைவி.'தான் கண்டுபிடித்த ஆரம்ப சோதனையில் 
அவர் சொன்ன முதல் வார்த்தை 'ஹலோ' தான்,
உலகளவில் எந்த தொலைபேசி அழைப்பின் தொடக்கமாக 
அது அன்றிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. "

Jahir Hussain

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எத்தியோப்பியா £5 பில்லியன் செலவில் "மிகப்பெரும் விமான நிலையத்தை" உருவாக்குகிறது, இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விமான நிலையமாகவும், உலகளவில் பரபரப்பான விமான நிலையமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிஸ் அபாபாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள பிஷோப்டுவில் அமைந்துள்ள புதிய விமான நிலையம், 2029 இல் நிறைவடைந்ததும் ஆண்டுதோறும் 110 மில்லியன் பயணிகளால் பயண்படுத்தப்படும் அல்-ஹண்டாசா ஆலோசகர்களுடன் இணைந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தலைமையிலான இந்த திட்டம், ஒரு அதிநவீன முனையம் மற்றும் நான்கு ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது.
தற்போது, அடிஸ் அபாபாவின் போலே சர்வதேச விமான நிலையம், கடல் மட்டத்திலிருந்து 2,334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, எத்தியோப்பியா ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக அதன் நிலையை உறுதிப்படுத்துவதால் நெரிசலை எதிர்கொள்கிறது.
"மெகா ஏர்போர்ட் சிட்டி" இந்த நெருக்கடியைத் தணிப்பது மட்டுமின்றி எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும், சர்வதேச வணிகம் மற்றும் சுற்றுலாத்துறையில் நாட்டை ஒரு முக்கியப் பங்காளராக நிலைநிறுத்துகிறது. துபாய் மற்றும் ஹீத்ரோ போன்ற உலகளாவிய விமான நிலையங்களுக்கு போட்டியாக இந்த புதிய திட்டம் உள்ளது
May be an image of aircraft
 
 
 
 
 
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

481206915_1047307674090684_1320305242245

உங்களுக்கு தெரியுமா

உலகின் மிகக் குறுகிய நதி எது?

ஹுவாலை (Hualai) நதி.

இந்த அற்புதமான நதி வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ளது.

இதன் அகலம் 10-14 சென்டி மீட்டர் மட்டுமே. இருப்பினும், இது 17 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

TNPSC TAMIL

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25 Most Populous Countries in The World (2025)


1. 🇮🇳 India - 1,463,865,525 (1.46B)
2. 🇨🇳 China - 1,416,096,094 (1.42B)
3. 🇺🇸 United States - 347,275,807 (347M)
4. 🇮🇩 Indonesia - 285,721,236 (286M)
5. 🇵🇰 Pakistan - 255,219,554 (255M)
6. 🇳🇬 Nigeria - 237,527,782 (238M)
7. 🇧🇷 Brazil - 212,812,405 (213M)
8. 🇧🇩 Bangladesh - 175,686,899 (176M)
9. 🇷🇺 Russia - 143,997,393 (144M)
10. 🇪🇹 Ethiopia - 135,472,051 (135M)
11. 🇲🇽 Mexico - 131,946,900 (132M)
12. 🇯🇵 Japan - 123,103,479 (123M)
13. 🇪🇬 Egypt - 118,365,995 (118M)
14. 🇵🇭 Philippines - 116,786,962 (117M)
15. 🇨🇩 DR Congo - 112,832,473 (113M)
16. 🇻🇳 Vietnam - 101,598,527 (102M)
17. 🇮🇷 Iran - 92,417,681 (92M)
18. 🇹🇷 Turkey - 87,685,426 (88M)
19. 🇩🇪 Germany - 84,075,075 (84M)
20. 🇹🇭 Thailand - 71,619,863 (72M)
21. 🇹🇿 Tanzania - 70,545,865 (71M)
22. 🇬🇧 United Kingdom - 69,551,332 (70M)
23. 🇫🇷 France - 66,650,804 (67M)
24. 🇿🇦 South Africa - 64,747,319 (65M)
25. 🇮🇹 Italy - 59,146,260 (59M)
Source: World Population Review

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரப்பான் பூச்சி இறவான்!


karappan.jpg


திரு.முகில்

‘Katsaridaphobia’ என்ற கடினமான வார்த்தைக்குப் பொருள் தெரிந்து கொள்வதுகூட சிலருக்குப் பயமாகவோ, அருவருப்பாகவோ இருக்கலாம். ‘‘கரப்பான் பூச்சி மீதான அதீத பயம்’’ என்பதே அதற்கான அர்த்தம். அந்த போபியா உள்ளோர் தயவுசெய்து இந்தக் கட்டுரையை வாசிப்பதைத் தவிர்க்கவும். நன்றி.

