Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கு அடம்பனை இராணுவம் பிடித்து விட்டதாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனா!

தலைப்பில் நீங்கள் சொல்லியவாறு செய்தியில் இரு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக எதுவும் இல்லையே. இருவர் காயப்பட்டதாக மட்டும்தானே எழுதியிருக்கு? வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்ட இவ்விருவரும் பின்னர் இறந்து விட்டார்களா ? இச்செய்தியை வேறு எங்கும் பார்க்கவில்லையே ?

காசு வட்டிக்கு கொடுப்பவர்கள்தா இவ்வாறு சிந்திக்க வேண்டும். எங்களது தேவை நோக்கம் நிறைவேற வேண்டுமென்பதுதான். முயற்சிகளின்றி எதுவும் நடக்கப்போவதில்லை. அடம்பனைப் பிடிக்கலாம் விடத்தல் தீவினை அடையலாம். தமிழருக்கான நியாயமானதொரு தீர்வு கிடைக்கப்பெறாவிடின் அனைத்துத் தமிழரும் அடக்கிவைக்கப்படுபவர்களாகத்

  • கருத்துக்கள உறவுகள்

பாலக்குழியில் மோதல்: 10 படையினர் பலி 20 படுகாயம்.

08.02.2008 / நிருபர் எல்லாளன்

மன்னார் பாலக்குழியில் இன்று காலை படையினர் பல்குழல் மற்றும் எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். இந்த முன்னேற்ற முயற்றிக்கு பதிலாக விடுதலைப்புலிகள் முறியடிப்புத்தாக்குதலைத் தொடுத்தனர்.

இந்த முறியடிப்புத்தாக்குதலில் 10 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் படையினர் ஆயுததளபாடங்களைக் கைவிட்டு பின்வாங்கிச் சென்றனர்.

தேடுதல் நடத்திய விடுதலைப்புலிகள் படையினரிடமிருந்து ஆயுததளபாடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

sankathi.com

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 08-02-2008 21:56 மணி தமிழீழம் [மோகன்]

அடம்பன் தெற்கில் மோதல்கள்: படைத்தரப்பில் இரு படை அதிகாரிகள் பலி! ஜவர் காயம்

மன்னார் அடம்பன் தெற்கு களமுனையில் சிறீலங்காப் படையினருக்கு விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இப்பகுதில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

மோதலின் போது படையினர் தரப்பில் இரு படை அதிகாரிகள் கொல்லப்பட்டதோடு மேலும் ஜவர் காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் அநுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Edited by கறுப்பி

மன்னார் அடம்பன் முன்நகர்வு முறியடிப்புச் சமர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல்கள் ஆகியவற்றில் 21 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

ragunathan இது வீரகேசரி மின்பத்திரிகையில் வந்த செய்தி. இப்படித்தான் ஏறுக்குமாறாக சொல்லிக் குழப்புகின்றது பயங்கரவாத அரசும் அதன் ஊதுகுழல்களும். உண்மை நிலை நாம் எமது இணையத தமிழ் வெளியீடுகளில் தான் அறிய முடிகிறது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன், நீங்கள் என்னைத் தவறாக எண்ணிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

புலிகள் ஏன் எதிர்த்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று நான் கேட்கவில்லை. அவர்கள் இப்போது போர்புரியும் விதத்தைத்தான் விளங்கப்படுத்தியிருந்தேன். நிச்சயமாக அது விமர்சனம் இல்லை, எனக்கு அந்த அருகதையும் கிடையாது.

புலிகள் எதைச் செய்தாலும் அதன் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும் என்று நம்புபவன் நான். புலிகள் ஒவ்வொருமுறை பின்வாங்கியபோதும் பின்னர் விசுவரூபம் எடுத்து ராணுவத்தை விரட்டியடித்ததை இன்றும் எதிர்பார்க்கிறேன். ஜயசிக்குரு போல இந்தச் சமரும் வெல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்காக புலிகள் அதிகளவு பலவீனப்படுவதையும் எற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் என் வாதம்.

இறைவன் , நாம் காசு கொடுப்பதற்காக புலிகள் போராடவில்லை. எமக்கு ஒரு சுதந்திர வாழ்வு கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். நாம் உதவி செய்தால் என்ன இல்லாவிட்டாலென்ன அந்தப் புனிதப் பணி நடக்கும்.

