-
Tell a friend
-
Topics
-
Posts
-
படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், மேலே கதையைப் பார்த்தால் நான் பார்த்த Borderland என்ற பின்லாந்து கிரைம் திரில்லர் தொடரில் வந்த ஒரு கதை போல இருக்கிறது! இன்ஸ்பிரேசனா அல்லது முழுதாகச் சுட்டார்களா என்பதைப் பார்த்த பின் சொல்ல முடியும்!
-
பிரபா, நீங்கள் வாசித்த கட்டுரையை எழுதியவர்கள் குறிப்பிடாத விடயங்கள் சில இருக்கின்றன: புலிகளால் அழிக்கப் பட்ட இயக்கங்களில் இடதுசாரிவாதம் இருந்தது. புலிகளிடம் தேசியவாதம் மட்டுமே இருந்தது. அந்த இயக்கங்களை ஸ்தீரி லோலன்களாக மட்டுமே சுட்டிக் காட்டும் வரலாறு மட்டுமே புலிகளின் சார்பானவர்களால் இன்று எழுதப் படுகின்றன. நான் நினைக்கிறேன் 1984/85 வரை யாழில் மேதின ஊர்வலம் நடத்தி வந்த இடது சாரிகளை "சிவப்புக் கொடியை இனி மடிச்சு வைச்சு விட்டு, புலிக் கொடியைத் தூக்கிப் பிடியுங்கோ!" என்று புலிகள் சொன்னதோடு வடக்கில் இடது சாரிகள் மௌனமாகி விட்டனர். எனவே, "இடது சாரிப் பரதேசிகள்" என்ன செய்தார்கள் என்று கேட்போர், குறைந்த பட்சம் முதலில் நூலகம் சென்று தேடிப் பார்த்து விட்டு அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.
-
நன்றி சகோ இங்கே எம் போன்றோரை அமைதியாக்கும் வேலை தான் நடக்கிறதே தவிர செயற்பாடு ஏதுமில்லை இங்கே உங்களது செயற்பாடுகள் என்ன என்பதும் தனிப்பட எவரையும் சுட்டிக்காட்டுவதல்ல சகோ.... அப்படி ஏதாவது இருந்தால் நல்லது என்பதே.... அவர்கள் எம்மை கேள்வி கேட்கலாம் நாம் உங்களது செயற்பாடுகள் பற்றிக்கேட்டால் அது தனி நபர் சார்ந்ததாக்கி விடுவார்கள் வீட்டுக்குள்ளிருந்து ஒரு கையை தட்டினன் சத்தமாக இருந்தது என்பதையும் ஏற்க அறிவு வேண்டுமாம்
-
By பிழம்பு · பதியப்பட்டது
54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது," என்று கூறியுளளார். இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்! என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார். 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலின்போது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டபோது அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், எதிர்வரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் மட்டும் அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், தங்குக்கு அந்த சின்னம் தேவையில்லை என்று அந்த கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஏ.ஜி. மெளரியா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படுவதாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது. தமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம் - BBC News தமிழ் -
By பிழம்பு · பதியப்பட்டது
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை பதிவுகளை மேற்கொள்ள விடாது எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். கடந்த வாரம் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகளால் சாந்தபுரம் கிராமத்தின் பல பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இன்று (15.01.2021) காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள் சாந்தபுரம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்திற்கு வருகை தந்து மக்களையும் அழைத்திருந்தனர். இதன் போது மக்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். கிராமம் உருவாக்கப்பட்டு இன்று வரை கல்வி,சுகாதாரம், மற்றும் பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், பிரதேச சபை என அனைத்து நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்துடன் இருந்து வந்தது கடந்த காலத்தில் காணி அனுமதி பத்திரம் கூட கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போது காணிகளை முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்குள் கொண்டு செல்வது பொருத்தமற்றது. சாந்தபுரம் கிராமத்தை பொருத்தவரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் கிளிநொச்சி மாவட்டமே அருகில் இருக்கிறது. எனவே எம்மை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சி பொருத்தமற்றது நாம் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இது தொடர்பில் முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினர் கருத்து தெரிவித்த போது சாந்தபுரம் கிராமத்தின் நில அளவை வரைபடத்தின்படி அது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகிறது. ஆனால் மக்கள் அனைவரும் தங்களது நிர்வாக நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்டத்துடன் வைத்திருகின்றார்கள். எனவே இதன் படி நாம் காணி ஆவணங்களை மாத்திரமே வழங்குவோம் ஏனைய நடவடிக்கைள் வழமை போன்று கிளிநொச்சி மாவட்டத்துடனே இருக்கும் என்றனர். எனவே இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் வினவிய போது சாந்தபுரம் கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள் வருகின்றரமையால் காணி ஆவணங்களை மாத்திரமே முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய நடவடிக்கைள் தொடர்ந்தும் கிளிநொச்சி மாவட்டத்துடன் காணப்படும் ஆனாலும் இது நிர்வாக நடவடிக்கைகளில் குழப்பத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் எனவே வருங்காலத்தில் எல்லை மீள் நிர்ணய குழுவுடன் பேசி முழுமையாக சாந்தபுரத்தை கிளிநொச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு | Virakesari.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.