இந்த உலகமே எங்களை எதிர்த்தாலும், எங்களைக் கொல்றதுக்கும் ஒழிக்கிறதுக்கும் என்னென்னமோ வழிமுறைகளைக் கண்டுபிடிச்சு சண்டை செஞ்சாலும், நாங்களா எங்களை அழிச்சுக்குற வரை எவனாலும் எங்கேயும் எப்பவும் எங்க இனத்தை ஜெயிக்கவே முடியாது – நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு மாஸ் பன்ச் டயலாக் பேசத் தகுதி கொண்ட உலகின் ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி மட்டுமே. டைனோசருக்கும் மூத்தக்குடி. இந்த பூமியை ஆதிக்கம் செய்த எத்தனையோ உயிரினங்கள், ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருக்கின்றன. பூமியில் எந்த மாதிரியான பேரழிவு நேர்ந்தாலும் அழியவே அழியாதது, ஒன் அன்ட் ஒன்லி கரப்பான்பூச்சி வகையறாதான்!

ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இந்தப் பூவுலகில் வாழ்வதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இன்னும் கண்டறியப்படாத கரப்பான்பூச்சிகளும் உலகில் நிச்சயம் இருக்கும். இவை எந்தவிதமான தட்பவெப்பச் சூழ்நிலைகளிலும் வாழக்கூடியவை. பகல் நேரங்களில் மறைவாக இருக்கும். இரவில் வெளிவந்து இரை தேடும். எப்போதும் நைட் ட்யூட்டிதான். ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேர உறக்கம். சுகவாசி!

காட்டில் வாழும் கரப்பான் பூச்சிகள், பழைய இலைக் குவியல்களிலும், மரத்தின் தண்டுகளிலும், உயரமான மரக்கிளைகளிலும் வாழ்கின்றன. மனிதனோடு சேர்ந்து வாழும் கரப்பான் பூச்சிகள், சுத்தம் செய்யப்படாத சமையலறை, குளியலறை, கழிவறை, அழுக்குகள் நிறைந்த இடங்களில் குடித்தனம் நடத்துகின்றன. அது இது எது கிடைத்தாலும் உண்ணும். அனைத்துண்ணி. ஆங்கிலத்தில் குறிப்பிடுவதென்றால் Omnivores. இவை தம் உடல் வெப்பநிலைக்கேற்ப உணவுகளைச் சாப்பிடுகின்றன. அப்படிச் சாப்பிடும் முன்பாக உணவைச் சிறு சிறு துண்டுகளாக்கிய பின்னரே சாப்பிட ஆரம்பிக்கின்றன. நொறுங்கத் தின்றால் நூறு வயது. அது மனிதனுக்கு. அமெரிக்க இன ஆண் கரப்பான் பூச்சியின் ஆயுட்காலம் சுமார் ஓர் ஆண்டு மட்டுமே. ஜெர்மன் இன ஆண் கரப்பான் பூச்சி சுமார் 100 நாள்கள் வாழும். ஓரியண்டல் இன ஆண் கரப்பானின் வாழ்நாள்கள் சுமார் 160. இந்த எல்லா இனங்களிலுமே பெண் கரப்பான் பூச்சிகள் ஆண்களைவிடக் கூடுதல் காலம் வாழ்கின்றன. பெருமைமிகு பெண்ணாதிக்கம்!

சரி, குறைந்த காலமே வாழும் கரப்பான் பூச்சி, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, தொடர்ந்து உலகில் நிலைத்திருக்கக் காரணம் என்ன? பிறந்த சில வாரங்களிலேயே கரப்பான் பூச்சிகள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகி விடுகின்றன. உதாரணத்துக்கு ஓர் இந்தியன் இன பெண் கரப்பான் பூச்சியானது, தன் வாழ்நாளில் 13 முறை முட்டைகள் நிரம்பிய ஓடுகளை (Oothecae) இடுகின்றன. ஒவ்வொர் ஓட்டிலும் 16 முட்டைகள் வரை இருக்கும். அவற்றில் தக்கன பிழைத்து அடுத்த தலைமுறை கரப்பான் பூச்சிகளாக வெளிவருகின்றன. இந்த விதத்தில் பார்த்தால் ஓர் இந்திய இன பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் சுமார் 200 வாரிசுகளை உருவாக்குகிறது. ஓர் அமெரிக்க இன பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் அதிகபட்சம் 300 வாரிசுகள் வரை உருவாக்குகிறது.