தவறிருந்தால் மன்னிக்கவும் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைவன், நீங்கள் என்னைத் தவறாக எண்ணிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

புலிகள் ஏன் எதிர்த்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று நான் கேட்கவில்லை. அவர்கள் இப்போது போர்புரியும் விதத்தைத்தான் விளங்கப்படுத்தியிருந்தேன். நிச்சயமாக அது விமர்சனம் இல்லை, எனக்கு அந்த அருகதையும் கிடையாது.

புலிகள் எதைச் செய்தாலும் அதன் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும் என்று நம்புபவன் நான். புலிகள் ஒவ்வொருமுறை பின்வாங்கியபோதும் பின்னர் விசுவரூபம் எடுத்து ராணுவத்தை விரட்டியடித்ததை இன்றும் எதிர்பார்க்கிறேன். ஜயசிக்குரு போல இந்தச் சமரும் வெல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்காக புலிகள் அதிகளவு பலவீனப்படுவதையும் எற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் என் வாதம்.

இறைவன் , நாம் காசு கொடுப்பதற்காக புலிகள் போராடவில்லை. எமக்கு ஒரு சுதந்திர வாழ்வு கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். நாம் உதவி செய்தால் என்ன இல்லாவிட்டாலென்ன அந்தப் புனிதப் பணி நடக்கும்.

தவறிருந்தால் மன்னிக்கவும் !

நீங்க சொல்லுரது எல்லாம் சரிதான் அண்னே ஆனா நேற்று முறியடிச்ச செய்தி இண்டக்கு ஏன் வருது?????????????????

அவங்க ஏற்கெனவே பிடிச்சதா செய்தி சொல்லியிருக்காங்க.................. சின்ன பண்டி சுரிச்சான்........... ஓமந்தை........................ மணலாறு எண்டு ஒரு தொக செய்தியள தேசிய பாதுகாப்பு ஊடக மய்யம் சொல்லியிருக்கு............... ஆனா நாங்க இண்டைக்கு அவங்கள் கைபற்றினதா சொன்ன அடம்பன் முடியறிப்பு பற்ரி மட்டும்தான் சொல்லுரம்.............. ஏன்????????????????????????????????????????

உந்தப் படங்களைப் பார்க்கத் தெரியுது ஓயாதஅலைகள் 3 விடுவிச்ச இடங்களிலை போட்ட கொட்டகைகளில எவ்வளவு இப்ப புடுங்குப்பட்டுட்டுது எண்டு.

அண்ணைமார் அடம்பன் விழுந்தா வெண்புறா ரிஆர்ஓ போன்ற அமைப்புகளுக்கு காசுகுடுக்கிறதை சனம் நிப்பாட்டிப் போட்டும்.

கிட்டத்தட்ட 2005 இல இருந்து ஒரே சோகப்பாட்டா இருக்கிற படத்தை ஏன் வில்லங்கமாக காசு குடுத்துப் பாக்க வேணும்?

பிடிச்சு விட பிடிச்சு விட எண்டு விளையாடிக் கொண்டிருக்கிறதுக்கு யாரும் காசு குடுப்பினமோ?

உந்தக் காசுகளை கோயில்களுக்கு குடுத்தாலாவது புண்ணியம் கிடைக்கும்.

இல்லாட்டி இங்கை இருக்கிற RSPCA போன்ற அமைப்புகளுக்கு குடுத்தாலாகுதல் எதாவது பட்ஞ் தருவங்கள் குத்திக் கொண்டு திரிய.

கிழக்கு போனதுக்கு எழுதினியள் அது வடக்கு பிடிக்க மோட்டுச் சிங்களவங்கள் அங்கையிருந்து கொட்டகைகளை புடுங்கிக்கு கொண்டு வர நாங்கள் சும்மா சைகிளில போய் போட்ட கொட்டகைகள். ஆனபடிய அது உண்மையான இழப்பில்லை ஒரு மாயைதான் எண்டு. இப்ப ஓயாத அலைகள் 3 இல பிடிச்ச இடங்களும் போகுதாம்? அதையும் உது என்ன 2 நாளில பிடிச்சது தானே ஆனபடியா உண்மையான இழப்பில்லை ஒரு மாயை தான் எண்டு சொல்லாம் தான்.

Edited by kurukaalapoovan

ரகு

அது உங்கள் பற்றிய கருத்தல்ல.

அது சரி குறுக்கர் காசு கொடுப்பதை சனம் நிப்பாட்டிப் போடும் என்பதை எந்த நிலையிலிருந்து சொல்லவருகிறார்? நிலங்களைக் கைப்பற்றி வைத்திருக்காத காலத்திலிருந்தே மக்களின் உதவியுடன்தான் இயக்கங்கள் வளர்ந்தன. அதே நிலைதான் இன்றும். மக்கள் விரும்பிக் கொடுக்கும் நிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை நாங்கள் உணர்வோம். நான் வாழ்கின்ற இடத்திலிருந்து பெறப்படுகின்ற நிதியின் அளவு அதிகரித்துச் செல்கின்றதேயொழிய குறைவடையவில்லை.

குறுக்காலபோவான்,

உங்கள் கருத்துக்களில் விஷமம் இல்லாதிருப்பது நல்லது. இது நன்மை செய்யாவிட்டாலும் போராட்டத்திற்குத் தீமை செய்யாமலாவது இருக்கும்.

ரகு

காசு கொடுப்பதை சனம் நிப்பாட்டிப் போடும்.

நிலங்களைக் கைப்பற்றி வைத்திருக்காத காலத்திலிருந்தே அதே நிலைதான் இன்றும்.

இதனை நாங்கள் உணர்வோம்.

விஷமம் நன்மை செய்யாவிட்டாலும் போராட்டத்திற்குத் தீமை செய்யாமலாவது இருக்கும்.

இது பொருத்தமான கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருக்காலபோவான் அவர்களே; கோய்யிலுக்குக் கொடுத்துப் போட்டு புண்ணியத்தை வாங்கிதலையிலை கட்டி ஆடவா? நான் கோவில்லுக்காக காசு செலவு செய்வதில்லை. காசு கொடுத்தால் புண்ணியம தரும் கடவுலால் எமது சுதந்திரத்தைவாங்கித்தரமுடி

Edited by kuloth

என்ரை ராசா குஞ்சு kuloth அங்கை தானே பிழை விடுறியள்.

நாங்கள் ஆண்ட இனம். கடசியா கடாரம் முதல் குமரி வரை புட்பக விமானத்தில பறந்து திரியேக்கை தான் தஞ்சைப் பெருங்கோயில் உட்பட ஏகப்புட்ட கோயில்கள் கட்டினனாங்கள்.

அந்தக்காலத்தில எங்கடை ஆக்கள் விசையம் தெரியாமலே உதுகளைக் கட்டினவை?

இப்ப பாருங்கோ நீங்கள் 30 வருசமா போராடிறியள் எங்களை நாங்களே ஆளப்போறம் எண்டுறியள் ஆனா ஒண்ட்டையும் காணேல்லை. ஏன் எண்டு நினைக்கிறியள்?

இதுவரை கடற்படை கட்டுறம் விமான எதிர்ப்பு கருவி வேண்டிறம் எதிர்காலத்துக்கு முதலீடு செய்யிறம் எண்டியள். கல்வி சேமிப்பு போன்றவற்றை ஊக்குவிச்சு உதவி கொடுத்தியள் வைத்தியசாலை கட்டினியள் விளையாட்டு மைதானம் கட்டினியள் காலநிலை அவதான நிலையம் கட்டினியள் வானொலி தொலைக்காட்சி சேவை உருவாக்கினியள் காவல்துறை நீதித்துறை வங்கி எண்டு உருவாக்கினியள். ஏதோ விமானப்படையாம் எண்டு 4...5 தரம் பறந்தும் காட்டினியள். ஆனால் எங்கடை முந்தின அரசர்மார் மாதிரி 1 கோயில் ஆவது கட்டினியளோ? இல்லை! ஏன் அந்தப் பாவத்தை தேவையில்லாமல் சம்பாரிச்சு வைச்சிருக்கிறியள்?

எங்கடை அரசர்கள் மாதிரி கோயில் காட்டி எல்லாருக்கும் புண்ணியம் தேடத் தெரியாத உங்களை எல்லாம் என்னவெண்டு எங்கடை தேசிய தலமை எங்களுக்காக போராடிறியள் எண்டு நம்பிறது எண்டு ஒருக்க சொல்லுங்கோ பாப்பம்? இனியும் குடிமுழுகிப் போகவில்லை. கடவுளை எங்கடை பக்கம் கொண்டு வந்து விட்டா இராசதந்திரம் தொழிநுட்பம் வெளியுறவுக் கொள்கை உலக ஒழுங்கு இராணுவ பலம் பொருளாதார பலம் அங்கீகாரம் எல்லாத்தையும் சிம்பிளா வெட்டி ஆடலாம். உதுகளை ஒவ்வொண்டாக என்னவோ ஏதோ எண்டு யோசிச்சு மண்டை பிக்கத் தேவையில்லை.