ஆக, வருடந்தோறும் அடுத்தடுத்தடுத்தடுத்தடுத்தத் தலைமுறைகளை கரப்பான் பூச்சிகள் உருவாக்கி, பெருக்கிக் கொண்டே செல்கின்றன. அதுமட்டுமின்றி, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அபரிமிதமாகப் பெருக்கிக் கொள்கின்றன. அந்தச் சக்தியானது மரபணுக்கள் வழியே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. ஆக, ‘எங்க இனத்துக்கு அழிவே இல்லடா!’ என்ற ஆணவத்துடன் கரப்பான் பூச்சிகள் இப்புவியில் பெருகிக் கொண்டே செல்கின்றன. இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் உலகமே கரப்பான் பூச்சிகளால் நிரம்பியிருக்கும் என்றொரு தியரியும் கற்பனை செய்யப்படுவதுண்டு. அது நிஜமாவதற்கும் வாய்ப்பு உண்டு.

உலகில் ‘பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்’ எல்லாம் கரப்பான் பூச்சியையே பெரிதும் நம்பிப் பிழைத்திருக்கின்றன. எவ்வளவு வீரியமான வேதி மருந்தைப் பிரயோகித்தாலும் ‘Better Luck Next Time’ என்று கரப்பான் பூச்சிகள், மனிதனை பாவமாகப் பார்த்துவிட்டு, உடலை சிலுப்பிக் கொண்டு நகர்கின்றன. அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஜெர்மன் கரப்பான் பூச்சிகள், பல்வேறு தலைமுறைகளாகப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான, கடுமையான எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பதையும், அடுத்தடுத்த தலைமுறை கரப்பான் பூச்சிகளுக்கு இந்த எதிர்ப்பு சக்தியானது பல மடங்கு பெருகி வருவதையும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆக, புராதன பூச்சிக்கொல்லிகளும், வீரியமிக்க வேதிப்பொருள்களையும் தெளித்தால், ‘பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்று சாரலில் நனைவதுபோல அசால்ட்டாகக் கடந்துவிடுகின்றன கரப்பான் பூச்சிகள்.

‘வருங்காலத்தில் வேதிப்பொருள்களைக் கொண்டு கரப்பான் பூச்சிகளைக் கொல்வது இயலாத காரியமாகிவிடும். அதைவிட பயங்கரமான ஒன்று தேவைப்படும்’ என்று ஆய்வாளர் மைக்கேல் ஸ்கார்ஃப் தெரிவித்திருக்கிறார். பயந்து கிடக்கிறது மனித குலம். காரணம், மனிதர்களுக்கு நோய் பரப்பும் சேவையைச் செய்வதிலும் கரப்பான் பூச்சி பிரதான இடம் வகிக்கிறது. ஆனால், எவ்வளவு அசுத்தமான இடத்தில் வாழ்ந்தாலும் கரப்பான்களுக்கு மட்டும் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை. இந்த இடத்தில் சூப்பர் ஸ்டார் கரப்பான் சொல்லும் பன்ச் : கிருமியெல்லாம் என்னை எதுவும் பண்ண முடியாது. ஏன்னா, நானே நடமாடும் கிருமிடா! (அவசியக் குறிப்பு : கரப்பான் பூச்சிகளில் சில இனங்கள் மட்டுமே நோய் பரப்பும் தன்மை கொண்டவை.)

பாத்ரூமுக்குள் நுழையும்போதெல்லாம் கரப்பான் பூச்சி இருக்கிறதா, இல்லையா என்று பார்த்துப் பார்த்துப் பயந்தபடியே நுழைபவர்கள் இருக்கிறார்கள். கரப்பான் பூச்சியைக் கண்டால் ஹைடெசிபலில் கத்திக் கூச்சலிடுபவர்கள் இருக்கிறார்கள். கரப்பான் பூச்சி குறித்த பாடம் எடுக்க வேண்டியது இருந்ததால், தன் ஆசிரியர் பணியையே ஒருவர் விட்டிருக்கிறார். கரப்பான் பூச்சியைப் பார்க்கும்போதெல்லாம் ரத்த அழுத்தம் அதிகமாவது, கை, கால்கள் நடுங்குவது, பலத்த மூச்சு வாங்குவது, அதிகம் வியர்ப்பது, உறைந்து, செயலிழந்து நிற்பது, அதிகபட்சமாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுவது வரை பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார். சிறு வயதிலேயே கரப்பான் பூச்சி மீதான ஆழமான பயம் மனத்தில் பதிந்துவிட்டால், அந்த மனிதர்களின் வாழ்க்கை முழுக்க இந்தச் சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். அதே மனிதர்கள் வாழும் உலகில்தான் ‘காக்ரோச் அறுபத்தைந்து’ கொறிப்பவர்களும் வாழ்கிறார்கள். எனில், அவர்களுக்கு கிருமி பயம் இல்லையா?