எல்லாத்துக்கும் மேலான ஆளை எங்கடை கைய்யுக்கை போடுறது தான் புத்திசாலித்தனமான வழி. அதுக்கு இனியாவது வழியைப் பாருங்கோ.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு எண்டு பெரிய ஆக்கள் சொல்லிவீனம். தயவு செய்து தெற்கு அடம்பன ஆமிக்கு பறிகொடுத்தாலும் அங்க இருக்கிற உந்த அடம்பன் கொடிகளையாவது ஏதாவது செய்து வெட்டிச் சாய்ச்சுபோடுங்கோ. பிறகு அடம்பனில கவர் எடுக்கிறவன் அப்பிடியே அப்பிடியே எல்லா இடத்துக்கையும் வந்து புகுந்திடுவான்.

அடம்பனுக்க ஆமி வந்திச்சிது. நீங்கள் எல்லாரும் ஏன் கோயிலுக்க வாறீங்கள். ஊரில இருந்தாலும் பிரச்சனை வரேக்க கோயில்களுக்க ஓடவேண்டியது. வெளிநாட்டுக்கு வந்தாலும் பிரச்சனை வரேக்க கோலில இழுக்கவேண்டியதுதான். கோயிலிக்க இருக்கிற அப்புச்சாமிதான் கடைசியில பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்லுரது எல்லாம் சரிதான் அண்னே ஆனா நேற்று முறியடிச்ச செய்தி இண்டக்கு ஏன் வருது?????????????????

அவங்க ஏற்கெனவே பிடிச்சதா செய்தி சொல்லியிருக்காங்க.................. சின்ன பண்டி சுரிச்சான்........... ஓமந்தை........................ மணலாறு எண்டு ஒரு தொக செய்தியள தேசிய பாதுகாப்பு ஊடக மய்யம் சொல்லியிருக்கு............... ஆனா நாங்க இண்டைக்கு அவங்கள் கைபற்றினதா சொன்ன அடம்பன் முடியறிப்பு பற்ரி மட்டும்தான் சொல்லுரம்.............. ஏன்????????????????????????????????????????

என்ன சொல்ல வருகின்றீர்கள். முதல் நாள் அல்லது, ஒரு மாதத்திற்கு முதலே இதைச் சொல்லி வைக்க வேண்டும் என்று சொல்ல வருகின்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்.. காசு கொடுத்தவர்களுக்காகவாவது பிரதேசங்களை இராணுவம் கைப்பற்ற விடமாட்டார்கள்.. தப்பித்தவறி இராணுவம் விடத்தல்தீவைப் பிடித்தால், காசைக் கொடுத்தவர்கள் வட்டியோடு திருப்பித்தா என்றல்லவா நிற்பார்கள்!

காசு கொடுத்தவர்கள் தமிழ் தேசியத்தின் மீதான பற்றுக் காரணமாகத் தான் கொடுத்தார்கள்.

வெல்லுவதற்கு காசு கொடுக்க இது ஒன்றும் race இல்லை. விடுதலைப் போர். காசு கொடுத்தவர்களுக்கு இது தெரியும்.

***

*** பண்பற்ற முறையில் எழுதப்பட்ட வசனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொடுத்தவர்கள் தமிழ் தேசியத்தின் மீதான பற்றுக் காரணமாகத் தான் கொடுத்தார்கள்.

வெல்லுவதற்கு காசு கொடுக்க இது ஒன்றும் race இல்லை. விடுதலைப் போர். காசு கொடுத்தவர்களுக்கு இது தெரியும்.

***

*** பண்பற்ற முறையில் எழுதப்பட்ட வசனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

விளக்கப்படுத்தியதற்கு நன்றி.. :)

இன்னும் சிலருக்கும் உங்கள் அறிவுரை உதவக்கூடும்! :)

எனது நண்பர் ஒருவர் " நான் இவ்வளவு காலமும் புலிகள் வென்றுவிடுவார்கள் என்று காசைக் கொடுத்தனான். ஆனால் இந்தாள் சொல்லுறதைப் பார்த்தால் இது இரண்டு பக்கமும் இழுபட்டுக்கொண்டே போகப்போகுது போல கிடக்குது. சனம் தான் சாகப்போகுது. இதுக்கு காசு கொடுக்கிறத விட நான் சும்மாவே இருக்கலாம்." என்று சொல்லி தனது பங்களிப்பை நிறுத்திவிட்டார்.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=380819

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.