https://aalumaisirpi.com/?p=6537

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருமைக்குரிய பிணந்தின்னிகள்!


animal.jpg

http://aalumaisirpi.com/wp-content/uploads/2025/01/animal.jpg
திரு.முகில்

குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடவே கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த வசனம் டோராவின் குரலில் ஒலித்தே தீரும். எல்லோருக்கும் நன்மைகள் செய்யும் டோரா – புஜ்ஜி பாத்திரங்களுக்குத் தீமைகள் விளைவிப்பது குள்ளநரி. அந்தக் கார்ட்டூனில் மட்டுமல்ல. காலம் காலமாக நரியை நெகட்டிவ் உயிரினமாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். பாட்டி வடை சுட்ட கதையிலும் நரியே வில்லன்.

நரிக்கு உபதேசம் செய்தாற்போல. நரி நக்கி கடல்நீர் வற்றுமா? நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும். நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன. கடிக்காமல் போனால் சரி. பாழான ஊருக்கு நரி ராஜாவாம். சிங்கம் இல்லாத இடத்தில் நரி சிம்மாசனம் ஏறும். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இப்படி நம் பழமொழிகளில்கூட பெரும்பாலும் நரிமீது ‘கருப்பு ஒளியே’ பாய்கிறது. நரி அவ்வளவு மோசமான விலங்கா? அதன் வாழ்க்கை எப்படிப்பட்டது? மனிதனுக்கும் நரிக்குமான உறவு எப்படிப்பட்டது? இந்தப் பூமியில் நரியின் பங்களிப்பு என்ன? நரியைவிட மோசமான உயிரினம் எது? எல்லாவற்றையும் பார்ப்போம்.

நரிகள் (Fox), பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவை அனைத்துண்ணிகள். ஆசியா, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு நாட்டு நாயின் அளவில் நரிகள் இருக்கின்றன. அதைவிடச் சிறிய அளவு கொண்ட நரி வகைகளும் உண்டு. மண்ணுக்கடியில் வளைகள் அமைத்து வாழும் இயல்புடையவை. உணவு சேமித்து வைக்கவும் உறங்கவும் வளைகளைப் பயன்படுத்துகின்றன. அதில் ஆபத்துக் காலத்தில் தப்பித்து வெளியேறுவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்களை அமைத்துக் கொள்கின்றன. தந்திரம்!

நரிகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. இரவு நேரங்களில் அவற்றால் தெளிவாகப் பார்க்க இயலும். ஆகவே, அப்போது வேட்டையாடுகின்றன. இதன் காதுகள், பூமிக்கடியில் எலி போன்ற உயிரினங்கள் எழுப்பும் சத்தங்களைக்கூட உணரும் திறன் கொண்டவை. அதேபோல, நரிகள் வெவ்வேறு வகையான குரல்களை அடையாளம் காணக்கூடியவை. மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. சுறுசுறுப்பு!

ஒரு பெண் நரியானது பொதுவாக இரண்டு முதல் ஏழு குட்டிகள் வரை ஈனும். குட்டிகளைத் தாயும் தந்தையும் சேர்ந்து பராமரிக்கின்றன. மூத்த சகோதர, சகோதரி நரிகளும் உணவு தேடி வந்து கொடுத்து உதவுகின்றன. பாசம்!
பொதுவாக நரிகள் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. மிருகக்காட்சிச் சாலையிலோ, மனிதனின் பராமரிப்பிலோ இருந்தால் சுமார் 10 ஆண்டுகள்கூட உயிர் வாழ்கின்றன.

பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் நரிகள் செழித்து வாழ்ந்திருக்கின்றன. நரியிற்கு ஊண் நல் யாண்டும் தீ யாண்டும் இல் – முன்றுரையனார் என்ற புலவர் எழுதிய பழமொழி நானூறு பாடல், நரியை வில்லனாகவே காட்டுகிறது. நரிக்கு உணவு உண்பதில் நல்ல காலம், கெட்ட காலம் என்றெல்லாம் கிடையாது. அது எப்போதும் வஞ்சகக் குணத்துடனேயே இருக்கும். நரியைப் போலவே பண்புகளைக் கற்றுக் கொள்ளாத கயவர்கள், வறுமை உள்ள காலத்திலும் தீமைகள் செய்வார்கள். வளமாக இருக்கும்போதும் தீமைகள் செய்வார்கள். அவர்களுக்கு நல்ல வழியே தெரியாது. மனிதனின் கெட்ட புத்திக்காக, நரிக்குக் குட்டு வைத்திருக்கிறார் முன்றுரையனார்.

சங்க இலக்கியத்தில் ‘கணநரி’ வலம் வருகிறது. ஆங்கிலத்தில் Jackal. குறுநரி, குழிநரி, குள்ளநரி என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இவை கூட்டமாகக் காணப்படும். கும்பலாகச் சென்றே வேட்டையாடும். கோரஸாக ஊளையிடும்.

கணநரிகள் போர்க்களத்தில் இறைந்து கிடக்கும் பிணத்தின் கொழுப்பைத் தின்றதாகச் சங்கப் பாடல்கள் காட்சிப்படுத்துகின்றன. கணநரிகள் காடுகளிலும் பாலைவனங்களிலும் தோட்டங்களிலும் வீடுகளின் அருகிலும் வாழும். பகல்களில் இவற்றைப் பெரும்பாலும் பார்க்க இயலாது. இரவுகளில் ஊளையிடும் சத்தம் மூலமாக இவற்றின் இருப்பை அறியலாம். இரவெல்லாம் திரிபவை, விடியற்காலையில் பதுங்கி விடும். அப்படியும் ஒன்றிரண்டு மனிதர்கள் பார்வைக்கு அரிதாகத் தென்படும். அதைத்தான் ‘நரி முகத்தில் விழித்ததுபோல’ என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். இதைக் காலப்போக்கில் அதிர்ஷ்டத்தோடு இணைத்துக் கொண்டார்கள். இன்னிக்கு நரி முகத்துல முழிச்சிருக்கேன்!

‘‘நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி’’’ என்கிறது நற்றிணை. போரினில் வீழ்ந்து கிடக்கின்ற மனிதர்களின் பிணங்கள். நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய எருவைக் கழுகு அவற்றைத் தின்ன வருகிறது. அவற்றுடன் போராடி விரட்டிவிட்டு, சதைகளைத் தானே தின்கின்றன நரிகள். பின்பு உண்ண நீர் கிடைக்காமலும், உறங்க நிழலிடம் கிடைக்காமலும் அலைந்து வருந்துகின்றன என்பதாக இந்தப் பாடல் பொருள் தருகிறது. பேயும் கணங்களும் நரியும் திரிகின்ற இந்தப் போர்க்களத்திலே, ஊன் தின்று சிவந்த செவியுடைய கழுகுகளும் காண்பது அச்சம் தருவதாக இருக்கிறது என்று காட்சிப்படுத்துக்கிறது புறநானூறு.

பிணம் தின்னும் உயிரினங்கள் எப்போதும் கொடூரமான ஒன்றாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குச் சங்க இலக்கியங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த உயிரினங்களால்தாம் இந்த மண்ணின் சுற்றுச்சூழலானது பாதுகாக்கப்படுகிறது. நரியோடு எப்போதும் தொடர்புபடுத்திப் பேசப்படும் பிணந்திண்ணிக் கழுகுகள் குறித்தும் சில வார்த்தைகள் இங்கே, அவற்றின் தன்னிகரற்றச் சேவைக்காக.

பாலை நிலத்தின் அடையாளப் பறவை, பிணந்தின்னிக்கழுகுகள். இவற்றுக்கு மஞ்சள் பாறு, மஞ்சள் முகப் பாறு, திருக்கழுக்குன்றக் கழுகு, எகிப்திய பிணந்தின்னிக்கழுகு, வெள்ளைக் கழுகு எனப் பல பெயர்கள் உண்டு. அசிங்கமான, அருவருப்பான, கொடூரமான பறவையாக இவை அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவையே பாலை நிலத்தின் பிரதான தூய்மைப் பணியாளர்கள்.

இந்தப் பிணந்தின்னிக்கழுகுகளுக்கும் பார்சி மக்களுக்குமான உறவு, தனித்துவமானது. பார்சி இனத்தைச் சார்ந்தவர்கள் இயற்கையை நேசிக்கும் இயல்பைக் கொண்டவர்கள். இறந்த பிறகுகூட, அவர்களது உடலானது இயற்கையான முறையிலேயே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அதற்காகவே ‘டோக்மா’ என்ற கோபுரங்களைக் கட்டினார்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து சற்றே தள்ளி, உயரமான, வட்ட வடிவமான, கூரைகளே இல்லாத இந்த ‘இறுதிச் சடங்கு கோபுரங்கள்’ அமைக்கப்பட்டன.

இறந்த ஒரு பார்சியின் உடல் இந்தக் கோபுரத்தில் வைக்கப்படுகிறது. அங்கே பிணந்தின்னிக் கழுகுகள், செம்பருந்துகள் வருகின்றன. அவை உடலின் சதைகளைத் தின்ன ஆரம்பிக்கின்றன. உடலானது அழுகும் முன்பே வேகமாகத் தின்று முடிக்கின்றன. இந்தக் கழுகுகளிலும் வகைகள் இருக்கின்றன. ஒரு வகைக் கழுகுகள் சதையை மட்டும் உண்கின்றன. இன்னொரு வகைக் கழுகுகளோ தோலை உண்கின்றன. இன்னொன்று எலும்பைச் சாப்பிடுகின்றன. வேறோரு வகைக் கழுகுகளோ மிச்சம் மீதியை உண்கின்றன. இப்படியாக ஓர் உடலின் ஒவ்வொரு பகுதியையுமே உண்டு, அகற்றி, அந்தச் சூழலைச் தூய்மைப்படுத்தும் உயிரினங்களாக இந்தக் கழுகுகள் தொடர்ந்து சேவை ஆற்றிக் கொண்டே இருக்கின்றன.

இந்தக் கழுகுகள் வருடத்துக்கு ஒரு முட்டைதான் இடும். அந்தக் குஞ்சும் பிரச்னையின்றி வெளியே வந்து பிழைத்து வாழ்வது சவாலான காரியம்தான். அதனால்தான் இந்தக் கழுகு இனம் பெருகுவதைவிட, அழியும் வேகம் அதிகமாக இருக்கிறது. சூழல் மாற்றங்களும் அதற்கு முக்கியக் காரணம். மனிதனும் இந்தக் கழுகு இனத்தை மறைமுகமாக அழித்துக் கொண்டிருக்கிறான்.

மாடுகளுக்கு, Diclofenac என்ற வலிநிவாரண மருந்து சில மருத்துவக் காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது. அந்த மாடு இறந்தபின் அதன் சடலத்தை மனிதன் ஆளற்ற பகுதிகளில் போடும்போது, கழுகுகள் அதை உண்ண வருகின்றன. அதை உண்ணும்போது Diclofenac மருந்தால், கழுகுகளின் சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அதன்பின் அவை இறந்து போகின்றன. பிணந்தின்னிக்கழுகுகளின் வேகமாக அழிவதற்கு முக்கியமான காரணமாக இது கருதப்படுகிறது.

https://aalumaisirpi.com/?p=6477

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

550726376_774459785500950_79964638781729

🐛 பிளாஸ்டிக்கைத் தின்னும் பூச்சிகள்! வாக்ஸ்வார்ம் (Waxworm) பூச்சிகள் 24 மணி நேரத்தில் ஒரு பிளாஸ்டிக் பையை முழுவதும் தின்றுவிடும் – ஆனால் சில நாட்களில் அவை இறந்துவிடுகின்றன.

அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தது என்னவென்றால், வாக்ஸ்வார்ம் பூச்சிகள் பிளாஸ்டிக்கையே உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மையுடையவை. சில பூச்சிகள் சேர்ந்து ஒரு பிளாஸ்டிக் பையை 24 மணி நேரத்திலேயே தின்றுவிடும் சக்தி கொண்டவை. இது பிளாஸ்டிக் மாசுபாடு குறைப்பதில் புதிய நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், இந்த உணவு அவற்றுக்கு இயற்கையானதல்லாததால், சில நாட்களில் அவை உயிரிழந்து விடுகின்றன. எனவே, பூச்சிகளை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, விஞ்ஞானிகள் அவற்றின் உடலில் இருக்கும் சிறப்பு என்சைம்களை (enzymes) ஆராய்ந்து, அதை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் வழிகளைத் தேடி வருகின்றனர். இது வெற்றிகரமாக செயல்பட்டால், உலகளாவிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 🌍♻️

Tamil Trending Newsz

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.